எழில் அலர் இருவருக்குமே ப்ரீத்தியின் ஆள்மாறாட்டம் முதற்கட்ட அதிர்ச்சி தான் என்றாலும் அன்று பிரகாசம் மீதான புகாரில் துள்ளியமான விவரங்களை அளித்துசர்ச்சிற்கு வித்திட்டது கீர்த்தி (ப்ரீத்தி) தான் என்பதை யூகித்திருந்த எழிலுக்கு அவளின் அதிரடி சற்று ஆச்சர்யத்துடனான அதிர்ச்சியாக தான் இருந்தது.
பின்னே அவன் அறிந்த கீர்த்தி மிக மிக மெல்லிய மனம் கொண்டவள்.., சிறு உயிருக்கும் தீங்கிழைக்காதவள்அன்பை மட்டுமே பகிர்பவளிடம் அதிர்ந்த சொற்களைகூட இதுவரை அவன் கேட்டிராததால் அவள்செயல்களில் எழிலுக்குபெரும் குழப்பமே மிஞ்சியது.
அதிலும் தந்தை மீது கொள்ளை பாசம் கொண்டிருப்பவள் பிரகாசம் சரணிடம் இருந்து பிரித்ததற்காக இந்தளவு இறங்கி தந்திரமாக வேலை செய்து பிரகாசத்திர்கே தெரியாமல் அனைத்து ஆதாரங்களையும் திரட்டி, பெற்ற தந்தையின் பெயர் புகழை அழிக்க முயன்றிருக்க வாய்ப்பில்லை என்பதில் எழிலுக்கு அத்தனை திண்ணம்..!!
பிரகாசத்தின் மகளாக இருந்தாலும் கீர்த்தி சேற்றில் முளைத்த செந்தாமரை என்பதை அவன் நன்கு அறிவான். இருப்பினும் அன்று ரெய்டு சென்று வந்த நாளில் இருந்தே எழிலை அரித்து கொண்டிருக்கும் கேள்விகள்இவை தான்..!!
அது, ஏழு மாத கர்ப்பத்தை அனைவரிடமிருந்தும் மறைக்க வேண்டிய அவசியம் என்ன..?? ரெய்டில் பிரகாசத்தை சிக்க வைக்க பலமான காரணம் இருப்பதாக வைத்து கொண்டாலும் காரணமே இன்றி நாதனைஇதில்இழுத்து விட்டு அவர் பெயரை, நிம்மதியை குலைக்கும் அளவிற்கு கல்நெஞ்சம் கொண்டவளா கீர்த்தி…?? எப்போதிருந்து அவளிடம் இத்தகைய மாற்றம் அதற்கு காரணம் யார்..?? என்பது தான்.
ஆயினும் கீர்த்தியின் இன்றைய நிலை, குழந்தையை சுமந்திருப்பவளிடம் கேள்விகள் கேட்டு குடைந்து அவள் மனதை சஞ்சலபடுத்த விடாமல் அவனை நிதானிக்க வைத்திருந்தது.
இத்தகைய நேரத்தில் தாயின் மனம் சமநிலையில் இருப்பது எத்தனைஅவசியம் என்பதை நன்கு அறிந்தவனுக்கு அன்று சரணை தேடி திருமண கோலத்தில் வந்தவளின் பேச்சில் செயலில் இருந்த அழுத்தம் அவளிடம் ஏற்பட்டிருந்த மாற்றமும் மேலும் எதையும் விசாரித்து அழுத்தத்தைகூட்டிடாமல் தடுக்க, அவளிடம் கேட்க கேள்விகள் பல இருந்தும் பின்னர் பார்த்து கொள்ளலாம் என்று அனைத்தையும் ஒத்தி வைத்திருந்தான்..,
ஆனால் இங்கோ நிலைமை தலை கீழாக இருப்பதில் முதலில் அதிர்ந்திருந்தாலும் அவள் கூறிய “நானும் பிரகாசத்தின் மகள் தான்” என்ற வாக்கியத்தில் சிக்கலாகி இருக்கும் நூற்கண்டின் நுனி மெல்ல வசப்பட தொடங்கிட சுவரில் சாய்ந்து கைகளை மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டு முடிச்சிட்ட புருவங்களுடன் பார்த்திருந்தவன் அவள் தன் பெயரை கூறவும்,
“ப்ரீத்தி” என்று தனக்குள் கூறிக்கொண்ட எழில் நினைவடுக்குகளில் எங்கேனும் இப்பெயரை கேட்டிருப்போமா என்ற யோசனையில் ஆழ்ந்தான்.
அதற்குள் ‘கீர்த்தி எங்கேநீ எப்படி அவளோட இடத்துக்கு வந்த..?? பிரகாசம் உனக்கும் அப்பான்னு சொன்னியே அது எப்படின்னு தெரிஞ்சிக்கலாமா…” என்றவாறு அங்கே வந்தாள் அலர்.
“ஒஹ் வக்கீல் மேடமா? தெரிஞ்சுக்கலாம் கட்டாயம் தெரிஞ்சுக்கலாம் ஆனா உங்க கேள்விக்கு பதில் சொல்றதுக்கு முன்ன ஒரு சின்ன விளக்கம்” என்றவள் சரண் எழில் இருவரையும் மாறி மாறி பார்த்தவாறே,
“நான் லவ் பண்றது சரணைதான்..!! அடைய நினைச்சதும் அவரை தான்உன் வீட்டுகாரை இல்லம்மா, ஆனா..” என்று எதையோ எண்ணியவளின் தொண்டைகுழிஅடைக்க அதை செருமிக்கொண்டே
‘அவரை மாமான்னு கூப்பிட நினைக்கிறேனே தவிர அவரை நான் என்…’என்றவளின் கண்கள் கலங்கிட அதற்கு மேல் பேச முடியாமல் உதட்டை அழுந்த பற்றிக்கொண்டு நின்றவள் மெல்ல தன்னை மீட்டெடுத்து,
‘உன்னோட பயம் அவசியமில்லாதது’ என்றாள்.
அவளையே அழுத்தமாக பார்த்துகொண்டிருந்த அலருக்கு அவள் வாக்கியத்தை நிறைவு செய்யாவிட்டாலும் அவள் கூற வந்தது புரிபட “அதுக்கு பேர் பயமில்லை” என்று தீர்க்கமான குரலில் கூறியவள்,
“எங்களோட விஷயம் உனக்கு அனாவசியமானது கேட்ட கேள்விக்கு பதில்” என்று அலர் எடுத்து கொடுக்க,
அதற்குள் ‘என்ன சொன்ன நீ என்னை லவ் பண்றியா..??’ என்று குறையாத திகைப்புடன் சரண் ப்ரீத்தி முன் வந்திருந்தான்.
எழிலை குறித்த பேச்சில் இதை கவனிக்க தவறி இருந்த அலருக்குமே அப்போதுதான் புரிய உடனே “இது எப்போ இருந்து..??” என்றாள்.
சில நொடிகள் கனத்த அமைதி மட்டுமே பிரீத்தியிடம்!
“கேட்கிறோமில்லை சொல்லும்மா..” என்று எழில் கேட்கவும்,
‘பத்து வருஷத்துக்கும் மேல மாமா’ என்று அனைவரையும் ஒரு பார்வை பார்த்தவள்
“இவரை மட்டுமே என்னோட கணவனா நினைச்சு மனசார இவர்கூட வாழ்ந்துட்டு இருக்கேன் ஆனா இவர் என்னை விட்டுட்டு கீர்த்திகூட சுத்திட்டு இருந்தாரு” என்றாள் விழிகள் சிவக்க.
இந்த திருப்பத்தை எதிர்பாராத எழில் “என்ன சரண் இது இப்படி சொல்றா..? டேய் நல்லா பொறுமையா யோசிச்சு சொல்லு நீ லவ் பண்ணது கீர்த்தியா..?? இல்லை ப்ரீத்தியா..??”
“ஐயோ அண்ணா இவ என்னென்னமோ உளறிட்டு இருக்கா…?? இவளை யாருன்னே எனக்கு தெரியாது..??”
“ஏன்டா யாருண்ணே தெரியாமதான் ரெண்டு வாரம் இவளை உன்கூட தங்க வச்சிருந்தியா..??”
“மாமா என்ன பேசுறீங்க நீங்க..! மாமாக்கு தன்னோட லவ்வருக்கும் அடுத்தவளுக்கும் வித்யாசம் கூடவா தெரியாது..?? ரெண்டு வாரம் மாமாகூட இருந்ததுகீர்த்தியாதான் இருக்கணும் இப்போதான் இவ ஆள் மாறாட்டம் பண்ணி வந்திருக்கா போல” என்று தாய் மாமனுக்கு வக்காலத்து வாங்க..,
“இல்லைடா அமுலு அப்போ வந்தது என்னோட பாப்பு இல்ல இவதான்” என்று அவளின் நம்பிக்கையை உடைத்திருந்தான் சரண்.
“என்ன மாமா பேசுறீங்க அப்போ இத்தனை மாசமா ஏன் அமைதியா இருந்தீங்க? அப்போவே இவளை பத்தி சொல்லி இருக்கலாமேஇவளால தேவை இல்லாம அப்பா உங்களை திட்டி, நானும் தப்பா புரிஞ்சிட்டு உங்களை பேசி, இவருக்கும் அப்பாக்கும் புரிதல் இல்லாம போய், அப்பா என்னை கூட்டிட்டு போயிருக்க மாட்டரே” என்று கேட்க,
“இல்லை அமுலு அப்போ என்னால இவளை கண்டுபிடிக்க முடியலை” என்றான் வேதனையோடு!
“என்ன மாமா கொஞ்சமும் அர்த்தமில்லாம பேசுறீங்க? ரெண்டு வாரம் உங்ககூட இருந்திருக்கா ஒரு நேரத்துல கூடவா உங்களால இவளோட ஆள்மாறாட்டத்தை கண்டுபிடிக்க முடியலை” என்று வியந்தவள் எழிலிடம் திரும்பி ,
“மாமா நீ சொல்லு என்னை மாதிரியே வேற எவளாவது ஆள்மாறாட்டம் பண்ணிஉன்கிட்ட வந்தா உன்னால கண்டு பிடிக்க முடியுமா முடியாதா..??” என்று எழிலின் முகத்தருகே ஒற்றை விரல் நீட்டி கேட்க,
‘அதுக்கு ஏன்டி இவ்ளோ ஆவேசபடர?’ என்று அவள் விரலை மடக்கி அவள் கரத்தை தனக்குள் பொத்தி வைத்தவன்,
“என் குள்ளச்சியை எனக்கு தெரியாதா..?? இந்த கண்ணு, மூக்கு, கன்னம், வாய் …” என்றவனின் பார்வை அவளில் முழுதாக படிந்து மீள அதை கண்டவளின் கன்னம் சிவக்க தொடங்கவும் அதை ரசித்தவாறே தொடர்ந்தவன்..,
“எல்லாமே எனக்கு அத்துபடிடி! அதுலயும்வச்ச கண்ணை எடுக்காம உத்து பார்த்தே என்னை கரைக்க உன்னால மட்டுமே முடியும்… இந்த பார்வை இன்னொரு பொண்ணுகிட்ட இருந்து ஹுஹும் இல்லை கண்டிப்பா சான்சே இல்லடி செல்லகுட்டி”
“மோரோவர் உன்னளவுக்கு என்னை காதலிக்கவோ, படுத்தி எடுக்கவோ யாராலயும் முடியாது யூனிக் பீஸ்டி பட்டு நீ ! ஸோ டூப்ளிக்கேட் எல்லாம் ஒரு நிமிஷத்துக்கு மேல உன்னோட இடத்துல தாக்குபிடிக்க முடியாது” என்று புன்னகைத்தவனை ‘லவ் யூ மாமா’ என்று நெட்டி முறித்தவள் சரண் புறம் திரும்பி,
“நீங்க ரெண்டு பேரும் ரெண்டு வருஷத்துக்கு மேல ஒரே ஆபிஸ்லதானே வேலை செஞ்சீங்க அதுலயும் நீங்க லவ் பண்ண ஆரம்பிச்சதுக்கு அப்புறம் அவளை இன்னும் கூர்ந்து கவனிச்சு இருப்பீங்களே அவளோட ஒவ்வொரு அசைவும் உங்களுக்கு அத்துபடியாகி இருக்கும் அப்புறம் எப்படி இவளை கண்டுபிடிக்காம விட்டீங்க”
ஆம் தன்னவளின் ஒவ்வொரு அசைவும் அவனுக்கு அத்துபடி தான் ஆனால் அவர்கள் பிரிந்த போது இருந்த சூழலும் அவள் அங்கு வந்தபோது அவன் பயன்படுத்திய வார்த்தையும் தன்னவளை காயபடுத்தி இந்நிலையில் நிறுத்தி இருக்கிறதோ என்ற குற்ற உணர்ச்சியில் தத்தளித்து கொண்டிருந்தவனுக்கு அவளை இனம் காணமுடியவில்லை.
ஆனால் அதை எவ்வாறு சொல்லி புரிய வைப்பது என்று தெரியாமல் பதிலேதும் இன்றி சரண் ப்ரீத்தியை வெறித்து பார்த்து கொண்டிருந்தான்.
அலர் சரணிடம் கேள்விகள் எழுப்புவதையும் அதற்கு சரியாக பதிலளிக்காத சரணின் பார்வை அடிக்கடி ப்ரீத்தியின் மீது படிவதையும் அமைதியாக கவனித்து கொண்டிருந்த எழிலுக்கு சரணின் தயக்கமும் தடுமாற்றமும் அவன் ப்ரீத்தி குறித்த எதையோ மறைக்க முயல்வதை அப்பட்டமாக எடுத்துக்காட்ட நெற்றியை நீவியவாறே மனதினுள் பல நிகழ்வுகளை எழில் புரட்டி பார்க்க, சக ஆண்மகனாகவெகு விரைவாகவேப்ரீத்தியின் இன்றைய நிலைக்கும் சரணின் தயக்கத்திற்குமான சம்பந்தத்தை கண்டு கொண்டான்.
ஆயினும் அவன் உள்ளுணர்வோ ப்ரீத்தி கீர்த்தியின் இடத்தை யாருக்கும் தெரியாமல் பிடித்திருந்தாலும் ஒரு தலையாக காதலிக்கும் சரணிடம் குழந்தைக்காக அவள் வரம்பு மீறி நடந்திருந்தாலும் அவளின் நோக்கம் தவறானதாக இருக்க வாய்ப்பு இல்லை என்பது புரிபட அவள் கழுத்தில் இருந்த தாலியும் இதுவரை எங்கிருக்கிறாள் என்றே தெரியாத கீர்த்தியின் நிலையும் எழிலை அச்சூழலை மிக பொறுமையாக கையாள வைத்திருந்தது.
ஆனால் அலரோ இவ்விடயத்தில் கணவனின்நிதானத்திருக்கும் பொறுமைக்கும் நேரெதிராக கொதித்து கொண்டிருந்தாள்.
இருக்காதா பின்னே..!! என்றைக்கு சரண் மீது தவறில்லை என்பதை உணர்ந்தாளோ அப்போதே உண்மைகளை கண்டறிய வேண்டிபிரகாசத்தை சந்தித்தவள் தன் மாமனின் வாழ்வில் அவர் ஏற்படுத்திய அவலங்களை அவரிடமே வாக்குமூலமாக பெற தொடங்கையிலே என்ன முயன்றும் அவரின் தரம் தாழ்ந்த செயல்களை கேட்கையில் தன்னை கட்டுபடுத்த முடியாமல் பிரகாசத்தின் மீது அருவருத்த பார்வையை வீசி இருந்தாள்..,
அலரின் பார்வையே அவரின் தைரியம் அனைத்தையும் வடிய செய்யகூனிகுறுகி போன பிரகாசம் அவள்முன் மண்டியிட்டு கைகூப்பி கண்ணீருடன் மகளுக்காக அலரிடம்யாசித்திருந்தார்.அவளுமே அடுத்து குழந்தையை பற்றி விசாரிப்பதற்காக கீர்த்தியை சந்திக்கும் எண்ணத்தை விடுத்து இப்போது சரணின் வாழ்வு கீர்த்தியுடன் நன்முறையில் அமைய பெற்றுள்ளது கண்டு ஆசுவாசம் கொண்டாள்.
அதனாலேயே முடிந்து போன அத்தியாயத்தை தன் தந்தையிடம் கொண்டு சென்று மீண்டும் கிளறுவது சடலத்திற்கு அறுவை சிகிச்சை செய்ய முயல்வதற்கு சமம் என்பதால் அத்துடன் விட்டிருந்தவள் சரணிடம் மன்னிப்பு கேட்கவும் தவறவில்லை.
ஆனால் இங்கே அவள் சற்றும் எதிர்பாரா விதத்தில் பிரகாசத்திற்கு எள்ளளவும் குறையாத குள்ள நரித்தனத்துடன் சூழ்ச்சியால் கீர்த்தியை சரண் வாழ்வில் இருந்து அகற்றி கீர்த்தியின் இடத்தை பிடித்திருக்கும் ப்ரீத்தியும் அவள் பேச்சும் அவளை ஆவேசம் கொள்ள செய்திருந்தது.
இருவாரங்கள் அந்நிய ஆண்மகனான சரணுடன் இருந்தது மட்டுமின்றி பலமாத கர்ப்பத்தை மறைத்து ஊரார் முன்னிலையில் சரணின் பெயருக்கு களங்கம் விளைவிக்க முற்பட்டது அதுவும் போதாமல் அவளுக்கு நல்லது செய்ய நினைத்த தன் தந்தையை அவமதித்தது, சரணின் கரங்களால் தாலி வாங்கிகொண்டு அவன் வாழ்வை கேள்வி குறியாக்கி, எழிலிடம் உரிமை கொண்டாடி என்று அனைவரின் நிம்மதியையும் குலைத்திருப்பதில் அலரின் ஆவேசம் இருமடங்காகியது.
******************************************
சரணிடம் பதிலில்லாமல் போகவும் ப்ரீத்தி புறம் திரும்பியவள், “ஏய் யாருடி நீ..?? எப்படி என் மாமாக்கே சந்தேகம் வராத அளவு நடிச்சிட்டு இருந்தஉனக்கு என்னதான் வேணும்..? எதுக்காக இங்க வந்து எல்லாரோட வாழ்க்கையிலும் விளையாட நினைக்கிற..?” என்று குறையாத கோபத்தோடு கேட்க..
“எல்லோரோட வாழ்க்கையும் இல்ல எங்க அம்மாக்காக உன் சித்தப்பன் வாழ்க்கையும், எனக்காக உன் மாமன் வாழ்க்கையும்” என்று ப்ரீத்தி நிறுத்த,
அவளின் முழுமையற்ற பதில் அவர்களை குழப்ப, “உங்க அம்மான்னா, யாரு தீபிகா சித்தியா..? என்றாள் அலர்.
நிமிடங்கள் பல கடந்தும் எழிலின் கேள்விக்கு பதிலளிக்காமல் பார்வை எங்கோ நிலைகொள்ள தனி உலகில் சஞ்சரித்து கொண்டிருந்த ப்ரீத்தியிடம், ‘சொல்லும்மா தீபிகா இல்லைன்னா உன்னோட அம்மா யாரு…? எதுக்காக அவங்களுக்காக நீ இப்படி..” என்று எழில் முடிக்கும் முன்னமே,
ப்ரீத்தியின் அலட்சியத்தில்பொறுமை இழந்த அலர் அதற்கு நேர்மாறாக உரத்த குரலில், “கேட்கிறது காதுல விழுகலை வாயில என்ன கொழுக்கட்டையா வச்சிருக்க..? பதில் சொல்லுடி இல்லை..” என்றவளைஇடையிட்ட எழில்,
“அமுலு பொறுமையா பேசுடிஇல்லை அமைதியா இரு நான் பார்த்துக்குறேன்” என்று ப்ரீத்தியின் நிலையை கருத்தில் கொண்டுதடுக்க முற்பட,
“என்ன மாமா பொறுமையா பேசறது..? அதுவும் இவளை மாதிரி ஃபோர்ஜரி கிட்ட..?? என்று ப்ரீத்தியை முறைத்தவள் “என் அப்பாவை மாப்பிள்ளை வீட்டார் முன்ன தலை குனிய வச்சதுக்கே இவளை சும்மா விடக்கூடாது… ஆடுற மாட்டை ஆடி கறக்கணும் பாடுற மாட்டை பாடி கறக்கணும்! இவகிட்ட எல்லாம் பொறுமையா பேசுறது ப்ரோஜனமே இல்லை, போடா நீயும் உன் பொறுமையும்” என்று எழிலிடம் சீற…
“அமுலு அவசரபடாத நான் சொல்றதை கொஞ்சம் கேளு, அந்த பொண்ணும் உன் சித்தப்பனால் பாதிக்கபட்டிருக்கா அவ அம்மாக்காகன்னு சொல்றா..” என்று அலரை சமாதனபடுத்தி கொண்டிருந்த எழிலின் பேச்சை ப்ரீத்தியின் குரல் தடுத்திருந்தது.
பின்னே ஒரு விரலால் தன்காதை குடைந்துகொண்டே , “ஷ்ஷ்ஷ்.. உனக்கும் உங்கப்பாக்கும் அமைதியாவே பேச தெரியாதா..?? எதுக்கு இப்படி கத்தற” என்று கேட்க,
எழில் கூறிய பின்னர் அவளிடம் பொறுமையாக பேச வேண்டும் என்று அலர் நினைத்தாலும் அதில் வண்டி வண்டியாக மண்ணள்ளி போட்டு அலரின் கோபத்தை ப்ரீத்தி கிளறி விட, “யு டோன்ட் டீச் மீ ஹவ் டூ ஸ்பீக்…” என்று ஆரம்பித்தவள்..,
“ஏய் இதோ பாரு உன்னோட குழந்தைக்கும் என் மாமாக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னுஎங்களுக்கு தெரியும் ஆனாலும் இத்தனை நாள் நான் ஏன் எந்த கேள்வியும் கேட்காம இருந்ததுக்கு காரணம்எந்த சூழல்ல நீ இந்த குழந்தைக்கு தாயாகி இருந்தாலும் நீ என் மாமா விரும்பின கீர்த்தி அவரே உன்னையும் குழந்தையையும் ஏத்துகிட்ட அப்புறம் எதையும் பேச கூடாதுன்னு அமைதியா இருந்தேன். ஆனா இப்போ நீ கீர்த்தி இல்லைன்னு தெரிந்த அப்புறமும் குழந்தைக்காக மட்டுமேநீ பண்ணி இருக்க ஃபோர்ஜரிக்கு லீகலா ஆக்ஷன் எடுக்காம பொறுமையா இருக்க நினைக்கறேன்… ஆனா என்னை சீண்டுறது உனக்கு நல்லதில்லைஒழுங்கா உன்னோட எகத்தாளத்தை எல்லாம் ஏற கட்டி வச்சிட்டு இப்போகேட்ட கேள்விக்கு பதில் சொல்லு…??” என்ற அலர் எழில் அவள் கரத்தில் கொடுத்த அழுத்தத்தில் ஆழ்ந்த மூச்சை எடுத்து விட்டவள் மிகவும் நிதானமாக ஆனால் அழுத்தமான குரலில்,
“லிசன் ப்ரீத்தி உன்னை மாதிரி அக்யுஸ்ட்டுக்கு நான் மரியாதை கொடுத்து பேசுறதே உன் வயித்துல இருக்க குழந்தைக்காக தான் இல்லாட்டி உன்னை மாதிரி சீட், ஃபிராடு கிட்ட என்னோட விசாரணையே வேற மாதிரி இருக்கும்” என்று கண்டிப்புடன் கூற,
அலர் பேசி முடிக்கும் முன்னமே பலமான சிரிப்பொலி கூடத்தை நிறைக்க தொடங்கியது. சூழலுக்கு சற்றும் பொருந்தாத சிரிப்பில் அதிர்ந்த மூவரும் திகைத்த விழிகளுடன் ப்ரீத்தியை பார்க்க அவளோ அப்போதும் சிரிப்பை நிறுத்தினாள் இல்லை..,
அதில் எரிச்சலுற்ற அலர் ஆவேசத்துடன் அவளை நெருங்க முற்பட, “எங்கடி போற வேண்டாம் இரு நான் பேசி பார்க்கிறேன்” என்று அவளை பிடித்து நிறுத்தியவன் கண்களில் நீர் வர சிரித்து கொண்டிருந்தவளைநெருங்கி,
“ப்ரீத்தி என்ன இது கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம சிரிச்சா என்ன அர்த்தம்..! அவ சொன்னதுல என்ன தப்பு, இப்பவும் எனக்கு கட்டுப்பட்டு மட்டுமே அவ ரொம்ப பொறுமையா இருக்கா இல்லை நிச்சயமா வேற ஒரு அலரை பார்ப்ப ! முதல்ல சிரிக்கிறதை நிறுத்து” என்று எச்சரிக்கவும்,
எழிலின் குரலுக்கு கட்டுப்பட்டு மெல்ல சிரிப்பை மட்டுபடுத்தியவள் கண்களை துடைத்து கொண்டே, “இல்ல மாமா உங்க பொண்டாட்டி என்னை அக்யூஸ்ட், ஃபிராடு, சீட்ன்னு சொன்னதை நினைச்சேன் சிரிச்சேன்”
அவளின் அர்த்தமற்ற பேச்சில் எரிச்சலுற்ற சரணும் ‘என்ன உளறிட்டு இருக்க‘ என்று சீற,
“ப்ரீத்தி ஐ வார்ன் யூ டெரிபிலிஜஸ்ட் ஸ்டாப் திஸ் நான்சென்ஸ்!” என்ற சீற்றத்துடன் அலர்..
அவளை நெருங்கிய சரண், “இதோ பாரு இதுக்கு மேலயும் உன்னோட பைத்தியகாரத்தனத்தை பொறுத்து போக வேண்டிய அவசியம் எனக்கில்லைஎன்ன நெனச்சிட்டு இருக்க உன் மனசுல.. கீர்த்தி எங்க..? அவளை என்ன பண்ண..?? சொல்ல போறியா இல்லையா?” என்று கர்ஜித்திருந்தான்.
‘தேர் ஈஸ் எ லிமிட் ஃபார் எவ்ரிதிங் ப்ரீத்தி பட் யூ ஆர் கிராசிங் யுவர் லிமிட்‘ என்று அலரும் எச்சரிக்க,
நிலைமை கைமீறி கொண்டிருப்பதை உணர்ந்த எழில் ப்ரீத்தியின் கையை பிடித்து அழைத்து சென்றவன் அங்கிருந்த சோபாவில் அமர்த்தி, “உனக்கு என்ன பிரச்சனை ப்ரீத்தி..?? யார் மேல கோபம்..?? சரண் கீர்த்தியை லவ் பண்றான்னு தெரிஞ்ச அப்புறமும் எதுக்காக தேவை இல்லாம நீயே உன் வாழ்க்கையை சிக்கலாக்கிட்டு இருக்க..?? உங்க அம்மா யாரு, என்னன்னு சொன்னாதானே தீர்வு காண முடியும்..இன்னும் எவ்ளோ நாளைக்கு தான் அழுத்தத்தோடவே இருக்க போறஇது நல்லது இல்லை உன்னோட இந்த அழுத்தமே குழந்தையை பாதிக்கும் புரிஞ்சிக்கோமா… ப்ளீஸ் ஸ்பீக் அவுட்!”
எழில் அவ்வாறு கேட்கவுமே அதுவரை அனைவரையும் எள்ளலுடன் பார்த்து கொண்டிருந்தவளின் முகம் சட்டென விகாரமாக அவள் விழிகளில் கனல் வழிய தொடங்கியது..அருகே இருந்த மேஜையின் நுனியை பற்றி அழுத்தி தன் உணர்வுகளை கட்டுபடுத்த போராடி கொண்டிருந்தாள்.
பின்னே நீருபூத்த நெருப்பு போல இத்தனை வருடங்களாக அவளுள் கனன்று கொண்டிருந்தபிரகாசத்தின் மீதான வன்மமும் அவன் மோகத்திற்கு பலியான அவள் தாயின் வாழ்வும் அதை தொடர்ந்துஅவனது அரசியல் வெறிக்குபலியான ப்ரீத்தியின் வாழ்வும் என்று இதுகாலம் வரை அவள் கடந்து வந்த முட்பாதை அனைத்தும் மனதினுள் படையெடுத்து அவளை ஆட்கொள்ள அதன் கனம் தாளாமல் தலையை பிடித்து கொண்டு சோபாவில் சாய்ந்து அமர்ந்தவள்எழிலின் வார்த்தைகளில் தான் மெல்ல தன்னிலை திரும்பி வெறுமையான பார்வையுடன் எழிலை பார்க்க அதன் பிறகானசில நிமிடங்களுக்கு அங்கு கனத்த அமைதி நிலவியது.
முகத்தை அழுந்த துடைத்துகொண்டு மூச்சை இழுத்து விட்டு அனைவரையும் பார்த்தவள் அழுத்தமான குரலில், “எனக்கு மட்டுமில்லை மாமா கீர்த்திக்கும் அவங்க தான் அம்மா” என்று கூற அனைவரும் அவள் பதிலில் திகைத்து போயினர்.