“யாரோ சுமக்கும் குழந்தைக்கு தான் எந்நாளும் தந்தையாக முடியாது, இனி தன் வாழ்வு கீர்த்தியோடு மட்டுமே!” என்று தீர்க்கமாக கூறிசொல்லென்னா வலியுடன் வீட்டைவிட்டு கிளம்பிய சரண் மனம் முழுக்க கீர்த்தியே ஆக்கிரமித்து இருந்தாள்.
எங்கு ஆரம்பித்து எப்படி அவளை தேட தொடங்குவது என்று யோசித்தவன் ப்ரீத்தி கூறிய செய்திகளை நினைவடுக்கில் தேடி எடுக்க அடுத்த சிலமணி நேரங்களை செலவழித்து அலைந்து திரிந்து தேடி கண்டு பிடித்தது சரவணனை தான்..!!
பிரகாசத்திடம் இருந்து விலகியவரை கண்டுபிடிப்பது அவனுக்கு மிகப்பெரும் சவாலாக அமைந்துபோனது.
என்னதான் ப்ரீத்தி, கீர்த்தி இப்போது அவள் பாதுகாப்பில் இல்லை எங்கு இருக்கிறாள் என்பது குறித்த விவரம்தெரியாது என்று நிஜத்தை கூறி இருந்தாலும் அதை நம்ப சரண் தயாராக இல்லை நிச்சயமாக ப்ரீத்தியின் கட்டுப்பாட்டில் சரவணின் பாதுகாப்பில் தான் அவளிருக்க வேண்டும் என்று நம்பியவன் அவரது சொந்த ஊரில் சரவணனை பிடித்திருந்தான்.
எதிர்பாராத விதமாக சரணை கண்ட சரவணன் அவனிடமிருந்து தப்பிக்க முயல அவரது முயற்சியை மிக எளிதாகவே சரண் முறியடித்திருந்தான். அப்போது அவன் இருந்த மனநிலையில் வீட்டில் இருந்திருந்தான் என்றால் ப்ரீத்தியைஅவளது துரோகத்தில் கொண்ட கோபத்தில் என்ன செய்திருப்பான் என்பதை அவனாலேயே உறுதியாக கூறியிருக்க முடியாது .
அதைவிட அவனுக்கு கீர்த்தி முக்கியம்..!!
அதனால் நீ விதைத்ததை நீதான் அறுக்க வேண்டும் என்று ப்ரீத்திக்கு உணர்த்தியவன் கீர்த்தியை தேடி வந்த இடத்தில் சரவணன் தப்பிக்க முயலவும் அதுநேரம் வரை கொண்டிருந்த ஆவேசம் மொத்தமும் கையில் சிக்கிய சரவணின் முகத்தில் இடியாய் இறங்கியது. அவனது கண்மூடித்தனமான மூர்க்க தாக்குதலை தாங்க முடியாத சரவணன் சரண் கேட்காமலேயே அவனுக்கு தேவையான விபரங்களை மடமடவென கொட்டி இருந்தார்.
அங்கிருந்து நேரே ரயில் நிலையத்திற்கு கிளம்பியவன் சரவணன் பெங்களூர், தோழி என்று கூறியதிலேயே அது சைந்தவியை தவிர வேறு யாராகவும் இருக்க வாய்ப்பு இல்லை என்று கண்டுகொண்டவன்அவள் எண்ணை தேடி எடுத்துவழியிலேயே சைந்தவிக்கு அழைத்து விட்டிருந்தான்.
இரு முயற்சிகளுக்கு பின் சைந்தவி அழைப்பை ஏற்றதிலேயே கீர்த்தி தன் கை சேர்ந்ததான மகிழ்ச்சியில் பூரித்து போனவன் முகத்தில் எல்லையில்லா புன்னகையும் பதட்டமும் ஒருசேர தோன்றியது..,
“ஹ்ஹல்லோ சைந்தவி நான் சரண் பேசுறேன், உன்கூட பா.. பாப்பு” என்று முடிக்கும் முன்னமே மறுபுறம் இருந்த சைந்தவி “தேங்க் காட்” என்று உரக்க கத்தியிருந்தாள்.
பின்னே தோழியிடம் செய்திருந்த சத்தியத்திற்காக இத்தனை நாட்கள் அவனை தொடர்பு கொள்ளாமல் இருந்தவளுக்கு இப்போது அவன் குரலை கேட்கவும் தோழியின் வாழ்வு மலரும் காலம் பிறந்துவிட்டதில் ஏக குதூகலம்…!!
“நீங்க எப்போ கால் பண்ணுவீங்கனு காத்திருந்தேன் சரண் இப்பவாவது பண்ணீங்களே” என்று எடுத்த எடுப்பிலேயே கூற,
அவள் கூறிய இப்பவாவது என்ற வார்த்தையில் தேங்கி நின்றவன் “என்ன சொல்ற சைந்தவி” என்றான்புருவங்கள் முடிச்சிட..
“என்ன சொல்ல சொல்றீங்க சரண் இதுநாள் வரை அவளுக்கு கொடுத்திருந்த வாக்குகாக தான் உங்களுக்கு கால் பண்ணாம அமைதியா இருந்தேன் இப்போ நீங்களா கேட்ட பிறகும் மறைக்க நான் ஒன்னும் முட்டாள் இல்லை” என்றவள் கீர்த்தி அவளிடம் வந்து சேர்ந்ததில் இருந்து தொடங்கி இப்போது வரை தந்தை மட்டுமின்றி அவனிடமிருந்து மறைந்து வாழ்ந்து அவள் செய்து கொண்டிருக்கும் முட்டாள்தனத்தை சரணுக்கு விளக்கி முடிக்க அனைத்தையும் கசந்த முறுவலோடு கேட்டுகொண்டிருந்தவன்,
“இதுநாள் வரைன்னா எவ்ளோ நாள் சைந்தவி” என்றவனின் குரலில் அவனை அறியாமல்கடுமை குடியேறியது.
அதை உணராத சைந்தவியோ “அது இருக்கும் சரண் ஒருஏழில் இருந்துஎட்டு மாசம்கிட்ட” என்று எதார்த்தமாக கூறவும் அவளிடம் சரண் தான் நாடு திரும்பிய மாதத்தை குறிப்பிட்டு கேட்டான்.
“ஹ்ம்ம் எஸ் சரண் அந்த மந்த் எண்டு கிட்ட தான் வந்தா ஏன் ஸ்பெஸிபிக்கா இதை கேட்குறீங்க..??” என்றவளுக்கு பதிலளிக்க சரண் அழைப்பில் இல்லை..
எப்போது அவள் ‘எஸ்‘ என்றாளோ அப்போதே அலைபேசியை அணைத்து பாக்கெட்டில் போட்டவன்விழிகள் வலிமிக பெங்களூரை நோக்கி பயணித்து கொண்டிருந்தவனின் மனம் எரிமலையாய் தகித்து கொண்டிருந்தது.
இருக்காதா பின்னே..!! ப்ரீத்தி அவனிடம் கீர்த்தியாக வந்த பிறகு தான் கீர்த்தியை சரவணன் விடுவித்து இருக்கிறார்.ஆனால் சைந்தவியை தேடி பெங்களூரு வரை சென்றவளுக்கு இத்தனை மாதங்களில் ஒருநேரம் கூடவா தனக்கு தெரிவிக்க வேண்டும் என்று தோன்றவில்லை.சரி நேரில் தான் வரவேண்டாம் அட்லீஸ்ட் ஒரு கால் செய்து அவள் பத்திரத்தை தனக்கு அறிய செய்துஇருக்கலாமே..!!
இது எதையும் செய்யாமல் அவளை பற்றிய தகவல் தெரிவிக்கிறேன் என்ற சைந்தவியையும் கட்டுபடுத்தி இருக்கிறாள் என்றால் தான் அவளுக்கு ஒரு பொருட்டே இல்லையா..??? கீர்த்திக்கு நடந்த அனைத்தும் தெரியும் என்று ப்ரீத்தி கூறி இருக்கும் நிலையில் இத்தனை நாட்கள் தன் பத்திரத்தை பற்றிகூட தெரிவிக்காதவளுக்குஅவன்உணர்வுகள் குறித்த அவளது எண்ணம் தான் என்ன..??” என்ற கேள்வி மனதில் எழ தாங்க முடியாத ஆற்றாமையிலும் வலியிலும், சினத்திலும்அவன் இமை ஓரம் கசிந்தது.
பாதியிலேயே அவன் அழைப்பை துண்டிக்கவும் சைந்தவி திரும்ப அவனுக்கு அழைத்திருக்க கொதிநிலையில் இருந்த சரணோ அதை ஏற்கும் மனநிலையில் இல்லை. அதன் பின்னர் தொடர்ந்து பலமுறை அவள் அழைக்கவும் தான் ஒரு கட்டத்தில் அவளழைப்பை ஏற்றான்..
“என்ன ஆச்சு சரண் ஏன் கால் …” என்றவளை இடை நிறுத்தியவன்,
“உன்னோட அட்ரெஸ் இதுதானே..??” என்று ஒரு முகவரியை கூறியவன் “இப்பவும் இங்கதான் இருக்கியா இல்லை வேற இடம் மாறிட்டியா..?? அப்படி இருந்தா உன்னோட அட்ரெஸ்சை எனக்கு இந்த நம்பருக்கு வாட்சப் பண்ணு” என்று வெறுமையான குரலில் கூற,
அவன் விலாசத்தை கேட்கவும் ஒருவேளை அப்படியும் இருக்குமோ என்று நம்ப இயலாதவளாக, “சரண் ஆர் யு ஆன் தி வே டூ பெங்களூர்..???” என்றாள்.
கண்களை இறுக மூடி திறந்தவன், ‘எஸ்‘ என்றான்.
சைந்தவிக்கோ சந்தோஷம் தாளவில்லை, “சரண் அட்ரெஸ் எதுக்கு நா.. நான் ஸ்டேஷனுக்கே வரேன் உங்களை பிக் பண்ண” என்று குதுகலத்துடன் கூற அதற்கு சரணிடம் இருந்து எவ்வித மறுமொழியும்இல்லாமல் போனது.
ஆனால் அதை பெரிதாக கொள்ளாத சைந்தவி தோழிக்கு சர்ப்ரைஸ் அளிக்க வேண்டி சரண் வரும் செய்தியை கூறாமல் குழந்தையை அவள் பாதுகாப்பில் விட்டவள் சரண் வருவதற்கு பலமணி நேரம் இருந்தும் உடனே காரை எடுத்து கொண்டு இரயில் நிலையத்திற்கு சென்றிருந்தாள்.
அழைப்பை துண்டித்தவன் இருகரங்களையும் தலைக்கு பின் கோர்த்து சாய்ந்து அமர அவன் அகத்தில் கடந்த சில மாதங்களாக அவன் சந்தித்த அவமானங்கள், நிராகரிப்புகள், வேதனைகள்என்று ஒன்றன் பின் ஒன்றாக படையெடுக்க ஆவேசம் கொண்ட நெஞ்சை அடக்கும் வழி தெரியாமல் கண்மூடினான்.
ஒருவழியாக இரவு பெங்களூர் சென்று சேர்ந்தவனை அழைத்து செல்ல காத்திருந்த சைந்தவி அவனை கண்டதும் ஓடி சென்று வரவேற்று அழைத்து சென்றவள் வழி நெடுகிலும் இத்தனை மாதங்களாக கீர்த்தி அனுபவித்த வலிகளை விவரிக்க தொடங்க நெற்றியை நீவியவாறு இருந்தசரண் ஒருகட்டத்தில்,
“ஷட் அப்..!! ஜஸ்ட் ஷட் இட் அப் சைந்தவி..!!!” என்று கர்ஜிக்கவும் அதில் சைந்தவி உடல் ஒருநொடி அதிர்ந்து அடங்கியது,
‘சரண்…’
“உன்கிட்ட இதை நான் எதிர்பார்க்கலை சைந்தவி சொல்லப்போனா அவளைவிடநீதான் பெரிய முட்டாள்..!! ப்ரெண்ட்ஷிப்குதுரோகம் பண்ணகூடாதுன்னு இத்தனைநாளா அவளோடபைத்தியகாரத்தனத்துக்கு துணை போயிருக்க.. ஹாவ் யு லாஸ்ட் யுவர் மைன்ட்..??”
“அப்… அப்படி இல்லை சரண் ப்ரீத்தி அங்க உங்ககூட… அதனால கீர்த்தி இங்க வந்தப்போ அவளுக்கு வாழற ஆசையே இல்லை அவங்க அப்பா பண்ணின..” என்று தொடங்கிட,
“ஜஸ்ட் ஸ்டாப் இட் சைந்தவி..!! அப்பா, அப்பா, அப்பா மை *** எல்லாருக்கும் அவங்கப்பன் தான் முக்கியமா தெரிஞ்சிருக்கானே தவிர எவளுமே என்னை பத்தி யோசிக்க தயாராயில்லை” என்று சரண் கத்தவும் சட்டென ப்ரேக்கிட்டு காரை நிறுத்தியிருந்தாள் சைந்தவி.
“ப்ளீஸ் காம் டவுன் சரண்..”
சீரற்ற மூச்சுக்களை எடுத்து விட்டவாறே, “ஃபோர் காட்ஸ் சேக் கொஞ்சம் நீ கீழ இறங்கு.., உன்னோட அர்த்தமில்லாத பேச்சை கேட்கிற பொறுமை எனக்கில்லை…, நான் ஓட்டுறேன் ஐ வான்ட் டு சீ ஹர் ரைட் நவ் ” என்று உறும,
இதுநாள் வரை கண்டிராதஅவனது ஆவேசம் அதிர்ச்சி அளிக்க, அவனது மனநிலையை ஓரளவு கணித்தவள் “ஓகே ஓகே ப்ளீஸ் சரண் ஐ ஆம் ஸாரி..!! ஐ அண்டர்ஸ்டான்ட் நான் எதுவும் பேசல நீங்க கீகீ கிட்டவே பேசிக்கோங்க பட்..” என்று அச்சத்துடன் அவனை பார்த்தவள்
“ப்ளீஸ் சரண் இந்த நிலையில நீங்க வேண்டாம் நானே ஓட்டுறேன்” என்றிட விண்டோவை திறந்துவிட்டு குளிர் காற்றில் தன்னை மட்டுப்படுத்தி கொண்டிருந்தவன்,
“தென் ஷட் யுவர் மவுத் அண்ட் கோ ஃபாஸ்ட்” என்றான் அடிக்குரலில்.
அதற்கு மேல் எதுவும் பேசாமல் அவள் ஒட்டத் தொடங்க அடுத்த ஒருமணி நேரத்தில் வீடு வந்து சேர்ந்திருந்தனர்.
மணி இரவு பதினொன்று ஆகி இருக்க இந்நேரம் கீர்த்தி குழந்தையை தூங்க வைத்திருப்பாள் என்பதால் தன் வசம் இருந்த சாவியை கொண்டு சைந்தவி கதவை திறந்தாள்.
அவளுக்கு முன்னமே வீட்டினுள் பாய்ந்த சரண் ‘கீர்த்தி‘ என்று முழக்கமிட்டவாறு பாய்ந்து சென்று ஒவ்வொரு அறையாக அவளை தேட,
“அச்சோ ப்ளீஸ் சரண் எதுக்கு இப்படி கத்துறீங்க..?? கீர்த்தி இங்க இல்லை மாடியில இருக்கா, அவகூட தூங்கிட்டு இருக்க என் பொண்ணுஉங்க சத்தத்துல எழுந்துட்டா திரும்ப தூங்க வைக்கிறது கஷ்டம்”என்றவாறே மேஜையில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து அவனிடம் நீட்டியவள் “ப்ளீஸ் தண்ணி குடிங்க கொஞ்சம் பொறுமையாஇங்க வையிட் பண்ணுங்க நான் கீர்த்தியை கூட்டிட்டு வரேன்” என்றவள் மாடிக்கு செல்ல,
அவளளித்த பாட்டிலை தூக்கி எறிந்தவன்வேக எட்டுக்கள் வைத்து அவளுக்கு முன்பாக முன்னேறி இரண்டிரண்டு படிகளாக தாவி மாடிப்பகுதிக்கு சென்றவன் முதல் இரண்டு அறைக்குள் யாரும் இல்லாததை கண்டு மூன்றாவது அறையை நோக்கி சென்றான்.
இரண்டு அறைகளில் அவளில்லாமல் போக மூன்றாவதில் அவளிருக்க வேண்டும் என்று மனதினுள் வேண்டியவாறே கதவின் குமிழை பிடித்து திறந்து அறையை வேகமாக அலசியவனின் விழிகளில் விழுந்தாள் நம் நாயகி.
அங்கு மெல்லிய விளக்கொளியில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த குழந்தையை அணைத்தவாறு கீர்த்தி படுத்திருப்பதை கண்டதும் அப்படியே தோய்ந்து கதவில் சாய்ந்து நின்றுஆசுவாச மூச்சை எடுத்து விட்டவன் எத்தனை வருட பிரிவிற்கு பின் அவளை காண்கிறான். அவள் இருப்பை கண்டு கொண்டவனதுவிழிகள் முதலில் அங்கு சயனித்திருப்பவளைநம்ப மறுக்க கண்களை கசக்கி முகத்தை அழுந்த துடைத்து இமை சிமிட்டி மீண்டும் விழிகளை அவளிடம் நிலைக்க விட்டவனிடம் இதுநேரம் வரை குடிக்கொண்டிருந்த ஆவேசமும் ஆக்ரோஷமும் வந்த சுவடே தெரியாமல் விடை பெற்றிருந்தது.
அதேநேரம் நிதானம் அதன் இடத்தை பிடிக்கஎன்றும் அவன் ரசிக்கும் மாசு மறுவற்ற அவளது மழலைமாறா வதனத்தை விழி வழியே இதயத்தில் நிரப்பி கொண்டிருந்தான்.
ஆம் சரண் ரசித்திருந்த அதே குழத்தை மனம் மாறாத பூமுகம், ஒட்டுமொத்த அமைதியையும் ஒருங்கே தேக்கிசிறு சுணக்கத்துடன் அவள் துயில் கொண்டிருந்த கோலம் அவனை மட்டுபடுத்தி இருந்தது.
அத்தனை நேரம் அவளிடம் கேட்க வேண்டி ஒரு நூறு கேள்விகளை மனதினுள் பட்டியலிட்டு கொண்டு வந்தவன் இப்போது ஓசையெழுப்பாமல் அழுத்தமான காலடிகளுடன் அவளை நெருங்கி அவளருகே அமர்ந்து தன்னையறியாமல் அவளில் லயிக்க தொடங்கி இருந்தான்.
சில கணங்களில்தன்னருகே அரவத்தை உணர்ந்தவன் அவன் எதிரே வந்து நின்றசைந்தவியிடம் ‘ஷ்ஷ் எதுவும் பேசாதே‘ என்பதாக விரல் நீட்டி தடுத்தவன் குழந்தையை தூக்கி செல்லுமாறு சைகை செய்ய இப்போது அவன் முகத்தில் தெரிந்த ஷாந்தத்தில் மனம் நிறைந்தவளாக சைந்தவியும் குழந்தையோடு வெளியேறினாள்.
அவள் சென்ற பின்னர் நொடிகள் நிமிடங்களை கடந்து மணிகளை எட்டி பிடித்து கொண்டிருந்த போதும் அவளில் இருந்து பார்வையை அகற்றினான் இல்லை.
மீண்டும் கிட்டாதோ இந்நொடி..!! என்பதாக தான் இருந்தது சரணின் பார்வை..
எத்தனை நாட்கள் ஏங்கி கிடந்த மனக்கண்ணிலும் நினைவுகளில் மட்டுமே சுமந்திருந்த தன்னவளின் வதனத்தை இப்போது நேரில் கண்டவன் எதை பற்றிய சிந்தனையும் இல்லாமல் ஆசை தீர அவளை தன்னில் நிறைத்துகொண்டிருந்த அதேவேளை புரண்டு படுத்த கீர்த்தியின் முகத்தைகுழந்தையை சுற்றி போர்த்தியிருந்த அவளது முந்தானை மூடி மறைப்பதை கண்டவன் அதை விலக்க வேண்டி அவளருகே சென்று அவள் துயில் கலையாத வண்ணம் விரல் நுனியால் அதை எடுக்க முயல தூக்கத்தில் இருந்த கீர்த்தியும் அன்னிச்சையாக முகத்தின் திரையை அகற்ற முயன்றவாறே விழிகளை மலர்த்திட அங்கு தன்னருகே மிக நெருக்கத்தில் சரணையும் தன்னை நோக்கி எழுந்திருந்த அவன் கரத்தையும் கண்டவள் பதறிக்கொண்டு எழுந்தமர்ந்திருந்தாள்.
மாமா என்று அச்சத்துடன் அவனை பார்த்தவள் எங்கே கனவில் நடந்தது போல தன்னிடம் அத்துமீறிடுவானோ என்ற நினைப்பில்,
“மா… மாமா ப்ளீஸ் வேண்டாம்.. நான் சொன்னா கேளுங்க வேண்டாம் ப்ளீஸ்” என்று எச்சில் கூட்டி விழுங்கியவாறே மன்றாடலோடுபின்னே நகர்ந்தவள்,
“மாமா இது தப்பு..!!!இப்போ நீங்க ப்ரீத்தியோட ஹஸ்பன்ட் தயவுசெய்து இங்கிருந்து போயிடுங்க” என்று வியர்வை வழிய கூறவும்,
அதுநேரம் வரை அவள் மீதான கோபத்தை மறந்திருந்தவனுக்கு ‘ப்ரீத்தியின் கணவன்‘ என்று அடையாளபடுத்திஅனைத்தையும் அவள் நினைவூட்டஅவள் தட்டிவிட்ட கரத்தை இறுக மூடி தன்னை கட்டுபடுத்த அரும்பாடு பட்டுக்கொண்டிருந்தான் சரண்.
அந்தோ பரிதாபம்..!! கீர்த்தியோஅவனை அங்கிருந்து வெளியேற சொல்லி பேசி அவன் கோபத்திற்குமேலும்தூபம் போட தன்னிலை இழந்தவன் அடுத்தநொடி கீர்த்தியை ஓங்கி அறையவும் தீப்பற்றியது போல எரிந்த கன்னத்தை பற்றிக்கொண்டு மிரட்சியுடன் சரணை பார்த்தவளின் விழிகளில் கலக்கம் பிறக்க அதை தொடர்ந்து மெல்லிய நீர்ப்படலம்.
அவளது மருண்ட பார்வையில் இளகத்துடித்த மனதை இறுக்கி பிடித்தவாறு குறையாத உஷ்ணத்துடன் அவளை பார்த்துகொண்டிருந்தான் சரண்.
பின்னேபிரகாசத்தின் சதியால் திருமண பந்தத்தில் இணைய முடியாமல் போனாலும் வாழ்நாள் முழுவதும் காதலியை நெஞ்சில் சுமந்து காலத்தை வென்று தன் காதலை வெற்றி பெற செய்வதில் உறுதி கொண்டிருந்தான் சரண். ஆனால் காதலியாக அவளை நெஞ்சில் சுமந்தது சுகம் என்றாலும் மாற்றான் மனைவியாக அறியபட்ட பின்பும்அவளை சிந்தையாலும் தொடுவது பாவம் என்பதால் அவளுடனான நினைவுகளை அழிக்கவும் முடியாமல் அதனோடு ஒன்றவும் முடியாமல் பல வருடங்கள் அனுதினமும் அவளுக்காக அவன் துடித்த துடிப்பும் பட்ட ரணக்கொடுமையையும் அவனை அன்றி வேறு யார் அறிவர்…!!
காதலியை மற்றொருவனுக்கு தாரை வார்ப்பது என்பது கத்தி இன்றி ரத்தம் இன்றி அறுவை சிகிச்சை செய்யாமலே இதயத்தை வேரோடு பிடுங்கி கொடுத்து உயிரோடு மரிப்பதற்கு சமமல்லவா..!! இங்கிருந்து வெளிநாட்டிற்கு சென்றபோது சரணும் வெறும் கூடு தான்.., முதல் சில மாதங்கள் உறக்கம் இன்றி செய்யும் வேளையில் கவனக்குவிப்பு இன்றி சாவி கொடுத்த பொம்மையாய் இயங்கி கொண்டிருந்தவனுக்கு காதலியின் நினைவுகளும் சேர்ந்து அலைக்கழித்தது.
ஆம் காதலியின் நினைவுகளை சுமப்பதற்கு கூட அவனிடமே போராடி வேண்டி வரும் என்று சரண் கனவிலும் எண்ணியிருக்கவில்லையே..!! அவள் வாழ்வை விட்டு அடியோடு ஒதுங்கியவன் அயல் தேசத்தில் இருந்தபோது கீர்த்தியின் நலன் குறித்து விசாரிப்பது ஏதோ ஒரு நிலையில் எங்கே அவள் வாழ்வில் களங்கம் ஏற்படுத்தி விடக்கூடுமோ என்று தன் வார்த்தைகள்கூட அவளை துன்புறுத்துவதை விரும்பாததாலேயே அனைத்தையும் தனக்குள் போட்டு புதைத்து விட்டான்.
ஆனால் நினைவுகளுக்கு அழிவேது..!! சுவாசிக்கும் காற்றை போல நித்தமும் அவளுடன் கழித்த நிமிடங்களை பொக்கிஷங்களாக சேகரித்து வைத்திருக்கையில் அதை தூர வீசி எறிந்த பின் அவன் எங்கனம் வாழ..??,
சூழ்ச்சியால் அவளை பிரிந்து வருடங்கள் நான்கை எட்டியும் கீர்த்தியின் நினைவுகளுடனே வாழ்ந்து வருபவனை பார்த்து தன்னவள் கூறிய வார்த்தைகள் பிரகாசம், ப்ரீத்தியால் கடந்த எட்டு மாதத்திற்கும் மேலாக அவன் கொண்டிருந்த உச்சபட்ச கொடூரங்களை கண்முன் நிறுத்த தன் கட்டுபாட்டை முழுதாக இழந்திருந்த சரணின் மொத்த சினமும் கீர்த்தியின் மீது திரும்பிட அவனது ரணங்களுக்கான வடிகாலாகிப் போனாள் பெண்ணவள்..!!
ப்ரீத்தியின் கணவனாமே..!!! இவளா முன்னின்று திருமணத்தை நடத்தி வைத்தாள் எத்தனை திண்ணம் இருக்க வேண்டும்..!! அன்று ப்ரீத்தியை கீர்த்தி என்று எண்ணிஅவள் கவுரவம் காக்கவும்பிரகாசத்தின் பதவி வெறிக்கு பலியாகிய குழந்தைக்காகவும், ஏதோ சூழலில் காயப்பட்டு தன்னையே வருத்தி கொள்பவளை காப்பதற்காக வேண்டி கீர்த்தியாக இருந்த ப்ரீத்திக்கு அவன் கட்டிய தாலி அது..!! அதை கட்டியதற்காக கூடஅவளை மனதார உணர்ந்து நெருங்க முடியாமல் இருந்தவனிடம் அவளே தாலியைகழற்றி கொடுத்த பின்னரும், தொடங்காமலே முடிந்து போன ஒரு பந்தத்தை துளிர்க்க வைக்க முற்ப்படுபவள் மீது கட்டுக்கடங்காத ஆத்திரம் முகிழ்த்தது.
ருத்ரமூர்த்தியாக விழிகள் சிவக்க நின்றிருந்தவன் அவள் தாடையை இறுக பற்றி, “என்னடி சொன்ன திரும்ப சொல்லு” என்று கேட்கவும் ஏற்கனவே அவன் ஆக்ரோஷத்தில் பயந்து போயிருந்தவள் இப்போது என்றுமில்லாமல் அவன் விழிகளில் வழிந்த கனலில் அச்சம் அதிகரிக்க, ‘மா..மா..’ என்று உதடுகள் துடிக்க அவனை பார்த்தாளே தவிர வார்த்தை எழவில்லை.
அதேநேரம் உறக்கத்தில் இருந்த குழந்தையை தூக்கி சென்ற சைந்தவி அது பாதியிலேயே விழித்துக்கொண்டு கீர்த்தியின் அறையில் இருக்கும் தன் பொம்மையை கேட்டு அடம்பிடிக்க அவளை சமாதனபடுத்தி படுக்க வைத்து பொம்மையை எடுப்பதற்காக கீர்த்தியின் அறைக்கு திரும்பியவள் கண்டதென்னவோ கீர்த்தியை அறைந்து அவளிடம் கடுமையாக நடந்து கொள்ளும் சரணை தான்.
“எங்க என்னை பார்த்து சொல்லுடி பார்…” என்று ஆரம்பித்தவனை நெருங்கிய சைந்தவி, “வாட் ஈஸ் திஸ் சரண், என்ன பண்ணிட்டு இருக்கீங்க…?? விடுங்க அவளை” என்று உடல் வெடவெடக்க அமர்ந்திருந்த கீர்த்தியை அணைத்து கொண்டாள்.
“ஒண்ணுமில்லை கீகீ பயப்படாத” என்று அவள் முதுகை வருடியவளின் விழியில் கீர்த்தியின் கன்னம் படவும் திகைத்து போனாள்.
பின்னே அவன் அடித்த வேகத்தில் கீர்த்தியின் இதழோரம் கிழிந்து கன்னம் கன்றி சிவந்து போயிருப்பதை கண்டவள், “உங்களுக்கென்ன புத்தி கெட்டு போச்சா..?? எதுக்காக அவளை இப்படி காட்டு மிராண்டித்தனமா போட்டு அடிக்கறீங்க இதுக்குதான் அவளை தேடி வந்தீங்களா..??” எனவும் நெற்றியை நீவிவிட்டவாறு தன்னை மட்டுபடுத்த போராடிக்கொண்டிருந்தவன் சைந்தவியின் வார்த்தையில் மீண்டும் சீற்றமடைந்தான்..,
“இது உனக்கு சம்பந்தம் இல்லாத விஷயம் சைந்தவி.. ஜஸ்ட் க்நொவ் யுவர் லிமிட்ஸ் அண்ட் பெட்டர் ஸ்டே அவே..!” என்று சுட்டுவிரல் நீட்டி எச்சரித்தவனின் பார்வை கீர்த்தியை தான் துளைத்து கொண்டிருந்தது.
“என்ன சரண் பேசுறீங்க..?? இத்தனை நாளா அவளே எதிர்பார்க்காத பலவிஷயத்தை கடக்க முடியாம குற்ற உணர்ச்சியோட அவ அனுபவிச்சது போதாதுன்னு இப்படி நீங்களும் சேர்ந்து கொடுமை படு….”
“ஷட் அப் சைந்தவி..! ஏன் மேடம் வாய் திறந்து பேச மாட்டாங்களா நீ என்ன அவளுக்கு மவுத் பீஸா..?? எதுவா இருந்தாலும் அவ வாயால கேட்டுக்குறேன் நீ கிளம்பு”
‘சரண்’ என்று அதிர்வோடு பார்த்தவள் அவனிடம் பேசி புரியவைக்க முடியாத ஆற்றாமையுடன் தோழியின் புறம் திரும்ப கீர்த்தியோ சரணை விழியகலாது பார்த்திருந்தாள்.
ஏய் கீகீ இங்க பாரு.. என்று கீர்த்தியை உலுக்கிவள், “சொல்லுடி நீ என்னபண்ணி தொலைச்ச..?? உன்னை தேடி வந்தவர்கிட்ட என்ன கிறுக்குத்தனம் பண்ணின..?? எதனால் உன்னை அடிச்சாரு”
விழிகள் விரிய அவர்கள் இருவரின் உரையாடலையும் கேட்டுக்கொண்டிருந்த கீர்த்திக்கு இந்நேரம் வரை என்றும் போல தன் எதிரே இருப்பது நிழல் என்று அவள் பேதலித்து போயிருக்கையில் அவன் அடித்த அடி அது நிழலன்றி நிஜமே என்பதை உணர்த்த தன்முன் இருப்பவனை கண்டவளுக்கு தன் கண்களையே நம்பமுடியவில்லை.
இத்தனை நாட்களாக அவன் நினைவில், குற்ற உணர்வில் வதைப்பட்டவளுக்கு ‘ஏன்..??’ என்றே தெரியாமல் அவன் வரவில் மனம் குளிர்ந்த போனது. அதீத மகிழ்ச்சியில் அவளனுமதி இன்றி சூடான நீர் விழிகளில் இருந்து இறங்குவதை தடுக்க முடியாமல் விடைத்த நாசியுடன் இதழ்களை கடித்து தன் கேவலை கட்டுபடுத்தியவாறு சரணை பார்க்க,
“கீகீ உன்னை தான் கேட்குறேன் என்ன பண்ணின..??”
அவளோ விழிகளை சரண் மீது நிலைக்க விட்டவாறே, “சவி மா… மாமா, கனவுன்னு நெனச்ச…” என்றவளுக்கு அதற்கு மேல் முடியாமல் போக அவளை கட்டிக்கொண்டு பெருங்கேவலுடன் அழ தொடங்கி இருந்தாள்.
“ஆமாடி உன்னோட மாமா தான்..!! உன்ன தேடி வந்திருக்காங்க நீ கனவு காணலை சரண் உன் முன்னே இருப்பது நிஜம்” என்ற சைந்தவியை நெருங்கிய சரண்,
“ஸ்டாப் இட் சைந்தவி ஐ சே கெட்ட்ட்லாஸ்ட்” என்றவாறே சைந்தவியை இழுத்து சென்று வெளியில் தள்ளியவன் கதவை அடைத்து தாழிட்டுவிட்டு திரும்பினான்.