கதவை அடைத்து விட்டு திரும்ப முயன்றவனின் உடல் அடுத்தநொடி தன்னை கட்டிக்கொண்டு இருந்தவளின் கண்ணீரில் இறுகிபோனது.
ஆம் சைந்தவியை அவன் இழுத்து செல்லும்போதே கட்டிலில் இருந்து இறங்கி ஓடி சென்றவள் ‘மாமா’ என்றவாறு சரணை பின்னிருந்து கட்டிக்கொண்டு நிற்க அவனை நனைத்தது அவளது விழிநீர்.
கீர்த்தியின் அணைப்பில் இந்நேரம் வரை அவன் கொண்டிருந்த சினம் இரட்டிப்பாகவும் தன்னையே கட்டுபடுத்த வேண்டி கண்களை இறுக மூடி நின்றிருந்தான் சரண்.
ஆனால் கீர்த்திக்கு அப்படி எதுவும் இல்லை போலும் இத்தனை நாட்கள் அவனை காணாத வரையில் தந்தைக்கு தண்டனை அளிப்பதற்காக அவனை விட்டு விலகி இருந்தவளால் அவனை நேரில் கண்ட நொடி வைராக்கியம் அனைத்தும் தூள் தூளாகி போக எதையும் கருத்தில் கொள்ளாதவளுக்கு அவன் மட்டுமே பிரதானமாகி போனான்.
பின்னே உள்ளிருக்கும் நேசம் என்றேனும் ஒரு நாள் அதன் இருப்பை உணர்த்தியே தீரும் அல்லவா…!!
அதுதான் இங்கும் நிகழ்ந்தது காணக்கிடைக்காத அவனது தரிசனம் கிட்டவும் அனைத்து கட்டுபாடுகளையும் தகர்த்தெறிந்து இன்று விட்டால் எங்கே மீண்டும் அவனை சேர முடியாதோ என்று தத்தளித்த பேதை நெஞ்சம் அவனிடம் சரணடைந்து விட்டது.
“நீங்க நிஜமாவே வந்துட்டீங்களா மாமா..!!” என்று கலங்கிய விழிகளுடன் அவன் முதுகில் இதழ் பதித்தவள், “என்… என்..னால நம்ப முடியலை எப்.. எப்பப… எப்படி இருக்கீங்க..?? ”
ஆனால் சரணிடமோ அதீத அழுத்தத்துடனான மௌனம் மட்டுமே, நெஞ்சில் இருந்த அவள் கரத்தை அகற்ற முற்பட அதை உணர்ந்தவளோ இன்னும் இறுக்கமாக தன் கரங்களை அவன் மார்பில் கோர்த்தவாறே,
“ஆனா நான் நல்லா இல்லை மாமா சுத்தமா நல்லா இல்லை..!! நீங்க இல்லாதப்போ என்னென்னமோ நடந்துடுச்சுநிஜத்துக்கு நான் ஏன் பிறந்தேன்னு இருக்கு..?? எனக்கே என்னை பிடிக்கலை.., எங்க அப்பா இப்படி இருப்பார்னு நான் கனவிலும் நினைக்கலை மாமா..” என்றதும் தான் தாமதம்…,
‘அப்பா’ என்ற வார்த்தையில் சீட்டுக்கட்டு மாளிகையாய் அதுநேரம் வரை சரண் கொண்டிருந்த பொறுமை, நிதானம் அனைத்தும் சரிய ஆவேசத்துடன் தன் மார்பில் பதிந்திருந்த அவள் கரத்தை பிடித்து வேகமாக இழுத்து தன் முன் நிறுத்தியவன், “ஏய் ச்சேய் போதும் நிறுத்து, எதுக்குடி இப்போ இந்த வேஷம் கட்டுற” என்றவாறே மீண்டும் தன் கரத்தை கீர்த்தியின் கன்னத்தில் இறக்கியதில் சுழன்று மூலையில் சென்று விழுந்திருந்தாள் கீர்த்தி.
ஒரு நொடி என்ன நடந்ததென்றே புரியவில்லை பெண்ணுக்கு! எதற்காக தன்னை அடிக்கிறான் அவன் கோபம் யார் மீது என்று புரியாமல் ‘மாமாஆஆ‘ என்று மிரட்சியுடன் பார்க்க,
குறையாத ஆவேசத்துடன் அவள் முழங்கையை பற்றியிழுத்து, “நீ இங்க வந்து எவ்ளோ நாள் ஆகுது” என்றான்.
“வலிக்குது மாமா” என்று முழங்கையில் வலி எடுப்பதை அவள் சுட்டி காட்டவும்,
ப்ரீத்தி அவன் வாழ்வில் வருவதற்கான வழியை ஏற்படுத்தி கொடுத்து விட்டு இங்கு வந்து அமர்ந்து அவனை ப்ரீத்தியின் கணவன் என்று அடையாளப்படுத்துபவளுக்கு தன் மீது தான் எத்தனை உயர்ந்த எண்ணம்..!! என்று வெறுத்து போயிருப்பவனுக்கு, “அப்படி என்ன அவளுக்குதன் காதல் என்ன அத்தனை மட்டமாக போய் விட்டதா..??” என்ற உள்ளக்கொதிப்பு மட்டுப்படாததில் சரணிடம் எதையும் உணரும் மனநிலை சுத்தமாக இல்லை.
“கேட்ட கேள்விக்கு பதில்”
வலியுடன் அவனை பார்த்தவளுக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் பெருக்கெடுத்த அழுகையுடன் மௌனத்தை கவசமாக கொள்ள முயன்றாள்.
ஆனால் அதற்கு சரண் விட்டால் தானே..!!
அவள் தாடையை அழுத்தமாக பற்றி, “உன்னை தான்டி கேட்குறேன் பதில் சொல்லு” என்று உறுமினான்.
‘அது.. அது வந்து.. ப்ளீஸ் மாமா நான் சொல்றதை கொஞ்சம் கோபப்படாம கேளுங்க’ என்று அவன் கையை பிடிக்க மறுநொடியே அதை உதறியவன்“சரி அதை விடு நான் வந்தப்போ ப்ரீத்தின்னு ஏதோ சொன்னியே யார் அது..??” என்றான் மேவாயை நீவியவாற…
அவன் கேள்வியில் கீர்த்தி உறைந்து போனாள் என்றால் மிகையல்ல..!!
சரணின் குரலே அச்சுறுத்த கருவிழிகள் அலைபாய அறையை சுற்றிலும் பார்வையை ஓடவிட்டவளுக்கு இதயம் வெளியே வந்து குதித்துவிடும் நிலை.., இப்போது அவன் கோபத்திற்கான காரணம் அவளுக்கு பிடிபட எச்சில் கூட்டி விழுங்கினாள்.
“ஹ்ம்ம் சொல்லு யாருக்கு யார் ஹஸ்பன்ட்” என்றவனின் பார்வை அவளை கொன்று கூறுபோட்டது…,
அச்சம் மேவிய விழிகளுடன் அவனை பார்த்தவளுக்கு வார்த்தைகளும் சதி செய்ய கையறு நிலையில் அவன் முன் அமர்ந்திருந்தாள்கீர்த்தி.,
‘ஸோஎன்னைவிட நேத்து வந்தவ வாழ்க்கை உனக்கு முக்கியமா போயிடுச்சி, பைத்தியக்காரனா அலையிற என்னை பத்தின கவலை உனக்கு சுத்தமா இல்லைஅப்படிதானே..!!’ என்று கர்ஜிக்க கீர்த்திக்கு தூக்கி வாரிப்போட்டது,
“இல்லை மாமா அப்படி எல்லாம் இல்லை.. எனக்கு என்னால.. அப்போ ப்ரீ..ப்ரீத்தி உங்க… உங்களை லவ்…” என்றவளின் வார்த்தைகள் சரண் அவள் கழுத்தை பற்றியதில் தொண்டையிலேயே தடைபட்டு போனது.
சுவாசக்காற்றுக்கு தவித்தவளாக “ப்ளீஸ் மாமா நான் சொ..சொல்றதை கேளுங்க”
“என்னடி கேட்கணும்..?? என்று கையை எடுத்தவன் நீ பண்ணினது பச்சை துரோகம்..!! இனி நீ பேசி நான் கேட்க இங்க எதுவுமே இல்லை” என்றவன் பார்வை கீர்த்திமீது நிலைக்க அதில் பெண்ணின் தண்டுவடம் சில்லிட்டு போனது.
“உன்னை பெத்தவனும் கூட பிறந்தவளும் பண்ணின துரோகத்தை விட நீ பண்ணினது மன்னிக்க முடியாதது, கிட்டத்தட்ட இரண்டு நாள் இங்க வரும்வரை உன்னை பார்க்காம என் உயிரே என்கிட்ட இல்லை, ஆனா நீ என்னடான்னாமாசக்கணக்கா இங்க வந்து உட்காந்துட்டு அங்க நான் படுறபாட்டை கைகட்டிவேடிக்கை பார்த்துட்டு இருந்திருக்க இல்லை..??” என்று உச்சபட்ச கசப்புடன் கேட்க கீர்த்திக்கு பதறியது..
“இதை உன்கிட்ட இருந்து சத்தியமா எதிர்பார்க்கலைடி, ஊமை ஊரை கெடுக்கும்னு சும்மாவா சொன்னாங்க”என்றவனின் வார்த்தைகளில் இதுநேரம் வரை இல்லா வலிமிக,
“இங்க வலிக்குதுடி எனக்கு” என்று தன் நெஞ்சை சுட்டி காட்டவும்,
“ப்ளீஸ் மாமா இப்படி பேசாதீங்க” என்று கையை பிடிக்க முயன்றவள் அவனது பொசுக்கும் பார்வையில் தன் முயற்சியை கைவிட்டாள்.
தன் கரங்களை கோர்த்து பிரித்து கொண்டிருந்த சரண் “ஸோ என்னைவிட என் காதலைவிட உனக்கு உன்கூட பிறந்தவ அவளோட ***” என்று ஆரம்பித்தவன் கண்களை மூடி நிதானபடுத்தி “அவளோட லவ் உனக்கு பெருசா போயிடுச்சு அதான் என்னை தாரவார்த்து கொடுத்துட்டு மேடம் இங்க நிம்மதியா தூங்கிட்டு இருக்கீங்க” என்று அழுத்தமாக வார்த்தைகளை வெளியேற்றியவன்,
“ஆனா நான் தூங்கியே பலவருஷம் ஆச்சுடி, இதுல நிம்மதியைஎங்க இருந்து தேட..?? ஆனா அதை பத்தின கவலை உனக்கு எதுக்கு..?? உன் அக்கா வாழ்கையில விளக்கேத்தி வச்ச நிம்மதி உனக்கு தூக்கத்தை கொடுக்குது, கொடுத்து வச்ச மகராசி” என்றவன் கூற்றில் அலமலந்து போன கீர்த்தியோ இறைஞ்சலாக அவனை பார்த்தவள்,
“ஸாரி மாமா நா… நான் அப்படி இல்லை மாமா” என்று இதழ்களை மடித்து கேவலை உள்ளிழுத்தவள்,
“ப்ளீஸ் மாமா அவ சொன்னதை வச்சு.., உங்களுக்கு நான் எப்படி புரிய வைக்க, அது வந்து அவ… நான் உங்களை புரிஞ்சிக்காத நான் உங்களுக்கு..” என்று துண்டு துண்டாக வார்த்தைகளை வெளியேற்றியவள் சில கணங்கள் மௌனித்து பின் கண்ணீரை துடைத்தவாறே
“உங்களுக்கு ஏற்றவள் இல்லைன்னு முடிவு பண்ணி அவ..” என்றவளின் வார்த்தைகள் வாய்க்குள்ளேயே அமிழ்ந்து போனது..
சரணின் உயிரை உருக்கும் உஷ்ணபார்வையை எதிர்கொள்ள முடியாமல் இதழ்களை மடித்து தலைகுனிந்தாள் கீர்த்தி.
குடும்பமாக சேர்ந்து அவனை பந்தாடி, உணர்வுகளை கொன்று, உற்றார் உறவினர் முன் அவமதித்து, நிம்மதியை பறித்து, ஊன் உறக்கம் தொலைக்க வைத்து இப்போது தலை குனிந்தால் எப்படி விடமுடியும்..??
“ஏய் என்னை பாருடி, பாருன்னு சொன்னேன் என்று அவள் முகத்தை தன்னருகே இழுத்து பிடித்தவன், உங்கக்கா என்னை பத்து வருஷம் காதலிச்சா ஆனா உன்னோட இடத்தை அவளுக்கு விட்டு கொடுக்கும் முன்ன அதே காதல் எனக்கு அவமேல இருக்கான்னு ஒருமுறை யோசிச்சி பார்த்தியாடி நீ..?? நானென்ன கைப்பொருளா உனக்கு தேவை இருக்கைவரை வச்சிருந்து அடுத்தவ ஆசைப்பட்டதும்கைமாத்த..?? ” என்று சீறிட விக்கித்து போனாள் கீர்த்தி..!!
நியாயமான அவன் கேள்விக்கு சத்தியமாக அவளிடம் பதிலில்லை
பதில் சொல்ல முடியலை இல்லை ..?? ஏன்டி நீ காதலிக்கிறன்னு சொல்லுவ உடனே உன்கூட கைகோர்த்துட்டு சுத்தணும், உங்கப்பன் உன்னை விட்டுட்டுபோக சொல்லுவான் உடனே நாட்டை விட்டு ஓடனும் அப்புறம் உங்கக்கா வருவா குழந்தை வேணும்னு சொல்லுவா அவகூட குடும்பம் நடத்தனும் அப்புறம் அவளே தாலியை கழட்டி போட்டு உன்கூட வாழ சொல்லுவா உடனே…” என்று அவளை அறைய போனவன் அஞ்சி ஒடுங்கிய அவள் நிலையை கண்டு தன்னை கட்டுபடுத்த முடியாதவன் அழுத்தம் தாங்காமல் அருகே இருந்த பூச்சாடியை எடுத்து எதிரில் இருந்த சுவரில் ஓங்கி அறைந்திருந்தான். சுவரில் பட்டு சில்லுகள் அறை முழுக்க சிதற,
“பாருடி நல்லா பாரு என்று பூச்சாடியை சுட்டி காட்டியவன் , எப்போ நீ உங்க அக்காவை உன்னோட பேருல அங்க என்கிட்ட அனுப்பிட்டு இங்க வந்து உட்காந்திருக்கன்னு தெரிஞ்சதோ அப்போ இப்படிதான்டி என் மனசும் சில்லுசில்லா நொறுங்கி சிதறி போச்சு” என்றவனின் குரலில் சொல்லில் வடிக்க முடியா வலி மிக, மீண்டும் அவள் முகத்தை பற்றி,
“நான் என்ன மனுஷனா இல்லை மெஷினா நீங்க எல்லாரும் கீ கொடுத்தா அதுக்கு ஏத்த மாதிரி நடக்க..?? ஒரே ஒரு காதல் மனுஷனை இந்த அளவுக்கு ஆட்டி வைக்குமா..?? ஆனா என் வாழ்க்கையை தலை கீழா புரட்டி போட்டுடுச்சேடி..!! ஏய் உன்னை காதலிச்சதை தவிர உன் குடும்பத்துக்கு நான் என்ன பாவம்டி செஞ்சேன், எதுக்கு அந்த பொறம்போக்குல ஆரம்பிச்சு உங்கக்கா, நீன்னு ஒருத்தர் மாத்தி ஒருத்தர் என்னை சித்ரவதை பண்றீங்க, அவங்களைகூட விடுடி, என்னை பத்தி தெரியாது ஆனா நீ..” என்று சுட்டு விரலை நீட்டியவன்,
“நீ அவங்களைவிட மோசமானவ..!! விட்டா அவங்களையே தூக்கி சாப்ட்டு ஏப்பம் விட்டுட்டு போயிடுவ.. என்ன நெஞ்சழுத்தம் இருந்தா ஒரு வார்த்தை ஒரே ஒரு வார்த்தை சரவணன் கிட்ட இருந்து இங்க வந்தப்போ என்னை கூப்பிட்டு சொல்லாம இருந்திருப்ப..?? என்றவனின் விழிகளில் இருந்து என்றுமில்லா வெஞ்சினத்தை கண்டு பின்னே நகர்ந்த கீர்த்தியின் முயற்சியை கண்டுகொண்ட சரண் அவள் முழங்கையை பிடித்து இழுத்துஅவள் தலையின் பின்புறம் கரத்தை கொண்டு சென்று தன் முகத்தருகே கொண்டு வந்தவன் அவள் விழிகளுக்குள் ஊடுருவியவாறு,
“என்ன சொன்ன கம் அகைன்” என்று சீற கீர்த்திக்கு வியர்த்து வழிய தொடங்கியதுசுத்தமாக அவன் கேட்பது என்ன என்று புரிபடாமல் போக படபடத்த நெஞ்சத்தை இறுக்கி பிடித்தாள்.
“ப்ரீத்தி ஹஸ்பன்ட்ரைட்..!!” என்றவனின் குரலில் மட்டுபடுத்த முடியாத ஆத்திரம் துளிர்க்க கீர்த்தியை ஆவேசமாக தன்வசப்படுத்தியவன் அவள்இதழ்களை வன்மையாக சிறைசெய்திருந்தான். சரணின் ஆற்றாமை மொத்தமும் அவள் இதழ்களில் வடிய தொடங்க நிமிடங்கள் பலகடந்து நீடித்த முத்தத்தில் அவனை எதிர்க்க முடியாமல் துவண்ட பெண்ணவளோ பெரிதும் காயப்பட்டு போனாள்.
பார்வை பரிமாற்றங்களில் கூட கொள்ளை காதலை உள்ளடக்கி இருக்கும் இருவருக்குமான முதல் முத்தம் இது..!!
ஆனால் துளி காதலில்லாமல் ஆற்றாமையுடன் ஆவேசத்தின் வடிகாலாய்…!! இத்தகைய நிலையில் காலம் தங்களை கொண்டு நிறுத்தும் என்றுஇருவருமே நினைத்து பார்க்கவில்லை. ஆவேசத்துடன் அவளை விடுவித்தவன், “உன்னை மாதிரியே இருந்தா அவளை கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்திடுவேன்னு எவன்டி சொன்னான் உனக்கு..?” என்று அவளை மேலிருந்து கீழ் பார்த்தவன் மேவாயை நீவியவாறே,
“ஆனா ஒன்னுடி உங்கக்காஅப்போ என்கிட்ட கேட்டது எல்லாமே எனக்கு அருவெறுப்பா, அசிங்கமா தோனுச்சு இப்போ யோசிச்சு பார்க்கும்போது தான் சரின்னுதோணுது” என்று அழுத்தமாக கூற கீர்த்திக்கு புரியவில்லை.,
“காதலும், தனிமையும் இருந்தா போதும் எந்த எல்லைக்கும் போகலாம்னு அவ சொன்னதுல எந்த தப்பும் இல்லைன்னு இப்போ தோணுது” என்றவனின் கரம் கண்ணிமைக்கும் நொடியில் அவள் தோளில் படிந்து புடவையை களைய முனைய அதிர்ந்து போனாள் கீர்த்தி.
********************************************
“சாது மிரண்டால் காடு கொள்ளாது” என்பர், பிரகாசத்தின் மகளை காதலித்த ஒரே பாவத்திற்காக இத்தனை வருடங்களாக அவன் பட்ட இன்னல்களும், வலிகளும், ரணங்களும், சித்திரவதைகளும், கொண்ட அழுத்தங்களும் போதாதென்று அதை மேலும் அலங்கரிக்கும் வகையில் ஒருத்தி தன் அடையாளத்தை மாற்றி கீர்த்தியாக வந்து காரணமே இன்றி அவனை சித்திரவதை செய்து பைத்தியம் பிடிக்க செய்திருந்தாள்என்றால் இங்கே இன்னொருத்தியோ அவனை பற்றிய அக்கறையே இல்லாமல் தன் ரூபத்தில் இருப்பவளுடன் அவன் குடும்பம் நடத்தி குதூகலமாக இருப்பான் என்ற எண்ணத்தில் அவனை மறுத்து வெளியேற சொல்லி காயபடுத்தி கடந்த சில மாதங்களில் ப்ரீத்தியால் அவன் கொண்ட வேதனைகளை ஒரே வாக்கியத்தில் கீர்த்தி நூறு மடங்காக்கி இருந்தாள்.
மனமெங்கும் ஆற்றமுடியா வடுக்கள் அணிவகுக்க கண்களை இறுக மூடி நின்றவனின் சீற்றம் மொத்தமும் இப்போது தனக்கு உரிமையானவளிடம் எதிரொலிக்க தொடங்கியது.
அவனிடம் தன் இருப்பை மறைத்தற்காக சரண் கோபம் கொள்ள கூடும் என்று கீர்த்தி எதிர்பார்த்திருந்தால் ஆனால் அதை மீறிய கண்மூடித்தனமான அவள் வார்த்தைகளுக்கு கூட செவி சாய்க்க முடியாத அளவிலான சரணின் ஆவேசம் துவேஷம், சினம் இதெல்லாம் எதனால் என்று புரியாமல் இருந்த கீர்த்திக்கு ப்ரீத்தியின் பெயரை எடுத்ததில் அவன் நடந்து கொண்ட முறையும், உங்க அக்கா சொன்னது, அசிங்கம், அருவெறுப்பு என்று சரண் கூறிய வார்த்தைகளை உணர்ந்த போது அதை ஜீரணிக்க முடியாமல் போனது.
சரணை மணம் புரிந்து வாழப்போவதாக கூறி சென்றவள் இவ்வாறு ஏன் பேசினாள் என்று சத்தியமாக கீர்த்திக்கு புரியவில்லை. பின்னே அன்று அவளை கடத்தி வைத்த போது பிரகாசத்தால் அவளும் அவள் தாயும் அனுபவித்த கொடுமைகளை தாயை கொண்டே கீர்த்திக்கு புரிய வைத்து அதுநாள் வரை கீர்த்தி கண்டு வந்து பிரகாசத்தின் மாய பிம்பத்தை சுக்கு நூறாக உடைத்திருந்தாள் ப்ரீத்தி.
தன்னை ஈன்ற தாயை முதல்முறை கண்ட கீர்த்தியும் அடக்கமுடியாத கேவலுடன் அவர் தோள் சாய்ந்தவள் அவரது மனம் திறந்த பேச்சில் நெஞ்சம் பதறி முழுதாக உடைந்து போனாள். தன்னை பெற்ற தாயும் சகோதரியும் முறையான அங்கிகாரம இல்லாமல்சமூகத்தின் முன் எத்தகைய இழி நிலையை கொண்டு வதைபட்டு வாழ வழி தெரியாமல் அல்லல்பட்டு கொண்டிருக்கையில் அவள் மட்டும் பஞ்சு மெத்தையில் வேலையாட்கள் புடை சூழ தாய் தந்தை என்று வளர்ந்ததை எண்ணிமனம் விம்மி போனாள்.
ஒருபுறம் தந்தையின் கொடூரமுகம் வெளி வந்ததிலும் மறுபுறம் அன்னையின் இன்னல்களை உணர்ந்ததிலும் உயிர் வலி கொண்டிருந்த கீர்த்தியை அடுத்தடுத்து சந்தித்து மேலும் பலவீனபடுத்தி இருந்தாள் ப்ரீத்தி. ஆம் சரணுக்கு பிரகாசம்இழைத்த அநீதியை சரவணனை கொண்டு ஆதாரபூர்வமாக கீர்த்திக்கு விளக்கயவள் அவர் தந்தை இறந்த விதத்தை உணர்வுப்பூர்வமாக விளக்கவும் கண்ணை இருட்டிக் கொண்டு வந்தது கீர்த்திக்கு..
சரணின் தந்தை கொண்ட கொடூர மரணத்தின் வலி தாங்காமல் கீர்த்தி மயங்கியே விழுந்திருந்தாள்.
அவளுக்கு முதலுதவி செய்த ப்ரீத்தி, “இப்போ சொல்லு அவனை மாதிரி ஒருத்தனை அழிக்க எனக்கு உன்னோட ஐடென்டிட்டி தேவை படுத்து…, கீர்த்தியா நான் அங்க இருக்கிறது ரொம்ப முக்கியம் என்னோட திட்டத்துக்கு ஒத்துக்குறது மூலமா உன்னை பெத்த தாய்க்கு அவன் செஞ்ச துரோகத்துக்கும் சரணுக்கு செய்த அக்கிரமத்துக்கும் நியாயமான தண்டனை கிடைக்க போகுது” என்று கூற கீர்திக்குமே பிரகாசத்தின் மீது கோபமும் ஆதங்கமும் இருப்பதால் அவள் சொல்வது நியாயமாக பட்டாலும் ஏதோ ஒரு கலக்கம் பிறக்க பதிலளிக்காமல் இருந்தாள்.
ஆனால் ப்ரீத்தியோ விடாமல், “நல்லா யோசிச்சி சொல்லு உன்னை இனிமேலும்கட்டிபோட்டு வைக்கறது எனக்கு பெரிய விஷயம் இல்லை பட்என்னோட டார்கெட் நீ இல்லை அவன் தான், ஆனா நான் நினைச்சதை முடிக்க எனக்கு எத்தனை வருஷம் ஆகும்னு சொல்ல முடியாது அதனால் நீயும் ஒத்துழைச்சா இந்த ரூமுக்குள்ள மட்டும் நீ சுதந்திரமா இருக்க முடியும். தினமும் அழுது ஆர்பாட்டம் பண்ற உன்னை பத்தின டென்ஷன் இல்லாம நானும் இருப்பேன், சொல்லப்போனா உனக்கும் சேர்த்து தான் நான் அவனை வேட்டை ஆடப்போறேன்”என்று கூற பிரகாசம் போன்ற மனிதத்தன்மையே அற்ற பிறவியை வதம் செய்ய இருப்பவளுக்கு ஏதோ அணிலாக தன்னால் ஆன சிறு உதவி என்று நினைத்து அவள் திட்டத்திற்கு உடன் பட்டிருந்தாள் கீர்த்தி.
அவள் சென்ற பின் சுவரில் சாய்ந்தமர்ந்த கீர்த்தியின் கண்கள் குளம் கட்டி போனது. பின்னே தன்னை சுற்றி இத்தனை நடந்திருக்க தந்தை மீதான கண்மூடித்தனமான பாசத்தால் எதையும் உணரமுடியாத தன் அறியாமையை எண்ணி அழுகை பீறிட தன்னை காதலித்த ஒரே காரணத்திற்க்காக சரண் அனுபவித்த வேதனைகளை உணரந்தவளுக்கு தகுதியற்ற தந்தைக்காக பொக்கிஷமாக கருத வேண்டிய காதலனை துறந்த தன் முட்டாள்தனத்தை எண்ணிதன்னையே வெறுக்க தொடங்கி இருந்தாள்
அன்று தந்தை இறந்த துக்கத்தில் முதலில் கோபத்தில் சரண் பேசி இருந்தாலும் அதன்பின் இறுதியாக எத்தனை முறை அவன் சொல்வதை கேட்குமாறு மன்றாடி அவளை தன்னுடன் அழைத்திருந்தான் ஆனால் தந்தையை அவன் அடித்த கோபத்தில் எதையும் காது கொடுத்து கேட்காமல் பணத்தை முன்னிறுத்தி எத்தனை அலட்சியமாக எடுத்தெறிந்து பேசி பிரகாசத்திற்காக அவனை தன் வாழ்வில் இருந்து தூக்கி எறிந்திருந்தாள்.
ப்ரீத்தி மூலம் உண்மையை தெரிந்து கொண்டவளுக்கு இப்போது அதையெல்லாம் நினைத்து பார்க்கையில் தெய்வமாக அவள் போற்றி வணங்கிய தந்தை அவளிடம் கொண்டிருந்த இரட்டை வேடமும் மகள் மூலம் பதவியை அடைய அவர் செய்தசூழ்ச்சியும் மனதை நொறுங்க செய்ய, தனக்கும் சரணுக்கும் இடையே அழகாக காய் நகர்த்தி இருவருக்குள்ளும் புரிதலின்மையை தோற்றுவித்து அவளை சூழ்நிலை கைதி ஆக்கியதன் விளைவு தான் அவர்கள் இருவரின் பிரிவு என்பது புரிந்தாலும் எதையும் யோசித்து ஆராயாமல் வினையாற்றிய தன் முட்டாள்தனத்தால் அன்றைய தன் மீது கழிவிரக்கம் பிறப்பதற்கு பதில் கீர்த்திக்கு கோபமே முகிழ்த்தது.
பின்னே அறிவீனத்தால் எத்தகைய சொர்கத்தை கை நழுவ விட்டிருக்கிறாள் அந்த ஆற்றாமை இருக்கத்தானே செய்யும்.
சரணை நினைத்து அவனை பேசியதை நினைத்து நாள்தோறும் மனதார அவனிடம் மன்னிப்பு வேண்டி அழுகையில் கரைந்து உடல் இளைக்க தொடங்கியவளிடம் சிலகாலம் கழித்து மீண்டும் வந்த ப்ரீத்தி அன்று அவள் சரணின் அருமை தெரியாமல் அவரை தூக்கி எறிந்ததை எடுத்து கூறி அவனுக்கு அவள் துளியும் தகுதி அற்றவள் என்று சாடியவள் மனம் நிறைந்த காதலுடன் சரண் மீது அவள் கொண்டுள்ள பல வருட நேசத்தை, தவத்தை எடுத்து கூறி கீர்த்தியாகவே சரணை மணந்து காலம் முழுக்க வாழப்போவதாக கூறி கீர்த்தியின் தலையில் இடியை இறக்கி இருந்தாள்.
இளகிய மென்மனம் கொண்ட கீர்த்தி ஏற்கனவே பிரகாசத்தின் மகளாக பிறந்த பாவத்தை எண்ணியும் சரணை அவமதித்து அவன் காதலை புறக்கணித்த குற்ற உணர்ச்சியிலும் அவர் தந்தையின் மரணத்தை ஜீரணிக்க முடியாமல் பேதலித்து போயிருக்க அச்சந்தர்பத்தை பயன்படுத்தி கொண்ட ப்ரீத்தி அவளை தொடர்ந்து பிடித்து வைத்து மேலும் மேலும் தன் பேச்சால் மூளைச்சலவை செய்து அவளை மனதளவில் பலவீனப்படுத்த தொடங்கி இருந்தாள்.
காதல் என்றால் அடிப்படை நம்பிக்கை வேண்டும் அதுவே இல்லாமல் சரணை புரிந்து கொள்ளாமல் பணத்திற்கும் போலி பாசத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து சரணை விலக்கிய கீர்த்தியை அவள் காதலை விமர்சித்து ப்ரீத்தி பேச தொடங்க அமிலமாக தன் செவியில் விழுந்த அவள் வார்த்தைகளை தாங்க முடியாமல் காதை பொத்திக்கொண்ட கீர்த்தி அழுகையினூடே,
“போதும் போதும் நிறுத்து வேண்டாம் ப்ளீஸ் இதுக்கு மேல எதுவும் சொல்லாத என்னால தாங்கமுடியாது, என்னாலையும் என்னோட பாழப்போன காதலாலயும் அவர் பட்ட கஷ்டம் எல்லாம் போ…போதும் என்று நெஞ்சம் விம்ம அவளிடம் கை கூப்பியவள், நான் பாவம் நான் மாமாக்கு வேண்டாம், என்னை கட்டிகிட்டா நீ சொல்ற மாதிரி காலம் முழுக்க அவருக்கு கஷ்டம் தான்…, அவரை மாதிரி நல்லவருக்கு என்னை மாதிரி பாவப்பட்டவ வேண்டாம், என்கூட இருந்தா அவர் நிம்மதியா இருக்கமாட்டார் .. என்… எனக்கு எங்க இருந்தாலும் மாமா நல்லா இருந்தா போதும் இனி அவர் வாழ்க்கையில நான் குறுக்க வரமாட்டேன், எனக்கு வாழற ஆசையே போச்சு உன்னால முடிஞ்சா என்னை கொன்னுடு” என்று கதறியிருந்தாள்.
வந்த காரியம் வெற்றி பெற்றதில் ப்ரீத்தியின் முகத்தில் புன்னகை ஊற்றெடுக்க நிறைவான மனதுடன் கீர்த்தியை பார்த்தவள் “வெரி குட் இதைதான் உங்கிட்ட இருந்து எதிர்பார்த்தேன் ஆனா உன்னை கொன்னு அந்த பாவம் எனக்கு எதுக்குமா..?? சரண் ஸ்டேட்ஸ்ல இருந்து வந்ததும் அவரை கல்யாணம் பண்ணி அவர்கூட எப்படி சந்தோஷமா வாழுறேன்னு உனக்கு ஃபோட்டோ எடுத்து அனுப்புறேன் அதை பார்த்து சந்தோஷப்படு அதுதான் சரணை அவமதிச்ச உனக்கான தண்டனை” என்று வெளியேறினாள் ப்ரீத்தி.
பெற்றோரின் பாவம் என்றிருந்தாலும் பிள்ளைகளை வந்து சேருமல்லவா..?? அதுபோல தன் தந்தையாகப்பட்டவன் செய்திருக்கும் மாபாவங்கள் தன்னோடு போகட்டும் சரனை சேர்வதன் மூலம் சரணும் அதனால் துன்பப்படக்கூடாது என்று எண்ணியவள் அரை உயிராக இருந்த நிலையில் சரணை தாரை வார்த்து முழுதாக மரணித்து போனாள்.,
ஆனால் ப்ரீத்தியே எதிர்பாராத விதமாக அனைத்தும் அமைந்திட எண்ணியது போல சரணை மணம் புரியும் என்னத்தை கைவிட்டு அவன் வீட்டிற்கு சென்றவள் ஒய்யாரமாக அவன் படுக்கையில் அமர்ந்து செல்பி எடுத்து சரவணனுக்கு அனுப்பி கீர்த்திக்கு காண்பிக்க வைத்திருந்தாள். சரணின் அப்பார்ட்மெண்டில் அவளை பார்க்கும் வரையிலுமே எங்கே ப்ரீத்தி கூறியது பொய்யாக இருந்து விடக்கூடாதா ஏதேனும் ஒரு மாயம் நிகழ்ந்து அனைத்தும் மாறி சரணுடன் சேர்ந்து விட மாட்டோமா என்ற ஆசை கீர்த்திக்கு மனதின் ஏதோ ஒரு மூலையில் இருக்கத்தான் செய்தது. ஆனால் சரணின் அனுமதி இல்லாமல் அவன் அறையில் நுழைந்திருக்க முடியாது என்பது புரிபட முழுதாக நொறுங்கி போனாள். சுவரோடு ஒன்றி நடுக்கத்துடன் அப்புகைப்படத்தை பார்த்தவாறு எத்தனைநேரம் அமர்ந்திருந்தாள் எப்போது கைபேசியை தவர்விட்டவாறே மயங்கினாள் என்பது அவளுக்கு நினைவில்லை.
ஆனால் இரவு உணவு அளிக்க வந்த சரவணன் மீண்டும் ப்ரீத்தி அனுப்பிய புகைப்படத்தை அவளிடம் காட்டவும் கீர்த்திக்கு இதயத்துடிப்பே சில கணங்களுக்கு நின்றுபோனது.
ஆம் அன்று முதலிரவிற்க்காக அறையை அலங்கரித்த ப்ரீத்தி பிரகாசம், சௌமியா மட்டுமின்றி கீர்த்திக்கும் புகைப்படம் எடுத்து அனுப்பியிருந்தாள். அதை கண்ட கீர்த்திக்கு இனியும் உயிர் வாழ்வதே வீண் என்று தோன்ற சரவணனிடம் தன்னை இத்தகைய சித்திரவதையில் இருந்து விடுதலை அளிக்குமாறு கூறி கதற தொடங்கினாள். பிரகாசத்தின் மீதான ப்ரீத்தியின் கோபத்திற்கு சரவணன் துணை நின்றிருந்தாலும் இப்போது சரணை கொண்டு கீர்த்தியை வதைப்பதை அவராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, அதிலும் தன்னை கொன்றுவிடுமாறு அவர் காலில் விழுந்து கெஞ்சும் கீர்த்தியை பார்த்தவருக்கு அப்போதுதான் அவர் செய்து கொண்டிருக்கும் மடத்தனம் புரிந்தது.
அதன்பின் அவளை சமாதானப்படுத்தி இதுபோன்ற முட்டாள்தனத்திற்கு எந்நாளும் முயலக்கூடாது என்று அவளிடம் பல நூறு சத்தியங்கள் பெற்றவர் அவளை ஊருக்கு அழைத்து செல்வதாக கூற, அதை உறுதியாக மறுத்திருந்தால் கீர்த்தி.
ஆம் தந்தை என்ற சொல்லையே அறவே வெறுத்து போயிருந்த கீர்த்திக்கு தன் வாழ்வையே சீரழித்த மனிதரின் முன் சென்று அவருக்கு நிம்மதி அளிக்க விருப்பம் இல்லை. எப்படி ஒரு மகளை மறைத்து ஊருக்குள் நல்லவராக வேடம் தரித்து திரிந்தாரோ இப்போது நிரந்தரமாக மற்றொரு மகளை இழந்து தவிப்பது தான் அவருக்கு அவள் அளிக்கும் தண்டனை என்பதால் சைந்தவியிடம் செல்ல முடிவெடுத்து அதை அவரிடம் தெரிவிக்க, சரவணனும் அவளை பெங்களூருக்கு அழைத்து சென்றவர் ப்ரீத்தியிடம் தான் அசந்த நேரம் தன்னை ஏமாற்றி அடித்து போட்டு கீர்த்தி தப்பி விட்டதாக அவளை நம்ப செய்திருந்தார்.
அனைத்தையும் எண்ணி பார்த்த கீர்த்திக்கு அவள் மீதான சரணின் குற்றச்சாட்டை எதையும் கேட்கும் பொறுமைகூட இல்லாதவனிடம் எவ்வாறு புரியவைப்பது என்று அலமலந்து போயிருக்கையில் அவன் கரம் அவள் ஆடையை களைய முற்படுவதைக்கண்டு மேலும் அதிர்ந்து போனாள்.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.