‘உன்மேல் உள்ள காதலால் தான் உனக்கு என் குழந்தையை அளிக்க முன் வந்தேன்… அதே காதலால தான் இத்தனை நாள் நீ உன்னோட யுத்தத்துல ஜெயிக்கிறதுக்காக விலகி இருந்தவன்இப்போ உன்னோட நோக்கம் நிறைவேறினதும் அழைச்சிட்டு போக வந்தேன்”
“ஏன் ஹனி உன்னோட லவ்வுல மட்டும்தான் எல்லா வழிமுறைகளும் சரியா..?? என்னோட லவ் என்ன தக்காளி தொக்கா…?? உன்னோட பத்து வருஷத்துக்கும் மேலான காதலுக்கு கொஞ்சமும் குறைஞ்சது இல்லம்மா என்னோட ஏழு வருஷ காதல்..!!என்றவன் ஒரு காலை மடித்து சுவரில் சாய்ந்து நின்றவாறு கூற விசித்திர பார்வையை ப்ரீத்தி அவன் மீது வீசினாள்.
“நான் மேல் படிப்புக்காக ஸ்டேட்ஸ் போகும் முன்ன என் தங்கச்சி சௌமியாவைபார்க்க காலேஜ்க்கு வந்தேன், அப்போதான் உன்னை முதல்முறையா ஒரு பையனை செருப்பால அடிச்சி இழுத்துட்டு போகும் போது பார்த்தேன்… அப்போ அந்த நொடி உன்னோடதைரியத்துலயும், துணிச்சலயும் விழுந்தவன் தான் இப்போவரை எந்திரிக்கலை” என்று ஒருவித மயக்கத்துடன் கூறியவன்,
அப்பவே உன்கிட்ட பேச ட்ரை பண்ணேன் ஆனா எனக்கு பிளைட்க்கு டைம் ஆனதால காரில் ஏறினவன் அவசரவசரமா உன்னை ஒரு ஃபோட்டோ எடுத்துட்டு கிளம்பிட்டேன்… வேணும்னா பார்என்று ப்ரீத்தி மருத்துவ கல்லூரியில் படித்தபோது அவள் ஆவேசமாக வம்பு செய்தவனை இழுத்து செல்லும் காட்சியை படம் பிடித்து வைத்திருப்பதை காட்டினான்.
ஒருகணம் அதை வெறித்து பார்த்தவள் பின் வெறி கொண்டவளாக அவன் கைபேசியை பறித்து காதலா..?? மை ஃபூட்..!! என்று அவன் முகத்தில் விட்டேறிய விஷ்வாவோ தன் முகத்தில் மோதிய கைபேசி கீழே விழுமுன் பிடித்து பத்திரபடுத்தினான்.
“டேய் பொறுக்கி காதல்ங்கிற பேருல ஒரு பொண்ணுக்கே தெரியாம அவளுக்கு உன்..” என்றவளை இடை நிறுத்தியவன்,
“அதே காதல்ங்கிற பேருல நீ பண்ணினதை விடவா டார்லிங்..??” என்று அனாயசமாக அவன் கேட்க தலையை பிடித்து கொண்டு அமர்ந்துவிட்ட ப்ரீத்திக்கு துக்கம் தொண்டையை அடைத்து கொண்டு வந்ததுயாரிவன் எதற்காக காதல் என்ற பெயரில் தன்னை ஏமாற்றிஅலைகழிக்கிறான்…,
ஆழ்ந்த மூச்சை எடுத்து விட்டவள் ஒரு முடிவுடன் அவனை நெருங்கி, “எப்படி உனக்கு குழந்தை பத்தின விஷயம் தெரிஞ்சது பாரும்மாவே உன்னை கேட்டாங்களா..?? என்றவளின் புருவம் நெறிபட இல்லை அதுக்கு வாய்ப்பு இல்லை அவங்க அப்படி செய்யக்கூடிய ஆள் இல்லை, அப்புறம் எப்படி சொல்லு” என்று கேட்க,
‘அது ஒரு கோஇன்சிடன்ஸ் ஹனி, அன்னைக்குதான் ஐவிஃஎப்ல ஸ்பெஷலைஸ் பண்ணிட்டு ஸ்டேட்ஸ்ல இருந்து நான் இந்தியாக்கு வந்தேன். உன்னோட பாரும்மா எனக்கு ரொம்ப க்ளோஸ்.. அவங்களை என்னோட அத்தைன்னு சொல்றதைவிட பெஸ்ட் பிரெண்ட்னு சொல்லலாம் அதான் ஊருக்கு போகும் முன்ன அவங்ககிட்ட ஜஸ்ட் ஒரு விசிட்.
“ஷி ஐஸ் ஸச் எ டார்லிங்..!! அவங்ககிட்டஎனக்கு ஒரு பொண்ணை பிடிச்சிருக்கு இந்த பொண்ணைநீங்கதான் உங்க தம்பிகிட்ட பேசிகட்டி வைக்கணும் சொல்லிஅவங்ககிட்ட நான் பர்சனல் ரூம்லபேசிட்டே இருக்கும் போது தான்நீ அவங்களுக்கு கால் பண்ண என்னை வைட் பண்ண சொல்லிட்டு அவங்க வெளியில வரவும் நீ அங்க வந்திருந்த, நானும் முதல்ல ரூம்ல ரெபர் பண்ணிட்டு இருந்தவன் வெளியில சத்தம் அதிகமா கேட்கவும் என்னனு ஸ்கரீனை தள்ளிட்டு பார்த்தா ஸர்ப்ரைசிங்லி நீ நின்னுட்டு இருந்த ஆனா உனக்கும் அவங்களுக்கு காரசாரமான விவாதம் போயிட்டு இருந்தது.
நீ என்னென்னவோ இஷ்டத்துக்கு அவங்ககிட்ட கத்துன, கதறுன அவங்க கால்ல விழுந்துஎழுந்த அப்புறம் டேபிள் மேல இருந்ததெல்லாம் தள்ளிவிட்டு உன்னோட கண்ட்ரோல்லயே இல்லாம இருந்த.., நாம அன்னைக்கு காலேஜ்லபார்த்த பெண்ணா இவன்னு எனக்கு பெரிய ஷாக்..!!
அப்புறம் தான் டோரை லேசா திறந்து என்ன பேசுறிங்கன்னு கவனிக்க தொடங்கினேன் அப்போகாதுல விழுந்துதுலசிலது புரிஞ்சது சிலது புரியல ஆனா சம்திங் ஈஸ் ராங்ன்னுதெரிஞ்சது. அந்த நேரத்துல நான் இடையில வந்து பேசுறது நல்லா இருக்காதுன்னு நெனச்சேன் ஏன்னா அப்போ நான் உன்னை சந்திச்சிருந்தா அது நம்மோட ஃபர்ஸ்ட் மீட் ஆகி இருக்கும், அந்த சூழல்ல உன்கிட்ட அறிமுகம் ஆகுறதுல எனக்கு விருப்பம் இல்லை..,
“என்ன இருந்தாலும் நம்ம மீட் ஸ்பெஷலா இருக்கணும் இல்லையா ஸ்வீட்ஹார்ட்..!!! என்று இதழ்களை குவித்து பறக்கும் முத்தம் அளிக்க, அதில் வெறுப்புடன் முகம் சுழித்த ப்ரீத்தி.,
“மைன்ட் யுவர் வேர்ட்ஸ் மிஸ்டர் விஷ்வா”
“இதுல மைன்ட் பண்ண பெருசா என்ன இருக்கு பேப்..!! இருந்தாலும் நீ சொல்றதால மைன்ட்ல வச்சிக்கிறேன்என்று விஷமமாக சிரித்தவன், வோர்ட்ஸ்ஸஇல்லை உன்னை” என்று கண்சிமிட்ட,
போதும் நிறுத்து..!! என்று சீறினாள் ப்ரீத்தி.
அதை கண்டவனின் முகத்தில் இளம் முறுவல்படர, “சரி இப்போதைக்கு நிறுத்துறேன்” என்று அவளை பார்த்தவாறு பின்னங்கழுத்தை வருடிகொண்டே குரலை செருமியவன்,
“சரி சரி கதைய கேளுஎனக்கு நேரம் இல்ல.., ஆக்சுவலி எத்தனை செமினார், சர்ஜரிஸ் அவாய்ட் பண்ணிட்டு இங்க வந்துருக்கேன் தெரியுமா..?? எல்லாமே உனக்காகவும் என் பையனுக்காகவும் தான்..!! என்றவன்அன்று பார்வதியுடனான உரையாடலை தன்னுள் நினைவு கூர்ந்தான்.
“லிசன் விச்சுநீ நினைக்கிற மாதிரி ப்ரீத்தி இஸ் நாட் தட் ஈஸி..!! அவ அதிரடின்னா நீ அடாவடி எப்படிடா உங்களுக்குள்ள செட் ஆகும். லவ்ன்னு வச்சுகிட்டாலும் அவ ரெண்டு வாரம் இன்னொருத்தனோட இருந்திருக்கா இதெல்லாம் உங்க அம்மாக்கு தெரிஞ்சா என்ன ஆகும்னு யோசிச்சியா…??”
“டார்லிங் எந்த காலத்துல இருக்க நீ ரெண்டு வாரம் கூட இருந்தா என்ன..??” என்று தோள்களை குலுக்கிட,
“விச்சு நீ தேவையில்லாத ரிஸ்க் எடுக்குறன்னு தோணுது நான் சொல்லவரது உனக்கு புரியலையா..??
ப்ச் உனக்கு தான் புரியலை டார்லிங்..!! இப்போ என்ன ப்ரீத்தி சரணோட இரண்டு வாரம் இருந்ததுதான் உனக்கு பிரச்சனையா.. ஓகே நீ சொல்ற மாதிரியே எடுத்துகிட்டாலும் இரண்டு வாரம் கூட இருந்த பிறகும் அவ ஐவிஃஎப் பண்ண வந்திருக்கும் போதே நீ யோசிக்க வேண்டாமா ஸ்வீடி..??? என்று கேட்க,
‘புரியலை விச்சு…’
டார்லிங் இன்னைக்கு இருக்க ப்ரீத்தியை பார்த்துட்டு மட்டுமே அவளை ஜட்ஜ் பண்ண விரும்பலை ஏன்னா எனக்கு அறிமுகமான ப்ரீத்திதான் நிஜம்..!! இது அவளோட இயல்புல இருந்து மாறி அவளையே வருத்திகிட்டு ஒரு மிருகத்தை வதம் செய்யபோன இடத்துல தடுமாறி இருக்கா அவ்வளவே..!! ஏதோ அவளுக்கு இருந்த மனநிலையில எதையும் யோசிக்காம இருந்தா அதெல்லாம் பெருசா எடுத்துக்க முடியுமா சொல்லு …?? என்று கேட்க,
“டேய் உனக்கு நான் எப்படி புரிய வைக்கிறதுன்னு தெரியலைடா” என்று அவர் தலையை பிடித்து கொண்டு மேஜையில் கவிழவும்…,
“வாட் இஸ் யுவர் ப்ராப்ளம் ஸ்வீட்டி” என்று சலித்து கொண்டவன்,
‘ஓகே ஐ காட் இட் !! இப்போ என்ன அதிகபட்சமா குழந்தைக்காக ப்ரீத்தி சரணை ஃபோர்ஸ் பண்ணி இருப்பாளா..??’ என்றிட,
‘என்னடா இவ்ளோ சாதாரணமா சொல்ற..??’
“இதுல என்ன இருக்கு ஸ்வீட்டி, இவ்ளோ நேரமா பித்து பிடிச்ச மாதிரி குழந்தை வேணும்னு உங்ககிட்ட அழுது ஆர்பாட்டம் பண்ணினவ நிச்சயம் சரண்கிட்ட ஒன்னு அழுது இருக்கணும் இல்லை ஃபோர்ஸ் பண்ணி இருக்கணும்.. பட் ஸ்டில் எல்லாமே அவ அப்பா பண்ணினதுல அவளுக்கு ஏற்பட்ட வெறுப்பு, வலி, ஆதங்கம், ஆவேசம் அவளை எதையும் யோசிக்கவிடாம செய்ய வச்சிருக்கு.. ஷி இஸ் அப்ஸலூட்லி நாட் இன் ஹெர் கண்ட்ரோல் இதை நீங்க புரிஞ்சுக்கோங்க..” என்று அவரை பார்த்தவன்
“பட் சரண் இஸ் ரியலி எ ஜென்டில்மேன்..!!! நீங்க கவலைபடாம சரண்கிட்ட இருந்து சாம்பிள் கலெக்ட் பண்ணுங்க மத்ததை நான் பார்த்துக்கிறேன்” என்று தைரியமளித்து இருந்தான்.
“அன்னைக்கு நீ கிளம்பி போகவும் பாரு ரொம்ப அப்செட்டாகி உட்காந்துட்டாங்கசரி என்னன்னு விசாரிச்சப்போ தான் சொன்னாங்க,
“மேடம் அப்பாவை பழி வாங்குறதுக்காக குழந்தை வேணும்னு சொல்லிஅதுவும்தங்கச்சியோட லவ்வர் குழந்தைதான் வேணும்னு சொல்லி ஒத்த காலுல நிற்கிறதா சொன்னாங்க..!!!முக்கியமா இரண்டு வாரமா சரண்கூட இருந்து பருப்பு வேகாததால ஆர்டிபிஷியலா மூவ் பண்றீங்கன்னு சொல்லவும் எனக்கு அப்படியே புல்லரிச்சு போச்சு” என்றவனின் குரலில் எல்லையில்லா கடுமை விரவி இருந்தது.
அன்று ஆத்திரத்தில் அறிவிழத்து அவள் செய்தது தான் ஆனால் இப்போது அதையே அவன் வாய் மொழியாக கேட்ட ப்ரீத்தியின் முகம் இருண்டு போக சுரத்தற்ற குரலில் “தட்ஸ் நன் ஆஃப் யுவர் பிசினஸ் விஷ்வா” என்றாள்.
“எப்படி நன் ஆஃப் மைன்னு சொல்ற நீ..?? என்று அவளை கசப்புடன் பார்த்தவன் சிலநொடிகள் தன்னை மட்டுபடுத்த எடுத்து கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிய இறுதியாக சுவரில் கரம் பதித்து தன் வலது காலை ஓங்கி தரையில் உதைத்தவன்,
‘ஹவ் டேர் யூ..!!’ என்று அவளை ஆவேசமாக நெருங்கி,
“தட்ஸ் மை ப்ளடி பிசினஸ் இடியட்..!!” என்றவனின் குரலில் மட்டுமல்ல விழிகளிலும் சினம் மிளிர்ந்தது அதை கண்ட ப்ரீத்தி தன்னை அறியாமல் இரு எட்டுக்கள் பின்னே வைக்க,
“எப்போ என் மனசுக்குள்ள நீ வந்துட்டியோ அப்போவே உன்னோடதெல்லாம் என்னோட பிசினஸ் ஆகிடுச்சு.. ஏன்னு கேட்க உனக்கே அதிகாரம் கிடையாது காட் இட்..??” என்று உறுமியிருந்தான்.
முன்பின் அறிமுகம் இல்லாத, யார் என்றே தெரியாதவனின் குழந்தையை சுமக்கும் நிலையில் தன்னை நிறுத்தி இருக்கும் காலத்தை எண்ணி மௌனமாக கண்ணீரில் கரைந்துகொண்டிருந்த ப்ரீத்தியை நெருங்கி அவள் தலையை ஆதூரமாக பார்வதி வருட நிமிர்ந்து பார்த்தவளிடம் அவரை கண்டதும் அத்தனை ஆவேசம்,
“கைய எடுங்க நான் உங்கள அம்மாமாதிரி நெனச்சேன் ஆனா நீங்க எனக்கு இவ்ளோ பெரிய துரோகம் பண்ணிட்டீங்க எப்படி முடிஞ்சுது உங்களால சொல்லுங்க… சொல்லுங்க டாக்டர் பார்வதி” என்று உரத்த குரலில் கேட்க
“என்னடா பேசுற ப்ரீத்தி நான் உன்னோட பாரும்மா”
“இல்ல நீங்க என் பாரும்மா கிடையாது அப்படி இருந்திருந்தா நீங்க இதை பண்ணிருக்க மாட்டீங்க நீங்க எனக்கு பண்ணுனது நம்பிக்கை துரோகம்.. நான் உங்கள எவ்ளோ நம்புனேன், அன்னைக்கு நான் உங்ககிட்ட எவ்ளோ கெஞ்சிருப்பேன் எல்லாத்துக்கும் அப்போ சரி சரின்னு தலையாட்டிட்டு இப்போ எனக்கே தெரியாம இப்படி ஒரு காரியத்தை பண்ணிருக்கீங்க நீங்கல்லாம் ஒரு டாக்டரா..?? வெட்கமா இல்லையா உங்களுக்கு..?? நம்பி வந்த என்னை கழுத்தறுத்துட்டீங்களேஇதுதான் உங்க தொழில் தர்மமா..?? என்று இஷ்டத்துக்கு வாய்க்கு வந்தபடி வார்த்தைகளை சிதறவிட்டுக் கொண்டிருந்தாள் ப்ரீத்தி.
அதைக் கண்ட பார்வதியின் முகத்தில் கசந்த முறுவல்…
“இங்க பாருடாஉனக்கு உன்மேல அக்கறை இல்லாம இருக்கலாம் ப்ரீத்தி ஆனா எனக்கு என் பொண்ணு மேல ,அவ வாழ்க்கை மேல அக்கறை இருக்கு..!! அன்னைக்கு உனக்கு எவ்ளோவோ சொல்லி புரிய வைக்க முயற்சி பண்ணேன் ஆனா எதையுமே காது குடுத்து கேட்க்கிற நிலையில நீ இல்ல.. சரியா சொல்லனும்னா சைக்கோ மாதிரி நடந்துகிட்ட எனக்கே அது பெரிய ஷாக் உன்கிட்டேர்ந்து இப்படி ஒரு நடவடிக்கைய நான் எதிர்பார்க்கவே இல்ல”
“நீ நெனச்சத சாதிக்கணும்னு ஒத்த காலுல நின்னு அன்னைக்கு நீ ஆத்திரத்துல அவசரப்பட்டு ஒரு விஷயத்தை செய்ய சொல்லி அதோட பின்விளைவுகளை நான் என்ன எடுத்து சொல்லியும் அதை ஏத்துக்காம என்னை நிற்பந்தபடுத்தின, ஆனாநீ சொல்ற எல்லாத்தையும் என்னாலசெய்ய முடியாது”
‘அதுதான் மொத்தமா செய்துட்டீங்களே இனியும் ஏதாவது இருக்கா..??’
“ப்ரீத்தி நான் உனக்கு அம்மாடா ..!! நீ வாய் வார்த்தையாஅப்படி கூப்பிட்ருக்கலாம் ஆனா நான் உன்னை அப்படித்தான் நெனக்கிறேன் புரியுதா..??” என்று கேட்க ப்ரீத்தியோ அவரை பார்க்க பிடிக்காமல் முகத்தை திருப்பி இருந்தாள்.
“பெற்றவனை பழிவாங்கஉனக்கு உறுதுணையா இருந்தேன் ஆனா எந்த புள்ளியில நீ சரண்கிட்ட போய் நின்னியோ அந்த இடத்துல நீ சரிய ஆரம்பிச்ச..!! அங்க சரிய தொடங்கின என் பொண்ணு அதலபாதாளத்துக்கு போயிடக்கூடாதேனு ஒரு அம்மாவா அவளை நான் திசைமாத்தி விட்ருக்கேன் அது தப்பா..??” என்று கேட்க,
ப்ரீத்தி அவரை வெறுமையாக பார்த்தாள்.
“ஏன் திசை மாத்துனிங்க என்னை அப்டியே விடவேண்டியது தானே..!! நான் பாதளத்துல மண்ணோட மண்ணா போறேனுநீ சொல்லலாம் ஆனா அதை பாக்குற சக்தி எனக்கும் உன் அம்மாக்கும்கிடையாது” என்று வலியோடு கூறியவர் அவள் தலையை வருடியவாறே,
“ புரிஞ்சிக்கோ ப்ரீத்தி அன்னைக்கு நீ நடந்ததை எல்லாம் சொன்னப்போ உனக்கே ஒரு விஷயம் புரியல… ரெண்டு வாரம் மனசார காதலிக்கிறபொண்ணோட பேரு, உருவம் அவளோட நடவடிக்கை பேச்சுனு அவளை மாதிரியே மாத்திக்கிட்டு நீ போயி நின்னும் ஒருத்தனை உன்னால உன்னை நோக்கி ஈர்க்க முடியலனா நாளைக்கு இந்த குழந்தைய வச்சு மட்டும் நடத்திட முடியும்னு நீ எப்படி நம்புற, உனக்கே அது முட்டாள்தனமா தெரியலயா..??”
“நான் உன்னை திசைமாத்தி விட்ருக்கேனே தவிர திசையே தெரியாம அலைய விடல புரியுதா..??” என்று அவள் விழிகளுக்குள் ஊடுருவியவரின் பார்வையில் ஆயிரம் அர்த்தம் பொதிந்திருந்தது.
“நான் அனுப்பிருக்க திசை உயினக்கு பாதுகாப்பானது நீ அங்க நல்லபடியா சந்தோசமா இருப்ப அப்படிங்கற எண்ணத்தோட தான் நான் இதை மனசார செய்தேன்… நீ சொன்ன வழியில எனக்கு ஒரு துளிகூட உடன்பாடு இல்லை ஏன்னா எனக்கு தெரியும்நீ சரணோட குழந்தைய சுமக்குறதால மட்டும் சரண் உன்னை ஏத்துப்பாருன்னு நீ போட்ருக்கறது தப்பு கணக்கு என்று..!! அப்படி இருந்தும் அதை செய்ய நான் துணை போனா என்னைவிட முட்டாள் யாருமே கிடையாது… உன்னை சமாதானபடுத்தி அனுப்பின பிறகு விஷ்வா வந்தான்” என்றதும் சட்டென அவர்புறம் திரும்பிய ப்ரீத்தியின் விழிகளில் எண்ணற்ற உணர்வுகள் வந்து சென்றாலும் இதழ்களில் கனத்த மௌனம் மட்டுமே..!!
“இப்போ இது உன்னை நிற்பந்தபடுத்திற மாதிரி உனக்கு தோணலாம் ஆனா உன் வாழ்க்கை பற்றின முடிவு எடுக்கிற உரிமை எனக்கு இருக்கிறதாலே ரொம்ப நேரம் யோசிச்சு அவன்கிட்ட பலகட்டமா பேசி கடைசியா சம்மதிச்சேன். அதுவும் அன்னைக்கு நீ இருந்த நிலையில எதையும் பேசி புரியவைக்க நீ இடம் கொடுக்கலை அப்போ நீ நெனச்ச மாதிரி குழந்தை அத்தனை சாதாரணமான விஷயம் இல்லை.. அது இப்போ உனக்கு புரிஞ்சி இருக்கும்னு நம்பறேன் ப்ரீத்தி” என்று கூற, ப்ரீத்தியின் விழிகளும் அது எத்தனை நிஜம் என்பதை உணர்ந்ததில் கலங்கி போனது.
“உடனே ஏத்துக்க முடியாட்டியும் காலம் எல்லா காயத்தையும் மற்றும் அருமருந்து நிச்சயம் நீ எதிர்பார்த்த பாசத்தையும் காதலையும் குறையே இல்லாம விஷ்வா உனக்கு கொடுப்பான் அவனைவிட உன்னை புரிஞ்சிக்கிடவங்க யாரும் இல்லை, என்னை நம்பு குழந்தைக்காக இல்லாம உனக்காக அவனை ஏத்துக்கோ” என்று அவள் தோளில் கரம் பதிக்க,
அதை தட்டிவிட்டவள் நேரே விஷ்வாவின் முன் சென்று எழிலிடம் பேசிக்கொண்டிருந்தவனை சொடக்கிட்டு தன்புறம் திருப்பி, “பெரிய தப்பு பண்ணிட்ட விஷ்வதேவ் இதுக்கான பலனை நீ அனுபவிப்ப..!! மார்க் மை வோர்ட்ஸ்” என்று கண்களில் கனலுடன் அவனை பார்த்தவள் சுட்டு விரல் நீட்டி,
“இந்த ப்ரீத்தியை நீ ரொம்ப ஈசியா எடை போட்டுட்ட” என்று கூற,
அவள் சுட்டு விரலை தன் விரலால் கிடுக்கி பிடித்து “அப்படியா..??” என்று தலை சரித்து கேட்ட விஷ்வாவின் முகத்தில் அட்டகாசமான சிரிப்பு, சிரிப்பினூடே அவளை தன் இருகரங்களிலும் அள்ளிக்கொண்டவன் அவள் செவியோரம் தன் அதரங்களை பொருத்தி “இப்போ கொஞ்சம் வெயிட்டா தான் இருக்க டெலிவரி முடிஞ்சதும் குறைஞ்சிடும் அப்போ நிச்சயம் உன்னை… என்று ஒற்றை கண் சிமிட்டியவன் இதழ் மடித்து ஈசியா தான் இருக்கும் ஹனி” என்று அவள் நெற்றியில் முத்தம் வைக்க,
வெறுப்புடன் முகம் திருப்பியவள், “இதுக்கெல்லாம் சேர்த்து நான் உனக்கு கொடுக்குற நாள் ரொம்ப தூரத்துல இல்லை” என்று கூற,
அவளை இறக்கி நிறுத்தியவன், “ஐ ஆம் வைட்டிங் பேபி” என்று தலை சரித்து கண்சிமிட்டினான்.
அனாயசயமாக தன்னை தன் வார்த்தைகளை கையால்பவனை கண்டவளுக்கு எரிச்சல் அதிகரிக்க கடுகடுத்த முகத்துடன் ‘ச்சை’ என்று வெறுத்து போனவளாக திரும்பிநடக்க அதேசமயம்பளீரென்ற வலி இடையில் தோன்றி பனிக்குடம் உடைப்பெடுக்கதொடங்கியது. ‘அம்மா’ என்று வலியோடு அருகே இருந்த நாற்காலியினை பற்றியவளின் நிலையை கண்டு விஷ்வா அவளை தாங்கி பிடிக்க, அடுத்த பதினைந்து நிமிடங்களில் நாதனின் மொத்த குடும்பமும் நகரின் புகழ்பெற்ற மருத்துவமனையில் குவிந்திருந்தது.
செவிலியர் குழந்தையின் தந்தை யார்..? என்று கேட்கவும் “நான் தான் சிஸ்டர்” என்று முன்னே வந்த விஷ்வதேவ் அவர்கள் அளித்த படிவத்தில் கையெழுத்திட்டவன் மறுநொடியே வெளியே சென்றிருந்தான்.
ப்ரீத்தியை பிரசவ அறைக்குள் அனுமதித்து விட்டு நாதன் படபடப்புடன் அங்கிருந்த வராந்தாவில் நடை பயின்றார்.
அங்கிருந்த நாதன் உட்பட அனைவரும் புயலென வந்து குழந்தைக்கு தந்தை என்று தன்னை அடையாளபடுத்தி கொண்டவனின் இப்போதைய செய்கையில் குழம்பி தவித்திருக்க அவர்களை அரை மணி நேரம் தவிக்க வைத்த பின்பே மருத்துவமனையினுள் நுழைந்த விஸ்வதேவ் நேரே பிரசவ அறை நோக்கி சென்றிருந்தான்.
காலையில் இருந்தே சிறு புள்ளியாய் தொடங்கிய பிரசவ வலியை மற்றவர் அறியாமல் மறைத்து தாங்கிய ப்ரீத்திக்கு விஷ்வாவுடன் வாதிட்டதில் அதை அலட்சியபடுத்தி இருந்தாள். மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே ப்ரீத்திக்கு உடனுக்குடன் வலி பிறக்க அனைத்தையும் பற்களுக்கிடையில் புதைத்து திடமாக எதிர்கொள்ள தொடங்கி இருந்தாள்.
இங்கே பிரசவ அறையிலும் அதையே தொடர செவிலியர்கள் அவளை இத்தனை அழுத்தமாக இருக்க வேண்டாம் வாய்விட்டு கதறிட கூறியும் அதை ஏற்காமல் அவள் அதே இறுக்கத்தை தொடர இறுதிகட்ட வலிகள் நொடிக்கு நொடி வேகமெடுத்து கிளம்பி இருந்தது.
அந்நேரம் வரை அவள் கொண்டிருந்த சக்தி அனைத்தும் வடிந்த நிலையில் கண்கள் சொருக தோய்ந்து போனாள். அப்போது புயல் போல உள்ளே நுழைந்த விஷ்வதேவ் ‘ஸ்வீட்ஹார்ட்’ என்று அவள் கன்னத்தை தட்டி எழுப்ப அவன் குரலை கேட்டதுமே கொண்டிருந்த அசதியை மீறி வீறு கொண்டு விழித்தவள், “டேய்உன்னை யார் இங்க வர சொன்னா போ வெளியே” என்று சீற,
அவனோ அதற்கும் புன்னகையை அவளுக்கு பதிலாக அளித்தவன் அங்கிருந்த மருத்துவரிடம், “டாக்டர் குழந்தையோட அப்பா டெலிவரிலகூட இருக்கலாம் தானே..??” என்று கேட்க,
‘வை நாட்’ என்றவர் ப்ரீத்தியிடம்,
‘புஷ் ப்ரீத்தி’ இன்னும் கொஞ்சம் தான் குழந்தை தலை தெரியுது என்று கூற அப்போதும் அவனை வெளியேறுமாறு கத்திக்கொண்டு இருந்த ப்ரீத்தியை அர்த்தம் பொதிந்த பார்வை பார்த்தவன் மஞ்சள் கயிற்றில் கோர்த்த பொன் தாலியை அவள்முன் உயர்த்தி பிடித்தான்.
‘நோஓஓ’ என்று அதை கண்டு முகம் வெளிறிய ப்ரீத்தி ‘வாட் இஸ் திஸ்..??’ என்று அவனிடம் எறிந்து விழ,
“பார்த்தா தெரியலை, தாலி டார்லிங்..!! உங்கப்பனை பழி தீர்க்க முறை இல்லாம குழந்தை பெத்துக்குறது உனக்கு பெருமையா இருக்கலாம் ஆனா..!! என்றவனின் குரலில் இப்போது இலகுத்தன்மை முற்றிலும் விடைபெற்று கடுமை நிறைந்தது.
“இந்த விஷ்வதேவ் குழந்தை உலகத்துக்கு வரும்போது முறையான அங்கிகாரத்தோட வரணும்” என்றவனின் முகத்தில் வந்து போன பாவத்தை கண்டு ப்ரீத்திக்கு தூக்கிவாரி போட்டது.
“என் குழந்தையோட வரவு முறையானதா இருக்கணும் அதை யாராலையும் தடுக்க முடியாது”, என்று கண்கள் இடுங்க அவளை பார்த்தவன், “டேர் இஃப் யூ கேன்..!!” என்று அடிக்குரலில் சவால் விடுத்தான்.
அவன் கண்களில் இருந்த உறுதியை கண்டு அதிர்ந்த ப்ரீத்தி இறங்கிய குரலில், “ப்ளீஸ் டோன்ட் விஷ்வா, டோன்ட் டூ திஸ் டூ மீ.. ப்ளீஸ் வேண்டாம்” என்று அவனிடம் கைகூப்பி மன்றாட,
அதை அலட்சியபடுத்தியவன் அங்கேகுழந்தையின் தலை வெளியில் தென்படுவதை கண்டு நொடியும் தாமதிக்காமல் ப்ரீத்தியின் கழுத்தருகே தாலியை கொண்டு சென்று அசையா விழிகளுடன் அவளை கூர்மையாக பார்த்தவாறேமூன்று முடிச்சு போட்ட அதேநேரம் அவன் குழந்தை பூமியில் தவழ்ந்திருந்தது.
என்ன முயன்றும் விழியில் வழியும் நீரை கட்டுபடுத்த முடியாமல் ப்ரீத்தி அவனைபார்க்க அதேநேரம் செவிலியர் குழந்தையை அவனிடம் நீட்டி இருந்தார்…
குழந்தையை கரத்தில் ஏந்தி அவளருகே வந்தவன் தன் மகனை அவள் மார்பில் படுக்க வைத்து தாயின் முதல் ஸ்பரிசத்தை தந்தை மூலம் அவர்களின் புத்திரன் உணர செய்திட அங்கேமூவருக்குமான பந்தம் அழகாய் மலர்ந்தது.
அடுத்த நாள் நாதனின் வீட்டில் எளிய முறையில் உற்றார் உறவினர் முன்னிலையில் அதிகாலை சுபயோக சுபதினத்தில் திருமண ஏற்பாடுகள் தூரிதமாக நடைபெற, ஒருபுறம் அலரின் அறையில் அவள் கைவண்ணத்தில் தயாராகி கொண்டிருந்த கீர்த்தியின் முகத்தில் மருந்துக்கும் மலர்ச்சி இல்லை.
மனமெங்கும் மிதமிஞ்சிய சினத்தில் இருக்கும் சரணுடனான திருமணத்தை எண்ணி கிலி பிடித்த நிலையில் அமர்ந்திருந்த கீர்த்தியின் மனதில் அன்று பெங்களூரில் சரண் அவளிடம் மூர்க்கத்தனமாக நடந்து கொண்ட விதம் வலம் வர இதழ்களை அழுந்த பற்றி மனதில் இருந்து எழுந்த கேவலை அடக்கியவளுக்கு இனிமேல் அவனுடன் கழிக்க போகும் நாட்களை எண்ணி இதயம் அதிவேகமாக துடிக்க ஆரம்பித்தது. அதில் அவள் உடல் அப்பட்டமாக வெடவெடக்க முகமெங்கும் அச்சத்தில் அதிகாலை வேளையிலும் வியர்க்க தொடங்கியது.
“என்னாச்சு கீர்த்தி எதுக்கு இவ்ளோ டென்ஷனா இருக்க..??” என்ற அலர் கேட்க,
அச்சம் விரவிய விழிகளுடன் அவளை பார்த்தவள் எச்சில் கூட்டி இதழ்களை ஈரபடுத்தி கொண்டே ‘ஒன்றுமில்லை’ என்பதாக தலையசைக்க,
அவள் வியர்வையை துடைத்து கொண்டே, “அப்புறம் ஏன் உன் முகத்துல சந்தோஷமே இல்லை பயம் தான் தெரியுது..!! மாமா கோவமா இருக்கிறதை நெனச்சி பயப்படுறியா..??” என்று கேட்க,
பதிலற்று அலரை பார்த்தாள்.
உன் அப்பாவும் அக்காவும் பண்ணினதை இன்னும் எங்களாலேயே மறக்க முடியல, அவங்களால அதிகமா காயப்பட்டது மாமா அந்த வலி இருக்கத்தானே செய்யும்… ஆனா எதுவும் நிரந்தரம் இல்லை இதுவும் கடந்து போகும் தைரியமா இரு கொஞ்ச நாளில் சரியாகிடும்” என்று கூற கசந்த புன்னகையை அவளுக்கு பதிலாக அளித்த கீர்த்திக்கு அல்லவா தெரியும் சரணின் கோபம் அவர்கள் மீது அல்ல தன்மீது என்றும் அவனருகே இருக்கையில் அது பலமடங்காக உயருமே அன்றி குறையாது என்று..!!!
மறுபுறம் மாடியில் குளிர்காற்று முகத்தில் அறைய அடங்க மறுக்கும் மனகொதிப்புடன் அமர்ந்திருந்த சரணின் நிலையை புரிந்தவனாக எழில் “வாழ்க்கை ஒருமுறை தான் சரண்..!! கீர்த்தி மேல உனக்கு என்ன கோபம்..?? ஏற்கனவே அவ அப்பன் பண்ணின காரியத்தால ரொம்ப குற்ற உணர்ச்சியோட கஷ்டபட்டுட்டு இருக்கா நீதான் அவளை அதுல இருந்து வெளியில கொண்டு வரணும்.., கோபத்தை முன்னிறுத்தி வாழ்க்கையை சிக்கல் ஆக்கிகாதடா” அவனை தேற்ற முற்பட, உயிர்பற்ற ஒரு பார்வையை அவனுக்கு பதிலாக கொடுத்து இருந்தான் சரண்.
முகூர்த்த நேரம் நெருங்க மணமேடையில் அமர்ந்து மந்திரங்களை உச்சரித்து கொண்டிருந்த சரணின் மனம் எதிரே இருந்த அக்னி குண்டத்தின் ஜுவாலைக்கு நிகர்த்து இருக்க தன் அருகே அமர்ந்தவளை திரும்பி பார்த்தவனின் பார்வையில் அத்தனை கசப்பு..!! விட்டால் அவளை அங்கேயே சுட்டு பொசுக்கும் அளவிலான வெறுப்பு விழிகளில் கூத்தாடியது..
தன்மீது கூர்மையாக படியும் அவன் பார்வையை உணர்ந்தவளின் மனதினுள் வேகமாக குளிர் பரவ அவனை ஏறிட்டு பார்க்கும் தைரியம் இல்லாமல் மேலும் தலையை தழைத்து கொண்டாள். அருகே இருந்த தீபிகா மகளின் தோளில் கரம் பதிக்க அவரை ஒரு பார்வை பார்த்தவள் தன் கழுத்தில் இருந்த டாலரை இறுக பற்றிக்கொண்டவளின் இதழ்கள் முணுமுணுக்க தொடங்கியது.
ஐயர் அளித்த தாலியை கரங்களில் ஏந்தி ஒருநொடி அதையே பார்த்தவனுக்கு இதற்கான போராட்டங்கள் கண் முன் வலம் வர அழுத்தம் தாளாமல் கண்களை இறுக மூடி தன்னை கட்டுபடுத்த போராட தொடங்கினான்.
சரண் தாமதிப்பதை உணர்ந்து ஓரக்கண்ணால் அவனை பார்த்த கீர்த்திக்கு அவன் கொண்டிருக்கும் உயிர்வதை புரிபட அதை தாள முடியாதவளின் விழிகளில் இருந்து கங்கையாய் பெருகிய நீரை கட்டுபடுத்த அவள் போராட இறுதியில் சில துளிகள் கீழே விழுந்து சிதறத்தான் செய்தது. கையில் ஏந்தியும் இன்னும் தம்பி கட்டாமல் இருப்பதை கண்டு அவன் தோளில் தட்டிய வைதேகி, “சரண் தாலியை கட்டு” என்று கூற, ஆழ்ந்த மூச்சை எடுத்து விட்டவன் கீர்த்தியின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு அவளை தன் சரிபாதி ஆக்கி இருந்தான் சரண்.
இருவரும் வாழ்வில் இணைந்ததில் கூடி இருந்த அத்தனை பேரின் முகத்தில் தோன்றிய மகிழ்ச்சியின் அளவை சொல்லவும் வேண்டுமா..?? ஆனால் கடைக்கோடியில் குழந்தையுடன் அமர்ந்திருந்த ப்ரீத்தியின் விழிகளில் தங்கை மற்றும் அவள் கணவனின் முகத்தில் இருந்த வேதனையையும்வலியையும்கண்டு என்ன முயன்றும் நிற்காமல் கண்ணீர் பெருக்கெடுத்து கொண்டிருந்தது.
அதை கண்டு அவளருகே நின்றிருந்த விஷ்வதேவ் வேகமாக மேடைக்கு சென்று “கங்க்ராட்ஸ் ப்ரோ” என்று மனதார வாழ்த்தி சரணின் தோளில் கைபோட்டவன், “ப்ரோ இங்க எப்பவும் ஒரு பெண்ணுக்கு தான் இன்னொரு பெண் எதிரியே தவிர ஒரு பையனுக்கு என்னைக்குமே இன்னொரு பையன் எதிரி கிடையாது..!! அதான் உங்களுக்கே தெரியாம இப்படி நடக்க போகுதுன்னு தெரிஞ்சதும் என் உயிரை கொடுத்து உங்களை காப்பாத்தி இருக்கேன்” என்று ஒற்றை கண்சிமிட்டி இலகுவான குரலில் கூறியவன் சரணின் முகம் இன்னும் இறுகி கிடப்பதை கண்டு,
“சில் ப்ரோ உங்க தலைக்கு வந்தது தலைப்பாகையோட போயிடுச்சு எதையும் யோசிக்காதிங்க எல்லாத்தையும் கெட்ட கனவா மறந்துட்டுஎன் மச்சினிகூட சந்தோஷமா இருக்க வழிய மட்டும் பாருங்க” என்று கூற சரணின் பார்வை வெறுப்புடன் கீர்த்தியின் மீது படிந்தது.
“அப்புறம் இன்னொரு விஷயம் ப்ரோ..!! என் பொண்டாட்டிக்கு தாலி கட்டவே ரொம்ப போராடிட்டேன் இப்போ அவ இருக்க ஆத்திரத்துக்கு இன்னும் எத்தனை வருஷம் என் பையன் ஒத்தையா இருக்க போறானோ தெரியலை அதனால நீங்க சீக்கிரமே அவனுக்கு ஒரு தங்கச்சியோ தம்பியோ ஏற்பாடு பண்ணி கொடுத்தா நல்லா இருக்கும்” என்றவன் கீர்த்தியையும் வாழ்த்தி விட்டு கீழே செல்ல அருகே இருந்தவளை கசந்த முறுவலுடன் சரண் பார்க்க அவன் பார்வையே கிலி பிடிக்க செய்யகீர்த்திக்குமுதுகு தண்டுவடம் சில்லிட்டு போனது…!!!”
நீங்கா கசடுகளுடன் திருமண பந்தத்தில் இணைந்திருக்கும் காதல் நெஞ்சங்களின் வலியை ஆற்றும் அருமருந்தாககாலம் அமைந்துஇருஜோடிகளையும் வாழவைக்கும் என்ற நம்பிக்கையுடன் வாழ்த்தி விடை பெறுவோம்.