அதைவிட அடுத்ததாய் ஒரு வாலிபன் வந்து மணமகனின் கழுத்தில் இருந்த டை’யை கத்திரிக்கோல் கொண்டு நறுக்க, கூட்டமாய் ஆரவாரமாய் கைதட்டியது. நறுக்கியதோடு அல்லாது அதை சிறு சிறு துண்டுகளாக போட்டு, அதில் ஒரு துண்டை எடுத்து காட்ட, கூட்டத்தில் ஒருவர், “ஹன்ட்ரெட் யூரோ” என்றார்.
இதே போல ஒவ்வொரு துண்டுக்கும் ஒவ்வொருவர் விலை பேசி வாங்கிக்கொள்ள, பார்த்தவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. இதில் கோவர்த்தன், “வன் பிப்டி யூரோ” என்று சொல்லி காசை கொடுத்து அந்த கிழிந்த சிறு துணியை பெற்றுக்கொள்ள, “லூசாடா நீ!” என்று பார்த்தாள் அவள்.
அவள் பார்வை உணர்ந்து சிரிப்பு தான் அவனுக்கு.
“நம்ம ஊருல மொய் எழுதிட்டு போறவங்களுக்கு தாம்பூலப்பை குடுப்போம்ல? அதுமாறி, இங்க இது ஒரு ரிச்சுவல்! புதுசா லைப் ஸ்டார்ட் பண்றவங்களுக்கு பினான்ஷியல் ஹெல்ப் பண்றோம்!” என்றதும், அவள் உதடுகள் மேம்பாலம் போல வளைந்தது.
“எது? டையை கட் பண்றதா?” அவள் சிரிக்க, “கல்யாணம்’ங்க!” என்று முறைத்தான் கோ.
“அவ்ளோ அவசரமா கல்யாணத்துக்கு?” அவள் சிரிப்போடு கேட்க, இன்னுமே முறைத்தவன், “எனக்கு என்ன பதினெட்டு வயசுன்னு நினைப்பா?” என்று கேட்க, “இல்லையா அப்போ?” என்று சிரித்தாள் அவள்.
“காலங்காலமா கட்டுப்பாடோடவே இருக்கேன்… என்னைக்கு அது கரையுடைக்க போதோ தெரியல?” என்று பலமாய் அவன் சலிக்க, அவன் சொன்ன பாவனையில் சிரிப்பு சிதறியது அவளுக்கு.
“ரொம்ப அலையுற மாறி இருக்கு டாக்டரே!” சிரிப்பினூடே சொன்னாள் அவள்.
“இருக்கட்டுமே! ஐ’யம் திரட்டி த்ரீ அல்மோஸ்ட்! இந்த வயசுல இந்த ஊரு பசங்க எல்லாத்தையும் அனுபவிச்சுருப்பானுங்க… பேரு தான் வெளிநாட்டுல செட்டில் ஆகிட்டான்னு…” என்று சலித்தவன்,
“என் ஊருல இருக்க பிரண்ட்ஸ் பரதேசிங்க எல்லாம், வெளிநாட்டுல இருக்க, ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்…ன்னு நெளிவானுங்க பாரு… அப்டியே செவுள்ள சேர்த்து அப்பலாமான்னு இருக்கும்” என்றான்.
அவன் என்னவோ தன் ஆதங்கத்தை தான் கொட்டினான். அவளுக்கு தான் அது சிரிப்பு சிரிப்பாக வந்தது.
“வாட்ஸ் யுவர் பாடி கவுன்ட்?” (what is your body count?) என்றாள், அவனை குறுகுறுவென பார்த்துக்கொண்டே.
“ப்ச், உனக்கு கேட்டுச்சு!” அவள் முகத்தில் ஒருவித நக்கல் புன்னகை.
“நக்கல் தானே உனக்கு? ஒன்னுக்கே வழி இல்லன்னு பொலம்புறேன்… இதுல வாட் ஈஸ் யுவர் பாடி கவுன்ட்டாம்!” என்றவன், அடிக்க வருவது போல பாவனை செய்தான்.
அவளும் பயந்து விலகுவது போல செய்ய, “சரி… நீ சொல்லு… வாட் இஸ் யுவர் பாடி கவுன்ட்?” என்றான் நாவை கன்னத்தில் அதக்கி.
“ஹலோ? என்னை பார்த்தா எப்படி தெரியுது?” உடனே எகிறினாள் அவள்.
“அப்போ என்னை பார்த்தா மட்டும் பத்து பொண்ணுங்க கூட உருண்டு பொறண்ட மாறி தெரியுதா?” அவன் கேட்க, “ச்சீ!” முகத்தை சுளித்தாள் வாணிலா.
“என்ன ச்சீ? பசங்கக்கிட்ட மட்டும் யோசிக்காம என்ன வேணா கேட்பீங்க. அதே நாங்க கேட்டா… சென்ஸ் இல்ல? மேனர்ஸ் இல்லன்னு குஷி ஜோதிகா ஆகிடுவீங்க” அவன் விட்டுக்கொடுக்காமல் பேச பேச, அவள் தான் இறங்கி வர வேண்டியதாய் போனது.
“சரி சரி விடுங்க!!!”
“பொண்ணுங்க மாறி இல்ல… பசங்களுக்கு பரந்த மனசு, உடனே மன்னிச்சுடுவோம்!” என்றதும், ‘ஹும்’ என உதட்டை சுளித்தாள் பெண். சுளித்த அவள் உதடுகளில் அவன் பார்வை ஒரு நொடி தேங்கி கடந்தது.
திருமணத்திற்கு வந்தவர்களுக்கு விருந்து ஏற்ப்பாடு ஆகிவிட்டதாய் சொல்லப்பட, சற்று பொறுத்து போகலாம் என வான்கோ ஜோடி தேங்கிவிட்டது.
“எனக்கு நம்ம ஊரு கல்யாணத்தை விட, இங்க நடக்குற கல்யாணங்கள் ரொம்ப பிடிக்கும். Just close to my heart. ஏன்னு தெரியல… நினைப்பேன், இந்த ஊருக்காரியை உஷார் பண்ணி இதே மாறி நானும் கல்யாணம் பண்ணனும்ன்னு…” என்றவன், “எங்க…” என்றான் பெருமூச்சுடன்.
“அய்யய… என்ன ரொம்ப சலிக்குறீங்க இன்னைக்கு? இந்த ஊரு மேரேஜ்ல என்ன இருக்கு சொல்லுங்க? மோதிரம் மாத்துறாங்க… அவ்ளோதானே?” அவள் புரியாமல் கேட்டாள்.
“மோதிரம் மாத்திட்டு, ‘now you may seal your love with a kiss’ ன்னு சொன்னதும் நச்சுன்னு ஒரு இச்சு குடுப்பாங்க பாரு… ப்பாஆஆ” என்றான் சிலாகித்து. அவள் முகம் அஷ்டகோனலானது.
“ரெண்டும் தான்!!!” அவன் சொல்ல, “ரெண்டாவது ஆசையை என்னால ஃபுல்பில் பண்ண முடியாது… ஆனா…” என்று இழுத்தவள், “உங்க ரிங்’க கழட்டுங்க” என்றாள்.
‘ஏன்?’ என்று கேட்டாலும் அவன் கழட்டி கொடுக்க, தன் கையில் இருந்த ரிங்’கையும் கழட்டியவள், “இப்ப நம்ம சர்ச்’ல ஜீசஸ் முன்னாடி தானே இருக்கோம்?” என்றுவிட்டு, அவனது வலது கரத்தை பற்றி தன்னுடைய மோதிரத்தை அவனது சுண்டு விரலில் மாட்டினாள்.
‘என்ன நடக்குது இங்க?’ என்று வாயை பிளந்து பார்த்துக்கொண்டிருந்தான் கோவர்த்தன்.
“இப்ப நீங்க போட்டுவிடுங்க” என்றவள், அவனிடம் மோதிரத்தை கொடுத்துவிட்டு, “ம்ம்ம்” என்று சொல்ல, அவனும் அவள் வலக்கையை ஆசையாய் பற்றி அந்த பெரிய மோதிரத்தை அவள் நடுவிரலில் போட்டுவிட்டான்.
“இவ்ளோதான்… இதுக்கா வருஷக்கணக்கா ஆசைப்பட்டீங்க?”
‘இது எல்லாம் ஒரு விஷயமா?’ என்பது போல இருந்தது அவள் கேட்ட தொனி.
‘மோதிரம் மாற்றிக்கொண்டால் கல்யாணமா? அப்படி என்றால் என் அக்காவுடன் எத்தனை முறை இப்படி மோதிரத்தை எக்ஸ்சேஞ் செய்திருப்பேன்?’ என்று அசட்டையாக நினைத்துக்கொண்டிருந்தாள்.
அக்காவுடன் மாற்றும் மோதிரத்திற்கும் ஆடவனுடன் மாற்றும் மோதிரத்திற்கும் வேறுப்பாடு உண்டு தானே! தாலியாய் இருந்தால் என்ன? மோதிரமாய் இருந்தால் என்ன?
தாலியை வெறும் கயிறாக பார்க்கும் பெண்களும் உண்டு, உயிராக பாவிக்கும் பெண்களும் உண்டு! அதுபோல வாணிலாவுக்கு அது வெறும் மோதிரம். கோவர்த்தனுக்கு அப்படி இல்லையே!
அவன் ஒன்றும் சும்மா சொல்லவில்லை. எனக்கு இது போல திருமணம் செய்ய ஆசை என்று! அவன் உள்ளத்தின் நெடு நாளைய அவா! அதிலும் அவன் உள்ளம் கவர்ந்தவள் விளையாட்டாய் செய்தததை கூட விளையாட்டென விடவே முடியவில்லை அவனால்.
அவள் மாற்றி மாற்றி உணர்வுகள் காட்டும் அவன் முகத்தை தான் புரியாமல் பார்த்துக்கொண்டிருந்தாள்.
“ஏன் இப்படி பாக்குறீங்க? ஓ… தங்க மோதிரத்தை குடுத்துட்டு டைமன்ட் மோதிரத்தை புடிங்கிட்டாளே பாக்குறீங்களா? உங்க ஆசைக்கு தான் மாத்துனேன், அப்புறம் கழட்டி குடுத்துடுங்க” இலகுவாய் அவள் சொல்ல, அவன் இந்த லோகத்தில் இருந்தால் தானே?
வெண்ணிற லேஸ் கவுனில் அவள் நிற்பதாகவும், வெண்ணிற கோட் சூட்டில் அவன் சிரிப்பதாகவும் இவர்களுக்கு நடுவே ஒரு வயதான பாதிரியார் நின்று ஏதோ ஜபம் சொல்வது போல காட்சிகள் வர, அவர் இப்போது, ‘now you may seal your love with a kiss’ என்றார்.
கண்ணை திறந்து கனவு கண்டவன், பாதிரியார் சொல்லுக்கு மறுசொல் சொல்லாமல், எதிரே நின்றவளின் கன்னத்தை தாங்கிப்பிடித்தான்.
“என்ன?” அவள் கேட்க, அவன் பேசவில்லை. அவள் கண்களை சில நொடிகள் ஆசையாய் பார்வை கொண்டு வருடியவன், அடுத்த கணம் தலையை சாய்த்துவிட்டான் இதழை முற்றுகையிட.
அவள் சுதாரித்து தலையை பின்னே இழுப்பதற்க்குள், அவன் இதழ்கள் அவள் இதழ்களை இறுக்கமாய் தன்னோடு இறுக்கிக்கொண்டது.
‘சோலி முடிஞ்ச்சு’
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.