கோவர்த்தனை சந்தித்து ஒரு மாதம் கடந்திருந்தது. அன்று அவனிடம் பேசிவிட்டு அடுத்த நான்கு கவுன்சிலிங்’க்கு அவனிடம் அப்பாயின்மென்ட் வாங்கிட்டு வீட்டுக்கு வந்தவள் தான், அதன்பின் அந்த பக்கமே எட்டிக்கூட பார்க்கவில்லை. நூறு டாலர் கட்டிய ‘நைட் கிளப்பும்’ ஒரே நாளோடு முடிந்துப்போனது.
ஆனால், வாணிலா முன்பு போல இல்லை. அவளிடம் சற்று மாற்றம் தென்பட்டது. யாரிடமும் ஒட்டாமல் ஒதுங்கி ஒதுங்கி இருந்தவள், இப்போது மற்றவர் முகத்தை நிமிர்ந்து பார்க்கும் அளவுக்கு சிறுது முன்னேற்றம் கண்டிருந்தாள். அதற்கு ‘கோவர்த்தனின்’ பேச்சு காரணம் என்றால் மிகையல்ல.
“நாம யாரையும் எப்பவும் ஜட்ஜ் பண்ண கூடாதுங்க நிலா. அது நம்ம வேலையும் இல்ல. இருக்குற கொஞ்ச கால வாழ்க்கைல முடிந்த அளவு சந்தோசமாவும், அதே அளவு சந்தோசத்தை மத்தவங்களுக்கு குடுத்தும் வாழ பழகுன்னா தனியா இருந்தாக்கூட ‘வெறுமை’ன்னு ஒன்னு தோணாது” என்று சொல்லியிருந்தான். அவளிடம் என்ன பிரச்சனை என்றே கேட்கவில்லை. அவனாகவே ஒரு யூகத்தில் பேசி மறுமுறை சந்திக்கும்போது இன்னும் பேசலாம் என்று சொல்லிவிட்டான். அந்த ‘மறுமுறை’யை அவள் உருவாக்கவில்லை.
அலுவலகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக பேச ஆரம்பித்தாள். பார்த்தால் சிரிக்கும் அளவுக்கு அவள் மாறியிருக்க, சிலர் நேரிடையாக கேட்க கூட செய்தனர், ‘இந்த சிரிப்பை எங்களுக்கு காட்ட இவ்ளோ நாளா?’ என்று! வாயோயாமல் பேசிய காலம் எல்லாம் அவளுக்கு முன் ஜென்மம் போல தோன்றியது.
அன்று கூட அலுவலகத்தில் மீட்டிங் அறையில் எல்லோரும் குழுமியிருக்க, அவளது புது ப்ராஜக்ட் ஒன்றை அத்தனை பேருக்கும் தன் உயர்தர ஆங்கிலத்தில் விளக்கிக்கொண்டிருந்தாள் வாணிலா. பல நாட்டை சேர்ந்தவர்கள் அவளது டீமில் இருக்க, இந்தியருக்கு தான் பஞ்சமாய் போய்விட்டது. அதனால் தமிழில் உரையாடும் வாய்ப்பே அந்த ஆபீசில் அவளுக்கு இல்லாமல் போனது.
இந்த ப்ராஜக்ட்’க்காக அவள் கடந்த பத்து நாட்களாக சரியாக உண்ணாமல் உறங்காமல் டிசைன் செய்துக்கொண்டிருந்தாள். அவள் உழைப்பில் உருவான ப்ராஜக்ட் அத்தனை பேரையும் ஒரு சேர கவர்ந்ததில் அவளுக்கு ஏக மகிழ்ச்சி.
அவள் மேலதிகாரி, “ரொம்ப நல்ல வேலை செஞ்சுருக்கீங்க. இதை இப்போவே அப்ரூவ் பண்றேன். வித் இன் த்ரீ மந்த்ஸ் இது லான்ச் ஆகும்” என்று உறுதியளிக்க, சந்தோஷம் தாளவில்லை அவளுக்கு.
அதே சந்தோசத்தோடு அவள் திரும்பி தனது கேபினுக்கு சென்றது தான் நினைவு இருந்தது. எப்போது மயங்கி விழுந்தாள் என்றே தெரியாது. மீண்டும் அவள் கண் விழித்தபோது ஹாஸ்பிடல் பெட்டில் படுத்திருந்தாள். கண்ணை சுழற்றிப்பார்க்க, அந்த அறையில் அவள் மட்டுமே! கையில் ஊசி குத்தப்பட்டு குளுக்கோஸ் ஏறிக்கொண்டிருந்தது.
உடலின் வேறு எந்த உபாதைகளும் இருப்பதாய் அவளுக்கு தெரியவில்லை. மெல்லிய சோர்வு மட்டுமே. சிவப்பு நிறத்தில் ‘ஹெல்ப்’ என்று இருந்த பட்டனை அழுத்தி நர்ஸை அழைக்கலாம் என நினைக்கும்போதே கதவை திறந்துக்கொண்டு உள்ளே வந்தார் டாக்டர்.
“ஹே, யங் கேர்ள்… கோமோ திஸ்எயின்தஸ் அஹோரா?” என்றபடி வந்து அவள் பல்ஸ் செக் செய்ய, திருதிருவென விழித்தவள், “ஐ கான்ட் அன்டர்ஸ்டேன்ட் ஸ்பேனிஷ்” என்றாள்.
“தட்ஸ் ஓகே…” என்ற மருத்துவர், அடுத்து அவளிடம் ஆங்கிலத்தில் பேச தொடங்கினார்.
“ஏன் இவ்ளோ அனீமிக்கா இருக்கீங்க? சரியா சாப்பாடு எடுத்துக்கிறது இல்லையா? தண்ணீர் நிறைய குடிக்க வேண்டாமா? நீங்க ஒன்னும் ‘கிட்’ இல்லைதானே? உங்களை நீங்களே பார்த்துக்கணும் தானே?” அக்கறையும் கண்டிப்பும் கலந்து பேசிக்கொண்டிருந்தார் அந்த மருத்துவர்.
தவறு செய்த சிறுமி போல தலைகுனிந்து அமர்ந்திருந்தாள் வாணிலா.
“கால் ஹர் அட்டெண்டர்” நர்ஸிடம் பணிந்தார் டாக்டர்.
அவள் மேலதிகாரி தான் அவளை அந்த மருத்துவனையில் அனுமதித்திருக்க, இப்போ உள்ளே வந்தவரும், “எப்படி இருக்காங்க டாக்டர்?” என்று வினவ, “ரொம்ப வீக்கா இருக்காங்க. ஹோம் சிக்’கா கூட இருக்கலாம். உங்களுக்கு ஒன்னும் பிரச்சனை இல்லன்னா ஒரு வன் வீக் டு டென் டேஸ்’க்கு இவங்களுக்கு மெடிக்கல் லீவ் குடுக்கலாம்” என்று டாக்டர் பரிந்துரைக்க, உடனே, ‘ஓகே டாக்டர். இவங்க ப்ராஜெக்ட் கூட முடிச்சுட்டாங்க. இன்னும் கொஞ்ச நாள் ப்ரீ தான்” என்றுவிட்டார் அவர்.
இருவரும் வாணிலாவை பார்க்க, வேறு வழியின்றி, “லீவ் எடுத்துக்குறேன்” என்றாள்.
“குட். இந்த பாட்டில் முடிஞ்சதும், வீட்டுக்கு போகலாம்” என்ற மருத்துவர், “இப்படியே கேர்லெஸ்ஸா இருந்தா ரொம்ப கஷ்டம். ஹெல்த் இஸ் வெல்த்! டோன்ட் யூ க்நோ தட்?” என்று கேட்க, “இனி கவனமா இருக்கேன் டாக்டர்” என்றாள்.
“உங்க மைன்ட் ரிலாக்ஸ் ஆகுறதுக்காக ஜஸ்ட் வன் சிட்டிங் மெண்டல் ஹெல்த் கன்சல்டிங் நான் சஜஸ்ட் பண்றேன். அதை முடிச்சுட்டு நீங்க கிளம்பலாம்” என்ற மருத்துவர் அடுத்த பேஷண்டை பார்க்க சென்றுவிட்டார்.
வாணிலாவை பார்த்த மேலதிகாரி, “ஆர் யூ ஓகே நவ்?” என்று கேட்க, ‘ஆம்’ என தலையசைத்தாள்.
“யூ டோன்ட் ஹேவ் டு கம் டு ஆபீஸ் ஃபோர் தி நெக்ஸ்ட் டென் டேஸ். வீட்ல ரெஸ்ட் எடுங்க. ஓகே?”
“சூர் மிஸ்டர் டியாகோ!”
“நீங்களே வீட்டுக்கு போய்டுவீங்க தானே? எனக்கு உடனே போயாகனும்” அவர் சொல்ல, இதுவரை உடன் இருந்ததே பெரிது என்பதால் அவளும் ‘சரி’ என தலையாட்டினாள். அந்த நாட்டில் கிட்டத்தட்ட அனைவருமே மெடிக்கல் இன்சூரன்ஸ் வைத்திருப்பார்கள் என்பதால், மருத்துவம் அங்கே இலவசம் போல தான். டிஸ்சார்ஜ் ஆகும்போது எவ்வளவு பில் வருமோ என்ற கவலை எல்லாம் அங்கே அதிகம் இருக்காது.
வெகு நேரமாக படுத்தே இருப்பது அசௌகர்யமாக இருக்க, எழுந்து அமர்ந்தாள் தேவலாம் போல தோன்றியது. கையை ஆட்ட பயமாய் இருக்க அப்படியே படுத்திருந்தாள்.
அப்போது கதவு திறக்கும் சத்தம் கேட்க, திரும்பியவள், உள்ளே நுழைந்தவனை கண்டு திகைக்க, அவனோ அவள் முகத்தை பாராது, “ஹலோ! ஐ’ம் டாக்டர் கோ! ஹாப்பி டு அச்சிஸ்ட் யூ” சந்தோஷ டோனில் ராகமாய் சொன்னபடி, கட்டிலின் கால்மாட்டில் தொங்கிக்கொண்டிருக்கும் அட்டையை எடுத்து படித்தவன், “ஹோ… யூ ஆர் சீம்ஸ் டு பி வீக்…” (ரொம்ப பலகீனமா தெரியுறீங்களே!) என்றான் அதே ராகத்துடன்.
“ஆர் யூ எய்மிங் ஃபோர் தி மிஸ் வேர்ல்ட் கிரவுன்?” (உலக அழகி பட்டம் வாங்கும் எண்ணமா?) சிரித்தபடி கேட்டுக்கொண்டே நிமிர்ந்தவன், பெட்டில் அவனையே குறுகுறுவென பார்த்துக்கொண்டு படுத்திருந்த வாணிலாவை பார்த்து ஒரு நொடி திகைத்து, பின் வேகமாய் கையில் இருந்த ரிப்போர்டில் பெயர் பார்த்தான்.
‘வாணிலா’ என்றிருக்க, இப்போது வேகமாய் அவளருகே வந்து சேரை இழுத்துப்போட்டு அமர்ந்தவன், “என்னை பாக்குறதுக்காக பேஷன்ட்டா வேஷம் போட்டு வந்துருக்கீங்களா?” என்று கேட்க, முறைத்தவள், “என்னை பார்த்தா வேஷம் போட்டுருக்க மாறி தெரியுதா?” என்றாள்.
“அதானே! அப்புறம் எதுக்கு இப்படி தலையை சுத்தி மூக்கை தொடுறீங்க?” என்று அவன் சீரியசாய் கேட்க, ‘ஷப்பா!’ என சலித்தவள், “எனக்கே தெரியாது நான் இந்த ஹாஸ்பிடல்ல தான் இருக்கேன்னு! டாக்டர் ஒரு மெண்டல அனுப்புறேன்னு சொல்லிட்டு போனாரு. அப்போக்கூட நீங்களா இருக்கும்ன்னு நினைக்கல” என்று சொல்ல, ‘மென்டலா?’ என்று சத்தமாய் சிரித்தான் கோவர்த்தன்.
அவன் மட்டும் தான் சிரித்தான். அவள் கடுகடுவென அவன் முகத்தை பார்த்துக்கொண்டிருந்தாள். சிரித்து முடித்தவன், “உங்களை இன்னும் நாலு சிட்டிங் வாங்கன்னு தானே சொன்னேன்? ஏன் வரல?” என்று கேட்க, அவள் பதில் சொல்லவில்லை. முதுகு அழுந்த லேசாக அசைந்தபடி பார்வையை அவனிடம் இருந்து திருப்பிக்கொண்டாள்.
அவன் நெற்றி ஒரத்தில் போட்டிருந்த சிறு பேன்ட்எய்ட் அவள் கண்ணை உறுத்தினாலும், ‘என்ன ஆச்சு?’ என கேட்க வாய் வரவில்லை.
“சரியா சாப்பிடாம ஏன் உடம்பை கெடுத்துக்குறீங்க? அன்னைக்கே சொன்னேன்ல நல்லா சாப்பிடனும்ன்னு”
அவள் பதில் சொல்ல வேண்டும் என்றெல்லாம் அவன் நினைக்கவில்லை, பேசிக்கொண்டே இருந்தான்.
“எதனால இந்த சடன் வீக்னெஸ்? வொர்க் ஸ்ட்ரெஸ் இருக்கோ? இங்க பாருங்க நிலா… நல்லா சாப்பிட்டு, சந்தோசமா சிரிச்சு, நிம்மதியா தூங்கி…” நிறுத்தியவன், “மறுபடியும் நல்லா சாப்பிட்டு, சந்தோசமா சிரிச்சு, நிம்மதியா தூங்கி… மறுபடியும் நல்லா சாப்பிட்டு, சந்தோசமா சிரிச்சு, நிம்மதியா தூங்கி…. மறுபடியும்…” அவன் சொல்லிக்கொண்டே போக, “ஐயோஓஓ! எழுந்து ஓடக்கூட முடியாது என்னால… பேசியே கொன்னுடாதீங்க” என்றாள் அழுபவள் போல.
“நீங்க நல்லா சாப்பிட்டு, சந்தோசமா சிரிச்சு…” அவள் போதும் என அவன் பேச்சை நிறுத்த வர, “வெயிட், லெட் மீ பினிஷ்!” என்றவன், “நிம்மதியா தூங்கி… உடம்பை நல்லா வச்சுருந்தா, இப்படி இங்க வந்து என் பேச்சை எல்லாம் கேட்டு கஷ்டப்படுற நிலைமை வந்துருக்குமா?” என்றான்.
“சரியான கேள்வி! உங்களுக்கு பயந்தே இனி நல்லா சாப்புடுறேன்” அவள் அவசரமாய் சொல்ல, சிரிப்பு வந்தது அவனுக்கு.
“முதல் ரெண்டு முறை உங்களை பார்த்ததை விட இப்போ நல்லா பேசுறீங்க” அவன் சொன்னதும், சட்டென பேச்சு வரவில்லை அவளுக்கு. மீண்டும் மெலிதாக அசைந்தாள்.
“ஏன் பாம்பு மாறி நெளியுறீங்க?” அவன் கேட்க, முறைத்துப்பார்த்தவள், “நீங்க உட்காந்து பேசுறீங்க… நான் படுத்துட்டு இருக்கேன். எனக்கு எழுந்து உட்காரனும்” என்றாள்.
“அட, மரியாதை எல்லாம் எதுக்குங்க?” அவன் கேட்டதும், “ஹலோ, மரியாதை ஒன்னும் இல்ல… ஐ யம் நாட் கம்போர்டபில், தட்ஸ் இட்!” என்றுவிட, சிரித்தவன், சடுதியில் விசையை அழுத்த படுக்கை பாதி வரை மேலே எழுந்தது.
“இஸ் தட் இனஃ?” (இது போதுமா?) என்றவனிடம், “மச் பெட்டர்” என்றவள் அப்போது தான் சற்று ஆறுதலாக உணர்ந்தாள்.
“சரி சொல்லுங்க, சடன்ன ஹெல்த்’க்கு என்ன ஆச்சு? இப்படி மயங்கி…மயங்கி… விழுறீங்க?” அவன் கேட்ட விதத்தில் கிண்டல் செய்கிறானோ என அவன் முகத்தை ஆராய அது இயல்பாக தான் இருந்தது.
“அது… லாஸ்ட் வீக்கென்ட் ஒரு இந்தியன் ரெஸ்டாரென்ட் போனேன். எனக்கு கிரீன் சில்லீஸ் அலர்ஜி இருக்கு. பூட் சேராம டயேரியா. அதோட வொர்க்ல பிசி ஆகிட்டேன்” எங்கோ பார்த்தபடி அவள் தயங்கி சொல்ல, “டீஹைட்ரேட் ஆகிருப்பீங்க” என்று முடித்தான் அவன்.
அவள் அமைதியாய் இருக்க, “வீட்லயே சமைச்சு சாப்பிட வேண்டியது தானே?” என்றான் அவன்.
“தெரிஞ்சா சமைக்க மாட்டோமா?” அவள் முறுக்க, “குழந்தை கூட விடியோ பார்த்து சமைக்குது” என்றான் அவன்.
“பார்த்து தான் பண்றேன், வர மாட்டேங்குது” அவள் முகத்தை தூக்க, “கவனம் செய்யுற வேலைல இல்லன்னு அர்த்தம்” என்றுவிட்டான். அது உண்மை தானே! அவள் ஒன்றுமே சொல்லவில்லை. அவள் இன்னமும் முழுதாய் சகஜமாகவில்லை என்று புரிந்தது. தனது மொபைலை எடுத்து ஒரு போட்டோவை அவளிடம் காட்டினான்.
கிட்டத்தட்ட பத்து பேர் பக்கம் அந்த போட்டோவில் இருக்க, “இதான் என் பேமிலி” என்றான், சொல்லும்போதே முகத்தில் பாசம் வழிந்தது.
“அப்பா ஊருல பேப்பர் பேக்டரி வச்சுருக்காரு. அம்மா தோட்டம் காடு பார்த்துப்பாங்க. இவங்க அப்பம்மா, அப்புச்சி! மத்த எல்லாம் என் உடன்பிறப்புகள்!” அவன் சொல்ல, அந்த உடன்பிறப்பின் எண்ணிக்கையை பார்த்தவள், “நாலா?” என்றாள் வியப்பாய்.
“எஸ்! என்னையும் சேர்த்து ஐஞ்சு புள்ளைங்க!” என்றவன், “எங்க குடும்பத்தை ‘வர்த்தன் குடும்பம்’ன்னு தான் ஊர்ல சொல்வாங்க!” என்றான்.
“ஏன் அப்படி?”
“என் அப்பா பேரு விஷ்ணுவரதன். அம்மா பேரு அம்சவர்த்தினி. அதனால புள்ளைகளுக்கும் அதே மாறி பேரு வச்சுட்டாங்க. என் அண்ணன் இருக்கானே! ஊருல வெட்னரி டாக்டர், பேரு ஹர்ஷவர்த்தன். அடுத்து அக்கா, கணக்கு டீச்சர். பேரு பர்வதவர்த்தினி. என் தங்கை, ராகவர்த்தினி ஐ.டி ல இருக்கா… தம்பி, ஸ்ரிவர்த்தன், இப்போதான் டென்த் படிக்குறான்!” என்று முடித்தபோது,
“போதுமா?” என்றாள் வாணிலா சிரித்தபடி.
“பேர் வைக்க சிரமமா இருக்குன்னு போதும்ன்னு நிறுத்திட்டாங்க” அவன் சொல்ல, சத்தமின்றி லேசாக சிரித்தாள்.
“இதுங்களுக்கு நடுல பொறந்து நான் படுற அவஸ்தை இருக்கே! ‘டேய்! வயசுல பெரியவங்க கூட சண்டை போடாதடா’ன்னு அண்ணன், அக்காக்கு சப்போர்ட் பண்ணுவாங்க. சரி, நமக்கு கீழ ரெண்டு இருக்கே, அதுங்களுக்கும் அதே தான் சொல்லுவாங்கன்னு பார்த்தா…. ‘உன்னை விட சின்ன புள்ளைங்கடா, அதுங்கக்கூட போய் மல்லுக்கு நிக்குறியே’ன்னு அதுக்கும் என்னை தான் அடக்குவாங்க.
பெரிய புள்ளைக்கு பார்த்து பார்த்து சமைப்பாங்க. சின்ன புள்ளைக்கு ஊட்டி ஊட்டி வளர்ப்பாங்க. ஆனா நடுல பொறந்த நான் மட்டும் அனாதையா கிடப்பேன். என்னைத்தவிர நாலு பேரும் இப்பவும் அப்பா அம்மா பக்கத்துல தான் இருக்காங்க. அக்கா, தங்கையை கட்டிக்குடுத்தது கூட ஒரே ஊருக்குள்ள தான்.
நான் பாரீன் கிளம்புறேன்னு போனப்போ ஒருத்தரும் இழுத்துப்பிடிக்கல. டாட்டா காட்டி துரத்திவிட்டாங்க.
இப்பவும் நானா கூப்பிட்டா தான் என் நியாபகம் கூட அவங்களுக்கு வரும்!” என்று முடிக்க,
அவன் முகத்தை பார்த்த வாணிலா, “நீங்க ஃபீல் பண்றீங்களா?” என்று கேட்க, “ஏங்க? என் மூஞ்சில வருத்தம் தெரியலையா?” என்றான் சந்தேகமாய்.
அவள், ‘ம்ஹும்!’ என்றதும், “ஹோலி ஷிட்” என அவன் தலையில் அடித்துக்கொள்ள, அவளுக்கு வயிறு குலுங்கியது சிரிப்பில். ஆனாலும் வெளியே காட்டாமல் உதடு கடித்து சமாளித்தாள்.
“நீங்க எப்டி? உங்க கூட பொறந்தவங்க எத்தனை பேரு?” அவன் சட்டென கேட்டதும், அவள் சிரிப்பு துணிக்கொண்டு துடைத்ததை போல காணாமல் போனது.
“வீட்டுக்கு ஒரே பொண்ணோ?” அவன் அடுத்துப்போக, மறுப்பாக தலையாட்டிவள், “ஒரு அக்கா… தேனிலா” என்றாள் மெல்லிய குரலில்.
“வாவ்… வாணிலா, தேனிலா! கமல் பாட்டு மாறி இருக்கே” என்றதோடு, “வானிலே தேனிலா ஆடுதே பாடுதே” என அவன் பாட வேறு ஆரம்பிக்க, சுறுசுறுவென மனதில் பரவும் வெறுமையை விரட்ட, “உனக்கு நெத்தில என்ன காயம்?” என்று கேட்டாள்.
பாட்டை பட்டென நிறுத்தியவன், “அது….” என இழுக்க, அவன் சொல்ல தயங்குவதை கண்டதும், ஆர்வம் முளையிட்டது அவளுக்கு.
“அப்புறம் என்ன? நான் மண்டையை புடிச்சுக்கிட்டே ஜோக்கை சொல்லி முடிச்சா, ஜோக்கை ரசிக்காம என்னை அசிங்க அசிங்கமா திட்டிட்டே கோவமா போய்ட்டாங்க” என்று சோகமாய் முடிக்க, வாணிலாவுக்கு எங்கிருந்து தான் அப்படி ஒரு சிரிப்பு கிளம்பியதோ! கண்ணில் நீர் வர வெடித்து சிரிக்க ஆரம்பித்தாள். பல வருடங்களுக்கு பிறகான அவளது உள்ளார்ந்த சிரிப்பு, மனதை பாரம் கரைந்து காற்றில் மிதக்க வைத்தது.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.