“நீ காயம் பட்டு துடிக்கிறதைப் பாத்தப்ப ஏண்டா உயிரோட இருக்கோம்னு தோணுச்சு மா. அதான் அப்படிச் சொன்னேன். மனசுக்கு கஷ்டமா இருக்கு. நீ ரெஸ்ட் எடு”, என்று சொல்லி விட்டு வெளியே சென்று விட்டான்.
அவன் சென்றதும் இந்து ஏங்கி ஏங்கி அழுதாள். இப்போது அவன் பேசியது அனைத்துமே உண்மை என்று தான் அவளுக்கு தோன்றியது. “நான் வேணும்னு எதையும் செய்யலை”, என்று அவனிடம் சொல்ல வேண்டும் போல இருந்தது. ஆனால் அவளால் சொல்ல முடியவில்லை.
“நான் வேணும்னு கையை சுட்டுகிட்டேன்னு தப்பா புரிஞ்ச்சிகிட்டானே? அதுக்கு தான் என் கிட்ட பேசாம இருந்தானா? இன்பன் எனக்கு உங்களோட இந்த அன்பு புடிச்சிருக்கு. நானும் உங்களை விரும்புறேன். அதுவும் பைத்தியமா விரும்புறேன். ஆனா நீங்க என் கிட்ட நடிக்கிறீங்களோன்னு எனக்கு பயமா இருக்கு. அதான் உங்களை விட்டு விலகி இருக்கேன்”, என்று எண்ணி அழுதாள்.
அன்று இரவு அவன் தான் அவளுக்கு உணவு எடுத்து வந்தான். அவள் கண்கள் சிவந்திருக்க “வலிக்குதா இந்து? அழுதியா?”, என்று அக்கறையாக கேட்டான்.
“ஹிம்”
“சாப்பிட்டுட்டு மாத்திரை போட்டா வலி குறைஞ்சிரும். இந்து இத்தனை நாள் அம்மா தான் உனக்கு ஊட்டி விட்டாங்க. இப்ப நான் ஊட்டி விடட்டுமா? உன்னைக் கவனிச்சிக்கணும்னு ஆசையா இருக்கு. பிடிக்கலைன்னா சொல்லிரு. அம்மாவை வரச் சொல்றேன்”, என்று கேட்டான்.
சரி என்று சொல்லு என்று அவள் மனது குரல் கொடுக்க அவள் தயக்கத்துடன் பதில் சொல்லாமல் இருந்தாள். அவளுடைய அமைதியைக் கண்டவனுக்கு முகம் களை இழந்து போனது.
“ஒரு நர்சா கூட என்னை நினைச்சிக்க மாட்டியா இந்து?”, என்று அவன் வருந்திய குரலில் கேட்க அந்த குரல் அவள் உயிர் வரை தொட்டது. “நான் அம்மாவை கூட்டிட்டு வரேன்”, என்று சொல்லி அவன் எழுந்து கொள்ள “வேண்டாம், அத்தை வர வேண்டாம். நீங்களே ஊட்டி விடுங்க”, என்று எங்கோ பார்த்துக் கொண்டு சொன்னாள். அதில் அவன் முகம் மீண்டும் மலர்ந்தது.
அவன் சந்தோஷத்தை வியப்பாக பார்த்தாள் இந்து. அவளுக்கு அவனை நம்பலாமா வேண்டாமா என்ற மிகப் பெரிய குழப்பம் வந்தது.
அவள் அருகில் தட்டை வைத்துக் கொண்டு அமர்ந்தவன் சந்தோஷமாக அவளுக்கு ஊட்டி விட ஆரம்பித்தான். சிறிது நேரத்தில் சங்கடம் விலக நிம்மதியாகவே சாப்பிட்டாள். அவனும் சந்தோஷமாக அவளுக்கு உணவை ஊட்டி விட்டான். அவள் போதும் என்று மறுக்க மறுக்க அம்மா குழந்தைக்குச் சொல்வது போல் இன்னும் கொஞ்சம் தான் கொஞ்சம் தான் என்று சொல்லி சொல்லி அவளுக்கு ஊட்டி விட்டான். அவனுடைய அக்கறையில் அன்னையின் சாயலை உணர்ந்தாள் இந்து.
சாப்பிட்டு முடித்ததும் அவளுக்கு தண்ணீரை கொடுக்க அது கொட்டி அவள் கழுத்து பக்கம் அதிகமாக நனைந்தது. “ஐயோ சரி மா தெரியாம கொட்டிட்டேன்”, என்று சொல்லி ஒரு துண்டால் அதை துடைக்க ஆரம்பித்தான். அவளுக்கு தான் சங்கடமாக இருந்தது.
அவள் முகத்தைப் பார்த்த இன்பன் அவள் வெட்கத்துடன் இருக்கவும் அவன் பார்வை நனைந்த இடத்தை கவனித்தது. தண்ணீர் பட்டதால் அவளது உடையை தாண்டி அவள் அங்கங்கள் கொஞ்சம் அதிகமாகவே அவன் கண்களுக்கு தரிசனம் கொடுத்தது.
அவன் கண்கள் ஒரு நிமிடம் அங்கேயே வெறிக்க அவன் பார்வை போன திசையைக் கண்டவளுக்கு திக்கென்று இருந்தது. தன்னுடைய வெட்கத்தை விட்டுவிட்டு அவனை முறைத்துப் பார்க்க “சாரி”, என்று சொல்லி விட்டு அவள் வாயையும் சிறு குழந்தைக்கு துடைப்பது போல துடைத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டான்.
“அவன் உன் புருஷன் டி என்னமோ கண்டவன் லுக் விட்ட மாதிரி இப்படி பண்ணுற? நீ முறைச்சுப் பாத்ததுல அவன் மூஞ்சே செத்துட்டு”, என்று அவள் மனசாட்சி குரல் கொடுக்க “முதல்ல அவன் நல்லவன்னு தெரியட்டும். அப்புறம் புருசனா பாக்கலாம்”, என்று எண்ணிக் கொண்டாள் இந்து.
அடுத்து சிறிது நேரத்தில் அறைக்குள் வந்தவனுக்கு உணர்வுகள் அவன் வசம் இல்லை. இன்று சற்று அதிகமாவே அவனுக்குள் தாகம் உருவானது.
அதற்கு மேல் அவளது அருகாமையை தாங்க முடியாமல் “நீ தூங்கு இந்து. எனக்கு ஒரு போன் பேச வேண்டியது இருக்கு”, என்று சொல்லி விட்டு வெளியே சென்று விட்டான்.
“என் கிட்ட கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்தா தான் என்னவாம்? என் கிட்ட பேசினா தானே இவன் திருந்திட்டானா இல்லையான்னு எனக்கு தெரியும்?”, என்று எண்ணிக் கொண்டு படுத்து விட்டாள்.
அவளை அறியாமலே அவள் மனது அவனது அருகாமையை நாடுவதை அவள் புரிந்து கொள்ளவே இல்லை. அடுத்த நாள் காலை எப்படி குளிக்க என்று தடுமாறியவளுக்கு அவன் தான் உதவினான். அவளுக்கு அவனது அருகாமை கூச்சமாக இருந்தது.
அவனுக்கோ அவளது அரை குறை ஆடை கொஞ்சம் கொஞ்சமாக திணறலைக் கொடுத்துக் கொண்டிருந்தது. அம்பிகாவை அழைக்கலாம் தான். ஆனால் அப்படி அழைத்தால் இவர்கள் இருவரும் வாழவே ஆரம்பிக்க வில்லை என்ற உண்மை தெரிந்து விடும் என்பதால் தான் அவனை செய்ய அனுமதித்தாள் இந்து.
அவனைப் போலவே அவன் அருகாமையில் அவளும் தடுமாறினாள். அவள் தயக்கத்தை உணர்ந்தவன் “சாரி இந்து, இப்ப அம்மாவைக் கூப்பிட்டா அவங்க நமக்குள்ள என்ன பிரச்சனைன்னு கேள்வி எழுப்புவாங்க. அதனால தான். என்னை நர்சா நினைச்சிக்கோ. அப்படின்னா ஒண்ணும் தெரியாது”, என்று சொல்ல “உங்களுக்கு என்னை நர்சா மட்டும் தான் நினைக்க தோனுதா?”, என்ற கேள்வி அவள் வாய் வரை வந்தது.
ஆனால் அதை கேட்காமல் “சரி”, என்று மட்டும் அவன் முகம் பார்க்காமல் சொன்னாள்.
அவளுடைய உடலுக்கு அவன் சோப் போடும் போது கண்களை இறுக மூடி தன்னுடைய உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வந்தாள். அவனுக்கோ அவளை அந்த நிலைமையில் கண்டு, அவளது மேனியின் மென்மையை உணர்ந்து உணர்வுகள் கிளர்ந்து எழுந்தன. உண்மை நிலையை வெளியே அவளிடம் சொல்ல முடியாது என்பதால் அடக்கிக் கொண்டான்.
இப்படி ஒரு நிலை எந்த ஆணுக்கும் வரக் கூடாது என்று எண்ணி பல்லைக் கடித்துக் கொண்டு அவளை குளிக்க வைத்தான். சில நேரம் அவனும் கண்களை மூடிக் கொண்டான்.
ஆனாலும் அவளுக்கு என்னவோ போல இருந்தது. அவன் கண்களை மூடினாலும் அவனுக்கு கற்பனை வரும் அல்லவா என்று எண்ணி திணறிப் போனாள். கூடவே அவனது தொடுகையில் அவளுக்குள் சில பல ரசாயன மாற்றங்களும் நிகழ்ந்தன.
அந்த மாற்றங்களை கண்டு அவளே அதிர்ந்து போனாள். அவன் கைகள் அவள் இடையில் பதியும் போது இந்த கை இன்னும் கொஞ்சம் மேலேறினால் என்ன ஆகும் என்ற எண்ணம் வந்து அவளை விதிர்க்க வைத்தது. இவனை எப்படி என் மனசும் உடம்பும் ஏற்றுக் கொண்டது என்று அவளுக்கு கேள்வி பிறந்தது.
இப்போது அவன் அவளை ஆவலாக நெருங்கினால் கண்டிப்பாக அவளே அவனை விலக்க மாட்டாள். அந்த அளவுக்கு அவள் அவனைத் தேடினாள். வலிக்குதுங்க என்று சொல்லி அவன் மார்பில் சாய வேண்டும் போல இருந்தது. அவன் கைக்குள் சுருண்டு தூங்க வேண்டும் என்ற ஏக்கம் வந்தது. இப்படிப் பட்ட உணர்வுகள் எழுந்ததில் அவளுக்கு அவளை நினைத்தே பயம் வந்தது.
அடுத்த நாள் அவனைச் சோதிக்காமல் அம்பிகாவே அவளை குளிக்க வைத்து விட்டாள். ஆனாலும் இந்து அவனைத் தேடினாள். அப்படி தேடியதில் வெக்கங்கெட்டவ என்று அவள் மனமே அவளை வசை பாடியது. உணவு மட்டும் அவன் ஊட்டி விட்டான். அதற்கு அடுத்த வாரத்தில் அவள் காயம் ஆறி விட்டது. தழும்பு மட்டுமே மிச்சம் இருந்தது.
இப்போது அவளே அவளைக் கவனித்துக் கொண்டாள். ஏன் தான் காயம் சீக்கிரம் ஆறுச்சோ என்று இருவருக்குமே தோன்றி வைத்தது. ஆனால் இருவருமே அதை வெளியே சொல்ல வில்லை. அப்போது ஒரு நாள் தயங்கிய படியே அவள் அருகில் வந்தான் இன்பன்.
என்னவென்று அவள் அவனைப் பார்க்க “உனக்கு கை சரியாகிருச்சே இந்து? நாம கிரி அஞ்சலி கூட ஹனிமூன் போவோமா?”, என்று கேட்டான்.
அவனை முறைத்துப் பார்த்தவள் “அவங்க லவ் பண்ணுறாங்க. அதனால ஹனிமூன் கொண்டாடப் போறாங்க. இங்க என்ன வாழுதாம்?”, என்று கேட்டாள்.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.