பகுதி 12
அன்புக்கு வேறு வழி தெரியாமல் நீத்துவின் தந்தையிடம் திருமணம் பற்றி பேச ஒத்துக் கொண்டான். ஐயோ அந்த சேகர் பேச்சைக் கேட்காம, இருபது லட்சம் புரட்ட வேற எதாவது வழி தேடி இருக்கணும். இப்ப கத்தி போய் வால் வந்த கதையாய் ஆயிடுச்சே.
அப்பா நாளைக்கு காலையில அந்த சேட்டையும் நீத்துவையும் பார்த்தா எப்படி ரியாக்ட் பண்ணுவாரோ? எதுக்கும் பாதுகாப்பாக அவர் பெல்ட்டை இன்னைக்கு நைட்டே போய் ஒளிச்சு வச்சிடனும். ம்.. நாளைக்கு என்ன நடக்கப் போவுதோ. குலசாமி நான் மட்டும் நாளைக்கு உயிரோட இருந்தா.. உன் கோவிலுக்கு வந்து பொங்க வைக்கிறேன்.
என்று அன்பு நேத்திக்கடன் போட்டு விட்டு தூங்கிப் போனான்.
அன்று இரவே தன் தந்தையின் உத்தரவுக்கு பயந்து நீத்துவும் அப்போது தான் மும்பை பிளைட்டில் இருந்து சென்னைக்கு வந்து இறங்கி இருந்தாள்.
வீட்டிற்கு அவர்கள் காரில் வந்து இறங்கியவள் நேராக சென்றது என்னவோ அவள் தந்தையைத் தேடி தான்.
“அப்பா.. எனக்கு நாளைக்கு ஷூட்டிங் இருக்கு. இப்ப எதுக்கு என்னை ஃபோன் போட்டு இப்படி அவசரமா வரவச்சீங்க”.. என்று நீத்து வானத்துக்கும் பூமிக்குமாக குதிக்கத் தொடங்கி இருந்தாள்.
“போதும் நிறுத்துறியா!!.. இப்ப எதுக்கு தைய தக்கானு குதிக்கிற? நாளைக்கு காலையில நாம ரெண்டு பேரும் அன்பு வீட்டுக்குப் போய் உங்க கல்யாணம் பத்தி பேசப் போறோம். ரெடியா இரு.”.. என்று அவரோ உத்தரவாய் சொல்லி இருந்தார்.
“அப்பா!!.. என்னால இப்போதைக்கு கல்யாணத்துக்கு ஒத்துக்க முடியாது. எனக்கு இன்னும் நிறைய கமிட்மென்ட்ஸ் இருக்கு. குறைந்தது இன்னும் ரெண்டு வருஷமாவது ஆகணும். இப்ப என்னப்பா அவசரம்”.. என்று அவள் கேட்க.
“அவசரமா.. எனக்கு சொல்ல வாய் கூசுது. நீ திரும்பத் திரும்ப அபார்ஷன் பண்ற அசிங்கம் எல்லாம் எனக்கு தெரியாதுன்னு நினைச்சியா? நான் இங்க இருந்தாலும் மும்பையில் என்ன நடந்ததுன்னு எனக்கு நல்லாவே தெரியும்.”
. அவர் சொன்னதைக் கேட்ட நீத்துவோ சற்று அதிர்ந்து தான் போய் விட்டாள். “அப்பா அப்படி எல்லாம் ஒன்னும் இல்லப்பா.. நான் கொஞ்சம் உடம்பு சரி இல்லாம ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகி இருந்தேன். அதை யாரோ உங்க கிட்ட தப்பா சொல்லி இருக்காங்க.”.. என்று அவள் திக்கித் திணறி சொல்லி முடித்து இருந்தாள்.
“ஸ்டாப் இட்!!.. நீ சொல்ற கதை எல்லாம் நம்புறதுக்கு நான் ஒன்னும் முட்டாள் இல்ல. நீ அந்த டைரக்டர் கூட எப்படி குளோஸா சுத்தினேன்னு என்னால உன்கிட்ட ஆதாரத்தோட நிரூபிக்க முடியும். “ என்று அவரோ முகத்தைச் சுளித்தபடி அழுத்தமாக சொல்லி இருந்தார்.
“ஒகே.. ஃபைன் பா.. இனிமே எதையும் மறைச்சு புண்ணியம் இல்ல. டு பி ஆனஸ்ட்.. எனக்கு நிஜமாவே இப்ப வர வர.. அன்பு மேல அவ்வளவு இன்ட்ரஸ்ட் இல்ல. எனக்கு மும்பை டைரக்டர் ரோஹித் தான் பெஸ்ட் மேட்ச் என்று தோணுது. அவரைக் கட்டிகிட்டா தான் என் எதிர்காலம் நல்லா இருக்கும். அவரு நிச்சயம் என்னை பெரிய ஸ்டார் ஆக்கிடுவார்”.. என்று அவள் முடிக்கவில்லை.
“அப்படியே ஓங்கி கன்னத்துல அடிச்சேன்னா பாரு. அந்த அன்பு நல்ல பையன். வசதி நம்ம அளவுக்கு இல்லாட்டாலும்.. நல்ல குணமான பையன். அதனால் தான் நீ அவனை லவ் பண்றேன்னு சொன்னதும் நான் உன்னை எதிர்க்கவில்லை. ஆனா அந்த ரோஹித் எப்படி பட்டவன்னு உனக்குத் தெரியுமா?..அவன் ஒரு பொம்புளைப் பொறுக்கி.
அவன் எத்தனை பெண்களோட வாழ்க்கையை சீரழிச்சிருக்கான்னு தெரியுமா? “
“அப்பா.. என் ரோஹித் அப்படிப்பட்டவன் இல்ல. அவர் என்னைத் தான் கல்யாணம் பண்ணுவார். நீங்க மட்டும் சரின்னு ஒரு வார்த்தை சொல்லுங்க.. நாளைக்கு காலையிலே உங்க முன்னாடி வந்து அவனை பேசச் சொல்றேன்.”
“மம்.. அவன் நிச்சயம் உன்னை சந்தோசமா தான் கட்டுக்குவான். அதுக்கு காரணம் உன் மேல உள்ள காதல்ன்னு நினைச்சியா.. முட்டாள். பணம்!!.. என்னோட பணம். “
“அப்பா.. சும்மா ரோஹித் பத்தி தப்பு தப்பா பேசாதீங்க. அவனுக்கு பணம் எல்லாம் முக்கியம் இல்ல. அன்பு கூட அடிக்கடி என்ன அப்படி ட்ரெஸ் பண்ணு இப்படி இரு என்று நிறைய கட்டுப்பாடு பண்ணுவான். பட் ரோஹித் தட்ஸ் யுவர் சாய்ஸ் என்று எவ்வளவு பெருந்தன்மையாய் பேசுவான் தெரியுமா!”
. “இங்க பாரு யாரு நல்லவன் யாரு கெட்டவன் ன்னு எல்லாம் என்னால உனக்கு இப்ப கிளாஸ் எடுக்க முடியாது. ஒரே கண்டிஷன் தான்!! என்னோட சொத்து உனக்கு வேணும்னா நாளைக்கு அன்பு வீட்டுக்கு போக ரெடியா இரு. அதுக்கு அப்புறம் உன் இஷ்டம்”.. என்றவர் அதுக்கு மேல் எதுவும் பேசாமல் மாடிக்கு சென்று விட்டார்.
நீத்துவோ தொய்ந்து போய் சோஃபாவில் அமர்ந்து விட்டாள். பல கோடிக்கு அதிபதியான அவள் தந்தை சொன்னால் செய்யக் கூடியவர் தான். இரவும் முழுதும் யோசித்தாள்.
காலையில் ஒரு தெளிவான முடிவு எடுத்து இருந்தவள். குளித்து தயாராகி தன் தந்தைக்காக காத்து இருந்தாள்.
அவள் பாஷையில் சின்ன மேக்கப்போடு ஒரு லெஹங்கா அணிந்து இருந்தாள்.
அவளைப் பார்த்ததுமே அவர் முகம் மலர்ந்து கொண்டது. “தட்ஸ் மை கேர்ள்l. அங்க போய் எதுவும் சொதப்ப மாட்டேன்னு நம்புறேன். அப்புறம் மும்பைல ரோஹித் கூட நடந்ததை எல்லாம் இனி கெட்ட கனவாய் நினைச்சு மறந்திடு. இந்த விஷயம் அன்பு காதுக்கு எட்டாம பார்த்துக்க வேண்டியது என் பொறுப்பு.
அதே போல இந்த மாடல், ஆக்டிங் இதை எல்லாம் இனி தூக்கிப் போட்டு விட்டு அன்புக்கு ஒரு நல்ல மனைவியா இருக்க பார்.” என்று அவர் தன் மகளைப் பார்க்க..
“ம்.. சரிப்பா. நீங்க சொன்ன மாதிரியே நடந்துக்கிறேன். “
“ சரி வா போகலாம். “.. என்றவர் காரில் ஏறிக் கொள்ள.. நீத்துவும் அவருடன் ஏறி அமர்ந்து கொண்டாள்.
அன்புக்கோ காலை விடிந்ததில் இருந்தே கை கால்கள் தானாக நடுங்கத் தொடங்கி இருந்தன. மாணிக்கம் காதல் திருமணத்தைக் கூட ஏற்றுக் கொள்வார். ஆனால் நீத்து போன்ற பெண்ணை மருமகளாக ஏற்பாரா என்பது தான் பெருத்த சந்தேகம்.
அப்போது சிவகாமி பாட்டி ஊருக்குக் கிளம்பத் தயாராகி பெட்டியுடன் வந்து இருந்தார்.
அன்புக்கு அவரைப் பார்த்ததும் சட்டென ஒரு யோசனை. மாணிக்கம் பயப்படும் ஒரே ஜீவன் சிவகாமி மட்டும் தான். இன்னும் சிறிது நேரத்தில் வரப்போகும் பூகம்பத்தின் வீரியத்தைக் குறைக்கும் வல்லமை படைத்தவர் இவர் ஒருவரே. இவரை விடக் கூடாது என்று எண்ணியவன்..
“பாட்டி.. என்ன பாட்டி.. நீங்க வந்து ரெண்டு நாள் தான் ஆச்சு. அதுக்குள்ள பெட்டியைத் தூக்கிட்டு வந்துட்டீங்க. நான் உங்களை ஊருக்குப் போக விட மாட்டேன். இன்னும் ஒரு வாரமாவது இங்க தங்கி இருந்துட்டு தான் போகணும்.” என்று அன்பு தன் பெர்ஃபார்மன்ஸைக் குறை இல்லாமல் செய்து இருந்தான்.
“நானும் அதான் சொல்றேன். நம்ம கார்த்திகா கல்யாணம் முடியும் வரை நம்ம கூடவே இருந்தா எனக்கு எவ்வளவு சப்போட்டா இருக்கும்.” என்று பார்வதியோ அன்புக்கு ஆதரவாக பேசி இருந்தார்.
“எனக்கு இருக்க ஆசை தான். ஆனா கிராமத்தில் நிறைய வேலை இருக்கே. “
“அம்மா.. எல்லாரும் ஆசைப்படுறாங்கல்ல!!.. சும்மா ஒரு மாசம் இருத்துட்டு கார்த்திகா கல்யாணத்தை முடிச்சிட்டு போங்க. நான் ஆள விட்டு அங்க இருக்க வேலை எல்லாம் பார்த்துக்கச் சொல்றேன் என்று மாணிக்கம் உறுதியாய்ச் சொல்லி விட.. சிவகாமியால் அந்த அன்புக் கட்டளையே மறுக்க முடியவில்லை.
“அப்பா.. நம்ம பாதுகாப்புக்கு ஒரு கவசத்தை ரெடி பண்ணி ஆச்சு. “.. என்று சந்தோசமாக பாட்டியின் பெட்டியை உள் அறையில் கொண்டு வைத்தான் அன்பு.
“அண்ணா நில்லு. இதென்ன புதுசா உனக்கு பாட்டி மேல இவ்வளவு கரிசனம்!!. எனக்கு என்னவோ நீ எதோ பெருசா பிளான் பண்ற மாதிரி தெரியுதே. “.. என்று கார்த்திகா அவனை வழி மறித்துக் கேட்க
இந்த குட்டி பிசாசு நம்ம ரியாக்ஷனை கரெக்ட்டா கண்டு பிடிச்சிடுது.
“ச்ச.. ச்ச.. அதெல்லாம் ஒன்னும் இல்லடி.. நேத்து தாத்தா என் கனவில் வந்து.. உங்க யாருக்குமே என் பொண்டாட்டி மேலபாசமே இல்ல. அவள் மட்டும் தனியா அங்க கிடந்து தவிக்கிறா என்று ஒரே அழுகாச்சி. அதான் இங்க இருக்க வச்சேன்.”
“நம்புற மாதிரி இல்லையே!!.. ம்.. கத்திரிக்கா முத்தினா கடைத் தெருவுக்குத் தானே வந்தாகனும். உன் மொள்ளமாரித்தனம் எத்தனை நாளுக்குன்னு நானும் பார்க்கிறேன்”.. என்று அவள் சொல்லி விட்டு செல்ல..
அதே நேரம் காலிங் பெல் சத்தத்தில் வீடே அதிர்ந்தது.
“சரி தான் நமக்கு சாவு மணி அடிச்சிட்டான் சேட்டு”.. என்று நினைத்த அன்பு மாடியில் இருந்து கீழே கவனிக்க..
மாணிக்கம் தான் சென்று கதவைத் திறந்தார். அவன் பயந்தது போலவே வாயிலில் நின்றது என்னவோ சேட்டும் நீத்துவும் தான்.
மாணிக்கம் அவர்களை யோசனையுடன் பார்த்தவர் “வாங்க.. நீங்க??”.. என்று குழப்பமாக நிற்க..
“சார் என் பேரு பஜன்லால் சேட். இது என் பொண்ணு நீத்து. நாம கொஞ்சம் உள்ளே போய் பேசலாமா?”
“வாங்க.. உட்காருங்க!”.. என்று இருக்கையை காட்டியவர்.. அப்போதும் அவர்களை குழப்பமாகவே பார்த்துக் கொண்டு இருந்தார்.
புதிதாக வந்திருந்த விருந்தினரைப் பார்த்து பார்வதி, கார்த்தி, பாட்டி என்று அனைவரும் அங்கு வந்து ஆஜர் ஆகி இருந்தனர்.
“இது யாருடி உன் ஃபிரென்டா??.. சட்டையை இவ்வளவு இறக்கி போட்டு இருக்கு. அந்த ஷாலையாவது கொஞ்சம் மறைச்சு போடலாம் ல..” என்று சிவகாமி கேட்க
“யாருன்னு தெரியல பாட்டி. மேக் அப், ட்ரெஸ் எல்லாம் பார்த்தா ஏதோ மாடல் மாதிரி தெரியுது. “.. என்று கார்த்திகா சொன்னாள்.
மாடியில் இருந்து நடப்பதைப் பார்த்துக் கொண்டு இருந்த அன்புவின் மனம் தான் எக்ஸ்பிரஸ் வேகத்தில் துடித்துக் கொண்டு இருந்தது.
“சார் எனக்கு எதையும் பட்டுன்னு பேசி தான் பழக்கம். உங்க பையன் அன்புச் செல்வனும் என் பொண்ணு நீத்துவும் ரொம்ப வருஷமா லவ் பண்றாங்க. அவங்களா போய் திருட்டு கல்யாணம் பண்றதுக்கு முன்னாடி. நாம பெரியவங்களா அவங்களா சேர்த்து வச்சிட்டா நல்லது.” என்று அந்த சேட்டு முடிக்கும் முன். ஆவேசமாக எழுந்து கொண்ட மாணிக்கமோ.
“ சார் நீங்க எதோ தெரியாம சொல்றீங்கன்னு நினைக்கிறேன். அப்படி எல்லாம் இருக்க வாய்ப்பே இல்லை. என் பையன் அப்படி நிச்சயம் பண்ணி இருக்க மாட்டான். உங்க முன்னாடியே அவனை சொல்லச் சொல்றேன்., அன்பு. அன்பு” .. என்று அவர் அழைக்க.
அடுத்த நொடியே அவர் முன் வந்து நின்று இருந்தான் அன்பு.
“அடப் பாவி.. பச்சப் பிள்ளை மாதிரி இருந்துட்டு உங்க அண்ணன் இவ்வளவு வேலை பார்த்து இருக்கானா!!.. அதுவும் அவனுக்கு ரசனை ஏண்டி இவ்வளவு மட்டமா இருக்கு.”
“ஏ கிழவி.. எல்லாத்தையும் என்கிட்டே கேளு!!.. உன் பேரன் இங்க தான நிக்கிறான். அவங்கிட்டே போய் கேட்க வேண்டியது தான!!” என்று கார்த்திகாவோ சிவகாமி மட்டும் கேட்கும் குரலில் அதட்டிக் கொண்டு இருந்தாள்.
“இப்ப புரியுது டீ.. உங்க அண்ணனுக்கு என் மேல திடீர்னு ஏன் பாசம் பொங்குச்சுன்னு இப்ப தான் தெரியுது.!!”
“சொல்லு அன்பு.. இந்த பொண்ணைப் பார்த்தா நம்ம குடும்பத்துக்கு ஏத்த பொண்ணு மாதிரி தெரியல. அவர் சொல்றதை என்னால நம்ப முடியலை. நீ இப்ப வாயைத் திறந்து உண்மையை மட்டும் சொல்லு. உனக்கு இந்த பொண்ணோட பழக்கம் இருக்கா?” என்று அவர் கேட்க..
அன்புக்கோ என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை. அவன் வார்த்தைகளைத் தேடி தடுமாறிக் கொண்டு இருந்த அதே நேரம் அவர்கள் வீட்டு அழைப்புமணி மறுபடியும் அடித்தது.
வந்தது வேறு யாரும் இல்லை கார்த்திகாவின் வருங்கால மாமனார் சதாசிவம் தான். இவர் எதற்காக இந்த நேரம் வந்து இருக்கிறார் என்று அனைவருக்குமே சற்று பதற்றமாகவே போய் விட்டது. அவர்கள் குடும்ப மானம் காற்றில் பறக்கும் நேரம் இவர் வேறு வந்து விட்டாரே என்ற சங்கடம் அனைவர் முகத்திலும் இருந்தது.
“சம்பந்தி பத்திரிக்கை மாடலை உங்களிடம் காட்டிவிட்டுப் போக வந்தேன். என்ன எல்லாரும் ஒரு மாதிரி பதட்டமா இருக்கீங்க? நான் வேணா போயிட்டு அப்புறமா வரட்டுமா?”.. என்று தயங்கிய படி கேட்க.
“ச்ச ச்ச அதெல்லாம் ஒன்னும் இல்ல. நீங்க உள்ள வாங்க நான் சொல்றேன்.”.. என்று மாணிக்கம் அவரை உள்ளே அழைத்து சென்றார்.
“அட நம்ம பஜன்லால் சேட்டு!!.. நமஸ்தே சேட்டு. உங்களுக்கு மாணிக்கத்தை தெரியுமா?” என்று அவர் ஆச்சரியமாக கேட்டபடி அருகில் இருந்த சோஃபாவில் அமர்ந்து கொண்டார்.
“என்ன சேட்டு உங்க ரேஞ்சுக்கு எங்களை மாதிரி ஆளுங்க வீட்டுக்கு எல்லாம் வரமாட்டீங்களே!!.. என்ன இவ்வளவு தூரம்.”
“வாங்க சதாசிவம்!! அது ஒன்னும் இல்ல. என் பொண்ணும் மாணிக்கம் சார் பையனும் லவ் பண்றாங்க. அதான் கல்யாணம் எப்போ வைக்கலாம்னு கேக்க வந்தேன்.”
அதைக் கேட்ட சதாசிவம் அதிர்ந்து விட..
மாணிக்கமோ சதாசிவம் முன்னிலையில் கோபப்படக் கூடாது என்று தன்னை போராடி கட்டுப் படுத்தி கொண்டு இருந்தார். “இங்க பாருங்க சார்.. கொஞ்சம் அமைதியா இருங்க. இதோ என் பையன் வந்திட்டான்ல அவன் வாயைத் திறந்து பதில் சொல்லட்டும். அன்பு.. சொல்லுடா!! உனக்கு இந்த பெண் கூட பழக்கம் இருக்கா??”..
என்று மாணிக்கம் சத்தமாக கேட்டதில் அந்த வீடே அதிர்ந்து விட்டது.
அதற்கு மேல் எதையும் மறைக்க முடியாது என்று உணர்ந்த அன்பு.. “ஆமாப்பா!!.. நானும் அவளும் லவ் பண்றோம்.”.. என்று அவன் முடிக்கவில்லை, மாணிக்கம் அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்து இருந்தார்.
அவ்வளவு நேரமாக அன்பு நிச்சயம் அப்படிச் செய்து இருக்க மாட்டான் என்ற அனைவரது நம்பிக்கை அந்த ஒரு நொடியில் நொறுங்கித் தான் போனது.
அன்புவின் சட்டையைப் பிடித்தவர்.. “என்னை மொத்தமாக அசிங்கப் படுத்திட்டியேடா”.. என்று மாணிக்கம் கத்த.
“மாணிக்கம்.. என்ன இது. தம்பி நீங்க அப்படி போங்க என்று அன்பை தள்ளி நிற்க வைத்தார் சதாசிவம்.
“மாணிக்கம்.. நீங்க எந்த காலத்துல இருக்கீங்க. ரெண்டு பேரும் மனசார நேசிச்சா அவங்களை சேர்த்து வைக்கிறதில் என்ன தப்பு இருக்கு?. ஜாதி மதம் எல்லாம் யோசிக்கக் கூடாது. பொண்ணு பெரிய இடம். உங்க பையன் வாழ்க்கை சிறப்பா இருக்கும். யோசிக்காம சம்மதம் சொல்லுங்க.!”
“ஹ்ம்ம்.. இனி நான் பேசுறதுக்கு என்ன இருக்கு. ஒரு அப்பான்னு என்னை மதிக்காம அவனே எல்லா முடிவையும் எடுத்துட்டான். இனி அவனுக்கு பிடிச்சதை அவனே செஞ்சுக்கட்டும். நான் எதிலும் தலையிட மாட்டேன்.”
. “மாணிக்கம், அவன் நீங்க பெத்த பிள்ளை. நீங்க இப்படி உதறிப் பேசினா எப்படி? எனக்கு புரியுது. நம்ம ஊர் பக்கம் ஒரு மாதிரி பேசுவாங்கன்னு நீங்க சங்கடப்படுறீங்க. ஆனா நமக்கு நம்ம பிள்ளைங்க வாழ்க்கை தான முக்கியம். மத்தவங்களுக்காக நாம நம்ம பிள்ளைங்க சந்தோசத்தை அழிச்சிடக் கூடாதுல!!”
“சம்மந்தி எனக்கு இந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு கொஞ்சம் யோசிக்க அவகாசம் வேணும். நாம நாளைக்கு இதைப் பத்தி பேசலாம். அவரை இன்னைக்கு போயிட்டு நாளைக்கு வரச் சொல்லுங்க”
. பஜன்லால் சேட்டும் நீத்துவும் இருக்கையில் இருந்து எழுந்து கொள்ள. “சரி சதாசிவம் நாங்க இன்னைக்கு போயிட்டு நாளைக்கு வரோம். அவரை நல்ல முடிவாக எடுக்கச் சொல்லுங்க.”.. என்று சேட்டும் நீத்துவும் செல்லப் போக..
திடீரென்று நீத்துவோ அன்பு அருகில் ஓடிச் சென்று நின்றவள்.. அவனை இறுக அணைத்து அவன் கன்னத்தில் முத்தம் இட்டு இருந்தாள். “அன்பு நம்ம கல்யாணத்துக்கு வேகமா நல்ல நாள் பாருங்க”.. என்று சொல்லி விட்டு அவள் சென்று இருக்க..
அனைவரின் ஷாக் அடித்த பார்வையில் அன்பு செய்வது அறியாது சிலையாகி நின்றான்.
நீத்துவும் சேட்டும் காரில் வீடு திரும்பிக் கொண்டு இருந்தனர். “இங்க பாரு நீத்து.. இப்ப எதுக்கு எல்லார் முன்னாடியும் போய் அவனைக் கட்டிப் பிடிச்ச?”.. என்று சேட்டு கேட்க..
“அப்பா.. அப்ப தான அவங்களுக்கு எங்க லவ் எவ்வளவு ஸ்ட்ராங்னு புரியும். அப்ப தான கல்யாணத்துக்கு வேகமா ஒத்துக்குவாங்க.”
“இங்க பாரு.. நான் உன் அப்பன்!! மறந்துராத!!.. நீ உன் மனசுல என்ன திட்டத்தோட அவனைப் போய் கிஸ் பண்ணன்னு எனக்கு நல்லாவே தெரியும்.
என் ஏற்பாட்டின்படி சதாசிவம் பேசுன பேச்சுல அவங்க நிச்சயம் சம்மதம்னு சொல்லி இருப்பாங்க.
ஆனா நீ.. எங்க அப்படி நடந்திடுமோன்னு பயந்து உன் வேலையை காமிச்சிட்ட!!.. நீ என்ன பிளான் போட்டாலும் அது நடக்காது. மைண்ட் இட்!”.. என்று வீட்டை எட்டியவர் நடந்து உள்ளே சென்று இருந்தார்.
தொடரும்.
இந்த கதை உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துகளை மறவாமல் பதிவிடுங்கள் தோழமைகளே .o அன்புடன் லக்ஷ்மி.