இளமாலை வெயில் இதமாய் சுடும் நேரம்.ஒரு ஸ்கூட்டியில்பச்சைநிற சுடிதாரில் ஒரு பெண் .அவள் பின்னால் உட்கார்ந்து பயணித்து வந்தாள் அந்த பிங்க் நிற சுடிதார் அணிந்த பெண்.நீண்ட வரிசையில் ஒரு அரைமணி நேரம் காத்திருந்தார்கள்.வெயில் ஒரு புறம் சுட அந்த பெட்ரோல் பங்கில் ஒரு வாக்குவாதம் சூடாகி கொண்டிருந்தது.அந்த சூழலை சரி செய்ய இயலாதவர்களாய் ஊழியர்களும் முதலாளியும் தவித்துக்கொண்டிருந்தனர்.,அந்த சூழல் எரிச்சலை தந்தது.
“நேரம் டீ மாட்டிகிட்டோம்.இதை விட்டா வேற இடமும் இல்ல.இன்னும் எவ்வளவு நேரமோ?”பச்சைசுடிதார்.
“இரு டீ சரியாகிடும்.அங்க பாரு அந்த கார்ல ஒரு பாப்பா சிரிச்சு சிரிச்சு விளையாடுது”
“ஆமா ஏ.சி கார்ல சிரிச்சி தான் விளையாடும்”
“இல்ல டீ அது வெளியில் இருந்தாலும் விளையாடும்.அதுக்கு இந்தநொடி சந்தோசம் தான் தெரியும்”
“ஆரம்பிக்காத.இவனுங்க சண்டை எப்ப முடியறது.நாம் எப்போ களம்புறது”
இவர்கள் இப்படி பேசிக்கொண்டிருக்க..அங்கு மேகம் சூழ்ந்தது,சில் லென்று காற்று வீசியது.சத்தங்கள் எல்லாம் அடங்கிப்போனது.அந்த பெட்ரோல் பங்க் உரிமையாளர் கண்களில் ஒரு மின்னல் ஒரு நம்பிக்கை.தூரத்தில் ஒரு இளைஞன்.அரும்பு மீசையும் காந்த விழியும் வசீகர புன்னகையுமாய் ஓட்டமும் நடையுமாய் வந்துக்கொண்டிருந்தான்.அவன் வரும் பாதையில் அந்த பிங்க்சுடிதார் பெண் குறுக்கில் வர..மோதியே விட்டான்.சற்று சுதாரித்து கொள்வதற்குள் அவன் அங்கிருந்து நகர்ந்தவன்
“சாரி மேடம்”என்ற ஒற்றை வார்த்தை உதிர்த்துவிட்டு செல்ல முயன்றான்.ஏதோ அவனை ஈர்க்க திரும்பி அவளை நோக்கினான்.ஹெல்மட் நடுவில் மீன் கண்கள்.அவன் இதயத்தில் ஒரு மின்னல்.அவள் கண்கள் அவன் கண்களை நேராய் பார்த்தது.
“வாடா..நல்ல வேளை..இந்த ஆளு ரொம்ப பண்றான்.என்னன்னு பாருடா அறிவு”
“சார் நான் பார்த்துக்கறேன்”ஓடினான்
அவள்.அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
சிரித்தான் ,படபடவென பேசினான்,கைக்குலுக்கினான் என்ன நடந்தது என்றே புரிவதற்குள் சண்டையிட்டவன் முகத்தில்புன்னகையோடு வெளியேறினான்.
விரிந்த கண்கள் இன்னம் விரிய
“ஏய் யாருடி இது..என்ன நடந்தது”
“இவ ஒருத்தி கிளியர் ஆகிடுச்சு வா பெட்ரோல் போட்டு போகலாம்”
“சரி டீ ஒன்னு போடு போதும்”
“ஏய்..நீ சுத்தற சுத்தலுக்கு ஒன்னுலாம் போதாது டீ”
“அவ்வளவு தான் காசு இருக்கு.நான் சொல்றத செய்”
“அப்போ தினமும் இங்க வரனும் கயல்”
“அதான்டி என் ப்ளான்.சும்மா பேசிட்டு இருக்காத..அதோ அங்க போ..போடி”
அவன் இருக்கும் இடம் தேடிவந்து நிறுத்தினாள்.
அவன் அவளை பார்த்ததாய் தெரியவில்லை.
நொடிநேர அருகாமையில் இரு இதயமும் சாரல் கண்டது மட்டும் உண்மை.