“நோ இஷ்யூஸ், நீங்க போட்டு தர்றேன்னு சொல்லிட்டா நான் ஏன் இத்தனைதடவை கேட்கறேன்…” என தோளை குலுக்கிக்கொண்டாள் பிரத்யுக்ஷா.
“ரொம்ப சேட்டை தான். இந்த வீக் மட்டும் எத்தனை குடிச்சிருக்க? அனு கௌன்ட் பண்ணி சொன்னா. உனக்கு கொஞ்சமும் ஹெல்த் கான்ஷியஸ் இல்லை…” என்றான் லேசாய் அதட்டல் தொனியில்.
“இந்த அனு அக்கா எப்போ இருந்து கம்பி என்ற வேலை எல்லாம் பார்க்க ஆரம்பிச்சாங்க…” என்று கேலியாய் கேட்க,
“பிரத்யு…”
“சரிங்க ஹார்ட் சர்ஜன். இப்ப எனக்கு ஒரு ஹாட் சாக்லேட்…” அப்போதும் விடாமல் அவள் பேச,
“திரும்ப திரும்ப பேசற நீ…” ஆகர்ஷன் முறைக்க,
“என்ன கையை பிடிச்சு இழுத்தியா?…” என்று கொட்டும் அருவியாய் அவள் கலகலத்து சிரிக்க ஆகர்ஷன் முகத்திலும் அவன் பெயரை போலவே வசீகரிக்கும் புன்னகை.
அதற்குள் பிரத்யுக்ஷா தாய் இந்தியாவிலிருந்து அழைப்பு விடுக்க எடுத்து பேச ஆரம்பித்தவள் அதே கதையை தாயிடமும் ஒப்பித்தாள்.
வீடு சென்று சேரும்வரை மாற்றி மாற்றி அவர்கள் பேசிக்கொண்டே வர புன்னகையுடன் கேட்டிருந்தான் ஆகர்ஷன்.
“ஓகே ம்மீ, எனக்காக ஹாட் சாக்லேட் வெய்ட்டிங். பை பை…” என்று வைக்க,
“திருந்தவே மாட்ட?…” என்றான் ஆகர்ஷன்.
“நீங்க திருந்துங்க சீனியர்? வொய் மீ?…” என்று தோளை குலுக்கிக்கொண்டு வீட்டினுள் பட்டாம்பூச்சியாய் பறந்து செல்ல ஷ்யாமளா நின்றிருந்தார் அவர்களை எதிர்நோக்கி.
“வாவ், டாக்டர் பேமிலியோட ராஜமாதா ஷ்யாமளாதேவி. எப்ப வந்தீங்க? இந்த சீனியர் சொல்லவே இல்லையே?…” என்று துள்ளிக்கொண்டு அவரிடம் வர, பார்த்ததும் சிரிப்புடன் தானும் அணைத்துக்கொண்டார் அவளை.
“இதுதான் இன்னைக்கு சீனியர் லேட்டா வந்ததுக்கு காரணமா? நான் கூட கேர்ள்ப்ரென்ட் கூட டேட்டிங் போலன்னு நினைச்சுட்டேன்…” என்று ஷ்யாமளாவை இழுத்துக்கொண்டு சோபாவில் அமர்ந்தபடி கதையளக்க ஆரம்பித்துவிட்டாள்.
“அவனுக்கு கேர்ள்ப்ரெண்டா? சரி தான்…” ஷ்யாமளாவும் பேச,
“அட நம்புங்க ஆன்ட், இந்ததடவை கண்டிப்பா அந்த பொண்ணை இன்ட்ரோ பன்றேன். கையோட நீங்க பேசி முடிக்கறீங்க. கல்யாணத்தை பிக்ஸ் பன்றோம். எத்தனை வயசாகிடுச்சு உங்க பையனுக்கு? எப்ப பாரு விளையாட்டுத்தனம். உங்களுக்கு கொஞ்சம் கூட பயமே இல்லை….” என்று ஷ்யாமளாவை வம்பிழுக்க,
“நான் ஏன் பயப்படனும்?…” என்றார் அவரும் சிரித்துக்கொண்டே.
“பின்ன, நீங்க அவரை கவனிக்கலைன்னு எதாச்சும் ஒரு பொண்ணை கல்யாணம் செஞ்சு குழந்தை குட்டின்னு ஆகிட்டா? 90ஸ் கிட் வேற. கண்டிப்பா செய்வாங்க. அப்பறம் நான் கல்யாண விருந்துக்கு எங்க போக?…” என்றவள்,
“நம்ம ஊர் சாம்பார், வத்தக்குழம்போட எனக்கு ஒரு விருந்து ரெடி பண்ணனும். பாயாசம் என்னோட சாய்ஸ், பால் பாயாசம் வேண்டாம். பருப்பு பாயசம். நீங்க செய்வீங்களே அப்படியே…” என்று வரிசையாய் அடுக்கினாள்.
“உனக்கு பாயாசம் வேணும்னா நான் கல்யாணம் பண்ணிக்கனுமா? உதை வாங்க போற…” என வந்தவன்,
“இவளை யாராச்சும் பீடியாட்ரிக் டாக்டர்ன்னு நம்புவாங்களா மாம்?…” என்று ப்ரத்யுக்ஷா அருகில் அமர்ந்தான் ஆகர்ஷன்.
“இன்னும் ஆகலையே. முதல்ல எம்பிபிஎஸ் முடிக்கறேன். அதுக்குள்ள என் டாடி என்ன ப்ளான்ல இருக்காருன்னு பார்த்துடலாம்…” என்றாள் சலிப்புடன்.
“வேற எடுக்க சொன்னா ஓகே ஐடியாவா உனக்கு?…” ஆகர்ஷன் கண்டனத்துடன் பார்க்க,
“நோ நோ. இந்ததடவை நான் கண்டிப்பா ஊருக்கு போய்டுவேன். அங்க போய் ஹையர் ஸ்டடிஸ் பத்தி பார்த்துக்கலாம்….” என்றவள் குரலில் பிடிவாதம் இருந்தது.
அதனை மௌனமாய் பார்த்த ஆகர்ஷன் மேலும் பேச்சை வளர்க்கவில்லை அவளிடம்.
“மாம், ப்ளாக் டீ…” என்று ஷ்யாமளாக்கு அதனை தந்துவிட்டு,
“பிடி, உன்னோட ஹாட் சாக்லேட்…” என்று நீட்டியவன், தினேஷை அடித்த அவளின் கையை எடுத்து அதற்கு ஐஸ் ஒத்தடம் கொடுத்தான் ஆகர்ஷன்.
“இதை தான் ஐஸ் வைக்கிறதுன்னு சொல்லுவாங்க ஆன்ட். பார்த்துக்கோங்க. பேசாம கல்யாணத்தை பண்ணி வச்சு குடும்பஸ்தன் ஆக்கிடுங்க. என்ன ஒன்னு பொண்ணு இந்த நாடு. குட்டீஸ் கூட சீனியர் கலரோட சேர்த்து கொஞ்சம் பிங்கிஷா பிறக்கும்…” என்று கேலி பேச,
“பொண்ணை பார்த்து வச்சிட்ட போல? யார் அது?…” என்றார் ஷ்யாமளா அவளின் சேட்டைகளை ரசித்தபடி.
“அப்கோர்ஸ். சீனியர் மட்டும் தலையை ஆட்டட்டும், பொண்ணு சும்மா பறந்து வந்திருவாங்க. அனு அக்காக்கும் நல்லா தெரியும்…” என ஆகர்ஷனை காண்பித்து கண் சிமிட்ட,
“டேய் வாலு, முதல்ல நீ உன் ப்ளாட்க்கு கிளம்பு. விட்டா என்னை சம்சாரியா மாத்திட்டு தான் போவ…”என்று அவள் கையில் இருந்த கப்பை பறிக்க பார்க்க, பதிலுக்கு அவள் விட்டுத்தராமல் இருக்க ஷ்யாமளாக்கு இருவரின் சண்டையில் புன்னகை வாடவே இல்லை.
“என்னவாம் அனுவுக்கு என்ன வச்சிருக்கா இந்த சேட்டை…” என்று வந்தாள் அனன்யா.
“உங்க பிரண்டை பத்தி சும்மா ஒரு விளம்பரம்…” என்று கண் சிமிட்டிய பிரத்யுக்ஷா,
“உங்க அண்ணனுக்கு கல்யாண பேச்சை ஆரம்பிச்சி விட்டிருக்கேன். இப்ப தான் ஊ போட்டிருக்கு. நீங்க நெக்ஸ்ட் ஸ்டெப் போங்க. நான் நாளைக்கு வந்து பார்க்கறேன்…” என்றவள்,
“ஆமா அங்கிள், ஆன்ட்டி வந்துட்டாங்களா? கார் பார்க்கலை நான்….” என்றாள் ரகசியமாய்.
“நீ சத்தமாவே பேசலாம். இந்த வீட்டுல இருந்து அங்க கேட்க போகுதாக்கும்?…” என்ற அனன்யா,
“இன்னும் வரலை. ஆனா உன் கசின் கார் இப்போ தான் உள்ள வந்துச்சு. சுஷ்மா வந்தாச்சு…” என்று சொல்ல,
“அப்போ ஓகே. கம்பெனிக்கு ஆள் இருக்கு. நான் வர்றேன். டாட்டா…” என்று சொல்லிவிட்டு எழுந்து செல்ல,
“பிரத்யு நில்லு…” என்றார் ஷ்யாமளா.
“எஸ் ஆன்ட், நிக்கலாமே…” என அப்படியே திரும்ப,
“நாளைக்கு உனக்கு ஹாலிடே தானே?…”
“உங்களுக்கு தெரியாதா என்ன?…” என்று பிரத்யுக்ஷா புன்னகைக்க,
“ஓகே, அவுட்டிங் போலாம்….” என்றதும் யோசனையாய் அவள் நிற்க,
“அப்கோர்ஸ், அவ பண்ணிடுவா. நீங்க கைட் பண்ணுங்க…” என்றான் அவன் அப்போதும் நம்பிக்கையுடன்.
“ஹ்ம்ம்,முதல்ல இதை அவ முடிக்கட்டும்.எம்டி படிக்கட்டும். அடுத்து பண்ணிடலாம்…” என்றவர்,
“பண்ணிடலாம் தானே?…” என்று கேட்க எதுவும் பேசவில்லை ஆகர்ஷன்.
மிதமான புன்னகை அவனின் இதழோரம் முகிழ்க்க அதற்கு எந்தவித பதிலையும் அவன் அளிக்கவில்லை.
ஷ்யாமளாவும் அவன் எப்போது அங்கே வருவான் என்றும் கேட்கவில்லை. வருவான் என்ற நம்பிக்கை மட்டும் அவரை செலுத்திக்கொண்டிருந்தது.
அவனுக்காக தானே அனன்யாவையும் இங்கே மருத்துவ படிப்பிற்காக அனுப்பியது.
அவளின் படிப்பும் முடிந்திருக்க இதோ அவளை அழைத்து செல்வதற்கென வந்திருந்தார் ஷ்யாமளா.
எப்போதோ வந்திருக்கவேண்டியது. அனன்யா சொல்லியதற்கிணங்க தாமதித்து வந்து சேர்ந்தார்.
மகனின் முகத்தையும், அவன் கூறியதையும் யோசித்தபடி அவர் அமர்ந்திருக்க,
“என் முகத்துல எதாச்சும் இருக்கா என்ன?…” என்று பேச்சை மாற்றி சிரித்தபடி கேட்டவன்,
“இன்னைக்கு இந்த பிரத்யு காலேஜ்ல பண்ணின சேட்டை தெரியுமா?…” என்று அவரிடம் நடந்தவற்றை விவரிக்க அவனின் முயற்சி புரிந்து தானும் உடன்பட்டார் ஷ்யாமளா.
“இங்க பர்ஸ்ட் டைம் வந்தப்போ எப்படி இருந்த பொண்ணு? அதுவும் அந்த ஆன்ட்டி போட்ட கண்டிஷன்ஸ். அதுக்கு பிரத்யு பாவமா பார்த்த பார்வை…” என்று சொல்லி சிரித்தார் ஷ்யாமளா.