“ஹ்ம்ம், டூ இட்…” என தோளை குலுக்கியவன் மீண்டும் சப்தம் எழுப்ப,
“வேண்டாம், என்னை டென்ஷன் பண்ணாதீங்க. அவ்வளோ தான்…” என்றாள் அவனின் செய்கையில் உடன்பாடில்லாமல்.
உண்மைக்கும் மனம் மயக்கத்திற்கும், மனக்காயத்திற்கும் இடையில் சிக்கிக்கொண்டு தவித்தது.
எத்தனை சமாதானங்களும் அவளின் வருத்தத்தை, கோபத்தை, வலியை குறைத்துவிடாது என்பதில் அத்தனை திண்ணம்.
“டென்ஷன் எல்லாம் எப்பவும் இருக்க கூடியது தான். க்ராஸ் பண்ணி வந்திடுன்னு சொல்லமாட்டேன். ஆனா கன்சிடர் பண்ணு. கொஞ்சமாவது என் பாயின்ட் ஆஃப் வ்யூல யோசிக்க ட்ரை பண்ணலாம்…”
“உங்க பக்கம் இருந்து யோசிச்சா பிரத்யு ஓடி போக மாட்டா….”
“தப்பே பண்ணாம இருக்க நான் பிரத்யு இல்லையே. ஆகர்ஷன். சின்ன சின்ன குறைகளும் இருக்கக்கூடிய சாதாரண மனுஷன்….”
“அப்போ நான் மனுஷி இல்லையா?…”
“ஹாட் சாக்லேட் வேணும்னா ஓபனா கேளு. அதுக்கேன் இவ்வளோ ஹாட்டா? இதுல ப்ச் வேற. என்னை டெம்ப்ட் பன்ற நீ…” என்று தலையை கோதியபடி ஆகர்ஷன் சன்னமான குரலில் கூற பே என விழி விரித்து அவனை பார்த்தாள் பிரத்யுக்ஷா.
மெலிதான விசில் சப்தத்துடன் அவளிடம் வசீகர பார்வை கொண்டு புருவம் உயர்த்தி என்னவென்றான் பாவனையுடன் ஆகர்ஷன்.
கௌசல்யாவை கண்டத்தில் இருந்து அவன் இருந்த இருப்பேன்ன? அவன் தவித்த தவிப்பென்ன? இப்போது தன்னிடம் அவன் காண்பிக்கும் இந்த முகம். அவளின் நெஞ்சம் கலங்கியது.
இது தனக்காகவா? தனக்காக மட்டுமா? ஆனாலும் விட்டு செல்ல நினைத்த அவனின் நொடிநேர முடிவு. மீண்டும் மனம் இறுகினாள்.
‘இனி ஜென்மத்துக்கும் அப்படி ஒரு நினைப்பே வரக்கூடாது. என்னெல்லாம் பண்ணி என்னை அழ விட்டுட்டான்’ என்று மனதினுள் அவனை தாளித்தவள் மௌனம் காண்பிக்க,
“நான் நாளைக்கு கண்டிப்பா கிளம்பனும் பிரத்யு…” என்றான் மீண்டும்.
“யூர் விஷ் மிஸ்டர் டாக்டர்…” என பல்லை கடித்துக்கொண்டு அவள் கூற,
“எஸ், மை விஷ்…” என ஆகர்ஷனும் கூற,
“இந்த புத்தி எனக்கில்லை. இப்படி நானும் சொல்றேன், பாருங்க….”
“அப்போ திறங்க. நான் இறங்கவேண்டாமா? என் டாடி வேற…” என்றவளுக்கு அப்போதுதான் கண்கள் எதிர் திசையை நோக்கியது.
கையை கட்டியபடி இவர்களை பார்த்துக்கொண்டு அங்கே நின்றிருந்தார் ஸ்ரீவத்சன்.
சுத்தமாய் மூச்சடைத்து போனாள் பிரத்யுக்ஷா. அதுவும் எத்தனை நேரம் நின்றாரோ என்று வேறு படபடத்து வந்தது.
“டாடி…” என்றாள் மெல்லிய குரலில்.
“டாடின்னா பயந்திருவோமா?…” ஆகர்ஷன் கேலி பேச,
“அச்சோ நிஜமாவே டாடி தான். அங்க நிக்கிறார்…” என்று பிரத்யுக்ஷா காண்பிக்க ஆகர்ஷனும் அத்திசை திரும்பி பார்த்தான்.
ஏற்கனவே பிரத்யுக்ஷா போனில் ஸ்ரீவத்சனை பார்த்திருந்ததனால் பார்த்ததும் அவனும் கண்டுகொண்டான்.
“ஓஹ்…” என்றதை தவிர பெரிதாய் எவ்வித பிரதிபலிப்பும் இல்லை ஆகர்ஷனிடம்.
“என்ன ஓஹ்? கொஞ்சமும் ஜெர்க்காகலையா?…”
“ஏன் ஆகனும்? உங்கப்பா என்ன பெரிய புலியா?…” என்றவன், பெரிதாய் அலட்டிக்கொள்ளவே இல்லை.
“பேசிட்டே இருக்கீங்க? டோர் ஓபன் பண்ணுங்க…” என மீண்டும் கதவை திறக்க முயற்சிக்க,
“என்னவோ உன் வாய்ஸ்ல இருக்கற ஃபீல் ரொம்ப எம்ப்டியா இருக்கு. ஆட் சம் ப்ளேவர்ஸ் பிரத்யு….” என்று சீண்ட,
“அம்மாடியோவ். என்னாச்சு உங்களுக்கு?…” என்றவள் பதட்டம் கூடியது அவர்களை நோக்கி வந்துகொண்டிருந்த ஸ்ரீவத்சனை கண்டு.
“டாடி வர்றார்…”
“நீ சொல்லவேண்டியது வரலையே?…” என காரினுள் எதையோ தேடுவதை போலவே அவன் இங்குமங்குமாய் பாவனை செய்ய,
“என்ன சொல்லனும்? நான் பேசினதுக்கு என்னை திரும்ப டென்ஷன் பன்றீங்களா?…”
“ம்ஹூம், இது இல்லை. அதுவும் ரொம்ப ட்ரையா இருக்கே? வாட் ஹேப்பண்ட் பிரத்யு?…” அத்தனை இலகுவான குரலோடு சன்னமான சிரிப்பும்.
“கதவை திறங்க சீனியர்….” என்றவள் இன்னும் டென்ஷனில்,
“திறந்துவிடுடா….” என்று ஸ்ரீவத்சன் வருகையை கவனித்துக்கொண்டே சொல்லி கத்த சட்டென கார் ஜன்னலும் திறக்கப்பட்டு பிரத்யுக்ஷா குரல் அத்தனை சத்தத்தில் வெளியே கேட்டது.
“அச்சோ…” என்று அவள் பயந்து பார்க்க சட்டென தன் பக்க காரின் கதவை திறந்துகொண்டு இறங்கிவிட்டான் ஆகர்ஷன்.
அவன் இறங்கியதும் தான் தானும் தனது பக்கத்திலிருந்த கதவினை திறக்க இப்போது முடிந்தது அவளால்.
“ராஸ்கல்…” என மெல்லிய குரலில் பல்லை கடித்துக்கொண்டு வெளியே வர,
“பிரத்யு…” என்றார் ஸ்ரீவத்சன்.
அவள் கத்தியதில் அவருக்குமே இறுதி வார்த்தை கேட்டிருக்க என்னவோ என்று ஒருவித முறைப்புடன் தான் வந்தார்.
ஆகர்ஷனை பார்த்ததும் லேசாய் தலையசைப்பு மட்டுமே ஸ்ரீவத்சனிடம். வாய் திறந்து வேறு எதுவும் பேசவில்லை.
விக்ரம் காண்பித்திருந்தான் ஆகர்ஷனை. நேரில் பார்த்துக்கொள்ளவில்லையே தவிர தூரத்தில் அவனை கவனித்தவர் இதோ இப்போது தான் அருகில் பார்த்தார்.
ஷ்யாமளா பற்றி ஏற்கனவே தெரியும். அதுவும் பிரத்யுக்ஷா அங்கே பணிபுரிய ஆரம்பித்த பின்னர் தான் அந்த மருத்துவமனையே அவர்களுடையது என்று தெரிந்தது.
“எவ்வளோ பெரிய ஹாஸ்பிட்டல், எத்தனை ப்ராஞ்சஸ். ஆனா டவுன் டூ எர்த் டைப். இல்ல?…” என்று காவேரி கேட்க,
“ஸோ வாட்? எல்லாருமே டவுன் டூ எர்த் டைப்பா இருக்கனுமா என்ன? இது ஒரு பெரிய விஷயமா? நாமளும் அப்படி இருக்கவேண்டிய அவசியம் இல்லை…” என்றிருந்தார் ஸ்ரீவத்சன்.
அவருக்கு பெரிய பிரமிப்பு எல்லாம் இல்லவே இல்லை. அது அவர்களது. பிரமித்து மட்டும் என்ன என்னும் அலட்சியம்.
ராம்நாத்திற்கு சிகிச்சை செய்வதை பற்றியும் விக்ரமும், காவேரியும் நன்முறையில் அவரிடம் சொல்ல,
“ஃப்ரீ சர்வீஸ் இல்லையே? இந்த ஸ்பெஷாலிட்டீஸ் எல்லாத்துக்குமான ஈக்வல் அமௌன்ட் அவங்க டிஸ்சார்ஜ் சம்மரில பில் பண்ணிடுவாங்க. இது அவங்க ட்யூட்டி…” என்றிருந்தார்.
இருநாட்கள் முழுதாய் முடியவில்லை. ஆகர்ஷன் வேறு அறுவைசிகிச்சை செய்தவேகத்தில் யாரையும் பாராமல் கிளம்பி சென்றிருக்க அதுவே ஸ்ரீவத்சன் மனதில் அதிருப்தியை பதிந்தது.
“சர்ஜரி பண்ணின ஹார்ட் சர்ஜனை பார்த்து பேசவேண்டாமா?…” என ஸ்ரீவத்சன் கிருஷ்ணகுமாரிடம் கேட்க,
“நானும் ஹார்ட் சர்ஜன் தான் மிஸ்டர் ஸ்ரீவத்சன். என்ன டீட்டெய்ல்ஸ் வேணும்?…” என்று அவரும் கேட்டிருக்க,
“மாமா, நான் பார்த்து பேசிட்டேன். லீவ் இட்…” என்றுவிட்டான் கௌரவ்.
“ஓஹ்…” என்றதுடன் முடித்திருக்க இதோ இப்போது ஆகர்ஷனை நேருக்குநேர் பார்த்தவரால் சட்டென பேச முடியவில்லை.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.