“இல்லவே இல்லை. யார் தொல்லையும் இல்லாம நிம்மதியா இருந்தேன். கரடியாட்டம் உள்ள நுளைஞ்சிட்டு கேள்வி வேற….” என்றவள்,
“ஆமா உங்களை யார் வர சொன்னா இங்க? அதுவும் என்னை கேட்காம…” என மிரட்ட,
“ஹ்ம்ம், எனக்கு நல்லா வேணும்…” என்றான் ஆகர்ஷன்.
“யார் நான் தானே?…” என்று கண் சிமிட்டி அவனின் கன்னம் கிள்ளி பிரத்யுக்ஷா கேட்க,
“ஆமான்னு சொன்னா குடுத்திடனும்?…” என கள்ளப்புன்னகை புரிந்தான்.
“ஓஹ் காட். ஓடிடுங்க. ப்பாஹ், இதென்ன? இந்த பார்வை. சீனியர், இதெல்லாம் அதிகமா இல்லையா? அதுவும் நான் பாவம் தனியா வேற இருக்கேன்…” என எழுந்து செல்ல நின்றவளை கைபிடித்து இழுத்துக்கொண்டான்.
“போச்சு போச்சு. இன்னைக்கு கன்பார்ம் ஸ்வாஹா தான் போல. ஆன்ட்டிட்ட சொல்லி மந்திரிக்கனும். அதுவும் இப்போ ஒன்னுக்கு ரெண்டுபேர். இந்த மாமியார்ஸ எப்படி சமாளிக்க போறேனோ பிரத்யு…” என்றாள் கவலை போல.
அவள் சொல்லியதும் ஆகர்ஷனின் முகமும் கனிந்தது. புன்னகையுடன் அவளின் தலையை பிடித்து ஆட்டினான்.
அதன்பின்னரே பிரத்யுக்ஷா பேசியதை உணர்ந்து அவன் முகம் பார்க்க வலிகள் என்று பெரிதாய் எதுவும் தெரியவில்லை.
பழகிவிட்டதனை போல் தான் பார்த்திருந்தான் ஆகர்ஷன். ஆனாலும் கௌசல்யாவின் பெயரில் அவனின் விழிகளில் வந்துபோன உணர்வினை படித்துவிட்டாள் பிரத்யுக்ஷா.
நாக்கை கடித்துக்கொண்டு அவனை மன்னிப்பை யாசிக்கும் பார்வை பார்க்க,
“உனையே எல்லாரும் எப்படி சமாளிக்க போறாங்களோ? இதுல உனக்கு வேற கவலையா? அதுவும் என் அம்மாக்களை பார்த்து சொல்ற பாரேன்…” என்றான் அவளின் காதை பிடித்து திருகி.
“பின்ன, நான் தானே பின்னாடி சமாளிக்கனும். சண்டை எல்லாம் போடனும். அப்பறம் தாஜா பண்ணி சமாதானம் செய்யனும்…” என்றவள்,
“இப்பவே கொஞ்சம் கொஞ்சமா ட்ரெய்னிங் எடுத்துக்கோங்க. யாருக்கு சப்போர்ட் பன்றதுன்னு….” என கனவுகளில் மிதந்துகொண்டு அவள் பேசும் வார்த்தைகள் எல்லாம் நாளையே நடந்துவிடுவதை போலிருந்தது இருவருக்குமே.
“இப்பவே கல்யாணம் பண்ணிக்கனும் போல இருக்கு. எங்கப்பா உங்ககிட்ட எப்படி அப்ரோச் பண்ணுவார்? யார் முதல்ல இதுக்கு ஸ்டேப் எடுத்து வைப்பாங்க? கல்யாணம் முடிஞ்சதும் உங்க வீடா? என் வீடா?…” என்றவள் அவனின் பார்வையில்,
“அதான்ப்பா மறுவீடு. முக்கியமான விஷயங்கள் எல்லாம் அப்போ தான் நடக்கும்….” என்று கண் சிமிட்ட ஆகர்ஷனின் முகத்தில் கொள்ளையாய் வெட்கப்புன்னகை.
“கூட பிறந்தாங்க இல்ல. கோவிச்சாலும் பரவாயில்லை…” என்று பல்லை கடித்தவள்,
“இப்பவும் அப்பப்போ என் அண்ணா நல்லவர், வல்லவர்ன்னு சொல்லிட்டே இருக்காங்க. என்னைக்கு நான் டென்ஷனாகி அந்த வீரபாகுவோட பேக்கரி ரகசியத்தை ஓபன் பண்ண போறேன்னு தெரியலை…” என்று விளையாட்டாய் கூற ஆகர்ஷனின் முகத்தில் அமைதியோடான வருத்தம்.
இது ராம்நாத் பற்றிய விஷயம் மட்டும் இல்லையே. தன் தாய் கௌசல்யாவின் வாழ்க்கை.
அவர் அனுபவித்தது என்னவோ ரணமான வாழ்வு தான். ஆனால் அவரினால் இன்னும் இரண்டுபேர் இவ்வுலகிற்கு வந்திருக்க அவர்களையே அதன் தாக்கம் பாதிப்படைய செய்யுமே.
ஆகர்ஷன் தனக்கென்று மட்டும் பார்க்க முடியாமல் தேங்கி நின்றான். அவன் நினைத்தால் என் தாய் என்று உரிமையுடன் பார்க்க, பேச முடியும்.
இதனால் மற்றவர்களுக்கும் பாதிப்பே தவிர்த்து யாரின் உரிமையையும் தட்டி பறிக்கவோ,அவர்களுக்கிடையில் சஞ்சலம் ஏற்படுத்தவோ விரும்பவில்லை.
‘எனக்கு என்னை விட, என் அம்மாவோட நிம்மதி முக்கியம். அதேநேரம் அவங்களை விட்டு இனி தூரமா நான் இருக்கிறதா இல்லை. என் முன்னாடியே என் அம்மாவை மிரட்டி பார்த்த அந்த ராம்நாத்தை அத்தனை சீக்கிரம் விட்டுடுவேனா என்ன?’ என்றிருந்தான் கிருஷ்ணகுமாரிடம்.
இப்போதும் அதனை நினைத்துக்கொண்டே பிரத்யுக்ஷாவை பார்த்தான் ஆகர்ஷன்.
அதற்குமே ஆகர்ஷனிடம் மெல்லிய புன்னகை தான். சிரித்துக்கொண்டே எழுந்து சென்றான் கிட்சனிற்குள்.
“ஹலோ நான் கேட்டுட்டே இருக்கேன். நீங்க எதுவும் சொல்லாம போனா எப்படி?…” என்று அவளும் வர அங்கே அவன் வாங்கி வந்த உணவுகள் எல்லாம் பிரிக்கப்படாமல் இருந்தது.
“ஓஹ், வரும்போதே பர்ச்சேஸா?…” என்று என்னென்ன வாங்கியிருந்தான் என பார்த்தாள்.
“உனக்கும் சேர்த்து தான். அதைவிட்டு. நான் எடுத்து தர்றேன். நீ விட்ட கதையை கண்டினியூ பண்ணு பேபி டாக்டர்….”என அவளின் மூக்கை பிடித்து நிமிண்டி கூற,
“என்ன கதை? நான் எப்போ சொன்னேன்?…” என கேட்டாள் பிரத்யுக்ஷா.
“நம்ம கதை தான். கல்யாண கதை. கல்யாண கனவுகள் இப்படியும் சொல்லலாம்…” என கண் சிமிட்டியவன் அவளை தூக்கி மேடையில் அமரவைத்துவிட்டு தானும் பெரிய ஸ்டூலை இழுத்துபோட்டு அதில் அமர்ந்துகொண்டான்.
அவன் சொல்லியதுமே பிரத்யுக்ஷா முகத்தில் அத்தனை சந்தோஷமும், வெட்கமும் இளஞ்சிவப்பில் படர,
“ஹ்ம்ம், நம்ம கல்யாணம்…” என்றாள் மெலிந்த குரலில்.
“ஹய்யோ, பிரத்யு என்னடா?…” அவள் முகம் நோக்கி குனிந்தவன் சிரிப்புடன் கேட்டு,
“கொஞ்சம் மறுவீடு, அங்க நடக்கிற பார்மாலிட்டீஸ் எல்லாம் சொன்னப்போ இந்த வெட்கத்தை காணும்?…” என்றான் அவளின் கன்னம் தட்டி.
“ஸோ வாட்? வரவச்சிடுவோம். வெட்கப்பட்டுக்கோ. என்னையும் ஜோடியா வெட்கப்பட வச்சிடு…” அவளுக்கான உணவை எடுத்து வைத்துக்கொண்டே தலை சாய்த்து புன்னகைத்து கேட்க,
“ராங் ரூட்…”
“ரைட் ரூட் தான். நீ ஓகே சொல்லு. இங்கயே இப்பவே கல்யாணம் பண்ணிக்கலாம்…”
“அவ்வா, இதெல்லாம் தப்பில்லையா?…” என்று முறைத்து,
“ஸ்ரீவத்சன் ஆமா சொல்லாம நோ வே. அதுவும் என்னை வேண்டாம்ன்னு சொன்னீங்க தான? அத்தனை சீக்கிரம் ஓகே சொல்லிடுவேனா நான்?…” என்று சிரித்தவள்,
“கொஞ்சம் கஷ்டமும் தான். இல்ல?…” என்று கேட்டாள் சட்டென முகம் கலங்கி.
ஆகர்ஷன் மௌனமாய் அவளை பார்த்தபடி உணவினை உண்ண துவங்க பிரத்யுக்ஷாவின் மனதிலுள்ள சஞ்சலம் இப்போது முகத்திலும் பரவியது.
“டாடி ஓகே சொல்லனும். டாடி சொல்லாம மம்மி சொல்லமாட்டாங்க. அண்ணாவும் அப்படித்தான். இதுல இந்த கௌசிக் ராம்நாத் வந்து குட்டையை குழப்பாம இருக்கனும். இவ்வளோ இருக்கு….” என்றவள்,
“நம்ம கல்யாணத்துக்கு கௌசி அத்தையை விடுவாங்களான்னே தெரியலை. கொஞ்சம் பயமா இருக்கு…” என்றாள் கொஞ்சம் பயத்துடன்.
அப்போதுமே அவனிடத்தில் மௌனம் மட்டுமே. அவளே பேசட்டும் என்று அமைதியுடன் இருந்தான்.
“கல்யாணம் எல்லாம் எப்படி இருக்கனும் தெரியுமா? சும்மா ஜஸ்ட் லைக் தட் அப்படியெல்லாம் போகவே கூடாது. அனன்யாக்கா கல்யாணம் எவ்வளோ ஜாலியா நடந்துச்சு. அப்படி, இல்லைன்னா அதுல அட்லீஸ்ட் பாதியாவது….” என்று கூறும்பொழுதே தொண்டை அடைத்தது அவளுக்கு.
“டாடிக்கு சிலவிஷயங்கள் பிடிக்காது. அவர் இருக்கிற இடம் அவர் விருப்பபடி தான் இருக்கனும்ன்னு நினைப்பார். அவர் பார்க்கிற மாப்பிள்ளையை தான் நான் ஒத்துக்கனும்ன்னு நினைப்பார். அதுக்கே கொஞ்சம் போராடனும்…” என்றவள்,
“உங்களுக்கு வேற வயசாகுது. எப்போ கல்யாணமாகி, எப்போ என் பேபிக்கு உங்கம்மா தாலாட்டு பாடறதோ?….” என்று சொல்ல பக்கென்று சிரித்துவிட்டான் ஆகர்ஷன்.
“அறிவே, எவ்வளோ பேசற நீ? என்னென்ன யோசனை? சரிதான்…” என்று சிரித்தவன்,
“முதல்ல இந்த படிப்பு முடியனும் உனக்கு….”
“மூணுவருஷமா?…” என்று வாயை பிளக்க அதில் உணவை திணித்தவன்,
“ஹ்ம்ம், நீ தானே சூஸ் பண்ணின. முடிச்சிட்டு வா. வெய்ட் பன்றேன்…” என்றான்.
“நிஜமாவே படிப்பு முடியனுமா சீனியர்…”
“ஆமா…”
“ஸ்வாஹா பண்ண ட்ரை பண்ணும்போது மட்டும் இது தெரியலையாமா?….”
“என்ன?…” ஆகர்ஷன் புருவம் உயர்த்த,
“கொஞ்சம் முன்னாடி இருந்த ஏலியனை நினைச்சு பார்த்தேன். இதே மாதிரி ரொம்ப டீசண்டா ட்ரெஸ் பண்ணி, அழகா உங்க உருவத்துலையே ஒன்னு என்கிட்ட ரொம்ப தப்பா அதை கரெக்ட்டா எக்ஸ்ப்ளோர் பண்ண பார்த்துச்சு. நான் கூட நீங்கன்னு நினைச்சுட்டேன்…” என்றாள் கண்ணை அப்பாவியாய் விரித்து.