“போகனும். இனிமே தான். அதான் பேசிட்டு போகலாமேன்னு கூப்பிட்டேன்…”
“சரி பேசு…” என்றான் கன்னத்தில் கைவைத்து கேட்கும் பாவனையில்.
“பேசவா?…”
“ஹ்ம்ம், பேசு…” என்றான் மீண்டும்.
“உங்களுக்கு என்னவோ ஆகிடுச்சு சீனியர்…” என லேசாய் முறைப்புடன் கூற,
“உனக்கு எதுவும் ஆகலையே. எவ்வளோ யோசனை? எவ்வளோ தயக்கம். அதுவும் சரியா முகம் பார்க்காம. உனக்கென்ன ஆச்சு பிரத்யு?…” என்றதுமே அவளின் முகம் இன்னும் சிவந்தது.
“இல்லையே, நான் எப்பவும் போலதான்…” என்று படபடத்து தடுமாற்றத்துடன் அவசரமாய் கூற,
“அதனால அவங்கட்ட பேசனும். அதுக்கு முன்ன டாடிட்ட பேசனும் இதுவிஷயமா…” எனும் பொழுதே படிப்பை முடித்ததும் ஸ்ரீவத்சன் சொல்லியவற்றை யோசித்தாள்.
“வந்ததும் நாமளே புதுசா ஹாஸ்பிட்டல் ஆரம்பிச்சிடுவோம் பிரத்யு. எங்கயும் போய் நீ வொர்க் பண்ண வேண்டாம்…” என்று சொல்லியிருந்தது இப்போது மண்டை குடைச்சலாய் மாறியிருந்தது.
அப்போது அந்த நிமிடம் அவரிடம் பதில் வாதம் புரிந்தால் புரிந்துகொள்ளமாட்டார் என்று தான் அமைதியாகிவிட்டாள்.
நிச்சயம் தனியாய் மருத்துவமனையா? தன்னால் முடியுமா? அதுவும் பொதுமருத்துவம் மட்டும் படித்துவிட்டு என ஆயிரம் யோசனைகள்.
“பிரத்யு. பிரத்யும்மா…” என்றான் ஆகர்ஷன் அவளின் விழிகள் நிலைகுத்தி இருக்க கண்டு.
பிரத்யுக்ஷாவின் முகம் சட்டென்று கசங்கியிருந்தது தகப்பனின் வார்த்தைகளின் ஞாபகத்தில்.
“பிரத்யு…” என்று சத்தமாக அழைத்ததும் தான் திடுக்கிட்டு பார்த்தாள் அவனை.
“என்னடா?…” என்று கேட்கவும் அங்கே இருப்பதைப்போலவே உணர்ந்தவள்,
“கேளு. பேசனும்ன்னா பேசலை. இப்ப கேட்கறதுக்கு பர்மிஷனா?…” என்று சிரித்தவன்,
“உனக்கு என்னடா ஆச்சு? இங்க இருந்த பிரத்யு இல்லையே…” என்றான் அவளிடம்.
“ஏன்? அதெல்லாமில்லை. அதே பிரத்யு தான்…” என்றவளின் கண்கள் கள்ளத்தனம் காண்பித்தது.
“ஹேய் கேடி, உன்னை தெரியாதா என்ன?…” என்று கேட்டு,
“அம்மாவோட ஆஸ்திக்கு வர்ற அளவுக்கு நினைக்கிறியே? அதான் கேட்டேன்…” என்றான்.
“பேச்சு மாத்தறீங்க. நீங்க தான் மாறிட்டீங்க சீனியர்…”
“நானா? சரித்தான்…” தலையசைத்து புன்னகைத்தான்.
“ஆமா, நீங்க தான். நீங்க தான சொன்னீங்க அங்க வந்து படிக்க சொல்லி…”
“அதுக்கு…”
“அதான் சரின்னு அந்த ஆங்கிள்ல யோசிச்சேன். அதோட அந்த சிட்டியை விட்டு வந்ததும் ஒருமாதிரி இருக்கு…”
“ஹ்ம்ம்,…” என்றான் அடக்கப்பட்ட சிரிப்புடன்.
“ஆஹ எனக்காக தான் வர்ற நீ. ரைட் பிரத்யு?….” என்று கேட்க, அவள் திடுக்கிட்டு அவனை பார்க்க,
“ஐ மீன், நான் இங்க படிச்சா நல்லதுன்னு சொன்னதுனால. ஆமாவா இல்லையா?…” என்ற கேள்வியில் பிரத்யுக்ஷா தலை வேகமாய் இங்குமங்குமாய் ஆடியது.
“அழகுடா….”என்றான் இதழ்களுக்குள்.
“ஹ்ம்ம், கேட்கலை…”
“இது சும்மா, சொந்தகதை. சரி நீ சொல்லு. உன் டாடி ஓகே சொல்லுவாரா அதுக்கு?…” என்றான்.
“அதெல்லாம் சொல்லுவாங்க. சொல்லனும். நான் படிக்கனும்ல…” என்றவளுமே இன்னும் முடிவாய் பேசவில்லை என்று புரிந்தது.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.