“நோ ப்ரோப்! அப்புறம்! என்ன முடிவு பண்ணி இருக்க?” என்றான்.
“முதல்ல நான் சாரி சொல்லணும் சூர்யா” என்றாள் பாவமாய்.
“எதுக்கு?” அவன் புரியாமல் கேட்க,
“உன்கிட்ட இல்ல! உன் அண்ணன்கிட்ட” என்றதும் சிறு கீற்று கிண்டல் புன்னகை சூர்யா முகத்தினில் தோன்றிட,
“இன்ட்ரெஸ்ட்டிங்!” என்றவன்,
“அப்போ அண்ணாகிட்ட ஏற்கனவே பேசி இருக்கியா?” என்றான்.
“ம்ம்!” என்ற தலையசைத்தவளுக்கு இன்னும் தன் செயல் குறித்து கவலையாய் இருந்தது.
“ஹே! ஏன் இவ்ளோ டென்ஷன்.. எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம்.. என்னனு சொல்லு” என்று சூர்யா உற்சாகமாய் கேட்டான்.
ஜனனி இவ்வளவு கவலைப்படும் பொழுதே அவளுக்கு அண்ணனின் மேல் ஒரு எண்ணம் வந்துவிட்டதை இவனுக்கு உணர்த்த அது தந்த எனர்ஜியில் பேசினான்.
“அது வந்து.. அன்னைக்கு உன் கல்யாணம் நடந்துச்சு இல்ல.. அப்போ அக்கா எவ்வளோ சொல்லியும் கேட்காம நான் உனக்கு கால் பண்ணினேன்..” என்றாள்,
“சரி!” என்றவன் அடுத்து என்ன கூறுவாள் என்று பார்த்தான்.
“ஆனா எடுத்தது உன் அண்ணன்னு சத்தியமா எனக்கு தெரியாது சூர்யா.. ஒரு வார்த்தை நான் சூர்யா இல்லைனு சொல்லி இருந்தா நான் பேசி இருக்க மாட்டேன்ல?” என்று கேள்வியாய் அவள் நிறுத்தவும்,
“ஆமால்ல! இதை கேட்க மறந்துட்டேன் பாரு!” என்றவன்,
“ஆமா நீ என்ன சொன்ன அண்ணன்கிட்ட நான்னு நினச்சு?” என்றான் சந்தேகமாய். காபியும் வந்துவிட அதை கீழே வைத்துவிட்டு பேசி முடித்து விடலாம் என முடிவுக்கு வந்திருந்தாள் ஜனனி.
அந்த சந்தேகம் அவள் விழித்த விழியில் தான் இவனுக்கு உண்டானது.
“நிஜமா சாரி சூர்யா! நீ என்னை தப்பா நினைச்சுக்காத ப்ளீஸ்! நீ தான்னு நினச்சு உன்னை கிண்டல் பண்றேன்னு உன் அண்ணனை டெரரா இருக்கார், பொண்ணுக்கு பிடிக்கல அப்படின்ற மாதிரி என்னென்னவோ பேசி வச்சுட்டேன்.. என்ன பேசினேன்னு கூட சரியா நியாபகம் இல்ல” என்றதும் மென் புன்னகை சிந்தியவன்,
“சோ?” என்றான்.
“என்ன சோ? அதான் சொல்றேன் இல்ல?” அவள் கேட்க,
“இது வேற சோ! சோ உனக்கு இந்த கல்யாணத்துல.. ஐ மீன் அண்ணனை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் அப்படி தானே?” என்று சூர்யா நேராய் கேட்க,
“ஹேய்! எப்புட்றா?” என்றாள் கிண்டலாய்.
“ஹாஹா! நீ இவ்வளவு சாரி கேட்டு அண்ணன் எதுவும் நினைச்சுப்பானோன்னு பீல் பண்றதுலயே தெரியுதே!” என்றவன்,
“ஜஸ்ட் டூ மினிட்ஸ்” எஸ் கூறி சென்றுவிட்டு வரும் பொழுது கையில் ஸ்வீட்டுடன் வந்தான்.
“நல்ல நியூஸ் சொல்லி இருக்க.. சோ எடுத்துக்கோ!” என்று கூறி வைக்கவும் அவள் புன்னகைத்தாள்.
“நெக்ஸ்ட் சோ! சோ உனக்கு அண்ணன் மேல நிஜமா எந்த சந்தேகமும் இல்லை தானே?” என்றதும் கவலையாகி போனது ஜனனிக்கு.
“நிஜமா நான் உன்னை கிண்டல் பண்ண தான் அப்படி சொன்னேன் சூர்யா!” என்று அவள் கூற,
“அம்மாக்கும் அக்காக்கும் ரொம்ப இஷ்டம்.. அம்மா என்கிட்ட எதுவும் காட்டிக்கல.. உன் இஷ்டம்னு சொல்லிட்டாங்க.. அக்கா டெய்லி கேட்டுட்டே இருந்தாங்க.. உனக்கு ஒன்னு தெரியுமா? மகிக்கு உன் அண்ணன் தான் பேமிலி டாக்டர்!” என்று கூறி ஜனனி சிரிக்க, சூர்யாவும் சிரித்தான்.
பின் அன்று ஒரு நாள் மகிழினியை தான் கிளினிக் அழைத்து சென்றதும் அன்று அவன் ப்ரியாவை பேசியதும் என சூர்யாவிடம் கூற, இருவரும் சேர்ந்தே சிரித்தனர்.
“ஜெய் ஜாலி டைப் தான்.. இந்த எலி பண்ணின வேலையால கொஞ்சம் அப்செட்..” என்றவன்,
“ஜஸ்ட் அப்செட்.. அதுவும் நான் அந்த நேரத்துல கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னதுல தான் ரொம்ப அப்செட் ஆகிட்டான்.. மத்தபடி அவனுக்கு வேற எந்த தாட்டும் இல்லை.. அவனைப் பத்தி வேற என்ன சொல்ல? ரொம்ப நல்லவன், வல்லவன், எக்ஸ்ட்ரா பிட்டெல்லாம் நீயே சேர்த்துக்கோ.. என் பெரியப்பாக்கும் அவனுக்கும் தான் ஆகாது.. அது சின்ன வயசுல இருந்தே அப்படி தான்..” என்று கூற,
“அதென்ன எலி? வைஃபை செல்லமா கூப்புடுறியா?” என மற்றதை விடுத்து ஜனனி கேட்க,
“செல்லமும் இல்ல வெல்லமும் இல்ல.. விட்டா எனக்கே பாயசம் போட்டுடுவா.. அவ ஒரு யூனிக் பீஸ் ஜனனி.. கொஞ்சம் அர மெண்டல் கூட” என்று சூர்யா கூற,
“அய்!” என்று ஜனனி மிரட்டவும்,
“உனக்கு புரியாது.. நீ வா அப்ப தெரியும் உனக்கு..”என்றான்.
“ரொம்ப பண்ற டா!” என்றவளை,
“தேங்க்ஸ் ஜனனி! ஒரு செவேண்டி பெர்ஸன்ட் நீ ஓகே சொல்லுவன்னு ஒரு நம்பிம் இருந்துச்சு.. பட் அந்த தர்ட்டி தான்.. கொஞ்சம் பயந்துட்டே தான் வந்தேன்.. ஏன்னா! அண்ணனுக்கு மறுபடியும் வெளில பொண்ணு பார்த்து அவங்க கேரக்டர்னு அப்படி எல்லாம் யோசிச்சு மல்லி ம்மா ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆகுறாங்க அப்பப்போ.. இதை மட்டும் நான் போய் சொன்னேன்னா போதும்.. செம்ம ஹாப்பி ஆகிடுவாங்க” என்றான் உளமார்ந்த மகிழ்ச்சியில்.
“தேங்க்ஸ் நீயே வச்சுக்கோ!” என்றவள்,
“மத்ததெல்லாம் வீட்டுல பேசிக்கட்டும் சூர்யா.. நான் சாரி சொன்னேன்னு மட்டும் சொல்லிடு.. ப்ளீஸ்!” என்று கண்களை சுருக்கி கெஞ்ச,
“ப்ச்! கேட்க மாட்டியே!” என்று பேகை எடுத்துக் கொள்ள, மகிழ்ச்சியில் அவளுடன் துள்ளலாய் பேசியபடி வந்தான் சூர்யா.
ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்து தலையசைக்கவும் அவன் கையசைத்து விடை கொடுக்க இருவரையும் பார்த்து நின்ற அஞ்சலிக்கு சூர்யாவின் மேல் அத்தனை கொலைவெறி.
ஒரு பெண்ணுடன் தன் கணவன் என்ற எண்ணம் எல்லாம் அவளிடம் இல்லை. தன் சுதந்திரம் மொத்தமும் அவன் கைகளுக்குள் வைத்துக் கொள்ள பார்க்கும் கொடூரமானவனாய் தெரிந்தான் அவள் கண்களுக்கு.
வீட்டிற்கு வந்த அஞ்சலி தன் அறைக்குள் சென்றவள் வெளி வரவே இல்லை. மதியம் பிரேமாவை போய் சாப்பிட அழைத்து வருமாறு அஞ்சலியை கூப்பிட சொல்ல, பிரேமா மறுத்து விட்டார்.
“அக்கா! அவங்க வீட்டுல சொல் பேச்சு கேட்காம தான் இப்படி இருக்கா.. நாமளும் இடம் குடுக்க கூடாது.. சூர்யாவும் இதை தான் சொல்லுவான்.. நீங்க பேசாம இருங்க.. பசிச்சா வந்து சாப்பிடட்டும்.. எனக்கு தெரியாம நீங்க போனீங்க..” என்று மிரட்ட வேறு செய்துவிட, மல்லிகா அமைதியாகி விட்டார்.
பசி வயிற்றை கிள்ளிய போதும் வேண்டும் என்றே கீழே செல்லாமல் அமர்ந்திருந்தாள் அஞ்சலி.
ஜெய் கிளினிக் கிளம்பி ஐந்து மணிக்கெல்லாம் சென்றுவிட, ஆறு மணி அளவில் வீடு வந்தான் சூர்யா.
வரும் பொழுதே “அண்ணா! ஜெய்! டேய்!” என்று ஜெய் அறையைப் பார்த்து சத்தம் போட,
“கொழுப்பு தான் டா உனக்கு.. பெரியப்பா வீட்டுல தான் இருக்காங்க.. மறந்து போச்சா?” என்று பிரேமா கேட்டதும் “ஸ்ஸ்!”தலையில் தட்டிக் கொண்டவன்,
“ஜெய் எங்கே?” என்றான் அவரிடம்.
“இந்நேரம் கிளினிக்ல இருப்பான்னு உனக்கு தெரியாதா?” என்று அன்னை கூற,
“ப்ச்! ஷீட்!” என்று காலை உதைத்தவன், அன்னை, மல்லிகா, ஜெய் என மூவரையும் வைத்து காலையில் ஜனனியை சந்தித்ததை கூற ஆசையாய் வந்திருந்தான்.
“என்ன டா?” என்று பிரேமா கேட்க, மல்லிகாவும் அவர் அறையில் இருந்து வந்தார்.
“மல்லிம்மா!” என மல்லிகாவைப் பிடித்து சுற்றினான் சூர்யா.
சூர்யா ஜெய்யை அழைத்த சத்தத்தில் அவன் வந்ததை தெரிந்து கொண்ட அஞ்சலி மேலிருந்து எட்டிப் பார்க்க, அவன் மல்லிகாவைப் பிடித்து சுற்றிக் கொண்டிருந்தான்.
பார்த்தவள் ஒரு முறைப்புடன் உள்ளே சென்று விட்டாள்.
“உங்களுக்கு ஒரு செம்ம ஹாப்பி நியூஸ் வச்சிருக்கேன்.. என்னனு சொல்லுங்க பார்ப்போம்” என புதிர் போட,
“உனக்கு வேற வேலை இல்லை.. போ டா.. போய் பிரெஷ் ஆகிட்டு வா.. பிரேமா நீ அவனுக்கு டீ போடு” என்று கூறவும், பிரேமா சிரிப்புடன் உள்ளே செல்ல,
அவரை திரும்பிப் பார்த்துக் கொண்ட மல்லிகா சூர்யா அருகில் வந்து “சூர்யா! அஞ்சலி மதியமே சாப்பிடல.. போய் பாரு டா.. உன் அம்மா வேற உன்கிட்ட கேட்காம அங்கே போகவே மாட்டேன்னு சொல்லிட்டா” என்று கூற,
“நினச்சேன்!” என்ற குரலில் திரும்பிப் பார்க்க, பிரேமா மல்லிகாவை முறைத்த வண்ணம் அங்கே நின்றிருந்தார்.
“ஹாஹாஹா! அய்யோ மல்லி ம்மா..” என்று சத்தமாய் சிரித்த சூர்யா,
“உங்களை என்ன சொல்றது… பசிச்சா சாப்பிட வர மாட்டாங்களா யாரா இருந்தாலும்?” என்று கூற,
“நான் சொன்னேன்ல?” என்று பிரேமாவும் பார்க்க,
“உங்ககிட்ட சொன்னதுக்கு இந்த செவுத்துகிட்ட நான் பேசி இருக்கலாம்” என்று உள்ளே சென்றுவிட்டார்.
“சரி சரி டென்ஷன் வேண்டாம்! நான் போய் பக்குவமா பேசிட்டு வர்றேன்.. போதுமா? அதுக்குள்ள ஒரு ஸ்வீட் டக்குனு ரெடி பண்ணுங்க பார்க்கலாம்” என்று கூறி அவன் படியேற,
“ரொம்பத்தான் பன்றான்” என்று சிரித்தபடி ரவையை கையில் எடுத்தார் மல்லிகா.
இங்கும் அங்குமாய் நடந்து கொண்டிருந்த அஞ்சலி சூர்யா வரவும் நின்று அவனை முறைத்துப் பார்க்க,
“என்ன எலி உர்ருனு இருக்கு?” என்றான் கருப்பு அங்கியை கட்டிலில் இட்டபடி.
“என் அப்பா காசை நான் செலவு பண்ணினா உனக்கு என்ன கஷ்டம்?” எடுத்ததும் அஞ்சலி கேட்க,
“எனக்கென்ன கஷ்டம்? உன் அப்பாக்கு தான் கஷ்டம்” என்றவன் குளியலறைக்கு சென்று கதவடைத்துக் கொண்டான்.
அவன் திரும்பி வரும் வரையிலும் பொறுமையாய் இருப்பதே பெரும்பாடாய் இருந்தது அஞ்சலிக்கு.
ஒவ்வொரு விஷயத்திற்கும் அவனிடம் தான் நிற்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தவளுக்கு இப்படி பேச கூட காக்க வைக்கின்றானே என்று கோபமாய் வந்தது.
“இங்க பாரு! ரொம்ப பண்ற.. மொத்தமா அனுபவிப்ப.. இந்த அஞ்சலி யாருன்னு தெரியாம என்னை டார்ச்சர் பண்ற.. நல்லா இல்ல” என்றவள் அவன் முன் விரலை நீட்டி எச்சரிப்பதை போல சூர்யா முன் அஞ்சலி நிற்க, நொடியும் யோசிக்காமல் பிடித்து வளைத்து இருந்தான் விரலை.