“அங்கே நடந்த எதுவும் இங்க பேச கூடாது..” என்று காரை விட்டு இறங்கும் முன்பே சூர்யா கூறிவிட,
“என் வீட்டுக்கு வரவே இவ்வளவு கண்டிஷன் போடுறானே!” என நினைத்தவள்,
‘நான் பேசினா தான டா நீ அதிகமா பேசுவ’ என வாய் திறக்காமல் இருக்க,
“அண்ட் மார்னிங் நடந்ததுக்கு சாரி! என்ன இருந்தாலும் நிவி அப்படி உன்னை ஹர்ட் பண்ணி இருக்க கூடாது” என்று சூர்யாவே கூற, விழிகளை பெரிதாய் விரித்தாள் அஞ்சலி.
“இன்னொன்னு கவனிச்சியா! என் தங்கச்சி பேசினது தப்புன்னு மனசுல பட்டதுமே உன்கிட்ட மன்னிப்பு கேட்க வந்துட்டா..” என்று கூற,
“அதானே! இப்ப இதை சொல்லி என்னை மட்டம் தட்டணும் அப்படி தானே?” என்று உடனே அஞ்சலி கேட்டுவிட,
“இல்லவே இல்ல.. நாம பண்ற ஒரு விஷயம் மத்தவங்களை பாதிக்காத வரை தான் நமக்கான பிரீடம் இருக்கு.. லிமிட் தாண்டி மத்தவங்க பாதிக்கப்படுறாங்க அப்படின்னா நாம பண்றது கண்டிப்பா தப்பு தான்.. அதை சொல்றதுக்கு எல்லாம் ஒருத்தர் கூட வரணும்னு அவசியம் இல்ல” என்றான்.
புரிந்தது.. நன்றாய் புரிந்தது அவளுக்கு.. ஆனால் ஜெய் பாதிக்கப்பட்டான் என யோசிக்கும் இவன் ஏன் நான் பாதிக்கப்பட விரும்பவில்லை என புரிந்து கொள்ள மறுக்கிறான் என்று தான் தோன்றியது.
“என்ன! புரிஞ்சதா இல்லையா?” சூர்யா கேட்க,
“ப்ச்! வீடு வந்து அரை மணி நேரம் ஆகுது.. கார் உள்ள இருந்து லாக் பண்ணிட்டு பேசவா இவ்வளவு தூரம் கூட்டிட்டு வந்த? லாக் ரிலீஸ் பண்ணு” என்று சிடுசிடுவென விழுந்தவளுக்கு வேறு வழி தெரியவில்லை அவனிடம் இருந்து தப்பிக்க.
“ஆமா ஏன் கூட்டிட்டு வந்தேன்னு நீ கேட்கவே இல்லையே?” என்றவன் திறப்பேனா என்று அமர்ந்திருந்தான்.
“நீ எதுக்காகவும் வந்துக்கோ! எனக்கு என் அப்பா அம்மாவை பாக்கணும்” என்று கூற,
“கொஞ்சம் கூட பயமே இல்லை டி.. திமிரு.. முழு திமிரு!”
“இப்ப என்ன உனக்கு? என்னை பத்தி வீட்டுல சொல்ல போறியா சொல்லிக்கோ! உன்னை மாதிரி பேமிலிக்காக எல்லாம் எனக்கு நடிக்க தெரியாது.. நான் இப்படி தான்” அஞ்சலி கூற,
“அது தான் தெரியுமே! நாய் வாலை நிமிர்த்தவா முடியும்?” என்றவன்,
“யூ….” என்று அவள் ஆரம்பிக்கவுமே கதவை திறந்து கொண்டு சூர்யா வீட்டிக்குள் நுழைந்துவிட, கைகளை இறுக்கி தன் கோபத்தை அடக்கியவள் எழுந்து தானும் சென்றாள்.
“சூர்யா!” தனியாக வீட்டினுள் நுழையவுமே பார்த்துவிட்ட காஞ்சனாவிற்கு பக்கென்று இருந்தது.
“என்ன சூர்யா தனியா வந்திருக்கிங்க? அஞ்சலி எதுவும் பண்ணிட்டாளா?” என்று பதறி கேட்க,
“ஆண்ட்டி! ஆண்ட்டி! ஏன் இவ்ளோ டென்ஷன் ரிலாக்ஸ்” என்று கூறும் பொழுதே உள்ளே வந்திருந்தாள் அஞ்சலி.
“நீயும் வந்துருக்கியா? பயந்தே போய்ட்டேன் டி!” என்ற காஞ்சனா அப்போது தான் தெளிதவராக,
“உள்ள வாங்க!” என்று அழைக்க,
“உன் அம்மாவாய் எந்த அளவுக்கு நினைக்க வச்சிருக்க பாரு!” என்றான் காஞ்சனா முன் செல்லவும்,
“நான் நின்னா தப்பு.. நடந்தா தப்பு.. உக்காந்தா கூட தப்பு.. எப்படி என்கிட்ட இவ்வளவு குத்தம் கண்டுபிடிக்க முடியுது உன்னால?” கடுப்பாய் அஞ்சலி கேட்க,
“சிம்பிள்! இதுவரை உன்கூட ட்ராவெல் பண்ணின எல்லாரும் நீ பண்றது தான் சரினு உன்னை நம்ப வச்சிருக்காங்க.. நீயும் அதை நம்பியே வளர்ந்திருக்க… அதனால தான் தப்பை ஏத்துக்க முடியல”
பேசுவதற்கெல்லாம் குற்றம் கண்டுபிடிப்பவனை அயர்ந்து போய் அவள் பார்க்க,
“உட்காருங்க சூர்யா! ஒரு நிமிஷம்! காபி கொண்டு வர்றேன்!” என்ற காஞ்சனா உள்ளே செல்லும் முன்,
“ம்மா! அப்பா எங்கே?” என்று கேட்க,
“ரூம்ல தான் டி.. ஏதோ டாக்குமெண்ட் பார்த்துட்டு இருந்தார்.. போய் சூர்யா வந்திருக்கறதை சொல்லி கூட்டிட்டு வா” என்று கூறவும், அஞ்சலி சூர்யாவைப் பார்க்க, அவன் கையில் மேகசினை எடுத்திருந்தான்.
அஞ்சலி பார்க்கவும், “போறதுன்னா போ! என்ன லுக்கு?” என்று கேட்க,
“ஒவ்வொண்ணுக்கும் உன்கிட்ட பெர்மிஸ்ஸன் கேட்க நின்னு நின்னு பழகி தொலஞ்சிடுச்சு” என்றவள் தன் தலையிலேயே அடித்துக் கொண்டு செல்ல, சிரித்தவன் மேகசினை புரட்டினான்.
*****************
நெய் வாசனை தாராளமாய் வீட்டை வலம் வர, காலை எழுந்ததும் அதனை வாசம் பிடித்தபடி சமையலறைக்குள் நுழைந்தாள் ஜனனி.
“ம்மா! என்ன இதெல்லாம்?” அடுக்கி வைத்திருந்த பதார்த்தங்களைப் பார்த்து ஜனனி கேட்க,
“ஜனனி ஸ்பெஷல்! இல்லை ம்மா?” என்றாள் குலாப்ஜாமுன் உருண்டைகளை எண்ணையில் பொரித்துக் கொண்டே பிரியா.
“நீ எப்ப வந்த? மாமா மகி எங்கே?” என்று ஜனனி கேட்க,
“அவருக்கு லீவ்! மகியை அங்கேயே விட்டுட்டு தான் வந்தேன்.. அவ இருந்தா ஒரு வேலை ஓடாது” என்று பிரியா பதில் கூற,
“விடு விடு! எப்பவுமா செய்யுறோம்.. இதெல்லாம் அனுபவிக்கனும் டி.. உன் மாமா என்னை பொண்ணு பார்க்க வரும் போதெல்லாம் இதெல்லாம் கண்ணுல பார்க்கவே இல்லையாக்கும் நான்” என அன்னையை பிரியா கூற,
உனக்கு பொண்ணு பாக்குறது, பூ வைக்குறது, நிச்சயம், கல்யாணம்னு எல்லாம் நிறுத்தி நிதானமா நடந்துச்சு.. அவளுக்கு அப்படியா? பொண்ணு பார்க்க தான் வர்றதா சொன்னாங்க.. இப்போ மாப்பிள்ளை தம்பி நாள் குறிச்சிட்டும் வர சொல்லிட்டாங்களாம்.. அதனால தான்” என்று மீனாட்சி விளக்கம் கொடுக்க,
“ம்மா! எனக்கு தெரியாதா? சும்மா சொன்னா நீங்களும் இவ்வளவு சொல்லுவிங்களா?” என்று கேட்க, ஜெய்யிடம் இருந்து குறுஞ்செய்தி ஜனனிக்கு.
பார்த்தவள் புருவங்கள் முடிச்சிட, உடனே அவனுக்கு அழைத்தபடி அங்கிருந்து தன் அறைக்கு வந்துவிட்டாள்.
“ஹே! என்ன உடனே கால் பண்ணிட்ட?” ஜெய் கேட்க,
“ஏன் மெசேஜ்ல விளையாடலாம் நினைச்சீங்களா? அதென்ன எம்ட்டி மெசேஜ்?” என்று கேட்க, அந்த பக்கம் சத்தம் இல்லாமல் சிரித்தவன்,
“எதாவது அனுப்புன்னு ஹார்ட் சொல்லுது.. என்ன அனுப்புறதுன்னு மைண்ட் கேட்குது.. நான் என்ன பண்றது.. அதான் ரெண்டு பேரையும் மதிக்கணுமேன்னு சும்மா ப்ளாங்கா அனுப்பினேன்” என்றவன் பதிலில் இவளும் எழுந்த மென்னகையை அவனுக்கு காட்டாமல் இருந்தாள்.
“ஓஹ்! அந்த மாதிரி?” என்று கேட்க,
“ஹ்ம்! மேடம் இன்னைக்கு ஆபிஸ் போகல போல?” என்றான்.
“ஆமா! அம்மா போக வேண்டாம் சொல்லிட்டாங்க.. நீங்க எப்ப வருவீங்க?” என்று ஜனனி கேட்க, சிறு அமைதி ஜெய்யிடம்.
“ஹெலோ!” என்று ஜனனி அழைக்க,
“நான் இன்னைக்கு வர்றது கஷ்டம் மா!” என்றான் மென்மையான குரலில்.
“ஓஹ்! கிளினிக் ஓபன் பண்ணனுமா?” அவன் குரல் என்னவோ செய்யவும் கேட்டாள்.
“ம்ம்ஹும்! இல்லை.. அதை அப்புறமா சொல்றேன்.. வீட்டுல எல்லாரும் வருவாங்க.. நாள் குறிக்கட்டும் நாம அப்புறமா மீட் பண்ணலாம்” என்று கூற,
“ம்ம்!” என்றாள்.
“என்ன வாய்ஸ் காணும்?” ஜெய் கேட்க,
“ஒன்னும் இல்லையே! ஒன்னுமே இல்லை.. நான் ஒன்னும் உங்களை தேடவே இல்லை!” என்ற பதிலில் நன்றாகவே சிரித்தான் ஜெய்.
“நானும் கேட்கவே இல்லையே!” என்று கண்டு கொண்டதை ஜெய் கூற,
“ஷ்ஷ்! சேஞ் தி டாபிக்! எங்க இருக்கீங்க? சாப்பிட்டீங்களா?” என்றாள் அவளே மாற்றி.
“ஒரு வழியா எழுந்துட்டேன்.. இனி நீங்க வருவீங்கன்னு அம்மா செஞ்ச ஸ்வீட்டை எல்லாம் நானே காலி பண்ண வேண்டியது தான்”
“அது சரி! சீக்கிரம் எழுந்தாச்சு போல.. நல்லா சாப்பிடு.. சீக்கிரமே மீட் பண்ணலாம்..” என்றவன் வைத்துவிட, மெல்லிய புன்னகையுடன் அந்த நாளை அழகாக்கி இருந்தது ஜனனிக்கு.
******************
“சரி ஆண்ட்டி! அப்போ நாங்க கிளம்புறோம்..” என்று சூர்யா எழுந்து கொள்ள, அஞ்சலியும் உடனே எழுந்து கொண்டாள்.
குணசீலனை அஞ்சலி சென்று பார்த்த பொழுது அவர் வேலையாய் இருக்க, அஞ்சலியும் தான் வந்திருப்பதை மட்டும் கையசைத்து காட்டிவிட்டு வந்துவிட்டாள்.
ஒரு மணி நேரம் சென்ற பிறகே சூர்யா அஞ்சலியை காண கீழே வந்திருந்தார் அவர்.
“வாங்க!” என்று பொதுவாய் அழைத்தவர் முகம் சரி இல்லாமல் இருக்க, சூர்யாவும் தலையசைத்ததோடு சரி. மகளிடமும் அவர் சரிவர பேசாமல் இருக்க அஞ்சலிக்கு தன் வீடே அந்நியமான நிலை.
காஞ்சனாவோடு சூர்யா பேசிக் கொண்டிருந்தாலும் எதற்கு வந்தோம் என்று அவன் கூறாமலே இருக்க என்னவாய் இருக்கும் என்ற சிந்தனை வேறு அவளை இழுத்துக் கொண்டது.
கிளம்பும் நேரமும் வந்துவிட அஞ்சலியும் சூர்யாவோடு எழுந்து கொள்ளவும்,
தங்களை மதித்து நேரில் கூற வந்திருக்கிறார்கள் என்று நினைத்து பெருமைப்பட, குணசீலனுக்கு பெரிதாய் ஒன்றும் இல்லை இதில் என்ற பாவம் அவர் முகத்தில்.
அஞ்சலியும் கூட இதை எதிர்பார்க்கவில்லை. அவனே சொல்லட்டும் என காத்திருந்தவளுக்கு அவன் கூறிய செய்தியில் ஆச்சர்யமாய் தான் பார்த்தாள்.
“அஞ்சலி அப்பாக்கு ஏதோ மூட் சரி இல்லை போல..” என்று அவருக்கு கொட்டு வைக்கவும் தவறவில்லை சூர்யா.
“இல்ல! அதெல்லாம் ஒன்னும் இல்லை சூர்யா.. நீங்க திடிர்னு வரவும்… நான் கொஞ்சம் பிசினஸ்ல ஒரு ப்ரோப்லேம்னு..” என்று அவர் தடுமாற,
“இட்ஸ் ஓகே!” என்று முடித்துக் கொண்டவன் அஞ்சலியிடம் தலையசைக்க, அவள் அன்னையிடமும் தந்தையிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பிவிட்டாள்.
“எனக்கு இப்ப தான் நிம்மதியா இருக்கு.. அப்படியே அப்பாக்கு தப்பாம பொறந்துருக்காளே போற இடத்துல என்ன பண்ண போறாளோனு நினச்சேன்.. சூர்யா மேல நம்பிக்கை வந்துட்டு.. அவங்க பார்த்துப்பாங்க.. பார்த்தீங்க தானே அஞ்சலியை?” என்று கணவனிடம் பெருமைப்பட்ட காஞ்சனா,
“ஆயிரம் வேலை இருந்தாலும் வீட்டுக்கு வந்தவங்களை கவனிக்க முடியாத அதுவும் உங்க செல்ல மகளை கவனிக்க முடியாத அளவுக்கு உங்க பிசினஸ் முக்கியமா போச்சு இல்ல? இதுக்கு தான் இன்னும் முறையா அத்தை மாமான்னு கூப்பிடாம ஆண்ட்டினு தள்ளி நிறுத்தி வச்சிருக்காங்க” என்று தன் ஆதங்கத்தையும் கூட கூறிவிட, குணசீலன் முகம் வேறு யோசனையில் இருப்பதை கண்டு தலையில் அடித்தபடி உள்ளே சென்றார்.