சண்முகத்தின் கட்சிதான் இந்த முறை ஆட்சியைப் பிடிக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்தார்கள்..
நல்லதை செய்ய வேண்டும் என்று நன்மையை விரும்புவர்களுக்கு அதுவே விருப்பமும் ஆகும்..
இறுதியில் ஆளும் கட்சி உறுப்பினர் மூலம் மாணிக்கம் இருக்கும் இடம் தெரிந்து கொண்டு அங்கு சென்று அவனையும் கைது செய்து கதிர் இருந்த சிறையில் அவனையும் அடைத்து விட்டார்கள்..
எலெக்ஷன் முடிவடைந்தபடியால் கந்தசாமி ரிசல்ட் வரும் வரைக்கும் சோழனை சந்திக்க வர வேண்டாம் என்று கூறியிருந்தார்..
சோழனுக்கு மேலும் இந்த ஐந்து நாட்களும் வீட்டிலேயே செல்லம்மாவோடு சண்டை பிடித்து தொட்டதற்கும் அவளை திட்டி அவளுடன் ஏற்பட்ட ஊடலை போக்க கூடலில் ஈடுபட்டு ஐந்து நாட்களும் சொர்க்கமாகவே அவனுக்கு கழிந்தது..
செல்லம்மா தான் அவனது எந்த முகத்தை மற்றும் குணத்தை நம்புவது என்று தெரியாமல் சற்று பதட்டமாகவே இருந்தாள்..
அனைவரும் எதிர்பார்த்தது போன்று எலக்சன் முடிவும் வந்தது.. முடிவு சண்முகத்தின் கட்சிக்கு சார்பாக வந்தது.. அவர்களே எலக்சனில் வெற்றி பெற்றார்கள்..
சண்முகத்திற்கும் அவரது கட்சிக்கும் பிரதமரிடம் இருந்து வாழ்த்தும் பதவிப்பிரமாணத்திற்கான நாளும் அறிவிக்கப்பட்டு அன்று வருமாறு கூறியிருந்தார்..
எலெக்ஷனில் படுதோல்வி அடைந்ததால் ஆளும் கட்சி தலைவர் மற்றும் வெளியே தங்களை தற்காத்துக் கொண்ட ஒரு சில அமைச்சர்கள் என அனைவரும் அன்றே கைது செய்யப்பட்டார்கள்..
ஒருவரை அடிக்க ஒருவர் மற்றொருவரை பற்றி அவர்கள் செய்த அனைத்து ஊழல்களையும் ஒருவர் பின் ஒருவராக கூறினார்கள்..
சொந்த செலவில் சூனியம் வைத்தது போன்று அவர்களை அவர்களுக்கான வாக்குமூலத்தை கொடுத்த படியால் எந்த ஜாமினும் ஏற்கப்படாமல் அனைவரும் சிறைச்சாலைக்கு சென்றார்கள்..
மாணிக்கம் ஆளும் கட்சித் தலைவர் என இன்னும் சில அமைச்சர்கள் சேர்ந்து எப்படியாவது வெளியே வந்து சோழன் கந்தசாமி சண்முகம் மூவரையும் போட்டுத் தள்ள வேண்டும் என்று தீர்மானத்தோடு இருந்தார்கள்..
இப்படி இருக்கும் பொழுது தான் இந்த கலாட்டாக்கள் அனைத்தோடும் மூன்று மாதங்கள் கடந்து முடிந்தது..
சோழன் பதவியேற்க இருக்கும் அன்றில் இருந்து இரண்டு நாளைக்கு முன்பு தான் செல்லம்மாவின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்த சோழன் அவள் குழந்தை குண்டாகி இருப்பதை அறிந்து கொண்டான்..
சமையலறையில் சமைத்துக் கொண்டிருந்தவளுக்கு தாளிப்பு வாசம் ஒத்துக் கொள்ளாமல் குமட்டிக் கொண்டு வந்தது..
சில நாட்களாகவே அவளது முகத்தில் ஏற்பட்ட சோர்வு அவள் எழுந்து கொள்ள அவதிப்படுவது என்று அனைத்தையும் பார்த்து அவனுக்குள் சந்தேகம் இருந்தது இன்று அதை அவன் உறுதி செய்து கொண்டான்..
அவள் வாந்தி எடுப்பதை பார்த்து தண்ணீர் கொடுத்து அவளை கவனித்து விட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான்..
அவனுக்கு ஏற்பட்ட சந்தேகத்தை அவன் கேட்கவில்லை அவளிடம்..
அதிகமாக வீட்டில் இருந்த நாட்களில் அவளோட சண்டை போடுவதும் பின்பு இரவில் அவளோடு கூடுவதும் என்று இருந்ததால் அவனது தீவிர முயற்சிக்கு பலன் கிடைத்துவிட்டது..
பத்து மணிக்கு சென்று பரிசோதித்து பார்த்து கர்ப்பம் உறுதி செய்யப்பட்டது..
அவள் சந்தோசப்படுவதா இல்லை குழந்தையை எவ்வாறு பெற்றெடுத்து வளர்ப்பது என்று கவலைப்படுவதா என்று தெரியாமல் ஒருவித உணர்வோடு இருந்தாள்..
அவளுக்கு குழந்தை வளர்ப்பை பற்றி எதுவும் தெரியாது..
வீட்டில் இரு பெண்கள் இருந்தாலும் அவர்களால் உதவி செய்ய முடியாத நிலைமை..
அதைப்பற்றி மருத்துவரிடம் சில ஆலோசனைகளும் கேட்டுக் கொண்டு இருவரும் வீட்டிற்க்கு வந்தார்கள்..
இது சந்தோஷமான விஷயத்தை கந்தசாமி மற்றும் சண்முகத்திடம் சொல்லி அவர்களின் வாழ்த்தையும் பெற்றுக் கொண்டான்..
வீட்டில் இருந்து மேலும் இரண்டு நாட்களும் அனைத்து வேலைகளும் செய்து அவனே சமைத்து வைத்தான்..
பதவி ஏற்பு நாளுக்கு முதல் நாள் மதிய உணவை வீட்டில் முடித்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டான்..
அன்றுதான் மகேஷை விபத்தில் இருந்து காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்து விட்டு அடுத்த நாள் பதவி பிரமாணத்திற்கு சென்றான்..
அவன் ஒரு வாட் கவுன்சிலராக .. சாதாரண ஒரு சின்ன பதவியை எதிர்பார்த்திருந்தான். ஆனால் எடுத்த உடனே எம் எல் ஏ பதவிக்கு அவனை நியமித்திருந்ததை அதிர்ச்சியுடன் தான் பார்த்துக் கொண்டிருந்தான்..
தொலைக்காட்சியில் இதை பார்த்த பழனிச்சாமிக்கு குற்ற உணர்வாக இருந்தது..
வேண்டாம் என்று ஒதுக்கி விட்டு வந்த மகன் இன்று பெரிய அளவில் வளர்ந்து நிற்பதை பார்க்க பார்க்க அவருக்கு ஓடிச் சென்று தனது மகன் என்று கத்த வேண்டும் போல் இருந்தது..
சோழன் பழனிச்சாமி என்று கொடுக்கவில்லை முழு பெயர்..
சாமி சோழன் என்று கொடுத்திருந்தான்..
பிரதமர் சொல்ல சொல்ல அனைத்து வாக்குறுதிகளையும் திரும்ப அவனும் மைக்கில் மனநிறைவோடு கூறி சத்தியம் செய்து பதவி பிரமாணத்தை ஏற்றுக்கொண்டான்..
அங்கிருந்து மீண்டும் மகேஷ் வீட்டிற்கு வந்து இரண்டு நாட்கள் இருந்து மகேஷிற்கு சிறு சிறு உதவிகள் செய்து உமாவை நன்றாக பார்த்துக் கொண்டு உமாவுக்கு அவனுக்கும் என்ன பிரச்சனை என்று தெரிந்து கொண்டு சித்ரா மற்றும் நிஷாவை சந்தித்து அவனது தங்கைக்கு ஏதேனும் பிரச்சனை கொடுத்தால் அவனது பதவியை வைத்து தொலைத்து கட்டி விடுவேன் இருவரையும் என்றும் மிரட்டி விட்டு பழனிச்சாமியை பார்க்க விருப்பம் இல்லை என்றாலும் கமலாவை பார்க்க வேண்டும் என்பதால் அங்கும் சென்று அவர்களையும் பார்த்துவிட்டு அவர்களுடன் பேசி விட்டு கமலாவின் கையால் ஒருவேளை உணவையும் உண்டு விட்டு அவர்களுக்கு என அவன் வாங்கியவற்றை கொடுத்துவிட்டு பழனிச்சாமிக்கு எதுவும் வாங்காததால் அவரை முறைத்து மட்டும் பார்த்துவிட்டு அங்கிருந்து ஊருக்கு சென்று விட்டான்..
சோழன் பழனிச்சாமியை பார்த்த பார்வையை பழையதை அவன் இன்னும் மறக்கவில்லை என்று தெரிந்து கொண்டார் கமலா..
பழனிச்சாமி கட்டாயம் அவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் ஒரு முறை வள்ளியையும் சந்திக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டார்..
கோவிலூரில் இருந்து பசுஞ்சோலைக்கு வந்த சோழன் அவன் முன்பு செல்லம்மாவிடம் கூறியது போன்று கட்சி ஆபீஸ் அவனது அலுவலகம் என்று பிஸியாகிவிட்டான்..
முன்பு ஆட்சி செய்தவர்கள் விட்ட பிழைகள் அனைத்தையும் சரி செய்வது அவனுக்கு நேரமும் காலமும் போதவில்லை..
செல்லம்மாவும் அவர்களையும் கவனித்துக் கொண்டு வேலையும் செய்து குழந்தை உண்டாகி இருப்பதால் அதிகமாக சோர்ந்து இருந்தாள்..
பள்ளி முடிந்ததும் செல்லமாவின் காவலாளி நிலா செல்லம்மாவை தேடி வந்து விடுவாள்..
கண் முழித்து இருக்கும் நேரங்களில் பாட்டி அவளுடன் பேசி அவரது சந்தோஷத்தை தெரியப்படுத்தி குழந்தையை இவ்வாறு வளர்க்க வேண்டும் இவ்வாறு பெற்றுக்கொள்ள வேண்டும் என்று பயமில்லாமல் இருக்கும் படியும் பல அறிவுரைகளை கூறிக் கொண்டிருப்பார்..
வள்ளியை குழந்தையை பெற்றுக் கொடுத்து தான் ஓரளவிற்கு இந்த நிலையில் இருந்து மாற்ற வேண்டும் என்று செல்லம்மா நினைத்திருந்தாள்..
கமலா மற்றும் உமாவுடன் அவள் அலைபேசியில் பேசிக் கொள்வதால்..
செல்லம்மா குழந்தை உண்டாகி இருப்பதை உமாவிற்கு தெரிவித்தாள்..
அதைக் கேட்டதுமே உமா தனக்கு மருமகன் பிறந்து விட்டான்.. என்று தான் சந்தோஷப்பட்டாள்..
அப்பொழுது இருவரும் பேசிக் கொண்டார்கள் அவர்களது பிள்ளைகள் இருவருக்கும் தான் திருமணம் செய்து வைப்பதாக..
சோழன் எப்பொழுது வீட்டுக்கு வருவான்? எப்பொழுது செல்வான் என்று நேரம் காலமே இல்லாமல் இருந்தான்..
ஆனால் வீட்டுக்கு வந்து விட்டால் அனைத்து வேலைகளையும் ஒதுக்கிவிட்டு அவளை நன்றாகவே கவனித்துக் கொள்வான்..
செல்லம்மா தினமும் வயிற்றில் இருக்கும் குழந்தையுடன் பேசிக் கொள்வாள்.. அதைப் பார்த்து நிலா சிரித்துக் கொண்டிருப்பாள்..
செல்லம்மாவுக்கு தெரியும் தனது ஆசையை குழந்தையின் மேல் திணிப்பது முறையாகாது என்று..
சோழனுக்கு கட்சி ஆபீஸ் வேலைகள் வீடு என்று நாட்கள் சென்றது செல்லம்மாவுக்கு வீட்டில் இருந்த வேலைகள் அவர்களை கவனிப்பது குழந்தையோடு பேசிக் கொண்டிருப்பது என்று அவளது நாட்களும் கழிந்தது..
இங்கு உமா மகேஷ் ஜோடியோ…
தற்பொழுது உமா சொல்வதைக் கேட்டு நடக்கும் நிலைக்கு மகேஷ் வந்துவிட்டான்..
அவன் கால் கை அடிபட்டு இருந்த நேரம் அவள் கவனித்தது. அவள் தவித்த தவிப்பு என அனைத்தையும் பார்த்து அவன் மேல் அவள் வைத்திருக்கும் காதலை உணர்ந்து இருவரும் மனம் விட்டு பேசிக் கொண்டார்கள்..
கணவன் மனைவி செய்ய வேண்டிய முதல் விடயமே அவர்கள் இருவரும் மனம் விட்டு அவர்களது தேவைகள் குற்றங்கள் அனைத்தையும் பேசிக் கொண்டாலே பாதி பிரச்சனைகள் அந்த குடும்பத்தில் தீர்ந்துவிடும்..
அதை இங்கே மகேஷ் நிறைவேற்றி விட்டான்..
நாளும் பார்க்கவில்லை நட்சத்திரமும் பார்க்கவில்லை இருவரும் மனம் ஒருமித்து ஆசையாகவே அவர்களது தாம்பத்தியத்தை ஆரம்பித்து முடித்துக் கொண்டார்கள்..
மகேஷ் அந்த ஐந்து லட்சத்தில் ஏமாந்ததால் இப்பொழுது சற்று கரராகவே பினான்சியல் பிசினஸை செய்து கொண்டிருக்கிறான்..
கோர்ட்டில் மகேஷிற்கு கொடுக்க வேண்டும் என்று கூறிய பணத்தொகையை எடுத்துக்கொண்டு அவன் எங்கு சென்று மறைந்தான் என்று போலீசால் கூட கண்டுபிடிக்க முடியவில்லை..
கஷ்ட காலம் 5 லட்சம் பணத்தோடு சென்றுவிட்டது என்று நினைத்து மகேஷும் அதிலிருந்து மீண்டு வந்து விட்டான்..
அவன் முன்பு சொன்னது போன்று சித்ராவுடன் பேச வில்லை.. ஆனாலும் சித்ராவிற்கு தேவையான பொருட்கள் தேவையான அளவு பணம் என்று கொடுத்து வந்தான்..
அவனை இதுவரையும் அடிபட்டு இருந்த காலத்தில் பார்த்து ஒரு தாயாக எந்த ஒரு கவனிப்பும் அவனுக்கு செய்யாமல் இருந்தாலும் அவன் நன்றாகியதும் அவன் கொடுத்த பணத்தை பல்லை காட்டிக் கொண்டு சித்ரா வாங்கினார்..
உமாவுக்கு செய்வது அனைத்தையும் அவன் தாய்க்கும் அவன் பார்த்து பார்த்து வாங்கி கொடுத்தான்..
இதை பொறுக்க முடியாமல் உமாவே ஒரு நாள் கேட்டுவிட்டாள்..
“ ஏன் அத்தான் எனக்கு பெரிய ஷாம்பு பாட்டில் வாங்கி தரீங்க. அதே அளவு பெருசு உங்க அம்மாவுக்கும் வாங்கி கொடுக்குறீங்க அதை நிஷாவும் பாவித்து சீக்கிரமா உங்க அம்மா முடிச்சுடுறாங்க.. திரும்பவும் வாங்கி கொடுக்கறீங்க அப்ப நிஷாக்கும் தனியவே நீங்க செய்யலாமே ஏன் இப்படி செய்றீங்க.. உங்க அம்மா ஒரு ஆளுக்கு நீங்க வாங்கி கொடுக்குற மாதிரி தெரியலை.. இல்லன்னு சொல்லி அந்த குடும்பத்துக்கு நீங்க செய்ற மாதிரி தான் எனக்கு தெரியுது.. இதைப் நான் பிழை என்று சொல்ல மாட்டேன்.. ஆனா அதிகமா வாங்கி கொடுக்கிறதை நிஷா பாவிச்சிட்டு இன்னமும் அவங்க ஊதாரிய தான் போவாங்க.. ஒரு மாசத்துக்கு உங்க அம்மாவுக்கு மட்டும் தேவையான அளவு பொருட்களை வாங்கி கொடுங்க.. சீக்கிரமே அதை முடிச்சிட்டு அது ஒரு மாதத்துக்கு முன்பே அவங்க வந்து உங்க கிட்ட கேட்ப்பாங்க.. (womanifesting.com) அப்போ தெரிஞ்சிப்பீங்க உங்க அம்மா மட்டும் அதெல்லாம் பாவிக்கிறாங்களா இல்லை நிஷாவும் சேர்ந்து அதெல்லாம் பாவிக்கிறாளா என்று..” கூறினாள்..