3.2- சால்மோனெல்லா
தெரெக்கும் கயலும் நீண்டநாள் பழகிய நண்பர்கள் போலச் சிரித்துப் பேசிக்கொண்டே வந்தது பற்றி ஆச்சரியமே படவில்லை கால்டன்.
தெரெக் கால்டனைப் போல் தனிமை விரும்பி அல்ல. அவர் பெரிய பாசமான குடும்பத்தில் வாழ்பவர். சமூக பழக்கத்தில் கால்டனை விட 100 மடங்கு. கயலும் சுலபமாக அனைவரிடமும் பழகிவிடுவாள் என்பதால் இருவரும் சட்டென்று நண்பர்களாகிவிட்டிருப்பர் எனப் புரிந்துகொண்டார் கால்டன்.
வெல்கம் பேக் என்று தெரெக் சொன்னதற்கு ஒரு முறை முறைத்தார்.
“என்ன குடிக்கற.. சூப்பா.. எல்க் எனக்கு ஒரு கப்..”
“நிச்சியம் தர்றேன், கயல் உனக்கு?”
“கண்டிப்பா எல்க். அப்படியே உங்களுக்கும் ஒன்னு தயார் பண்ணுங்க”
சரியென்று துள்ளிக்குதித்து ஓடினாள் எல்க்.
“ஹோ.. எல்லாரும் செட்டு சேந்துட்டிங்களா?!”
“ஆமா.. 3 நாள் உனக்கு வீட்டுலயே வைத்தியம் பாத்து நாங்க எல்லாம் ரொம்ப டயட் ஆகிட்டோம். இல்ல கயல்…”
“ட்ரீட்மெண்ட் நான் பாத்தேன். நீங்க என்ன பண்ணினீங்க டயட் அகறதுக்கு!!?”
“நீங்க ட்ரீட்மெண்ட் பாத்ததை நான் பாத்துட்டிருந்தேன் ல… அப்பறம் கம்பெனி வேலை எல்லாம் நான் தானே பாத்தேன்!!??”
“ஹா.. சரி தான்..”
இந்த சம்பாஷனைக்கு இடையிலேயே கயல் கால்டனுக்கு ஐவி வழியில் ஒரு மருந்து பாட்டிலை இணைத்து முடித்தாள். பிறகு நண்பர்கள் பேசிக்கொள்ளட்டும் என்று வெளியேறினாள். அவள் மறையும் வரை வழக்கம் போல் கால்டனின் கண்கள் தெரெக் இருப்பதையும் மறந்து கயல் பின்னாலேயே சென்றன. அதைக் கவனித்த தெரெக், கயல் மறைந்ததும்,
“கயல் போயாச்சு, கொஞ்சம் என்னையும் பாக்குறியா?” என்று கிண்டலடித்தார். முறைத்த கால்டன் சூப்பைத் தொடர்ந்தார். பிறகு கேட்டார்.
“என்னாச்சு எனக்கு!?”
“சால்மோனெல்லா-னு ஒரு பாக்டீரியல் இன்ஃபெக்ஷன். ரொம்ப ஸிக் ஆகிட்ட.”
“அப்படியா!!!”
“ஆமா. நியூ யார்க்-ல நீ சாப்பிட்ட சாப்பாட்டுல தான் ஏதோ பிரச்சினை. முறையா சமைக்கப்படாத இறைச்சி சாப்பிட்டதால தான் இந்த இன்ஃபெக்ஷன் ஏற்படுமாம்.”
“எப்படி..??!! நான் நல்ல 5ஸ்டார் ஹோட்டல்-ல தானே தங்கினேன்!!”
“எங்களுக்கும் அதே ஆச்சரியம் தான்.”
“எங்க ஃபேமிலி டாக்டர் தான் கண்டுபிடிச்சாரா?”
“இல்ல இல்ல. அவரு சாதாரண ஜுரமின்னு சொல்லிட்டு போயிட்டாரு. ஆனா நீ தான் ஒரு வேற லெவல் டாக்டரை வீட்டுல வச்சுருக்கியே.. கயல் தான் கண்டுபிடிச்சாங்க..”
“கயலா..”
“ஆமா..”
இதைக்கேட்டதும் காதலில் கால்டனின் முகம் மலர்ந்தது. “சரோகேட் கயல்” என்று தெரெக் நினைவூட்டியதும் மலர்ந்த முகம் வாடியது.
“கெஸ் பண்ணிட்டியா?”
“ஆமா ரொம்ப கஷ்டம் பாரு!! சரி இது விஷயமா நாம அப்பறம் பேசுவோம். நியூ யார்க் புராஜெக்ட் கட்டுமானம் ஆரம்பிச்சாச்சு.”
“எப்படி?? செக் என்கிட்ட இல்ல இருந்துது?”
“கயல் எடுத்து கொடுத்தாங்க”
“கயலுக்கு எப்படி லாக்கர் சேஃப் நம்பர் தெரியும்?”
“ஆக்சுவலி 2 நாள் நீ கம்பனி வரல்ல, கால் அட்டெண்ட் பண்ணல்ல. மறுநாள் செக் ரிலீஸ் பண்ணினாத்தான் ப்ளான் படி கட்டுமானம் தொடங்க முடியும். அதான் நான் உன்னைப் பாக்க இங்க வந்தேன். அப்பத்தான் கயலைப் பாத்தேன். பரஸ்பரம் உதவிக்கிட்டோம். உன்னோட மெடிஸின் அலர்ஜி பத்தி எல்லாம் சொன்னேன். ட்ரீட்மெண்ட்டுக்குத் தேவையான எல்லாம் வரவழைக்க உதவினேன். செக் பத்தி சொன்னேன். அவங்க உன்கிட்ட வந்து கேட்டாங்க. சேஃப் லாக் நம்பரை அவங்க கிட்ட சொன்ன. திறந்து எடுத்துக் கொடுத்தாங்க!”
“நான் சொன்னேனா!!”
“ஆமா. அந்த மயக்கத்துலையும் அவங்களை நம்பி நீ-கால்டன் கூப்பர், சேஃப் லாக் நம்பரைச் சொன்ன. ஆச்சிரியமா இருக்குதுல்ல…!!!???”
“…”
“கம்பெனி சைட் ஒன்னும் பிரச்சினை இல்ல. இன்னும் 2 நாள்-ல உனக்கு உடம்பு சரி ஆகிடுமின்னு கயல் சொன்னாங்க. சோ 2 நாள் அவங்களுக்கு ஒத்துழைச்சு ரெஸ்ட் எடு.” என்று சொல்லி எழுந்து அறை வாயிலருகே சென்று திரும்பி, “ஆனா கயல் விஷத்தைப் பத்தி எனக்கு நிறைய கேள்விகள் இருக்கு. ஒரு நாள் பேசுவோம்” என்று சொல்லி வெளியேறினார்.
அவர் என்னென்ன கேட்பார் என்று நன்றாகத் தெரியும் கால்டனுக்கு. தெரெக், கயல், எல்க் மூவரும் சேர்ந்து கலகலவென சிரிக்கும் சத்தம் கேட்டது வெளியே. சிந்தனையில் ஆழ்ந்தார்.
குறிப்பு: சால்மோனெல்லா நுண்ணுயிரித் தொற்று அமெரிக்காவில் ஓரளவு பரவலாகக் காணப்படும் ஒன்று. பச்சை அல்லது அரைவாசி சமைத்த இறைச்சி உண்ணும் பழக்கமுள்ள நாடுகளில் இது சகஜம். கூகுளில் மேலும் அறிக. இதற்கு ட்ரீட்மெண்ட் சாதாரணம் தான் என்றாலும் சரியான நேரத்தில் மருத்துவம் குறிக்கிடவில்லையென்றால் காவு வாங்க வல்லது.
-வித்யாகுரு