குளிர் 15
இரவில்.. சூர்யதேவ் மாளிகையில் அனைவரும் தேவ்விற்காக காத்திருந்தனர்.. காலையில் அவன் சென்ற பிறகுதான் போட்டோஸ் பற்றி அனைவருக்கும் தெரியவந்தது.. அப்பொழுதே அது என்ன வென்று கேட்க.. சிபி போன் செய்ய முற்படும் பொழுது தயாளன் தடுத்துவிட்டார்..
” போன்ல பேசுற விஷயம் இல்லை.. அவன் வரட்டும்.. ” என்றார்
சூர்யதேவ்வும் வந்துவிட.. தயாளன் ” சூர்யா உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.. டைம் இருக்கா.. இல்லை மீட்டிங் ஏதாவது ” என கேள்வியாய் நிறுத்தினார்..
” இல்லை தாத்தா.. நீங்க சொல்லுங்க.. ” என அவர் எதிரில் அமர்ந்தான்..
” நம்ம ஆலியா வச்சு எடுத்த விளம்பரம் ஹிட்டானதுக்கு சக்ஸஸ் பார்ட்டி நடத்தணுமே.. எப்போ அரேன்ஞ் பண்ணியிருக்க.. ” என அவர் கேட்டதும்.. தேவ்வைத் தவிர அனைவரும் அவரை அதிர்ச்சியாக பார்த்தனர்..
தேவ்விற்கு தயாளனின் எண்ணம் நொடியில் பிடிப்பட்டது.. அதனால் சிறு கேலியான இதழ் வளைவுடன்.. ” ம்ம்ம் ஆமா தாத்தா.. பார்ட்டி கண்டிப்பா கொடுக்கணும்.. அதான் நாளைக்கு ஈவ்னிங் நம்ம ஹோட்டலயே பார்ட்டி ஏற்பாடு பண்ணியிருக்கேன்.. ” என்றான்..
” ஹ்ம்ம் நல்லது.. நாளைக்கு ஆலியாவையும் கூட்டி போறியா.. ” என கேட்டார்..
” என் செல்லம் இல்லாமயா.. இது அவளோட சக்ஸஸ் பார்ட்டி.. கண்டிப்பா அவ இருக்கனும்.. ” என தன் மழலையை நினைத்து சிறு சிரிப்புடன் கூறினான்..
” ஓகே.. ப்பா.. ”
” சரி தாத்தா.. நான் மாடிக்கு போறேன்.. ” என்றவன் தயாளனை ஒருமுறை கூர்மையாக பார்த்துவிட்டு சென்றான்..
சூர்யாவின் தலை மறையும் வரை அமைதியாக இருந்த வசந்தா.. ” அப்பா நீங்க என்ன செய்றீங்க.. சூர்யாவ கூப்பிட்டு கண்டிப்பிங்கன்னு பார்த்தா.. பார்ட்டி ஏற்பாடு பண்ணியாச்சான்னு கேட்குறீங்க.. ” என ஆதங்கமாக கேட்டார்.. மற்றவர்களின் விழிகளிலும் அதே கேள்விதான் இருந்தது..
” வேற என்ன பண்ண சொல்ற வசந்தா.. நீ ஏன் அந்த பொண்ண பார்த்த.. உனக்கும் அவளுக்கும் என்ன தொடர்புன்னு கேட்க சொல்றியா.. அப்படி கேட்டு உன் மருமகன் ஆமான்னு சொல்லிட்டா என்ன பண்றது.. ” என கோபமாக கேட்டார்..
” அதுக்கு இத இப்படியே விட சொல்றிங்களா.. ”
” ப்ச்.. யாரு விட சொன்னா.. இப்போவரைக்கும் சூர்யா இந்த நியூசை ஆதரிச்சும் பேசல.. எதிர்ப்பும் தெரிவிக்கல.. அதுனால அவன்கிட்ட அதைப்பத்தி பேசுனாலோ இல்லை கண்டிச்சாலோ.. சூர்யா நமக்கு எதிரா ஏதாவது செய்ய வாய்ப்பிருக்கு.. அதுனால அவன்கிட்ட யாரும் எதுவும் கேட்க வேண்டாம் ” என கட்டளையாக கூறினார்..
” சரி தாத்தா.. இதுக்கு என்னதான் முடிவு.. எப்படி இந்த பேச்சை தடுக்கிறது.. ” என கேட்டாள் நிஷா..
” ஹும்ம்ம்.. இதவிட பெரிய விஷயம் நடந்தா.. நாளைக்கே இத எல்லாம் மறந்துடுவாங்க.. லோஷினி ஆலியா சூர்யா என மூனு பேரும் ஒன்னா பார்ட்டிக்கு போனாலே இந்த பேச்சு முடிஞ்சுடும்.. அப்புறம் அங்க அவங்க ஒன்னா இருக்கிற போட்டோஸ் அண்ட் வீடியோஸ நெட்ல போட்டா.. கொஞ்சநஞ்ச பேச்சும் முடிவுக்கு வந்துடும்.. ” என்றார்..
” ஆமா.. மாமா சொல்றது சரிதான்.. சூர்யா அவன் மனைவி மகளோட இருக்கிற மாதிரி போட்டோ வெளியானா பாதி பிரச்சனை முடிஞ்ச மாதிரி.. ஆனா அதுக்கு லோஷினியும் கொஞ்சம் ஒத்துழைக்கனும்.. அவ அவன்கிட்ட இப்படி ஒட்டாமையே இருந்தா.. இது மாதிரி நிறைய சந்திக்க வேண்டியது தான்.. வசந்தா.. ” என தன் மருமகளின் மேல் உள்ள அதிருப்தியை நேரம் பார்த்து வெளிப்படுத்தினார்.. மனிஷா..
அதைக்கேட்டு வசந்தா தன் மகளை முறைக்க.. அவள் பாவமாய் விழித்தாள்.. ” அம்மா விடுங்க.. நாமளே சூர்யாகிட்ட ஒரு சின்ன விஷயம் பேசவே அவ்வளவு தயங்குறோம்.. இதுல லோஷனி சின்ன பொண்ணு.. அவளுக்கு பயம் இருக்காதா.. ”
” புருஷன்கிட்ட மனைவிக்கு பயத்தோடு உரிமையும் இருக்கு நிஷா.. கணவன் மனைவி ரெண்டு பேரும்.. தனித்தீவா இருந்தா ஒன்னுமே பண்ணமுடியாது.. சூர்யா குணம் நமக்கு தெரிஞ்சதுதான்.. அதை மாத்த லோஷினி என்ன முயற்சி செஞ்சா.. ரெண்டு பேரும் இன்னும் தனித்தனி ரூம்ல தான் இருக்காங்க.. அவங்க என்னைக்காவது அந்நோனியமா இருந்து நீ பார்த்துருக்கியா.. ஒரு குழந்தை பெத்துட்டா.. எல்லாம் முடிஞ்சுதா.. ஃபிரான்கா சொல்லனும்னா சூர்யா அந்த தேஜஸ்வினிய பார்த்த மாதிரி ஒருநாள் கூட லோஷினிய பார்த்தது கிடையாது.. அவன் பார்வையில அப்படியொரு லவ் தெரிஞ்சது.. ஆசை தெரிஞ்சது.. நானே இது நம்ம சூர்யாதான்னான்னு யோசிக்க ஆரம்பிச்சுட்டேன்.. இதுக்கு மேலயும் இவங்க வாழ்க்கை இப்படியேயிருந்தா.. கூடியசீக்கிரம் சூர்யா அவளவிட்டுட்டு தேஜஸ்வினி பின்னாடி போறது உறுதி.. ” என தன் மகளிடம் உரைத்தார் மனிஷா..
உடனே வசந்தா கோபமும் அழுகையுமாய் தன் தந்தையையும் தமையனையும் பார்த்தார்.. அதில் கோபம் கொண்ட சிபி.. ” மணிஷா.. என்ன பேசுறன்னு தெரிஞ்சுதான் பேசுறியா… லோஷினி நம்ம வீட்டு பொண்ணு.. ” என அதட்டினார்..
” அதுனால தான்.. நான் இதோட இந்த பிரச்சனைய முடிக்க நினைக்குறேன்.. ” என்ற மனிஷா.. லோஷினியையும் வசந்தாவையும் அர்த்தமாய் பார்த்து விட்டுசென்றார்..
இதுவரை நடந்த அனைத்தையும் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த தயாளன்.. ” மருமக சொல்றது எல்லாம் சரிதான் வசந்தா.. இதுக்குமேல எனக்கு என்ன சொல்றதுன்னு தெரில.. லோஷனிக்கு புத்திமதி சொல்லி.. நாளைக்கு நடக்கப்போற பார்ட்டிக்கு தயாராக சொல்லு.. ” என்றுமட்டும் கூறிவிட்டு சென்றார்..
அவரை தொடர்ந்து மற்றவர்களும் செல்ல.. வசந்தா கோபத்தோடு தன் மகளை உறுத்து பார்த்தார்.. லோஷினியின் முகம் பயத்தில் வெளுக்க ஆரம்பித்தது..
வசந்தா எதுவும் கூறாமல் மகளின் கரத்தைப் பிடித்து அவள் அறைக்கு இழுத்து சென்றாள்.. ” இன்னைக்கு உன்னால தாண்டி.. எனக்கு எல்லார் முன்னாடியும் அசிங்கமா போயிடுச்சு.. உன் அத்தைகாரி எப்போ எப்போன்னு காத்திட்டு இருந்திருப்பா போல.. உன்னை வச்சே என்னை பேசிட்டா.. அதுக்கு எங்க அப்பா கூட அமைதியா இருக்கார்.. உனக்கு எத்தனை தடவை சொன்னேன்.. சூர்யா ரூம்க்கு போ அவன் கூட இருன்னு.. கேட்டியா.. ” என வார்த்தைகளை கடித்து துப்பினார்..
” மம்மா.. அவர்தான் என்னை அவரோட ரூம்க்கு வரக்கூடாதுன்னு சொன்னாங்க.. ” என தடுமாறி கூறினாள்..
” அவன் சொன்னா உனக்கு எங்க போச்சு புத்தி.. நீயும் அதுதான் சாக்குன்னு அவனை விட்டு ஒதுங்குறியா ” என கூர்மையாக மகளை பார்க்க.. நடுநடுங்கி விட்டாள் பெண்ணவள்..
” மம்மா அப்படியெல்லாம்.. ஒன்னுமில்ல.. எனக்கு அவர பார்த்து பயமாயிருக்கு.. ரொம்ப முரட்டுதனமா நடந்துக்கரார்.. ” என சூர்யதேவ்வின் பேச்சு மற்றும் நடத்தையை லோஷினி கூற.. வசந்தா தவறாக புரிந்து கொண்டார்..
மகளின் வார்த்தையில் வசந்தாவின் சந்தேகம் விலக.. ” லோஷி செல்லம்.. ஆம்பளைங்க அப்படித்தான் இருப்பாங்க.. நாமதான் பார்த்து நடந்துக்கணும்.. பயத்துல தள்ளியிருந்தா இப்படித்தான் போறவ வறவ எல்லாம் உனக்கு போட்டியா வந்துடுவா.. இனிமேலாவது அம்மா சொல்றபடி நடந்துக்க.. நாளைக்கு நீ மட்டும்தான் சூர்யா கண்ணுக்கு தெரியனும்.. வேற எந்த சிறுக்கியும் தெரியக்கூடாது.. அப்படி உன்னை அம்மா ரெடி பண்றேன்.. ” என தன் மகளை சமாதானப் படுத்தினார்..
லோஷினியும் அடுத்து வசந்தா கூறியதற்கெல்லாம் தலையை ஆட்டி வைத்தாள்.. வசந்தாவும் தன் மகளுக்கு கணவனை எப்படி கைக்குள் வைப்பது பற்றி தீவிரமாக கூற.. அவளும் சிரத்தையாக கேட்டாள்.. இல்லை இல்லை அப்படி நடித்தாள் என்று கூட சொல்லலாம்..
தான் கூறுவது அனைத்தும் நிழலுக்கு இரைத்த நீர் போல என்றும்.. சூர்யாவின் மேல் உள்ள லோஷினியின் பயத்தை அவளைப் படைத்த இறைவனே வந்தாலும் மாற்றமுடியாது என வசந்தாவிற்கு தெரியவில்லை..
★★★★★★★★★★★★★★★★★★★★★★
லோஷனி மற்றும் ஆலியாவுடன் வசந்தா மற்றும் தயாளனும் பார்ட்டிக்கு கிளம்பினர்..
லோஷினி கருப்பு நிற ஸ்டைலிஷ் லெஹங்காவில்.. கழுத்து மற்றும் காதில் பெரிய வைர ஆபரணங்களுமாய்.. ஒன்னரை வயது பிள்ளைக்கு தாய் என்று கூறமுடியாத வகையில் சிறுபெண்ணாய் தெரிந்தாள்.. மகளின் தோற்றத்தை ஒருமுறை சரிபார்த்த வசந்தாவிற்கு அனைத்தும் திருப்தி.. ஆலியாவும் லோஷினியை போல் கருப்பு நிற கவுன் அணிந்திருந்தாள்.. அம்மா மகள் இருவரையும் பார்த்த வசந்தா மற்றும் தயாளனிற்கு பெருமையும்.. கூடவே.. இப்படி அருமை பெருமையாய் ஓர் குடும்பமிருக்க அவன் மனம் வேறொங்கோ அலைபாய்வதை நினைத்து.. சூர்யா மீது சிறு கோபமும் உண்டானது..
தயாளன்.. சூர்யா லோஷினி ஆலியா மூவரும் ஒன்றாக பார்ட்டி நடக்கும் இடத்திற்கு சென்றால் நன்றாக இருக்குமென நினைத்தார்.. ஆனால் சூர்யா வேலை முடித்து.. ஹோட்டலிலேயே தயாராகி விடுவதாக கூறிவிடவும்.. தயாளன் அவர்களை அழைத்துக் கொண்டு தங்களின் ஹோட்டலுக்கு கிளம்பினார்..
சூர்யதேவ் தங்களின் ஆபரணமாளிகை விளம்பரத்தின் சக்ஸஸ் பார்ட்டிக்காக அதில் வேளைப்பார்த்த அனைவரையும் அழைத்திருந்தான்.. ஆஷா தான் தேவ்விற்கு உதவியாக இன்றைய பார்ட்டி முழுவதையும் ஏற்பாடு செய்திருந்தாள்..
விழாவிற்கு ஒவ்வொருவரும் வந்துகொண்டிருக்க.. தயாளன் தன் மகள் மற்றும் பேத்தியுடன் அங்கு வந்தார்.. விளம்பர நிறுவனர் அவரிடம் வந்து பேச.. பெண்கள் மூவரும் சற்று ஒதுங்கினர்.. வசந்தா அங்கு சூர்யா இல்லாததைக் கண்டு.. ” ஆஷா.. சூர்யா எங்க காணும்.. இன்னும் வரலையா.. “
” பையா ரெடியாக போயிருக்காங்க அத்தை.. இப்போ வந்துடுவாங்க.. ” என அத்தையிடம் கூறியவள்.. லோஷினியின் புரம் திரும்பினாள்..
” அட லோஷினி என்னமா கலக்குற.. பாரு எல்லார் கண்ணும் உன்மேல தான் இருக்கு.. ஆனா உன்னைவிட என் ஆலிகுட்டி தான் இன்னைக்கு மெயின்.. அவங்களும் கியூட்டா பிரின்சஸ் போல இருக்காங்களே.. என அவளை அள்ளிகொஞ்சினாள்..”
இவர்களின் பேச்சு நேரத்தில்.. வசந்தாவின் பார்வை அந்த ஹாலை வலம் வந்து கொண்டிருந்தது.. முக்கியமாக அங்குள்ள இளம்பெண்களை நோட்டம்விட்டார்.. ஆனால் அவர் தேடிய நபர் கிடைக்காமல் போகவும்.. ” ஏண்டி அந்த மேனாமினிக்கி என்னமோ ஊர்ல இல்லாத உலக அழகி இன்னும் வரலையா.. ” என நீட்டி முழிக்கி கேட்டார்..
” அத்தை நீங்க தப்பா சொல்றிங்க.. அவங்க பிரபஞ்ச அழகி.. மிஸ் யூனிவர்ஸ் ” என கேலிசிரிப்புடன் கூறினாள்..
அதற்கு அவர் முறைக்கவும்.. ஈஈஈ.. என இளித்தவள் அவங்க இன்னும் வரலை.. என கூறியவள்.. அட நூறாயிசு தேஜஸ்வினிக்கு.. அவங்கள பத்தி பேசுனவுடனே வந்துட்டாங்க.. என ஆஷா கூறவும்.. அசட்டையாய் திரும்பியவர் முகம்.. மின்சாரம் தாக்கியது போல் அதிர்ச்சியாகியது..
அவர் மட்டுமல்லாது அங்குள்ள அனைவரும் சற்று அதிர்ச்சியாகத்தான் வாயிலைப் பார்த்தனர் என்றால்.. லோஷினியோ சிறிது வியப்பாகவும் பொறாமையாகவும் பார்த்தாள்..
உடலை இறுக்கி தழுவிய கருப்பு நிற வெஸ்டர்ன் மாடல் கவுனில்.. வெற்று கழுத்துடன்.. காதில் மட்டும் வைர ஸ்டெட் அணிந்து.. கிறிஸ்டியன் லூபோட்டின் கருப்பு நிறஷூவின் உதவியால் தன் உயரத்தை மேலும் அதிகரித்து.. பளபளப்பான பன்னீர் ரோஜா நிற இதழ்கள் லிப்கிளாஸ் உதவியுடன் மேலும் பளபளக்க.. ரூஜ் போடாமலே சிவந்த கன்னங்களுடன்.. விழிகளில் மின்னொளி தெறிக்க.. தன்னருகில் கருப்பு நிற கோட்சூட்டுடன் நின்றுகொண்டிருந்த சூர்யதேவ்வின் கரம் பிடித்து அவள் நிற்க.. தேவ்வின் விழிகளும் அவளிடம் சிக்கிக் கொண்டது.. இருவரும் ஒருவரையொருவர் மறந்து பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் தான் மற்றவர்கள் அவர்களை கண்டனர்..
விக்ரம்.. தயாளனின் உக்கிரபார்வையில் எச்சில் விழுங்கிக் கொண்டு.. மனமேயில்லாது அந்த காதல் புறாக்களின் மோனநிலையை கலைத்தான்..
பாஸ்.. பெரிய பாஸ்.. உங்களை முறைக்கிறார்.. என பவ்வியமாக அவனிடம் கூறினாலும்.. விழிகள் தெய்வத்தை கண்டது போல் தேஜஸ்வினியையே பார்த்துக் கொண்டிருந்தது..
ஹக்கும்.. ஹ்ம்ம்.. என தன்னிலை வந்தவன்.. ஷெல் வீ என ஒருகரத்தால் அவளின் வெண்டை பிஞ்சு விரல்களை பிடித்தவாறு கேட்க.. அவளும் புன்னகையுடன் அவன் கரத்தை அழுத்தினாள்..
இருவரும் உள்ளே நுழைய.. யார் முதலில் கைத்தட்ட ஆரம்பித்தார்களோ.. அதைப் பிடித்துக்கொண்டு எல்லோரும் கைத்தட்ட ஆரம்பித்தனர்..
தயாளனும் வசந்தாவும் இதனை எல்லாம்.. கையறு நிலையில் கொதிக்கும் மனதுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.. வசந்தாவிற்கு மட்டும் எரிக்கும் சக்தி இருந்திருந்தால் இந்நேரம் தேஜஸ்வினி பஸ்பமாகியிருப்பாள்..
சூர்யதேவ் தேஜஸ்வினி கரம் பிடித்தே உள்ளே அழைத்து வந்தான்.. அவனை கண்டதும் அவன் மகள் துள்ளிக்குதிக்க.. ஆஷாவிடமிருந்து ஆலியாவை வாங்கி தன் தோளில் சாய்த்துக் கொண்டான்.. பிறகு மகள் மற்றும் தேஜஸ்வினியுடனே.. நடுவில் வந்து அனைவருக்கும் வாழ்த்து கூறி.. தன் பேச்சை முடித்தான்.. ஆலியா தேஜுவிடம் தாவ.. அவளும் அவளை ஆசையாக வாங்கிக்கொண்டாள்.. அடுத்து கொண்டாட்டம் ஆரம்பித்தது.. அதன் பிறகு சில விபரீதங்களும் நடக்க ஆரம்பித்தது..