அத்தியாயம் 27
ஆஸ்திரேலியாவின் சிட்னி மாநகரத்திலிருந்து சற்று வெளியே உள்ள எலன்ஸ்பேர்க் இடத்தில் ஸ்ரீ வெங்கடேஷ்வரர் மற்றும் சிவன் கோவில் அமைந்துள்ளது.. ஒரே கோவிலை இரண்டாக பிரிந்து ஒன்றில் ஸ்ரீ வெங்கடேஸ்வரர் ஆண்டாள் மகாலட்சுமியோடு மூலஸ்தானத்தில் கோயில் கொண்டுள்ளார்.. அனுமான், ராமர், நரசிம்மர், கருடர், விஸ்வக்சேனர், சுதர்சனர் ஆகியோர் கோயிலில் அவரவர்க்குரிய இடத்தில் அமர்ந்துள்ளனர்.
மற்றொன்றில் சிவன் மூலஸ்தானத்தில் கோவில் கொண்டுள்ளார்.. கணேசர், சந்திரமௌலீஸ்வரர், திரிபுரசுந்தரி, துர்க்கை அம்மன், தக்சிணாமூர்த்தி, வள்ளி தெய்வானை சமேதரராக சுப்பிரமணியசுவாமி ஆகியோரும் கோயில் கொண்டுள்ளனர்..
ஆருஷ் பிறந்து இன்றோடு ஆறுமாதம் ஆகிவிட்டது.. அதனை கொண்டாடும் பொருட்டு தேவ் தேஜு இருவரும் தன் மக்களோடு இக்கோவிலுக்கு வருகை தந்திருந்தனர்..
குட்டி தேவ் சூர்யதேவ் இருவரும் வேஷ்டி சட்டையில் இருக்க.. ஆலியா பட்டுபாவாடையும் தேஜு புடவையும் அணிந்து இருந்தனர்.. ஒவ்வொரு சந்நிதத்திலும் தேஜஸ்வினி மனமுருகி வேண்டிக்கொண்டிருக்க.. அவளையே மென்சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான்.. சூர்யதேவ்.
கோவிலிருந்து வெளியேறியவுடன் அருகில் உள்ள ஜூவிற்கு சென்றனர்.. அங்கே கங்காரு கோவாலா போன்ற மிருங்கங்களை கண்டு இரு சுட்டிகளும் துள்ளி குதித்தனர்..
அன்றைய பொழுது முழுவதும் வெளியே சுற்றியவர்கள் இரவு போல் இல்லத்திற்கு திரும்பினர்.. பிள்ளைகள் இருவரையும் சுத்தம் செய்து படுக்க வைத்த சிறிது நேரத்திலேயே இருவரும் உறங்கி விட்டார்கள்..
தேஜு இருவரின் தலையையும் தென்றல் போல் மெல்லிதாக வருடிக்கொண்டிருந்தாள்.. இருவரும் அப்படியே சூர்யதேவ்வின் ஜாடை.. புதிதாக யார் பார்த்தாலும் அந்நொடியே கண்டுகொள்வார்கள்.. அக்கா தம்பி என்று.. அவ்வளவு ஒற்றுமை.. அதுவுமில்லாமல் அவர்களிருவரின் பாசபிணைப்பும் சொல்லில் அடங்காது..
இப்போது கூட உறக்கத்திலிருந்தாலும் ஆலியாவின் பிஞ்சு விரல்கள் அவளினும் மெல்லிய தம்பியின் குட்டி விரல்களை தன்னகத்தே பிடித்துகொண்டிருந்தது.. அதனை பெருமையும் பூரிப்புமாய் பார்த்துக் கொண்டிருந்தாள் தேஜஸ்வினி..
மேலும் ஒருமாதம் சென்றுவிட்டது.. சூர்யதேவ் சில மாதங்களால் பிஸ்னஸ் பக்கமே செல்லாததால் நிறைய வேலைகள் குமிந்திருந்தது.. தேஜுவிற்கும் இப்பொழுது உடல்நிலை சரியாகிவிட்டதால் வீட்டையும் பிள்ளைகளையும் தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டாள்..
ஆலியா பிரச்சனையில்லை.. அவள் சமத்து சக்கரக்கட்டியாக தாய் சொல் கேட்டு நடந்தாள்.. ஆனால் குட்டிதேவ்தான் இப்பொழுது ஓரிடத்தில் இருப்பதில்லை.. (Valium) வேக வேகமாக தவழ ஆரம்பித்தான்.. துணிகளை கலைப்பது.. உணவு உண்ண மறுப்பது.. குளிக்க என எல்லாவற்றிற்க்கும் தேஜுவை போட்டு படுத்திவிட்டான்..
அவனுக்கு தனக்குறியதை தந்தைதான் செய்ய வேண்டும்.. அதனால் தன் விருப்பமின்மையை இப்படியெல்லாம் காண்பிக்கிறான்..
ப்ச் எங்க பப்புக்குட்டி சமத்து செல்லம் தான.. அம்மாவ இப்படி ஓடவைக்கலாமா இன்னும் ஒரு வாய் வாங்குடா.. என்ற தேஜுவின் சொல்லை பொருட்படுத்தாது வேகவேகமாய் தந்தை அறை நோக்கி தவிழ்ந்து கொண்டிருந்தான்..
ப்ச்.. பப்பு பப்பா வேலையா இருப்பாங்கடா தங்கம்.. என அவனை வேகமாய் தூக்கவும்.. குட்டி தேவ் கோபம் கொண்டு தன் தொண்டையை தொறக்க ஆரம்பித்தான்..
அச்சோ.. ஏண்டா இப்படி படுத்தி எடுக்குற.. ங்காக்கு மட்டும் நான் வேணும்.. மத்தெல்லாம் உங்கப்பா தான் செய்யணுமோ என அவனை மிரட்டி அரட்டி பாதி சாப்பாடுதான் ஊட்ட முடிந்தது.. அதற்கே தேஜு ஒருவழியாகிவிட்டாள்..
பிறகு அவன் உடம்பு துடைத்து வேறு உடை மாற்றி மெத்தையில் போட்டவுடன்.. மகனிற்கு பால் தேவைப்பட்டது.. அதனால் குட்டி தேவ் பூனைக்குட்டியாய் தாயை உரச.. தேஜுவிற்கு சிரிப்பு வந்தாலும் அதனை மறைத்து பொய்க்கோபம் கொண்டாள்..
ஓய் போடா.. உனக்கு உங்கப்பாதான எல்லாத்துக்கும் வேணும்.. இதுக்கும் உங்க அப்பாக்கிட்ட போ.. என அவனை தள்ளி அமர்த்திவிட்டு.. உறங்கும் ஆலியாவை நெருங்கி மறுபக்கம் படுத்துக்கொண்டாள்..
மா.. மா.. என அவள் மேல் அவன் விழுந்தும் அவள் கண்டுகொள்ளாமல் இருக்க.. குட்டி இதழ்கள் பிதுங்கும் வேளை அங்கு வந்த தேவ்.. அச்சோ என்னாச்சு என் லிட்டில் சேம்ப்க்கு.. என அவனை தூக்கிக்கொண்டான்..
குட்டிதேவ் சலுகையாய் தேவ் தோளில் சாய்ந்து.. தன் மழலையில் ப்ப மா ங்க என விரல் நீட்டி குற்றம் சொன்னான்.. அதில் பொய்கோபம் கொண்ட தேவ்.. நடப்பதையெல்லாம் கண்மூடி கேட்டுகொண்டிருந்தவளின் பின்புறத்தில் ஓங்கி ஓர் அறைவைத்தான்..
ஆஆ.. தேவ்.. வலியில் முகம்சுருக்கி அவள் அவனை நோக்க அவனோ குறுஞ்சிரிப்புடன் நின்றுகொண்டிருந்தான்..
என்னோட லிட்டில் சேம்ப்ப ஏண்டி ஏங்கவைக்குற.. பாரு பிள்ளை பாவமா இருக்கான்..
யாரு இவனா பாவம்.. சார் என்னெல்லாம் பண்ணார் தெரியுமா.. என இவன் இன்று செய்த சேட்டைகளெல்லாம் கூற.. தேவ்விற்கு சிரிப்பு வந்தது..
ஏண்டா பிராடுகுட்டி என்கிட்ட அவ்வளோ சேட்டை பண்ணிட்டு இப்போ ஒன்னுமே செய்யாத பச்சைபிள்ளை மாறி இருக்க.. பன்னிக்குட்டி..
ஹேய்.. என்னடி.. அவன் பச்சை பிள்ளைதான்.. சாப்பாடும் சரியா சாப்பிடலை.. பசிக்க போகுது.. கொடு.. எனவும்.. குட்டிதேவ்வும் இதழ் பிதுக்கி பாவமாய் தாயிடம் தாவினான்..
பசிக்குதா என் செல்லத்துக்கு.. என அவன் முகம் உரசி ஆழ்ந்த முத்தமிட்டு.. படுத்தவாறு பால் கொடுக்க.. குட்டிதேவ் வேகவேகமாக உறிஞ்சிக்கொண்டான்..
தேவ் கிட்சன் சென்று அவன் சாப்பிட்டுவிட்டு.. தேஜுவிற்கு குடிக்க பால் கொண்டு வந்தான்.. அதற்குள் குட்டிதேவ் பால் குடித்தவாறு உறங்கியிருந்தான்..
இளஞ்சூடாக அவள் குடிக்கும் பதத்தில் பால் இருக்க.. தன்னவனின் கவனிப்பை ரசித்தவாரு பார்வையோடு அவனையும் சேர்த்து பருகினாள்..
பிள்ளைபேற்றால் உடல்எடை கூடி.. ஒட்டிய கன்னங்கள் சற்று உப்பலாய் பூரித்து.. அங்கங்கள் கனிந்து.. தாய்மையில் பூரித்துக்கிடந்த தன்னவளின் மதி முகத்தை இமைக்க மறந்து பார்த்தான்.. சூர்யதேவ் சக்கரவர்த்தி..
மெல்ல அவள் பின் சென்று அமர்ந்தவன்.. தேஜுவின் இடையை பற்றி தன்னோடு இருக்கிக் கொண்டு.. அவளின் மெத்தென்ற கழுத்தில் தன் முகத்தை புதைத்து.. அவளின் சுகந்தத்தை ஆழ்ந்து சுவாசித்தான்..
மெல்லிய புன்னகையோடு தேஜு தன்னவனை நோக்கி திரும்பினாள்..
விழிகள் கலந்து மொழிகள் மறந்து இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டிருந்தனர்..
என்னாச்சு.. ரொம்ப அமைதியா இருக்கீங்க.. என முதலில் தன் மோன நிலையை கலைத்து.. அவன் தாடியின் ரோமங்களில் விரல் கொண்டு நீவினாள்..
நீ சந்தோஷமா இருக்கியா ஹனிபீ.. என அவள் விழிகளை ஆழ்ந்து பார்த்தவாறு கேட்டான்..
ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.. என்றாள் இதழில் உறைந்த புன்னகையுடன்..
உன்னோட பேஷன்.. நடிப்பு பேமிலி இதையெல்லாம் நீ மிஸ் பண்ணலையா..?
எதுக்கு இப்போ இதெல்லாம் கேட்குறீங்க தேவ்..
………
ப்ச் என்னோட கெரியர விட.. நீங்கதான் எனக்கு முக்கியம்.. பிலீம் இண்டஸ்ட்ரிஸ்ல நான் நிறையா சாதிச்சுட்டேன் தேவ்.. அது எனக்கு போதும்.. எப்போ நம்ம மேரேஜ் நடந்துச்சோ அப்போவே நான் இனி எந்த படத்துலயும் நடிக்கிறதில்லைன்னு முடிவு பண்ணிட்டேன்.. உங்ககிட்டயும் ஆருஷ் ஆலியாகிட்டயும் தான் என்னோட முழு சந்தோஷமே இருக்கு.. என தன்னவன் அமைதி பொருக்காது வேக வேகமாக கூறினாள்..
அதில் அதுவரை அவன் கொண்டிருந்த மனகிலேசம் மறைந்து தன்னவளை இறுக்கியணைக்க.. அவளும் அவன் வேகத்திற்கு குறையாது ஈடுக்கொடுத்தாள்..
பின் அவள் தாமரை மடல் செவியில் அவன் மென்மையாய் குட்டி குட்டி முத்தம் வைக்க.. அதில் கூசிச்சிலிர்த்து கொண்டிருந்தாள் பெண்ணவள்..
மெல்ல தேஜுவின் விரல் அவன் தாடியினோடு இதழ்களை வருடி.. அவர்கள் அடுத்த கட்டத்திற்கு செல்லும் நேரம் குட்டி தேவ் சிணுங்கி அதற்கு தடை விதித்தான்..
பார்த்தீங்களா.. தூக்கத்துல கூட.. என்னை உங்கிட்ட நெருங்க விடமாட்டேங்கிறான்.. என புலம்பியவாறு அவன் புறம் திரும்பி அவனுக்கு பால் கொடுத்தவாறு தட்டிக்கொடுக்க.. குட்டிதேவ் அவளின் மார்பினில் புகம் புதைத்து தூங்க.. பெரிய தேவ் அவள் கழுத்தினுள் முகம் புதைத்து பின்புறம் அனைத்தவறு தூங்கினான்..
தேஜு இதழ் நிறைந்த புன்னகையுடன்.. தன் மக்களின் மேல் ஓர் கரத்தையும் தன்னவனின் மேல் ஓர் கரத்தையும் கொண்டு அவர்களை அணைத்தவாறு உறங்கினாள்..
நாளை அவர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி தெரியாது.. தேவ் தேஜு இருவரும் நிம்மதியாக உறங்கினர்.. நிம்மதியான உறக்கம் இனி இருவரின் வாழ்வினில் இல்லை என அவர்களுக்கு யார் சொல்வது..?
தேவ் என்னதான் அனைத்தையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும்.. விதியெனும் சதிகாரனை அவனால் கட்டுப்படுத்த இயலுமா என்ன..?
★★★★★★★★★★★★★★★★★★★★
தேவ் நாங்களும் உங்க கூட வரோம்.. ப்ளீஸ்.. என முகத்தை சுருக்கினாள்.. தேஜஸ்வினி..
இன்று சிட்னியில் உள்ள அலுவலகத்தில் சூர்யதேவ்விற்கு முக்கியமான மீட்டிங்.. அது இரு நாட்கள் பின் வரவேண்டியது விதியின் விளையாட்டில் முன் வந்துவிட்டது.. அதற்குத்தான் தங்களையும் அழைத்துச்செல்ல சொல்லி தேஜு கெஞ்சிகொண்டிருந்தாள்..
நோ.. ஹனிபீ நேத்து முழுக்க வெளிலதான் இருந்தோம்.. உன் பேஸ் ரொம்ப டல்லாயிருக்கு.. சோ பேசாம ரெஸ்ட் எடு.. நான் ஈவ்னிங் வந்துடுவேன்.. என கோட் போட்டவாறு அவள் கன்னம் தட்ட.. அவள் நாசியைச்சுருக்கி அளவம் காட்டினாள்..
அவனோடு அவள் சென்றிருந்தால் அடுத்து நடக்கவிருக்கும் சம்பவத்தை தடுத்திருக்கலாம்.. அதனால் அவர்களுக்கிடையே ஏற்படும் பிரிவையும் தடுத்திருக்கலாம்.. ஆனால் விதி அங்கு தன் சதியை சரியாக செய்து.. பின்னாளில் இதை நினைத்து தேவ் உயிர்வலியை அனுபவிக்கும்படியும் செய்தது..
தேவ் மூவருக்கும் முத்தமிட்டு காரில் ஏற.. தேஜு ஆலியா ஆருஷ் மூவரும் சிரித்த முகத்துடன் அவனை வழியனுப்பினர்.. இதுதான் கடைசி சந்தோஷம் என அறியாத தேவ் அவர்களை பார்த்தவாறு அங்கிருந்து சென்றான்..
ஒருவேளை அவன் திரும்பி வரும்பொழுது இந்த மகிழ்ச்சி இருக்காதென்றும்.. மதியையொத்த தன்னவளின் தாமரை முகம் ஒளியிழந்து வெறுமையாக இருக்கும் என அறிந்திருந்தால் சென்றிறுக்கமாட்டானோ..? இல்லை.. இந்நொடியை தன் மணப்பெட்டகத்தில் சேகரித்திருப்பானோ..? யார் அறிவார்..?