“எல்லாம் உன்னால தான் டி.. நான் தான் இன்னைக்கு உனக்கு புடவை தேர்வு செய்வேன்னு சொல்லி, அரைமணி நேரம் கடத்திருக்க.. அதனால் தான் இப்போ பறக்குறேன் போதுமா?.. சாயந்தரம் வீட்டுக்கு வந்துட்டு தான் போக போறோம்.. நீ காலைலயே அலப்பறை பண்ணுற..”
“அப்படி தான் டி பண்ணுவேன்.. முதல் முறையா உன்னவரை சந்திக்க போற நாள், கொஞ்சம் சிறப்பா போக வேணாமா.. அதுக்காகத் தான் எல்லாம்..”
“நீயே டிசைடு பண்ணிட்டியா..?.. இவங்கன்னு..?
“ஆமாடி.. அந்த அண்ணாவே கால் பண்ணிலாம் பேசிருக்காங்க வேற.. நேர்ல கூட பார்த்து பேசலாம்னு.. நீயும் உனக்கு மாப்பிள்ளை பாக்குறோம்னு உங்க வீட்ல சொன்ன போது, பையன் கிட்ட பேசிட்டு தான சொல்லுவேன்னு சொன்ன.. அந்த அண்ணனும் அதுவே சொல்லிருங்க பாரு.. சோ, மேட்சிங் மேட்சிங்.. அதான்..”
“நான் பேசணும்னு தான் சொன்னேன்.. இப்படி நேர்லன்னுலாம் சொல்லலையே..”
உள்ளே இருந்து இரண்டு அடுக்கு மல்லி பூவை கொண்டு வந்து குடுத்து, “நீங்க கீர்த்தி பிறந்தநாளுக்கு பரிசுக்கு கொடுத்தீங்கள்ள அந்த செடில வந்த மல்லி தான்.. வச்சிக்கோங்க..”
அவந்தி, “வாவ்.. பூ பூத்திருச்சா.. கீர்த்திக்கு முதல்ல வச்சி விடுங்க..”
அவளுக்கு இருக்கு அவந்தி.. மொத்தம் அஞ்சு பூ பூத்திச்சி..”
“அப்போ சரி.. தாங்க க்கா..நன்றிகள் பல” என்று வாங்கி கொண்டாள் தர்ஷி..
“சரிக்கா.. வரோம்..”
“அவள் வண்டியில் அமர்ந்து தலைக்கவசத்தை மாட்டப் போக, “இருடி இதை நீ வச்சிக்கோ..”
“அப்படியே வை தர்ஷி..”
“நோ நோ.. நீ தான் வைக்கணும்..”
“இது என்னடி புதுசா உளறுற..”
“வைடி சொல்லுறேன்..” இந்தா பின், என்று தன கைப்பையிலிருந்து எடுத்து தர,
அவந்தி அதை தலையில் வைக்க, “மன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன்…” என்று பாட,
“தர்ஷி… ப்ளீஸ்..”
“இதுலாம் பின்னாடி இனிமையான நினைவுகளா மாறும் அவந்தி..”
“நீ ஆர்வம் இல்லாமலும் இல்லை.. எதோ கொஞ்சம் தடுமாற்றம் தெரியுது உங்கிட்ட.. அதுனால உன்னைய இதோட விடுறேன்..”
அவந்தி அமைதியாக இருக்க,
“ஹேய்.. இதுலாம் அப்படி தான் இருக்கும்.. என்ஜோய் தி மொமெண்ட்.. ஒகே அவந்தி.. ஈவினிங் சீக்கரம் வா.. பை..”
“ஓகே.. பை..”
– – – –
வேலன் தன் மச்சானிற்கு தொலைபேசியில் அழைத்து, அவர் எடுக்க காத்திருக்க, அவர் எடுத்தவுடன் மச்சான்.. “என்ன பண்றீங்க?.. காலை சாப்பாடுலாம் ஆச்சுதுங்களா” என்று வினவ,
“சொல்லுங்க மாப்பிளை.. இப்போ தான் முடிஞ்சிதுங்க.. நீங்க..?”
“சரிங்க மச்சான்.. என்று அழைப்பை அணைத்து விட்டு தன் வேலையை தொடர்ந்தார்..
இங்கு தன் தொலைபேசியையே சிறிது நேரம் பார்த்தபடி இருந்தார் வீரபாண்டியன்.
கோமதி, “காபி இந்தாங்க..”
“உன்கிட்ட காபி எப்பக் கேட்டேன்.. ஆடி அசைஞ்சி எடுத்துட்டு வர..”
“கொஞ்ச முன்னதான கேட்டீங்க..”
“என்ன.. எது பேசுனாலும் நீயும் பதில் பேசிட்டே இருக்க.. உன் பையன் சொல்லிகுடுத்துட்டு போனானா..”
கோமதி மௌனம் காக்க,
“கேட்டுட்டு இருக்கேன்.. இப்ப பதில் வரமாட்டேங்குது..”
அவர் அப்போதும் எதுவும் கூறாமல் இருக்க,
“வாயத் தொறந்துராத.. அப்படியே நில்லு ஊமை கொட்டனாட்டம்.. இந்தா காபி ஆறிடுச்சி.. போயிட்டு வேற எடுத்து வா.. இதுக்கும் தேரு இழுக்கரப் போல மெதுவா எடுத்து வராத…” என்று கத்திவிட்டு கூடத்தில் உள்ள இருக்கையில் அமர்த்தார்.
– – – –
சமயலறையில் கோமதி.. அதே காபியை சூடு பண்ண,
காவியா, “அத்தை பால் சூடாத் தான் இருக்கு.. ஏன் அந்த காபியையே சூடு பண்றீங்க..”
“எல்லாம் இது போதும்.. என்னை கத்தும் போது காபி சூடா தான இருந்துச்சி.. கத்தி முடிச்சதும் ஆறிடுச்சின்னா.. அதுக்கு நான் என்ன பண்றது.. அப்போ குடிக்காம விட்டது யாரு தப்பு..”
“அத்த்த்த்தை..”
“ரொம்ப இழுக்காதடியம்மா.. இது தான் அதுக்கு தண்டனை..” என்று கூறிவிட்டு எடுத்து சென்றார்..
அவரை முறைத்துக் கொண்டே குடித்து விட்டு, எழுந்து தனது வேலையை பார்க்க வெளியே சென்றார்.
கோமதி சென்று டைன்னிங் டேபிளில் அமர, அவருக்கும் தனக்கும் டீயை எடுத்துக் கொண்டு வந்தாள், காவியா.
“அத்தை.. மாமா என்ன ரெண்டு நாளா கடுகடுனே இருக்கார்..”
“அவங்க தங்கச்சி வீட்டுக்கு போயிட்டு வந்ததுல இருந்து இப்படி தான் இருக்கார். அந்த மகராசி என்ன சொல்லி வச்சான்னு தெரில.”
“ஆமா அத்தை.. நீங்க சரியாய் சொல்றிங்க.”
“என்ன பூகம்பம் வர போகுதுனு தெரியல.. இருந்தித்திருந்து இப்போதான் நல்லவனுக்கு ஒரு வரன் தழைஞ்சி வருது.. ரெண்டு பெரும் எதுவும் சொல்லாம ஒத்துருக்காங்க. இது முடிஞ்சிடும்னு நான் வேண்டிக்கிட்டு கிடக்குறேன்.. அந்த ஆத்தா நான் மனசு வைக்கணும்.”
“எல்லாம் நல்லதா தான் அத்தை இருக்கும்.. கவலைப் படாதீங்க..”
“இந்தா மனுஷன் அவரு தங்கச்சி வீட்ல என்ன நடந்துச்சின்னு ஒன்னும் சொல்லலையே.. இவரும் அமுக்கமா இருக்காரு.. அது தான் பயமா இருக்கு..”
“விடுங்கத்தை.. நந்தா தம்பிக்கு அந்த பொண்ணை பிடிச்சிருக்கு.. அதுனால என்னவா இருந்தாலும் அவங்க சரி பண்ணிடுவாங்க.”
“நீ சொல்லுறதும் சரி தான் காவியா..என்ன நடந்தாலும் அவன் பாத்துக்குவான்.”
“அப்பறம் என்ன அத்தை.. கவலலையை விடுங்க.”
– – – –
“யோவ்.. நல்லா கொட்டிகிட்டல்ல.. பின்னாடி பம்படி பாசியா இருக்கு.. போய் சுத்தம் பண்ணு. நல்லா தின்னுட்டு தின்னுட்டு உக்காந்திருக்க வேண்டியது எப்போதும்” என்று தன் கணவனை வேலைச் செய்ய ஏவினார், அவ்வீட்டின் அரசி கலையரசி.
அவர்கள் வசிப்பது பழமையான முற்றம் வைத்த ஓட்டு வீடு. அவரின் தந்தையின் காலத்தில் கட்டியது. வீட்டின் உள்ளே குளிக்க, வாஷ்ரூம் போக என்று வசதிகள் இல்லை. மற்றபடி இரண்டு அறைகள், கூடம், சமையலறை கொண்ட நல்லா வீடு தான்.
“ஒன்றும் பதில் பேசாமல் மனைவி சொன்னதை செயலாற்ற சென்றார் மெய்யப்பன்.
மெய்யப்பன்.. பெயரை போலவே அனைவரிடத்திலும் உண்மையாக இருப்பார். அரசுத் தொடக்கப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணிபுரிகிறார்.
கலையரசிக்கு மாப்பிளை எதுவும் சரியாக அமையாமல் போக, வீரபாண்டியன் சலித்து போய் ஜாதகம் பாராமல் திருமணத்தை முடிக்கலாம் என நினைத்த சமயம், இறுதியாக வந்த சுமாராக பொருந்திய ஜாதகம் தான் மெய்யப்பனுடையது. அவர் அரசு வேலையில் பணிபுரிவது வீரபாண்டியனுக்கு திருப்பியாக இருக்க, புவனாவை விட ஐந்து பவுன் நகை அதிகமாகவே போட்டு நன்றாகவே கல்யாணம் நடத்தி வைத்தார்.
ஆனால் கலையரசிக்கு தனக்கு வரப் போற மாப்பிள்ளை மிராசுதாராக இருக்கவேண்டும் என்பது அண்ணன் மற்றும் அக்கா கணவர் அவர்களைக்கொண்டு வந்த எண்ணம். அண்ணன் மெய்யப்பனை பார்த்தது அவருக்கு பிடிக்காமல் போக, தன் அண்ணனிடம் வேண்டாம் என்றுச் சொல்ல, அவர் ஜாதகத்தை வைத்து கூறி சம்மதிக்க வைத்தார். வேறு வழியில்லாமல் திருமணம் செய்துக் கொண்டு, அவரின் கோவத்திற்கு எல்லாம் வடிகாலாய் மாறினார்கள் மெய்யப்பனும் அவரின் தயார் கன்னியம்மாளும்.
முதலில் பொறுமையாக எடுத்து கூறிய மெய்யப்பன், அவரிடத்தில் மாற்றம் வருமென்று எதிர் பார்க்க, அதற்க்கு நேர்மாறாக கலையரசி தினமும் மெய்யப்பனை தன் அண்ணணனை ஒப்பிட்டு இவரின் வேலையை இழ்ச்சியாக பேச, பின்பு அவரிடத்தில் பேசுவதையே விட்டுவிட்டார்.
இவரின் பேச்சை காதுகொடுத்து கேட்க முடியாமல், தன் மகன் இவளிடம் படும் பாட்டை பார்க்க முடியாமல் தூக்கத்திலே உயிர் பிரிந்தார் கன்னியம்மாள்.
“என்னையா சுத்தம் பண்ணிட்டியா?..” என்று பின் பக்கத்திலிருந்து வீட்டில் நுழையும் கணவனைப் பார்த்துக் கேட்க, “முடிஞ்சது என்பதாக தலையை ஆட்டினார்.”
“ஒரு வீடு கூட கட்ட துப்பில்லை.. உனக்கெல்லாம் பொண்டாட்டி, குழந்தக் குட்டி ஒரு கேடு..” என்று தன் புராணத்தை தொடங்கினார்.
மெய்யப்பன், ஒன்றும் கூறாமல் வேலைக்கு புறப்பட,
கலையரசி, “பெரிய அமைச்சர் உத்தியோகம், போறதப் பாரு.. என் அண்ணன் வீட்ல மட்டும் என் பொண்ணை கட்டிகுடுத்திட்டு அப்பறம் பேசிக்குறேன் உன்னையெல்லாம்.. அதுக்கு தான் என் அண்ணன் வந்தப்ப நல்லா பேசிவிட்ருக்கேன்..”
மெய்யப்பன் இதை கேட்டுக்கொண்டே வெளியே சென்று, “வானத்தை பார்த்து ஆண்டவா, இவ நினைக்கிறதை மட்டும் கண்டிப்பா பண்ணிக் குடுத்துடாத.. அவரால் முடிந்தது அது மட்டும் தான்.”
“சரி டா.. நீ பேசப்போறது, எனக்கு கொஞ்சம் படபடன்னு இருக்கு.. உங்க வீட்ல வேற சொல்லக் கூடாதுனு வேற சொல்லிட்டியா.. உங்க அப்பா வேற நான் காலைல பேசும் போதே வார்த்தைக்கு வார்த்தை இடைவேளை விட்டு பேசுனரா.. அது தான் யோசனை.. வேற ஒன்னும் இல்ல..”
“அவருகிட்ட பேசுனதை தான் சொல்லிட்டீங்களே மாமா.. அவரு தங்கச்சி இல்லாதது என்னைத்தயாவது பேசி வச்சிருக்கும்.. அதை விடுங்க நீங்க.. என்ன நடந்தாலும் பாத்துக்கலாம்..வேறப் பேசுங்க… நீங்க பார்த்த பொண்ணுதான் அவந்திகா… அதை நல்லா ஞாபகம் வச்சிக்கோங்க… இப்பவும், எப்பவும்…”
“சரி.. சரிடா.. மாப்பிள்ளை..”
“அப்பறம் எங்க வீட்டுல மட்டும் இந்த சந்திப்பை சொன்னிங்கனு வச்சிக்கோங்க.. முக்கியமா! எங்க அப்பா ஆட்டம் ஆடத் தெரியலானாலும், இதுக்கு நல்லா ஆடுவர்.. அதுக்கு தான் வேணாம்னு சொல்லுறேன்..”
“நல்லா புரிஞ்சி வச்சிருக்கடா நீ..”
“சரி சரி.. நான் தான் பொண்ணை பாக்க போறேன்னு, படபடன்னு இருக்கணும்.. அதுனால நீங்க இப்ப போனை வைங்க..” என்று கட் பண்ணினான்.
இவன் உரையாடுவதை வாயை பிளந்து பார்த்துக் கொண்டிருந்த அரவிந்த், இவன் அழைப்பை கட் செய்தவுடன், “மனுசனாடா நீ.. ஒரு வார்த்தை சொன்னியாடா தடிப்பயலே.. நீ இப்போ போன் பேசுறதை வச்சி நானே கண்டுபிடிச்சிருக்கேன்.. இல்லனா என்ன ஆகியிருக்கும்?..”
“என்ன ஆகியிருக்கும்.. உனக்கு தெரிஞ்சிருக்காது.. நீயும் டியூட்டி முடிஞ்சி கிளம்பிருப்ப..” என்று அவன் அறையை விட்டு வெளியேற,
அரவிந்தும் அவனுடன் நடந்துக்க கொண்டே, “என்னோட தப்பு தான்.. உன்கிட்ட கேட்டது.. சரி வா போலாம்.. நான் நவீன் கிட்ட போயிட்டு வந்து சொல்லிக்கறேன்..”
“இப்போ நீ எங்க வர..”
“வேற எங்க.. அந்த பொண்ணை பாக்க தான்.. உன்னைய பத்தி நல்லா விதமா நான் சொல்ல வேணாம்..” என்றான் வாயெல்லாம் சிரிப்புடன்.
“நீ சொல்ல வேணாம்..” என்று வண்டியை கிளப்ப,
‘டேய் டேய்..’ என்று ஓடி அவனின் வண்டியில் தாவி அமர்ந்துகொண்டான். நீ எங்க போனாலும் நானும் வந்தே தீருவேன்.. அந்த பொண்ணுகிட்ட உன்னை பத்தி பேசியே ஆகுவேன்..
அவனவளை காணும் ஆவலில் அரவிந்த்திற்கு பதில் கூறாமல், அவந்தி சொன்ன காபி ஷாப்பை நோக்கி வண்டியை செலுத்தினான்.
இவர்கள் வந்து சேர்ந்து, இரவு மணி ஏழாகியும் அவந்தி வராமல் போகவே, இவனிற்குள் ஒரு பதட்டம். அரவிந்த் இவனை பார்த்து விட்டு, “கால் பண்ணி பாருடா நந்தா.. ஏதாது டிராபிக் ஆஹ் இருக்க போது..”
“ஹ்ம்.. என்றுவிட்டு, அவளின் எண்ணிற்கு அழைக்க,
இவன் அழைப்பதற்கு இரண்டு நிமிடம் முன்பு தான் வைஸ் பிரின்சிபால் அறையிலிருந்து மணியை பார்த்துக் கொண்டே வெளியே வந்தாள், அவந்தி அவளுடன் தர்ஷியும்.
அவந்தி டென்ஷனாக திரும்பி மணியை பார்க்க, “எல்லாம் உன்னால தான் டி..” என்று வெளியே வந்தவுடன் தர்ஷி ஆரம்பிக்க, அவந்தியின் போன் ஒலித்தது.
அவள் எடுத்துக் பார்த்து விட்டு, அவங்க தான் பேசுறாங்க தர்ஷி.. “நீ தான் நேரத்துக்கு இருக்குற ஆளாச்சே.. எடுத்து பேசு” என்று கடுப்புடன் மொழிந்து விட்டு, நான் வண்டி கிட்ட நிக்குறேன். நீ பேசிட்டு வா..
அவனின் தவிப்பு இவளின் மனதை தொட, பின்பே அவன் எப்படி தன்னை அழைத்தான் என்று தோன்ற, “சாரி முதல்ல சொல்லிக்கிறேன்.. இப்போ நீங்க எப்படி என்னை கூப்பிட்டீங்க..”
இவள் கேட்டவுடன், அவன் யோசிக்க, அதில் அவனின் முகத்தில் மெல்லியதாக ஒரு சிரிப்பு.. நான்.. நான் கூப்பிட்டது உனக்கு பிடிச்சிருக்கா?..”
இவள் மௌனம் காக்க, “மேடம், டீச்சர்.. என்ன ஆச்சு.. இருவரும் சந்திப்போமா?” என்றான் ஆவலாக,
“அச்சோ..” என்று இவள் மெதுவாக கூற, “சாரி சாரி.. வந்துட்டே இருக்கேன்.. பை..”
இவன் சிரிப்புடன் வந்து அரவிந்த் பக்கத்தில் அமர்ந்தான்.
அரவிந்த் “என்னடா ஓகேவா..”
“வந்துட்டே இருக்கா..”
இங்கே என்னடி இவ்வளோ நேரம் பேசுன.. நாம போறதுக்கு எப்படியும் அரைமணி நேரமது ஆகும்.
“சொல்லிட்டேன்.. வெயிட் பண்ணுவாங்க..”
“முதல் நாள் பாக்க போகும் போதே நல்லா சொதப்பி வச்சிருக்க..” உன்னால தான்.. உன்னைய யாருடி ஒத்துக்க சொன்னா.. இதுல என்னையும் வேற சேர்த்து வச்சிருக்க.. ஒரு வாரம் எப்படிடி இந்த ஹாஸ்டெல்ல இருக்குறது.
அந்த ப்ரீத்தி மேம் வந்து கேட்டாங்க டி.. ஒரு வாரம் நான் காலேஜ் லீவு மேம்.. செகண்ட் இயர் ஸ்டுடென்ட்ஸ்கு நான் ஹாஸ்டல் வார்டன்ல மேம்.. இந்த ஒரு வாரத்துக்கு மட்டும் நீங்க இன்ச்சார்ஜ் எடுத்துக்குறீங்களானு கோரிக்கையா சொன்னாங்க.. அவங்க அம்மா கீழே விழுந்துட்டாங்களாம்.. அதனால தான் மேம் வேற கேட்டாங்களா.. நீங்க இங்க பக்கத்துல தான இருக்கீங்கன்னு வேற சொன்னாங்க.. அதுனால தான் ஓகே சொன்னேன்..
“தெரியலடி.. இவ்வளொத்துக்கு நான் அவங்ககிட்ட நெறைய பேசுனதுகூட கிடையாது.. சரி விடு.. பாவம் .. எதோ கேட்டுட்டாங்க.. “
“அடப்போடி.. அவளுக்குலாம் பாவம் பாக்காத.. “
“கேல்ஸ் ஹாஸ்டல் ஹெட் இந்த வைஸ் பிரின்சிபால் அப்படின்றத மட்டும் நான் மறந்துட்டேன் தர்ஷி.. இந்த அம்மா வேணும்னே நம்மள வெயிட் பண்ண வச்சி சைன் போட்டு குடுத்துருக்கு.. நாம நாளைக்கு வீட்டுக்கு வந்துட்டு அப்பறம் ஹாஸ்டல் போய்க்கலாம்..”
“இந்த டாபிக்கை விடு.. பாத்தியா.. நான் உன்னைய மோர்னிங் இந்த புடவையை கட்ட சொன்னதுக்கு திட்டுனல்ல.. இப்போ பாரு நீ அதே புடவைல தான் அவரை பாக்க போற..”
“என்ன இப்போ சாரி சொல்லனுமா அதுக்கு..”
“ஒன்னும் வேண்டாம்.. வா ஷாப் வந்துருச்சி.. உள்ளப் போவோம்..”
இருவரும் உள்ளே செல்ல, இவள் அவனின் போனிற்கு காள் செய்ய,
இவள் உள்ளே நுழைவதை பார்த்துக் கொண்டே, போனை எடுத்து.. “அப்படியே உன்னோட ரைட் சைடுல பாரு, கிறீன் ஷர்ட்- கிரீம் பாண்ட்ஸ்” என்று சொல்லிட்டு போனை கட் செய்து அவளிற்கு கையசைக்க,
அதை பார்த்த தர்ஷி, “நீ பேசிட்டு வா.. நான் வெயிட் பண்றேன்.. சிரிச்சிட்டே போ.. “
இவள் அமர்வதற்கு இடம் பார்க்க, சிஸ்டர் இங்க வாங்க.. நான் நந்தாவோட நண்பன் தான்..ஐயம் அரவிந்த் என்று கூற, ஹாய் அண்ணா, நான் தர்ஷி.. என்று அமர்ந்தாள்.
அங்கு அவந்தியின் வருகையை விழியசைக்காமல் பார்க்க, அவளுக்கு இன்னும் படபடப்பு அதிகமானது.
அவள் அமர்ந்தவுடன், ஒன்றும் பேசாமல் தண்ணீரை அவளிடம் நகர்த்தி வைக்க, அவள் அவனை நிமிர்ந்து பார்க்க, கண்சிமிட்டி அவளை பருகுமாறு விழியசைத்தான்.
அவள் அதிர்ச்சியுடன் அவனைப் பார்க்க, “ஹேய் முதல்ல தண்ணி குடி.. அப்பறமா என்னைய இப்படி பாக்கலாம்..”
இவள் சிறு முறைப்புடன் அவனை பார்த்துவிட்டு தண்ணீரை குடித்தாள்.
அவனோ தன் நீண்ட வருட காத்திருப்பாய், இவளின் செய்கையை எல்லாம் தன்னுள் சேகரித்தான்.
அவள் பருகி முடித்து அவனைப் பார்க்க, “அப்பறம் சொல்லுங்க.. அவந்திகா நந்தகுமார்”
அவள் முறைப்புடன் பார்க்க,
“கண்ணு சிரிச்சிட்டே முறைக்குற போல இருக்கு.. ” என்று திரும்ப கண்சிமிட்ட
அவள் இம்முறை கண்களை உருட்டி அவனை முறைக்க,
“இப்படி பாத்துட்டே இருந்தா.. ஏதாவது பேசுறது..”
அவள் மெதுவாக, “என்ன பேசணும்..”
“அவந்திகா நந்தகுமாரா என்ன வேணும்னாலும் என்கிட்ட பேசலாம்.” என்று மறுபடியும் கண்சிமிட்டி சிரித்தான்.
“நீங்க இப்படி பண்ணாதீங்க முதல்ல.. எனக்கு பேச வரமாட்டுது அதனால் தான்..”
“எப்படினு சொன்னதான தெரியும்..” என்று திரும்ப கண்சிமிட்ட
இம்முறை அவனை பெரியதாக முறைத்து வைத்தாள்.
நந்தாவின் போன் அலற, ஒரு நிமிஷம் என்று சொல்லி அட்டென்ட் செய்ய, எமெர்ஜென்சி சார்.. டீன் வரச் சொல்லுறாங்க என்று போனில் தகவல் வந்தது.
இவனின் முகத்தையே பார்த்த அவந்தி, ‘கிளம்பணுமா?’
“ஆமா.. எமெர்ஜென்சி.. சாரி.. நான் உனக்கு போன் பண்றேன்..”
“நான் பதில் சொல்லவே இல்லையே..”
“அதுதான் தெரிஞ்சிடுச்சே அவந்திகா நந்தகுமார்..”
இப்போது அவள் கண்கள் சிரிக்க, “பேசாம கண்ணுலயே சொல்லுற இப்போவும்..”
“எதுவும் நாம சாப்பிடவே இல்ல.. சாரி.. உன்னைய பாத்துட்டு அதை கவனிக்க விட்டுட்டேன்.”
இவர்கள் பேசிக்கொண்டே வர, என்னடா ஓகேவா என்று அரவி கேட்க, தர்ஷியோ.. அவந்தியின் கையை பிடித்துகொண்டாள்.
“ஹ்ம் வா.. எமெர்ஜென்சி கால் .. போனும்..” அவளிடம் கண்சிமிட்டி இன்னொரு நாள் பாக்கலாம்.. போன் பேசுறேன் என்று சைகையால் சொல்லி சிரிப்புடன் விடைபெற்றான்.
சாரல் வருடும்..
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.