“அதிய்ய்ய்… குட் மோர்னிங்… ஸ்வீட் மோர்னிங்.. இப்போ தான் கண்ணனுக்கு ரொம்ப குளிர்ச்சியா இருக்கு தெரியுமா.. இப்படி டெய்லி உன் முகத்தை பாத்துட்டே எழணும்னு எவ்வளோ நாள் ஆசை தெரியுமா.. சீக்கரம் உன்னைய எப்படியாது கடத்திட்டு என்கிட்டயே வச்சுக்கணும்..”
“இப்போ நீங்க என்ன சொன்னிங்க.. எவ்வளோ நாள் ஆசையா?…”
“அய்யயோ.. டேய் நந்தா.. இப்படி நீயே அவகிட்ட எல்லாத்தையும் உளறிடுவ போலயேடா… வாய் இருக்குனு நீ வர வர ரொம்ப பேசுற.. சரி சரி சமாளிப்போம்” என்று சடுதியில் நினைத்துக் கொண்டு, என்ன சொன்னாங்க.. எங்க சொல்லு பாப்போம் என்று கண்ணடிக்க,
“ஹேய்.. உங்கள.. ஆஃப் பண்றீங்க என்னை.. போங்க நீங்க..”
“நான் மட்டும் எங்க போறது.. மேடம் தான் ஹாஸ்டெல்ல இருக்கீங்களே.. வீக்கெண்ட் ஆச்சும், தேவி தரிசனம் கிடைக்கும் பாத்தேன்.. எங்க?.. நமக்குனு பாத்து யாரோ மூட்டையை மந்திரிச்சு வக்கீறாங்க போல.. ஹ்ம்ம்.. நிலைமை ரொம்ப மோசமா போயிட்டு இருக்கு..”
“அவ்வா.. உங்க வாய் எங்கயாவது அடங்குதா..?..”
“உன்கிட்ட மட்டும் தான் அடங்கும்.. எங்க? அந்த கொடுப்பினைலாம் நமக்கு இப்போதைக்கு கிடைக்காது போல..” என்று சோகமாக சொல்ல,
“ச்சீ.. உங்களையே நான் என்ன தான் பண்றது.. காலையிலேயே பேச்சை பாரு..”
“ரொம்ப அநியாயம் பண்ற அதி நீ..”
“என்ன!.. நான் என்ன பண்ணேன்..”
“இல்லையா பின்ன.. நைட் அப்படி, இப்படி பேசுனாலும் பேச்சை பாருன்னு சொல்ற.. இப்பவும் காலையிலேயே பேச்சை பாருன்னு சொல்ற.. இது அநியாயம் இல்லாம வேறன்ன.. இதுக்கு நீ பதில் சொல்லு முதல்ல.. என்னோட பிஞ்சி நெஞ்சி ரொம்ப பீல் ஆகுது தெரியுமா..?”
“நந்து.. ஏன் இப்படி பண்றீங்க?..” என்று சினுங்க,
“பாரு.. அடுத்து இப்படி கேக்குற.. எங்க நான் என்ன பண்ணுனேன்.. நீ தான் என்னை என்னன்னவோ பண்ற தெரியுமா?” என்று கண்ணடித்தான்.
“என்ன!” என்று அதிர்ச்சியாக,
“ஆமா.. நைட் கனவுல வந்து நீ என்னலாம் பண்றனு தெரியுமா.. நான் உனக்கு எப்படினு சொல்லிக் காட்டவா..” என்று திரும்ப கண்ணடிக்க,
“அச்சோ..” என்று அவளின் முகத்தை போனிலிருந்து மறைத்தாள்.. இவரை வச்சிக்கிட்டு, பேச்சை பாரு.. என்று முணுமுணுக்க,
“அதி .. அதி.. என்னைய பாரு.. உன் முகத்தை நான் இப்போ தான் பாக்கணும்.. காமிங்க முயல் குட்டி.. தங்க பொண்ணுல..”
“நோ நோ.. முடியாது போங்க.. நீங்க ரொம்ப பேசுறீங்க..”
“ஹா ஹா.. சரி பேசல.. நீ என்னைய பாரு..”
“எதுக்கு இப்போ பாக்கணும்.. இவ்வளோ நேரம் பாத்தீங்கள்ல..”
“அதுவா.. இப்படி பேசும் போது, அதி பொண்ணு கன்னம் ரெண்டும் ப்ளஷ் அடிக்கும்.. அப்போ அந்த மச்சம் இருக்குல்ல அது இன்னும் பிரைட் ஆஹ் தெரியும்..”
“வாய் வாய்.. அதுலாம் முடியாது..”
“அது என்கிட்ட தான் இருக்கு.. எங்க சேர முடியுது..” என்று பெருமூச்சினை விட,
“டாக்டர் சார்க்கு ஹாஸ்பிடல் கிளம்ப டைம் ஆகலையா?..”
“பாருடா.. அதி பேச்சை மாத்தலாம் கத்துக்கிட்டாங்க..”
“ஆமா.. உங்ககிட்டயிருந்து தான் வந்துச்சி..”
“ஹ்ம் ஹ்ம்.. அப்போ நான் சொல்லித்தரது எல்லாம் அதி குட்டி சமத்தா கத்துப்பீங்க அப்போ..”
“என்ன சொல்லித் தரப் போறீங்க..?.. உங்க மெடிக்கல் சைடுல நான் ஏதும் தெரிஞ்சிக்கணுமா..” என்று சீரியஸ் ஆக வினவ,
“ஹையோ.. அதி என்று வாய்க்குள் சிரித்துவிட்டு, நான் சொல்லித்தரும் போது உனக்கு தெரியும்.. சரியா.. நீ என்ன தெரிஞ்சிகிட்ட என்கிட்ட சொல்லணும்.. நான் கேக்கும் போது.. ஓகே?” என்று அவனும் சிரிப்பை வாய்க்குள் அடக்கி கீழுதட்டை கடித்தப் படி சீரியஸ் ஆக பேச,
“நானே டீச்சர்.. தெரியும்ல.. அதுலாம் ஒழுங்கா கத்துப்போம்..” என்றால் ரோஷமாக,
இதுக்கு மேல நம்மால முடியாது.. நானே சிரிச்சிடுவேன்.. அப்பறம் மேடம் கீழே குனிஞ்சிப்பாங்க..வாயத் திறக்கமாட்டாங்க.. என்று மனதில் நினைத்து சிரித்து விட்டு, “ஹாஹான்.. பாக்கலாம்..” என்று கூறினான்.
“சரி.. எழும்புங்க.. மணி எட்டரை ஆகிட்டு.. இன்னைக்கு சண்டே வேற, எல்லாம் அவுட்டிங் போகணும்னு சைன் வாங்க வருவாங்க..”
“அப்போ அதி இப்போ பிஸி..டீச்சர் அப்பாயிண்ட்மெண்ட் எப்போ கிடைக்கும்?”
“உங்களுக்கு டியூட்டி இல்லையா அப்போ..”
“நைட் டியூட்டி.. இந்த வாரத்துக்கு.. நீ வேற முதல் டைம் ஹாஸ்டல்ல இருக்க.. ஸ்டுடென்ட்ஸ்லாம் போயிட்டு சரியான டைம்க்கு வர மாட்டாங்க.. நீ ஒழுங்கா கவனிச்சிக்கோ..”
“சரி தான் நந்து..நீங்க சொல்றதும்.. மோஸ்ட்லி எல்லாரும் வெளியே கிளம்புவாங்க..”
“ஆமா அதி.. செகண்ட் இயர் எல்லாரும் வேற.. ஓன்னோன்னும் ஒவ்வொரு ரகமா இருக்கும்.. நீ கிளாஸ்ல ஹாண்டில் பண்றது மாறி இருக்காது.. அதுக்கு தான் சொல்லுறேன்.. உன்னைய ஏதும் டென்ஷன் பண்ணிட போறாங்க.. நீ பத்திரம்..”
அவனின் வார்த்தை இவளுள் சாரலாய் வருடிச் செல்ல, ஒரு நிமிடம் அமைதியாகி, பின்பு அவனிடம் ..”நெறைய அனுபவம் இருக்கு போல..”
“இருக்கு இருக்கு.. இந்த வைஷு நெறையா சொல்லுவா.. சில விசயம்லாம் கேக்கும் போது ரொம்ப ஷாக்கிங் ஆஹ் இருந்திருக்கு..”
“அப்படி என்ன சொல்லிருக்காங்க உங்க தங்கச்சி.. என்னைய பத்திலாம் தெரியுமா?..”
“அதுலாம் அப்பறம் சொல்லுறேன்.. நீங்க வைஸ் பிரின்சிபால் கிட்ட, வீர சாகசம் வேற, பெருசா பண்ணிருக்கீங்க போல.. அது கூட சொல்லிருக்கா..”
“நந்து.. என்ன சொல்லுறீங்க.. வைஷாலி சொன்னாளா?..”
“அவளே தான்.. இன்னும் எக்கச்சக்கமா சொல்லிருக்கா.. அவளை உனக்கு அறிமுகம் படுத்தும் போது சொல்லுறேன் இன்னும் அவ என்னலாம் சொல்லிருக்கானு..”
“இதுலாம் போங்கு.. சொல்லுங்க நந்து..”
“அப்போ டீச்சர் ஏதாவது தர்றது..” என்று உதட்டை குவித்துக்கொண்டே கண்ணடிக்க,
“போங்க நீங்க..” என்று அமைதியாக,
“அதான் நீ வரமாட்டேங்குறியே.. அப்பறம் எங்க போறது நான்..” என்று பதில் பேச, கால்லிங் மணியின் சத்தம் கேட்க,
“நந்து.. என்னதிது.. போயிட்டு யாருனு பாருங்க.. நானும் ரெடி ஆக போறேன்..”
“அப்படியா.. டைம் ஆகிட்டா.. சரி கிளம்பு” என்று சோகமாக கூற,
“சரி சரி போதும் .. ரொம்ப பண்ணாம நீங்க போயிட்டு யாருனு பாருங்க.. நல்ல பிள்ளையா போங்க..”
“சரிடா தங்கப் பொண்ணு.. நீ பிரீ ஆஹ் இருக்கும் போதும் சொல்லு.. பேசலாம்.. மிஸ் யு..உம்மா..”
“போங்க ப்பா..” என்று முகம் சிவக்க கூறிவிட்டு, போனை அணைத்து ஓடிவிட்டாள்.
“ஹா ஹா.. இவன் உல்லாசமாக சிரித்துக் கொண்டே அறையிலிருந்து வெளியே வந்து, எவன்டா அது இப்படி விட்டு விட்டு கால்லிங் பெல் அடிக்குறது. கொஞ்ச நேரம் பேசப் விடுறாங்களாப் பாரு” என்று திட்டிக் கொண்டே கதவை திறக்க,
அங்கே தன்னுடைய முப்பத்தி இரண்டு பல்லைக் காட்டிக் கொண்டு நவீன் நிற்க, அவனை முறைத்துக் கொண்டே அரவி நிற்க.. இவர்கள் இருவரையும் ஒருமுறை பார்த்து விட்டு, அப்படியே திரும்பி கதவை சாற்றப் போக,
“டேய்… என்னைய அப்பறம் முறைடா.. அவன் கதவை சாத்த போறான் பாரு” என்று அவனிடம் சொல்லிக் கொண்டே, நந்தா கதவை மூடும் முதல், தள்ளிக்கொண்டு உள்ளே சென்றான்.
நவீன், “உன் வீட்டுக் கதவை எங்களை தவிர வேற யாருடா தட்டுவா.. எப்படி, நீ சாத்துறதுக்குள்ள நாங்க வந்துட்டோம்ல..”
அரவி ஒன்றும் கூறாமல் அமைதியின் சிகரமாக இருக்க,
“டேய்.. நீ இப்போ இவன் நம்மளை கண்டுக்காம வந்ததுக்கு அவனை பேசு.. நாம அப்பறமா டீல் பண்ணிக்கலாம்.. நாம இப்போ ஒரே டீம் ஆஹ் இருந்து தான் இவனை பேசணும்.. வாடா.. ஆரம்பி..”
“ஏன்டா.. டேய் .. உங்கள நான் இந்த வீடு பக்கம் வராதிங்கனு சொல்லுறேன்ல.. எதுக்குடா வெக்கமே இல்லாம திரும்ப வரீங்க.. ஒரு ஒரு வாரமும் உங்களுக்கு இதே வேலையாய் போச்சு.. உங்களுக்கு தெரியாம முதல்ல நான் நல்ல வீடா பார்த்து மாறனும்..”
“ஹி ஹி.. அதுலாம் இந்த ஜென்மத்துல நடக்காதுடா.. நீ எங்க போனாலும் உன்னை விடமாட்டோம்டா.. நண்பேன்டா..” என்று நவீன், அரவியின் தோலில் கைப் போட்டு இழுக்க,
அவனின் கையை தட்டிவிட்டு சோபாவின் சென்று அமர்ந்தான்.
நந்தா, “டேய்.. உனக்கும் சேர்த்து தான் சொல்றேன்.. முதல்ல ரெண்டு பெரும் வெளில கிளம்புங்கடா.. கொஞ்ச நேரம் போன் கூட பேச விடமாட்டறிங்க.. நான் தான் இப்போ பேமிலி மேன்னு தெரியும்லடா.. பின்ன என்ன டேஷ்க்குடா வரீங்க..”
“டேய் அரவி.. இவன் என்ன சொல்லுறன் பாருடா.. டேஷ்னுலாம் பேசுறான்டா நம்மள..” என்று அவனிடம் கூறிவிட்டு, நந்தாவிடம் சைகை காமிக்க,
“என்னவாம் இப்போ திருவாளர் அரவிந்த்க்கு..” என்று அவனின் அருகில் வந்து அமர,
“இவனோ போங்கடா.. நான் உங்க ரெண்டு பேரு கூடவும் பேச மாட்டேன்..”
“என்னடா அரவி.. என்னைய பார்த்து இப்படி சொல்லு பாக்கும்.. அப்பறம் நீ என்கிட்ட பேசவென்ன, பாக்க கூட வேண்டாம்..”
அரவியோ நிமிர்த்து அவனைப் பார்க்க, அவனோ சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு, “என்னடா அரவி.. என்கிட்ட பேச மாட்டியா நீ?..”
“நீ கூட பரவலாடா.. எதோ எனக்கு கொஞ்சம் சொன்ன.. ஆனா இவன்.. ஒரு வார்த்தை சொல்லலைடா.. உங்கிட்ட பேசுறேன்டா.. இவன் கூட இனிமே சுத்தமா பேசமாட்டேன்.. சொல்லிடு அவன்கிட்ட..”
“டேய்.. அது தான் சொல்றன்ல.. கிளம்புடா நீ..” என்று சிரிப்புடன் கூற
அரவி உடனே நந்தாவை பார்க்க, அவன் முகத்தை சோகமாக மாற்றினான்.
நவீன், “டேய் அரவி.. நீ சொன்னா.. நான் கிளம்புறேன்.. நான் தான இன்னைக்கு உன்னைய கூட்டிட்டு வந்தேன்..”
“டேய் நந்தா.. இவன்ட நான் பேசலடா.. நான் வரேன்னு சொல்லவே இல்லடா.. இவனே புடிச்சி இழுத்து வந்துட்டான்.. ஆனா இவன் அப்போ கூட என்கிட்ட சொல்லலடா.. நான் வண்டியில வரும் போது கேக்குறேன்.. நீ கமிட் ஆகிட்டியா? அப்படினு.. அதுலாம் ஒன்னும் இல்லனு சொல்லுறான் இவன்.. இவனைப் போக சொல்லு..”
“யு ராஸ்கல்.. அவன் கேட்டும் பொய் சொன்னியாடா நீ.. கிளம்புடா..” என்று சிரிக்க,
“ஹா ஹா.. இவனைப் பாருடா காலைல இருந்து சின்ன புள்ள மாறி பண்ணிட்டு இருக்கான்.. அதான் இழுத்து வந்தேன்..” என்று நவீனும் சிரித்துவிட்டான்.
அரவி, “நீங்க ரெண்டு பெரும் கூட்டு களவாணிங்கடா..போங்கடா.. நான் கிளம்புறேன்..” என்று எழுந்திரிக்க
நந்தா, “எங்க போற நீ.. வா வா.. அவன் உங்கிட்ட பேசத்தான் கூட்டிட்டு வந்தான்.. என்னனு கேளு.. நீ தான் அதுக்கு சரிப்பட்டு வருவ..” என்று கூறிவிட்டு நவீனிடம் சைகை செய்தான்.
“எதுக்கு.. அதான் செட் பண்ணிட்டான்ல.. இப்போ என்னத்த பேச போறான் என்கிட்ட..”
“நந்தா நீயே சொல்லுடா அவன்கிட்ட.. நான் சொன்னா நம்ப மாட்டான்.”
“சரி சொல்லுறேன்.. நீ இப்படி சொல்லுறதுனால..”
“அரவி,” என்னடா.. ஏதும் சீரியஸ் ஆஹ்..”
“ஆமாடா.. நவீன் வீட்டுல அவங்க அம்மா ஒத்துக்கலையாம்.. அவங்க இனத்துல தான் பண்ணனும் சொல்லுறாங்களாம்.. அவன் ரெஜிஸ்டர் கல்யாணம் பண்ணிக்கிட்டு வீட்ல சொல்ல போறேன்னு சொல்லுறான்.. நீ சாட்சி கையெழுத்து போடுவியா அவனுக்குனு கேக்குறான்..”
“என்னடா.. நவீன் உண்மையாவே அம்மா அப்படி சொல்லிட்டாங்களாடா..”
“ஆமாம்டா அரவி..” என்று சோகமாக,
“நான் பேசுறேன்டா அம்மாகிட்ட, இப்போ யாருடா ஜாதிலாம் பாக்குறா.. நீ போனை போடுடா.. நான் பேசுறேன்..” என்று அவனின் போனை எடுக்க போக,
“ஹா ஹா ஹா..” என்று இருவரும் சிரித்துவிட்டனர்.
இவன் என்னவென்று இருவரையும் பார்க்க,
நந்தவோ..”அரவி, நீ ரொம்ப நல்லவன்டா.. அது தான் உனக்கு பொண்ணு கிடைக்க மாட்டுது..”
தடிமாடுங்களா.. என்னைய நல்லா வச்சி செய்யிறீங்கடா என்று இருவரையும் மொத்த,
இப்படி குட்டி குட்டி கலாட்டாவுடன் அவர்களின் நாள் இனிமையாக தொடங்கியது.