இரவு தூங்குவதற்காக அறைக்குள் வந்ததிலிருந்து அவந்தி, தன் கணவனையே விடாது பார்க்க, அவனோ அவளின் பார்வையே, தன்னிடம் கேட்கப்போகிறாள் என்று தெரிந்தாலும், அதைக் காட்டிக்கொள்ளாது, மெதுவாக பாத்ரூம் சென்று வந்து அவளை பார்க்க, அவந்தியும் பதில் பார்வை வீச,
“டீச்சரம்மா, என்ன பார்வையெல்லாம் பலமா இருக்கு… அப்போ உங்க நந்துக்கு, இன்னைக்கு பயங்கர கவனிப்பு உண்டோ…” என்று தன் உதடுகளை ஈரப்படுத்தி, அவளை பார்த்துக் கண்ணடிக்க,
தலையணை எடுத்து அவனின் மேல் வீச,
“முயல்குட்டி… நோ,நோ வயலென்ஸ்… உன் நந்துக்கு காலுல வேற அடிப்பற்றுக்கு… இப்போவே சொல்லிட்டேன்… அப்பறம் நீ தான் பீல் பண்ணுவ…”
“அப்படியா… அப்போ இப்படி வந்து உக்காருங்க…”
“என்னடா தங்கப்பொண்ணு… அம்மா பாக்க முடியலன்னு இப்படி இருக்கியா?… நாம வேணும்னா அவங்களை கோவைக்கு வர சொல்லுவோம்…” என்று பேச்சினை திசைத்திருப்ப,
அவள் ஒன்றும் கூறாமல் அவனையே பார்க்க,
“அதி, இங்கபாரு நீ தான் இப்படி பாக்குற குறுகுறுன்னு… அப்பறம் நான் ஏதாவது பண்ணுனேன், சொல்லுறேன்னு என்னை சொல்லக்கூடாது சொல்லிட்டேன்…” என்று அவளை பார்த்து கண்சிமிட்ட,
“வாய்…வாய்… எவ்வளோ பேசுது இந்த வாய்…” என்று வாயில் அடிக்க,
“அதி… இப்படி வாயில அடிக்கக்கூடாது… இப்படி என்று இதழை, இதழால் மூடினான்…” அப்படியே அவன் அடுத்த கட்டத்திற்கு முன்னேற, அவளின் காதில் அவனின் மீசை உரசி, அவளை கூசச் செய்ய, அவளோ அவனிடம் மயங்கி அவனின் மூடியை பிடித்து இழுத்தாள்.
அப்படியே அவளை நகத்தி, மேலும் முன்னேற, அவள் அசைவினால், அவனின் அடிபட்ட காலில் அவளின் கால்ப் பட்டு அழுந்த, இவனோ ஆஆ… என்று ஓசையெழுப்ப, அப்போது தான் தன்னிலை அடைந்து, பக்கத்தில் உள்ள லைட்டை ஆன் செய்தாள்.
“உங்களை… அடங்கவே மாட்டிங்களா?… அடிப்பற்றுக்கு தானே?… என்ன வேலை பண்றீங்க…” என்று தலையணையை எடுத்து அவனை மொத்த,
“ஐயோ… அம்மா… என் பொண்டாட்டி என்னை அடிக்குறா… அடியேய், உன் புருஷனுக்கு அடிப்பற்றுக்குது… ” என்று கத்த,
“கத்தாதிங்க… சொல்லறேன்ல… எங்க வலிக்குது…காமிங்க முதல்ல…” என்று அவனின் காலை எடுத்து தானே ரத்தம் எதுவும் வந்திருக்கா என்று ஆராய,
“அதி… உன் புருஷன் தான் டாக்டர்…” என்று அவளுக்கு சாவகாசமாய் காலை காமித்தபடி சொல்ல,
“உங்களை… போச்சு… அவ்வா…உங்களை…” என்று ஒவ்வொரு வார்த்தையாய் பேச,
“என்னங்க டீச்சரம்மா… நம்ம பிள்ளைங்களுக்கு சொல்லிகுடுக்க, இப்போவே வார்த்தை சொல்லி பழகுறீங்களா… நானும் புள்ளைய உருவாக்கலாம்னு தான் சொல்லுறேன்…” என்று கண்ணடிக்க,
“ம்ஹ்ம்…” என்று தலையை குலுக்கிவிட்டு, நீங்க இப்போ நான் கேக்குறதுக்கு பதில் சொல்லுங்க… அவ்வா… இல்லனா, அப்படியே பேச்சை மாத்திடுவீங்க… உங்களை நம்பவே முடியாது… அதுனால நீங்க எனக்கு பதில் சொல்லுற வரைக்கும், கொஞ்சம் தள்ளியே இருங்க…”
“என்ன அதிக்குட்டி… உன் நந்துவை நீயே இப்படி சொல்லலாம…” என்று அப்பாவியாய் பேசி அவளை நெருங்கி அமர,
“ஆகா… நீங்க அப்பாவி இல்ல அடப்பாவி… எப்படி பேச்சை மாத்துறீங்க … இந்த நெத்தில உள்ள தழும்பு, அதும் மேல் நெத்தில இருக்கறதுனால முடி மறச்சிடுது…எப்படி அடுபட்டுச்சினு கேக்கும் போது என்ன சொன்னிங்க?… எப்படி அடிபட்டுச்சினே மறந்துட்டுன்னு சொன்னிங்கள்ல… எவ்வளோ பொய்…”
“பச்… இப்போ அதுவா முக்கியம்… அதை விடு… நமக்கு எத்தனை குழந்தை பெத்துக்கலாம்?… எனக்கு ரெண்டு போதும்… உனக்கு?…”
“இந்த பேச்சை மாத்தி, ஆகாதபோகாத வேலையெல்லாம் பண்ண வேண்டாம்… இப்போ நீங்க எனக்கு சொல்லணும்… என்னை உங்களுக்கு தெரியும் தானே?…” என்று அவள் குறுகுறுவென்று பார்க்க,
“அச்சோ… அதி… இப்படிலாம் பாக்காதயேன்… எனக்கு வெக்கமா வருது…” என்று அவளை கட்டிப்பிடிக்க,
“விடுங்க என்னை… முதல்ல விடுங்க… என்னனு முதல்ல சொல்லுங்க… அப்பறம் தான் எல்லாம்…”
“உங்களை… என்னனு சொல்லுறது… எத்தனை முறை கேட்ருக்கேன்… என்னை பாத்திருக்கிங்களானு?… எப்படி மழுப்பிருக்கிங்க என்கிட்ட?… இப்போ எனக்கு சொல்லணும் நீங்க…”
“உன்னைய பாத்துட்டே வந்ததுனால தான் இந்த தழும்பு வந்துச்சி… போதுமா சொல்லிட்டேன்…”
“நான் காலேஜ் படிக்கும் போது, என். எஸ். எஸ்-ல ஜாயின் பண்ணிருந்தேன்… அப்போ ஒன் வீக் கேம்ப்க்கு உங்க காலேஜ் வந்தோம்… அப்போ உங்களை பார்த்துருந்தாலும், எனக்கு உங்களை ஞாபகம் இருக்குமான்னு தெரியலே… நீங்க அப்போ, இப்போ இருக்குற மாறியா இருந்திருப்பிங்க?…”
“அடிப்பாவி… ஒருவேளை உனக்கு என்னை ஞாபகமிருக்கோன்னு நினைச்சி இந்த ரூம்ல இருந்த என்னோட காலேஜ் போடோஸ்லாம் எடுத்து உள்ள வச்சேன்… நீ என்னனா இப்படி கேக்குற என்கிட்ட…”
“ஹா ஹா… நீங்க அறிவாளியா நினைச்சி இப்படி பண்ணுனா… அதுக்கு நான் என்ன பண்ணுறது…”
“அதி…இன்னைக்கு ரொம்ப பேசுறாங்களே…”
“அஸ்க்கு புஸ்க்கு… ஏதாச்சும் சொல்லி அப்படியே பேச்சை மாத்தாதீங்க… இன்னும் நீங்க சொல்லவே இல்ல…”
முதல் நாள், லஞ்ச் முடிச்சிட்டு கிளாஸ்க்கு போகும் தான் உன்னை பாத்தேன்… முயல்குட்டி மாறி அங்கேயும் இங்கயும் ஓடிட்டு இருந்த, யாருடா அது இப்படி பண்ணுறான்னு, கிளாஸ்க்கு போறதுக்கு கூட மறந்து, கொஞ்ச நேரம் உன்னையே பார்த்துட்டு நின்னேன்…அப்பறம் நீ, எங்கயோ உன் பிரெண்ட்ஸ் கூட கிளம்புன…என்னடா அதுக்குள்ள கிளம்பிட்டானு நினைச்சி, நானும் உன் பின்னாடியே வந்துட்டு இருந்தேன்… நீங்க கான்டீன் போனீங்க… நானும் உங்க டேபிள் தெரியுற மாறி, உக்காந்து உன்னையவே பார்த்துட்டு இருந்தேன்…”
அவள் கண்களை விரித்து, “அவ்வா…” என்று வாயில் கைவைக்க,
“நீ இப்படி பண்ணா, அப்பறம் நான் ஏதாவது தான் பண்ணுவேன்… என்று அவளை நெருங்கி வர,
அவனை முறைத்து, “நைசா கழண்டுக்குற வேலையெல்லாம் வேணாம்… இப்போ முழுசா சொல்லணும்…”
“இன்னைக்கு இந்த வாய் நிறைய பேசுது… பார்த்துக்கறேன்…” என்று செல்லமாக மிரட்டிவிட்டு தொடர்ந்தான்.
“அன்னைக்கு உன்னையே பார்த்துட்டு, கிளாஸ்க்கு போகல… உன்னைய பாத்த அன்னைக்கே, என்னோட லைப்… நீ இருந்தா மட்டும் தான் கம்ப்ளீட் ஆகும்னு, ஒரு பீல் வந்துடுச்சி…” என்று அந்தநாளை கண்முன் கொண்டு வந்து மென்மையாக கூறினான்.
“என்னாது அந்த கொஞ்ச நேரத்துலயா?…” என்று முழித்துக்கொண்டே கேட்க,
“ஹோய்… முயல்குட்டி மாறி முழிக்காத… அதுலாம் ஒரு செகண்ட் கூட போதும்… உனக்கு அதுலாம் புரியாது… போடி… ரொம்ப பண்ற…”
“சரி,சரி… அப்பறம் சொல்லுங்க…”
அப்பறம் மறுநாளு, ஒரு மூணு மணி இருக்கும்…அப்போதான் சாப்புடவே வெளில வந்தேன்… காலைலயும் சாப்புடுல, எங்க பிளாக் மேல தான் எக்ஸ்ட்டெண்ட் பண்ணிட்டு இருந்தாங்க…அப்போ கம்பியை எல்லாம் எடுத்து போயிட்டு இருந்ததை பார்த்து, நீ எதோ உன் பிரெண்ட்க்கு கையை காமிச்சு சொல்லிட்டு இருந்த, இன்னைக்கே உங்கிட்ட பேசலாம்னு அப்படியே உன்னைய பார்த்துட்டே வந்தேன்… நான் வர்றதை கவனிக்காம, அந்த கம்பி எடுக்குறவங்க, கம்பியை பின்னாடி இழுத்தாங்க போல… அப்போதான் அந்த கம்பி நெத்தில பதம்பார்த்துடுச்சி…
அவள் அவன் சொல்வதை, கண்ணெடுக்காமல் அவனையே பார்க்க,
உனக்கு தான் தெரியுமே, நீ என்ன பண்ணுனனு… நீயே சொல்லு…
அவளோ தலையை இடவலமாக ஆட்டிவிட்டு, அவனையே பார்க்க…
“மேடம் என்னை வந்து பாக்கல… அங்க கம்பி எடுத்து வந்தங்களை திட்டுன… பார்த்து எடுத்துவரமாட்டீங்களானு… காலைலலிருந்து சாப்பிடாம இருந்ததுனால, நீ சொல்றதை கேட்டுட்டே அப்படியே மயங்கிட்டேன்… நான் பேசறதுக்கு முன்னவே, எனக்காக பேசிருக்கானு ஒரு சந்தோசம் மனசுல…”
“அப்போதான் தான் உன்னை பாத்தேன்… சொல்லிட்டேன் பொண்டாட்டி… இப்போ ஹாப்பி ஆஹ்…”
“நான் மறுநாள் வந்து உங்களை விசாரிச்சேன்… நீங்க வீட்டுக்கு போய்ட்டதா சொன்னாங்க…”
“அப்படியா…?” என அதிர்ந்து, நான் தான் அப்போவே மிஸ் பண்ணிருக்கேன் போல… எல்லாம் இந்த அம்மாவால வந்தது… நீ மறுநாள் காலேஜ் போகவேணாம்னு சொல்லி, என்னை நாலு லீவு போட வச்சிட்டாங்க…”
அவள் அவனை உறுத்து விழித்து, அப்படியே இந்த பொண்டாட்டி ஆனதையும் சொல்லுங்க…அன்னைக்கு கூட அரவிந்த் அண்ணா, ஏதோ சொன்னாங்க… உன்னைய பார்த்துட்டு சாப்புடாம கூட்டிட்டு வந்துட்டான்னு…”
“அச்சோ அதி, அவன் எதோ உளறினான்…”
“யாரு அவங்களா…அப்போ சரி, நான் அரவிந்த் அண்ணாக்கே கால் பண்ணி கேட்டுக்குறேன்…” என்று போனை எடுக்க,
“இன்னைக்கு நீ ரொம்ப பேசுற… இதுக்கெல்லாம் உன்னை அப்பறம் வசமா கவனிச்சிக்குறேன்…”
“அப்போ பாக்கலாம்…இப்போ நீங்க சொல்லுங்க…”
அப்போயிருந்து நான் எழும் போதுலாம்… உன் முகமும், நீ எனக்காக பேசுனதும் தான் முதல்ல தோணும்… நாலு நாள் கழிச்சு, காலேஜ்ல விசாரிச்சு கேட்டதுல, இந்த போட்டோ மட்டும் தான் கிடைச்சுது, என்று அவனிடம் உள்ள அவள் இருந்த குரூப் போட்டோவை எடுத்து காமிக்க,
அவளோ கண்ணிமைக்காமல் அவனையே பார்த்திருந்தாள்…
இந்த மாறி, எங்க காலேஜ்க்கு வந்திங்கனு சொல்லி, உங்க காலேஜ் செக்யூரிட்டிட்ட விசாரிச்சேன்… ஒன்னும் பிரயோஜனம் இல்ல… ஒரு பக்கம் என்னோட பைனல் இயர், அடுத்து மேல படிக்க, எண்ட்ரன்ஸ் எக்ஸாம் பிரேபரேஷன்… இதுக்கெல்லாம் நடுவுல, உன்னோட ஞாபகம்… எப்படி உன்னை பாக்குறதுனு தெரியாம, ஒரு வழியும் கிடைக்காம நெறைய நாள் அலைஞ்சது மட்டும் தான் மிச்சமாச்சு…
அப்போ தான் யோசிச்சேன், நான் உன்மேல வச்ச இந்த காதல் உண்மையா இருந்தா, கண்டிப்பா உன்னோட நான் சேருவேன்னு…எனக்குள்ள ஒரு உறுதி…
அப்பறம் உன்னை… வைஷுவை, பஸ் ஏத்தி விட்டுட்டு வரும் போது மால்ல பாத்தேன்… அப்போ எப்படி இருந்துச்சி தெரியுமா எனக்கு, என் கூடு உன்கிட்ட சேந்துட்டா மாறி இருந்துச்சி… அவளோ ஒரு ஆசுவாசம் எனக்கு… பைத்தியம் மாறி வீட்டுக்குள்ள சுத்துனேன்… உன்னை பார்த்துட்டு வந்து…”
அவள் நம்பமுடியால் கண்ணீரோடு வெம்பி அழுக,
“ஹேய்… இப்போ எதுக்கு அழுற அதி… அதுதான் நீ என்கிட்டே வந்துட்டியே…”
“போங்க நீங்க… எந்த நம்பிக்கைல நீங்க எனக்காக காத்திருந்திங்க… நான்…நான்…” என்று விம்ம,
“அதி ரிலாக்ஸ்…” என்று அவளின் கையை பிடிக்கவர,
பாய்ந்து வந்து அவனை இறுக்கமாக கட்டிக்கொண்டாள்… அவன் சொன்னதை நினைத்து பார்க்கவே சிலிர்த்தது அவளுக்கு… தான் அவனுக்காக பேசியதை வைத்து என்னை இந்தளவிற்கு தேடிருக்கானா…” என்று அவளின் நெஞ்சம் விம்மியது.
“எப்படி நமக்கு கல்யாணம் ஆச்சுன்னு தெரிய வேணாமா அதிக்கு…”
அவள் சிணிங்கிக் கொண்டே, “ஹ்ம் சொல்லுங்க….”
“எங்க ஹாஸ்பிடல் டீன் கிட்ட, உன் வண்டி நம்பரை குடுத்து விசாரிச்சு கேட்டேன்.. அப்பறம் வேலன் மாமா, எல்லாம் சுபமா முடிச்சி வச்சிட்டார்…” என்று சிரித்தான்.
“அச்சோ… உங்க டீன் ஆஹ்…”
“ஆமா அவரே தான்… அவருக்கு என்மேல ரொம்ப அக்கறை…” என்று கண்ணடித்தான்.
“அடப்பாவி… முதல் வாட்டி, என்கிட்டே போன்ல பேசும் போது அவந்திகா நந்தகுமார்னு… வேணும்னு தானே சொன்னிங்க…”
“ஹேய் அதி டார்லிங்… அது வேணுமேலாம் சொல்லல, அதுவே வந்துடிச்சி பதற்றத்துல…” என்று சிரித்தான்.
“நம்பி…ட்டேன்…” என்று இழுத்துக்கூறி, “இந்த காவியா அக்கா கூட, கேட்டாங்க… லவ் பண்ணிட்டு எப்படி வீட்டுல பாத்தமாரி மாத்துனீங்கன்னு… எனக்கு தான் ஒன்னும் புரியாம முழிச்சேன்…”
“இந்த அண்ணிக்கு பொண்ணு பாக்க வந்த அன்னையிலலிருந்து டவுட்..” என்று சொல்லி சிரிக்க,
“மாமா தானே, உன்னைய எனக்குனு பார்த்தாங்க… அப்பறம் என்ன சொல்லணும் வீட்ல…” என்று கண்சிமிட்ட,
“போங்க… நீங்க… அவ்வா…உங்களை என்ன தான் பண்ணுறது…”
“என்ன வேணும்னாலும் பண்ணலாம், உன் நந்து இப்போ எப்படி பீல் பண்றேன் தெரியுமா, இன்னைக்கு ரொம்ப ரொம்ப ஸ்பெஷல் டே” என்று அவளில் முத்தமிட்டு, மொத்தத்தையும் கொள்ளைக் கொண்டான்.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.