அவள் தன்னுடைய துறையின், ஸ்டாப் ரூமை நோக்கிச் செல்ல, அவ்வழியில் செல்லும் மாணவ, மாணவியர்கள் இவளுக்கு குட் மோர்னிங் மேம் என்று விஷ் செய்துக் கொண்டே கடக்க, அவர்களுக்கு இவளும் பதில் வணக்கத்தை கூறிக்கொண்டே தன் இடத்திற்கு சென்று அமர்ந்தாள்.
காலை நேர பரபரப்பிற்குப் பஞ்சம் இல்லாமல் அந்த ஆசிரியரின் ஓய்வு அறை இருக்க, இவள் பொதுவாக அனைவருக்கும் காலை வாழ்த்தை ” குட் மோர்னிங் எவ்ரிஒன்” என்று மெல்லிய சிரிப்புடன் கூற, பிற ஆசிரியர்களும் பதிலுக்கு வாழ்த்து கூற, அவர்களுக்கு ஒரு சிரிப்பைத் தந்தாள்.
தன்னுடைய இன்றைய கால அட்டவணையை ( time table ) எடுத்து ஒரு முறை சரிப்பார்த்துக்கொண்டு, தலைமை ஆசிரியரின் ( HOD ) அறையை நோக்கிச் சென்றாள். அறையின் உள் நுழைய, அனுமதிற்க்காக நாசுக்காக ஒரு முறை தட்டிவிட்டு காத்திருக்க, உள்ளே இருந்து, “கெட் இன் அவந்திகா” என்று சிரிப்புடன் அழைத்தார், Dr . வரதராஜன். இந்தக் கல்லூரியின், சிவில் இன்ஜினியரிங் துறையின் தலைவர்.
அவந்திகா, அவருக்கு காலை வாழ்த்தை கூற, அவரும் பதில் மொழிந்து விட்டு, தன் வேலையைத் தொடர்ந்தார். இவள் அங்குள்ள டிபார்ட்மெண்ட் ரெஜிஸ்டரில் கையொப்பம் இட்டு வெளியேறினாள்.
அவந்திக்காவிடம், அவருக்கு எப்பவுமே ஒரு மதிப்பு இருக்கும். அவள் இங்கு நேர்க்க்காணலுக்கு வந்த போது, இவர் தான் அவளின் படிப்பறிவைத் சோதனைச் செய்தது. அவளின் குழப்பமற்ற தெளிவான விளக்கம், வார்த்தை உச்சரிப்பு, எல்லாம் இவளின் மேல் நன்மதிப்பை பெற்றுத் தந்தன.
பின்பு தன்னுடைய இடத்தில் அமர்ந்து, இன்று நடத்தவிருக்கும் தலைப்பைப் பற்றி மேலோட்டமாக குறிப்புக்கள் எடுக்க ஆரம்பித்தாள். அப்போது ஒரு சக ஆசிரியர், அவந்திகா மேம், “நீங்க போர்த் பீரியட் ப்ரீ ஆஹ்… நீங்க எடுத்துக்குறீங்களா… தேர்ட் இயர் தான்…” என்று கேட்க,
இவள் “ஆமா மேம், ஆனால் எனக்கு, லஞ்ச் முடிஞ்சி தொடர்ந்து கிளாஸ் இருக்கு. சோ, என்னால பாக்க முடியாது மேம், சாரி…” என்று கூறிவிட்டாள்.
முடிந்தவரை யாரின் பீரியட்யையும் கடன் வாங்க மாட்டாள். இவளுடைய பீரியட்யையும் தர மாட்டாள். இதில் ஏதாவது தவிர்க்க முடியாதது என்றால் மட்டுமே விதிவிலக்கு.
அவந்திகா எந்த ஒரு ஆசிரியரிடமும் அட்வேன்டேஜ் எடுக்க விரும்பமாட்டாள். அதே போல், இவள் மாணவ, மாணவிகளிடம் காட்டும் கண்டிப்பு, அவர்களிடம் பழகும் விதம், பாடம் நடத்தும் பாங்கு, இதெல்லாம் சேர்ந்து இவளுக்கு ஒரு ரசிக கூட்டமே மாணவச் செல்வங்களிடம் உண்டு. இவள் டிபார்ட்மெண்ட் மட்டும் அல்ல, வேற டிபார்ட்மெண்ட்யை சேர்ந்தவர்களும் இதில் அடக்கம்.
இதனால் ஒரு சில ஆசிரியர்களுக்கு இவளின் மேல் பொறாமை உண்டு. இதற்கெல்லாம் எதுவும் எதிர்வினை ஆற்றமாட்டாள். இதையெல்லாம் இவள் பெரிதாக தலைக்கேற்றி கொள்வதில்லை.
ஆனால் இவளின் வேலையில் தொந்தரவு செய்தாலோ, இல்லை இவளுக்கு வேலைகளை அதிகப்படுத்தி கொடுத்தாலோ, அதற்கெல்லாம் அசைந்து கொடுக்க மாட்டாள். முகத்திற்கு நேரே அவர்களை கிழித்து விடுவாள்.
இதனால் “திமிர், ஆணவம் பிடித்தவள்” என்று பல நல்லப்பெயர்கள் இவளுக்கு உண்டு. அதற்கெல்லாம் செவிச் சாய்க்காமல், “தான் உண்டு..தன் வேலையுண்டு என்று இருப்பாள்…”
ஒரு வழியாக அன்றைய தினத்தை முடித்துவிட்டு வண்டி நிறுத்தும் இடத்திற்கு வந்து தர்ஷிக்கு காத்திருக்க,
அப்போது பிரபாகர் தன் வண்டியுடன் இவளின் அருகே வந்து நின்று இவளிடம், ” மேம்! இன்னைக்கு நாள் எப்படி போச்சு?…” என்று துவங்க,
” எப்போதும் போல தான் சார்..”
“அப்பறம் மேம்…” என்று ஆரம்பிக்க,
அதற்குள் “அவளின் போன் அடிக்க, நீங்க பாருங்க சார்… எனக்கு கால் வருது…” என்று கூறி நகர்ந்துவிட்டாள்.
“சரி மேம்… நாளைக்கு பாக்கலாம்…”
“போனில் வேற யாரும் இல்ல… நம்ம தர்ஷி தான்…”
“இவள் கால் அட்டென்ட் செய்து, தர்ஷி எங்க இருக்க?…”
“அப்படியே நேரா பாரு… வந்துட்டே இருக்கேன்…”
“இந்த பிரபாகர் பேசுனதை பார்த்து தான் கால் பண்ணியா எனக்கு?…” என்று சரியாக யூகிக்க,
” ஆமா…” என்று அவளின் நிற்கும் இடத்தின் பக்கத்தில் நின்றாள். “என்னவாம் இப்போ அவருக்கு… நாளைக்கு இருக்கு…”
” என்னனு தெரியலையே… பாக்கலாம்…”
” என் டிபார்ட்மெண்ட் ‘மேனா மினுக்கி’ வேற அந்த தூணுக்கு பக்கத்துல நின்னுட்டு நீங்க பேசுறதையே முறைச்சுப் பார்த்துட்டு இருந்துச்சி..”
” யாருடி.. ப்ரீத்தி மேமா..”
” ம்க்கும்..இப்போ அவளுக்கு மேம் மட்டும் தான் குறைச்சல்..”
” என்னடி..”
” அவ எதுக்கு ஹாஸ்டல் போகாம இங்க வந்து மறஞ்சி நின்னு பாக்குறா…”
அவந்தி, “என்னனு தெரியலையே… சரி வா… வீட்டுக்கு போய் பேசலாம்…”
” ஹ்ம்ம்… ஓகே…”
இருவரும் பேசியப் படியே கல்லூரியிலிருந்து வீடு வந்தடைந்தனர். தர்ஷ் ” நீ மேல போயிட்டு கதவைத் திற… நான் வண்டிய நிறுத்திட்டு வரேன்…”
” ஹாய் மாலா அக்கா ( வீட்டின் உரிமையாளர்), ஹாய் கீர்த்தி, ப்ரனேஷ் (குழந்தைகள்).. எப்படி இருக்கீங்க என்று கீழே வெளி வராண்டாவில் விளையாடிக்கொண்டிருந்த பொதுவாக நலம் விசாரிக்க,
” வா அவந்தி.. நல்லா இருக்கோம்..ஊர்ல எல்லாரும் எப்படி இருக்காங்க..”
” ம்.. எல்லாரும் நல்லா இருக்காங்க அக்கா..சரி நீங்க கண்டினியூ பண்ணுங்க… நான் அப்படியே கிளம்பறேன், பை…”
இவள் வீட்டில் நுழைந்து, தன் அறைக்கு செல்லப் போக,
தர்ஷி, “நான் ஒருத்தி இங்க சோபால உக்காந்திருக்கேன்… நீ பாட்டுக்கு போற… அப்போ இங்க உக்காந்திருக்க எனக்கு என்ன மரியாதை?…”
அறையிலிருந்து வந்தபடியே “தர்ஷ்…” என்று பல்லைக்கடித்தாள்.
“எஸ் நான்தான்… “
” இப்படி சொல்லிக் கூப்பிடாதே என்னை, உன்கிட்ட நிறையத் தடவை சொல்லிட்டேன் தர்ஷி… டென்ஷன் பண்ணாத… என்னோட விருப்பம் என்னனு உனக்கு தெரியும்…”
” உண்மையை தானடி சொல்றேன்…”
” கட்டடம் கட்டும் வேலை செய்றவங்க தான் கொத்தனார்… ஆனால், அந்த கட்டடம் உருவாக கரணம் ஆகுறதே நாங்க தான்” என்றாள்.
” என்னமோ சொல்லுற… ஹ்ம் நம்புறேன்..”
” அதுலாம் ஒரு கலைடி… ஒரு ஒருத்தவங்களுக்கு தகுந்த மாறி, அவங்களோட இடத்தில், அப்பறம் முக்கியமா அவங்க சொல்ற பட்ஜெட்க்கு ஏத்த மாறி, அவங்க சொல்ற யோசனையையும் சேர்த்து, அவங்களுக்கு பிடிச்சப்போல பண்ணி தரணும்… அதுல நம்மளோட கற்பனையும் சேர்த்து, அப்பறம் என்று அவள் சிலாகித்து பேசிக்கொண்டே செல்ல,
” போதும்… போதும்… ரொம்ப லெங்த்ஆ போது… என்று இடையீட,
” போடி, போடி… கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை…”
ஆம் ! .. அவந்திக்கு, சிறு வயது முதலே கட்டிடம் என்றால் ரொம்ப பிடித்தம். கோவில் சென்றால் முதலில் அந்த கோவிலின் பிரம்மாண்டக் கட்டிடத்தை தான் கண்டு வியப்பாள். கருவறையில் சாமியை கூட வணங்காமல் அவ்வறையை ஆராய்ச்சிக் கண் கொண்டு கவனிப்பாள். அவள் அம்மாவிடம் இதற்க்கு ஏகபோகமா வாங்கி கட்டிக் கொள்வாள். பின்பு வெளியில் யாராவது வீட்டிற்க்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தாலும் அவர்களின் வீட்டைப் பற்றி, தன் வீட்டிற்க்கு வந்தவுடன் அவள் அப்பாவிடம் விவாதம் நடத்தி, அந்த வீட்டின் அமைப்புகளுக்கு கருத்து தெரிவிப்பாள்.
இப்படிச் சிறு வயது முதலிருந்தே, கட்டிடத்தில் இருக்கும் ஈர்ப்பை முன்னிறுத்தி, பன்னிரெண்டாம் வகுப்பில் இவள் வாங்கியிருந்த மார்க்-கிற்கு மருத்துவம் படிக்க சீட் கிடைத்தும், கட்டிட பொறியியலை தேர்வு செய்தாள். இதில் பானுவுக்கு அவ்வளவு உடன்பாடில்லை. சிவில் என்றால் ஆண்கள் படிக்கும் படிப்பு என்று அவருக்கு ஒரு எண்ணம்.
இவள் முதலில் அவரின் மண்டையக் கழுவி பின்பு தான், பொறியியல் கல்லூரிக்கு சென்றாள். இப்பொழுது அவந்தியின் படிப்பின் மேல் அலாதி பிரியம் பானுவிற்கு, ஏனென்றால்… நல்லூரில் இவள் போட்டுக் குடுத்தப் பிளானின் படி மூன்று வீடுகள் உள்ளன. அனைவரிடமும் என் பொண்ணுப் போட்ட பிளான் என்று பெருமைப்பட்டு கொள்வார்.
” அவளின் படிப்பை யாராவது கிண்டல் அடித்தால் இப்படி கோவமாகி விடுவாள்.”
” திரும்ப முதலிருந்து இரண்டு முறை சுற்றி வந்துவிட்டு… இப்பொழுது அவளின் முகத்தை, கூர்ந்து ஆராய்ந்து விட்டு வந்து சோபாவில் அமர்ந்தாள்..”
” பரவால்ல… கொஞ்சம் சூப்பர் பிகர் தான் நீ… ” என்று தர்ஷி கூற..
” என்ன!…” என்று அவந்தி அதிர,
“ஆமாடி… எனக்கு தெரிஞ்சு, நீ ஒரு முரட்டு பீஸ்சு.. அப்படி என்ன இருக்கு உன்கிட்ட, இந்த காலேஜ் புள்ளைங்க அப்பறம் இப்போ இந்த பிரபாகர்லாம் சுத்துறாங்கனு நான் தெரிஞ்சக்க வேணாமா..”
” கூடவே இருந்தியே செவ்வாலை.. உனக்கு இதுகூட தெரியல, அப்படினு இந்த சமூகம் நம்மளக் குறைச் சொல்லக்கூடாது பாரு… அதுக்கு தான் இந்த ஆராய்ச்சி…”
” வேகமாக, இரண்டு கொட்டு வைத்தாள் தர்ஷியின் மண்டையில்…”
” ஹே… விடுடி… வலிக்குது…”
” நல்லா வலிக்கட்டும்…”
” இங்க வந்து உக்காரு… நான் ஆராய்ச்சி பண்ணாத சொல்றேன்…”
“தர்ஷி என்கிட்ட வாங்கி கட்டிக்காத, சொல்லிட்டேன்… ஒழுங்கா எல்லாத்தையும் எடுத்து வைக்கலாம்..”
” ஹே சும்மா வாடி…” என்று இழுத்து பக்கத்தில் அமர்த்தினாள்.
“உன் முகத்துல என்ன தெரியுமா ஹஃயிலைட்? ( highlight )… இந்த தாடைக் ( chin ) கிட்ட இருக்குற இரண்டு மச்சம் தான். எல்லாருக்கும் ஒன்னு தான் இருக்கும். உனக்கு திரிஷ்டி போட்டு வச்ச போல இரண்டு இருக்கு, பக்கத்து பக்கத்துல… அப்பறம் அது என்னடி கீழ உள்ள உதட்டுல கூட ஒரு மச்சம் இருக்கு?…”
” ஐயோ தர்ஷ்…” என்று முகத்தை மூடிக்கொண்டாள்.
” மேகலை… மணிமேகலை… என்ன! என்னடா… வெக்கமா…” என்று தர்ஷி வடிவேலுவாக மாற,
” அடிங்க, உன்னை…” என்று அவந்தி கையை ஒங்க,
” ஹா ஹா… அவந்தி ஈஸ் பேக்… நெக்ஸ்ட், உன்னோட இந்த ஷார்ப் மூக்குல இந்த வெள்ளை மூக்குத்தி அப்படியே…” என்று இழுக்க,
” போதும்! நிப்பாட்டு… மணி என்னனு பாரு… ஏழு ஆகப் போது… ராத்திரி சாப்பாடு என்ன செய்யிறது, யோசி… நான் இன்னும் ஊரிலிருந்து எடுத்து வந்தது, எதுவும் பிரிக்கல… இப்போ இது ரொம்ப முக்கியம்… போடி அங்குட்டு…” என்று எழுந்து அறைக்கு திரும்பினாள்.
அதற்கடுத்து இருவரும் சாதம் மட்டும் வைத்து, வீட்டிலிருந்து எடுத்து வந்த வத்தக்குழம்பை வைத்து இரவு உணவை முடித்துக்கொண்டனர்.
சமையலறையை சுத்தம் செய்து விட்டு வந்து, இருவரும் ஹாலில் ஒரு தலையணை வைத்துப் படுத்துக்கொண்டே தொலைக்காட்சியைப் பார்த்தனர்.
” தர்ஷி… போன் பேசல நீ?… வீட்ல இருந்தும், இன்னும் உனக்கு கால் வரல?… இவ்வளோ நேரம் பேசாத இருக்க மாட்டாங்களே… என்ன பண்ண நீ?…” என்று கேள்விகளை, அம்பு போன்று தொடுக்க,
” அடியேய்… கேள்விக்கு பொறந்தவளே, ஒன்னு ஒன்னாத்தான் கேட்டு தொலையேன்…”
” நீ மழுப்பாத… பதில் சொல்லு… என்னப் பண்ணி வச்சிருக்க?…”
” ஒன்னும் இல்லடி… இரண்டு பேரும் அத்தை வீட்டுக்கு போயிருக்காங்க… அதுதான் எனக்கு கூப்பிடல…” என்று சுருக்கமாக முடித்தாள்.
” ஏன் என்னாச்சி…”
” அதுவா…” என்று கூற வர,
அதற்குள் சரியாய் பானு வீடியோ கால் செய்தார். அவந்தி போனை எடுத்து, “என்ன ம்மா… உங்க நாடகம் எல்லாம் முடிந்ததா?…” என்று கேட்க,
“ஓஹ்… எஸ் மை டாட்டர்… உங்கிட்ட போன் போடும் போதே, உனக்கு புரிஞ்சிக்க வேணாமா… இதுல கேள்வி வேறக்கேக்குற…”
“சரி விடுங்க… உங்ககிட்ட கேட்டேன்ல என்னை…” என்று அடுத்துப் பேச வருவதற்குள்,
” நான் வேணும்னா… செருப்பு எடுத்து வந்து தரவா அவந்தி மா…” என்று தர்ஷி பாசமாக கேட்க,
அவந்தி திரும்ப பேச வருவதற்குள், “இந்நேரம் எடுத்து வந்து தந்திருக்க வேண்டாமோ நீ…” என்னோவோ கேட்டுட்டு இருக்க ‘தஸ்புஸ்’ என்று பானு இடையீட,
” பானுமா…ஆஆ, என் அழகான பேரை இப்படி டேமேஜ் பண்றீங்க, அப்போப்போ நீங்க… போங்க, உங்க கூட நான் காய் விடுறேன்…” என்று தர்ஷி சோகமாக கூற.
“இப்படி ரெண்டு பேரும் பேசுனா..எப்படி நான் பதில் சொல்றது… கடவுளே எனக்கு ரெண்டு வாய் குடுத்து இருந்திருக்கலாம்..” என்று பேச,
“ஐயோ…மீ” என்று இருவரும் ஒன்றுபோல் கத்த,
“ஹா ஹா…” என்று சிரித்து விட்டு, தஸ்புஸ்.. நீ இன்னும் கிளம்பாம இருக்குறதால, உனக்கு நோ பதில்… அடுத்து அவந்தி, உனக்கு என்ன பதில் அப்படினா, என் புருஷன்… என் சொத்து… அதனால நான் மட்டும் தான் அவரை எதுனாலும் சொல்ல முடியும்…” என்று முடித்தார்.
” செம பானுமா… தலைச் சிறந்த பதில், என்று நான் தீர்ப்பு வழங்குறேன்…” தர்ஷி.
அவந்தி அன்னையை முறைத்து வைத்தாள்.
பின்பு “அக்கா பேசுனாலா?, என்ன சொன்னா?… நான் நாளைக்கு பேசுறேன் அவள்ட… அப்பா எங்க?…” என்று அவந்தி வரிசையாக கேட்க,
” சொல்லு டா… எல்லாம் ஓகே வா… இன்னைக்கு டே எப்படி போச்சு, தர்ஷி எப்படி இருக்கா…” என்று விசாரிக்க,
” யா ப்பா..எல்லாம் ஓகே தான்.. தர்ஷி நல்லா இருக்கா…” என்று இருவரும் ஐந்து நிமிடம் பேசிவிட்டு,
” சரி ப்பா… நேரமாச்சு, நாளைக்கு பேசுறேன்… ம்மா, பை…” என்று கூறி விடைபெற்றாள்.
போனை வைத்ததும் அவந்தி அர்த்தமாக தர்ஷியிடம், “யு ஓகே…” என்று கேட்க,
“ஆமா!.. ஐ அம் ஓகே..”
அவந்தி, பொறுமையாக கேட்டுக் கொள்ளலாம் என நினைத்து விட்டுவிட்டாள்.
” பத்தாகிட்டு மணி… தூங்க போலாம்…” நாளைக்கு அப்போதான் எழுந்து கிளம்ப சரியாய் இருக்கும்.
” சரிடி… குட் நைட்…”
“ம்… குட் நைட்… ஒழுங்கா ஒருத்தடவை வந்து எழுப்புனதும் எழுந்திரிக்கணும்… இல்ல எழுப்பாம அப்படியே விட்டுட்டு போய்டுவேன்…” என சொல்ல,
” நீ… நான் எழுந்திரிக்க போல, அன்பா எழுப்பனும் சரியா?…” என்று டீல் பேச,
அவந்தி கேவலமாகப் பார்க்க,
” சரி விடு… போய்த் தூங்குவோம்.” என்று இரண்டு அறைகள் கொண்ட அவ்வீட்டில் அவரவர் அறைக்கு தூங்கச் சென்றனர்.
இங்கு இவள் தூங்க செல்ல, அங்கு இவளவன் தன் தாயிடம் மல்லுக்கு நின்றிருந்தான்.
சாரல் வருடும்..
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.