காலை உணவை மனைவி பரிமாற அவரை முறைத்துக்கொண்டே, தட்டில் வைத்ததை உண்ண ஆரம்பித்தார். ஒவ்வொரு வாய் எடுத்து உண்ணும் போதும் மனைவியின் முகத்தைக் கூர்ந்துப் பார்க்க,
அது அவருக்கு தெரிந்தாலும், ஒன்றும் கேட்காமல் இருந்தார். இந்த முறை அவரை சற்று உற்று நோக்க, என்னங்க வேணும்? சட்னியா.. இருங்க, இதுல கம்மியத் தான் இருக்கு போயிட்டு இன்னும் கொஞ்சம் எடுத்து வரேன் என்று சமயலறைக்கு சென்றார்.
அங்கு சமையலறைக் கதவின் அருகில் நின்ற அவரது மருமகள், காவியா “என்னத்தை மாமா உங்கள ரொம்ப நேரமா லுக்கு விட்டுட்டே இருக்கறார். நீங்க கண்டுக்காம,பாக்காதது போலவே இருக்கீங்க” என்று அவரிடம் மெதுவாக கேட்டுக்கொண்டே பின் தொடர்ந்தாள்.
“உங்க மாமா என்னைய லுக்கு விடுறதுத் தான் இப்போ கொறச்சல்” என்று பேசிக்கொண்டே அங்கிருந்த சட்னியை எடுத்து கிண்ணத்தில் நிரப்பினார்.
“என்னத்தை இப்படி சொல்லிட்டீங்க. மாமா அப்போ உங்கள லுக் விடலைன்னு சொல்றிங்களா..”
“அப்போ நீயே போயிட்டு என்ன மாமான்னு கேட்டுட்டு வா..”
“அத்த்த்த்தை…நான் இந்த விளையாட்டுக்கே வரல..”
“இவ ஒருத்தி எல்லாத்துக்கும் பயந்துகிட்டு..”
காவியா, அவரின் முதல் மருமகள். திருமணமாகி இரண்டு வருடம் ஆகிறது. காவியாவிற்க்கு தந்தை மட்டுமே, தாய் இல்லை. இங்கு வந்த புதிதில், அவளிடம் தன் ஆளுமையை காட்ட நினைத்து, இந்த வீட்டு குடும்ப பழக்கவழக்கம் எல்லாம் நல்லா தெரிஞ்சிக்கோ. உனக்கு உங்க வீட்ல சொல்லித்தர யாரும் இல்லை. அப்பறம் இவ்வளோ பெரிய வீட்ல எப்படி நடக்கணும் தெரிஞ்சிக்கோ என்று பேசிக்கொண்டே செல்ல, அவரை அதற்க்கு மேல் பேசவிடாமல் அழைத்து சென்றது அவளின் மாமியார் தான்.அன்றைய நாளிலிருந்து அவருடனிருந்து ஒதுங்கியே இருப்பாள்.ஆனால் கோமதியிடம் அதற்க்கு எதிர்மறை. கணவனை விட அதிக ஓட்டுதல் அவள் மாமியாருடன். அவரும் வீட்டுக் கொடுக்கமாட்டார்.
“இல்லத்த..அது தானா என்று சொல்ல வர”
“அடப்போடி..உன்னைய என்னத்த சொல்றதுனே தெரியல..”
அதற்குள் இவ்வளோ நேரமாவா சட்னி எடுத்துட்டு வர என்று டைனிங் ஹாலில் இருந்து குரல் வர, இந்தா வந்துருச்சுப் பாரு சத்தம். சட்னியக் கூட சாம்பாரா சாப்புடுறது உங்க மாமாவாத்தான் தான் இருப்பார் என்று சொல்லிக்கொண்டே சட்னியை எடுத்துச் சென்றார்.
“என்னத்த தான் பண்ணுவியோ உள்ள, போனா எடுத்துவர அரைமணி நேரம் என்று பேசிக்கொண்டே எடுத்தூத்து சட்னிய, அதையும் நானே சொல்லணும் என கூற, பதில் ஒன்றும் பேசாமல் அவருக்குப் பரிமாறினார்.
காலை உணவை முடித்துவிட்டு, ஹாலிற்கு சென்றுச் சோபாவில் அமர்த்துக்கொண்டே, ஒரு காபி எடுத்துவா என்று சமையலறை நோக்கி குரல் கொடுத்தார். அவர் வீரபாண்டியன்.
வீரபாண்டியன், தஞ்சை மாவட்டத்தில் எடக்குடி என்னும் ஊரைச் சேர்ந்தவர். தன்னுடைய பதினைந்து வயதில் தந்தையை இழந்து, தாய் மற்றும் இரண்டு தங்கைகளுடன் தனியாக நின்றப் பொழுது உறவுகள் யாரும் இவருக்கு உதவ முன் வரவில்லை. உறவுகளின் முன் தான் முன்னேறி பெரியாளாக வர வேண்டும் என்று நினைத்து, தன் அசாத்திய உழைப்பால் அதை மெய்ப்பித்தார்.
இன்று அவ்வூரின் பெரிய நெல் வியாபாரி. சொந்தமாக இருபது ஏக்கர் நிலமும் உண்டு. அவ்வூரில் அனைவரும் வியந்து பார்க்கும் படி இரண்டு மாடிகளை கொண்ட ஒரு வீடு காட்டியிருக்கிறார்.
இரண்டு தங்கைகளுக்கும் அவ்வூரின் பக்கத்திலே நிறைய சீர்ச் செய்து மணமுடித்து கொடுத்துள்ளார். இவரின் அன்னை நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் தான் சிறுநீரக செயலிழப்பால் காலமானார்.
வீரபாண்டியன் குடும்பத்தில் தான் சொல்வதை தான் கேட்கவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். தன் பேச்சிற்கு எதிர்த்து மறுபேச்சு யாரும் தெரிவித்தால் அவர்கள் இவரின் பாஷையில் அடங்காதவர்கள், திமிர்பிடித்தவர்கள்.
இவருக்கு ஜாதகத்தில் நிறைய நம்பிக்கை உண்டு. ஏதாவது புதிதாக தொழில் தொடங்க வேண்டும் என்றாலோ அல்லது வீட்டிற்கு கார், டிராக்டர் போன்ற வாகனங்கள் வாங்கவேண்டும் என்றால் கூட ஜோதிடம் தான். ஆகமொத்தம் “எங்கும் ஜோதிடம் எதிலும் ஜோதிடம்.”
ஒரு காபி போட்டுகொண்டு வர இவ்வளவு நேரமா..” என்று சமயலறை நோக்கி சத்தமிட,
“என் மாமியார் கூட பரவலா போல இவருக்கு, வர வர ரொம்ப ஆட்டமாமிருக்கு தாங்கமுடியலை” என்று புலம்பிக்கொண்டே காபியை எடுத்து சென்றார். அவர் கோமதி.
அந்த வீட்டை தன் அன்பால் கட்டிப்போட்டு அனைவரையும் அனுசரித்து செல்பவர். இதில் எந்த கோர்ப்பார்ட்டிலும் வராதவர் வீரபாண்டியன் மட்டும் தான். இவர்களுக்கு மொத்தம் நான்கு பிள்ளைகள்.
காபியை கையில் வாங்கிக்கொண்டே, “என்ன சொன்னான் உன் மவன், நானும் ராத்திரிலயிருந்து பாக்குறேன், அவன் பேச்சு எடுத்தாலே ஒன்னும்
தெரியாதது போல போற. என்ன அவ்வளோ ஆகிட்டா உனக்கு, எல்லாம் அவன் குடுக்குற இடம் தான்” என்று சத்தமிட,
“ஒன்றும் கூறாமல் அவரின் முத்தை பார்க்க..”
“உன் கிட்ட தான் கேட்டுட்டு இருக்கேன். நீ என் மூஞ்சையே பார்த்த என்ன அர்த்தம் ..”
“அது.. காபி டம்ளர்..”
“என்ன! நான் என்ன கேட்டுட்டு இருக்கேன். நீ என்ன கேக்குற” என்று கோவமாக..
” அவன் என்கிட்டே நேத்து சரியாய் பேசல..ஹாஸ்பிடல்ல இருந்து லேட்டா தான் வந்தானாம். அதனால இன்னைக்கு பேசலாம்னு இருக்கேன்..”
” அப்போ நேத்து ராத்திரி நீ போன்ல பேசவே இல்ல.. இதை நான் நம்பனும்..”
இதை பார்த்துக்கொண்டு இருந்த காவியா “அட அத்தை.. மாமாவை ஏன் டென்ஷன் பண்றீங்க..”
“இவ ஒருத்தி.. ஓடிரு அங்கிட்டு.. அவனுக்கு பிடிச்ச பொண்ணா பக்கமா, இவரு இஷ்டத்துக்கு பாப்பாரு..அதான் இப்படி பண்ணேன்..”
” செம தூள் அத்த..”
” ஆமா.. தூளு தான்.. அந்த டீத் தூளை கொதிக்குற பால்ல போட்டு வடிகட்டி எடுத்து வா. குடிச்சிட்டு தெம்பா போவோம்..”
“என்னது போவோமா… நீங்க மட்டும் தான் போறீங்க..”
“அதுலாம் அப்பறம் பேசலாம் டீயை வெரசா எடுத்துவா. அடுத்த சத்தம் குடுக்குறதுக்குள்ள..”
“ம்ம்..இதோ முடிஞ்சது..”
“டீயை ஆவிபரக்க வாயில் ஊத்திக்கொண்டு.. இந்தா வந்துட்டேங்க என்று கூறிக் கொண்டே அவரின் முன் பவ்யமாக நின்றார்.
“என்ன சொல்லு..”
“நீங்க தான் ஏதோக் கேட்டுட்டு இருந்திங்க..”
“அவர் முறைத்துப் பார்க்க..”
அவர்களின் முதல் மகன் ராஜ்குமார், அப்பா என்று அழைத்துக் கொண்டே உள்ளே வந்தான்.
“சொல்லு ராஜா.. மருந்து எல்லாம் ஒழுங்கா அடிக்குறாங்களா..யாரை பாக்கச் சொல்லிட்டு வந்திருக்க, மாரிமுத்துவ தானே” என்று கேட்க
“ம்ம்..ஆமாப்பா என்று தலையை ஆட்ட..”
“சரி.. வெரசா சாப்பிட்டுட்டு போயிட்டு என்னனு பாரு.. நான் கடைக்கு கிளம்புறேன் என்று சொல்லிக்கொண்டே, மனைவிடம் உன் மவன்ட கேட்டுவை என்று எழுந்து சென்றார்.”
“ம்..சரிங்க..”
அவர் வெளியில் சென்றவுடன், என்னம்மா அப்பா கேட்டு வைக்க சொல்லறாங்க என்று கேள்வியெழுப்ப,
“அடேய்..முதல்ல வந்து சாப்டுட்டு அப்பறம் கேளு.. காவியா சாப்பாடு எடுத்து வை” என்று சொல்லிக்கொண்டே சமயலறைக்கு செல்ல,
“சரி இருங்க.. கை, கால் கழுவிட்டு வரேன்..”
மூத்தவன் ராஜ்குமார். அப்பா பேர்ச்ச்சொல்லும் பிள்ளை, அதாவது அப்பா என்ன சொல்வாரோ அதை மட்டும் சிறப்பாக கேட்டு செயல்படும் பிள்ளை. அவரின் பேச்சிற்கு மறுபேச்சு என்பதே இவனிடம் இதுவரை இருந்தது இல்லை.படிப்புச் சரியாக வராமல் போக தந்தையுடன் நிலங்கள் பார்வையிட செல்ல இப்பொழுது அதுவே அவன் வேலையாகியது. நிலங்கள் மேல்பார்வை எல்லாம் இவன் தான்.
ஆனால் நிலத்தில் வரும் வருமானம் எல்லாம் சென்று சேருவது அவனின் தந்தையிடத்தில் தான். இன்றளவும் வீட்டின் வரவுச்செலவு அவர் தான் பார்த்துவருகிறார்.
இவன் வந்து அமர்ந்தவுடன், காவியா உணவு பரிமாறச் செய்ய, அப்படியே நீயும் உக்காரு காவியா. நான் எல்லாம் எடுத்து வரேன்.
“இல்லத்தை..நாம அடுத்து சாப்புடுவோம்..இவங்க சாப்பிட்டு போகட்டும்.”
“ஏன்?.. சாப்பிட வேண்டியது தானே..”
“இவள் அதிர்ச்சியாகி வெளியில் பார்க்க..”
“என்னடி..”
“அதுவா வெளில மழை வருதான்னு பாக்குறாங்க..நீ பேசுனதுக்கு என்று பேசிக்கொண்டே வந்து அமர்ந்தான், சுரேஷ் குமார்.
சுரேஷ்,மூன்றாவது பையன், தஞ்சாவூரில் உள்ள தனியார் பயிற்சி நிலையம் ஒன்றில், அரசுத் தேர்வெழுவதற்கான வகுப்பில் பயில்கிறான்.
“போடா..நான் மிரட்டுறதுக்கு அப்படியே உங்க அண்ணி பயந்துக்குவா..இன்னும் இங்கதான் இருக்க பாரு..”
“என்னங்க..என்னைப்போய் இப்படி சொல்றிங்களே..”
“காவியா உக்காரு..நான் எல்லாம் எடுத்து வந்துட்டேன்” என்று கோமதி கையில் சாப்பாட்டுடன் வந்தார்.
சுரேஷ், “வாங்க சாப்டுட்டே மாநாடு போடுவோம்..அப்பா தான் நெல்லுமாடிக்கு போயாச்சே..”
ராஜா, “டேய்..அப்பாவலதான் நாம எப்படி இருக்கோம்..”
“போடா அப்பாக்கோண்டு..”
“ம்மா..இவன் அடிவாங்க போறான் என்கிட்டே..”
” சுரேஷ் அமைதியா இரு. அவன் தான், அவரு கிழிச்ச கோட்ட விட்டு நகரமாட்டான்.. தெரியும்ல..”
காவியா..”ஹா ஹா..சரியாய் சொன்னிங்க அத்தை..”
“ம்மா..நீங்களுமா ..உனக்கு என்னடி சிரிப்பு என்னை சொல்றதுல..”
“அவளை ஏன்டா திட்டுற..உங்க அப்பா பண்ணுன ஒரே நல்லா விஷயம், அவளை உனக்கு கல்யாணம் பண்ணி வெச்சது தான்..”
காவியா, “பார்த்துக்கோங்க..”
ஆனா நல்லவன் வாழ்க்கையை என்ன பண்ணப் போறாருனு தெரியல. இவனுக்கும் இவங்க அப்பாக்கும் ஏற்கனவே எட்டிக்குப்போட்டி தான். இரண்டு பேருக்கும் ஒரு விஷயத்தில் ஒத்துமைனா அது மத்தவங்களை போட்டு படுத்துறது தான் டா. இவனுக்கு கல்யாணம் முடியறதுக்குள்ள, நான் என்ன பாடு படப்போறேன்னு தெரில என்று கவலையாக கூறினார்.
“விடுங்கம்மா பாத்துக்கலாம்.” ராஜா
“ம்மா..இல்லன்னா ‘பலியாடு’ அண்ணா தான் இருக்கான்ல, வச்சி செஞ்சிடுவோம் அவரை. ‘பி ஹாப்பி’ என்று தேற்றினான்.
“என்னமோடா..எல்லாம் நல்லா நடந்தா சரிதான்.
“வைஷு கால் பண்ணலா த்தை.. நான் நேத்து பேசவே இல்லை.”
“ம்..அவளுக்கு ஏதோ பரீட்சையாம்.. அதை சொல்லிட்டு வச்சிட்டா..”கடைக்குட்டி வைஷாலி, கோவையிலுள்ள பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கிறாள்.