அவந்தி, தனது போனின் சத்தத்தில், எழுந்து மணியை பார்க்க, அது காலை பத்தரை என்று காட்டியது.
“அச்சோ… இவ்வளோ நேரம்தூங்கிட்டேனா” என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டே காலை அட்டென்ட் செய்து, “ஹலோ! அகல், எப்படி இருக்க?…” என்று கேட்க,
“என்ன அவந்தி இன்னும் ஏழலை, மணி பாத்துட்டுத் தான் கூப்பிட்டேன்.”
“இல்லை அகல்… நேத்து, இந்த தர்ஷி பிலிம் பாக்கணும் சொன்னானு, ஒரு படம் பாத்துட்டு லேட்டா ஆஹ் ஹால்லயே தான் படுத்தோம் அதான். பாரு இந்த கும்பகர்ணி நான் பேசுறதுக்கு கூட தெரியாம, எப்படித் தூங்குறாப் பாரு.”
“சரி விடு.. கொஞ்ச நேரம் தூங்கட்டும்… பாவம் புள்ள…”
“இவளுக்குலாம் பாவமே பாக்கக் கூடாது… நீ சொல்லு… என்ன பண்ற?… ஏன் இவ்வளோ சீக்கரம் எழுந்திருக்க?… அங்க மணி இப்போ அஞ்சு தானே?… ஏன் அதுக்குள்ள எழுந்த?… ஓகே தான நீ?, பாப்பு?, அத்தான் எல்லாம்?” என்று படப்படவென்று கேள்விகளை அடுக்க,
“அவந்தி… ஸ்டாப், ஒரு ஒரு கொஸ்டின் ஆஹ் கேளு..”
“நீ சொல்லு… நான் இப்படி தான்…”
“உனக்கு வரப்போறவன் ரொம்ப பாவம்…”
“அதே தான் க்கா.. நானும் சொல்றேன்… இவகிட்ட நான் மாட்டிகிட்டு எவ்வளோ கஷ்டப் படுறேன்னு, இப்போவது உங்களுக்கு புரியுதா?” என்று தர்ஷி இடைப்புக,
“சரி சரி… ரெண்டு பெரும் அமைதியா இருந்தா நான் பேசுறேன்…”
“சரி சொல்லு..”
“ஆதினி நைட் சரியாத் தூங்கவே இல்ல.. என்னனு தெரியல.. இப்போத்தான் பால் குடுத்துட்டு, வாஷ்ரூம் போயிட்டு வந்து படுத்தேன். தூக்கம் வரல, நீ கடையில இருப்பேன்னு கூப்பிட்டேன்.”
“என்ன ஸ்டேட்டஸ் ஆஹ்ஹ!! … இரு வரேன்… இப்படி வைக்காதிங்கனு சொல்லியும் வச்சிருக்காங்க பாரு” என்று கூறிவிட்டு அம்மாவின் ஸ்டேட்டஸை சென்று பார்க்க.. ‘ வைட்டிங் போர் சப்ரைஸ்’ என்று எழுதி புடவை போட்டோ போட்டு வைத்திருந்தார். இதைப் பார்த்து கடுப்பாகி, அகல் நான் அம்மாட்ட பேசிட்டு வரேன்.
“சரி…ஈ, வந்து பேசிக்குறேன்.. அவங்களுக்கு இருக்கு..”
“அம்மா இன்னைக்கு, நீங்க இவகிட்ட மாட்டிட்டீங்களே… உங்களுக்கு என்னுடைய அனுதாபங்கள்..” என்று முணுமுணுத்துக்கொண்டே அவளின் அறைக்கு சென்றாள்.
சிறிது நேரம் கழித்து கையில் காப்பியுடன் வந்து அமர்ந்துக் கொண்டு, தனது போனைப் பார்க்க அதைக் காணவில்லை. இவள் போன் எங்கே என்றுத் தேட, ஒன்றும் அறியாததுப் போல், “என்னடி தேடுற?” என்றாள், தர்ஷி.
“போனை ஐந்து நிமிடமாகத் தேட அது கண்ணில் தென்படவில்லை.”
இதைக் கொண்டுகொள்ளாமல் தர்ஷி, காபியில் பிஸ்கட் தொட்டு உண்ண.. சந்தேகமாக அவளை பார்த்தாள் அவந்தி.
“என்னடி.. உனக்கும் வேணுமா..”
“போன எங்க வச்ச..” என்று கடுப்பாக கேட்க,
“என்கிட்ட கேட்டா..”
“ஓஒ… உனக்கு தெரியாது…”
“உண்மையா சொல்றேன் டி… எனக்கு தெரில நீ எங்க வச்சனு…”
“அய்யயோ…” என்று குடுகுடுவென ரூமிற்கு ஓடி அவளுடைய போனை எடுத்துக்கொண்டு வந்தாள்.
அவந்தி,” போனை வாங்காமல் அவளை முறைக்க..”
“இல்லடி.. சும்மா விளையாட்டுக்கு..”
அவளிடம் இருந்து போனை பிடிங்கி அவள் அம்மாவிற்கு கால் பண்ண,
“இதுக்கு நான் போன எடுத்து வைக்காமையே இருந்திருக்கலாம் போல, கொஞ்சம் டைவர்ட் ஆவான்னு பாத்தா… ம்ஹ்ம்…., இவளைப் பத்தி தெரிஞ்சும், நான் பண்ணது என்னோட தப்புதான் என்று முனகிக் கொண்டே அவள் பக்கத்தில் அமர்ந்தாள்.
“அப்படியே அமைதியா உக்காந்திருக்க, நான் பேசும் போது இடையில பேசி, பேச்சை மாத்துனனு வைச்சிக்கோ.. உனக்கு இருக்கு” என்று மிரட்டிக் கொண்டே அவள் அம்மா போனை எடுக்க காத்திருக்க,
அங்கே அவள் அம்மா எடுத்தவுடன், “அவந்தி நானே உனக்கு கூப்பிடனும் இருந்தேன். எந்தக் கடைல இருக்க, நான் சொன்னதுப் போல மாடல், கலர்லாம் இருக்கா, இரு வீடியோ கால் வரேன்.”
“ம்மா..ஆஆ..” என்று பல்கலைக் கடிக்க,
சற்று நிதானித்தார் பானு.. இப்போ ஏண்டி பல்கலைக் கடிக்குற…
“நீங்க என்ன பண்ணி வச்சிருக்கீங்க..யாரு உங்கள ஸ்டேட்டஸ்லாம் வைக்க சொன்னது..” என்று கடுகடுத்தாள்
“இப்போ எதுக்கு கத்துற… ஸ்டேட்டஸ் சும்மா வச்சேன்…”
“உங்களுக்கு எதுக்கு இந்த வெட்டி வேலையெல்லாம்..வேற வேலை இல்லையாம்மா உங்களுக்கு..இப்படி வைக்காதிங்க சொல்லிருக்கேன்ல.. இப்போ என்ன உங்க ஸ்டேட்டஸ் பாத்துட்டு எல்லாரும் கேட்கணுமா..”
“ஆமா.. இதுல என்ன இருக்கு.. இதுக்கு தான் இப்ப கால் பண்ணியா?… அப்போ எனக்கு புடவை வாங்கலையா?..”
“ம்மா.. இதுதான் லாஸ்ட், நீங்க இப்படி ஸ்டேட்டஸ் வச்சி ஊருக்கே சொல்றது சொல்லிட்டேன். எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கில நீங்க இப்படி பண்றது.. எல்லாத்தையும் எல்லாருக்கும் இப்படி தெரிவிக்காதிங்க ப்ளீஸ் ம்மா.. வர வர பிரைவசியே இல்லாம போச்சி இப்படி சோசியல் நெட்ஒர்க் எல்லாத்தையும் ஷேர் பண்ணி” என்றாள்.
“போதும்டி டீச்சரம்மா.. நீ எனக்கு கிளாஸ் எடுக்க வேண்டாம்.. சொல்லிட்டள்ள விடு.. நீ எனக்கு புடவை எடுத்து தரலான விடு. என் வீட்டுக்காரர் நான் கேக்காமையே வாங்கித் தருவார்..”
“இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை.. பீரோவ் முழுக்க இருக்க புடவைப் பத்தலையா உங்களுக்கு.. நான் சொன்னதை விட்டுட்டு நீங்க டாபிக் மாத்தி பேசாதீங்க.. நான் இனிமேல் வைக்க மாட்டேன்னு சொல்லுங்க..”
அவந்தி, “உனக்கு பிடிக்கலைன்னா, நானும் அதைப் பண்ணக் கூடாதுனு இல்ல.. உனக்கு புரிஞ்சிதா..”
ம்மா.. எனக்கு பிடிச்சதை தான் நீங்க செய்யணும் நான் சொல்ல வரல.. போட்டோ போடுறிங்கன்னா அது வேற ம்மா.. இப்படி புடவைனு முதல்ல போடுவீங்க, அப்பறம் நான் எதோ வேற பொருள் வாங்கி குடுக்குறேன்னு வைங்க.. நெக்ஸ்ட் ஒரு ஆர்வத்துல அதையும் போடுவீங்க.. இதுல்லாம் யாரோ ஒருத்தர் பார்த்துட்டு, நாமளும் அது மாறி போடணும்னு நினைச்சி, அவங்க அதை வாங்கக் கூடிய சூழ்நிலைல இல்லைனு அவங்களுக்கு தெரிஞ்சும், அதயெல்லாம் பொருட்படுத்தாம வீட்ல உள்ளவங்கள தொந்தரவுப் பண்ணி அதையெல்லாம் செயல் படுத்துறாங்க.. இதுலாம் வெளில வராது.. இதனால் எவ்வளோ பேரு ஸ்ட்ரெஸ் ஆகுறாங்க ம்மா.. அப்படியே இதுக்கே அவங்களாம் அடிமை ஆகிடுறாங்க…
நான் ஒத்துக்குறேன், சோசியல் நெட்ஒர்க்-ல நல்லதும் இருக்கு. அதே சமயம் இந்த மாறி கெட்டதும் இருக்கு. அவங்ககிட்ட இருக்கு அதுனால அப்படி ஸ்டேட்டஸ், போஸ்ட்லாம் பண்றங்கன்னு நினைச்சி, அதையெல்லாம் பார்த்து ரசிச்சிட்டு விட்டுட்டா ஒன்னும் பிரச்சனை இல்லை. இல்ல அவங்கப்போட்டது போல நாமளும் ட்ரெண்டிங் ஆஹ் போடணும்னு சொல்லி தேவையில்லாததுலாம் வாங்கி குவிச்சு, அதை யூஸ் பண்ணாம நம்மகிட்ட இதுலாம் இருக்குனு காமிக்க போட்டாங்கன்னா, அவங்களுக்கு தான் பணவிரயம் அது… என்று முடித்தாள்.
பானு ஒன்றும் சொல்லாமல், “தஸ்புஸ் எங்கே?” என்று கேட்க,
“ம்மா.. நான் என்ன பேசுறேன்… நீங்க அவளைக் கேக்குறீங்க…”
“நீ இவ்வளோ பேசுனிலை… உனக்கு ஒரு சோடா வாங்கிட்டு வர சொல்லலாம்னு தான்…” என்றார் சீரியஸ் ஆக,
“ம்மா.. இவ என்னைய பேசக்கூடாதுனு சொல்லிட்டா…” என்று புகாரளிக்க,
“அவ்வளோ நல்லவளா நீ..”
“நம்புங்க மீ நம்புங்க… நான் ரொம்ப நல்லவ..”
“எதையோ சொல்லு..”
“இந்த உலகம் நல்லவர்களை எப்பவும் நம்பாது என்பதற்கு நீங்க ஒரு சாட்சி..” என்று பேசிக் கொண்டே அவந்தியை பார்க்க, அவள் அமைதியாக இருக்க, ம்மா.. உங்கப் பொண்ணு ரொம்ப அமைதியா இருக்கா..
“அவ பேசுனத்துக்கு, நான் எதுவும் சொல்லல, அதுக்கு பதில் வர வரைக்கும் இப்படி தான் இருப்பா..”
தர்ஷி, “இவளை வச்சிக்கிட்டு..”
அவந்தி என்று பானு அழைக்க,
“ம்.. சொல்லுங்க..”
“அம்மாக்கும் தெரியும் என்னலாம் வைக்கணும்… உனக்கு அது புரிஞ்சிதா…”
“ஓகே.. விடுங்க..”
“அப்போ எனக்கு புடவை இல்லையா..”
“ஆனாலும் ம்மா.. நீங்க இருக்கீங்களே” என்று சிரித்து விட்டாள்.
தர்ஷி மணியை பார்த்துவிட்டு, “அடப்பாவி மணி ஒன்னாக போகுது.. ஒரு ஸ்டேட்டஸ் வச்சதுக்காக, நீ இவ்வளோ நேரத்தை பேசிப் பேசியே எங்க காதுல ரத்தம் வர அளவுக்கு பண்ணிருக்க..இதுல போன் பண்ண அக்காகிட்டயும் ஒழுங்கா பேசல.. நம்ம எப்போ வெளில கிளம்புறது என்றாள்.
தர்ஷி இது நான் சும்மா சொல்லல, ரிசெர்ச் ஸ்டடீஸ்ல சோசியல் மீடியா நிறையப் யூஸ் பண்றவங்களோட எதிர்மறை தாக்கம், முக்கியமா 35 வயதுக்கு கீழ மட்டும் 15 சதவீதத்திலிருந்து 41 சதவீதம் கூடுதல் ஆகிருக்கு சமீபத்திய ஆண்டுகள்ல… அதாவது மனச்சோர்வு, தனிமை, கவலை, குறிப்பாக தற்கொலை கூட இதுல அடங்குதுனு அந்த ரிசெர்ச்ல சொல்லுது.
நிமிடத்துல ஒரு முறை எதுக்கு பாக்குறோம்னே தெரியாம அதுக்குள்ள மண்டைய விட்டுக்க வேண்டியது.. அப்பறம் நாமளும் பிரபலம் ஆகிடணும்னு சொல்லி ஒரு குரூப், இதையெல்லாம் ஆதரிக்குற அம்மாக்கள் வேற, ட்ரெண்டிங் பைத்தியங்கள், சாகசம் பன்றேன்னு சொல்லி ஒரு குரூப்… இன்னும் இது மாறி நிறைய வகைரா இருக்கு..
தர்ஷி,” இதுலாம் மாறும்னு நினைக்கிறியா நீ.. இன்னும் ஜாஸ்தி தான் ஆகும்.. நாம எல்லாம் அதுலயே போய்ட்டோம்…”
இது தான் நானும் சொல்ல வரேன், நம்ம பிரைவசி வெளில வராம நாமதான் பாத்துக்கணும். அப்பறம் சோசியல் நெட்ஒர்க் நமக்கு உபயோகம் உள்ளதாக மட்டுமே இருக்கணுமே தவிர, அது நம்மையே ஆட்கொண்டு போகுற அளவுக்கு விடாம இருந்த சரிதான்.
“ம்ம்..”
பானு, ” பாயிண்ட் பாயிண்ட் ஆஹ் பேசுற.. சரி விடு.. நீங்க பத்திரமா கிளம்பி போயிட்டு வாங்க.. எனக்கு வேலை இருக்கு.. நான் போனை வைக்கிறேன்.. சாறி முக்கியம்.. சொல்லிட்டேன் அவ்ளோதான்.. ” என்று கூறி வைத்துவிட்டார்.
“இந்த அம்மா இருக்காங்களே.. தர்ஷி கிளம்பு போ..”
” பசிக்குது எனக்கு..”
“சரி வா.. கொஞ்சமா சாப்டுட்டு, அப்பறம் ஒரு மூணு மணிக்கு கிளம்பி போலாம்..”
“ஓகே டி..”
– – – – – –
நந்தா, “டேய் நாங்க வண்டிய பார்க் பண்ணிட்டு வரோம். வைஷு எண்ட்ரன்ஸ்ல நிக்குறேன் சொன்னா, அவளை போயிட்டு பாரு..”
அரவி, ” சரி வாங்க.. நான் போய் பாக்குறேன்..”
இவன் உள்ளே நுழைய, வைஷாலி இவனைப் பார்த்து விட்டு, கையசைத்து கொண்டே அவள் தோழியுடன் வந்தாள்.
“ஹாய் அண்ணா.. எப்படி இருக்கீங்க.. எங்க மத்த அண்ணாஸ் எல்லாம் காணும்.”
“வராங்க வண்டிய நிறுத்திட்டு.. நீ எப்படி இருக்க.. இதுதான் உன் பர்த்டே பிரெண்ட் ஆஹ்..” என்று கேட்க
“இவ இல்லண்ணா.. அவங்கலாம் கிளம்பிட்டாங்க.. நானும் இவளும் மட்டும் ஹாஸ்டல்.. உங்கள பாத்துட்டு, திங்ஸ் வாங்கிட்டு கிளம்ப வேண்டியது தான்… செவென் குள்ள ஹாஸ்டெல்ல இருக்கனும்…”
“ஓகே சரி.. என்ன வாங்கணும்…”என்று கேட்க,
அதற்குள் நவீன், நந்தா வர.. எப்படி இருக்கா வைஷு என்று நந்தா கேட்க
“நல்ல இருக்கேன் ண்ணா.. ஹாய் நவீன் ண்ணா.. இவ என் பிரெண்ட்.. வித்யா..”
“ஓகே.. ஹாய் மா..”
“ஹாய் அண்ணாஸ்..”
சரி வைஷு உனக்கு என்ன வேணுமோ வாங்கு, என்ன கடைக்கு போணும்?..”
“டிரஸ் தான் ண்ணா எடுக்கணும் .. “
நந்தா, நீ கூட்டிட்டு போயிட்டு வாங்கிக்கொடு… அதுக்குள்ள நாங்க ஒரு ரவுண்டு அடிச்சிட்டு வரோம். நீ முடிச்சிட்டு கால் பண்ணு..”
“சரிடா..”
“வேற எதுவும் வாங்கணுமா வைஷு?, உனக்கு என்ன வேணும் வித்யா?…”
“எனக்கு இல்ல ண்ணா.. இவளுக்கு மட்டும் தான் ..”
“ண்ணா.. வேற ஏதும் இல்ல..”
“சரி வா.. கிளாஸ்லாம் எப்படி போகுது… பைனல் இயர் வேற..”
“போது ண்ணா.. நான் ஒன்னு சொல்லவா?… உனக்கு பொண்ணு பாக்குறதா அம்மா சொன்னாங்க..”
“சொல்லிட்டாங்களா.. வேற என்ன சொன்னாங்க..”
“ண்ணா.. எங்க காலேஜ்ல ஒரு மேம் இருக்காங்க ண்ணா.. அவங்கள மாறி இருந்தா சூப்பரா இருக்கும் ண்ணா..”
“சரிடா.. வா பஸ் ஏத்தி விட்டுட்டு வரேன்.. நீங்க இங்க நிக்குறீங்களாடா?..”
“இல்ல, வா போவோம்.. வந்து பாக்கலாம்..”
“போலாம் வைஷு…” என்று மல்லை விட்டு வெளியே சென்றனர்.
இங்கு தர்ஷி, “அவந்தி வா.. வெளில உள்ள கடைக்கு போலாம்.. மால் போதும்..”
“சரி வா.. வண்டிக்கு போலாம்..”
இவன் அவர்களை பஸ்சில் ஏற்றிவிட்டு, போனதும் கால் பண்ணு வைஷு என்று கூறிவிட்டு பஸ் சென்றவுடன், வண்டி எடுக்க மாலினுள்ளே நுழைய, அப்போது இவனைக் கடந்து வண்டியில் பறந்தாள், அவனின் தே..வ..தை..
இவன் அவளை அடையாளம் கண்டு அந்த இடத்திலே உறைந்து நின்று விட்டான்…
“டேய் நந்தா..” என்று உலுக்க… அவன் உறைநிலையிலிருந்து வெளி வராமல் இருக்க.. அவனை தள்ளிக்கொண்டு ஓரத்தில் நிறுத்தினர்.
இருவரும் “நந்தா..டேய்.. டேய்.. என்று உலுக்க,”
“இவன் முகத்தில் புது ஒளிவட்டம்…அண்ணார்ந்து வானத்தைப் பார்த்து கிஸ் அடிக்க…”
அரவி, “டேய்… என்னடா பண்ற?…” என்று திட்ட,
அவன் அடுத்து சொல்லியதில், நண்பர்கள் இருவரும் அவனை முறைத்தனர்..
அடுத்து?
சாரல் வருடும்..
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.