அரவி, “டேய் ! இப்ப மட்டும் நீ வாயத் திறக்கலைனு வையேன்.. உனக்கு நான் மாவுக் கட்டு போற்றுவேன்..” என்று எகிறினான் தன் நண்பனிடம்.
அப்பொழுதும் அவன் முகம் சிரிப்பில் மிளிர, “டேய் உன்ன கொல்லப் போறேன் டா…” என்று பாய,
“அரவி… இரு டா… இப்படி வா…” என்று இழுத்தான் நவீன்.
“போடா..” என்று கடுப்போடு சோபாவின் ஒரு மூலையில் சென்று அமர்ந்தான்.
நந்தா திரும்ப எழுந்து தனது அறைக்குச் செல்ல,
அரவி, “டேய் அவனை பிடிடா… திரும்ப அவனை ரூம்குள்ள விடாத… இப்போதான் அவனை பிடிச்சி இழுத்து வந்தேன்..”
நவீன், “அரவி.. இரு.. அவன் எதோ ஹாப்பி மூட்ல இருக்கான் போல.. அதான் இப்படி பண்ணுறான்…” என்று கூற,
“டேய்… அடுத்து நீ என்கிட்டே அடிவாங்கிடாத சொல்லிட்டேன்… என்ன மூட்ன்னு சொல்லித் தொலைஞ்சாத் தானே தெரியும்..”
“ஏன்டா இப்படி..”
“வேற என்ன சொல்ல சொல்ற என்னை?… வீட்டுக்கு வந்து அரைமணி நேரம் ஆச்சு… அங்க கேட்டான் பாத்தியா ஒரு கேள்வி, வீட்டுக்கு கிளம்பலாமாடா… எனக்கு பசிக்கல… உங்களுக்கும் பசிக்கல தானேனு… இதுல இப்போதானே ஜூஸ் வேற குடிஞ்சிங்கனு… எதுக்குடா நாம வெளில போனோம்..”
“இவன் என்னடா பண்ணறான் உள்ள..”
“நவீன்….ன்னன்” என்று பல்லைக்கடிக்க
“ஏன் டா பல்லைக்கடிக்குற..”
“உன்னைய அடிக்காம விட்டேனேனு சந்தோசப்படு..”
“எதுக்குடா என்னைய அடிக்குறனு சொல்ற ..”
“பின்ன… அவன் தான் வீட்டுக்கு வந்ததுல இருந்து, ரூம்குள்ள கண்ணாடி முன்ன நின்னுட்டு அவன் மூஞ்சியை தானே, காணாததை கண்ட மாறிப் பாத்துட்டு இருக்கான்… அப்பறம் என்னடா, புதுசா கேக்குற மாறிக் என்ன பண்றான்னு கேக்குற..”
“ஏன்டா அப்படி பண்ணுறான்.. என்ன ஆச்சு அவனுக்கு..”
“அவன்ட கேட்டியே.. ஏதாது சொன்னான்னா?…இல்லைல… நானும் உன்கூட தானே இருக்கேன்… எனக்கு மட்டும் என்னடா தெரியும் எரும..”
“டேய்.. ஏன்டா படுத்துறீங்க.. முடியலடா என்னால.. நாளைக்கு ஹாஸ்பிடல் வேற போணும் டா .. நேராநேரத்தோட படுக்கணும் டா.. உனக்கென்ன, உங்க ரெண்டு பேருக்கும் அடுத்த வாரத்துக்கு நைட் ஷிஃப்ட்.. நான் ரொம்ப பாவம் டா ப்ளீஸ்.. முடியல என்னால..”
“ஹா ஹா.. இந்த நந்தா உன்னைய எப்படி புலம்ப வச்சிட்டான் பாரு..”
“நான் எதுவும் இப்போ பேசலை.. எதுவா இருந்தாலும் சாப்பிட்டு தான்..”
“ரைட்டு விடு.. நான் ஆர்டர் பண்றேன்.. என்ன வேணும்னு சொல்லு..”
நந்தாவின் அறையில்….
எதையோ முடிவு செய்துக் கொண்டவனாகத் தன்னுடைய இயல்பிற்கு மாறி, தன்னை சுத்தப் படுத்திக் கொள்ள பாத்ரூமிற்கு சென்றான்.
ஹாலில் இவர்கள் அமர்ந்திருந்த விதத்தைப் பார்த்துக்கொண்டே வந்தா நந்தா, ஒன்றும் கூறாமல் கிட்சேன் சென்று ஒரு கப்பில் தண்ணீரை ஊற்றிக் குடித்துக்கொண்டே அவர்களுக்கு அருகில் வந்து அமர்ந்தான். “அப்பறம் என்னடா இப்படி உக்காந்திருக்கிங்க.. என்னடா இன்னும் நீங்க போலையா?..”
“டேய்.. எனக்கு இப்போ இவன்கிட்ட பேச தெம்பில்லை.. எதுவா இருந்தாலும் சாப்பிட்டதும் தான் அவன்ட சொல்லிடு…” என்று நவீனிடம் கூற,
“எதுவா இருந்தாலும் என்கிட்ட நேர சொல்ல சொல்லு நவீன்..”
அரவி, “நவீ…” என்று பேச வர
நவீன் கையெடுத்து கும்பிட்டு.. “என்னாலஉங்களோட மல்லுக் கட்ட முடியாதுடா.. அமைதி அமைதி.. எதுவா இருந்தாலும் அஃப்டர் ( after ) டின்னர்..” என்று கூறி முடிக்கவும், வீட்டின் கால்லிங் பெல் அடித்தது.
அரவி, “சாப்பாடு வந்துருச்சி…” என்று சொல்லிக் கொண்டே எழுந்து சென்றான்.
மூவரும் உணவை உண்டு முடித்து, இடத்தை சுத்தம் செய்து விட்டு வந்து ரிலாக்ஸ் ஆக அமர, “என்னடா கிளம்பலையா நீங்க?…” என்று மறுபடியும் நந்தா கேட்க,
“நீ கேப்படா.. நல்லா கேப்ப.. இவ்வளோ நேரம் நாங்க பேசுறது எதுவும் உனக்கு கேட்டுச்சா.. இப்ப மட்டும் உனக்கு நாங்க பதில் சொல்லணுமோ” என்று எகிறினான், அரவிந்த்.
“அதுலாம் அவகிட்ட தான் சொல்லுவேன்… அதுவும் அவளே கண்டுபிடிச்சி கேட்டா…”
“டேய்… என்னடா உளறுற…”
“நான் போயிட்டு படுக்க போறேன்.., நாளைக்கு நிறைய வேலை இருக்கு…” என்று அவனுக்கு பதில் கூறாமல் ரூமிற்க்கு எழுந்து சென்றான்.
தன்னுடைய மெத்தையில் படுத்துக்கொண்டு, “சீக்கரம் என்கிட்ட வந்து சேர்ந்திடு…” என்று அவளின் புகைப்படத்தைப் பார்த்து கூறி விட்டு உறங்கினான்.
– – – – –
அவந்தி, ” ம்மா.. புடவை நல்லா இருக்கா.. நீங்க கேட்ட மாறி இல்லை.. அதனால இப்படி வாங்கிட்டேன்.. என்று போனில் அவள் அம்மாவுடன் பேச,
“நல்லா இருக்கு அவந்தி.. அந்த மாடல் கிடைச்சிருந்தா நல்லா இருந்திருக்கும்..”
“வேற எங்கயாவது போகும் போது கிடைச்சா பாக்கலாம்..”
“அப்படியா சரி..”
“நீங்க மறுபடியும் ஆர்வத்துல, நான் அனுப்பின போட்டோவை ஸ்டேட்ஸ்ன்னு வைக்காதிங்க.. இப்போவே சொல்லிட்டேன்..”
“ஏண்டி.. எதோ ஒரு ஆர்வம், எல்லாரும் வக்கிரதை பாத்துட்டு நாமளும் வைப்போம்னு வச்சேன்.. நீ என்னனா அதையே சொல்லிக் காமிக்குற காலையிலருந்து.. ரொம்ப பேசுற நீ..”
“ம்மா.. இதை தான் சொல்றேன் நானும் காலைலருந்து.. இப்போ ஆர்வமா இருக்கும்.. அப்பறம் அதுக்கே அடிமை ஆகிடுவோம்.. என்ன சொல்ல வரேன்னு புரிஞ்சிக்கோங்க மீ.. இதுல நீங்க கோவப்பட ஒன்னும் இல்ல.. கொஞ்சம் நீங்களே யோசிச்சி பாருங்க.. கண்டிப்பா உங்களுக்கு நான் சொல்றது புரியும்.. காலைலயே நானும் உங்களுக்கு பொறுமையா சொல்லிருக்கணும் .. கொஞ்சம் சொதப்பிட்டேன்..”
“நீ அப்படி பேசுனதுல ஒரு கோவம் எனக்கு.. நான் பாத்து வளர்த்தப் பொண்ணு என்னையவே பேசுறான்னு.. அதான் நீ சொல்றத, நான் எடுத்துக்கலை..”
“ஹா ஹா.. என்ன மீ.. சீரியல் மம்மி ஆஹ் மாறிட்டீங்க..”
“அடப்போடி.. நம்ம எப்படி பேசுறுமோ, எதிர்வினை அதை பொறுத்து தான் வரும்.. தெரிஞ்சிக்கோ நீ இதை..”
“சரி விடுங்க.. இனிமேல் இப்படி வேண்டாம்..”
“இது சரி.. எங்க தஸ்புஸ்? சத்தமே வரல..?”
“அவ வீட்டுல பேசிட்டு இருக்கா..”
“அப்படியா சரி.. வேற ஏதும் இல்லையே..நான் போனை வைக்கவா?.. அம்மா,அப்பாவும் காலைல ஒரு கல்யாணத்துக்கு கும்பகோணம் போறோம்..”
“யாருக்கு ம்ம்மா…?”
“அப்பாவோட சொந்தக்காரங்க.. உனக்கு சொன்னா புரியாது.. நீ அதுக்கு நூறு கேள்வி கேப்ப.. என்னால உனக்கு விளக்க முடியாது..”
“ஹா ஹா ஹா.. வர வர ரொம்ப உஷாரா பதில் சொல்றிங்க.. சரி விடுங்க..”
“உனக்கு அம்மால அதான்..”
“அப்படி சொல்றிங்க நீங்க..”
“அதே தான்.. போதும் நீ போயிட்டு தூங்கு.. நான் வைக்கிறேன்..”
“ஓகே ம்மா.. குட் நைட்..”
“கடல் வண்ணம் வானின் வண்ணம் கரு வண்ணம் தானே… கடல் வானம் காணும் போது உன்னைக் கண்டேன் நானே” என்று அவள் சரணம் பாட,
“என்னடி ரொம்ப குஷியா இருக்க போல, பாட்டு லாம் வருது.. யாரைப் பார்த்த?..” என்று கேட்டுக்கொண்டே அறையிலிருந்து வெளியே வந்தாள், தர்ஷி.
“ஏண்டி.. எதோ அந்த லைன் தோணுச்சு பாடுனேன்..”
“அதெப்படி தோணும்.. ஒன்னும் இல்லாம..”
“நல்ல மூட்ல இருக்கேன்.. விட்டுட்டு” என்று கூறிக்கொண்டே அடுத்த வரியை பாட,
“என்னமோ சரியில்லையே..”
“தர்ஷி.. கல்யாணம் அப்பறம் தான் லவ்.. அதுவும் வீட்ல சொல்ற பையன் தான்.. இந்த கண்டதும் காதல்லாம் நோ..”
“யார் அவனோ..” என்று தர்ஷி பாட,
“தெரியலையே… என்று கூறிவிட்டு, மேடம் என்ன ஜாலி ஆஹ் இருக்கீங்க போல, என்ன சொன்னார் உங்க மச்சான்..?”
உனக்கு தெரியும்ல டி, எங்க அப்பாவோட தங்கச்சி பையனுக்கு தான் என்னை குடுக்கணும்னு, நான் பெரியவளா ஆனபோது பேசி வச்சாங்க, எங்க ரெண்டு பேருக்கும் பிடித்தம் ஆகிட்டு அப்போ இருந்து.. என்று கதை சொல்ல,
“அது தான் எனக்கு காலேஜ்ல இருந்தே தெரியுமே, நீங்க ரெண்டு பேரும் மணிக்கணக்கா போன்லயே லவ் பண்றத.. அப்பறம் சொல்லுடி..”
“சொல்லிட்டு தானே இருக்கேன் அப்பறம் என்னடி..”
“இது தெரியும் வேற சொல்லுனு சொல்றேன்..”
“ஆனாலும் நான் பேசுறது பாத்து கூட உனக்கு லவ் பண்ணனும் ஆசை வரல பாரு.. வெரி பேட்…” என்று கூற,
“நீ பேசுறது பார்த்து எப்படி டி லவ் வரும் லூசு.. அந்த ஆசைலாம் யாரை பிடிக்குமோ அவங்ககிட்ட தான் வரும்…”
“இங்க பாரு தர்ஷி.. எனக்கு இந்த லவ், காலேஜ்ல பண்றதுலலாம் இஷ்டம் இல்ல, என்னோட போகஸ் படிப்புல தான் இருந்துச்சி… மே பி என்னோட மைண்ட் கணவனத் தான் லவ் பண்ணனும் பிக்ஸ் ஆகிட்டு போல..”
“இது என்னடி புதுசா சொல்ற..”
உண்மை தர்ஷி.. பெஸ்ட் லவ் பேர் ( pair ) நான் சொல்லனும்னா.. என்னோட அப்பா அண்ட் அம்மா தான்.. ரெண்டு பேருமே யார்கிட்டயும் விட்டுக்கொடுத்து பேசமாட்டாங்க.. எப்படி உங்கிட்ட சொல்றதுன்னு கூட எனக்கு தெரில, கண்டிப்பா சண்டைலாம் வரும்.. ஆனா என்கிட்டேலாம் காமிச்சிக்கூட மாட்டாங்க.. என்னனு கேட்டாக் எங்களுக்குள்ள அப்படினு தான் ரெண்டு பேருமே சொல்வாங்க.. அந்த புரிதல் அவங்களுக்குள்ள நிறைய இருக்கு.. அதை பார்த்து வளந்ததுனால, எனக்கும் அப்படி இருக்கனும் ஒரு ஆசைனு வச்சுக்கோயேன்.. அவங்களோட அந்த அன்னோன்னியம், அவங்க புரிதல், அவங்களுக்கு கொடுக்குற ப்ரீபெரென்ஸ் இதுயெல்லாம்..சோ, இதுதான் அவங்க காதல்.. என்று பேச,
“ம்ம்.. செம்ம போ… வேற லெவல்..”
“எஸ்… கல்யாணம்ன்ற பந்தத்துல இணைந்து, நம்பிக்கைன்ற பந்தத்துல அவங்க வாழ்நாள் பூரா சேர்ந்து பயணித்து, சரிபாதியாய் இன்பத்திலும் துன்பத்திலும் கைகோர்த்து ஒரு புரிதலான காதலோடு வாழனும்…”
“ஹோ ஹோ… அவந்திக்குள்ள இப்படியும் ஒரு பாத்திரம்.. பலே.. பலே ..”
“அடியேய்.. என்ன பேசிட்டு, இப்போ எங்க வந்து நிக்குது பாரு..”
“ஹா ஹா.. இதுவும் நல்லதே.. அவந்தியோட இன்னொரு முகம் தெரிஞ்சிருக்குள்ள..”
“அது உனக்கு தெரிய வேணாம்… தெரியுறவங்களுக்கு மட்டும் தான் தெரியணும்… நீ சொல்லு ஒழுங்கா…”
“ஹ்ம் ஹ்ம்… கலக்குற போ..”
“சொல்லு டி..”
எங்க அத்தைகிட்ட யார் என்ன சொன்னாங்கனு தெரில டி… வெளில இருந்து பொண்ணு எடுத்தா, நம்ம வீட்ல கெத்தா நடந்துக்கலாம் அப்படினு ஏத்திவிட்ருக்காங்க.. அதையே புடிச்சுகிட்டு என் பையன்னுக்கு நான் வெளில பொண்ணு பார்க்க போறேன்னு எங்க அப்பாகிட்ட சொல்லிருக்காங்க.. அதை பத்தி பேச தான், அங்க போனாங்க அன்னைக்கு நான் இங்க இருந்தப்போ என்று முடித்தாள்.
“உங்க மச்சான் எங்க இருந்தாரு அப்போ..”
“எங்க பனியன் கம்பெனியில எதோ டீல் பேசுறதுக்காக வெளில போயிருந்தாங்க அப்போ… அதுக்குள்ள இந்த வேலையை பாத்து வச்சிட்டு எங்க அத்தை…”
“அச்சோ.. எதுக்கு இந்த வேலையெல்லாம் அடுத்தவங்களுக்குனு தெரில..”
“ஹ்ம்ம்.. அவங்களுக்கு பொழுது போகல போல.. அது தான்..”
“என்னமோ டி.. சரி வா.. போயிட்டு தூங்குவோம்.. நாளைக்கு காலேஜ் வேற..”