“இருங்க மாமா… அத்தை சொல்லுறாங்கள்ல, அவங்களுக்கு ஒன்னுக்கு நாலு தடவை சொன்னாத்தான் அவங்களுக்கு திருப்தியா இருக்கும்… அது தான் இன்னும் நேரமிருக்குள்ள… என்ன அத்தை, நான் சரியாய் தானே சொல்லுறேன்…” என்று அவரிடம் சொல்லிவிட்டு, அவந்தியை பார்த்து கண்ணடிக்க,
“இவங்க அப்பாவை பத்திதான் தெரியுமே மாப்பிள்ளை… சுடுத்தண்ணி, கால்ல பட்டது போல அவரசமா கிளம்பனும்… இதே பொழப்புதான் பொண்ணுக்கும்…” என்றார் நொடிப்பாக,
அவளோ அவனை முறைத்துவிட்டு, தன் தந்தையிடம் “சரிப்பா… நீங்க போயிட்டு கால் பண்ணுங்க, ம்மா… உங்களை, நீங்க இங்க வந்ததும் பேசிக்குறேன்…”
அவர்களை வழியனுப்பி விட்டு வந்தவுடன், உங்களுக்கு எங்க அப்பாவை ஏதாது சொல்லணும், எங்க அம்மாக்கூட சேந்து என்று நந்துவை பேச,
“போடி… உங்க அப்பாவை சொன்னா, உடனே வந்துடுவா… எங்க அத்தை, தான்டி எனக்கு முதல்ல… அத்தை மட்டும் இல்லனா, பொண்ணு பாக்க ஈவினிங் வர்றதுக்கு, உங்க அப்பாவை நான் எப்படி மலையிறக்கிருப்பேன் சொல்லு?… என்ன இருந்தாலும் அத்தை, அத்தை தான்…”
“ஆமா, ஆமா… அதனால தானே, இப்போ நான் மாசமா இருக்குற நேரத்துல கூட, என்னை ஊருக்கு விடாம, டெலிவரி கூட இங்கயே பிளான் பண்ணிட்டீங்க, உங்க மாமியார் கூட சேர்ந்து…”
“ஆகாகா… உன்கிட்ட நான் கேட்டதுக்கு, நந்துக் கூட இருந்தா போதும்னு சொல்லிட்டு… இப்போ இந்த வாய் என்னலாம் பேசுது…” என்று மெதுவாக அவளின் உதட்டை இழுத்து முத்தமிட வர,
அதற்குள் கரடியாய் அவனின் போன் ஓசையெழுப்பியது… அவனை தள்ளிவிட்டு, போன் வருது.. என்று நகர,
அவளை நகரவிடாமல், டேபிளில் உள்ள போனை எடுத்து அட்டென்ட் செய்துக்கொண்டே அவனும் சோபாவில் அமர்ந்து, அவளையும் பக்கத்தில் அமர வைத்துக்கொண்டான்.
“சொல்லுங்க ம்மா… என்ன விஷயம்…”
“நந்தா… அவந்தி எப்படி இருக்கா?… பானு அண்ணி ஊருக்கு கிளம்பிட்டாங்களா?…எப்போ வரேன்னு சொன்னாங்க?… உன்னால பாத்துக்க முடியுமா?… இங்க கொஞ்ச நாள் இருக்கட்டும்னா… எங்கயாவது எங்க பேச்சை கேட்டாத்தானே…” என்று சரமாரியாக பேச,
“இப்போ இதுக்கு தான் கால் பண்ணிங்களா?… எல்லாம் நான் பாத்துப்பேன்… இன்னைக்கு சண்டே தானே… அப்பறம் என்ன… இப்போ அவளுக்கு ஏழாவது மாசம் தான் நடக்குது… அவ நல்லாவே இருக்கா… நீங்க அங்க அண்ணியையும், அவங்களோட குட்டியையும் பாருங்க முதல்ல…”
“அதானே… ஒன்னு சொல்லமுடியுதா உன்கிட்ட… வளைகாப்பு அங்கேயே வைக்கணும் நிக்குற… இங்க உங்க அப்பா குதிக்குறாரு, ஒன்னும் சொல்ல முடியல என்னால…”
“எல்லாம் உங்க புருஷனை… நீ சமாளிச்சிப்பிங்க… அது எனக்கு நல்லாவே தெரியும்… சும்மாக் கதை விடாதீங்க…”
“உங்க அப்பா மண்டிக்கு, பெரியவன், வயலுக்கு… அப்பறம் வி.எ.ஓ ஆஃபீஸ்ர்க்கு இன்னும் விடியலை… காவியா இப்போதான் குழந்தைக்கு பால் குடுக்க போனா…”
“அப்போ சரி… அதி, பிரசவம் அடுத்து, வைஷுக்கு கல்யாணம் முடிச்சிடலாம், உங்க ஆத்துகாருகிட்ட பேசிட்டு சொல்லுங்க… இப்போ நான் சாப்பிட போறேன்… அப்பறம் பேசுறேன்…” என்று போனை வைத்தான்
அவந்தி, “ஏங்க நந்து… நான் பேசவே இல்ல… அதுக்குள்ள வச்சிட்டீங்க?…”
“நீ அப்பறம் பேசலாம்… இப்போ என்கூட மட்டும் தான் பேசணும்… நீ மாசமானதும் தான் ஆனா, உன்கூட ஒழுங்கா பேச கூட முடியல… யாராவது இருந்துட்டே இருக்காங்க… இந்த ஒன் வீக், உன் நந்து கூட மட்டும் தான்… இப்போவே சொல்லிட்டேன்…”
“அவ்வா… யாராவது இருந்தாலும், நீங்க அப்படியே, அவங்க இருக்காங்கனு பார்த்து நடந்துக்கிட்டிங்க… அப்படிதானே?…”
“ஆமா… இல்லையா பின்ன, இப்படியா கட்டிபிடிச்சிட்டு உக்காருந்தேன்…” என்று அவளை அணைத்துப் பிடிக்க,
“உங்க கிட்ட என்னால பேச முடியல… போங்க…”
“ஹா ஹா…உன் டயலாக் சொல்லிட்டியா… டைம் ஆச்சு… வா சாப்டுட்டே பேசலாம்…”
“ஏங்க… ஒரு வாரம் லீவு ஆஹ் நீங்க?… என்கூட தான்னு சொன்னிங்க…”
“நீயும் இப்போ காலேஜ் போறதில்ல… நீ மட்டும் இருக்கணும்… அதுனால, போய்ட்டு ஒரு அட்டெண்டன்ஸ் மட்டும் போட்டுட்டு, அப்பறம் தான் இருக்கானே நமக்குன்னு ஒருத்தவன், அவன் மேனேஜ் பண்ணிப்பான்…” என்று சிரித்தான்.
வீட்டின் காலிங் பெல்லடிக்க, எவன்டா அது… இப்போதான் நானே, என் பொண்டாட்டி கூட இருக்கேன்… பொறுக்காதே… என்று திட்டிக்கொண்டே கதவை திறக்க செல்ல, அவந்தியோ சிரிப்புடன் அமர்ந்திருந்தாள்.
கதவை திறந்ததும், அங்கு நின்றவர்களை பார்த்துவிட்டு, “சாரி… வீடு மாறி வந்துட்டீங்க போல…” என்று கூறிவிட்டு கதவை சாற்ற போக,
அங்க நின்ற மூவரும் பாய்ந்து வீட்டிற்குள் நுழைந்தனர்.
அரவி, “ஏன்டா…டேய்… நீயெல்லாம் மனுஷனாடா…”
அவந்தி, அவர்களை பார்த்துவிட்டு எழுந்து வர,
“அதேதான் நானும் கேக்குறேன்… முன்னாடி நீங்க ரெண்டு பெரும் தான் கரடி மாறி வருவீங்க… இப்போ தர்ஷினி, நீயும் சேர்ந்துட்டியா?… அது தான் நிச்சயம் ஆச்சுல்ல, போயிட்டு சீக்கரம் கல்யாணம் பண்ணி, புள்ளகுட்டின்னு செட்டில் ஆகவேண்டியதுதானே… அடேய் தடிமாடுங்களா, உங்களுக்கு தான் ஆளு இருக்குல்ல… அப்பறம் ஏன்டா, இங்க வந்திங்க… வெளில எங்கயாவது போய் சுத்த வேண்டியது தானே…” என்று எரிச்சலாக சொல்ல,
“நந்து… என்ன இது…” என்று கண்டனமாக பார்க்க,
அரவி, “நீ விடுமா தங்கச்சி… அவனை யாரு கண்டுக்குறா…”
நவீன், “அடேய் நண்பா, எங்க ஆளுங்களும் இன்னும் கொஞ்ச நேரத்துல இங்க வந்து ஜாயின் பண்ணிக்குறாங்க…” என்று சொல்ல,
“அடேய் வாடா வாடா…” என்று நண்பர்கள் அவனை இழுத்துச் சென்றனர்.
இப்படி சாயந்தரம் வரை அரட்டை கச்சேரிகளுடன், பொழுதை கழித்துவிட்டு நண்பர்கள் விடைபெற்றனர்.
இரவு படுக்கையறையில், “என்னை உங்களுக்கு தெரியும்னு ஏன் நம்ம கல்யாணம் முடிஞ்சதும் சொல்லல…” என்று அதி கேள்வியெழுப்ப,
அவன் மெத்தையில் சாய்ந்து அமர்ந்துக் கொண்டு, அவளை தன் மேல் வாகாக சாய்த்துக்கொண்டு, “இதையே… எத்தனை முறை கேப்ப அதி… நீயா கேக்குற வரை சொல்லக்கூடாதுனு இருந்தேன்… ஒருவேளை எப்படியாவது, நீ என்னை கண்டு பிடிக்கணும்னு ஒரு நப்பாசைனு வச்சுக்கோயேன்…”
அவளும் அவனை இறுக்கி கட்டிக்கொண்டு, “ஐ லவ் யு நந்து…” என்றாள்.
தான் கேட்டும் சொல்லாமல், தற்போது அவளே சொன்னதை கேட்டு ,உணர்ச்சி பெருக்குடன், அவளை தன் முத்தங்களால் அர்ச்சித்தான்.
இப்படியே இவர்கள் வாழ்வில், காதல் சாரலாய் எப்போதும் வருடும்.