வீட்டிற்கு வந்ததும் அனு அவளுடைய அப்பா போனில் இருந்து கதிருக்கு போன் செய்தால். கதிர் போனை எடுத்தான்.
“ஹலோ கதிர் சாமி நான் ரஞ்சனி பேசுறேன் “.
“என்னமா திடிர்னு கால்பண்ணிருக்க ஏதும் பிரச்சனையா யாரோட நம்பர் இது “
“நீங்க ஏன் கோவமா அங்க இருந்து போனீங்க”.
“இப்போ எதுக்கு அதை பத்திலாம் பேசுற விடு, சரி நான் போனை வைக்குறேன் உன் வீட்டுல யாராவது பாத்துற போறாங்க “
“கதிர் சாமி ப்ளீஸ் ப்ளீஸ் போனை வைக்காதிங்க. நான் ஏதாவது தப்பு பண்ண நாலு அடி கூட அடிங்க ப்ளீஸ் பேசாம மட்டும் இருக்காதிங்க ” என்று கூறி அழுதாள் அனு.
“ரஞ்சு சாமி இப்போ எதுக்கு அழுகுறீங்க, நான் உங்க மேல எப்பவும் கோவமே பட மாட்டேன் ப்ளீஸ் அழாதீங்க “
“ரஞ்சனி சாமி உங்களுக்கு எக்ஸாம் எப்போ முடியுது “
” அடுத்த வாரம் 26ம் தேதி “
“எக்ஸாம் முடிஞ்சதும் கடைக்கு வாங்க உங்க கிட்ட நிறைய பேசணும்”.
“சரி ஓகே சாமி, நான் போன் வைக்கவா, யாராவது வந்துர போறாங்க “
“எதை பத்தியும் யோசிக்காம நல்லா படிச்சி நல்லா எக்ஸாம் எழுதுங்க சரி நான் போன் வைக்குறேன் டாடா “.
ரஞ்சனி கடைக்கு வரும்போது அவளிடம் அகிலனை பற்றி பேச வேண்டும் என்று நினைத்தான்.
கதிரவன் கோவிலுக்கு வெளியே ரஞ்சனிகாக காத்திருந்தான். நல்லா நேரம் முடிவதற்குள் இருமுடி கட்டவேண்டும் என்பதால் கொஞ்சம் பதட்டமாக இருந்தான்.
“சாரி சாமி பஸ் வர டைம் ஆகிருச்சி அதான் லேட் “என்றாள் அனு.
“வேகமா வாங்க சாமி உள்ள நல்லா நேரம் முடிய இன்னும் அரைமணி நேரம் தான் இருக்கு ” என்றான் கதிர்.
கதிருக்கு இருமுடி கட்ட ஆரம்பித்தார் குருசாமி, தேங்காயில் நெய் ஊற்ற கதிர் குடும்பத்தினரை குருசாமி அழைக்க அனு, கருப்பு மற்றும் கருப்புவின் அப்பா அம்மா வந்தனர்.அனைவரும் நெய் ஊற்றி நல்லா படியாக இருமுடி கட்டி முடிக்கப் பட்டது.
கதிர் ரஞ்சனியை அழைத்துக் கொண்டு அவன் வீட்டிற்கு சென்றான். அங்கு ரேணுகா, வெங்கடேஷ் மற்றும் நர்மதா வந்தனர். மேலும் கதிரின் நண்பர்கள் இருவர் என்று அனைவரும் சேர்ந்து சாமி கும்பிட்டு விரதம் விட்டனர்.
மாலை நான்கு மணிக்கு கதிரவன் மலைக்கு கிளம்பினான்.அவனை வழி அனுப்பி விட்டு தான் அனு வீட்டுக்கு சென்றாள்.
இரண்டு நாள் கழித்து அகிலன் ஜெர்மனிக்கு கிளம்பிச் சென்றான். அனுவை பிரிந்து செல்ல மிகவும் கஷ்டமாக இருந்தது அவனுக்கு, இன்னும் கொஞ்ச நாள் தான் இந்த பிரிவு என்று நினைத்துக் கொண்டு சென்றான்.(பாவம் அகிலனுக்கு தெரியவில்லை அவன் அடுத்த முறை அனுவை பார்க்கும் போது அவள் கதிரவனின் மனைவி ஆகி இருப்பாள் என்று ).
கதிரவன் சபரிமலையில் இருந்து 24ம் தேதி திரும்பி வந்தான். அன்று இரவு ஈஸ்வரமூர்த்தி கதிரவனை பார்க்க வந்தார்.
“கதிரவா தரிசனம் எல்லாம் எப்படி இருந்தது,சாரி பா நீ கோவிலுக்கு போகும்போது என்னால வர முடியல”.
“தரிசனம் ரொம்ப நல்லா இருந்தது சார், இந்தாங்க சார் கோவில் பிரசாதம் “
“தேங்க்ஸ் பா, கதிரவா நான் இந்த மாசம் ரிட்டயர் ஆக போறேன் பா, அடுத்த மாசம் சென்னைல போய் செட்டில் ஆக போறேன் பா”.
“என்ன ஆச்சு சார், திடிர்னு சொல்லுறீங்க, ஏதும் பிரச்சனையா சார் “.
“ஏற்கனவே முடிவு பண்ணாது தான் பா. அங்க போய் பொண்ணுங்க, பேர பசங்க கூட இருக்கனுன்னு நினைக்குறேன் “
“கதிரவா இப்போ நீ ரியல் எஸ்டேட் வேலைய பத்தி நல்லா தெரிஞ்சி கிட்டல நீ, இனிமேல் நீயே தனியா பாத்துக்கோ பா “.
“தனியா நான் எப்படி சார் பண்ண முடியும், எனக்கு யாரையும் தெரியாதே சார் “
“உன்னால முடியும் தம்பி முதல்ல ஒரு ஆபீஸ் ஆரம்பி ரியல் எஸ்டேட் வேலைக்கு, அப்பறம் விசிட்டிங் கார்டு அடி, நானும் என்கிட்ட வர காஸ்டமர் கிட்ட உன் கார்டு குடுத்து அனுப்பி வைக்குறேன், தாலுகா ஆபிஸ்ல இருக்குற ஆபீஸர்களை உனக்கு அறிமுகம் படுத்தி வைக்குறேன் “.
“என்னால முடியுமான்னு தெரியல சார்,ரெண்டு நாள் டைம் குடுங்க யோசிச்சி சொல்லுறேன்”என்றான் கதிர்வன்.
மறுநாள் காலையில் அனுவை பார்ப்பதற்காக கதிர்வன் காத்துக் கொண்டிருந்தான். அனு வந்ததும் சைகையில் எக்ஸாம் முடிந்ததும் கடைக்கு வருமாறு கூறினான். அவளும் சரி என்று கூறி விட்டு சென்றாள்.
மதியம் கதிர்வன் கடைக்கு அனு வந்தாள். வந்ததும் அவள் கையை பிடித்து இழுத்துக் கொண்டு குடோனுக்குள் சென்றான், கதவை புட்டி விட்டு அனுவை கட்டிப் பிடிக்க சென்றான். திடீரென்று ஏதோ நியாபகம் வர கொஞ்ச நேரம் இரு என்று கூறி விட்டு. வெளியே சென்று கோவில் பிரசாதத்தை எடுத்து வந்து அனுவிற்கு அவன் கைகளால் வைத்து விட்டான், பின் பிரசாத பலகாரங்களை அவளுக்கு ஊட்டி விட்டான்.
சிறிது நேரம் கழித்து காற்று கூட நுழைய முடியாத அளவுக்கு இறுக்கமாக கட்டிப் பிடித்து. அவளது உதட்டில் தேன் குடிக்க ஆரம்பித்தான் நேரம் செல்ல செல்ல கதிரவனின் வேகம் அதிகரித்து கொண்டே சென்றது. அவள் மூச்சுகாற்றுகாக ஏங்க ஆரம்பித்தால்.வழு கட்டாயமாக அவனிடம் இருந்து தான் உதட்டை பிரித்தேடுதாள்.
“ரஞ்சு ப்ளீஸ் டி இன்னைக்கு மட்டும் என்ன கண்ட்ரோல் பண்ணாத. எனக்கு நீ வேணும், பயப்படாத நான் லிமிட் தாண்டி போக மாட்டேன் ” என்று கூறி விட்டு மீண்டும் அவள் உதட்டை சுவைக்க ஆரம்பித்தான்.
அவள் உதடுகள் உணர்ச்சியற்று மரத்துப் போய் விட்டது. இருப்பினும் கதிரின் ஆசைக்கு இணங்கி அமைதியாக இருந்தால்.கதிர் ஒரு வழியாக முத்த யுத்தத்தை முடித்தான்.
“செல்லம் உன்ன நான் ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணுனேன்டா லவ் யூ ஷோ மச் ரஞ்சுமா “என்று கூறி அவளை கட்டி பிடித்துக் கொண்டான்.
“நானும் உன்ன ரொம்ப மிஸ் பண்ணுனேன் மாமு”என்று கூறி கன்னத்தில் முத்தம் கொடுத்தாள்”.
இருவரும் பேசிக்கொண்டு இருந்தனர். அப்பொழுது கதவு தட்டும் ஓசை கேட்டு கதிரவன் கதவை திறந்தான்.”அண்ணே ரெண்டு மணிக்கு மேல ஆச்சுனே நீங்க இன்னும் சாப்பிடலையே அண்ணே நான் போய் ஏதாவது வாங்கிட்டு வரவா. ஒரு நிமிஷம் இரு ரஞ்சு கிட்ட கேட்டு வாரேன்.
“ரஞ்சுமா பசிக்கலையாடி உனக்கு ஏதும் சொல்லாமலே இருக்க, நான் தான் நிறைய தேன் குடிச்சிட்டேனா அதுனால பசி தெரியல உனக்குமா பசிக்கல “
“போடா லூசு எனக்கு பயங்கரமா பசிக்குது ஏதாவது வாங்கிதாடா, எனக்கு இருக்குற பசிக்கு உன்னையே கூட கடிச்சி தின்னுருவேன் “
“எரும மாடு பசிக்குதுனா சொல்ல வேண்டியது தானடி “
“நீ எங்கடா சொல்ல விட்ட என்ன ” என்று கூறி முறைத்தாள்.
“என்ன செல்லம் சாப்பிடுற வேகமா சொல்லு கருப்புவ வாங்கிட்டு வர சொல்லுறேன் “.
“எதுனாலும் சரி வேகமா வாங்கிட்டு வர சொல்லு “
“ஏண்டி இவளோ பசிய வச்சிட்டு சும்மா இருந்த சொல்லி தொலைக்க வேண்டியது தான “என்று கோவமா கூறி விட்டு வெளிய சென்றான்.
“நீ சாப்பிட்டையா கருப்பு, இல்லனா உனக்கும் சேர்த்து வாங்கிக்கோ, நீ முத்து கடைக்கு போ நான் அவனுக்கு போன் பண்ணி பார்சல் பண்ண சொல்லிறேன்.உனக்குவேண்டியதை மட்டும் நீ வாங்கிக்கோ “
“டேய் மச்சான் உடனே இப்போ என்ன என்ன அசைவம் சாப்பாடுலாம் பார்சல் பண்ண முடியும் சொல்லுடா”
“மட்டன், சிக்கன் பிரியாணி, பிஷ் பிரை, சிக்கன் 65, மட்டன் சுக்கா எல்லாம் ரெடியா இருக்குடா, வேற ஏதும் வேணுனா டைம் ஆகும் “
“நீ சொன்ன ஐட்டம்எல்லாத்துலையும் ஒன்னு ஒன்னு, அதோட 2 ஆம்லெட், கருப்பு கடைக்கு வருவான் அவன் கிட்ட குடுத்து விடுடா வேகமா “
“ரஞ்சு இங்க வா, என்ன சொல்லு கதிர் , லூசு பசிக்குதுனா சொல்ல வேண்டியது தானடி, காலேஜ் முடிஞ்சதும் நேரா உன்ன பாக்க தானா கதிர் வந்தேன் நான் சாப்டுருப் பேனா மாட்டேனா கூட உனக்கு தெரியாது”
“எல்லாதையும் நானே தான் சொல்லனுமா உனக்கு உனக்கே தோணாத, நான் வருவேன்னு தெரியும்ல நீயே வாங்கி வச்சிருக்க வேண்டியது தானாடா “என்றாள் அனு கோவமாக.
“சாரி ரஞ்சு, நிஜமாவே எனக்கு தோணல “
“விடு கதிர் இதுக்கலாம் எதுக்கு சாரி சொல்லிடு இருக்குற “
கருப்பு வந்ததும் அவனை சாப்பிட சொல்லி விட்டு, அனுவை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றான். உணவை பிரித்து அவனே அவளுக்கு ஊட்டி விட்டான்.
“கதிர் குடு நானே சாப்பிடுகிறேன்”
“அன்னைக்கு அவன் மட்டும் உனக்கு ஊட்டி விட்டான்.நானும் உனக்கு ஊட்டி விடுவேன் “
“கதிர் நீ எனக்கு ஊட்டு நான் உனக்கு ஊட்டுறேன் “
“ரஞ்சுமா நீ அந்த அகில் கூட பழகுறத குறைச்சிக்கோங்க, அவன் கூட வண்டில போறது, அவன் ஊட்டி விட்டு நீ சாப்பிடுறது இதுலாம் பண்ணாத சரியா “
“ஏன்டா நான் அவருக்குட பழகக் கூடாது”என்றாள் கோவமாக.
“எனக்கு பிடிக்கல டி நீ அவன் கூட சுத்துறது,அவன் கூட வண்டில போறதும் வரதும்,உனக்கு அடி பட்டா உன் அப்பா கூட இல்ல அண்ணே கூட வாடி எதுக்கு அகில் கூட வர, ஐஸ்கிரீம் கடைக்குலாம் ஜோடியா வரதும் ஊட்டிலாம் விட்டுகிறதும் நல்லவா டி இருக்கு கேவலமா இருக்கு பாக்குறதுக்கு” என்றான் கதிர் கோவமாக.
கதிர் பேசியதை கேட்டு அனு அழுக ஆரம்பித்தால். அழுகையுடன் கதிரை பார்த்து “என்ன சந்தேகப் படுறையா கதிர் நீ ” என்றாள்.
“நான் உன்ன லவ் பண்ணுறேன்னு சொல்லிட்டு அகில் அத்தான் கூட சுத்துறேன், ஒரே நேரத்துல ரெண்டு பேரு கூடவும் பழகு றேன்னு நினைக்குறிய”என்றாள் கண்களில் கண்ணீர் வடிய.
“ரஞ்சுமா நான் அப்படி சொல்ல வரலமா “.
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.