அத்தியாயம் – 16
“என்ன கதிர் விளையாடுறியா நீ நான் ஏற்கனவே ரொம்ப டென்ஷன்ல இருக்குறேன் ப்ளீஸ் இப்படிலாம் விளையாடாத “என்றாள் ரஞ்சனி .
“ரஞ்சு நிஜமா தான் சொல்லுறேன் நீயும் நானும் கல்யாணம் பண்ணிக்கலாம் “
“வீட்டுல கல்யாணத்தை பத்தி பேசுறாங்கனு உங்கிட்ட வந்தா, நீயும் கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொல்லுற என்னைய நீ கூட புரிஞ்சுக்கவே இல்லைல கதிர் “
“எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம் நான் படிக்கணும் ப்ளீஸ் புரிஞ்சிக்கோ “
“ரஞ்சு உன்ன நான் படிக்க வேண்டாம் சொல்லவே இல்லையே டி, முதல்ல நாம கல்யாணம் பண்ணிக்கலாம். அப்பறம் நீ படி “
“என்னடா கல்யாணம் பண்ணிக்கலாம் கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொல்லிட்டே இருக்குற வீட்டை விட்டு ஓடி வர சொல்லுறைய “என்றாள் ரஞ்சனி கோவமாக.
“நீ வீட்டை வீட்டுலாம் வர வேண்டாம் ரஞ்சு, ரெஜிஸ்டர் மெர்றேஜ் பண்ணிக்கலாம், கல்யாணம் முடிஞ்சது நீ உன் வீட்டுக்கு போயிரு உன் வீட்டுல இருந்தே படி, எப்போ உங்க வீட்டுல நாம கல்யாண விஷயம் தெரியுதோ அப்போ நாம அம்மா அப்பா கிட்ட பேசி ஒத்துக்க வச்சிக்கலாம் “.
“நீ புரிஞ்சிதான் பேசுறைய கதிர் “.
“ரஞ்சு என்னால உன்ன விட்டு இருக்க முடியலடி, டெய்லி நீயும் நானும் பாத்துக்குறதே இரண்டு நிமிஷம் தான், போன்ல கூட இப்போலாம் பேசிக்க முடியல. நான் உன்ன ரொம்ப மிஸ் பண்ணுறேன் டி, ப்ளீஸ் புரிஞ்சிக்கோ “
அனு முற்றிலுமாக சோர்ந்து போய் விட்டாள்.அருகில் இருந்த சேர் ஒன்றில் இரு கைகளையும் தலையில் வைத்து குனிந்து அமர்ந்து அழுதுக் கொண்டிருந்தாள். அவளின் நிலையை பார்த்து கதிருக்கு கவலையாக இருந்தாலும் இந்த பிரச்சனைக்கு முடி கிடைத்தே தீரவேண்டும் என்று எண்ணினான்.
“ரஞ்சு சாப்பிட்டியா காலைல “
“நான் சாப்பிட்டு வர நிலைமைல இல்ல,சரி நான் கிளம்புறேன் காலேஜ்க்கு டைம் ஆச்சு “
“ரஞ்சு இரு நான் சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வாரேன். சாப்பிடு போ “
“இப்போ அது தான் குறைச்சலா இருக்கு “என்று கோவத்துடன் கூறி விட்டு வெளியே செல்ல முயன்றால். கதிர் அவளது கையை பிடித்து இழுத்து கன்னத்தில் ஓங்கி ஒரு அரை விட்டான்.அவள் அதிர்ச்சியில் அப்படியே நின்றுவிட்டாள்.
“ஒழுங்கா இங்கையும் இருக்குற, நான் போய் சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வாரேன் “அனுவை ரூம்மின் உள்ளே வைத்து புட்டி விட்டு சென்றான்.
நான்கு இட்டிகளை ஒரு தட்டில் வைத்து அனுவிடம் கொடுத்தான் அனு வாங்க மறுத்து அழுதுக் கொண்டே இருக்கவே.
“இப்போ மட்டும் நீ சாப்பிடல உன்ன நேரா கோவிலுக்கு கூட்டிடு போய் உன் கழுத்துல தாலிய கட்டி உன்ன என் வீட்டுக்கு கூட்டிடு போயிருவேன்” என்றான் கோவமாக.
கதிர் சொன்னால் செய்வான் என்பதால் கதிர் ஊட்டி விட அனு வேகமாக சாப்பிட ஆரம்பித்தால் பாதி சாப்பிட்டு விட்டு
“டைம் ஆச்சு கதிர் நான் கிளம்புறேன் ” என்றாள் அனு
“உனக்கு இரண்டு நாள் டைம் தாரேன் நம்ம கல்யாணத்தை பத்தி யோசிச்சி உன் முடிவை சொல்லு ” என்றான் கதிர்.
அனு நிம்மதி இல்லாமல் குழப்பதுடனே அங்கிருந்து சென்றாள். மாலை வரும் போது கூட அனு முகம் தெளிவில்லாமல் தான் இருந்தது. அனு கதிரை பார்க்கும் போது “நல்லா யோசி “என்று சைகை செய்தான். அனு கண்கலங்க அங்கிருந்து சென்று விட்டாள்.
ராமசந்திரன், சாந்தி இருவரும் ஜோசியரை பார்க்க சென்றனர். அங்கு அனுவிற்கு சனி திசை நடப்பதால் இப்பொழுது திருமணம் செய்ய கூடாது என்று கூறி விட்டார். இந்த விஷயத்தை ராஜியிடமும் கூறி விட்டனர்.
அனுவின் முக வாட்டதை பார்த்து ராமசந்திரன் அனுவை அழைத்து பேசினார். அனு தான் MCA படிக்க விரும்புவதாக கூறினால்,இன்னும் இரண்டு வருஷம் திருமணம் செய்ய முடியாது என்பதால் அவரும் அனுவின் ஆசைக்கு இனங்கி அவளை படிக்க வைப்பதாக சொன்னார்.இரண்டு வருடம் கழித்து கல்யாணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று கூறி விட்டார்.
அனு மிகவும் சந்தோசமாக இருந்தாள். இந்த விஷயத்தை கதிரிடம் கூற வேண்டும் என்பதால் மறுநாள் காலை மகிழ்ச்சியுடன் கடைக்கு சென்றாள்.கதிரிடம் அனு நேற்று நடந்த விஷயத்தை மகிழ்ச்சியுடன் கூறினாள்.
“அப்போ இரண்டு வருஷம் கழிச்சு உனக்கும் அகிலுகும் கல்யாணம் அப்படி தானா “என்றான்
“என்னடா பேசுற நீ “
“நீ உங்க அப்பா கிட்ட படிக்கணும்னு மட்டும் தானா சொன்ன அகிலனா கட்டிக்க விருப்பம் இல்லனு சொல்லலைல “
“ரஞ்சு எனக்கு இப்போவே முடிவு தெரிஞ்சு ஆகணும் என்ன கல்யாணம் பண்ணிக்க முடியுமா முடியாத “
“இப்போ எப்படிடா கல்யாணம் பண்ண முடியும், நான் படிக்கணும், படிச்சி முடிச்ச அப்பறம் வீட்டுல நாம லவ் பத்தி சொல்லி அவங்க சம்மதத்தோட கல்யாணம் பண்ணிக்கலாம் கதிர் “
“ஏண்டி உங்க அப்பா அம்மா சம்மதத்தோட தான் என்ன லவ் பண்ணுரையை, ஒரு வேளை நம்ம லவ்வுக்கு உங்க அப்பா ஒத்துக்கலான “
“என்ன கழட்டி விட்டுட்டு அகில்ல கல்யாணம் பண்ணிட்டு நீ ஜாலியா ஜெர்மனில போய் செட்டில் ஆகிருவ நான் உன் நியாபகத்துல தாடி வளர்த்துட்டு பைத்தியக்காரன் மாதிரி திரியனும் அப்படி தானா ” என்றான் கதிர் கோவமாக.
“என் கதிர் இப்படிலாம் பேசுற ப்ளீஸ், என்ன புரிஞ்சிக்கோடா “
“இன்னும் மூணு மாசத்துக்குள்ள உனக்கும் எனக்கும் கல்யாணம் நடக்கணும், அப்பறம் நீ எந்த ஊருல வேணுனாலும் போய் படி, என்ன வேணுனாலும் படி நான் ஏதும் சொல்ல மாட்டேன் “.
“என்ன கல்யாணம் பண்ணிக்க உனக்கு சம்மதம்னா சொல்லு அடுத்து என்ன பண்ணலாம்கிறதா பத்தி நாம பேசலாம்”
“ஒரு வேளை உன்னால என்னா கல்யாணம் பண்ணிக்க முடியாதுனா. இப்போவே இந்த நிமிஷமே இங்க இருந்து போயிரு, இதுக்கு அப்பறம் உனக்கும் எனக்கும் நடுவுல எதுவுமே கிடையாது ” என்றான் கோபத்துடன். அனு அமைதியாக நின்றிருந்தால்.
ரஞ்சுமா ப்ளீஸ் ஓகே சொல்லிருடி, என்ன விட்டுட்டு போயிராத என்று மனதிற்குள்ள சொல்லி கொண்டே இருந்தான்.
“சாரி கதிர் “என்று கூறிவிட்டு அனு அழுதுக் கொண்டே அங்கிருந்து சென்று விட்டாள். கதிருக்கு மிகவும் கவலையாக இருந்தது.இருப்பினும் அனு கண்டிப்பாக அவனிடம் வருவான் என்று நினைத்தான்.
மறுநாள் காலையில் கதிர் வழக்கமாக நிற்கும் இடத்தில் பார்த்தாள் கதிர் அங்கு இல்லை, அனு ஏமாற்றத்துடன் அங்கிருந்து சென்றாள். அவனுக்கு போன் செய்தால் அனுவின் எண்ணை பார்த்ததும் கட் செய்து விடுவான்.
இரண்டு நாட்கள் தொடர்ந்து போன் செய்தால் கதிர் பேசாததால். போன் செய்வதை நிறுத்தி விட்டாள். கதிர் நிற்கும் இடத்தை மட்டும் தினமும் பார்த்துக் கொண்டே செல்வாள்.
அனு கதிரை பார்த்து இருபது நாட்களுக்கு மேல் ஆகி விட்டது. இந்த இருபது நாட்களாக கதிர் வேறொரு இடத்தில் இருந்து காலை மாலை அனுவை பார்த்துக் கொண்டு தான் இருந்தான்.
ஒரு நாள் கதிர் அனுவிற்கு எதிர் திசையில் வந்துக் கொண்டிருந்தான். அவனை பார்த்ததும் அனு மகிழ்ச்சியுடன் அவனிடம் பேச சென்றாள். கதிர் முகத்தை திருப்பிக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டான்.அனு வேதனை தாங்க முடியாமல் அங்கையே அழுக ஆரம்பித்தால்.
அவள் அழுவதை பார்த்து அவனுக்கு கஷ்டமாக இருந்தாலும் அதை வெளியே கட்டிக் கொள்ளாமல் அங்கிருந்து சென்று விட்டான்.அடுத்த இரண்டு நாட்கள் அனு காலேஜ்க்கு வராமல் போகவே நர்மதாவிற்கு போன் செய்து அனு என் வரவில்லை என்று கேட்டான்.
“அண்ணா உங்க ரெண்டு பேருக்குள்ள சண்டையா இப்போலாம் நீங்க போன் பண்ணுறதே இல்லை, அனு கொஞ்ச நாளாவே சரி இல்லனா, ஒழுங்க சாப்பிடுறது இல்ல, யாரு கிட்டயும் பேசுறது இல்ல, ஒழுங்கா படிக்குறதும் இல்ல “என்றாள் நர்மதா.
“சண்டைலாம் ஏதும் இல்லாம கொஞ்சம் வேலை அதிகம் அதான் போன் பண்ணல, ரஞ்சனி எதுக்குமா காலேஜ்க்கு வரல “.
“அவளுக்கு உடம்பு சரி இல்லனா, சரியா சாப்பிடுறது இல்லனா அவ இப்போலாம், அதான் மறுபடியும் அல்சர் வந்துருச்சி, அன்னைக்கு கூட வயிறு வலிக்குன்னு அழுக ஆரம்பிச்சிட்டா, நாளைக்கு வந்துருவா அண்ணா “
கதிருக்கு அனுவை நினைத்து கவலையாக இருந்தது. நாளைக்கு அவளிடம் சென்று பேசி விட வேண்டும் இதற்கு மேலும் அவளை கஷ்ட படுத்த கூடாது என்று நினைத்தான்.
மறுநாள் காலையில் கடையில் கதிர் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். அப்போ கதிர் என்று அனு அழைப்பது கேட்டு தலையை உயர்த்தி பார்த்தான். சோர்ந்த முகத்துடன் அனு நின்றுக் கொண்டிருந்தாள்.
அவளின் கையை பிடித்து உள்ளே அழைத்து சென்று,அவளை இறுக்கமாக கட்டிப் பிடித்து, அவள் முகத்தில் மாறி மாறி முத்தம் கொடுத்துக் கொண்டே இருந்தான்
அனு கதிரிடம் நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம்டா, என்னால உன்ன பாக்காம பேசாம இருக்க முடியாதுடா, எனக்கு நீ வேணும் கதிர் என்றாள்.
“செல்லம் என்ன மன்னிச்சிருடா உன்ன ரொம்ப கஷ்ட படுத்திட்டேன், சாரி மா, சாரி “
“நான் உன்ன மிஸ் பண்ண மாதிரி தானா நீயும் என்ன மிஸ் பண்ணிருப்பா நான் தான் உன்ன புரிஞ்சிக்காம போய்ட்டேன்டா சாரி ” என்றாள் அனு
“செல்லம் உடம்புசரில்லைனு நர்மதா சொன்ன என்னடா ஆச்சு, இப்போ பரவாயில்லையாட “
“சரியா சாப்பிடமா இருந்துட்டேன் அதான் அல்சர் மறுபடியும் வந்துருச்சி, இரண்டு நாளா ஹஸ்பிடல்ல அட்மிட் பண்ணி புள்ள ட்ரிப்ஸ் ஏத்தி இங்க பாரு கை எப்படி வீங்கி போய் இருக்குனு “
“ஏண்டி இப்படி பண்ணுற, ஒழுங்கா சாப்பிட்டு தொலைக்க வேண்டியது தானடி, கைய பாருடி இப்படி வீங்கி போய் இருக்கு வலிகளையாடி உனக்கு “என்றான் அழுதுக் கொண்டே
“இல்லடா வலிகளை சுகமா இருக்கு போடா லூசு வலி உயிர் போகுது. நான் தான் வலிய அடக்கிட்டு இருக்கேன், என்கிட்ட பேசாம நீ மட்டும் ஒழுங்கா சாப்பிடைய உண்மையா சொல்லுடா பார்ப்போம்”
வெகுநேரம் இருவரும் பேசி விட்டு அனு அங்கிருந்து சென்றால், போகும் முன்பு கல்யாண ஏற்பாடுகளை செய்ய சொல்லி விட்டு சென்றாள்.
கதிர் குருவிற்கு போன் செய்து கல்யாணம் செய்ய போவதாவும் அதற்கு ஐடியா தருமாறுக் கேட்டான்.
“மச்சான் என் பிரண்ட் ஒருத்தன் ரெஜிஸ்டர் ஆபீஷில் வேலை பாக்குறான் நான் அவன் கிட்ட பேசிட்டு உனக்கு கால் பண்ணுறேன்” என்றான் குரு.
“கதிரவா இப்போ தான் என் பிரண்ட் கிட்ட பேசுனேன், அவன் உங்கள சென்னைக்கு கிளம்பி வர சொல்லுறான், அவன் ஆபீஸ்லயே கல்யாணம் பண்ணி வைக்குறதா சொல்லுறான் “
“ஒரு நல்ல நாளா பார்த்து உங்க இரண்டு பேரோட செர்டிபிகேட் எல்லாம் எடுத்துட்டு வாங்க, இங்க மத்த ஏற்பாடுலாம் நான் பாத்துக்குறேன் ” என்றான் குரு.