அத்தியாயம் -22
கதிர் தொழிலில் முன்னேறிக் கொண்டே இருந்தான். அவன் ஆரம்பித்தத் தொழில் அனைத்தும் வெற்றி அடைந்து நல்ல லாபதை தந்தது. கதிர் அவனுடைய வீட்டை பெரிதாக மாற்றிக் கட்டினான் , ஒட்டன் சத்திரத்தில் KR நிறுவனத்தையும், கதிரையும் தெரியாதவர்கள் இல்லை என்று சொல்லும் அளவுக்கு இருந்தது அவனுடைய வளர்ச்சி. கதிர் புதிதாக இப்பொழுது நகைக் கடை ஒன்றை திறக்க உள்ளான்.
கதிரவன் வேலைக்கு செல்லாமல் இருந்த பொழுது அவனை குடிகாரன் தண்டச் சோரு என்று கேவலமா பேசிய அவனது உறவினர்கள் முன்னால் இன்று அவனது வளர்ச்சியை காட்ட வேண்டும் என்று கதிர் நினைத்தான். அத்துடன் சொத்து தகராறில் அவர்களுடன் பேசாம இருந்த அவனுடைய பெரியப்பா மட்டும் சித்தப்பாவையும் திறப்பு விழாவிற்கு அழைத்து அவர் களுடன் சமாதானம் ஆக வேண்டும் என்று நினைத்தான்.
“அப்பா கடை திறப்பு விழாக்கு பெரியப்பா, சித்தப்பா ரெண்டு பேரையும் போய் கூப்புடுங்க, பழசை எல்லாம் மறந்துருங்க “
“நமக்கு தர வேண்டிய நிலத்தை தராமல் போய்ட்டாங்க அவ்வளவு தான விடுங்கப்பா அந்த நிலம் இல்லனா என்ன, நம்ம கிட்ட இருக்க கடைகளை பாத்துக்கவே இப்ப நம்மனால முடியல”
” அப்பா நமக்கு இருக்கிறது போதும் இன்னும் எத்தனை காலத்துக்கு தான் அவங்களோட சண்டை போட்டுக்கிட்டே இருக்க போறீங்க “
“எனக்கு சொத்து பத்த விட சொந்த பந்தம் தான்பா முக்கியம் தயவு செஞ்சு போய் பெரியப்பா சித்தப்பாவை கூப்பிடுங்க, பெரியப்பா சண்டை எல்லாம் மறந்துட்டு அண்ணன் கல்யாணத்துக்கு வந்து கூப்பிட்டாங்க நீங்க தான போகல”
“கதிரவா நீ சொல்லுறதால தான் போய் கூப்புடுறேன் ” என்றார் வேலுசாமி.
“கனி அக்கா மாமியார் வீட்டுலயும் எல்லாரையும் கூப்புடுங்க, அக்கா ஓட நாத்தனார் சுதாவையும் கூப்புடுங்க”
“அம்மா அப்படியே உங்க அண்ணா அண்ணியையும் மறக்காம கூப்புடுங்க “
“கதிரவா அந்த குடிகாரப் பையன் துரைப் பாண்டியா எதுக்கு கூப்பிட சொல்லுற, கனி கல்யாணத்துல குடிச்சிட்டு வந்து அவன் பண்ண பிரச்சனை போதாதா “என்றார் வேலுசாமி கோவமாக.
“அப்பா அம்மா பக்கத்துல சொந்தம்னு பாத்தா மாமா மட்டும் தான அப்பா இப்போ இருக்குறாரு, அவரையும் நாம ஒதுக்கி வச்சா எப்படிபா “
“அதுவும் இல்லாம கனி அக்கா கல்யாணத்துக்கு வந்தப்போ என்ன வெட்டிப் பையன், தண்டச் சோறு அப்படினு இன்னும் நிறைய பேசிட்டாங்க துரைப்பாண்டி மாமாவும், வடிவு அத்தையும் “
“என்னையும் உங்களையும் கேவலமா பேசுனா எல்லாரு முன்னாடியும் வச்சி தான்பா இந்த கடைய திறக்கணும், என்னால நீங்க எவளோ அசிங்கப் பட்டுருப்பிங்க அதுக்கும் சேத்து இப்போ பெருமை படுத்த போறேன் அப்பா “
வேலுசாமி கண் கலங்க” நீ எப்பவோ எங்கள பெருமை படுத்திட்டா கதிரவா, உன்ன நினைச்சி நாங்க ரொம்ப சந்தோசப் படுறோம் தம்பி “என்று கூறி கதிரை கட்டிப் பிடித்தார் லட்சுமி ஆனந்தக் கண்ணீர் உடன் பார்த்துக் கொண்டிருந்தார்.
“அப்பா அம்மா எல்லாரையும் இரண்டு நாளைக்கு முன்னாடியே வர சொல்லுங்க,ரஞ்சனிய பத்தி யாருகிட்டயும் ஏதுவும் சொல்லாதீங்க”
“ரஞ்சனிய பத்தி ஏதுவும் சொல்ல வேண்டாம்னு சொல்லுற,விழா அன்னைக்கு அவ வரும் போது யாரு என்னனு கேப்பாங்கள எல்லாரும். என் தங்கம் கடை திறப்பு விழா அன்னைக்கு வர மாட்டாளா தம்பி “
“கண்டிப்பா வருவா அம்மா,ரஞ்சு வரமா நான் எப்படிமா திறப்பு விழா நடத்துவேன். விழா அன்னைக்கு அவ வந்ததும் அவளை கூட்டிடு போய் எல்லாருக்கும் அறிமுகப் படுத்தி வைங்க, அதுக்கு முன்னாடி யாருகிட்டயும் ஏதும் சொல்லாதீங்க”
“அம்மா இதுல, உங்களுக்கும் கனி அக்காக்கும் நகை இருக்கு திறப்பு விழா அன்னைக்கு போட்டுக் கோங்க”
“ஏற்கனவே நிறைய வாங்கி குடுத்துட தம்பி இப்போ எதுக்கு இவளோ நகை, பேசாம இதை என் தங்கத்து கிட்ட குடுத்துரு”.
“அம்மா உங்க தங்கத்துக்கு ஏற்கனவே ஒரு செட் செய்யக் குடுத்து வாங்கி வச்சுட்டேன், இது உங்களுக்கு வாங்குனது நீங்களே வச்சிக்கோங்க, கனி அக்காக்கு கூட தர கூடாது சரியா “.
வேலுசாமி லட்சுமி இருவரும் மதுரைக்கு வேலுசாமியின் அண்ணன் வீட்டுக்கு காரில் சென்றனர். அங்கு அண்ணன் தம்பி இருவரையும் பார்த்து பேசி சமாதானம் ஆகி அவர்கள் விட்டிலே சாப்பிட்டுவிட்டு அனைவரையும் திறப்புவிழாவிற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு வருமாறு கூறிவிட்டு வந்தனர்.
மறுநாள் லட்சுமியின் அண்ணன் வீட்டிற்கு சென்றனர். இவர்கள் காரில் இருந்து இறங்கி வருவதை பார்த்ததும் வாடகை காராக இருக்கும் என்று நினைத்துக் கொண்டு அவர்களை வரவேற்று உள்ளே அமர வைத்தார் வடிவு. வழக்கமான நல விசாரிப்புகள் முடிந்து துரைப் பாண்டியும், வடிவும் அவர்களுடன் பேசிக்கொண்டு இருந்தனர்.
“என்ன லட்சுமி திடிர்னு இந்த ஊருக்கு வந்துருக்கீங்க,இங்க ஏதும் விசேஷத்துக்கு வந்துருக் கீங்களா வாடகை கார்லாம் எடுத்துட்டு வந்துருக்கீங்க ” என்றாள் வடிவு.
“அண்ணி இது வாடகை கார்லாம் இல்ல, எங்க சொந்த வண்டி, நாங்க இங்க வந்தது உங்களை எங்க கடை திறப்பு விழாவுக்கு கூப்பிடா தான் ” என்றார் லட்சுமி பெருமையாக.
வடிவின் முகம் சொந்த கார் என்றதுமே சுருங்கிவிட்டது. இருந்தும் தான் கெத்தை விட்டாமல்
“அப்படி என்ன கடை லட்சுமி திறக்க போற, ஏற்கனவே இருக்குற பழைய வாட்ச் கடைய தான் மாத்தி புதுசா திறக்க போறயோ “என்றாள் நக்கலாக.
“அந்த வாட்ச் கடைய மூணு வருசத்துக்கு முன்னாடியே மொபைல் ஷோரூமா மாத்தியாச்சி அண்ணி, இப்போ திறக்க போறது நகைக் கடை அண்ணி “என்றார் லட்சுமி கெத்தாக.
“எனது நகைக் கடையா “என்று துரையும், வடிவும் ஒரே நேரத்தில் அதிர்ச்சியுடன் கேட்டனர்.
“ஆமா பாண்டி நகைக் கடை தான் திறக்க போறோம், இல்ல இல்ல என் பையன் கதிரவன் திறக்க போறான்” என்று கர்வத்துடன் கூறினார் வேலுசாமி.
பாண்டியும், வடிவும் வாயடைத்து நின்றிருந்தனர். வடிவு லட்சுமி அணிந்திருந்த நகைகளை கண்களாளையே ஆராய்ச்சி செய்துக் கொண்டிருந்தார். “என்னங்க உங்க தங்கச்சி கழுத்துல காதுல போட்டிருக்குறதே எப்படியும் முப்பது நாற்பது பவுன் இருக்கும்க இவங்களுக்கு எப்படி இவளோ பணம் வந்தது “என்றாள் வடிவு பாண்டியிடம் மெதுவாக.
“மச்சான் நீங்க சொல்லுறது எல்லாம் உண்மை தானா கனி கல்யாணத்துக்கு வந்தப்பா கூட நீங்க வாட்ச் கடை தான வச்சிருந்திங்க, கதிர் வேலைக்கு போகாம வெடியா தான சுத்திட்டு இருந்தான், இப்போ எப்படி நகை கடை திறக்க போறதா சொல்லுறீங்க “
“நம்புற மாதிரி இல்லையே, நகை கடை திறக்க போறது உண்மையா இருந்தாலும் அவன் கிட்ட ஏது அவளோ காசு” என்றார் பாண்டி நக்கலாக.
வேலுசாமி கோபத்துடன் லட்சுமியை பார்த்தார், “என்னங்க அவங்க குணம் நமக்கு தெரிஞ்சது தானங்க, கொஞ்சம் பொறுமையா இருங்க ” என்றார் லட்சுமி.
வேலுசாமி அங்கு நின்று கொண்டிருந்த ஜோதியை அழைத்து “உன் போன்ல நெட் இருக்குல்லமா, அதுல KR நிறுவனம் ஒட்டன்சத்திரம் போட்டு பாருமா ” என்றார்.
ஜோதியும் அவ்வாறே செய்தால் போனில் தெரிந்த தகவலை விழியை அகல விரித்து பார்த்துக் கொண்டிருந்தாள்.
“நீ மட்டும் பார்த்த எப்படிமா அதுல என்ன போட்டுருக்குனு உன் அம்மா அப்பாகிட்ட படிச்சி காட்டு”
“அம்மா அப்பா இதுல KR ரியல் எஸ்டேட், KR ஜவுளிக்கடை, KR ஹோட்டல் & கேட்டரிங், இது எல்லாத்துக்கும் முதலாளி கதிரவன் சக்கரவர்த்தினு போட்டுருக்கு பா, இதுல அத்தானோட போட்டோ கூட போட்டுருக்கு பாருங்க “என்று கூறி போட்டோவை காட்டினால் ஜோதி,பாண்டியும் வடிவும் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.
“மச்சான் நிஜமாவே என் மருமகன் திறமைசாலி தான் இந்த சின்ன வயசுல இத்தனை தொழில் பண்ணுறதுனா சும்மாவா ” என்றான் பாண்டி இழித்துக் கொண்டே.
“பணம்னு சொன்னதும் உன் அண்ணே எப்படி இழிச்சிக்கிட்டு வரான்னு பாரு வெக்கம் கேட்ட பையன் “என்றார் வேலுசாமி லட்சுமியிடம் ரகசியமாக.
இவர்கள் அங்கு இருந்து செல்லும் வரை வடிவும், பாண்டியும் இவர்களை நன்கு கவனித்து வழியானுப்பி வைத்தனர். லட்சுமி கிளம்பும் போது வடிவு அவரிடம் “லட்சுமி நாங்க விழாக்கு இரண்டு நாளைக்கு முன்னாடியே வந்து உனக்கு கூடமாட ஒத்தாசையா இருந்து எல்லா வேலையும் செய்யுறோம் சரியா “என்றார் இழித்துக் கொண்டே.
வடிவும், பாண்டியும் சேர்ந்து எப்படியாவது ஜோதியை கதிரவனுக்கு கல்யாணம் செய்து வைத்துவிட வேண்டும் என்று பேசிக்கொண்டிருந்தனர்.ஜோதிடம் “நீ எப்படியாது கதிரவன் கிட்ட பேசி சிரிச்சி அவன உன்ன காதலிக்குற மாதிரி பண்ணிரு சரியா “
“அவனை மட்டும் நீ கல்யாணம் பண்ணி கிட்ட டெய்லி புது புது டிரஸ்,நகைனு போட்டு ஜாலியா இருக்கலாம் “என்று கூறி ஜோதியின் மனதில் ஆசையை விதைத்தார் வடிவு.
திறப்புவிழா ஏற்பாடுகள் அனைத்தும் சிறப்பாக நடந்துக்கொண்டிருந்தனர். விழாவிற்கு இன்னும் இரண்டு நாட்களே இருந்த நிலையில், வேலுசாமியின் அண்ணன் மட்டும் தம்பி குடும்பத்தார் முதல் நாள் காலைலையே வந்து விட்டனர்.
கதிர் லட்சுமியை அழைத்து “அம்மா நீங்க ஏதுவும் வீட்டில சமைக்க வேண்டாம், நான் கடைல இருந்துக் கொண்டு வர சொல்லுறேன்”
“அப்பறம் அம்மா என் ரூம்குள்ள பெரியவங்க யாரையும் விட்டு ராதீங்க உள்ள ரஞ்சு போட்டோ இருக்கு “
“நான் யாரும் வரமா பாத்துக் குறேன், அப்பறம் கனி மாமியார் வீட்டுல இருந்து இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவாங்க அவங்களை பஸ் ஸ்டாப் போய் கூட்டிடு வரணும் பா டிரைவர் கிட்ட சொல்லி கூட்டிடு வர சொல்லு “
கதிரின் அண்ணன்கள் இருவர், தம்பி மட்டும் தங்கை நால்வரும் கதிரின் அறைக்குள் சென்றனர். அங்கு சுவற்றில் பெரியதாக வரையப் பட்டிருந்த ரஞ்சனின் ஓவியத்தை பார்த்து இது யார் என்று கேட்க கதிர் புன்னகையுடன் என் வருங்கால பொண்டாட்டி இந்நாள் காதலி என்றான்.
பின்னர் அவனுடைய காதல் கதை முழுவதையும் அவன் சகோதர சகோதரியிடம் கூறிவிட்டு, இதை யாரிடமும் சொல்ல கூடாது என்று கூறினான்.
கனியின் வீட்டிலிருந்து அவள் அத்தை, மாமா மட்டும் நாத்தனார் சுதா அவளுடைய ஒரு வயது குழந்தையுடன் வந்திருந்தால், கதிர் வந்தவர்கள் அனைவரையும் வரவேற்று பேசிக் கொண்டிருந்தான். சுதாவை நிமிர்ந்துக் கூட பார்க்கவில்லை.
சுதா தான் கதிரவனை வைத்த கண் வாங்கமல் பார்த்துக் கொண்டிருந்தாள். கதிரின் தோற்றத்தையும் ,வளர்ச்சியையும் பார்த்து அவளுக்கு ஏக்கமாக இருந்தது. அவசரப்பட்டு இவனை இழந்து விட்டோமே என்று நினைத்தால்.
பாண்டியின் குடும்பமும் வந்து விட்டனர். கதிரின் வீட்டையும் காரையும் பார்த்ததுமே வடிவு அசந்து போய் விட்டாள்.
மதியம் அனைவருக்கும் சிக்கன், மட்டன் உணவுகளை வர வளைத்து விருந்து வைத்தான். மாலை நேரம் அனைவரையும் ஜவுளிக்கடைக்கு அழைத்து சென்று அவர்களுக்கு பிடித்த உடையை எடுக்க செய்தான். பின் அனைவரும் கதிர் மற்ற கடைகளை சென்று பார்த்தனர்.
சுதா இத்தனை கடைகள் இவ்வளவு பணம் அனைத்தையும் இழந்து விட்டோமே என்று வயித்தெறிச்சலில் இருக்க மறுபுறம் இந்த சொத்துக்கள் அனைத்தையும் ஜோதியை வைத்து அனுப்பவிக்க வேண்டும் என்று திட்டம் போட தொடங்கினர் அவளுடைய பெற்றோர் .
ஜோதியை கதிருடன் பேசி பழகுமாறு கூறி வடிவு அனுப்பி வைக்க. கதிர் அவளை நிமிர்ந்தும் பார்க்க வில்லை அவளிடம் பேசவும் வில்லை.
கடையின் திறப்புவிழா நாளும் வந்தது, அனைவரும் தயாராகி கடைக்கு வந்தனர். கதிர் அனுவை காலேஜ்க்கு சென்று அழைத்து வந்து ஜவுளிக்கடையில் இருக்கும் அறையில் ரெடியாகும் படி கூறினான்.
“கதிர் இன்னும் ரெடி ஆக என்ன இருக்கு, நான் இப்போவே ரெடி தான இருக்கேன் வாங்க போலாம் அங்க “
“இந்த டிரஸ் வேண்டாம் ரஞ்சு, இந்த டிரஸ் போட்டுக்கோ அதோட இந்த நகைகளையும் “என்று கூறி ஒரு லேகங்கா டிரஸையும், ஒரு பெரிய பெட்டியில் நகை களையும் குடுத்தான்.
“டேய் மாமு என்ன விளையாடுறைய நான் இந்த மாதிரி டிரஸ், இவளோ நகை எல்லாம் போட மாட்டேன்னு உனக்கு தெரியதா, இதுலாம் நான் போடமாட்டேன் போடா “என்றாள் அனு.
“செல்லமா ப்ளீஸ்டா இன்னைக்கு மட்டும் போட்டுக் கோடா, நகைக்கடை முதலாளியம்மா நீ நீயே கொஞ்சமா நகை போட்டு வந்தா மத்தவங்க எப்படி நம்ம கடைக்கு வந்து நகை வாங்குவாங்க “
“மாமு ப்ளீஸ்டா இந்த டிரஸ் நகை எல்லாம் போட்டா பொம்மை மாதிரி இருப்பேன்டா, கொஞ்சமாது என் மேல கருணை காட்டுடா, என் செல்லம்ல தங்கம்ல ப்ளீஸ் “என்று கூறி கதிரை கட்டிப் பிடித்து கன்னத்தில் முத்தம் கொடுத்தாள்.
“சரி நீ இவளோ கொஞ்சி சி கெஞ்சி கேக்குறதால இந்த டிரஸ் நகை எல்லாம் நீ ஒரே ஒரு மணி நேரம் மட்டும் போட்டுக்கோ அப்பறமா எல்லாத்தையும் கழட்டிட்டு உனக்கு பிடிச்ச டிரஸ் போட்டுக்கோ சரியா “என்று கூறி விட்டு அங்கிருந்து சென்று விட்டான்.
சற்று நேரத்தில் அறைக்குள் செல்வி வந்தார். செல்வி கனியின் தோழி கதிர் பக்கத்துவிட்டுகாரி
“என்ன ரஞ்சனி நீ மட்டும் தனியா இருக்குற எங்க உன் பிரண்ட் ரேணுகாவா காணோம் “என்றார் செல்வி.
“ஹாய் அக்கா எப்படி இருக்கீங்க பாத்து ரொம்ப நாள் ஆச்சு, ரேணுகா நர்மதா விட்டுக்கு போயிருக்க கொஞ்ச நேரத்துல வந்துருவா “
“நான் நல்ல இருக்கேன் ரஞ்சனி, நீ தான் விட்டு பக்கமே வர மாட்டேன் கிற. சரி வா டைம் ஆச்சு உன்ன ரெடி பண்ணி விடுறேன் “
“எனக்கு ஹெல்ப் பண்ண தான் வந்துருக்கீங்களா, என் மேல உங்களுக்கு எவளோ பாசம், தேங்க்ஸ் அக்கா “என்றாள்.
“தேங்க்ஸ்லாம் அப்பறமா சொல்லு இப்போ போய் டிரஸ் மாத்திட்டுவா “
அனு டிரஸ் மாற்றிக் கொண்டு வந்ததும் அவளுக்கு தலை சிவி நகைகளை அணிவித்து பூ வைத்து தயார் செய்து முடித்தார் செல்வி.
“பாப்பா கொஞ்சமா மேக்கப் போட்டுக்கோ, இந்த டிரஸ்க்கு மேக்கப் போட்ட ஹீரோயின் மாதிரி செமையா இருப்ப “
“வேண்டவே வேண்டாம் அக்கா, எனக்கு அதுலாம் பழக்கம் இல்லனு உங்களுக்கு தான் தெரியும்ல, பவுடர் கூட கொஞ்சமா தான் போடுவேன், இன்னைக்கு நீங்க தான் நிறைய பவுடர் போட்டு விட்டுடிங்க “என்று கூறிக் கொண்டிருக்கும் போதே அங்கு கதிர் வந்து விட்டான்.
அனுவின் உடைக்கு மேட்சாக பேண்ட் ஷர்ட் அணிந்து அழகாக வந்திருந்தான்.இருவரும் ஒருவரை ஒருவர் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.
“டேய் தம்பி போதும்டா ஜொள்ளு விட்டது பக்கத்துல ஒருத்தி இருக்கங்குற நினைப்பு இருக்காடா உங்களுக்கு “
“அது இருக்குற நாளா தான் இவளோ நேரம் அவ பக்கத்துல போகாம தள்ளி இருக்கேன்” என்றான் அனுவின் மேல் இருந்து பார்வையை எடுக்காமல்
“கதிரவா ரஞ்சனிய பார்த்தது போதும்டா வா கிளம்பலாம், திறப்பு விழாக்கு டைம் ஆச்சு பாரு “
“ஆமால, ரஞ்சு வா போலாம் அக்கா நீயும் வா எங்க கூடயே “
“இல்ல தம்பி நீ முன்னாடி போ நான் விட்டுக்கு போய் என் விட்டுகாரரை கூட்டிடு வாரேன் ” என்றாள் செல்வி.
இருவரும் காரில் ஏறி அமர்ந்தனர். “ரஞ்சுமா இந்த டிரஸ்ல நீ ரொம்ப ரொம்ப அழகா இருக்குறடி உன்ன பாத்துட்டே இருக்கலாம் போல இருக்கு”
” நீயும் இந்த டிரஸ்ல செமையா இருக்குறடா புருஷா,கதிர் உன் போன் குடு நாம ரெண்டு பேரும் இந்த டிரஸ் போட்டோ எடுத்துக் கலாம்” என்று கூறி போனில் நிறைய போட்டோக்களை எடுத்தாள் அனு .
எந்த அளவுக்கு மகிழ்ச்சியுடன் விழாவிற்கு போகிறாளோ அதை விட அதிக வருத்தத்துடன் விழா முடிந்து வரும்போது இருக்க போகிறாள் என்பதை அறியாமல் போனால் அனு.