அத்தியாயம் -31
அன்று காலை எழுந்ததில் இருந்தே கதிர் மிகவும் டென்ஷனாக இருந்தான். இன்று தான் பெருமாள் சாமியை பற்றிய தகவல்கள் அனைத்தும் நியூஸ் பேப்பர் டிவியிலும் வரும் நாள், கதிர் நினைத்தது போல் நடந்தால் பெருமாளை இன்றே போலீஸ் கைது செய்துவிட்டும் ஒரு வேலை ஏதேனும் தவறு ஏற்பட்டு பெருமாளுக்கு எதிராக செயல் பட்டது கதிர் தான் என்று தெரிந்தால் கதிரை கொன்றுக் கூட விடுவான்.
எற்கனவே கடையை எழுதி வாங்குவதற்கு கதிரை மிரட்டி பார்த்தான், முடியவில்லை என்றதும் அடி ஆட்களை வைத்து கொல்ல முயற்சித்தான் கதிர் அவர்களை அடித்து துரத்தி விட்டான். பின் லாரியை ஏற்றி கொல்லப் பார்த்தான் நூலிலையில் உயிர் தப்பினான் கதிரவன் .
பெருமாள் அரசியலில் பெரும் புள்ளி என்பதால் ஒட்டன் சத்திரம், திண்டுக்கல் பகுதிகளில் உள்ள மக்களிடம் கடைகளையும், வீடு மட்டும் நிலங்களையும் குறைந்த விலை குடுத்து எழுதி வாங்கி விடுவான். இடத்தை தர மறுத்தால் அவர்களை கொன்று அவர்களுடைய சொத்துக்களை தான் பேரில் மாற்றி கொள்வான்.
இதை பற்றி எல்லாம் அனுவிடம் கூறினாள், மிகவும் பயந்து விடுவாள் கடையை பெருமாளிடம் குடுத்து விட கூறுவாள். மேலும் அவனுக்கு எதிராக செயல் பட விடமாட்டாள் என்பதால் மட்டுமே கதிர் அனுவிடம் எதை பற்றியும் கூறவில்லை.
அன்று காலை பேப்பரில் பெருமாள் பற்றி நியூஸ் ஏதுவும் வராமல் போகவே கதிர் மிகவும் டென்ஷனாக இருந்தான் அப்பொழுது தான் அனு ஹாஸ்பிடல் போகவேண்டும் என்று கூறினாள், கதிரும் அவளை தனியா செல்ல அனுமதித்தான்.
“டேய் நியூஸ் பேப்பர்ல அவனை பத்தின நியூஸ் எதும் வரல ஏன்டா ” என்றான் கதிர் தான் அடி ஆட்களிடம்
“அண்ணே நாளைக்கு பேப்பர்ல அவன் பண்ணக் கொலைகளை பத்தி வரும், இப்போ டிவில அவனை பத்தி வந்துட்டு இருக்கு பாருங்க அண்ணே,இன்னும் கொஞ்ச நேரத்துல எப்படியும் அவனை கைது பன்னிருவங்க நீங்க டென்ஷன் ஆகாம இருங்கணே “என்றான் கதிரின் அடியாள்.
கதிருக்கு இப்பொழுது தான் நிம்மதியாக இருந்தது. பெருமாள் மீது உள்ள பயத்தால் ரஞ்சனியை மிகவும் கஷ்ட படுத்தி விட்டோம், இன்று அவளிடம் நடந்தவற்றை பற்றிக் கூறி மன்னிப்புக் கேக்க வேண்டும். முடிந்தால் இன்று மாலை அனுவை அவள் வீட்டிற்கு அழைத்து செல்லவேண்டும் என்று நினைத்தான்.
“சாரி டி செல்லம் உன்ன நான் ரொம்ப கஷ்ட படுத்திட்டேன் இனிமேல் உன் மனசு கஷ்ட படுற மாதிரி நடந்துக்க மாட்டேன் “என்று கூறி புலம்பி கொண்டு இருந்தான்.
அப்பொழுது அவன் இருந்த அறையின் கதவு தட்டப் பட்டது. உள்ளே வாங்க என்று கதிர் கூறவும் உள்ளே வந்தனர் ராமசந்திரன், கார்த்திக் மட்டும் அகிலன். அவர்களை பார்த்ததும் கதிர் மலர்ந்த முகத்துடன் வரவேற்று அமர கூறினான்.
அவர்களும் அமர்ந்து பேச ஆரம்பித்தனர். ராமசந்திரன் கதிர் அனுவை அடித்ததை பற்றியும் வீட்டுக்குள்ளே அடைத்து வைத்திருந்ததை பற்றியும் கேட்டார்.
கதிர் அமைதியாக இருக்கவே
“என் பொண்ணு எங்களை எல்லாம் வேண்டாம்னு சொல்லிடு உங்களை நம்பி வந்தா, அவளை நீங்க பார்த்துகிற லட்சணம் இது தானா “
“இதுக்கு மேலயும் என் பொண்ண உங்க கிட்ட விட்டு வச்சா அவளை அடிச்சே நீ கொன்னாலும் கொன்னுருவ, எனக்கு என் பொண்ணு வேணும் அனுப்பி வை ” என்றார் ராமசந்திரன்.
“அனுப்பி வைனா புரியல, என்ன அர்த்ததில நீங்க பேசுறீங்க “
“அனுப்பி வைனா அனுக்கு விவாகரத்து குடுத்து ஒரேடியா எங்க கூட அனுப்பி வைனு அர்த்தம், இந்தா விவாகரத்து பத்திரம் இதுல கையெழுத்து போடு “என்று கூறி பத்திரத்தை நிட்டினான் கார்த்திக்.
கார்த்திக் பேசியதை கேட்டு கதிருக்கு கோவம் வந்து விட்டது. கோபத்துடனே ” யாரு கிட்ட வந்து என்ன பேசிட்டு இருக்குற, என் ரஞ்சனிய நான் விவாகரத்து பண்ணுறதா முடியவே முடியாது ” என்று கத்தினான். கதிரின் சத்தம் கேட்டு பாண்டி உள்ளே வந்தார்.
“நீ கையெழுத்து போடலான போடா, உன் கையெழுத்து இல்லாமலே எங்கனால அனுக்கு டிவோர்ஸ் வாங்கி தரமுடியும், அனுவை உன்கிட்ட இருந்து பிரிச்சி உன் கண்ணுல படாத இடமா பாத்து அவளை அனுப்பிவச்சி அவளுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி சந்தோசமா வாழ வைக்குறேன் டா ” என்று கார்த்திக் கூறி கொண்டிருக்கும் போதே கதிர் அவன் சட்டையை பிடித்து அடிக்க ஆரம்பித்து விட்டான்.
கார்த்திக்கும் திரும்ப அடிக்க இருவரும் சண்டையிட்டுக் கொண்டே அறையை விட்டு வெளியே வந்து விட்டனர். கதிரை பாண்டியும், கார்த்திக்கை அகிலனும் ராமசந்திரனும் பிடித்துக் கொண்டு சண்டையை விலகி விட முயற்சி செய்தனர். அப்போ கதிரின் கை பட்டு ராமசந்திரன் கீழே விழுந்து விட்டார்.அவர் கீழே விழவும் அனு அங்கு வரவும் சரியாக இருந்தது.
(அனு வருவதை பார்த்த பாண்டி தான் ராமசந்திரனை தள்ளி விட்டான் அவர் கதிரின் பின்னால் இருந்ததால் அனைவருமே கதிர் தான் தள்ளி விட்டான் என்று நினைத்து விட்டனர் ).
அனுவின் அப்பா கீழே விழுந்ததை பார்த்ததும் அப்படியே நின்று விட்டாள் அதிர்ச்சியில், கார்த்தியும் அகிலனும் அவரை தூங்கி விட்டனர். கார்த்திக் மீண்டும் கதிரை அடிக்க போக அங்கிருந்த பணியாளர்கள் தடுத்து விட்டனர்.
“இனிமேல் யாராவது அனுவை பத்தி பேசிட்டு வந்திங்க, உங்க யாரு உடம்புலையும் உயிர் இருக்காது. போங்கடா இங்க இருந்து என்று கூறி விட்டு” அறைக்குள் சென்று விட்டான்.
பாண்டி அனுவிடம் வந்து “உங்க அப்பா கதிர் கிட்ட எதுக்கு என் பொண்ண அடிச்சி கொடுமை படுத்துறானு தான்மா கேட்டாரு அதுக்கு போய் உங்க அண்ணனை அடிச்சி உங்க அப்பாவையும் அடிச்சி கீழ தள்ளி விட்டுட்டான், உங்க அப்பாவையும் மரியாதை இல்லாம பேசிட்டான் பாவம் அந்த பெரிய மனுஷன் இவளோ பேரும் முன்னாடி அசிங்கப்பட்டு போறாரு” என்றான்.
அனு கடையின் வெளியில் நின்று கொண்டிருந்த அவள் அப்பாவின் காலில் போய் விழுந்து “என்ன மன்னிச்சிருங்க அப்பா என்னால தான் உங்க எல்லாருக்கும் இவளோ அசிங்கம்” என்றாள்.
அனுவை தூங்கி கட்டி அனைத்து “உன்னாலலாம் ஏதுவும் இல்லடா அழாதடா “என்றார்.
“இனிமேல் யாரும் என்னை தேடி வராதீங்க, நீங்க அசிங்கப்படுறதா என்னால பாக்க முடியல,நான் சொல்லுறதையும் மீறி என்ன தேடி வந்திங்க நான் தற்கொலை பண்ணிட்டு செத்துப் போயிருவேன், என்மேல சத்தியமா நீங்க என்ன தேடி வர கூடாது “
“அத்தான் என்ன மறந்துட்டு,நீங்க கல்யாணம் பண்ணி சந்தோசமா வாழனும் அத்தான் ப்ளீஸ் “என்று கூறி விட்டு அங்கிருந்து வண்டியை எடுத்துக் கொண்டு வேகமாக சென்று விட்டாள்.
அனு வீட்டுக்குள் நுழைந்ததும் “உனக்கு ஒரு பார்சல் வந்துருக்கு என்னனு பாரு “என்றாள் வடிவு
அனு சோர்வாக சென்று அமர்ந்து அந்த பார்சலை பிரித்தால் அதிலிருந்து அனு அகில் இருவரும் நெருக்கமாக இருக்கும் போட்டோகள் இருந்தன. அத்துடன் ஒரு கடிதமும் இருந்தது. அதில்
“ரஞ்சனி அக்கா என் பேரு நவீன், ஒரு மாசத்துக்கு முன்னாடி கதிரவன் சார் என்ன பாக்க வந்தாங்க. உங்க போட்டோவை காட்டி இவ என் மனைவி இவளோட நடவடிக்கை கொஞ்ச நாளா சரி இல்ல இவ யாருக்குடா பேசுற எங்க போற வாரன்னு கண்காணிச்சி சொல்லுருனு சொல்லி எனக்கு பணம் குடுத்தாரு”
“நான் உங்கள பின்தொடர்ந்து வந்தப்போ எடுத்த போட்டோ தான் இது, கதிர்வன் சார் உங்களுக்கும் அகிலனுக்கும் தப்பான தொடர்ப்பு இருக்குறதா நினைக்குறாங்க அக்கா.நான் பணத்துக்கு ஆசை பட்டு இப்படி செஞ்சிட்டேன் மன்னிச்சிருங்க அக்கா “என்று எழுதி இருந்தது.
அனு அதையெல்லாம் கிழித்து எரிந்துவிட்டு அறைக்குள் சென்று விட்டாள்.”பரவாயில்லையே நம்ம அனுப்புனா லெட்டர பார்த்துட்டு இவளது உண்மைன்னு நம்புற, அந்த கதிரவன் தான் என் அனுவை பத்தி எனக்கு தெரியும்னு சொல்லி நான் இரண்டு நாளைக்கு முன்னாடி அவனுக்கு அனுப்புனா லெட்டரை கிழிச்சி போட்டுட்டான்” என்று கூறிக் கொண்டிருந்தாள்.
“கதிர் நீ முதல்ல என்ன அடிச்ச, அசிங்கப்படுத்தின, இன்னைக்கு என் அப்பாவையும் அடிச்சி அசிங்க படுத்திட்ட,இது எல்லாத்துக்கும் மேல என்னையே சந்தேகப்பட்டுடல நீ இதுக்கு மேலயும் உன் கூட வாழுறதுக்கு யாரு கண்ணுலயும் படமா எங்கையாது போயிரலாம்” என்று நினைத்தாள்.
“என்னால் இந்த வீட்டில் இருக்க முடியாது, நான் வீட்டை விட்டு போகிறேன், என்னை தேடி நீ வந்தாள் நான் உயிரோடு இருக்க மாட்டேன் “என்று எழுதி வைத்து விட்டு அவள் அணிந்து இருந்த நகை அனைத்தையும் கழட்டி வைத்து விட்டு அங்கிருந்து கிளம்பி சென்று விட்டாள்.
அனு போய் கொண்டிருக்கும் போது எதிரில் செல்வி அக்கா வந்து அனுவிடம் “என் இப்படி நடந்து போய்ட்டு இருக்குற, நீ போட்டிருந்த நகைலாம் எங்க என்றார் “
“அக்கா உன் கைல எவளோ பணம் வச்சிருக்குற “என்றாள் அனு.
” சீட்டு கட்டுனது போக இப்போ 2200ரூபாய் இருக்கு எதுக்குடி கேக்குற “
“அந்த பணத்தை எனக்கு கடனாத்தா என்னைக்காது ஒரு நாள் கண்டிப்பா திருப்பி குடுத்துருவேன், என் எதுக்குன்னு கேக்கதா “என்றாள் அனு. செல்வி பணத்தை தர அதை வாங்கிக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டாள்.
பஸ்ஸ்டாப் போய் நின்றதும் முதலில் மதுரை பஸ் வர உடனே அதில் ஏறி மதுரை ரயில் நிலையத்துக்கு சென்று விட்டாள். அங்கிருந்து எங்கே செல்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்க “இன்னும் சற்று நேரத்தில் திருப்பதி செல்லும் விரைவு ரயில் வர உள்ளதாக அறிவிக்கப் பட்டது”.
அனு உடனே சென்று திருப்பதிக்கு செல்ல டிக்கெட் வாங்கி கொண்டு அந்த ரயிலில் ஏறி அமர்ந்துக் கொண்டாள். ரயிலில் ஏறியதில் இருந்து அனு தொடர்ந்து அழுதுக் கொண்டே இருந்தாள்.
பெருமாள் சாமி அன்று மாலை கைது செய்யப் பட்டான். அவனுக்கு குறைந்தது நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக செய்திகளில் கூறப்பட்டது.
கதிர் மிகவும் மகிழ்ச்சியுடன் அனுவை பார்க்க வீட்டுக்கு வந்தான். அங்கு அனு இல்லாமல் போகவே வடிவு, பாண்டியிடம் அனு எங்கே என்று கேட்டான்.
“ரஞ்சனி மதியம் கடையில இருந்து வரும் போது அழுதுட்டே வந்து ரூம்குள்ள போய் கதவை பூட்டி கிட்டபா, ரொம்ப நேரம் ஆகியும் அவ வராதா நாள கதவை தட்டி பார்த்தேன் அனு கிட்ட இருந்து எந்த சத்தமும் இல்லாம போக கதைவை திறந்து பார்த்தேன் அனு அங்க இல்ல கதிரவா “
“எப்போ வீட்டை விட்டு போன எங்க போனானும் தெரியலப்பா “என்றாள் வடிவு .
“ரஞ்சனி கடைக்கு வந்தலா, எப்போ “
“நீ ரஞ்சனி அப்பா அண்ணா கூட சண்டை போட்டால அப்போ அவ அங்க தான்பா இருந்தா ” என்றார் பாண்டி.
கதிர் அறைக்குள் சென்று தலையில் கை வைத்துக் கொண்டு அமர்ந்து இருந்தான். அனு எங்க போயிருப்பா என்று யோசித்துக் கொண்டிருந் தான். அப்பொழுது தான் டேபிள் மேல் அனு எழுதி வைத்த லெட்டர் பார்த்து எடுத்து படித்தான்.
பின் அனுவை தேட ஆரம்பித்தான். வடிவு லட்சுமிக்கு போன் செய்து கூறினாள். அவர்களும் சேர்ந்து தேடினர். அனு மதியம் சாப்பிடாததாலும், அழுதுக்கொண்டே இருந்ததாலும் அப்படியே மயங்கி விழுந்து விட்டாள். அருகில் இருந்தவர்கள் தண்ணீர் தெளித்து எழுப்பினர். அனு அமர்ந்து இருந்த சிட்டின் எதிரில் ஒரு கன்னிகாஸ்திரி அமர்ந்திருந்தார்.
அவர் அனுவிடம் எதற்காக அழுது கொண்டிருக்கிறாய் என்ன பிரச்சனை எங்கு சென்று கொண்டிருக்கிறாய் என்று விசாரித்தார், அனு வீட்டில் பிரச்சனை அதனால் வீட்டை விட்டு வெளியே வந்து விட்டதாக கூறினாள்.மேலும் எங்கு போவது என்று தெரியவில்லை என்று கூறினால்.
கன்னிகாஸ்திரி அனுவை சமாதானம் செய்து திரும்ப வீட்டுக்கு போய்விடுமாறு கூறினார். அனு முடியாது என்று மறுக்கவே. தன்னுடன் வருமாறு அழைத்தார் அவர் ஒரு ஆதரவற்றோர் இல்லம் நடத்தி வருவதாகவும் அதன் மூலம் ஊர் ஊராக சென்று மக்களுக்கு உதவி செய்வதாகவும் கூறினார். அனுவும் அவருடன் செல்ல சம்மதித்தால்.
கதிரும் அனுவை தொடர்ந்து தேடிக் கொண்டே இருந்தான். அனு அந்த கன்னிகாஸ்திரியுடன் ஊர் ஊராக சென்று கஷ்டப்படும் மக்களுக்கு உதவி செய்ய ஆரம்பித்தாள்.
அனு அன்று ராமச்சந்திரனிடம் பேசிய பின்,அனு உடன் பேச யாரும் முயலவில்லை. அனு வீட்டை விட்டு சென்ற இரண்டு நாட்களுக்குப் பிறகு கீதாவிற்கு அழகான ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு அனுவின் ஞாபகமாக அனுஸ்ரீ என்று பெயர் வைத்தனர். அதன் பின்னர் ஒரு வாரம் கழித்து அகிலனும் ஜெர்மனிக்கு திரும்ப சென்று விட்டான்.
அனு வீட்டை விட்டு சென்ற விஷயம் ஒரு மாதம் கழித்து தான் ராமச்சந்திரனின் குடும்பத் தாருக்கு தெரியவந்தது. கார்த்திக் கோபத்துடன் கதிரவனை சந்திக்க போவதாக கூற ராமச்சந்திரன் மறுத்துவிட்டார். நாம் அனுவை தேடி செல்லக்கூடாது என்று அனு கூறியதாக கூறினார். மேலும் என் மகள் எங்கிருந்தாலும் நன்றாக இருப்பாள் என்றும் கூறினார்.
மாதங்கள் கடந்தன கதிரவனும் அனுவை தேடிக் கொண்டே தான் இருந்தான். அனுவின் வயிறும் வளர்ந்து கொண்டே சென்றது. சத்தான உணவு இல்லாததாலும் போதிய ஓய்வு இல்லாமல் அலைந்து கொண்டே இருந்த தாலும் அனு மிகவும் உடல் மெலிந்து காணப்பட்டாள்.
கதிர் அனுவை தேடி திருவண்ணாமலை சென்றான் அங்கு சித்தர் ஒருவர் அனுவை தேட வேண்டாம் என்று கதிரவனிடம் கூறினார். சித்தரின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு கதிரவனும் தேடாமல் விட்டு விட்டான்.
ஏழு மாதங்கள் கடந்து மும்பையில் உள்ள ஒரு ஆதரவற்றோர் இல்லத்தில் அனு ஜெனியை சந்தித்தால், அனுவாள் இந்த நிலைமையில் தொடர்ந்து பயணிக்க முடியாது என்பதால் மும்பையில் உள்ள இல்லத்தில் தங்கி விட்டாள். ஜெனி அடிக்கடி அவளை வந்து சந்தித்து பேசிக் கொண்டிருந்தாள்.
ஒரு நாள் ஜெனி அனுவை தன்னுடன் வருமாறு அழைத்தால் கணவனை இழந்த நான் தனியாக இருப்பதாகவும் நீ வந்தால் எனக்கு ஒரு துணையாகவும் உறவாகவும் இருப்பாய் என்று கூறி அழைத்துச் சென்றாள்.
ஆதரவற்ற இரு பெண்களும் ஒருவருக்கொருவர் ஆதரவாக ஒரே குடும்பமாக மாறிப்போயினர்.