தகப்பனை பார்க்க அரக்க பறக்க வந்த அக்காள், தங்கை இருவரும் அங்கே நின்ற பங்காளிகளைப் பார்த்து அதிர்ந்து நின்றனர்.
கணவனுக்குத் தெரிந்தால் ஏதும் வம்பு வந்துவிடுமோ என்று தான் அவர்கள் சென்ற பின்பு வந்தது, ஆனால் இப்பொழுது? ……
கந்தன் மற்ற மூவரும் தான் என்றாலும் தாங்கள் வந்ததை பேச்சு வாக்கில் உளறி கொட்டி விட்டால்?… அதற்குப் பயந்தே பெண்கள் இருவரும் வந்த சுவடே தெரியாமல் திரும்பி செல்ல பார்க்க விட்டேனா பார் என்பது போல் வந்து நின்றனர் கள்ளர்கள்.
முத்துவை பார்த்து அருளு அதிர்ந்து நிற்க.அதற்குப் பின்னால் நின்ற சொக்கனை பார்த்த அமுதுக்குச் சர்வமும் அடங்கியது.
என்னதான் சொக்கனை எதிர்த்து வாய்க்கு வாய் பேசினாலும் வம்பு செய்தாலும்.அவனது தோற்றமும் கண்ணுக்கு புலப்படாத ஆளுமையும் இன்னும் பெண்ணுக்குப் பயம் கொடுத்தது தனிக் கதை தான்.
பெண்கள் முழிப்பதை பார்த்த காத்தமுத்துப் பங்காளிகள் சங்கதி தெரியாமல் “இதுங்க ஏன் இந்த முழி முழிக்குதுங்க” மனதுக்குள் எண்ணி கொண்டான்.
“வாங்க!… வாங்க!…. அண்ணே ஆரு வந்திருக்காகனு பாருக” முத்துவின் நக்கல் குரலில் கந்தன், சங்கிலி, முருகு குடக்கோவன், திரும்பி பார்க்க பெண்கள் இருவரும் கையைப் பிசைந்து கொண்டிருந்தனர்.
“இதுங்க எதுக்குவே இங்கன வந்துச்சுங்க”, கந்தன்.
“எப்படித்தேன் சரியா வந்து மாட்டுதுங்களோ”, சங்கிலி.
“வச்சுச் செய்யப் போகுது இப்போதேன் முருகன் மாமா மாட்டுச்சு. அடுத்து அது பெத்த இரண்டும் மாட்ட போகுது” குடக்கோவன் புலம்ப அதற்குள் சேட்டை யை தொடங்கி விட்டான் சொக்கன்.
“பார்றா” என்றவன் அமுதிடம் நெருங்கி சற்று அவளது உயரத்திற்குக் குனிந்து அவளது நாசியைத் தனது நாசியில் முத்தமிட்டுக் கொண்டே.
“அடேடே ஆரு நீங்க? ஆர பார்க்க வந்தீக? இந்த மாமனையா?” சுற்றி அண்ணன் தம்பிகள் நிற்க தன்னைச் சிறு பிள்ளை போல் பாவனைப் பண்ணி நெருங்கி வந்து கள்ளம் செய்து கொண்டே பேசும் சொக்கனை பார்க்கவே சங்கடம் கொண்டது அரிவை பெண்.
அவளது அமைதியை கண்டு மேலும் நெருங்கி கிசு கிசுப்பான குரலில் “பேச மாட்டிங்களா?….. என்னமோ போங்க மனத்து கிடக்கீக” நாசியில் அவளது வாசத்தை நிரப்பி கொண்டே சொக்கன் பேச.
அவனது பேச்சில் அமுது அதிர்ந்து முகம் பார்க்க கண்ணில் கோடி குறும்புடன் சொக்கன்.
சொக்கனது இந்தப் பரிமாணத்தில் காத்தமுத்து அதிர்ந்து நிற்க அதனை பார்த்த சங்கிலி “பாவம் முதல் முதல சொக்குண்ணே சேட்டையைப் பாக்குது போலக் காத்தண்ணே எப்படி பேய் அடிச்ச மாதிரி நிக்குது பாரு.வூட்டுக்கு போயி பவுனு கிட்ட சொல்லி வேப்பல அடிக்கச் சொல்லனும்” என்றவனைப் பார்த்த கந்தன்.
“அவீங்க காதுல நீ பேசினது விழுந்துச்சு உமக்குத் தாண்டி வேப்பல அடிக்க வேண்டியதாகி போகும். காத்துமுத்துக்குப் பவுனு இருக்கு உமக்கு பார்த்துகிடு” என்றதும் வாயை இரு கை கொண்டு மூடி தலையை இடமும் வலமுமாகப் பலமாக ஆட்டினான் சங்கிலி.
அவர்களது கவனத்தை சொக்கன் ஈர்க்க சொக்கனோ மீண்டும் அமுதிடம் “ஆர பாக்கனும் உங்க அப்பாரையா?” என்றதும் பதறியெடுத்து வாயை திருந்தால் அமுது.
“அப்பாரு எங்க? நீகெல்லாம் என்ன பண்ணுறீக? அவளது பயத்தில் இரு ஆண்களுக்கும் சிறு கோபம் அப்படி என்ன செய்து விடுவோமாம்? இவர்களது தகப்பனை.
மன வருத்தம் உண்டு தான் இல்லை என்பதிற்கில்லை அதற்கு இரு தரப்பிலும் சரிவிகிதம் தவறு என்ற முறையில் சில விடயங்கள் விளக்க படாமல் தக்க தருணம் நோக்கி தள்ளி வைக்கப் பட்டுள்ளுது.
அதற்கென்று அவரை என்ன செய்து விடுவோம் என்ற கோபம் முத்து, சொக்கன் இருவருக்குமே உண்டு.
இரு ஆண்களுமே அன்பானவர்கள் தான். தனிமையில் இருவரும் அதீதம் இனிக்க இனிக்க உரையாடி கொள்வது இந்த இரு பெண்களைப் பற்றித் தான் என்பது அந்தரங்கமான ரகசியம்.
அது என்னவோ இந்த முசுடு பங்காளிகள் நண்பர் வகைக் கொண்ட உறவையே நாடினர். அதுவும் இரத்த வாடை மட்டுமே வெளி புழக்கமும், பழக்கமும் குறைவு தான் போலும்.
“ஹ்ம்ம்!.. உங்க அப்பாரு கிட்ட சீர் கேட்டோமா. அவரும் உமக்கு இல்லாததா மருமவனே இந்த வூட்டை வச்சுக்கிடுனு சொல்லி பாதிய எனக்கும் முத்துக்கும் பகுந்து கொடுத்துபுட்டாரு. பாரேன் எம்ம மாமனுக்கு எம்புட்டு நல்ல மனசுன்னு” சொக்கன் குரலில் வழமை போல் நக்கல்.
அவனது பேச்சுச் சுருக்கென்றது இரு பெண்களுக்கும். அந்த அளவிற்குப் பெரிய இடமில்லை தான். இருந்தாலும் அவர்களுக்கு அது மாளிகையே அமுதுக்குக் கோபம் எல்லையைக் கடக்க.
“சீர் வேணுமுண்டு எண்ணுறவுக அவீங்களுக்குத் தகுந்த இடத்துல கைய வைக்கனும்” அமுது பட்டெனச் சொல்ல அருளுக்கும் அதே எண்ணம் தான்.
அவளுக்கு சலிக்காமல் சொக்கனும் “எங்களுக்குக் கைக்கு தோது பார்த்துதேன் வச்சோம்” என்றவன் பார்வையில் சற்றும் கண்ணியம் காண முடியவில்லை.எங்கோ தொடங்கிய பேச்சுத் திசை மாறி எங்கெங்கோ பயணப் பட்டிருந்தது.
“ப்ச் அப்பாரு எங்க?” அமுது பொறுமை பறக்க.
“அதைத் தாண்டி சொல்ல வந்தேன் நீதேன் பேச்ச மாத்திபுட்ட” என்றவன் முத்துவை நோக்கி “எதுல தம்பி விட்டேன்”
“சொத்து எழுதி கொடுத்த மவராசன்”
“ஆஹான்!… மவராசன் அதேன் அதேன் பேசிக்கிட்டே இருந்தோமா அப்போ எங்கிருந்தோ ஒரு காக்க நல்ல கலருடி பார்க்க அம்புட்டு அம்சமா இருந்துச்சு. உங்க அப்பாரா பார்த்ததும் அதுக்கு ஒரே குஷி போலப் பறந்து வந்து உங்க அப்பார கழுத்து வாக்குல கவ்வி தூக்கிட்டு போயிடுச்சு” சொக்கன் கதை சொல்ல அவனுக்கு மேல் இருந்தான் முத்து.
“அருளு சங்கதி விளங்குதா? உங்க அப்பார காக்கா தூக்கிட்டு ஓடி போச்சு” கையைக் காலை ஆட்டி சொல்ல இருவருக்கும் அழுகை பொத்துக் கொண்டு வந்தது. அமுது அழுதுக் கொண்டே ஓட அவள் பின்னில் அருளும்.
அரிவைகள் ஓடவும் சிரிப்பை ஒழித்துக் கொண்ட இருவரையும் பார்த்து “என்ன அண்ணே நீ? இப்புடி சீண்டி அழுக வைக்கிற. வம்பு பண்ணறதுக்கும் ஒரு அளவு வேணாமா?.
அது உம்ம பொஞ்சாதினே ஏலேய்!… முத்து நீயும் என்னவே” காத்தமுத்துக்குத் தாய் குலத்தின் கண்ணீரை கண்டு தாங்க முடிய வில்லைப் போலும் சற்று மிரட்டலாகப் பேசி பொங்கி வைக்க.
சொக்கன் முத்து இருவரும் மர்மாகச் சிரித்துக் கொண்டு இருந்தனர். காசப்பு அன்று மாலையே என்று அறியாத அந்த ஆடும் சற்றுப் பலமாகத் துள்ளி கொண்டு இருந்தது பாவம்.
மகள்கள் வந்ததை அறியாத முருகன் மருமகன்களுக்கு டீ வாங்கி வந்தார்.
“மாமா நீக ஏன் இதெல்லாம்” என்றவாறே வந்த சொக்கனை பார்த்து சிறு புன்னகை மட்டுமே முருகனிடம் அவர்களது இணக்கம் புரியாமல் குட்டி பங்காளிகள் நாலும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து வைத்தது.
நேற்றைய இரவு ஓர் ரகசிய கூட்டம் கண்டதின் பலன் இந்த மாமான் மருமான் கொஞ்சல் என்பதை அறியாதவர்கள் மண்டையை உருட்டி கொண்டு இருந்தனர்.
அது சரி நேற்று வரை சொக்கனை பார்த்து துள்ளி கொண்டு இருந்த மனுஷன். இன்று தூக்கு சட்டி சகிதம் சேவை செய்தால் என்னவென்று புரியும் நமக்கு.
இதனை அறியாத பெண்கள் என்னவோ ஏதோவென்று பயந்து அழுது புலம்பி கொண்டு இருந்தனர். அது சரி இது தான் விடயம் என்று பெண்களிடம் சொன்னால் தானே அவர்களுக்கும் விடயம் இன்னதெனப் புரியும்.
முதுமகன்களின் நிலையோ விடயம் புரிந்து விட்டால் இப்பெண்களின் உணர்வுகளை அணு அணுவாகக் காண முடியாதே என்ற எண்ணம்.
அதனால் தான் அண்ணன் தம்பிகள் இருவரும் தங்களின் இணைகளைப் பதறி, விரட்டி, பயந்து, ஓடி, ரசித்து, யாரும் அறியா வண்ணம் ருசித்து இறுதியில் புசிக்கக் காத்துக் கொண்டு திரிந்தனர். இவை இரண்டும் என்ன வகையோ? பொல்லா கூட்டணி போலும்.
ஆனாலும் ஒரு விடயத்தை ஒத்துக்கொள்ள வேணுமப்பா இந்தச் சொக்கனிடம் ஏதோ ஓர் சொக்கு போடி உள்ளது ஒரு வார்த்தை பேசினாலும் எதிர்ப்பே இல்லாமல் ஒத்துக்கொள்ள வைத்து விடுகிறான் கள்ளன்.
*************
மாலை மங்கி இரவுக்கு வழி பிற்பாடு மாசி கருப்பன் குடில் திண்ணையில் பச்சையம்மாள், சிவசாமி சாமிக்கண்ணு, அய்யாவு, மதியை தவிர்த்து வீட்டுப் பெண்கள்.
முருகன் பங்காளிகள் காத்தமுத்து பவுனு என்று கூடி நிற்க இக்கூட்டத்தைக் கூட்டிய முத்துவும் சொக்கனும் கையில் காகிதங்களோடு வந்தனர்.
முன்னுரையின்றி தாங்கள் பேச வந்ததை தெள்ள தெளிவாக சொல்லி இருவரும் பேச பேச பெரியவர்களுக்கு அத்தனை ஆச்சிரியம்.
அனைத்தும் சொல்லி முடித்த பிற்பாடு பெரியவர்களிடம் பிரமிப்பான மௌனம். இளசுகள் அனைத்தும் அசந்து நின்றது. அமுது அருளின் நிலை சொல்லவே வேண்டாம்.
பெரியவர்கள் அனைவரும் ஒருவித மௌன நிலையில் கலைந்து செல்ல எஞ்சி நின்றது இளசுகள் மட்டுமே உறைந்து நின்ற இளசுகளைக் கலைத்தது சொக்கனின் குரல்.
காத்தமுத்துவை பார்த்து “என்னவே நீ பங்காளியா? இல்ல சகலையா?” காத்தானை பார்த்து கேட்டு வைக்க இப்போ எதற்கு இந்தக் கேள்வி என்று எண்ணினாலும் சொக்கனது கேள்விக்குச் “சகல” என்றான் காத்தன்.
“போச்சு ஆடு இன்னைக்கே கசாப்பு தேன் போல”, கந்தன்.
“சகல சரி!.. சரி!… என்றவன் யோசனை போல் பாவனைச் செய்து “ஆமா சகல அந்தப் பாரிஜாதம் என்ன ஆச்சு?”
“எந்தப் பாரி….” என்றவன் வார்த்தை பாதியில் திக்கி நிற்க பதறிப் போனான் காத்தமுத்து. பவுனு புரியாமல் அவனைப் பார்த்துக் கொண்டு நின்றாள்.
“ஏ!… எதுக்குவே?”
“ஏன்?.. ஏன் பயந்துக்குற காத்தமுத்து நம்ம பவுனு தானே” இவர்கள் இருவரும் புரியாத பாஷை பேசி கொள்வது போல் முழித்த பவுன் சொக்கனிடம் “என்ன மாமா?”
“அது ஒண்ணுமில்ல பவுனு கண்ணாலத்துக்கு முன்னாடி…” சொக்கன் ஆரம்பிக்கும் போதே காத்துமுத்து அவனுக்குச் சொல்லாதே என்று ஜாடை காட்ட அது புரிந்தாலும் அதனைக் கண்டு கொள்ளாத சொக்கு.
“அடிக்கடி ஓசனை பண்ணி இருப்ப தானே எதுக்கு மாமே உம்ம கண்ணாலம் கட்டலன்னு. எனக்கு உம்ம மேல ஆசை இல்லாம இல்ல பவுனு.
எம்ம சகலைக்கு ஒசரம், நம்பக் குடும்ப மானத்துக்கு ஒசரந்தேன் வுட்டுக் கொடுத்தேன்” முகத்தைப் பாவம் போல் வைத்துக் கொண்டு சொக்கன் சொல்ல.
“எம்புட்டு நடிப்பு வைக்குது பாரு இந்த புள்ளையும் நம்புது.அப்பா சாமி பார்த்தாலும் பார்த்தேன் இந்தப் பட்டாளத்தான் மாதிரி ஒரு ஆள பாக்கல” அமுது அருளிடம் பல்லை கடித்து கொண்டு சொல்ல.
“என்ன மாமா? என்ன மாமா ஆச்சு?” லேசான பதட்டம் பவுனிடம்.
“நம்பச் சகல வயசு பையன், தங்கமும் தனியா வுட்டு போயி சேர்ந்துடுச்சு கை விரல்களை பார்த்து கொண்டே சோகமாக சொக்கன்.
“சரிதேன் மாமா” பவுன்.
“நீ ஏதும் தப்பா ஓசனை பண்ணாத சகல மோட்டார் பக்கம் பாரிஜாததோட ஒதுங்…” சொல்ல முடிக்கவில்லை சொக்கனது பேச்சு பிடிபட பவுனு காத்தமுத்துவை நெருங்கி அடி வெளுத்து விட்டாள்.
“ஏய்!…. நான் எதுவுமே பண்ணல புள்ள”
“சே!… பேசாத போ”
“சத்தியமா பண்ணலடி”
“நீ வேணாம் வேண்டவே வேண்டாம்” என்றவள் அவனைத் தள்ளிவிட்டு செல்ல. அவள் பின்னாடி கெஞ்சி கொண்டே சென்றவனை உச்!… உச்!…. கொட்டி வருத்தம் போல் பார்த்த அண்ணன் தம்பிகள்.
அவர்கள் தலை சற்று மறையவும் வெடித்துச் சிரித்துக் கொண்டே “சகலைக்கு சங்குதேன்” கைகளை அடித்துக் கொள்ள.