மதி மயங்கிய மாலை பொழுதில் குளிர் காற்றுக் கொண்டாட்டமாக வீச அதனை ஆழ்ந்து அனுபவித்தவாறே அமர்ந்திருந்தான் சொக்கன்.
தை திருநாளில் மாட்டு பொங்கல் தான் அவர்கள் விமர்சையாகக் கொண்டாடுவது. அதோடு சேர்த்துத் இன்று திருமணம் குதூகலமும் சேர ஒருவிதமான போதையில் நமது சொக்கன் சொக்கி நின்றான்.
சொக்கனுக்கும் முத்துக்கும் மட்டுமே இந்நிலை என்பது குறிப்பிடத்தக்கது.காலையில் நடந்த கலவரத்தில் பெரியவர்கள் சோர்ந்து நிற்க.கட்டி வந்து புதுப் பெண்களின் நிலை இன்னும் கவலைக்கிடம்.
இருவருமே ஒரே வீட்டில் வாக்கப்பட்டதை எண்ணி மகிழ்வு கொள்ளவே முடியவில்லை. அமுது அருள் இருவருமே அடுத்து என்ன? என்று ஒரு வித பயத்தில் தான் நின்றனர்.
தெரிந்த உறவு என்றாலும் அனைவரும் அந்நியப்பட்டுப் போன உணர்வு.அது போக இத்திருமணத்திற்குத் தாங்களும் காரணம் என்ற எண்ணம் பெரியவர்களுக்கு உண்டோ? என்ற தவிப்பு வேறு அவர்களுக்கு.
********
ராமனுக்கு ஏற்ற லெட்சுவாகச் சொக்கன் சொன்னதைத் திறம் படச் செய்து முடித்தான் முத்து. நான்கு தம்பிகளையும் தோட்டத்திற்குக் கடத்தி வந்து விட்டான்.
தனது எதிரில் பயத்துடன் நின்ற நால்வரையும் கன்னத்தில் கை ஊன்றி சிறுது நேரம் பார்த்துக் கொண்டு இருந்தான் சொக்கன்.
சொக்கன் நால்வரையும் மாறி மாறி பார்த்து வைக்கப் பல்லை கடித்துக் கொண்டு சத்தம் வராமல் மெல்லிய குரலில் “என்னவே முறை பொண்ண பார்க்க வந்த மாதிரி முறைச்சு முறைச்சு அண்ணே பாக்குது” கந்தனின் முனக பதில் சொன்னது என்னவோ சொக்கன் தான்.
“அம்புட்டு அழகான பொண்ணைக் கட்டிக்கிட்டு நான் ஏன்வே உன்ன பாக்கேன்” என்றதும் தூக்கிவாரி போட ஆத்தி!… என்று அலறினான் கந்தன்
“பட்டாளத்தானுக்கு பாம்பு காது டோய்”, சங்கிலி.
“என்னவே பண்ணிக்கிட்டு திரியிறீக” ஆரம்பமே அதட்டலாக சொக்கன் தனது பேச்சை முருகுவிடமிருந்து தொடங்கினான்.
“பொம்பள கடையில பூ மார்க் பீடி குடிச்சாதேன் மோச்சமோ” என்றதும் வேர்த்து விட்டது முருகுவிற்கு கூட்டாளிகளுடன் சேர்கையில் இது போல் செய்வது உண்டு. அப்படி ஓர் நாள் விளையாட்டாக முருகு சொல்லி வைக்க அதைச் சொக்கன் சொல்லவும் பதறி.
“எதுக்குவே பத்தாப்பு படிக்கல உம்ம ஆரு பள்ளி கூடத்த நிறுத்த சொன்னது” சற்றுக் கோபமாகச் சொக்கன் கேட்டு வைக்க.
“எப்போ வந்து கேட்குது” முருகு திருத் திருவென முழித்தான்.
“என்னவே ஆடு களவாண்ட கள்ள பைய கணக்கா முழிக்க”
“ஐயோ! என்ன இம்புட்டு நீளமா பேசுது” சங்கிலி முனகி கொண்டான்.
“சொல்லுவே” சொக்கன் முருகுவை அதட்ட
“படிப்பு வரல”
“படிப்பு வரல, ஆனா ஊரு சுத்த நல்ல வருமோ எரும மாடு வயசு ஆகுது. சித்தப்புக்கு தோள் கொடுக்க வேண்டாம்” என்றவன் குடக்கோவனை முறைக்க அவன் தலையைக் குனிந்து கொண்டான்.
“ஏலேய்!..சங்கிலி முழு வேல செஞ்சா தெய்வகுத்தமாகி போகுமாவே” என்றதும் எச்சில் கூட்டி விழுங்கியவன். வாயிலிருந்து காத்து தான் வந்தது. காலையில் மட்டும் சென்று தோட்டம் வயல் என வேலை செய்து,
தந்தைக்குத் துணையாக நிற்பவன் மதிய உணவு வேலையோடு வீட்டில் நின்று விடுவான். அதை தான் சொக்கன் சொல்ல தடுமாறினான் சங்கிலி. அடுத்து சொக்கனின் பார்வை கந்தனை தீண்ட.
“போச்சு அடுத்து நாந்தேன்” கந்தன் முனகி முடிக்க வில்லை.
“என்னவே அடிக்கடி பந்தல் குடி பக்கம் உம்ம காத்து வீசுது, நீ எம்புட்டு தலை கீழே நின்னாலும் வைரம் உனக்கு பொண்ணு தார மாட்டான்” இதனை சொக்கன் சொன்னதும் மூணும் அதிர்ந்து கந்தனை பார்த்தது.
“பார்த்தியவே ஆருக்கும் தெரியாம இங்கன ஒரு ரயில் ஓடுது” சங்கிலி
“பார்க்க போனா நம்பத்தேன் நல்ல புள்ளைங்க இதுங்க அம்புட்டும்………” என்ன சொல்லி இருப்பானோ குடக்கோவன் முத்துவின் பார்வையில் கப்பென வாயை முடி கொண்டான்.
“செத்த சும்மா இருடா அம்புட்டு தெரிஞ்சு வச்சு இருக்கு” கந்தன் அதே போல் கிசு கிசுக்க முருகு வாய் விட்டே கேட்டு விட்டான்.
“அங்க என்னவே”
“அண்ணே! சும்மாதேன்”
“என்னத்த சும்மா?… நான் இங்கன பல வருஷம் இல்லதேன், ஆனா முழுக்க முழுக்க இங்கன என்ன நடக்குதுன்னு தெருஞ்சுக்கிடுவேன் அதுக்கு ஆளுங்க இருக்கு”
“அதேன் தெரியுமே” முனகினான் குடக்கோவன்.
இனி நான் இங்கனதேன் விருப்ப ஓய்வு வாங்கியாச்சு இருந்த அம்புட்டு காசையும் சுரண்டி வரண்டி பக்கத்துல உள்ள வயலு,
பண்ணை, சோடா தொழில்னு காசு போட்டு வச்சிருக்கேன் மறுவாதியா நாளை மறுநாள் அம்புட்டு பேரும் வேலைக்கு வந்துப்புடனும் சொல்லிப் புட்டேன்.
சித்தப்பன், பெரியப்பன் சொத்து அம்புட்டும் குந்தி தின்னா கரைஞ்சு போகும். பெருக்குறதுக்கு வழி பாருங்கவே இன்னும் சிறுசு கணக்கா ஊரு சுத்தி கிட்டு” என்றவன் முத்துவை பார்த்து.
“முத்து இந்த பையுலுக மேல கண்ணை வை நாளை மறுக்கா சோத்துக்கு கூட வூடு வர கூடாது வூட்டுல சொல்லி இங்கன கொடுக்க சொல்லு”
“சரிண்ணே” என்றதும் மற்றவர்களை பார்த்து
“நான் இங்கன இருக்க போறதும், ஓய்வு வாங்குனதும் ஆருக்கும் தெரிய வேணாம். நேரம் வரும் போது நானே சொல்லு தேன் சரியா?” அனைத்தும் சரியென்று தலையை ஆட்ட.
“வாயில என்னவே இருக்கு ……”
“சரிங்க அண்ணே!..” கோரஸ் பாட
“ஹ்ம்ம்!…போங்க” என்றதும் விட்டால் போதுமெனத் தெறித்து ஓடிய தம்பிகளைப் பார்த்துச் சிரிப்பு பொத்து கொண்டு வந்தது சொக்கனுக்கும் முத்துவிற்கும்.
மூச்சு வாங்க சிறிது தூரம் ஓடி வந்த கந்தன் நெஞ்சில் கை வைத்து மூச்சு வாங்கி “இது என்ன இம்புட்டு வருஷ பேசாத பேச்சை சேர்த்து வச்சு பேசுது”
“சொக்கு அண்ணே இம்புட்டு பேசுமா?”, சங்கிலி.
“நமக்கு விவரம் தெரிஞ்சு அது வூட்டுல இல்ல அதுனால நமக்கு தெரியல போல”, யோசனை போல கந்தன்.
“அதானே மிரட்டி வைக்குது வேற”, முருகு.
“அண்ணே!…சரியான ஆளு அம்புட்டு பேர் ரகசியத்தையும் விரல் நுனில வச்சுக்கிட்டு சுத்துது” குடக்கோவன்.
“அத விடு உம்ம கதை என்ன?”சங்கிலி கந்தனை பார்த்து கேட்க.
“அதானே!” என்றனர் மற்ற மூவரும்.
“இம்புட்டு நாள் எங்க கிட்ட சொல்லல அது என்ன பந்தக்குடி சங்கதி?”, குடக்கோவன்.
“அதயெண்டா கேக்குறீக வைரம் மாமா பொண்ணுத்தேன் நமக்கு உறவு கொஞ்சம் தொலைவு வரும். அந்தப் புள்ளைய பார்ப்பேன் அம்புட்டுதேன் பேசுனது கூட இல்லவே பார்த்தாலே தெறிச்சு ஓடிபுடுவா” கந்தன் புலம்பினான்.
“ஹ்ம்ம்!…..அய்யயோ!…இனி எப்படி சமாளிக்க எனக்கு பயந்து வருதே”, முருகு.
“அது சொன்னதை செஞ்சு புடுவோம் வேற வழியே இல்ல” என்று பங்காளிகள் புலம்பி நின்றனர்.
*******
அங்கு …
“என்னவே அக்கா ஒரு மூளைக்கும் தங்கச்சி ஒரு மூளைக்கும் குத்தவச்சு இருக்கீக” பச்சையம்மாளின் குரலுக்கு அருள் அமுது இருவரும் எழுந்து நின்றனர்.
“ஏப்புள்ள வெரசா போயி குளிச்சுபுட்டு தயாராகு உம்ம ஐத்த என்ன பண்ணுதா? அவளை கூட்டியா” என்று அருளை விரட்டி விட்டு அமுதிடம் வந்தவர்.
“உனக்குத் தனியா பாடனுமா போயி தயாராகு”
“எதுக்கு?” என்றவள் அந்த இடத்தை விட்டு நகராமல் நிற்க அவளது செய்கையில்,
“கேள்வியா கேட்க சண்டி குதிரை என்னவே சிலுத்துகிற இரு எம்ம பேரன் வரட்டும்” அதற்கு மேல் பொறுமை காற்றில் கரைந்து போக.
“ஆரு சிலுத்துக்குறா உம்ம பேரன் என்ன சீமை சித்திரமா”
“ஆமாடி சித்திரந்தேன் உம்ம கட்டி என்ன பண்ண போர்னோ எங்கன சுத்தி உன்னவே கட்டி இருக்கான் பாரு”
“ஆமா உம்ம அழகு ராசனை கண்ணு போடுறேன் கிழடு கட்ட இந்தச் சொக்குல ஏழு கண்ணாலம் வேற” என்றவளை பார்த்துக் கோபம் பொங்க.
“கொழுப்பாடி காட்டு சிறுக்கி எம்ம ராசன் தோரணைக்கு ஏழு கட்டுவான். போற ஊருக்கெல்லாம் உம்ம கூட்டி போக முடியாதுல அதேன் ஊருக்கு ஒன்னு” என்றதும் பல்லை கடித்த அமுது அவரை நெருங்க அந்நேரம் சொக்கன் இடைபுகுந்தான்.
“அப்பத்தா என்ன இங்கன?”
“ஆஹான் உம்ம தலையெழுத்து இங்கன சிரிப்பா சிரிக்குது ராசா ஊருல பொண்ணா கிடக்கல என்னவோ போ இந்த சண்டி குதிரையை அடக்கி வை” என்றவர் மெதுவாக நகர
பச்சையம்மாள் பேச்சில் கோபம் கொண்டு “இந்தாரு கிழவி” என்று சண்டைக்குப் போனவளை வளைத்துப் பிடித்துக் கொண்ட சொக்கன் சற்று இறுக்கமாகத் தாடை பற்றித் தன்னைக் காண செய்ய அத்தனை கோபம் பெண்ணுக்கு.
“மாமே கூட மல்லுகட்டுறத விட்டுப் போட்டு கிழவி கிட்ட மல்லுக்கு நிக்குற என்னடி இது? சொக்கன் சிரித்துக் கொண்டே கேட்க.
“ஹ்ம்ம்…” என்று வலியில் முகத்தை அங்குமிங்கும் நகற்றினாள் அமுது இன்னும் வலிக்கப் பிடித்தவன் அவளது முகம் நெருங்க.
“யோவ்!..கிழடு விடு” அவளது விழிப்பில் ஓர் நொடி அதிர்ந்தவன் பிள்ளை கோபம் கொண்டு.
“ஆருடி!..கிழடு”
“உம்ம தேன் சொல்லுதேன்”
“ஓ!..கிழடு?…”என்றவன் அவளைக் கைகளில் அள்ளி கொண்டு இந்தப் பட்டாளத்தான் ஆருனு தெரியாம விளையாண்டு புட்டடி வா காட்டுறேன் நான் கிழடா இளசான்னு என்றவன் நொடி பொழுதில் அவளைச் சுருட்டி கொண்டான்.
“வுடு வுடு ப்ச்….” கையைக் கால்லை அடித்துக் கொண்டு இருந்தவளை கண்டு கொள்ளாமல் தனது அறைக்குள் உள்ள கட்டிலில் கிடத்தி கதவை தாழிட கண்ணில் இருந்து அருவியாகக் கொட்டியது நீர் பெண்ணுக்கு.
அதனை கண்டு கொள்ளாமல் தனது உடையைக் களைந்து வேறு உடைக்கு மாறியவன் அவளை நெருங்க அவனைத் தான் முறைத்துக் கொண்டு இருந்தாள்.
“என்னடி ஆசை அள்ளிக்கிட்டு போற மாதிரி பார்த்து வைக்கிற”
“எம்புட்டு நக்கலு இத்தினி நாள் சொக்கனை போல உண்டானு பேச்சு நானும் அதுலதேன் மயங்கி புட்டேன், ஆனா கிட்ட வந்து பார்த்தா தானே தெரியுது”
“ஓ!!… உச்!.. உச்!… எம்புட்டு அளவு ஏமாந்து புட்டிடீக” என்றவன் கை அவளது வலது கை சுண்டு விரலை நீவி கடவாயில் வைத்து மெல்ல கடிக்க” அதிர்ந்து அவனைப் பார்த்தவள் கையை உருவி கொள்ளப் போராட
“எதுக்கு இப்போ துள்ளுறவ இருடி”
“வுடு வுடு என்னைத் தொட கூடாது சொல்லிப் புட்டேன்”
“அது சரி வேற என்ன செய்ய? பார்த்துகிட்டே கிடக்க வா” அவனது அலட்சியத்தில் சோர்ந்து போனவள்.
“கொஞ்சம் கூட என்னைப் புரியலையா மாமா உனக்கு? உன்ன எண்ணி நான் எம்புட்டு கானா கண்டேன் தெரியுமா? கண்ணில் நீர் கோர்க்க அரிவை பெண்.
“ப்ச் என்ன இப்போ? உம்ம நல்லா தெரிஞ்சதுலதேன் கட்டி இருக்கேன்” என்றவன் கையை அவளிடம் நீட்டி இப்பவே வருஷம் போச்சு இனியும் காத்து கிடக்க முடியாது,
உமக்கு விளக்கம் வச்சுத்தேன் காரியம் சாதிக்கணுமுனா எனக்கு எதுவும் வேணாம்?” உடல் இறுக உறுதியாக சொக்கன் சொல்ல கலங்கி போனவள்.
“இது என்ன அநியாயம் பண்ணுற. நீ என்ன சொன்னாலும் செய்யணுமோ? பட்டாளத்தான் பகுமானத்தைக் காட்டுறியோ?” சற்று குரலை உயர்த்திப் பெண் கேட்க மௌனமாகக் கட்டிலை விட்டு இறங்கி நின்றவன் அவளைப் பார்த்து மீண்டும் கையை நீட்டி
“மறுக்கா சொல்ல மாட்டேன் நல்ல கேட்டுகிடு. நம்பி புடுச்சுக்கோ புள்ள பக்குவமா, பதமா, பாதுகாப்பா கரையேத்தி புடுவேன்.
இதுக்கு மேல கெஞ்சி கிட்டு கிடக்க மாட்டேன் கிளம்பி போய்கிட்டே இருப்பேன்” என்றவனை என்ன மனுஷன்டா நீ என்பது போல் இயலாமையோடு பார்த்த அமுது.
“நடந்த அம்புட்டு செய்திக்கும் விளக்கம் வைக்கல. வாய்ய திறப்பேனானு சண்டி தனம் பண்ணிக்கிட்டு திரியிற. நீ பண்ண கூத்துக்கு உம்ம கட்டி வச்சு அடிக்கனும். சுளுவா முடியுற சங்கதிய சுத்தி சுத்தி எங்கனையோ இழுத்து கட்டி ப்ச்……போ”என்றவள் வாய் வசை பாடினாலும் கை உயர்ந்து நிற்க.
கட கடவெனச் சிரித்தவன் நொடி பொழுது தாமதம் செய்யாமல் அவளை ஒரே தள்ளாகத் தள்ளி அழுத்தமாக மேல விழ
“ஐயோ!.. சாமி யோவ் பட்டாளத்தான் செத்தே போவேன்”
“சாவுடி எம்ம மண்டி போட வச்சு புட்டீல வருஷ கணக்கா பார்த்துக்கிடுறேன்டி …………………….” என்றவன் செய்த வேலை அனைத்தும் அந்தரங்கமே.
இரவு முழுவதும் திகட்ட திகட்ட உண்ட களைப்பில் இருவருக்கும் விடியல் வந்தும் உறக்கம் கலையாமல் இருக்க அவர்களது உறக்கத்தைக் கலைக்க முன் வந்தார் சிவசாமி.
“எங்கடி உம்ம மவேன் கூப்புடு அந்தப் பட்டாளத்தான” என்று சிவசாமி போட்ட சத்தத்தில் குடும்பம் மொத்தமும் அடித்துப் பிடித்துக் கூடத்தில் வந்து நின்றது சொக்கனை தவிர.