“ஆமா பெறவு தேவைப்பட்டா வாங்கிப்போடுங்க” – சேர்மத்தாய்.
“கல்யாண செலவு பாதி பாதி ஏத்துக்கலாம். சரி தானே உங்களுக்கு?” – சுப்பிரமணி
“பிரச்சனையே இல்ல சம்மந்தி. முழு சந்தோசம். பூ வைக்கிறது வழக்கப்படி நாங்க ஏத்துக்குறோம்”
கை எடுத்து ஆனந்தமாய் நன்றியை தெரிவித்தார் சுந்தரம், “மண்டபத்தை புக் பண்ணிட்டு உங்களுக்கு தகவல் சொல்றேன் நான்”
அடுத்து பெண்ணை உறுதி செய்ய சுபத்ரா வைஷ்ணவிக்கு பூ வைக்க, மதிய உணவை இங்கே தான் நிச்சயம் உண்ணவேண்டும் என்ற வைஷ்ணவி வீட்டினரின் வற்புறுத்தலின் பெயரில் சைவ உணவு வகை வகையாக சித்தார்த் அடுக்கிவிட்டான்.
தனக்கு அருகில் அமர்ந்து உணவருந்திக்கொண்டிருந்த சுபத்ரா, பரிமாறும் சித்தார்த்தை பார்ப்பதை புரிந்து, “என்ன பேசி முடிச்சிடலாமா?” என்றாள் கிண்டலாக.
“அக்கா…” சுபத்ரா சினுங்க,
“ஏய் அவன் என் ஆளுடி… ஒரே நாள்ல உஷாரு பண்ணிடலாம்னு நினைக்காத. ஆறு வருசமா ரூட் விட்டுட்டு இருக்கேன்” இடையில் வந்தாள் வைஷ்ணவி அருகில் அமர்ந்திருந்த ஷெர்லின்.
“அவளை கண்டுக்காத அவ ஒரு தத்தி. ஒன்னும் பண்ண மாட்டா. என் அண்ணனுக்கு சினிமா ரொம்ப புடிக்கும். அத வச்சு பேச்சு குடு” சகோதரனை பற்றிய கீ பாயிண்ட்ஸ் எடுத்துக்கொடுக்க துவங்கிய வைஷ்ணவியிடம் உடனே,
“ஐயோ அக்கா அதெல்லாம் ஒன்னுமில்ல. நல்லா ஹெல்ப் பன்றாங்களே-னு பாத்தேன். அவ்ளோ தான்” வீட்டினருக்கு தெரிந்துவிடுமோ என்ற பயத்தில் குரலை தாழ்த்தி சரணடைந்தாள்.
“அத தான் சொல்றேன். இவ்ளோ வேலை எல்லாம் பாத்தா உனக்கு கல்யாணம் ஆனதும் ரொம்ப ஈஸியா போய்டும்ல? அவனே எல்லா வேலையும் பாத்துடுவான். என்னையே எடுத்துக்கோ. ஏன் என்னையே எடுத்துக்கோ. சமையலை… சாரி சாரி உன் அண்ணன கல்யாணம் பண்ணிக்க ஏன் ஓகே சொல்றேன்?” நிறுத்தினாள்…
சுபத்ராவும் வைஷ்ணவி மேலே தொடர்வாள் என்று பார்க்க அவள் பதில் சொல்லவில்லை, “இங்க என்ன நக்ஷத்திரா பூஜா ஆயில் விளம்பரமா எடுக்குறாங்க ஏன்-னு கேட்டா தான் பதில் சொல்லுவ?”
வைஷ்ணவியை திட்டி, சுபத்ராவிடம் “ஏன்-னு கேளு. நீ கேக்காத வர இந்த சனியன் சொல்லாது” என ஷெர்லின் சொல்லவும் வைஷ்ணவி ஆமாம் ஆமாம் என தலையை ஆட்டினாள்.
அவளும் சிரிப்போடு, “ஏன்?” என்றாள்.
“உன் அண்ணன் மாஸ்டர். சமையல் மாஸ்டர். ஹோட்டல் வச்சிருக்கார். இத விட என்ன வேணும்? ம்ம்-னு சொன்னா அங்க இருந்தே சாப்பாடு வந்துடும். நான் சமைக்க தேவையில்லை. பாத்திரம் கழுவுறது பிரீ, கிட்சன் தொடைக்கிறது பிரீ, காய் வெட்டுறதுல இருந்து பிரீ, வேர்வைல பிரீ… இப்டி லைப் மொத்தமும் பிரீ தான். அதுக்கு தான் உன்னையும் என் வழில வர சொல்றேன்”
“க்கா… ஜீனியஸ் நீங்க” – சுபத்ரா
“அதெலாம் ஒரு ராஜா தந்திரம்” – வைஷ்னவி.
“பண்றது மாமா வேலை. இதுல ராஜ தந்திரம் ஒன்னு தான் கேடு. ஏங்க சித்தார்த் மல்ஹோத்ரா அந்த ரசத்தை எடுத்துட்டு வாங்க. பந்திய முடிச்சிட்டு மொத இந்த வீட்டை விட்டுட்டு வெளிய போகணும். ச்சை ஒரு வாய் சோறுக்கு இவ பேச எல்லாம் கேக்கணும்-னு எனக்கென்ன தலை எழுத்தா?”
அந்த நேரம் ரசத்தை ஊற்ற வந்த சிதர்த்திடம், “ஏன் ஸ்பூன் எடுத்து ஊத்திடேன்… நல்லா ரெண்டு அள்ளி கரண்டி ஊத்துயா”
அவளை முறைத்தபடியே அவன் ஊற்றவும், “அப்டியே அந்த சின்ன கப்ல பாயசமும் அதுலயே ஒரு அப்பளத்தை ஒடச்சு போட்டு எடுத்துட்டு வாங்க” என்று அனுப்பி வைத்தாள்.
அப்பொழுதும் வைஷ்ணவி விடாமல், “பாத்தியா பாத்தியா? இவ சொல்றதையே கேக்குறவன் நாளைக்கு உன்ன கல்யாணம் பண்ணிக்கிட்டா எவ்ளோ வேலை குடுத்தாலும் அசராம செய்வான்”
இலையில் இருந்த உணவை கூட முடிக்காமல் மூடிய ஷெர்லின், “போங்கடா நீங்களும் உங்க சோறும்” எழுந்து சென்றாள் ஷெர்லின்.
“அக்கா சரி நாங்க பேசல நீங்க வாங்க சாப்புடுங்க” பாதியில் எழுந்து சென்றவளை பார்த்து தன்னால் தானோ என்ற வருத்தம் சுபத்ராவிடம்.
“அவ எல்லாம் சாப்பிட்டு தான் இலய மூடி வச்சிட்டு போனா. நீ வா நான் உனக்கு டிப்ஸ் தர்றேன்”
இவ்வாறே அன்றைய பகல் பொழுது முற்றிலும் போக இரவு தன்னறையில் படுத்திருந்த வைஷ்ணவிக்கு கார்த்தி இல்லாத ஒரு குறை மட்டுமே. மனம் அவனை அதிகம் தேடியது, குறைந்தபட்சம் அவன் குரலையாவது கேட்க ஆசை.
ஆனால் அவனிடம் பேசவோ இல்லை அவன் அன்னையிடம் அவனை வீடியோ கால் மூலம் அழைக்க சொல்லவோ சற்று மனம் தடுத்தது. தான் அவனை தேடுவது போல் அவனும் தன்னை தேட வேண்டும் என்ற ஒரு சிறு ஆசை. அவன் ஒரே ஒரு முறை ஒரு வார்த்தை பேசினால் கூட கூச்சம், அகங்காரத்தை விட்டு அவனிடம் சரணடையும் மனதை அவள் தடுக்க மாட்டாள்.
மற்ற நாட்களில் அவன் எண்ணம் நித்தம் வரும் தான், இப்பொழுது இன்று தங்களுக்கான வாழ்க்கையின் ஒரு முதல் படி. அதனால் தான் என்னவோ அவன் அருகாமையை மனம் நாடுகிறது. கார்த்தி மீண்டும் சவூதி சென்று பதினைந்து நாட்கள் ஆகியது.
அன்று கோவிலில் அவனிடம் பேசியது தான், அந்த நாளே, இரவு மதுரையில் விமானத்தை பிடித்துவிட சென்றுவிட்டான். இருவரும் பேசிக்கொள்ளவில்லை.
“போன் பண்ணி வெக்கத்தை விட்டு பேசிடலாமா?” என்று தோன்ற, இன்னொரு மனமோ அன்று அவனிடம் வீறாப்பாக பிடித்தமில்லாமல் பேசியது நினைவில் வந்து அந்த செயலையும் தடுத்தது.
“கடலைமிட்டாய்… என்ன நானே வந்து பேசுனா தான் பேசுவீகளோ. ஏன் ஒரு தடவ துரை தானா பேச மாட்டீகளா?” ஏமாற்றத்தில் கைபேசியை அணைத்து குப்புற படுத்தவளுக்கு மெசேஜ் வரும் சத்தம் கேட்டு மீண்டும் கைபேசியை எடுக்க வைத்தது.
விருப்பமே இல்லாமல் பார்த்தவளுக்கு கார்த்தி தனக்கு ஒரு புகைப்படம் அனுப்பியிருப்பது இன்ப அதிர்ச்சியாக இருக்க, எடுத்து பார்த்தால் ஆவலாக. புகைப்படத்தை பார்த்து சிரிப்பு தான் வந்தது.
மயில் வண்ண பாட்டில் மிதமான ஒப்பனையில் மெல்லிய நகைகளோடு நின்ற வைஷ்ணவி தோழி ஷெர்லினை முறைத்து நிற்க, அருகில் நின்ற ஷெர்லின் பாதி தான் தெரிந்தாள் ஆனால் அவள் வைஷ்ணவியை கிண்டல் செய்தது பாதி தெரிந்த முகத்தின் சிரிப்பிலே உறுதிப்படுத்திவிடும்.
தோழிகள் தங்களுக்குள் மூழ்கி இருக்க, சுபத்ரா இந்த புகைப்படத்தை எடுத்ததை கவனிக்காமல் போனார்கள். அவனிடமிருந்து இத்தகைய செயலை எதிர் பார்க்காதவள் மனம் ஆனந்தத்தால் குளிருந்து போனது,
“யார் இந்த பொண்ணு?” பதில் செய்தி அனுப்பினாள் அவன் பதிலுக்காக. உடனே பார்த்துவிட்டான்.
‘வீட்டுல எனக்கு பாத்துருக்க பொண்ணு. நல்லா இருக்காங்களா வைஷ்ணவி?’
“லூசு லூசு. ஏன் என் பொண்டாட்டி ஆக போறவ-னு சொல்ல வேண்டியது தானே?” புலம்பியவள் கோவமாக, ‘நல்லாவே இல்ல. போங்க’ அனுப்பினாள்.
கார்த்திக்கு அந்த பக்கம் சிரிப்பு தான் வந்தது அவள் பதிலில், ‘ஏன் நல்லா இல்ல? அழகான அவளுக்கு ஏத்த கலர்ல புடவை, கண்ண உறுத்தாம லைட் மேக்அப், தலை நிறைய பூ, முகம் எல்லாம் சிரிப்பு, எல்லாத்துக்கும் மேல நான் குடுத்த அந்த சின்ன செயின்’ – கார்த்தி
அவன் பதிலில் அவனே தனக்கு நேரில் நின்று தன்னை வர்ணிப்பது போல் வைஷ்ணவிக்கு வெட்கம் வந்து கன்னம் சிவந்து போனது. பதில் கூட பேச முடியவில்லை அவளால்.
‘வைஷ்ணவி…?’ அவள் பதில் வராமல் போக மீண்டும் அவனே செய்தி அனுப்பினான்.
‘ம்ம்ம்?’ – வைஷ்ணவி
‘வீடியோ கால் பண்ணவா?’ – கார்த்தி
வைஷ்ணவிக்கு இதயம் பார்க்கவா குதிக்கவா என்று சந்தேகத்தில் குதித்து குதித்து பறந்தது, “சமயலு என்னையா ஷாக் மேல ஷாக் குடுக்குற? என் குட்டி ஹார்ட் தாங்காது”
புலம்பினாலும் அவனுக்கு, ‘சரி’ என்று அனுப்பினாள். உடனே அழைப்பு வந்தது அவனிடமிருந்து, தன்னை சரி செய்யாமல் அறையின் மின் விளக்கை ஒளிரவிட்டு அழைப்பை ஏற்றாள். அழைப்பை ஏற்று அவன் முகத்தை பார்க்க கூட இல்லை, புதிதாக தன்னுடைய அறையை பார்ப்பது போல் எல்லா சுவற்றையும் கூர்ந்து கவனித்தாள்.
“என்ன கன்னம் சிவந்திருக்கு?” கார்த்தியின் கேலி பேச்சில் வேகமாக தன்னுடைய கன்னத்தை இடது கை கொண்டு தொட்டு கன்னத்து சிவப்பை சரி செய்ய முயன்றாள்.
“அதெல்லாம் போகாதுடா… நீ வெக்கப்படுறத குறைச்சா தான் அதுவும் நிக்கும்” அவன் சிரிப்பு அவன் பேச்சிலே தெரிந்தது.
வேகமாக கேமராவை கை வைத்து மறைத்து தன்னை சரி செய்தவள் முகம் எல்லாம் சிரிப்பில் நிற்கும் அவனை கண்களில் நிரப்பி வைத்துக்கொண்டாள்.
“ஹலோ… ஹலோ வைஷ்ணவி?” – கார்த்தி
தொண்டையை சரி செய்து, “ம்ம்ம் இருக்கேன்” என கமெராவில் இருந்த கையை விலக்கினாள்.
“உன் ரூம்க்கு டிவி எதுவும் மாடிட்டீங்களா?” – கார்த்தி
“இல்லையே” – வைஷ்ணவி
“அப்போ என்ன பாக்கலாமே” ஏக்கமாக கார்த்தி.
“ஏன் பாத்து என்ன பண்றது? நீங்க ஒரு கால் பண்றிங்களா? மெசேஜ் பண்றிங்களா? எந்த நேரமும் நைட் ஆகிட்டா போகும், ஆன்லைன்ல தான் இருப்பிங்க, ஆனா ஒரு நாளாவது ஹாய் ஹலோ எப்படி இருக்க? சாப்பிட்டியா? என்ன பண்றேன், ஏது பன்றேன்னு ஒன்னும் தெரியாது. சரி அது கூட வேணாம். ஊருக்கு போறதுக்கு முன்னாடி கெளம்பப்போறேன்-னு ஒரு வார்த்தை கூடவா சொல்ல தோணல?”
மனதில் இருந்த கோவத்தை எல்லாம் அவனிடம் வார்த்தையாய் தள்ளிவிட்டாள். அதற்கும் சிரிப்பு தான் அவனிடம்.
“சிரிக்காதிங்க” வைஷ்ணவி அவனை எச்சரித்தாள். வாய் விட்டு சிரித்தவனை அந்த கோவத்திலும் அவளால் ரசிக்காமல் இருக்க முடியவில்லை,
“நீ ரூம் விட்டு வெளிய வா”
“மாட்டேன். நான் கோவமா இருக்கேன்” – வைஷ்ணவி
“வா வைஷ்ணவி. எனக்காக” – கார்த்தி
முகத்தை தூக்கி வைத்து வெளியில் வைஷ்ணவி வர, “என்னோட ரூம் ஜன்னல் பாரு” – கார்த்தி
கூர்ந்து கவனித்த பொழுது தான் அங்கு ஒரு கேமரா இருப்பது தெரிந்தது, “யோவ் பாடிசோடா, என்ன இது கேமரா?” அதிர்ந்தாள் பெண்.
“எனக்கு பெருசா பேச எல்லாம் தெரியாது வைஷ்ணவி. அதான் அப்போ அப்போ டைம் இருக்கறப்ப உன்ன பாத்துப்பேன்” – கார்த்தி
“பாப்பிங்கன்னா?” – வைஷ்ணவி
“காலைல எந்திரிச்சு என் ரூமை பாக்குறது, நைட்டும் பாத்துட்டே போறது, நைட் கோவம் வந்தா என் ரூமை பாத்து கல்ல விட்டு ஏறியிறது, அம்மா ஒரு நாள் நான் நட்டு வச்ச செடிக்கு தண்ணி ஊத்தலனாலும் அவங்கள மிரட்டி ஊத்த வைக்கிறது… இப்டி எல்லாத்தையும் பாப்பேன்” பேச்சற்று நின்றுவிட்டாள் வைஷ்ணவி.
“இப்போ சொல்லு. நான் உன்கிட்ட டெய்லி பேசி தான் நீ என்ன பண்ற, எப்படி இருக்கனு தெரிஞ்சுக்கணுமா? இப்போ கூட உங்கிட்ட பேசவே நூறு யோசனை. நம்மளோட வாழக்கையோட முதல் ஸ்டேப் எடுத்து வைக்கிறோம், இப்போ கூட உன்கிட்ட நான் பேசலானா நல்லா இருக்காதுன்னு தோணுச்சு. அதான் உன் முகத்த பாத்து பேச கால் பண்ணிட்டேன்” அ
வளிடம் அமைதி, “நான் கேமரால உன்ன பாக்குறது புடிக்கலைனா ஓகே தான். பாக்க மாட்டேன்” அவன் முகம் சோர்ந்து போனது அவள் அமைதியில்.
“ஆமா எனக்கு புடிக்கல” முகத்தை தூக்கி வைத்து பேசியவள் இணைப்பை துண்டித்து விட்டாள்.
ஏதோ ஒரு உரிமையில் அவளையும் காயப்படுத்தாமல், தன்னுடைய கூச்சத்தையும் வெளிக்காட்டாமல் இருக்க அந்த ஐடியா திடீரென உதித்து செயல்படுத்திவிட்டான். அவள் தவறாக புரிந்துக்கொண்டாளோ என்ற அச்சம் வேறு வந்தது அவனுக்கு.
மீண்டும் வைஷ்ணவியிடமிருந்து அழைப்பு வந்தது, “சாரி டா வைஷ்ணவி. நான் வேணும்னு அப்டி பண்ணல…”
“புடிக்கலைனு சொன்னது நீங்க மட்டும் என்ன பாக்குறது… எனக்கு டெய்லி உங்கள பாக்கணும். உங்ககிட்ட பேசலானாலும் பரவால்ல, பாத்தே ஆகணும் நான், பாத்துக்குட்டே இருக்கனும்”
மனதில் உள்ள ஏக்கம் எல்லாம் அவள் குரலில் அழுகையை கட்டுப்படுத்தி பேசுவதிலே தெரிந்தது அவனுக்கு. நெகிழ்ந்து போனான் அவள் அன்பில்.
“டேய் நீ என்ன பண்ற என்னை? என்னமோ பண்ற தெரியுமா?” இருவருக்கும் அந்த நாள் மனம் எல்லாம் கரும்பாய் தித்திப்பாய் இனித்தது.
Late update ku manichidunga. Athe neram avasarathula eluthunathu adjust panikonga. plz