“அத்தை…” வைஷ்ணவி வீட்டு வாசலில் நின்று கூவிக்கொண்டிருந்தான் வெள்ளைச்சாமி. வைஷ்ணவி வீட்டின் பின் தெருவில் இருப்பவன். வைஷ்ணவியை விட இரண்டு வயது இளையவன்.
“இருடா நாய்க்கு சாப்பாடு வச்சிட்டு வர்றேன்” மஹேஸ்வரி தன்னுடைய வேளையில் கவனமாய் இருந்தார்.
அவனுக்கோ கடுப்பு, “அந்த நாய் தான் உங்களுக்கு என்ன விட பெருசா போச்சா?”
“ஏண்டா உன் கூட எதுக்குடா என் தங்க பிள்ளைய கம்பேர் பண்ற?”
“நீங்க என் மேல பாசமா இருப்பிங்க-னு இத்தனை நாள் நம்புனேன் ஆனா இந்த குடும்பத்துல இருக்க எல்லாருமே என்ன ஏமாத்த தான் செய்ரிங்கல்ல?” மஹேஸ்வரியிடம் சண்டைக்கு சென்றான் வெள்ளைச்சாமி.
செய்த உணவு அனைத்தையும் நாய்க்கு வைத்து அவனை பார்த்தார் மஹேஸ்வரி சிரிப்போடு, “நேத்து தான்டா அவளுக்கு கல்யாணம் முடிவாச்சு, பூ வைக்க வீட்டுக்கு சொல்லாமலா இருக்க போறேன்? சரி அவ மேல தான் இருக்கா போய் பேசு. நான் காபி போட்டு கொண்டு வர்றேன்”
வீட்டிற்குள் மஹேஸ்வரி சென்றதும் சோகமாக படி ஏறி வைஷ்ணவியை பார்க்க சென்றான். அவளோ வெளியில் இருந்த ஊஞ்சலில் தான் அமர்ந்திருந்தாள், வெள்ளைச்சாமியை பார்த்ததும் தான் கைபேசியில் பேசிக்கொண்டிருந்தது கூட மறந்து போனது. ஒரு வாரம் கல்லூரியிலிருந்து டூர் ஒன்று சென்றவன் வந்தது இன்று காலை தான்,
“வைட் மனசு இருக்குறவன ரத்தம் வர அளவு கத்தியால் நெஞ்சுலையே குத்திடல வைஷ்ணவி?” விட்டெதெரியாக பேசினான்.
“என்னடா வைட்டு இப்டி எல்லாம் பேசுற? நான் உன்ன குத்துனேனா? அதுவும் நெஜுல?” அதிர்ச்சியடைந்து போல் நடித்தாள்.
“எதுவுமே தெரியாத மாதிரி நடிக்காத வைஷ்ணவி, உன்னையே நம்பிட்டு இருந்த என்ன ஏமாத்திட்டு வேற ஒருத்தன கல்யாணம் பண்ணிக்க போறியா? என் மனசு துடிக்கிது… இங்க பாரு” தன்னுடைய நெஞ்சை கை காட்டி சொன்னான்.
அவளும் பார்த்தவள், “அட ஆமா…” அதிர்ந்த்தாள்.
“இப்போ எனக்கு என்ன பதில் சொல்ல போற வைஷ்ணவி? உன்ன இத்தநோண்டுல இருந்தே லவ் பண்ணிட்டு இருக்கேன்” தன்னுடைய இடுப்பின் அளவினை சுட்டிக்காட்டினான் வெள்ளைச்சாமி.
“உன்னோட லவ் பத்தி எனக்கு தெரியாதா வைட்டு… வீட்டுல பேசுனேன், மகேஷ்கிட்ட கூட சொன்னேன், என்னையே நம்பி ஒருத்தன் இருக்கான், இந்த பையனுக்கு என்ன கல்யாணம் பண்ணி வச்சா அவன நான் ஏமாத்துற மாதிரி இருக்கும்-னு சொன்னேன் வைட்டு” அவளது சோகத்தில் இருந்த நடிப்பை கவனிக்க தவறவில்லை அவன்.
“அப்றம் ஏன் வைஷ்ணவி இந்த கல்யாணத்துக்கு நீ சம்மதம் சொல்லணும்? இப்போவே பேசுறேன் உன் அம்மா அப்பாகிட்ட நான் பேசுறேன்” அவள் எதுவரை போகிறாள் என்பதை பார்க்க அவனுக்கும் ஆர்வம் தான் வந்தது.
“அங்க தான் பிரச்சனையே… பையன் யாருனு தெரியும்ல நம்ம எடுத்த வீட்டு சமையல் மாஸ்டர் தான்” கார்த்தியின் அறையை காட்டினாள்,
“அந்த ரூம் தெரியுது பாரு, அங்க இருந்து தான் தினமும் என்ன சைட் அடிச்சிருக்கார். என்னோட சமையல் அவரோட சமையலை விட நல்லா இருக்குதுனு சொல்லி ஒரே பீலிங்ஸ் தானாம். ஒரு நாள் வந்து ப்ரபோஸ் பண்ணிட்டாரு. அந்த இடத்துலயே முடியாதுன்னு சொல்லிட்டேன். அப்றம் எங்க ரெண்டு பேரோட அப்பா அம்மாகிட்ட பேசி கெஞ்சி கல்யாணம் பண்ணா இந்த பொண்ண தான் பண்ணுவேன் இல்லனா சூசைட் பண்ணிக்குவேன்னு ஒரே பிடிவாதம்…”
நிறுத்தாமல் கூறியவளுக்கு மூச்சே அடைத்தது. தேவையான காற்றை எடுத்துக்கொண்டவள், “நீயே சொல்லு நம்மளால ஒரு உயிர் போகுதுன்னா பாத்துட்டு சும்மா இருக்க முடியுமா? அதான் வாழ்க்கையை குடுத்துடலாம்னு முடிவு பண்ணிப்போட்டேன்” பெருந்தன்மையாக பேசினாள்.
“நானும் தான் வாழ்க்கைல பல நூறு பேர பாத்துட்டேன், உன்ன மாதிரி அண்ட புளுகுணிய பாத்ததில்ல அம்மாடி…” ஆசிரியப்பட்டவன் மேலும், “நான் தான் உன்ன ரொம்ப நாளா வாட்ச் பண்ணிட்டே இருக்கேனே… அந்த வீட்டுக்கு நீ விடுற நூல் எல்லாம் பாத்திலையே அந்து விழுகுறத”
“டேய் டேய் வைட்டு… சத்தமா பேசிடாதடா யார் காதுலயாவது விழுந்துட போகுது. இது எனக்கு மட்டும் தான் லவ் கல்யாணம். மத்த எல்லாருக்கும் அரேஞ்ட் மேரேஜ்” – வைஷ்ணவி
“நீ எனக்கு பண்ண துரோகத்துக்கு உனக்கு தண்டனை கண்டிப்பா உண்டு” – வெள்ளைச்சாமி
“எங்க ஹோட்டல் தொறந்ததும் ஒரு நாள் உனக்கு பிரீ சாப்பாடு போடுறேன். வந்து கொட்டிகோ” – வைஷ்ணவி
“பேச்சு மாற மாட்டியே” – வெள்ளைச்சாமி
“அட மாற மாட்டேன்டா இது உன் ஆத்தா குப்பம்மா மேல சத்தியம்” – வைஷ்ணவி
“ஆனா நான் உங்கள உண்மையா லவ் பன்னேனுங்க அம்மணி” வெள்ளைச்சாமி விடவில்லை அவளை, அவள் மேல் காதல் இல்லை என்றாலும் ஒரு பிடித்தம் அவனுக்கு சிறு வயதிலிருந்தே இருந்தது.
“விட்டுப்போடு ராசா, நாம ஜம்முனு சீமைல இருந்து ஒரு நல்ல புள்ளையா பாத்துக்கலாம்” – வைஷ்ணவி
“ஆருங்க உங்கள மாதிரி அடக்க ஒடுக்கமா இருப்பாங்க? சரி நீங்க இவ்ளோ தூரம் கேக்குறதால சரிங்றேன், நம்ம சமையல் மாஸ்டர்-கு தங்கச்சி ஒரு புள்ள இருக்காம்ல. அவுக எப்டி?” சரியாக நூல் விட்டான் சுபத்ராவிற்கு.
“அந்த புள்ளையோட அண்ணன் குரவலைல கரண்டியை வுட்டு ஆட்டிடுவாக. அது எப்படிங்க ராசா வயசுல மூத்த புள்ளையவே பாக்குறீங்க?” – வைஷ்ணவி
“அதெல்லாம் ஒரு கிக்கு. உனக்கு சொன்னா புரியாது. சரி கிளம்புறேன்” அவன் கிளம்ப எத்தனித்த நேரம் மஹேஸ்வரி காபி கொண்டு வர உரிமையாய் எடுக்க போனவன் கையை தட்டிவிட்டு, “இது அவளுக்குடா” என்றார் மஹேஸ்வரி.
“பொண்ணும் தர மாட்டிக்கிறீங்க, காபியும் தர மாட்டிக்கிறீங்க… ரோசம் உள்ளவன்டா இந்த வெள்ளைச்சாமி. இனி இந்த வீட்டு படிய மிதிக்க மாட்டேன்”
“கல்யாணம் முடிஞ்ச அடுத்த நாள் இங்க தான் கறி விருந்து” – வைஷ்ணவி
“காலைலயே வந்துடுவேன்” என கீழே இறங்கியவனிடம், “இலை எடுக்க எல்லாம் ஆள் சொல்லியாச்சு, நீ வர வேணாம்” என கத்திய மகளை முறைத்த மஹேஸ்வரி அவனிடம், “வெள்ள இருடா உனக்கு கீழே காபி வச்சிருக்கேன்” அவனை அழைத்துக்கொண்டு கீழே இறங்கினார்.
இவை அனைத்தையும் கேட்டு வேலை செய்துகொண்டிருந்த கார்த்திக்கு இதழ்களில் மறையாத புன்னகை. அவனிடம் வெள்ளைச்சாமி வரும் முன் கைபேசியில் பேசிக்கொண்டிருந்தவள் இணைப்பு சரியாக துண்டிக்கப்படாது தெரியாமல் பேச, அனைத்தையும் கேட்டுவிட்டான் ஆணவன்.
இரவே அவளிடம் கேட்டுவிட அவன் அழைக்கும் முன் அவளே அழைத்துவிட்டாள், “நான் நாளைக்கு பைன்ஆப்பிள் ஜிலேபி பண்ண போறேன். எனக்கு ரெசிபி வேணும்”
“சமையல் தவற என்கிட்ட பேச உனக்கு எதுவுமே இருக்காதா வைஷ்ணவி?” சிரிப்போடு கேட்டான், “எப்போ கால் பண்ணாலும் ரெசிபி கேக்குற இல்லனா சவூதிய காட்ட சொல்ற?”
“வேற என்ன பேசுறது? சரி நீங்க ட்ரிங்க்ஸ் பண்ணுவிங்களா?”
“ஒரு தடவ ட்ரை பண்ணேன், புடிக்கல ஆனா அடுத்த வாரமே அத மறுபடியும் யூஸ் பண்ணனும்னு தோணுச்சு. அதான் அப்போவே அந்த பக்கம் போக கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன்”
“வேஸ்ட் போங்க, சரி சிகரட்?” – வைஷ்ணவி
“தொட்டு கூட பாக்கல” – கார்த்தி
“என்ன பையன் நீங்க? எந்த பழக்கமும் இல்லனு சொல்றிங்க” – வைஷ்ணவி
“ஏன் இந்த மாதிரி பழக்கம் இருந்தா தான் பையனா?” – கார்த்தி
“நான் அப்டி சொல்லல எனக்கு சிகரட் ஸ்மெல் ரொம்ப புடிக்கும், நீங்க குடிச்சா அப்போ அப்போ மோந்து பாத்துக்கலாம்ல” ஆசையாக சொன்னவள் குரலில் சிறிது ஏமாற்றம்.
“ம்ம்ம்… ஏன் வைஷ்ணவி அன்னைக்கு திருவிழால பாத்தோம்ல, அவனை மாதிரி உனக்கு வேற ஏதாவது பேன்ஸ் இருக்காங்களா என்ன?” – கார்த்தி
“அந்த கொடுமையை ஏன் கேக்குறீங்க இன்னைக்கு கூட ஒரு பையன் வந்தான், நான் தான் சமையலை தான் கல்யாணம் பண்ணுவேன்னு சொல்லிட்டேன். பாவம் மனசு ரொம்ப கஷ்டப்பட்டு போய்ட்டான்”
சத்தமில்லாமல் கார்த்தி சிரித்தான், “ஓ… நான் சூசைட் பண்ணிப்பேன்னு சொல்லி உன்ன கல்யாணம் பண்ணிக்க பிளாக்மெயில் பன்னேனு எனக்கு நியூஸ் வந்தது…”
வைஷ்ணவி கண்கள் பேந்த பேந்த விழித்தது, “யார்… யார் இப்டி எல்லாம் அபாண்டமான பொய் சொல்றது உங்ககிட்ட?”
ஷெர்லினிடம் மட்டுமே அந்த தகவலை கூறியிருந்தாள், “ஓ அந்த மண்டை ஓடு ஷெல்டரின் சொன்னாளா?” அவனின் சிரிப்பில் உண்மை தெரிந்துவிட்டதோ என்ற பயத்தில், “ஏன் கார்த்… நீங்க அத நம்பள தான?”
“ஷெர்லின் சொன்னா நம்பாம இருக்கலாம், ஆனா வைஷ்ணவி சொன்னா நான் நம்பணும்ல?” அவன் குரலில் இருந்த நக்கலில் தான் மாட்டிக்கொண்டது புரிந்தது, “நீ கால் கட் பண்ணாம பேசிட்டு இருந்த வைஷ்ணவி”
“அப்போ நீ கார்த்தி சொல்ல மாட்ட?” ஏக்கம் ஏமாற்றமாய் உருமாறியது. மௌனம்.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.