வைஷ்ணவி – கார்த்தி திருமணம் முடிந்து இன்றோடு ஐந்து மாத காலம் முடிந்தது. இருவரும் குற்றாலத்தில் ஒரு வீட்டில் வாடகைக்கு குடியேறியிருந்தனர்.
திருமணம் முடிந்த ஒரே வாரத்தில் இருவரையும் இங்கு அழைத்துவந்து பால் காய்ச்சி அவர்களுக்கு தேவையான அத்தனை பொருட்களையும் வாங்கி அடுக்கிவிட்டார் வைஷ்ணவி தந்தை. கார்த்தி எவ்வளவோ மறுத்தும், தந்தையானவர் கேட்டபாடில்லை. நினைத்ததை செய்து முடித்தே நிம்மதியுடன் வீடு வந்து சேர்ந்தார்.
வைஷ்ணவி, கார்த்திக்கு அந்த வீடு சொர்கமானது அந்த ஐந்து மாதத்தில். கீழ் வீட்டில் வயதான தம்பதி இருக்க, மேல் மாடியில் சிறிய அளவான வரவேற்பறை, ஒரு படுக்கையறை, ஒரு குளியலறை, ஒரு சமையலறை இருக்க, அந்த வீட்டின் அளவை விட பெரிதாக மாடி மொத்தமும் காலியாக இருந்தது.
மனைவி ஆசைப்பட்டு கேட்க, இரண்டுபேர் அமரக்கூடிய வகையில் ஊஞ்சல் ஒன்றை வாங்கி போட்டு அதை சுற்றி திரைசீலை போலே ஷெட் ஒன்றையும் போட்டுவிட்டான்.
அங்கு அமர்ந்தபடியே தூரத்தில் சிறு ஓடை போல் தெரிந்த குற்றால அருவியை தினம் பார்த்து ரசிக்கும் வைஷ்ணவிக்கு தான் மகிழ்ச்சியில் மொத்தமும் மறந்து போகும். பல நாட்கள் கணவனையும் மறந்து இயற்கையோடு ஒன்றிவிடுவாள் பாட்டை போட்டுவிட்டு.
ரிசார்ட் வியாபாரம் நன்றாக செல்ல, ஸ்விக்கி, ஸ்ஜோமோட்டோ என வியாபாரம் நன்றாக சூடு பிடித்தது. குடும்பமாக வந்து தங்க ஸ்விம்மிங் பூல், சிறுவர்கள் பூங்கா என குடும்பமாக அதிகம் வந்து செல்ல துவங்கினர்.
பொழுது போகாத நேரம் கார்த்தியின் ரிசார்ட் சென்று அங்கு சமயலறைக்குள் சென்று அங்கிருப்பவர்களை கேலி செய்து கிண்டல் செய்து, சமையல் கத்து தருமாறு தொந்தரவு செய்து என ஒரு போரையே உருவாக்கிவிடுவாள்.
கூட்டம் அதிகம் இல்லாத நேரத்தில் வெளியில் இருக்கும் கார்த்தி, கூட்டம் அதிகம் வந்தால் கிச்சனுள் சென்றுவிடுவான். அதனால் அவளும் கார்த்தி அங்கு இல்லாத நேரம் தான் அங்கிருக்கும் கார்த்தியின் ஜூனியர்களை தொந்தரவு செய்வாள்.
அவர்களும், “அதான் சீனியர் வீட்டுல இருக்கறப்ப கேக்க வேண்டியது தான க்கா? ஏன் இப்டி எங்க உயிரை வாங்குறீங்க?”
அவளோ, “உங்க சீனியர்க்கு உங்க அளவுக்கு சமைக்க தெரியாதுடா…” என ஒரு கட்டி ஐஸை வைத்துவிடுவாள்.
“சரி உனக்கு நான் செஞ்சு குடுக்குறேன், ப்ளீஸ் கத்திய ஒழுங்கா புடி கை வெட்டிக்கும்… க்கா க்கா க்கா பாத்து க்கா” அவர்களை போல் வேகமாக கை வெட்டுகிறேன் என்னும் பெயரில் கோணல் மணலாக கத்தியை பிடிக்க கதறினான் அவன்.
“ஏன்டா காக்கா மாதிரி கத்திட்டு இருக்க… பட்டர்” என்றாள்.
“டேய் பட்டர் எடு-னு சொன்னேன்” சமாளித்தவள், “என்னடா இந்த ஸ்டவ் விசித்திரமா இருக்கு, எப்படி பத்த வைக்க?” என ஆராய அதற்குள் கார்த்தியிடம் விசியம் சென்று அவளை கை பிடித்து வெளியில் அழைத்துச் சென்றான்.
“போர் அடிக்கிதுன்னு தான வந்த? சும்மா வேடிக்கை பாத்துட்டு போகாம இது என்ன பசங்கள டிஸ்டர்ப் பண்ணிட்டு?” கடிந்தான் கணவன்.
“இல்லங்க இன்னைக்கு நைட் என்ன பண்றதுன்னு தெரியல, அதான் இங்கையே சமைச்சிட்டு போய்ட்டா வேலை மிச்சம்ல?”
அவள் தலையில் வலிக்காமல் கொட்டியவன், “என் மக்கு, என்கிட்ட சொன்னா நான் செஞ்சிட மாட்டேன்? ஆமா அங்க என்னமோ சொன்னியே என் சமையலை பத்தி”
மாட்டிக்கொண்டதில் முழித்தவள், “என் புருஷன் சமையல் பக்கத்துல கூட நீ வர முடியாது-னு சொன்னேன், உங்களுக்கு தப்பா கேட்டருக்குமோ?”
அவளை ஆராய்ச்சியாய் முறைத்தவன், “வா உன்ன வீட்டுல விட்டுட்டு வர்றேன்” மனைவி கை பிடித்து கார்த்தி பார்க்கிங் நோக்கி அழைத்து சென்றான்.
இல்லம் வந்ததும் வீட்டின் வெளியில் இருந்த ஊஞ்சலில் அமர்ந்தவன், “ஒரு டீ போட்டு தர்றியா டா?” எனவும் சரி என போட்டு எடுத்து வந்தவளை தன் மடி மீதி அமர்த்தி அவளோடு கதைகள் பல பேசி முடிக்கவும்,
“நாளைக்கு ஊருக்கு போகலாமா?”
கணவன் மார்பின் மீது வைஷ்ணவி சாய்ந்திருக்க அவனோ அப்பொழுது கைபேசிக்கு வந்த ஏதோ ஒரு குறுந்செய்தியை பார்த்தபடி இருக்க கைபேசியை பிடிங்கி மீண்டும், “நாளைக்கு ஊருக்கு போகணும்” செய்தியை கூறினாள்.
“ஏன் நாளைக்கு?”
“இன்னும் ஒரு வாரத்துல ஷெர்லின் கல்யாணம் இருக்கு சமயலு” சட்டையினுள் இருந்த அவன் மெல்லிய தங்க சங்கிலியை எடுத்து விளையாட துவங்கியது அவள் கைகள்.
ஷெர்லினிடம் காதலை கூறி அந்த நாளே அவள் தந்தையிடம் சென்று தன்னுடைய விருப்பத்தை கூறி திருமணத்திற்கு அனுமதி வேண்டி நின்றான் சுந்தர் அன்னை தந்தையை அருகில் வைத்து. இருமானதாய் தத்தளித்த ஜேம்ஸ் அமைதியை புரிந்து அமைதியாய் அவருக்கேற்ற சில இடைவெளியைவிட்டு.
மூன்று மாதங்கள் மகளின் முகத்தை பார்த்து யோசித்துக்கொண்டே இருந்தார் ஜேம்ஸ், பிறகு தந்தையின் முடிவில் விட்ட மகளின் உள் மனதை மனைவியின் மூலம் தெரிந்து மக்களுக்காகவே முழு மனதாய் திருமணத்திற்கு சம்மதம் கூறி, இதோ இன்னும் ஒரு வாரம் மட்டுமே ஷெர்லின் திருமணத்திற்கு இருப்பது.
“ரெண்டு நாள் முன்னாடி போகலாமேடா…” அவள் நாடியில் ஒட்டியிருந்த டீ நுரையை துடைத்தவன் கெஞ்சலாக மனைவியிடம் வினவினான்.
“ரெண்டு நாள் முன்னாடி போய் என்ன பண்றது கார்த்திக்? அவளுக்கு மேக்அப், ஹேர்ஸ்டைல் எல்லாம் பாக்கணும்ல?”
“அப்போ என்ன யார் பாப்பாங்க?” அலைபாய்ந்து தன்னவளின் மொத்த சிந்தனையையும் தன்னிடம் வந்து நிறுத்தவைதான் கார்த்தி.
வைஷ்ணவியை லேசாக முறைத்த கார்த்தியோ, “எல்லாத்துக்கும் பதில் வச்சிட்டு போகணும்னு ஒரு முடிவோட தான் இருக்கியா?” வைஷ்ணவி காதுகளோடு தன்னுடைய மூக்கை உரசி அவன் வினவியது அவளை அவன் வசம் வீழ செய்தது.
“போகணும் கார்த்திக்…” திணறியது அவள் வார்த்தைகள், “ஷெர்லின் வெயிட் பண்ணுவா”
மனைவியின் கன்னம் தாங்கியவன் அவள் நெற்றியில் இதழ் பதித்து, “சரி நாளைக்கு காலைல வெள்ளன போகலாம், நைட் நான் பதினோரு மணி மேல தான் வருவேன், நீ படுத்து தூங்கு” என மனைவிக்கு செல்லும் பொழுது, “வீட்டை பூட்டிக்கோ டா. நான் சாவி எடுத்துக்குறேன்” என ஆயிரம் அறிவுரைகள் சொல்லி சென்றான்.
மாலை மணி ஐந்தை ஒட்டி இருந்த நேரம், கடைக்கு அதிகம் மக்கள் வராமல் இருந்தனர். இரவிற்கு தேவையான அனைத்து ஏற்பாடும் முக்கால்வாசி நடந்திருக்க இப்பொழுது மாலை சிற்றுண்டி வேலை தான் ஓடிக்கொண்டிருந்தது.
அந்த நேரம் கார்த்தியின் பாட்டியிடம் அவனுக்கு அழைப்பு வர, வெளியில் வந்தவன், “பாட்டி சொல்லுங்க, நல்லா இருக்கீங்களா?” என்றான் ஆசையாக.
வாரம் ஒருமுறையேனும் பேரனை பார்த்துவிட வேண்டும் சேர்மதாய்க்கு, இல்லையெனில் அவருக்கு பித்து பிடித்தார் போல் இருக்கும்.
“ராசா நான் கேப்பேன், மனசுல இருக்கத மறைக்காம பேசிபோடனும் இந்த கெழவிகிட்ட” தான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் காட்டமாய் ஆணை தான் பிறந்தது.