“உங்களுக்கு புரியலையா? நீங்க எனக்கு முக்கியத்துவம் குடுக்கறீங்கன்ற நினைப்பு வந்தா அவங்களுக்கு இப்போ இல்லைன்னாலும் பின்னாடி கூட என் மேல பிடித்தம் இல்லாம போயிடும்….” என்று தீவிரமாய் சொல்ல,
“இப்ப என்னடி வேணும்?…” என இடுப்பில் கைவைத்து அவன் கேட்கவும், மேலும் சூடேற்றவேண்டாம் என்று பேச்சை மாற்றினாள் விருஷ்திகா.
“ஒரே ஒரு கேள்விக்கு பதில்…”
“கேளு…”
“என்னை கூட்டிட்டு போனது இந்த ஒருவருஷம் மட்டும் தானா? இல்ல அடுத்தவருஷம் நானும் இப்படி வராம இருந்தா கூப்பிடாம விட்டுவீங்களா?…” என கேலியாய், கேட்க கடுப்பாகி போனான்.
“இப்ப இது ரொம்ப முக்கியமா?…”
“ஆமா, எனக்கு முக்கியம் தான். இன்னைக்கு என்னை எழுப்பி கூட்டிட்டு போக முடிஞ்சதே?…”
“உனக்கு பார்க்க புடிக்கும்ன்னு தான் கூட்டிட்டு போனேன். ஆனா இப்ப தோணுது, தெரியாம கூட்டிட்டு போய்ட்டேன். இத்தனை கேள்வி கேட்கிற நீ…” என பல்லை கடிக்க,
“அவங்களுக்கும் போக புடிச்சிருந்து நீங்க யாரும் கூப்பிடாம இருந்ததால வராம இருந்தா? ஏனா, நானுமே நீங்க கூப்பிடற வரைக்கும் இங்க யாரும் போகமாட்டாங்கலேன்னு நினைச்சு தான் பேசாம இருந்தேன்…” என்று சொல்ல,
“பரவாயில்லை, நீங்க கூட்டிட்டு போகனும்ன்னு நான் நினைக்கமாட்டேன். அடுத்த வருஷம் நான் எங்கப்பா கூட போவேன்…” விளையாட்டாய் தான் அவளுமே இதனை கூறியது.
“முதல்ல உங்கப்பா உன்னோட பேசட்டும். இந்த வீட்டுக்கு சம்மந்தின்ற நினைப்போட வரட்டும். அப்பறம் நீ அவரோட அழகரை பார்க்க போறதை பார்ப்போம்…” என நக்கலாக சொல்லி, டவலை எடுத்துக்கொண்டு கோபமாய் குளிக்க சென்றுவிட்டான் அழகர்.
“எங்கப்பா வரலைன்னா…” அவன் பின்னே சென்றவள் கேட்க,
“வந்துதானே ஆகனும். வராம எங்க போயிருவார்?…” என்றவன் குரலில் மிதமிஞ்சியிருந்த அந்த உணர்வில் விருஷ்திகா திகைத்து போய் நின்றாள்.
“எவ்வளோ கொழுப்பு? இதோ இதுதான் இவர் நிஜம். சிறுத்தைகள் என்னைக்கு புள்ளிகளை மாத்தியிருக்கு?…” என்று கடுப்புடன் சொல்ல,
“சிறுத்தை ஏன் புள்ளியை மாத்தனும்? அவங்கவங்க அவங்கவங்க இயல்போட தான் இருப்பாங்க. யாரும் யாருக்காகவும் மாறமுடியாது. நீ மாறிடுவியா எனக்காக?…” என்றான் மீண்டும் கதவை திறந்து.
அவனை கோபமாக முறைத்தவள் சிலிர்த்துக்கொண்டு கட்டிலில் சென்று அமர்ந்துவிட்டாள்.
கோபத்தில் வேலைகள் வேகமாய் நடக்க பெட்டிகளை எல்லாம் கீழே வைத்துவிட்டு கட்டிலில் இருந்த புடவைகளை எடுத்து அடுக்க ஆரம்பித்தாள் விருஷ்திகா. சற்றுநேரம் தான்.
“லக்ஷ்மி லக்ஷ்மி…..” என இரைய ஆரம்பித்தான் அழகர்.
அவனின் சப்தம் கேட்டாலும் கேட்காததை போலவே தன் வேலையை பார்த்துக்கொண்டிருந்தாள் விருஷ்திகா.
மேலும் அழைக்க எரிச்சலான எரிச்சல். எங்கே கீழே இருப்பவர்கள் இங்குவரை வந்துவிடுவார்களோ என்று கடுப்புடன் குளியலறை முன் சென்றவள்,
“ப்ச், இப்ப எதுக்கு கூப்பிட்டீங்க? அனாவசியமா பேசாம பதில் சொல்லுங்க. எதாச்சும் சொல்லி டென்ஷன் பன்றீங்க…”
“தலையெழுத்து. கோபம் கண்ணை தான் மறைக்கும்ன்னு சொல்லுவாங்க. காதை செவிடாக்கும்ன்னு இப்ப தான் தெரியுது…” என அழகர் சொல்ல, விருஷ்திகா எதுவும் பேசாமல் முகம் திருப்பி நகர்ந்தாள்.
“வாட்? நான் டவல் எடுத்துட்டு வரனுமா? இதுக்குத்தான் நான் இங்க இருக்கேனா? இந்த வேலையெல்லாம் என்கிட்ட வச்சுக்கவேண்டாம். நான் ஏற்கனவே சொல்லிட்டேன்…” என எச்சரித்தவள்,
“சரியான சூனியபொம்மை. ஒரு டவல் தான கேட்டேன். உன்னை போய் கட்டினேன்ல என்னை சொல்லனும்…..” என பல்லை கடித்த அழகர்,
“டவல் எடுத்து தா லக்ஷ்மி…” என்றான் மீண்டும்.
“முடியாது மிஸ்டர். சூனியபொம்மை. இனிமே என்னை சொன்னா நானும் சொல்லுவேன். அதுவும் சூனியபொம்மை எல்லாம் எதுவும் ஹெல்ப் பண்ணாது…” என சொல்லிவிட்டு மீண்டும் கட்டிலில் வைத்திருந்த உடைகளை எல்லாம் எடுத்து வைக்க ஆரம்பித்தாள் விருஷ்திகா.
“நானா கட்ட சொன்னேன்? அவ்வளோ கஷ்டமா இருந்தா அனுப்ப வேண்டியது தானே?…”
“லக்ஷ்மி, இப்ப நீ எடுத்து தரலைன்னா இப்படியே வந்திருவேன். பார்த்துக்கோ…” என்றதற்கும் அவள் பெரிதாய் அலட்டிக்கொள்ளவே இல்லை.
“லக்ஷ்மி…” என பல்லை கடித்தவன் உள்ளே தண்ணீரை நிறுத்திவிட்டு சொல்லியதை போல அப்படியே தான் வெளியே வந்தான்.
அவன் ஈரத்துண்டுடன் தான் வந்திருப்பான் என்று நினைத்து அலட்சியமாக திரும்பி பார்த்தவள் கண்கள் விரிந்துகொள்ள பெரிதாய் ஒரு அலறல்.
சட்டென முகத்தை மூடிக்கொண்டு அவனுக்கு முதுகு காண்பித்து நின்றவள் மீண்டும் அலறினாள் கோபத்தில்.
“யூ யூ…” என்று கத்தமட்டுமே முடிய அழகர் அவளோடு ஒட்டியிருந்தான் ஈரத்துடன்.
அவள் திமிற திமிற தன் புறம் திருப்பியவன் முழுதாய் அவளை தன் அணைப்பிற்குள் கொண்டுவந்ததோடு கண்டபடி இந்த இடமென்றில்லாமல் முத்தங்களை வழங்க விருஷ்திகா அவனின் வேகத்தில் நடுங்கி போனாள்.
“ஆத்தா லச்சுமி…” என மாணிக்கவல்லி அழைத்துக்கொண்டே வரும் அரவம் கேட்க அழகர் வாசல் பக்கம் பார்த்தான். ஒருக்களித்து கதவு திறந்திருந்தது.
“அச்சோ, கதவு திறந்திருக்கு…” என விருஷ்திகா சொல்லி, அவளின் டவலை எடுத்து நீட்ட.
“போடி…” என தள்ளிவிட்டவன் கட்டிலை தாண்டி தாவி சென்று கதவை டப்பென்று அடைத்தான்.
அவன் அடைத்துவிட்டு நின்றதும் தான் விருஷ்திகாவிற்குமே நிம்மதியானது. பெருமூச்சுடன் தளர்ந்து கட்டிலில் அமர்ந்தவள் அவனை பாராமல் கால்களை மடக்கி முகம் திருப்பிக்கொண்டாள்.
“என்னமோ என்னை பார்க்காத மாதிரி தான். ரொம்ப பண்ணி என்னை வெறியேத்துன. அவ்வளோ தான்…” என்று சொல்லியவன் தன் உடையை மாற்றிக்கொண்டு அவளருகில் வந்தான்.
அமர்ந்திருந்தவளின் கை மணிக்கட்டை பிடித்து எழுப்பி நிறுத்தி, மீண்டும் அவளின் இதழ்களை முற்றுகையிட்டு விலக, அழகரின் நெஞ்சில் கைவைத்து தள்ளியவள் கோபம் கண்டு மிதப்பான புன்னகை அவன் முகத்தில்.
“என்னோட ஒரு இழுப்புக்கு தாங்க முடியலை. நீ வீம்பு பன்றியா? பேசாம டவலை எடுத்து குடுத்திருந்தா நானும் அமைதியா வாங்கிட்டு கிளம்பி போயிருப்பேன். சும்மா இருந்தவனை சீண்டிவிட்டு இந்த முகம் திருப்பற வேலை வச்சிக்கிட்ட….”
அழகர் சொல்லிவிட்டு கதவை அடைத்துக்கொண்டு வெளியேற மூடிய கதவின் மீது கட்டிலில் வைத்திருந்த உடைகளை எல்லாம் தூக்கி வீசி எறிந்தாள் விருஷ்திகா.
வெளியே சற்று தள்ளி படிக்கட்டின் அருகில் மாணிக்கவல்லி, தில்லையம்பாள் இருவரும் கையை பிசைந்துகொண்டு நின்றிருந்தனர்.
“ரெண்டுபேரும் இங்க என்ன பன்றீங்க?…” என்றான் அழகர் சட்டையின் கையை மடித்துவிட்டபடி.
இன்னும் ஈரம் காயாத தலையை கலைத்து கோதியபடி தங்களின் அறையை திரும்பி பார்த்துவிட்டு அதே புன்னகையுடன் மாடிப்படியில் தடதடவென்று இறங்கினான் அழகர் அமிழ்திறைவன்.
சாப்பிடவும் இல்லை. சாப்பிடும் மனநிலையும் இல்லை. திருமணத்திற்கு பின் இத்தனை நாட்கள் கடந்து மனைவியின் நெருக்கம் அவனை மிதக்க செய்திருந்தது.
வீட்டிலிருந்து வெளியே வந்தவன் நேராக ஹோட்டலுக்கு செல்ல காலை உணவுநேரம் ஹோட்டலில் கூட்டம் அலைமோதியது.
வெளியூர் மக்கள் வேறு திருவிழாவுக்கு வந்திருக்க பரபரப்பாய் இருந்தது மதுராபுரி உணவகம்.
அனைத்தையும் பார்வையிட்டு முடித்து தனது அறைக்கு வந்தமர்ந்தவன் கைப்பேசியில் அழைப்பு வர, அதனை எடுத்து பேசியவன் யோசனையுடன் நெற்றியை பெருவிரலால் கீறிக்கொண்டான்.
அடுத்து என்ன என்றெல்லாம் யோசிக்கவே இல்லை. உடனடியாக அரவிந்திற்கு அழைக்க,
“உங்க அப்பாவும், தம்பியும் திருக்கல்யாணத்துக்காக மட்டும் தான் இப்ப வந்திருக்காங்களா?…” என்றான் அவனிடம்.
“என்ன சொல்றீங்க?…” அரவிந்த் குழம்ப,
“விசாரிங்க. அவங்கக்கிட்ட என்னன்னு கேளுங்க. இல்லைன்னா நான் கேட்கனும். பேசிட்டு கூப்பிடுங்க…” என்று சொல்லிவிட்டு வைத்த அழகரின் முகத்தில் கோபத்தின் ரேகைகள்.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.