“டவல் எடுத்து வச்சிருக்கியான்னு கேட்க தான் கூப்பிட்டேன்….” என்றவன்,
“ஏன் என்னோட பேச கசக்குதா?…”
“சத்தியமா இனிக்கலை. போதுமா? இப்படி யாராச்சும் செய்வாங்களா? கீழ போனா என்னாச்சு லக்ஷ்மி, ஏன் அப்படி கத்தினன்னு கேட்கறாங்க. எல்லாம் உங்களால…”
“நான் என்னடி பண்ணுனேன்?…” உல்லாசக்குரலில் அவன் கேட்க,
“என்ன பண்ணலை. எல்லாம் பண்ணிட்டு…”
“ஹ்ம்ம், அப்பறம்…” என்று அவன் கேட்டவிதத்தில் தன்னை பேச வைக்கிறான் என்று புரிந்து,
“உங்களை என்னவோன்னு நினைச்சிருந்தேன். நீங்க இப்படியெல்லாம் பண்ணுவீங்கன்னு சத்தியமா நினைக்கலை…” என்றாள் மீண்டும் ஆரம்பத்தில் வந்துநின்று.
“ஸ்யப்பா, இன்னும் நீ இதை விடலையா? வேற எப்படி இருக்கனும் உன்கிட்ட? இல்ல இதுவே நமக்குள்ள எந்த பிரச்சனையும் இல்லாம இருந்தா இப்படி நடந்திருந்தா இவ்வளோ கோபப்பட்டிருப்பியா நீ?…”
“பேச்சை மாத்தாதீங்க…”
“நான் சரியா தான் பேசிட்டிருக்கேன். நீ பதில் சொல்லுடி….” என்றான் அழகர் அவளை சீண்டிக்கொண்டே.
“நான் இன்னும் ஹோட்டல்ல தான் இருக்கேன். கண்ணை திற…” என்று சொல்லவும் தான் கண்ணை மூடிக்கொண்டு அலறியது உரைக்க,
“உங்களை…” என்று பல்லை கடித்தாள் விருஷ்திகா.
“அவ்வளோ மோசமாவா இருந்தேன்? என்னோட ஒருவயசு போட்டோ கூட நீ உன் கலெக்ஷன்ல வச்சிருந்தியே….”
“அச்சோ, ஈஸ்வரா…” என்றவள் இணைப்பை துண்டித்துவிட அட்டகாசமான சிரிப்போடு கைப்பேசியை பார்த்தான் அழகர்.
அன்றைக்கு விருஷ்திகாவின் பூர்வீக வீட்டில் அந்த அறையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை எல்லாம் கைப்பேசியில் பார்வையிட்டவன், அந்த புகைப்பட குவியலின் மத்தியில் ஒரு புகைப்படத்தை பார்த்தான்.
விருஷ்திகாவின் அருகில் தான் மட்டும் நிற்கும் பகுதியில் சின்னதாய் என்னவோ எழுதியிருந்ததை போலிருக்க பெரிது செய்து பார்த்தும் எதுவும் தெரியவில்லை.
அதனை மட்டும் கிராப் செய்து சேமித்துக்கொண்டவன் வேலையில் ஆழ்ந்தான். அன்று மதிய உணவிற்கு வீட்டிற்கு வரவில்லை.
விருஷ்திகாவிற்கு கூறலாம் என்று பார்க்க இவன் அழைத்தும் எடுக்கவில்லை அவள்.
“ஏடாகூடமா பேசினா எடுக்கமுடியாது. எதுவானாலும் மெசேஜ் பண்ணுங்க…” என்று குறுஞ்செய்தி அனுப்பிவைக்க,
“ஏன் இதுல எதுவும் பேசமாட்டேனா? இல்ல அனுப்பமாட்டேனா?…” என்றான் பதில் செய்தியில்.
“அவ்வ்வா, மனுஷனா நீங்க? இதுல நான் அப்படி வளர்ந்தேன், கல்சர் களிமண்ணுன்னு பேச்சை கேளுங்க….” என்று வம்பு செய்ய, இப்படியாக சண்டை என்று கூட இருவரும் சேர்ந்தே இருந்தனர்.
எதற்கு அழைத்தோம் என்று அவனும், எதற்கு அழைப்பை ஏற்காமல் போனோம் என்று அவளும் மறந்தேவிட்டிருந்தனர்.
இரவு வெகுநேரம் கழித்து தான் வீடு வந்து சேர்ந்தான் அழகர். மாணிக்கவல்லி, தில்லை மட்டுமே விழித்திருந்தனர்.
“இவ்வளோ நேரம் ஏன் முழிச்சிருக்கீங்க? தூங்கவேண்டியது தானே?…” என்றான் அவர்களிடம்.
“இவ்வளோ நேரம் லச்சுமி பேசிட்டிருந்தா. இப்பத்தேன் வண்டிச்சத்தம் கேட்டு மாடிக்கு ஓடுச்சு புள்ள…” என்றார் தில்லை.
அதுவரை இதழ்களுக்குள் புன்னகைத்தபடி அந்த பதட்டத்தினை பார்த்தவன் தன் புறம் அவள் திரும்பவும்,
“உன்னை யாரு இதெல்லாம் செய்ய சொன்னா?…” என்றான்.
“நான் செய்யாம? ஒரு டவலை நனைக்காம குளிச்சிட்டு வர தெரியலை பெருசா கிளாஸ் மட்டும் எடுக்கறது…” என்றவள் கவலை எல்லாம் இப்படி மொத்தமும் விழுந்துவிட்டதே என்று.
“ஏன் இப்படி பன்றீங்க? எவ்வளோ கஷ்டப்பட்டு அடிச்சேன்?…” என்றாள் மீண்டும் கோபமாய்.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.