தான் பண்ணிவைத்திருந்த விஷயத்தை ஒரு தரம் பார்த்துவிட்டு, நல்ல தரமான சம்பவம் நடக்க போகுது மது உனக்கு… நீ இதை பார்த்துட்டு, உன் மூஞ்சை எங்க கொண்டுபோய் வைக்கிறன்னு நானும் பாக்குறேன்… என்று மதன் சபதமாக அவளின் புகைப்படத்தை பார்த்து சொல்ல,
“என்னையவே அறஞ்சல்ல… இதுக்கு நீ என்ன பண்ண போறான்னு நானும் பாக்குறேன்…” என்று அவளின் புகைப்படத்தின் மீது வன்மமாக படிந்தது அவனின் கண்கள்.
இத்தனை வருடத்தில் அவனை இப்படி யாரும் கைநீட்டியது இல்லை… ஒன்று புகார் குடுப்பேன் என்று மிரட்டுவார்கள், இல்லையென்றால் அழுது வேற டீம் மாறி சென்றுவிடுவார்கள்… இப்படி அறை வாங்கிது தான் அவன், இந்த செயல் செய்வதற்கு காரணமாக அமைந்தது.
“இதுக்கப்பறம் என்ன நடக்கபோகுதுன்னு பாக்க ஆவலா வைட்டிங், ஹா ஹா…” என்று அவனுக்கு அவனே பேசி சிரித்து, எல்லாருக்கும் பார்க்கும் படி காட்சி படுத்திவிட்டு, மதுவின் நிலைமையை பார்க்க, மதன் அவனின் கேபினில் வெயிட் செய்து கொண்டிருந்தான்.
ஆனால் அவன் மறந்த ஒன்று அதில் மது மட்டும் இல்லையென்பது…
– – – – –
நண்பர்கள் மூவரும் கஃபேவில் கலகலத்து கொண்டிருக்க,
ரேகா, “இங்க பாரு விம்பார்… நான் உன்னோட லவ்வை அக்செப்ட் பண்ணிக்கிட்டதுனால, என் க்ரஷ் லிஸ்டை எல்லாம், நீ வேணாம்னு சொல்லக்கூடாது… சொல்லிட்டேன் இப்போவே…” என்று கொஞ்சம் சீரியஸ் ஆக சொல்ல,
விமலோ நமுட்டு சிரிப்புடன், “எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல… உன் க்ரஷ் லிஸ்ட்ல உள்ள ஈஸ்வரன் என்ற பிரகதீஸ்வரன், இப்போ மதுவோட ஹப்பி ஆகி…டாரே…” என்று இழுத்து,
“ஆமாம்டா விம்… இந்த அமுக்குணி நான் க்ரஷ்ன்னு சொல்லும் போது கூட வாயை திறக்கலை பாரேன்…”
“ஹா ஹா…கரெக்ட்டு நல்லா கேளு அங்க…” என்று விமல், ரேகாவிடம் ஏற்றிவிட,
“பதில் சொல்லுடி… எதுக்கு எங்க கிட்ட இருந்து மறச்ச…”
“பச்… இது ஒரு விஷயமா…” என்று மது சலிக்க,
“என்னடி… இப்படி கேக்குற…” என்று அவளை யோசனையாக பார்க்க,
விமலோ, தங்கள் டேபிளை பார்த்துவிட்டு, பின்பு அவங்களுக்கேயே பேசும் மற்ற டேபிளில் இருப்பவர்களை, கொஞ்சம் யோசனையாக பார்க்க,
இவர்கள் டேபிளை நோக்கி வந்த, ஸ்வேதாவை பார்த்த விமலோ, “இவளுக்கும் நம்ம மதுக்கும் செட் ஆகாதே… இவ எதுக்கு வரா…” என்று அவளை பார்க்க,
நேரே வந்த ஸ்வேதா, மதுவிடம், “அப்பறம் ப்ரகதீஷை எப்படியோ கரெக்ட் பண்ணிட்ட போல …” என்று நக்கலாக கேட்க,
“ஏய்…” என்று சொல்லி மது சீற்றமாக பார்க்க,
“பாருடா… உண்மையை தானே கேக்குறேன்… என்ன எகுறுற…” என்று இன்னும் நக்கலாக பேச,
“உன் வேலை என்னவோ அதை மட்டும் பாத்துட்டு போ… தேவையில்லாம பேசாத… ஆபீஸ்ன்னு பாக்குறேன்…” என்று மது அவளை பார்த்து அழுத்தமாக சொல்ல,
“நீ இப்படி பேசுனா… நான் போயிடுவேனா?…” என்று அவளும் பேச,
“சுவேதா… நீ…” என்று விமல் இடையில் என்னவோ சொல்லவர,
“விமல், இரு… நீ எதுவும் பேசவேணாம்…” என்று அவனிடம் சொல்லிவிட்டு,
“ஏய்… உனக்கு இப்போ என்ன வேணும்… சொல்லிட்டு கிளம்பு…” என்று எரிச்சலாக சொல்ல,
“ஹ்ம்ம்… உனக்கு ரெண்டு அல்லக்கைகள் வேறயா…” என்று அவர்களையும் இழுக்க,
மதுவோ, நொடி நேரத்தில் எழுந்து, அவளை அறைய போக,
நண்பர்கள் இருவரும் பதறி மதுவை இழுத்து உக்காரவைக்க,
ஷாக்கில் இருந்த ஸ்வேதாவோ, “என்னைய அடிச்சிடுவியா நீ…” என்று ஆங்காரமாக கத்த,
கஃபேவில் இருந்த மற்ற நபர்கள், இவர்களின் சண்டையை வேடிக்கை பார்க்க,
“நீ இப்போ என் கையாள அடி வாங்கிட்டு தான் போக போற…” என்று மதுவும் விடாமல் அவளை தீயாய் முறைக்க,
“ஸ்வேதா… எதுக்கு இப்போ தேவையில்லாம வந்து, இப்படி பண்ணுற… கிளம்பு ப்ளீஸ்…” என்று விமல் பொறுமையா அவளிடம் சொல்ல,
“ஹா ஹா… நான் தேவையில்லாம பேசுறேன்னு யாரு சொன்னது… நம்ம கம்பெனி குரூப் டெக்ஸ்ட் அண்ட் போட்டோஸ் எல்லாம் நீங்க இன்னும் பாக்கலையா?…” என்று நக்கல் சிரிப்புடன் கேக்க,
“நாங்க பாத்துக்குறோம்… நீ கிளம்பு முதல்ல…” என்று ரேகா இப்போது சொல்ல,
நீயா என்று அவளை அலட்சியமாக பார்த்து,
“ப்ரகதீஷை கைக்குள்ள போட்டுக்கிட்டதுனால தான் உனக்கு நியூ ப்ராஜெக்ட் கிடைச்சிருக்கு போல…” என்று குரூரமாக மதுவிடம் கேட்க,
“ஏய்… நண்பர்கள் பிடித்திருந்ததை மீறி மது அவளை அடிக்க கையோங்க…”
இம்முறை அதை தடுத்து, மதுவின் கையை பிடித்திருந்தான் பிரகதீஷ்.
அவளின் கையை விடாமல், “மது என்ன பண்ணிட்டு இருக்க…” என்று அவளை கடிந்துவிட்டு,
ஸ்வேதாவிடம் திரும்பி, “உன்னைய அடிக்குற அளவுக்கு மது வந்திருக்கானா… கண்டிப்பா நீ எதோ அவளை பேசியிருக்க…” என்று அவளை கூர்மையாக பாத்து சொல்லி,
“இருந்தாலும், அவ உன்னை அடிக்க வந்தது தப்பு தான்… அதுக்கு சாரி…” என்று அவளிடம் மறுபடியும் சொல்லிவிட்டு,
அவனுடைய தண்ணீர் பாட்டில்லை அவளின் கையில் திணித்து, அங்குள்ள சேரில் அமர வைத்தான்.
அவள் கொஞ்சம் குடித்து சற்று தெளிய,
“ஆபீஸ்ல உள்ள எல்லார்கிட்டயும் சண்டை போட்டு வச்சிருக்கியா…” என்று கேட்க,
“ஆமா, சண்டை போடுறது தான் எனக்கு வேலை பாரு… அவளுக்கும் எனக்கும் ஒரு ப்ரொஜெக்ட்ல சேர்ந்து ஒர்க் பண்ணும் போது முட்டிகிச்சு… அதுலேருந்து எனக்கும் அவளுக்கும் செட் ஆகாது…” என்று எரிச்சலாக சொல்ல,
“எதுக்கு அந்த பொண்ணை அடிக்க போன?… என்னவா இருந்தாலும் இருக்கட்டும்… அதுக்குன்னு அடிப்பியா?…” என்று அவளிடம் கடிய,
” இப்படி அந்த மதனை அடிச்சதுக்கு அவன் என்ன பண்ணிருக்கான் பாத்தியா…” என்று பிரகதீஷ் அவளிடம் கேட்க,
“என்ன?…” என்று ஒன்றும் புரியாமல் அவனை பார்க்க,
“நீ இன்னும் பாக்கலையா?…” என்று அவன் கேட்க,
மண்டையை மட்டும் இல்லை என்பது போல் ஆட்ட,
அவனின் போனிலிருந்து அந்த போட்டோவை காமிக்க,
அவர்கள் கம்பெனியின் பிரான்ச்க்கென்று உள்ள வாட்ஸப் குரூப் முதல் குரூப் ஈமெயில் வரை, இவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் தான் ஆக்கிரமித்திருந்தது.
“ட்ரெண்டிங் கப்பில் ” என்ற ஹாஷ்டேக் போட்டு, அவர்கள் இருவரும் ரொமான்டிக்காக இருப்பது போல் மார்பிங் செய்து அச்சு அசலாக உருவேற்றி, அது ப்ரகதீஷின் கேபினில் இருப்பது போன்று நிறைய போட்டோக்கள் இருந்தது. அதில் சொறுகளாக மது அவனின் கேபின் நுழைவது வீடியோவும் சேர்ந்து இருந்தது.
இதில் போட்டோவை பதிவேற்றி இறுதியில், “அப்போ கேபின்க்குள்ள இதுதான் நடக்குது போல ” என்று முடிவடைந்தது.
அதை மது பார்த்துவிட்டு, கண்களை அகலவிரித்து, பிரகதீஷை பார்க்க,
“எதுக்கு இப்போ இப்படி பாக்குற…” என்று அவளிடம் கேட்க,
பின்பே தன் சுயம் பெற்று, “அவனை என்ன பண்ணுறேன்னு பாரு” என்று சொல்லி சீற்றத்தோடு எழ,
அவளை எழ விடாமல் தடுத்து, “இப்போ நீ போயிட்டு, அவனை திரும்ப அடிக்கப்போறியா?… ஏற்கனவே நீ அடிச்சதுக்கு தான் அவன் இப்படி பண்ணிருக்கான்…” என்று பேச,
“அப்போ அவனை அப்படியே விட சொல்லுறியா…” என்று காட்டமாக கேட்க,
“நான் உங்கிட்ட அப்படியே விடுன்னு சொன்னேனா?…” என்று இவன் கேட்க,
“பச்… இங்க கம்ப்லைன் பண்ணுனா, எப்படியும் அவன் தப்பிச்சிடுவான்…” என்று சலிப்பாக சொல்ல,
“தெரியும் நான் பாத்துக்குறேன் இதை…” என்று அவன் அலட்டிக்காமல் சொல்ல,
“நீ என்னத்த பாக்க போற…” என்று கேட்டுவிட்டு, பின்பு தான் நினைவு வந்தவளாக,
“எதுக்கு என்னைய கூட்டிட்டுவந்த… நானும் அப்படியே வந்துட்டேன் பாரு…” என்று அவளுக்கு அவளையே ஏசி,
“இதுக்கு இன்னும் இட்டுக்கட்டி பேசுவாங்க…” என்று அவனையும் சாட,
“எப்படியும் நீ இதை பாத்துட்டு வந்து இந்நேரம் என்கிட்ட தாம்தூம் கூதிப்பியேன்னு நினைச்சி உன்னைய பாத்தேன், நீ உன் சீட்ல காணும்… அதான் கஃபேக்கு வந்தேன்” என்று சொல்லி முடித்து அவளை பார்க்க,
“உனக்கு என்னைய பார்த்தா எப்படி தெரியுது…” என்று அவனை முறைத்து கேட்க,
“இதுக்கெல்லாம் பதில் சொல்லற அளவுக்கு நாம இன்னும் நெருக்கம் ஆகல…” என்று அவன் கூலாக சொல்ல,
“டேய்…” என்று சொல்லி பல்லைக்கடிக்க,
“சரி… வா மீட்டிங் ஹாலுக்கு போலாம்… ” என்று சொல்ல,
“இப்போ என்ன மீட்டிங்… நான் வரல எங்கயும்…” என்று சொல்லிவிட்டு,
“நானே இதை என்ன பண்றதுனு யோசிக்குறேன் ” என்று படபடவென்று சொல்ல,
“நீ ஒன்னும் பண்ணவேணாம்… நீ வா என்கூட…” என்று அவளின் கையை பிடித்து எழுப்ப,
“ஏய்… நீ இன்னைக்கு ரொம்ப அட்வான்டேஜ் எடுத்துக்குற… நான் எதோ மூட் ஆஃப் இருக்கறதுனால, உன்னை ஒன்னும் சொல்லாம இருக்கேன்… அதுக்காக நீ என் கையை பிடிப்பியா… விடுடா…” என்று அவனிடமிருந்து கையை உருவ,
“உன் வாய் எங்காவது அடங்குதா… போதும் வாடி… போயிட்டு வந்து வச்சுக்குவோம் நம்ம பஞ்சாயத்தை…” என்று அழைத்துக் கொண்டு மீட்டிங் ஹாலிற்கு சென்றான்.
அவளின் கையை பிடித்துக் கொண்டே அந்த ஹாலினுள் நுழைய, அங்கு ஆபீஸ் ஸ்டாப் அனைவரும் குழுமியிருந்தனர்.
இவர்கள் வருவதை ஒருசிலர் ஆச்சிரியமாகவும், சிலர் ஆராய்ச்சியாகவும் பார்க்க, அவர்களுடன் இருந்த மதனோ, அதிர்ச்சியாக பார்த்தான்.
டைஸில் ஏறிய பிரகதீஷ், மதுவுடன் நின்றுகொண்டே,
“நேரா விஷயத்துக்கே வந்திருறேன்… உங்களுக்கே தெரிஞ்சிருக்கும் என்னனு…” என்று சொல்லிவிட்டு அனைவரையும் பார்க்க,
மதுவோ யாரையும் திரும்பி பார்க்காமல் பிரகதீஷை மட்டுமே பார்த்தாள்.
ஸ்டாப் அனைவரும் ஆர்வமாக பார்க்க,
நான் வந்த அன்னைக்கே சொல்லிருந்தா, மதன் இவ்வளோ கஷ்டப்பட்டு மார்பிங் வேலையெல்லாம் செய்து எங்களை ரொமான்டிக் காமிச்சிருக்க வேண்டிருக்காது.
“நாங்களே போஸ் குடுங்கன்னு சொல்லிருந்தா கூட குடுத்துருப்போம்…” என்று சிரித்து,
பட் “ரியல் விட இந்த ரீல் பிக்ஸ் கூட ரொம்ப நல்லா இருக்கு… வாழ்த்துக்கள் மதன்… பெரிய வேலையெல்லாம் பண்ணிருக்கீங்க…இதுல கேப்ஷன்ஸ் வேற… இந்த வேலை வச்சே பொழச்சிப்பிங்க போல…” என்று அவனை நோக்கி சொல்ல,
அவனோ பதில் சொல்ல முடியாமல் அதிர்ந்து விழிக்க,
கூட்டத்தில் சலசலப்பு எழும்ப,
“ஒகே கைஸ்… திஸ் ஐஸ் மை வைஃப், மதுரவாணி ஈஸ்வரன் அலைஸ் ப்ரகதீஸ்வரன்.” என்று சொல்லிவிட்டு,
“என்னோட அத்தை பொண்ணு தான் இவங்க, கல்யாணம் ஆகி ஒன்றவருஷம் கிட்ட ஆகபோதுன்னு நினைக்கிறேன்…” என்று சொல்லி,
“அப்படிதானே மது?…” என்று அவளையும் பேச்சில் இழுக்க,
அவளோ ஒன்றும் பதில் சொல்லாமல் மண்டையை மட்டும் ஆட்ட,
“இப்போ எல்லாம் கிளியர் தானே…” என்று கேட்டுவிட்டு,
“தேங்க்ஸ் போர் கமிங்…” என்று தன் உரையை முடித்து,
“லாஸ்ட் ஒன்னு மட்டும் சொல்லிடுறேன்” என்று சொல்லி,
“இப்போ நாங்க ரியல் கப்பில், அதுனால எங்களுக்கு பெருசா எதுவும் நடக்காம விட்டாச்சு… இதுவே உங்கள்ள வேற யாருக்காவது இது மாறி தப்பா சித்தரிச்சி காட்டினாங்கன்னா என்ன பண்ணிருப்பீங்க…” என்று முடித்துவிட்டு,
“பண்ணுனது யாருன்னு உங்க எல்லாருக்குமே நல்லா தெரியும்… இது அறியாமைல செய்யுற விஷயமும் இல்ல… சோ, நீங்களே என்ன பன்னுறதுனு சொல்லுங்க…” என்று பிரகதீஷ் சொல்லி, மதுவுடன் அந்த ஹால்லிருந்து வெளியேறினான்.