கார் அங்கிருந்த அடுக்குமாடி குடியிருப்புக்குள் புகுந்து, லாவகமாக அவனின் பார்க்கிங் லாட்டில் வந்து நின்றது.
காரில் இருந்து இறங்கும் முன், பிரகதீஷ், “வா மது… வீட்டுக்கு போலாம்…” என்று அழைக்க,
அவள் ஒன்றும் சொல்லாமல் அவனை பார்க்க,
“இங்க பாரு மது… பேசுனாதான் என்ன ப்ரோப்லேம்ன்னு சார்ட் அவுட் பண்ண முடியும்… இப்படி எவ்வளோ நாளைக்கு என்னை முறைச்சிட்டே இருக்க போற சொல்லு…” என்று அவளிடம் கேட்டு,
“என்னவா இருந்தாலும் பரவால்ல… இன்னைக்கு நாம பேசிடலாம்…” என்று காரிலிருந்து இறங்கி வந்து அவளின் பக்க கதவை திறந்து விட,
யோசனையுடனே இன்று தானும் அவனிடம் பேசி புரியவச்சிடலாமென்று நினைத்து, இறங்கி அவனுடன் சென்றாள்.
லிப்ட்டில் நான்காம் தளத்தைஅடைந்து அவனின் வீட்டை அடைய,
“மது வா…” என்று அவளை அருகில் அழைத்து, வீட்டின் சாவியை அவளின் கையில் திணித்து, அவனும் சேர்ந்து பிடித்து கொண்டு, வீட்டை திறந்து இருவரும் ஒன்றாக அடியெடுத்து வைத்து உள்ளே சென்றனர்.
அவன் இப்படி செய்வானென்று அவள் எதிர்பாக்கவே இல்லை… முதலில் அதிர்ந்து அடுத்து, மிகவும் குழம்பிய மனநிலையில் அவள் உள்ளே வந்து அப்படியே நிற்க,
“மது… என்ன யோசனை…” என்று அவளின் தோலை தட்ட,
“ஹாங்…” என்று அவனை விழித்து பார்த்தாள்.
“என்ன யோசனை…” என்று அவளிடம் கேட்டுவிட்டு,
“வீடு எப்படி இருக்குனு பாக்கலையா?… நான் மட்டும் இருக்கறதுனால திங்ஸ் அவ்வளோ இருக்காது… நீ இங்க வந்ததுக்கு அப்பறம், நாம என்ன வாங்கணும்னு பாத்து வாங்கிக்கலாம்…” என்றான்.
அவனின் இந்த அதிரடியான பேச்சில், இன்னும் திகைத்து விழித்தாள் பாவை.
அதிசயமா வாய் பேசாமல், யோசனையுடனே இருக்கும் மனைவியை நோட்டமிட்டபடி, “எதுக்கு இப்போ இப்படி முழிச்சிட்டு நிக்குற…”
“நீ வீடு எப்படி இருக்குனு பாரு… நான் நமக்கு குடிக்க ஏதாவது எடுத்து வரேன்…”
“என்னை உங்களுக்கு பிடிக்குமா…” என்று குழப்பமாக கேட்க,
“பொண்டாட்டியை பிடிக்காம இருக்குமா…” என்று அவளின் முகபாவனையை அவதானித்துக் கொண்டே கேட்க,
“ஆங்… ஆமா…” என்று சொல்லியபின்பு,
“ஆங்… இல்ல இல்ல…” என்று இப்போது மாற்றி சொல்லி அவனை பார்க்க,
“இவ என்ன யோசிச்சி இப்படி குழப்பிக்குறான்னு ஒன்னும் தெரியலையே… இதுல மரியாதையாய் வேற பேசுறா!…” என்று மனதில் அவனும் எதோ ஒரு யோசனையுடன் அவளை பார்த்து,
“உனக்கு எப்படி நம்ம கல்யாணம் நடந்துச்சின்னு தெரியுமா?…”
“அது… தாத்தாவோட ஆசை…” என்று யோசனையுடனே அவனை பார்த்து சொல்ல,
“அப்போ அது மட்டும் தான் உனக்கு தெரியும்…”
அவள் அவனையே பார்த்து நிற்க,
“அப்பாவும், அத்தையும் ஒரே வயத்துல பிறந்தவங்க கிடையாது… தெரியுமா உனக்கு…” என்று கேட்டு கேள்வியாக அவளை பார்க்க,
“ம்… தெரியும்… மாமா சின்னபுள்ளையா இருக்கும் போது, பெரிய பாட்டி இறந்துட்டாங்க. அதுக்கப்பறம் சின்ன பாட்டியை கல்யாணம் பண்ணிகிட்டாங்க தாத்தா…” என்றாள்.
“அதே தான், எங்க அப்பா முதல் தாரத்துக்கு பொறந்தவங்கன்னு, சின்ன ஆச்சி வேற்றுமை காட்டினதே இல்ல… அவங்க இருந்த வரைக்கும் சமமா தான் வளத்தாங்க… அவங்க கிட்ட இருந்த அந்த பாங்கு தான், தாத்தா அவங்க இறந்த பின்பும் அவங்களோட தாலியை எப்பவும் அவங்க நினைவா தன்னோடவே வச்சிருந்தாங்க…”
“அந்த தாலி தான், அன்னைக்கு நான் உன் கழுத்துல போட்டது…”
மது, “தெரியும்… பாட்டி தாலின்னு…”
“சரி, நல்லது… அப்பறம் அத்தை கல்யாணம்?…” என்று அவன் இழுக்க,
“எங்க அம்மாவும் ரெண்டாம் தாரம் தான்…” என்று கீழே குனித்துக் கொண்டு சொல்ல,
“நீ கீழே குனிஞ்சி சொல்லுற அளவுக்கு, இது ஒன்னும் தப்பான விஷயம் கிடையாது…”
“தெரியும்… இருந்தாலும் அம்மா இதுனால எவ்வளோ பேச்சு வாங்கிருக்காங்க…”
“ஊருல அநேகம் பேரு, ஆயிரம் பேசுவான்… அவனையெல்லாம் நம்மால ஒன்னும் பண்ணமுடியாது…”
“ஹ்ம்ம்…”
“அத்தை அவங்க வாழ்க்கையை ரொம்ப சந்தோசமா தான் வாழ்ந்தாங்க… உண்மை தானே…”
அவள் வேகமாக மண்டையை ஆட்ட,
“அப்பறம் எதுக்கு, மத்தவங்க பேசுறதுக்கு முக்கியத்துவம் குடுக்குற?…”
அவள் மௌனமாக இருக்க,
“அத்தையோட முதல் கணவருக்கு கல்யாணம் நடக்குறதுக்கு முன்னாடியே, உடம்புல பிரச்சனை இருந்திருக்கு, அதை மறச்சி தான் கல்யாணம் பண்ணிருக்காங்க… அவரோட ஆயுசு, அவர் கல்யாணம் நடந்து பத்து நாளுல போகணும்னு இருந்திருக்கு… அதுக்கு அத்தை என்ன பண்ணமுடியும்?…”
“ஊர் பேச்சை கேட்டுட்டு அத்தைக்கு கல்யாணம் பண்ணாம விட்ருந்தாலும், தங்கையை வீட்டுல வச்சிட்டு, அண்ணங்காரன் மட்டும் குழந்தை குட்டியோட நல்லா வாழுறன்னு பேச தன் செய்யும்…”
“பட் இந்த காரணத்தால் தான் அத்தை அப்படி அன்னைக்கு ரொம்ப பயந்துட்டாங்க போல…” என்று முடித்தான்.
அவன் சொல்வதை எல்லாம் கேட்டவள்,
“எங்க அப்பா எப்பவும் கிரேட் தான்… அவங்கள ஏன் அந்த கடவுள் சீக்கிரமா அழைச்சிக்கிட்டார்னு தெரியல…” என்று வெறுமையாக சொல்ல,
“உனக்கு உங்க அப்பாவை ரொம்ப பிடிக்கும்ல…”
“ஆமா… அம்மாவை விட அப்பாதான் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்… ரொம்ப ஜாலி அவங்க…” என்று தந்தையுடன் இருந்த நாட்களை அசை போட்டுக்கொண்டே சொல்ல,
“ஆனா நான் பிப்த் படிக்கும் போது போதே என்னை விட்டுட்டு போயிட்டாங்க…” என்று அன்றைய நினைவில் இன்றும் கண்கலங்க,
“பச் மது… எப்பவும் உன்னை பாத்துட்டே தான் இருப்பாங்க, இருக்காங்க இப்பவும்…. அழாத, கண்ணை தொட…” என்று அதட்ட,
சற்று நேரம் கழித்து, அவளும் கண்ணை தொடைத்துக்கொண்டு, அவனை பார்த்து,
“அம்மா எதுக்கு பயந்தாங்க…” என்று அவன் இறுதியாக பேசியதை கேட்க,
“அத்தைகிட்ட யாரோ உன்னை ரெண்டாம் தாரமா கல்யாணம் கட்டிக்க கேட்ருக்காங்க…” என்று அவன் சொல்லிக்கொண்டிருக்க,
அவளின் கண்கள் அதிர்ச்சியில் பெரியதாய் விரிய,
அவனும் அவளை பார்த்துக்கொண்டே,
அத்தை முடியாதுன்னு சொல்லிட்டாங்க போல, அதுக்கு அவங்க,
“நீ பொறந்ததும் ரெண்டாம் தாரத்துக்கு தான், நீயும் ரெண்டாம் தாரம் தான், ஏன் உன் பொண்ணை ரெண்டாம் தாரமா குடுக்குறதுக்கு என்ன… கண்டிப்பா சொல்லுறேன் உன் பொண்ணும் ரெண்டாம் தாரமா தான் போவா… இல்லனா வாழாவெட்டியா உன்கூட தான் இருப்பான்னு சாபம் விட்டுட்டு போயிருக்காங்க…”
“அவங்க பேசிட்டு போனதுல இருந்து, அத்தை பயம் வந்துருச்சி போல… எங்க உனக்கும் அப்படி எதுவும் ஆகிடுமோன்னு… தாத்தாகிட்ட சொல்லி அழுத்திருக்காங்க… நீங்க இருக்கும் போதே அவளுக்கு ஒரு கல்யாணம் பண்ணி வச்சிடுங்கன்னு…”
“அத்தை சொல்லி அழுததை பார்த்து தாங்க முடியாம தான், தாத்தாக்கு அன்னைக்கு உடம்பு முடியாம போயிடுச்சி…”
“தாத்தா எனக்கு எதுவுமாகுறதுக்கு முன்ன, பேத்திக்கு நல்ல வாழ்க்கை அமைச்சி தரணும்னு, அவசரமா அப்பாகிட்ட, அத்தை சொன்னதெல்லாம் பேசி அபிப்பிராயம் கேட்ருக்காங்க…”
“அப்பாக்கு இதுல ரொம்ப சந்தோசம் தான்… அதுனால எந்த எதிர்ப்பும் சொல்லல…”
“நானும் அப்போ ஊருக்கு வந்திருந்தது, அவங்களுக்கு சாதகமா போயிடுச்சி… ஒரு நாளுல எல்லா ஏற்பாட்டையும் செஞ்சிட்டு, மறுநாள் நம்ம ஊரு கோவிலுள்ள தாத்தாவோட ஆசைப்படி பாட்டியோட தாலியைதான் உனக்கு போட்டேன்…” என்று சொல்லிவிட்டு அவனை பார்த்தான்.
மதுவிற்கு, “அவன் சொன்னதையெல்லாம் கேட்டு மிகுந்த அதிர்ச்சிதான்… இதெல்லாம் அவளுக்கு ஒன்றும் தெரியாது…”
“கல்யாணத்திற்கு முதல் நாள் இரவு, அன்னை அவளிடம் வந்து தாத்தாவின் கடைசி ஆசை இந்த திருமணம், முடியாதுன்னு மட்டும் சொல்லிடாதே, என்று வேண்டிக்கொண்டு கேட்டது மட்டும் தான் தெரியும்… அவளும் எதிர் வாதம் புரியாமல், தாத்தாவின் ஆசையை நிறைவேற்ற சம்மதம் சொன்னாள்.”
சிறிது நேரம் மௌனத்திற்கு பிறகு,
“நீ… நீங்க ஏன் சம்மதம் சொன்னிங்க?…” என்று மது அவனிடம் கேட்க,
“ஏன்னா?… எனக்கு மறுக்குறதுக்கு ஒரு காரணமும் இல்ல…” என்றான் தோலை குலுக்கி,
“என்ன!…” என்று இவள் திடுக்கிட்டு பார்த்து,
பின்பு இவளே, “இல்ல இல்ல… நீங்க இதுக்காக எல்லாம் இப்படி பொய் சொல்லவேணாம்… நீங்க நீங்க…” என்று ஒரு நிமிடம் இடைவெளி விட்டு,
“ஆ… அன்னைக்கு சொன்னிங்களே…. தெரியாம தாலியை கட்டினேன்னு… அதுனால நீங்க, என்னை பத்தி எல்லாம் யோசிக்க வேணாம்… உங்களுக்கு பிடிச்சவங்க கிட்ட திரும்ப கல்யாணம் பண்ண கேளுங்க…” என்று படபடவென்று சொல்ல,
“இப்போ யாருகிட்ட நான் கல்யாணம் பண்றதுக்கு கேக்கணும்னு நீயே சொல்லிடு…” என்று இலகுவாக கேட்டுவிட்டு அவளை பார்க்க,
“அவள், என்ன இவன் என்னையே கேக்குறான்…” என மனதில் நினைத்து அவனை பார்க்க,
“என்ன பார்வை வேண்டிக்கிடக்கு… சட்டுனு சொன்னதானே நான் அவங்ககிட்ட கேக்கமுடியும்…”
“ஹான்… அது வந்து, நீங்க தான் வாக்கு குடுத்துருக்கீங்களே?… அப்பறம் எதுக்கு என்கிட்டே கேக்குறீங்க?…” என்று வீரப்பாக கேட்க,
“ஓகே… பூனைக்குட்டி வெளிய வருது…” என்று எண்ணிக்கொண்டே,
“நான் வாக்குக்கொடுத்ததை நீ எப்போ பார்த்த?… எனக்கே மறந்துடுச்சே… என்ன பண்ணலாம்?…” என்று அவளிடமே கேட்க,
“சும்மா… இப்படிலாம் தெரியாத மாறி நடிக்க வேண்டாம்… நீங்க உங்க அக்காவோட நாத்தனார் கனிமொழி கிட்ட சொல்லல… எனக்கு எல்லாம் தெரியும்…” என்று கோவமாக சொல்ல,
அவள் முழுதாக சொன்னாள் தான் என்ன நடந்ததுவென்று தெரியும் என்றெண்ணி,
“ஹ்ம்ம்… அப்பறம் வேற என்னலாம் தெரியும்ன்னு சொல்லிடு…” என்று அவளை இன்னும் சீண்ட,
“உங்களுக்கு கனிமொழியை ரொம்ப பிடிக்கும்… அவளை பாக்குறதுக்காகவே உங்க அக்கா வீட்டுக்கு அடிக்கடி போவீங்க… அப்பறம் தீடிர்ன்னு நமக்கு கல்யாணம் நடந்ததுனால, அவங்க உங்க கிட்ட வந்து, என்னை ஏமாத்திட்டியேன்னு அழ, நீங்க கண்டிப்பா உன்கூட தான் வாழ்வேன்னு வாக்கு கொடுக்கல…” என்று மூச்சுவாங்க முழுதாக சொல்லி முடித்தாள்.
அவனோ எந்த வித உணர்வுகளும் வெளியிடாமல் அமைதியாக அவளை பார்த்துக்கொண்டிருந்தான்.
“என்ன எல்லாம் சரியாய் சொல்லிட்டேனா?…” என்று கேட்டுவிட்டு அவனை பார்த்து,
“அதுனால சும்மா… எனக்காக, எங்க அம்மாக்காகவெல்லாம் நீங்க பாக்கவேணாம்… நான் அவங்களை சமாளிச்சிக்குவேன்…”
“நீங்க அவ கூட சந்தோசமா வாழுங்க… நான் உங்க வாழ்க்கையில எப்போதும் குறுக்கிடமாட்டேன்… அதான் மியூசிச்சுவல் டிவோர்ஸ் பேப்பர்ல கூட சைன் பண்ணிகுடுத்துட்டேன் அவங்க கிட்ட…” என்று இறுதியாக முடித்தாள்.
அவள் சொன்னதை கேட்டு, அவளையே உறுத்து விழித்து பார்த்து, “இவளையெல்லாம் என்ன செய்யிறது…” என்று முறைத்து, பின்பு தன்னை கட்டுக்குள் கொண்டுவந்து,
நிதானமாக, “இந்த பேப்பர்ல எல்லாம் எப்போ சைன் போடு கொடுத்த?…” அவளிடம் கேட்க,
“அவங்க ஒரு நாள் வந்து என்கிட்டே சொல்லி அழுதாங்க… என் வாழ்க்கையே பிரகதீஷ் மட்டும் தான்… அவன் இல்லாம, நான் உயிரோட இருந்து என்ன ப்ரயோஜனம்னு சொல்லி அழுதாங்க… அதான் போட்டு குடுத்தேன்…”
“ஓஹ்… அவங்க அழுததும், நீங்க ரொம்ப தியாகி மாறி சைன் போட்டு குடுத்துருக்க…”
“ஆமா… அவங்க லைப் இது, அதை நான் பரிச்சிகிட்டா அது தப்புத்தானே…” என்று நியாயம் பேச,
“எனக்கு ஒரு டவுட்… அது எப்படி உங்கிட்ட பேச வரும் போதே, இப்படி டிவோர்ஸ் பேப்பர்லாம் ரெடி பண்ணி எடுத்து வந்து பேசுவங்களா?…”
அவளோ என்ன சொல்வதென்று தெரியாமல் முழிக்க,
“நீயெல்லாம் படிச்சி வேலை பாக்குறேன்னு வெளில போய்ட்டு சொல்லிடாத… படிக்காதவங்க கூட எல்லாம் தெரிஞ்சி வச்சிருப்பாங்க… நீ என்ன பண்ணிருக்கனு தெரியுதா?…”
“உங்களுக்கு கனிமொழியை பிடிக்காம போயிட்டா?…”
“மண்ணாங்கட்டி… இவளை என்ன பண்ணலாம்… மூளையில்லாத முட்டாள், முட்டாள்…” என்று அவளை வாய்க்குள் நன்றாக திட்டி,
“பெரிய இவ மாறி அன்னைக்கு அந்த மதனை அடிக்கவெல்லாம் தெரிஞ்ச இவளுக்கு, ஒருத்தி அழுது பேசுனா உண்மைன்னு நம்பிடுவாளா… அவ்வளோ பேக்கா இவ…”என்று அவளை மனதில் வறுத்தெடுத்து,
“இந்த லீலா என்ன வேலையெல்லாம் பாத்து வச்சிருக்கா… இருக்கு அவளுக்கு… வரட்டும் நாளைக்கு… ஒரு வழியாக்குறேன்…”
“பிரகதீஷ்… காம் டௌன்… காம் டௌன்…” என்று அவனுக்கு அவனே சொல்லி அவனின் எரிச்சலை குறைக்க, சோபாவில் இருந்து எழுந்து அங்கும் இங்கும் நடக்க ஆரம்பித்தான்.
இவளுக்கு இங்கே இன்னும் ஒன்றும் புரியவில்லை அவனின் செயலில்.
கொஞ்சம் நேரம் சென்று, “சரி… இதுனால தான், என்னை தெரிஞ்சும் கண்டுக்காம இருந்து எக்ஸ்ட்ரா, எக்ஸ்ட்ரா பண்ணதுக்கு எல்லாம் காரணம்?… அப்படி தானே?…”
அவளின் மண்டை, இப்போது மேலும் கீழுமாக ஆடி ஆம் என்றது.
“ரைட்! இவ்வளோ பண்ணிருக்கியே, என்கிட்ட ஏன் ஒன்னும் கேட்கவோ இல்ல சொல்லவோ செய்யல…”
“அது தான்… அதே தான்… உங்கிட்ட ஒழுங்கா பேசாம விட்டேன் பாத்தியா… நான் சொதப்புன விஷயம் அது தான்…”
“என்னால முடியல… மூளை ரொம்ப சூடாக்கிட்டு எனக்கு… சில்லுனு எதையாவது குடிச்சிட்டு பேசலாம்…” என்று அவளிடம் சொல்லிக்கொண்டே கிட்சேனுள் சென்றான்.
இவளும் ஒன்றும் சொல்லாமல் அவனின் பின்னே சென்றாள்.
அடுத்து?..
பார்வை வீசும்…
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.