“என்ன தாயி… எதுக்கு நாளை வளத்தணும்னு தான் இன்னைக்கே வந்துட்டோம்… வேற ஒண்ணுமில்ல…” என்றார் சந்தானம்.
“அதான் உங்க அண்ணன் பதில் சொல்லிட்டாங்களே… போங்க கிளம்பி வாங்க…”
“நான் என்னத்த கிளம்ப போறேன்…” என்று சொல்லிக்கொண்டே, அறையில் இருந்த மதுவிடம் சென்று விஷயத்தை சொல்லி, அவளை துரித படுத்திவிட்டு, அடுத்து சமயலறைக்கு சென்று அவர்களுக்கு காபியுடன் வந்தார்.
அடுத்து சில பல நிமிடங்கள் கடந்து, பிரகதீஷின் இல்லத்திற்கு புறப்பட்டனர்.
அவனின் அடுக்கு மாடி குடியிருப்புக்குள் நுழைந்து, அவனின் வீட்டிற்கு பிரகதீஷின் அப்பா, அத்தை, மாமா மூவரும் பேசிக்கொண்டே முன்னே செல்ல, ஒரு அடி இடைவெளி விட்டு அவர்களை பின் தொடர்ந்தனர் கணவனும் மனைவியும்.
“வீட்ல தான் இருக்காங்க, அம்மாவும், என் கூட பிறந்தவளும்… உன்னைய கூப்பிட வரும் போது, ஏழரைய ஏன் கூட்டிட்டு வரணும் தான், கூட்டிட்டு வரல…”
“பட் வீட்டுல என்ன நடந்தாலும், நான் உனக்கு இருக்கேன்… நீயாவது எதையாவது யோசிச்சி, என்னவாது அதிகப்ரசங்கி தனமா, தியாகி மாறி பேசி வைக்காத, இப்போவே சொல்லிட்டேன்…”
அவன் சொல்லியதை கேட்டு, அவள் முறைத்து பார்க்க,
“முறைச்சிட்டா டா, முறைப்பின் மன்னி…” என்று சொல்லி, அவளை பார்த்து அவனும் முறைத்து வைத்தான்.
மனோகர், “மாப்பிளை இந்த ஆரத்தி எல்லாம் எடுக்க வேணாமா…”
“அட நீங்க வேற, சும்மா இருங்க மாமா… அவங்களை எடுக்க வைக்க வேணாம்…” என்று சொல்லிக்கொண்டே, கதவை திறந்து, மதுவுடன் சேர்ந்து உள்ளே நுழைய, மற்றவர்கள் தொடர்ந்து உள்ளே வந்தனர்.
உள்ளே நுழைந்தவர்களை பார்த்ததும், இரு பெண்களும் அதிர்ந்து விழித்தனர்.
முதலில் சுதாரித்த காமாட்சியோ, தயக்கமேதும் இல்லாமல், படீரென்று வந்து வாணியின் கையை பிடித்துக் கொண்டு,
“இந்த அத்தையை மன்னிச்சுடு சாமி… எதோ புத்திகெட்டு, பேச கூடாத வார்த்தையெல்லாம் பேசிப்புட்டேன்… மனசுல ஒன்னும் வச்சிக்காத தாயி…” என்று அவளிடம் வேண்ட,
மதுவுக்கோ இவரின் பேச்சில் தலையை சுற்றிக்கொண்டு வந்தது.
தன்னை எவ்வளவு பேசியிருக்கிறார், ஆனால்! இப்போ, எந்த முகத்தை வைத்து, இப்படி ஒன்றுமே நடவாதது போல் பேசுகிறார் என்று எண்ணிக்கொண்டே, பிரகதீஷை பார்க்க,
அவனோ, அவளை பார்த்து உதட்டை பிதிக்கினான்.
இன்னும் கையை விடாமல், இருந்தவரை பார்த்து, அவரிடம் ஒன்றும் சொல்ல தோன்றாமல், அவரை பார்த்து சிரித்தது போல் முகத்தை வைத்து, கையை அவரிடமிருந்து விலக்கினாள்.
இவள் வந்ததே, பெரிய அதிர்ச்சி என்றால், அடுத்து தன் அன்னையின் செயலை பார்த்து, உச்சகட்ட அதிர்ச்சியில் விழி பிதிங்கி நின்றிருந்தாள் லீலா.
சந்தானம் தன் தங்கையிடம், “ஏதாது இனிப்பு செய்யி தாயி…” என்று பணிக்க,
அவரும் அண்ணனின் சொல்லை தட்டாமல் சமயலறைக்கு சென்றார். அவர் போவதை பார்த்து, காமாட்சியும் அவ்விடம் விட்டு அகன்றார்.
“என்ன லீலா, என்னமோ பகல் கனவு கண்டு, அது நடக்காம போயிடுச்சா…” என்று அவளிடம் நெருங்கி நின்று மனோகர் கேட்க,
“அ… ஆ… ஆஹ்… அது…” என இன்னும் புரிபடாமல் லீலா ஒளர,
“உன்னைய அ னா…லாம் கேக்கல… பாம்பு விஷத்தை கேக்குற மாறி, இப்போ நீயும் இப்போ கக்குற…” என்று அவளிடம் சொல்லிக்கொண்டே, கன்னத்தில் மாறி மாறி அறைய,
“ஏங்க… ஏங்க… ஏன் இப்படி அடிக்குறிங்க…” என்று கன்னத்தை பிடித்துக் கொண்டே பின்னால் போக,
“உனக்கு எதுக்கு நான் அறையுறேன்னு தெரியாதா…சொல்லுடி எல்லாத்தையும்…” என்று முன்னேறி இன்னும் ஒரு அறை விட,
இதனை பார்த்துக்கொண்டிருந்த தந்தையும், மகனும் என்னவென்று ஒரு வார்த்தையும் கேட்கவில்லை.
மதுவிற்கு கூட அதை தடுக்க தோன்றவில்லை. தன்னை பேசிய பேச்சிற்கு, இது தேவையே என்று தான் பார்த்தாள்.
சத்தம் கேட்டு வெளியே வந்த காமாட்சியும், பத்மாவும் ஒரு நிமிடம் அதிர்ந்து, அடிப்பதை தடுக்க வர, அவர்களை பார்த்து, நீங்க தடுக்க வந்திங்கனா, இன்னும் சேர்த்து தான் விழும் என்று எச்சரிக்கை செய்ய,
“ம்… அது… ஒழுங்கு மரியாதையா எல்லாத்தையும் சொல்லுற… இதுல என் தங்கச்சியையும் நீ கூட்டு சேத்துருக்க… அவளுக்கும் ஊருக்கு போயி இருக்கு…”
“ஒரு பொண்ணோட வாழ்க்கையை அவளுக்கே தெரியாம, என்னமா திட்டம் போட்டு வாழ விடாம விரட்டி அடிச்சிருக்க…”
“அந்த பொண்ணு வாழுறதுல உனகென்னடி, அவ்வளோ பொறாமை…”
கணவன் பேசப்பேச ஆத்திரத்துடன், “ஆமா, பொறாமை தான்… எனக்கு பொறாமை தான்…” என்று கத்தினாள்.
“நான், உங்க தங்கச்சியை இவனுக்கு கட்டி கொடுத்து, ரெண்டு வீட்டிலையும், நாம வச்சது தான் சட்டம், நாமளே ராணி மாறி இருக்கலாம்னு, திட்டம் போட்டு வச்சிருந்தா, இவ நோகாம இடையில் வந்தா, நான் பாத்துட்டு சும்மா இருக்கணுமா…”
“அதுதான் என்ன பண்ணலாம்னு யோசிச்சேன்… உன் தங்கச்சிகிட்ட, என் தம்பியை வச்சி ஆசையை காட்டி, அவளை எனக்கேத்த மாறி பழகிகிட்டேன்… அவளும் நான் சொல்லுறதுக்கு முன்னாடியே எல்லா வேலையும் செஞ்சிடுவா… அவளே அவங்க அம்மாவையும் அடக்கிடுவா…”
“நீ காலைல வேலைக்கு போனா, ராவுக்கு தான் வருவ… அதுனால எனக்கு இன்னும் வசதியா போயிடுச்சி…”
“அடுத்து எங்க அம்மா… அது சுத்த சோம்பேரி… எங்க அப்பா லாரிக்கு போனதுனால, அதுக்கு ஒரு வேலையும் கிடையாது… வாய் பேச தான் தெரியும்… நான் கொஞ்சம் கண்ணை கசக்குனே மாறி பேசுனா, அது கொஞ்சம் அடங்கிடும்…”
“இப்படியெல்லாம் யோசிச்சி, இவன்கிட்ட பேசி கல்யாணத்தை நடத்திடலாம்னு நான் யோசிக்கும் போதுதான், இவ குறுக்கால வந்தா… திடீர்ன்னு கல்யாணம் ஆச்சு… அடுத்து அந்த கெழம், மண்டைய போட்டது, எனக்கு நல்லதாயிட்டு…”
“ரெண்டு பேரையும் பேச விடாம, பண்ணி விட்டேன்… அதுல இவன் கொஞ்சம் கோவமா ஊருக்கு போன மாறி தெரிஞ்சது…”
“அந்த சமயத்துல தான், உன் தங்கச்சியை, இவ கிட்ட நான் சொல்லிக்கொடுத்தது போல பேச வச்சி, டிவோர்ஸ்ல கையெழுத்து வாங்க வச்சேன்…”
“டைவோர்ஸ் பத்தி எங்க இவ சொல்லிடுவாளோன்னு, ஒரு பயம்… இவளாவே வீட்டை விட்டு வெளியேறிட்டா, அதை வச்சே, நாம இவளை இங்க வராம பண்ணிட்டு, அவனுக்கு கல்யாணத்த, நடத்தி வச்சிடலாம்னு யோசிச்சேன்…”
“அடுத்து, இவளே வீட்டை விட்டு வெளியே போகணும்னு, நினைக்கும் போது தான், எங்க அம்மா எப்போதும் போல, அவளை வசை பாட ஆரம்பிச்சது… அதை வாய்ப்பா பயன்படுத்தி, இவளோட அந்தங்கறதை பேசுற மாறி பேசி, அடுத்து அவங்க அம்மாவையும் இழுத்து பேசி, அவளை கோவப்படுத்தி வீட்டை விட்டு வெளியே அனுப்பினேன்…”
“இவளும் ஊரைவிட்டே போயிட்டா…”
“எங்க அப்பா, அவ வீட்டை விட்டு போனதை கேள்விப்பட்டு, திட்டிட்டு விட்டுட்டாரு… அது எனக்கு சாதகமா போயிடுச்சி… அடுத்து ஒரு மளிகை கடை இங்கயே உக்காந்துட்டாரு…”
“இவன் ஊருக்கு வரும் போது… இன்னும் அவளை ஏத்திவிட்டு பேசி, கனிமொழியோட கல்யாணத்தை பண்ணிவச்சிடலாம்னு நெனச்சேன்…”
“அதுக்கு தான் எங்க அம்மாகிட்ட கொஞ்சம் நைச்சியமா பேசி, கனிமொழியை பத்தி இவன்கிட்ட பேச சொன்னேன்… ஆனா, அதுக்கப்பறம் அது பதில் ஒழுங்கா சொல்லல…”
“இன்னைக்கு இங்க வரும் போது கூட, இதை ஒரேடியா முடிச்சிடனும் தான் வந்தேன்…” என்று அனைத்தையும் சொல்லி முடித்தாள்.
சிறிது நேரம் அங்கு எவரிடத்திலும் பேச்சே இல்லை…
பளார் என்று அறைந்து,
“ச்ச்சீ… நீ ஒருவேளை செய்யாம சொகுசா வாழுறதுக்கு எவ்வளோ கேவலமான வேலை பண்ணிருக்க…”
“நீ சொன்னா… நான் கேட்ருவேன்ன்னு உனக்கு நினைப்பு வேற இருக்கா…”
“எப்படி வளத்திருக்கிங்கன்னு மட்டும் பாத்துக்கோங்க…” என்று அன்னையையும் விடாமல் சாடி அவளை அருவருப்பாக பார்த்தான், பிரகதீஷ்வரன்.
“தம்பி… சாமி… இதுலாம் ஒன்னும் எனக்கு தெரியாது ப்பா…”
“நான் வாய் பேசியிருக்கேன் தான்,… ஒத்துக்குறேன்… இப்படியெல்லாம் ஒரு நாளும் நினைக்கல ப்பா…”
“உனக்கு பெரிய இடத்துல, கல்யாணம் பண்ணி கொடுக்கணும்னு தான் ஆசை… அதுக்கு தடையா, இவளை கல்யாணம் பணிக்கிட்டதுனால, அதை பொறுத்துக்க முடியாம பேசியிருக்கேன் அவ்வளோதான் சாமி…”
“என்னை நம்பு சாமி…” என்று தன் மகனிடம் மன்றாடினார்.
“மாமா… இவளை நீங்க என்ன பண்ணனும்னு நினக்குறிங்களோ, பண்ணுங்க மாமா…”
“நீங்க என்ன ப்பா, அமைதியா இருக்கீங்க…”
“வாய் பேச முடியாத இடத்துல இருக்கேன் தம்பி… எனக்கு அவகூட இப்படி ஒன்னா இருக்குறதுக்கே அருவருப்பா இருக்கு… எல்லாமே மாப்பிளை இஷ்டம் தான் தம்பி… நான் சொல்லுறதுக்கெல்லாம் ஒன்னும் இல்ல…” என்றார் சந்தானம்.
“இவ பண்ணின காரியத்துக்கு, இவளை போலீஸ்ல பிடிச்சி குடுத்த கூட, இவ சொகுசா தான் இருப்பா மாப்பிளை…”
“உண்ட வீட்டுக்கே கழகம் பண்ணிருக்கா… இவளுக்கு சரியான தண்டனை நான் யோசிச்சிட்டேன் மாப்பிளை…”
“வேலையே செய்யாம சொகுசா இருக்கணும்னு தானே இவ்வளவும் பண்ணிருக்கா…”
“இனிமே நாள் முழுக்க, வேலை செய்யுற மாறி பண்ணிடுறேன்…”
என்ன என்பது போல, பிரகதீஷ் பார்க்க,
“நாலு எரும மாடு, நாலு பசு மாடு வாங்கி இவ தலையில கட்டிடுறேன்… வீடு வேலையோட சேர்த்து அதையும் பாக்கட்டும்…” என்று சொன்னான் மனோகர்.
இதில் எதுலயும் தலையிடாமல் பாத்துக்கொண்டிருந்தனர் மதுவும், பத்மாவும்.
“சரி தம்பி… நாங்க புறப்படுறோம்…” என்று எழுந்தார் சந்தானம்.
“என்னப்பா… நைட் இருந்துட்டு காலைல போலாம்…”
“இல்ல தம்பி வேணாம்… இன்னொரு நாள் பாத்துக்கலாம்…”
“நானும் ஊருக்கு வரேன் அண்ணா, உங்ககூட…” என்று பத்மா சொல்ல,
“ம்மா…” என்று மது என்னவோ சொல்லவர,
அதற்க்கு முன்பே, “வாணி… இந்த மாமா, உங்க அம்மாவை நல்லா பத்துப்பேன்னு நம்பிக்கை இருந்தா, நீ ஒன்னும் பேசக்கூடாது…”
அதற்கு மேல், ஒன்றும் பேச இயலாமல் அமைதியானாள் மது.
சற்று நேரத்தில், அந்த வீட்டில் கணவன், மனைவியை தவிர அனைவரும் கிளம்பிருந்தார்கள்.
அன்றிரவு பிரகதீஷ் பண்ணுன காரியத்தில், அதிர்ச்சி கலந்த ஆச்சிரியதுடன் அவனை பார்த்தாள் மாது.
பார்வை வீசும்…
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.