ஆபீஸ் முடிந்து வீட்டிற்கு வந்த மது, முகத்தை கடுகடுவென வைத்துக் கொண்டே, “நீ வீட்டுக்கு வா… உனக்கு இன்னைக்கு இருக்கு…” என்று பிரகதீஷை வசை பாடிக்கொண்டே, ஹாலில் உள்ள சோபாவில் அமர்ந்தாள்.
மது இந்த வீட்டில் குடிபெயர்ந்து ஒரு மாத காலம் ஆக போகிறது.
இங்கு வந்த பிறகு, அவளின் முகத்தோடு ஒட்டிக்கொண்ட யோசனையுடனே வலம் வந்தாள். அவளின் செயல்களை அவதானித்து கொண்டே இருந்த பிரகதீஷ், அவளிடம் பேச்சு கொடுத்தான்.
“என்ன ஓடுது இந்த மண்டைக்குள்ள?… என்னவா இருந்தாலும் சொல்லு…”
தயங்கி அவனை பார்க்க,
“இங்க பாரு மது… இன்னமும் நீ இப்படியே இருந்தேனா, நான் என்னனு யோசிக்குறது… எல்லாமே ஒளரவுக்கு நாம பேசி, கிளியர் பண்ணிட்டோம்… இதுக்கப்பறமும், என்ன நீ யோசிக்குறேன்னு எனக்கும் புரியல…”
“இல்ல…அது வந்து…” என்று இவள் தடுமாற்றத்துடன் பேச,
அவளின் இந்த இழுப்பில், இவனுக்கு கோவம் தான் வந்தது.
பல்லைக்கடித்துக்கொண்டு, பொறுமை என்று அவனுக்கு அவனே, சொல்லி, அவளை ஆழ்ந்து பார்க்க,
“என்னமோ எனக்கு சொல்ல தெரியல… ஒருவேளை நான் உன்னோட லைப்ல வரலைனா, உனக்கு பிடிச்ச பொண்ணு பாத்து கல்யாணம் பண்ணிருப்ப… அப்படி தானே?…” என்று சொல்லி அவனை பார்க்க,
அவனோ பதில் ஒன்றும் கூறாமல், “மொத்தமா எல்லாத்தையும் சொல்லி முடி…” என்றான்.
“அந்த பொண்ணு கனிமொழி, பாவம் தானே… நான் மட்டும் இடையில வராம இருந்திருந்தா… அந்த பொண்ணை தானே நீ, கல்யாணம் பண்ணிருப்ப?…”
“இருக்குறது ஒரு லைப் தான்… ஒரு வித கம்பல்ஷன் தானே, நம்ம கல்யாணம் நடந்தது… அதுக்கு தான் கேக்குறேன்… ஒரு வேளை அதுனால தான், என் கூட வாழணும்னு யோசிக்குறியோன்னு…” என்று சொல்லி அவனை பார்க்க,
“உன்கிட்ட பிரஷ் போட்டு விலக்காத குறையா சொல்லியும், நீ திரும்ப இப்படி யோசிச்சா… இப்படி பேக்கு மாறி, உன்னால மட்டும் தான் யோசிக்க முடியும்…”
“நீ தானே கேக்க சொன்ன… இப்போ இப்படி சொல்லுவியா நீ?…” என்று கேட்டு முறைக்க,
“ஆமா… ஏதாவது சொன்னா மட்டும் இப்படி உடனே, எகிறிட்டு வர தெரியுதுல்ல… கொஞ்சமாச்சும், ஒழுங்கா அறிவோட யோசிச்சிருந்தனா, உனக்கு இப்படி ஒரு யோசனை வருமா?…”
அவள், அவனையே பார்க்க,
“எனக்கு பிடிக்கலைன்னா… நான் எதுக்குடி, உன்னைய தேடி வரணும்னு யோசிக்க போறேன்… அப்பறம் எதுக்குடி, திரும்ப உன் கழுத்துல தாலின்னு சொல்லி, செயினை போட போறேன்… இதுலாம் கொஞ்சம் கூட யோசிக்க மாட்டியா நீ?…”
“இல்ல… அப்படி இல்ல…” என்று என்னவோ சொல்ல வர,
“யம்மா தாயே… நீ திரும்ப முதல்ல இருந்து ஆரம்பிக்காத…” என்று கும்பிடுபோட்டு,
“இந்த கல்யாணம் நடந்தது வேணும்னா, நீ சொல்லுற மாறி கம்பல்க்ஷன்னு வச்சிக்கிட்டாலும்… எனக்கு பிடிக்காம, நான் உன்னை, என் பொண்டாட்டின்னு நினைக்கல… போதுமா…”
“எல்லாரும் பிடிச்சி, லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கலை… அது மாறித்தான் இதுவும், நமக்கு கல்யாணம் நடந்துச்சி, இயல்பா அதுக்கப்பறம் அந்த பிடித்தம் வந்திருக்கும்… ஆனா, நம்ம கல்யாணமா சூழ்நிலை, ஒழுங்கா அமையல…”
“அதுனால, என்னவோ ஒரு கேப் இடையில வந்துருச்சி… இனிமே இந்த மாறி எதுவும் இல்லாம, புதுசா நம்ம வாழ்க்கையை வாழணும்னு யோசிச்சி தான், நான் அந்த செயினையே போட்டேன்…”
“நம்ம ரெண்டு பேருக்குமே, பிடிச்சி கல்யாணம் பண்ணிக்கலை தான். ஆனா, இனிமே பிடிக்க வச்சிக்கலாம்… அதை தெரிஞ்சிக்கோ…”
“எனக்கு உன்னை எப்பவோ பிடிக்க ஆரம்பிச்சிட்டு…”
“நீ முதல்ல, இந்த கனிமொழி, மணிமொழி எல்லாத்தையும் விட்டுட்டு, என்னை மட்டும் நினை… அப்பறம் என்னை மட்டும் தான் பிடிக்கும்…” என்று கண்ணடித்து,
“நானும் நீயும் தான் இந்த ஜென்மத்துக்கு, வேற ஆப்ஷன் உனக்கும் இல்ல, எனக்கும் இல்ல…”
“ஒருவேளை அப்படி தானோ, எனக்கே தெரியாமல் இவனை எனக்கு பிடித்திவிட்டதோ, இவனுக்காக தான், நான் இவ்வளவு யோசிக்குறனோ…” என்று அவனின் கூற்றில், யோசித்து நிற்க,
“இன்னுமென்ன?…”
“நீ நல்லா யோசிச்சிக்கிட்டியா?… அப்பறம் உன்னை தெரியாம கல்யாணம் பண்ணிட்டேன்னு சொல்லி, ஏதாவது தத்துபித்துன்னு ஒளறின, நான் அப்பறம் மனுஷியா இருக்க மாட்டேன், சொல்லிட்டேன்…”
“ஓ… அப்போ மேடம், இதை கேக்குறதுக்கு தான், இவ்வளோ சுத்தி வளச்சியா?…”
“அது அன்னைக்கு, நீ என்னைய செம்ம டென்ஷன் பண்ணிட்ட… அதுனால அப்படி சொல்லிட்டேன்… சாரி அப்படி சொன்னதுக்கு… இப்போ ஒகே வா?…”
“அன்னைக்கு மட்டும், நீ அப்படி சொல்லல… விமல் கிட்டயும் அப்படி தானே சொன்ன?… தெரியாம கல்யாணம் ஆச்சுன்னு…”
“ஹோய்… அது நான் வேற பிளான் பண்ணுனேன்… அதுக்காக அப்படி சொன்னேன் …” என்றான்.
“என்ன பிளான்?…” என உர்ரென்று கேக்க,
“நம்ம கல்யாணம் அவசரத்துல தானே நடந்துச்சி… நானே, உன் பிடித்தம் கேட்டு, இன்னொரு முறை கொஞ்சம் பெருசா கல்யாணம் பண்ணலாம்ன்னு யோசிச்சி தான், அப்படி சொன்னேன்… அது தான் நான் சொன்னதுக்கான அர்த்தம்…”
“சத்தியமா, வேற எப்படியும் இல்ல… நம்புமா…”
“சரி அதையெல்லாம் விடு… நான் அப்படி தான் டென்ஷன் பண்ணுவேன், ஒரு சில நேரம்… அப்போ நீ என்ன பண்ணுவ… திரும்ப அப்படி சொல்லி காமிக்க மாட்டேன்னு, நான் எப்படி நம்புறது…”
“இனிமே உன்னை, எனக்கு வேற மாறி டீல் பண்ண தெரியும்… பட் இப்போ நான் அதை பண்ணினா, அப்பறம் உனக்கு கேட்ட கோவம் வருமே…” என்று உல்லாசமான குரலில் சொல்ல,
“உன்னோட குரலே சரியில்ல… நான் சமைக்க போறேன்…” என்று சொல்லிவிட்டு உஷாராகி அவசரமாக எழுந்து சென்றாள்.
அவள் ஓடுவதை பார்த்த பிரகதீஷின், சிரிப்பொலி அவளை தொடர்ந்தது.
அடுத்து வந்த நாட்கள் ஓரளவு இருவருக்கும் சுமுகமாக செல்ல, மதுவிடமும் கொஞ்சம் முன்னேற்றம் இருந்தது. தயக்கமேதும் இல்லாமல், அவனிடம் வாயடிப்பது, பேசுவது, மனதில் உள்ளதை பகிர்வது என்று அவர்களின் உறவும் கொஞ்சம் வளர்ந்தது.
இப்படி இவர்களின் வாழ்க்கை., லயம், தாளத்துடன் கூடிய மெட்டுகளுடன் சென்றது.
ஒரு நாள் மாலை வேளையில், ரிலாக்ஸ் ஆக என்னவோ ஒரு பாடலை முணுமுணுத்துக்கொண்டே, மது, இரவு உணவிற்கு சப்பாத்தி மாவை பிசைய,
அவளின் முணுமுணுப்பை கேட்டுக்கொண்டே, உள்ளே வந்த பிரகதீஷ், “நல்ல சத்தமா தான் பாடுறது… எனக்கும் கேக்கும்ல…”
“சும்மா… னா னான்னு தான் பாடுனேன்… பாட்டெல்லாம் இல்ல…”
“சரி அப்போ ஒரு பாட்டு பாடு…”
“ஹ்ம்ம் பாடலாம்… இப்போ எந்த பாட்டும் தோணல…”
“நான் சொல்லுறேன்…”
“இதழில் கதை எழுதும் நேரமிது…” என்ற பாடலை அவன் போனில் பாட செய்து,
“ஹ்ம்… இந்த பாட்டு தான்…”
அந்த பாடலை கேட்ட மதுவின் வதனம், கொஞ்சமாக சிவக்க, அதை அவனுக்கு காட்டாமல், “எனக்கு இந்த பாட்டு தெரியாது… நீ கிளம்பு…”
“அப்படியா… அப்போ கேட்டுட்டு பாடி காமி…” என்று அவன் குறும்புடன் சொல்ல,
“அதுலாம் முடியாது… நீ கிளம்பு… நான் சமைக்க போறேன்…” என்று அவனின் முகம் பார்க்காமல் சொல்ல,
“அப்போ நானும் ஹெல்ப் பண்ணுறேன்…”
“இல்ல… இல்ல வேணாம்…” என்று வேகமாக அவள் பதிலளிக்க,
அவன் ஒரு சிரிப்புடன், “இந்த செயின் எதுக்காக போட்டேன்னு உனக்கு தெரியுமா?…” என்று சம்பந்தமே இல்லாமல் கேட்க,
அவளும் அதை யோசிக்காமல்,
“ஏன் உனக்கு தெரியாத அது?… தாலி மாறின்னு சொல்லி தானே போட்ட…”
“ஹ்ம் அதுக்காகவும் தான்… பட் மெயின் ரீசன்…” என்று அவளை பார்த்துக்கொண்டே,
“என்னைய தான், உன்ன தொட விட மாட்டுற.., இந்த செயின், உன்னைய தொட்டுட்டே இருந்தவாது, என்னைய நினைப்பல்ல… அப்போவாது மேடம்க்கு என்னை சீக்கிரமா பிடிக்க செய்யும்னு தான்…” என்று சொல்லிக்கொண்டே அவளிடம் நெருங்கி நிற்க,
அவனின் பேச்சு, இப்போது கொஞ்சம் புரிய தொடங்க, அவன் செயின் அணிவிக்கும் போது கூட தோன்றாத ஒன்று, இப்போது பெண்ணிற்குள் ஒரு சிலிர்ப்பு, அதில் அவளின் வதனம், வெக்கத்தை ஒளித்து வைத்துக்கொண்டது.
அவளையே பார்வையால் தொடர்ந்தவன், “என்ன பொண்டாட்டிக்கு என்னவோ கொஞ்சம் புரியுது போல…” என்று சொல்லி மென்னகையுடன் அவளை இன்னும் நெருங்கி நிற்க,
அவனின் இந்த நெருக்கத்தில், அவள் கொஞ்சம் அவஸ்தையாய் அவனை பார்க்க முடியாமல், தலையை இன்னும் தாழ்த்திக் கொள்ள,
“பொண்டாட்டிக்கு வெட்கமெல்லாம் பட தெரியும்ன்னு இப்போ தெரியுது… ஆனா…” என்று முடிக்காமல் இன்னும் என்னவோ சொல்லவர,
இங்கு மதுவோ அதற்குள், “ப்ளீஸ் ஈஸ்வர்…” என்று அவள் எதற்கென்றே தெரியாமல் ப்ளீஸ் போட,
அவனும் அதே பிலீஸுடன்… எங்க திரும்ப சொல்லு… கிக்கா இருக்கு… என்று பேசிக்கொண்டே அவளின் கன்னத்தை மென்மையாக வருட,
அவனின் இந்த விளையாட்டில், மேலும் சிவந்த கன்னத்தையும், தன்னில் புதிதாக உணர்ந்த உணர்வையும், தன்னுள் அடக்கி,
“ஈஸ்வர், எனக்கு இன்னும் கொஞ்ச டைம் வேணும் ப்ளீஸ்…” என்று சொல்லி, கொஞ்சம் அவனை தள்ளினாள்.
“ஏண்டி தள்ளுற…” என்று சலிப்பாக சொல்லி அவளை பார்க்க, அவளிடம் படர்ந்திருந்த வெக்கத்தை, அவனவனின் கண்கள் கொள்ளையடிக்க, பாவை இன்னுமின்னும் அவனை ஈர்த்தாள்.
அவனின் பார்வை தன்னுள் ஊர்வதை உணர்ந்து, “போடா, இப்படிலாம் பாக்காத…” என்று சொல்லி கிச்சேனிலிருந்து வெளியே ஓடினாள்.
அதன்பிறகு, அவர்களின் நாட்கள், சிலபல முத்தங்களுடன் இனிப்பாய் நகர்ந்தது… பிரகதீஷும் அவளை வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு, காட்டாயப்படுத்தவில்லை.
அவளின் மனம் இப்போது தான் கொஞ்சம் இளகி வருகிறது. வாழ்க்கையின் ஓட்டத்தில் செல்ல முடிவெடுத்தான்.
இதையெல்லாம் யோசித்தவாறே, மது சோபாவில் அமர்ந்திருக்க, அவளின் போன் இசைத்தது.
யாரென்று பார்க்க, அவளின் அம்மா தான்.
அவரின் நலனை விசாரித்து, ஊரில் கதைகளை பேசிக்கொண்டிருக்க, “எப்போ இங்க வரீங்க?…” என்று மது, அவளின் அன்னையிடம் விசாரிக்க,
“இப்போ என்ன அவசரம்… வரேன்…”
“எப்ப கேட்டாலும் இதையே தான் சொல்லுறீங்க…”
“நான் இங்க நல்லா தான் இருக்கேன்… அண்ணி இப்போ முன்ன போலவெல்லாம் பேசுறது இல்ல… மாறிட்டாங்க வாணி… அதுனால நீ என்னைய பத்தியே எப்போதும் டோசிக்காம, உன் வாழ்க்கையை பாரு…”
“என்னமோ சொல்லுங்க…”
“உண்மையை தான் சொல்லுறேன்… எப்போதும் எல்லாரும் ஒரே மாறியே இருக்கணும்னு அவசியம் இல்லையே… அவங்க திருந்துனா, நம்ம அதை ஏத்துக்க தானே செய்யணும்…”
“ஓகே ம்மா… நான் ஒன்னும் சொல்லல… அப்பறம் சொல்லுங்க…” என்று அவள் அடுத்து பேச,
“வாணி இப்படியே எவ்வளோ நாள் இருக்க முடியும்னு, நீ இருக்க… அவங்க உன்னோட மாமியார்… நீ கொஞ்சம் அனுசரிச்சு தான் போகணும்…” என்று அவளுக்கு பாடமெடுக்க ஆரம்பிக்க,
“ம்மா… போதும்… எனக்கு புரியும் எல்லாம்… கொஞ்ச டைம் எடுக்கும் எல்லாத்துக்கும்… உடனே எல்லாத்தையும் மறந்துட்டு என்னால, சிரிச்சி பேசவெல்லாம் வராது…”
“அவங்க பேசுனா, நானும் ஓரெண்டு வார்த்தை பதில் சொல்லுறேன் தானே… அதுவே இப்போ பெருசு தான்… அதுவே மாறும்…” என்று முடித்தாள்.
“என்னமோ போ…”
“சரி… நீங்க பாருங்க… நான் வைக்கிறேன்…” என்று சொல்லி அழைப்பை வைத்தாள்.
– – – –
சிறிது நேரம் கழித்து, தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு, “
டீ போடலாமா… இல்லை காபி ஆஹ்…” என்று சிந்தித்துக் கொண்டே, சமயலறைக்கு செல்ல, அப்போது வீட்டின் கால்லிங் பெல் அடிக்க,
முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டே சென்று கதவை திறக்க,
பிரகதீஷ் சிரிப்புடன் உள்ளே வந்து, “இப்படி வேலை முடிச்சிட்டு, வீட்டுக்கு வரும் போது, பொண்டாட்டி வந்து கதவை திறக்கும் போது… ப்பா… எப்படி இருக்கு தெரியுமா… வேலை டென்ஷன் கூட போயிடுது…”
“ரொம்ப ஐஸ் வைக்காத… நான் கோவமா இருக்கேன்னு, உனக்கு நல்லாவே தெரியும்…”
“கோவமா… என் பொண்டாட்டிக்கு இப்போ கோவமெல்லாம் வருதா என்ன?…”
“ஆஹா… என்ன ஒரு புத்திசாலித்தனம்… போடா… உன்கூட நான் பேசலை…” என்று சொல்லி கிட்சேன் செல்ல,
அவளை பிடித்து நிறுத்தி, “என்ன கோவம்ன்னு சொல்லு… பேசி முடிச்சிட்டு அப்பறம் போலாம்…”
“ஒன்னும் தேவையில்லை… அப்படியே உனக்கு தெரியாத மாறி நடிக்காத…”
“சரி… ஒர்க் ஒழுங்கா முடிக்கலைனா, ஒரு லீட் ஆஹ் கேக்கணும் தானே… அங்க வந்து பொண்டாட்டின்னா பாக்க முடியும் சொல்லு…”
“ஏன்! ஏன் ! முடியாது… விமலெல்லாம், ரேகா ஒர்க் எல்லாத்தையும் அவன் தான் பண்ணுறான்…”
“அவன் பண்ணுன நானும் பண்ணனுமா என்ன…”
“அது ஒன்னோட பிரச்சனை… நாளைக்கு என்கிட்ட வந்து என் பண்ணலன்னு கேட்டினா… என் புருஷனால தான் பண்ணிமுடிக்கலைன்னு சொல்லிடுவேன்…”
“ஆ…” என்று அவன் வாயை பிளந்து,
“எவ்வளோ அராஜகம் பண்ணுற நீ…”
“பண்ணுனா… உனக்கு தான் நல்லது… எனக்கொண்ணும் இல்ல ப்பா…” என்று சொல்லி சமயலறைக்கு சென்றாள்.
– – – –
இரவு சாப்பிடும் போது, அப்போது தான் நியாபகம் வந்தவனாக, வந்ததும் சொல்லணும்னு இருந்தேன், நீ சண்டை போட்டதுல மறந்துட்டேன் என்று சொல்லி,
“ஹே மது… நெஸ்ட் வீக், நான் லண்டன் கிளம்புற மாறி இருக்கும்…” என்று என்ன சொல்லுவாளோ என்ற எதிர்பார்ப்புடன் சொல்ல,
“ஓஹ் அப்படியா” என்று மட்டும் கேட்டுக்கொண்டாள்.
“உனக்கு ஒரு பீலும் இல்லையா…” என்று கொஞ்சம் ஏமாற்றத்துடன் கேட்க,
“வேற என்ன பண்ணனும்… என்னை எப்படியும் கூட்டிட்டு போக முடியாது தானே…”
“ஹ்ம்ம்… நான் வர ஒரு மாசம் ஆகும்…”
“சரி… அத்தையை வர சொல்லுறேன்… நீ பார்த்து இருந்துக்கோ…
“அதுலாம் ஒன்னும் வேணாம்… நானே இருந்துப்பேன்…”
“இல்லடி… தனியா இருக்கணும்ல…”
“பச்… விடு வேணாம்…” என்று சொல்லி எழுந்து சென்றாள்.
இவ என்னத்த, நினைக்குறன்னு தெரியலையே என்று அவனும் எண்ணிக்கொண்டே சாப்பிட்டு எழுந்து சென்றான்.
ஒரு வாரம் போனதே தெரியாமல், அவன் லண்டன் கிளம்பி, சென்று சேர்ந்தும் விட்டான்.
தன்னால் சமாளிக்க முடியுமென்று இருந்தவள், அவனில்லாமல் தவித்து தான் போனாள் பாவை மதுரவாணி.
பார்வை வீசும்…
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.