தன் அன்னை நொடிக்கொரு தடவை வாசலை பார்ப்பதை பார்த்துக்கொண்டிருந்த மது, ஒரு முடிவுடன்
“ம்மா… என்ன ஈவினிங் டிபன் எல்லாம் பலமா செஞ்சிருக்கீங்க… இப்போ என்னமோ வாசகிட்ட தான் உங்க கண்ணு இருக்கு… என்ன? யாரு வராங்க?…” என்று அவரை கூர்ந்து பார்த்துக் கொண்டே கேட்க,
அவள் கேட்டதும் ஒரு நிமிடம் தயங்கி, அதன்பின் சுதாரித்து, “ஏன் வாணி? உனக்கு தான் பண்ணிருக்கேன்… என்னமோ புதுசா செஞ்சி தர்றது போல கேக்குற…” என்று பத்மா இலகுவாக கேள்வியெழுப்ப,
“அப்படியா ம்மா… அப்போ ஏன் இன்னும் ஒண்ணுமே எனக்கு எடுத்து வந்து தரவே இல்ல?… எல்லாம் செஞ்சி முடிச்சிட்டு, நீ வாசலையே பார்த்துட்டு இருந்தா, நான் அப்பறம் அப்படிதானே கேக்கணும்?…” என்று இவளும் எதிர்த்து கேட்க,
“நீயே தானே வந்து உனக்கு தேவையானதை எடுத்து சாப்பிடுவ… இப்போ என்ன எடுத்து வந்து தரலையேன்னு கேக்குற?…”
“ஆனாலும் ம்மா, உங்களுக்கு பேச ஆரம்பிக்கும் போது தான் அப்படியே தயங்கி தயங்கி வரும்… அதுக்கு அப்பறம் எல்லாம் சுதாரிச்சு அப்படியே பேச்சையே மாத்திடுவீங்க?… என்ன ம்மா, நான் சரியாய் சொல்றேன்னா ம்மா?…” என்று திரும்ப பேச,
“இப்போ எதுக்கு நீ தேவை இல்லாததுலாம் பேசிட்டு இருக்க?…” என்று அவரும் விடாமல் கேட்க,
மதுவோ பதில் கூறாமல், “அப்பறம் என்ன பண்ணுவீங்க தெரியுமா?… நானே ஒரு விஷயத்தை கேக்கலானாலும், நீங்களே வந்து என்கிட்ட தலையை கொடுப்பீங்க, நான் என்னனு கேட்டா, அதுக்கப்பறம் ஒன்னும் இல்லையேன்னு சொல்லுவீங்க… சரிதானே ம்மா?…” என்று சொல்லிவிட்டு அவரை பார்க்க,
“இங்க பாரு வாணி, நீ எதுக்கு இப்போ இப்படிலாம் என்கிட்ட சொல்லிட்டு இருக்கன்னு எனக்கு தெரியல… நீயா ஏதாவது நினைச்சிட்டு பேசுனா, நான் அதுக்கு என்ன பதில் சொல்ல முடியும்னு சொல்லு…” என்று பத்மாவும் பதில் பேச,
“சரிம்மா… நான் என்னலாம் நினைச்சிட்டு பேசுனேன் இப்போ உங்க கிட்ட சொல்லுறேன்… நீங்க அதுக்கு எல்லாம் பதில் சொல்லுங்க… சரியா?…” என்று விடாமல் பேச,
“இப்போ என்ன வாணி வேணும் உனக்கு?… ஒரு பலகாரம் செஞ்சதுக்கு இம்புட்டு பேசிட்டு இருக்க நீ…” என்று அவர் ஆயாசமாக சொல்ல,
“என்னம்மா பண்றது… நீங்க எனக்குன்னு பண்ணிருந்தா இந்நேரம் நான் கேக்காமயே எடுத்து வந்து தந்துருப்பீங்க, இல்லையா வாணி எடுத்து சாப்பிடுன்னு சொல்லிருப்பீங்களே…” என்று திரும்பியும் பேச,
“வாணி… இப்போ உனக்கு என்னதான் வேணும்?… எதுக்கு இவ்வளோ அழுத்தம் உனக்கு?…” என்று பத்மா பேச்சில் சற்று கோவம் எட்டி பார்க்க,
“சரி நான் கேக்குறதுக்கு எல்லாம் இதே சூட்டோட பதில் பேசணும்…” என்று அன்னையிடம் அழுத்தி சொல்லிவிட்டு, அவரை பார்த்து,
முதல் கேள்வி என்னனா… “இவ்வளோ நாள் இல்லாம திடீர்ன்னு ஊருக்கு போகணும்னு நின்னது, அடுத்து அதை பத்தி ஒண்ணுமே பேசல… அது ஏன்?…” என்று கேட்டுவிட்டு அவரை ஒரு நொடி பாத்துட்டு அடுத்து கேட்க வர,
இங்கே பத்மாவோ அதற்குள், “நீ தான் போக வேணாம்னு சொல்லிட்டியே… அப்பறம் நான் என்னத்துக்கு கேக்கணும்…” என்று அவளை பார்த்து நொடித்துக் கொண்டே சொல்லி, “அடுத்து நான் திரும்ப…” என்று அவர் ஆரம்பிக்க
“இருங்க இருங்க… எல்லாம் கேட்டு முடிச்சிடுறேன்… அப்பறம் எல்லாத்துக்கும் பதில் சொல்லுங்க… இப்ப நீங்க எப்படி வேணும்னாலும் உங்க இஷ்டத்துக்கு மாத்தி பேசுவீங்க…” என்று அவரை பேசவிடாமல் தடுத்து,
“அன்னைக்கு நான் வீட்டுக்கு வரும் போது… அவசரமா எதுக்கு போனை பேசிட்டு வச்சீங்க?… அப்பறம் என்ன நடந்துச்சின்னு உங்களுக்கு நான் திரும்பி சொல்ல வேணாம்னு நினைக்கிறேன்…” என்று சொல்லிவிட்டு அடுத்து பேச வர,
“வாணி… நான் உன் அம்மா டி… என்னவோ நான் தப்பு செஞ்சது போல, என்னைய நிக்க வச்சி கேட்டுட்டு இருக்க… இது கொஞ்சம் கூட சரியில்ல சொல்லிட்டேன்…” என்று அவளின் அன்னை இடையீட,
“அம்மா தான்… பட் இப்போ என் அம்மா கொஞ்சம் மாறி இருக்காங்களோன்னு தோன வைக்கிறீங்களே?… எனக்கு தெரியாம போன் பேசுறீங்க, என்கிட்டே எதையும் சொல்ல மாட்டேங்கிறீங்க… இன்னும் என்னனென்ன இருக்குனு நீங்க சொல்லிடுங்க… அதான் இன்னைக்கே எல்லாத்தையும் பேசி முடிச்சிக்கலாம்ன்னு பாக்குறேன்…” என்று சிறிது உணர்ச்சியுடன் பேசிவிட்டு அவரை பார்க்க,
பத்மாவும் அவளின் வாழ்க்கையை பற்றி இன்றாவது பேசி பாப்போம் முடிவெடுத்து மதுவின் பக்கம் அமர்ந்து, “இங்க பாரு வாணி… நான் சொல்றதை முதல்ல, எந்தவித இடையீடும் இல்லாம கேக்கணும்…” என்று பேச,
அங்கே “அத்தை… நான் உள்ளே வரலாமா…” என்று கேட்டு அவரின் சொல்லுக்காக காத்திருந்தான் பிரகதீஸ்வரன்.
கேட்ட சத்தத்தை தொடர்ந்து இருவரும் வாசலை பார்க்க,
பத்மா முதலில் சுதாரித்து, “வா ஈஸ்வர்… இது என்ன வரட்டும்மான்னு கேட்டுட்டு இருக்க…” என்று எழுந்து வந்து அவனை வரவேற்க,
“நீ யாரு… எதுக்கு இப்போ இங்க வர?…” என்று மது கோவமாக அவனிடம் கேட்டுவிட்டு,
“இவனை தான் அப்போ நீங்க எதிர்பாத்துட்டு இருந்தீங்கள்ல?… நான் கூட நீங்க உங்க அண்ணா கூட தான், பேசுறீங்கன்னு நினைச்சி, ஒழுங்கா யோசிக்காம விட்டுட்டேன்… என் தப்பு தான்… என் அம்மா தானே நீங்க, எனக்கு எதிரா இப்படி பண்ணுவீங்கன்னு நான் உங்களை யோசிச்சி கூட பாக்கலை ம்மா…” என்று தன் அன்னையிடமும் கத்த,
“எதுக்கு இப்போ இப்படி கத்தி பேசுற?…” என்று கேட்டுக் கொண்டே பிரகதீஷ் உள்ளே வர,
“டேய்… நீ யாருடா கேக்க… என் வீடு… நான் எங்க அம்மாகிட்ட கத்துறேன்… உனக்கென்ன?… நீ வெளில போடா…” என்று அவனை திட்ட,
“வாணி… என்ன இது டா ன்னு பேசுற… மொத முறையா வீட்டுக்கு வந்திருக்கு… இப்படி தான் பேசுவியா?… இப்படி தான் நான் உன்னை வளத்துருக்கேன்னா?…” என்று பத்மா கோவமாக மகளை பேச,
“என்னை வளத்ததை எல்லாம் அப்பறம் பேசு என்கிட்ட… இப்போ இவனை வெளில போக சொல்லு….” என்று அன்னையிடம் காய,
“வாணி… நான் சொல்லிட்டே இருக்கேன்…” என்று அவளை அடிக்க கையோங்க,
“அத்தை… என்ன இது…” என்று அவரின் கையை இறக்கி, “நான் உங்க கிட்ட இருந்து இதை எதிர்பாக்கல அத்தை…” என்று அவரிடம் அதிருப்தியாக சொல்ல,
“நீ ரொம்ப நல்லவன் மாறி, ஏன்டா உள்ள வர… எங்க அம்மா தானே, என்னை அடிக்க அவங்களுக்கு உரிமை இருக்கு… நீ எதுக்கு வர… போடா…” என்று மது அவனை பேச,
“வாணி… நான் என்ன சொல்லிட்டு இருக்கேன்…விடு ஈஸ்வர்… இவ இன்னைக்கு என்ட அடிவாங்குனா தான் அடங்குவா…” என்று அவர் மறுபடியும் கோவமாக பேசி, பிரகதீஷ் பிடித்திருந்த கையை விளக்க,
“பாருடா… நீ வந்த அன்னிக்கே, எங்க அம்மாவை, என்னைய அடிக்குற அளவுக்கு வந்துட்டாங்க…” என்று அவள் அடங்குவேன்னா வென்று திரும்பியும் அவனை பேசிவிட்டு,
தன் அன்னையிடம், “நான் இவன் உறவே வேணாம்னு தானே வந்தேன்… உங்களுக்கும் தெரியும்ல, அவங்க வீட்டு ஆளுங்க என்னலாம் பேசுனாங்கன்னு… இருந்தும் நீங்க இப்படி பண்ணிருக்கீங்க… அப்போ உங்களுக்கு உங்க பொண்ணு முக்கியமில்லை… அதானே…” என்று அவரையும் பேச,
“வாணி… நான் சொல்றதை கொஞ்சம் கேளேன்…” என்று அவர் கெஞ்சலாக பேச வர,
அதற்குள், “அத்தை… நான் பேசிக்குறேன்…” என்று சொல்ல,
உடனே பத்மாவோ தயக்கம் சிறிதும் இல்லாமல், “சரி ஈஸ்வர்… தாராளமா பேசி, அவளுக்கு நீயே புரிய வை… அவ அப்படி பேசுனதை நீ எதுவும்…” என்று அவனிடம் தன் மகளின் கோவத்தை பற்றி சொல்ல வர,
“ச்ச… அத்தை… என்ன இது இப்படி பேசுறீங்க…என்னோட மது தானே…” என்று அவர் பேச வருவதற்கு முன் இவன் சொல்ல,
“இது போதும் ஈஸ்வர்…நீ இப்படி சொன்னதே போதும்… நீங்க பேசுங்க… நான் கோவிலுக்கு போய்ட்டு வந்திருறேன்…” என்று அவனிடம் அவசரமாக சொல்லிவிட்டு,
தன் மகளிடம், “ஒழுங்கா பேசுற…” என்று தன் மகளிடம் அழுத்தி கூறிவிட்டு, கதவை சாற்றிவிட்டு மனதில் முருகனை வேண்டிக்கொண்டே, பக்கத்திலுள்ள அந்த முருகன் கோவிலுக்கு விரைந்தார்.
இவளோ தன் அன்னை வெளியே சென்றதும், அவனை முறைத்து விட்டு தன் அறையினுள் செல்ல போக,
“என்ன என்கூட பேச பயந்துட்டு உள்ள போறியா?…” என்று பிரகதீஷ் நக்கலாக வினவ,
“நீ யாருடா முதல்ல… நான் எதுக்கு உனக்கு பயப்படணும்?…” என்று கத்த,
அவளின் கையை சடாரென்று பிடித்து இழுத்து, அங்குள்ள சோபாவில் அமர வைத்து, தானும் அவளின் அருகில் நெருங்கி அமர்ந்துக் கொண்டு, “என்னடி ரொம்ப ஓவர் ஆஹ் பேசிட்டு இருக்க… நானும் பாத்துட்டே இருக்கேன்… வந்ததுல இருந்து நீ யாரு யாருன்னு கேட்டுட்டே இருக்க…” என்று அவன் அழுத்தமாக உறும,
“எதுக்குடா என்னைய டி சொல்லி கூப்புடுற… உனக்கு யாரு அந்த ரைட்ஸ் குடுத்தது?… என் கையை விடுடா… நீ யாருடா என்னை சொல்றதுக்கு…” என்று மது அவனிடம் திரும்பி எகிறி பேச,
சிறிதும் யோசிக்காமல் அவளின் கழுத்தில் தான் போட்ட செயினை வெளியில் எடுத்து,
“இது நான் தானே உன் கழுத்தில போட்டேன்… அப்போ உன்கிட்ட எல்லா உரிமையும் எனக்கு இருக்குன்னு அர்த்தம்… இப்போவாது புரிஞ்சிதா நான் யாரு உனக்குன்னு…” என்று அவன் திரும்பி அழுத்தம் திருத்தமாக வினவ,
அவளோ ஒன்றும் பேசாமல் சற்று நேரம் அவனையே வெறித்து பார்க்க,
அடுத்து பிரகதீஷும் தன்னை கொஞ்சம் நிதானப்படுத்தி, ஆழ்ந்த மூச்சினை சுவாசித்து, தன்னுடைய கோவத்தை கட்டுக்குள் கொண்டு வந்து அவளை பார்க்க,
அவளின் பார்வையோ இன்னும் அவனின் முகத்திலே தான் இருந்தது.
இங்க பாரு மது, “நீ அப்படி பேசுனதால, நானும் அப்படி நடந்துக்கிட்டேன்…” என்று அவனின் செயலுக்கு விளக்கம் அளித்து,
“நான் பொறுமையா பேசலாம்ன்னு தான் வந்தேன்… நீ தான் இப்படி பண்ண வச்ச என்னை…” என்று பேச,
“எனக்கு உன்கூட பேச வேண்டாம்…” என்று அவனை பார்த்து அழுத்தமாக, மது சொல்லிவிட்டு சோபாவிலிருந்து எழப்போக,
அவளை எழ விடாமல் தடுத்து, “நீ திரும்பி இதையே தான் பண்ணுற… நீ ஒன்னும் சின்ன பிள்ளை கிடையாது… பேசி தான் ஆகணும்… ஏன்னா இது நம்மோட வாழ்க்கை…”
“உன்கிட்ட பேசணும்… நீயே சொல்லுன்னு சொல்லியும், நீ அதுக்கான ஒரு ஸ்டெப் கூட எடுக்கல… இப்பயும் இப்படி பண்ணி கடுப்பை கிளப்பாத சொல்லிட்டேன்…” என்று பொறுமையை இழுத்து பிடித்து சொல்ல,
“இவ்வளோ நாள், நான் இப்படி தான் இருந்தேன்… என்னமோ இப்போ வந்துட்டு பேசணும், பேசணும்னு நீ சொன்னா… நான் உடனே வா பேசலாம்னு உங்கிட்ட சொல்லணுமோ…” என்று இவளும் திரும்பி பேச,
“நான் இப்போதான் இங்க வந்திருக்கேன்… அதுனால இப்போதான் பேச முடியும்…” என்று அவனும் இலகுவாக பேச,
“எது… நீ இன்னைக்கு தான் வந்திருக்க…” என்று அவள் நக்கலாக கேட்க,
“என்னடி வேணும் இப்போ உனக்கு… நான் வந்ததும் உன்னை பாக்க வந்தா, அப்படியே நீயும் ஆசையா வந்து கட்டிபிடிச்சிருப்பியா?… சொல்லு?…” என்று அவன் சலிப்பாக கேட்க,
“ஆஹா… நான் எதுக்கு உன்னைய கட்டிபிடிக்கணும்…” என்று கேட்க,
“இந்த கட்டிப்பிடி ஆராய்ச்சில்லாம் அப்பறம் வச்சிக்கலாம்… இப்போ நீ சொல்லு, எப்போ என்கூட வர போறேன்னு…” என்று அவன் கேட்க,
“அவள் பதில் சொல்லாமல் எழுந்து போக,
அவளின் கையை இறுக பற்றி, “நானும் பொறுமையா பேசலாம்னு பாத்தா… நீ என்னமோ அடம் பண்ணிட்டு இருக்க… என்ன தான்டி உனக்கு பிரச்சனை… எங்கயாச்சும் பேச விடுறீயா?…” என்று எரிச்சலாக சொல்லிவிட்டு,
“ஆஃபீஸ்லயும் என்னமோ தெரியாதவ மாறி நடந்துக்குற… அங்க என்னடான்னா, என்னைய வேலையை விட்டு போக சொல்லுற… இப்போ வீட்லயாச்சும் பேசலாம்னு பாத்தா… இப்படி பண்ணிட்டு இருக்க…”
“நீ குழந்தையாட்டம் வெட்டியா அடம் பிடிச்சிட்டு இருக்க… எனக்கு வேணாம், வேணாம் சொல்லி… அப்படிலாம் விட முடியாது… முடிஞ்சது பத்தியெல்லாம், நாம கொஞ்சம் நெருக்கமா ஆனதுக்கு அப்பறம் பேசலாம்… இப்போ அதையெல்லாம் விட்டுட்டு, ஒழுங்கா பேசு…” என்று அவளிடம் பேச,
“நீ என்ன வேணும்னாலும் சொல்லிக்கோ… போடா… இவன் பேசணும்னு வரும் போது நாம உக்காந்து பேசணுமோ… அன்னைக்கு நான் பேச வர்றதை கேட்டியா… உன் இஷ்டத்துக்கு போனல்ல…” என்று மது வெடிக்க,
“இப்போ தானே சொன்னேன்… அதுலாம் பேசுனா, இப்படி பேசிட்டே தான் இருக்கனும்… அதுனால தான் சொல்றேன்… கொஞ்சம் மெச்சூர் ஆஹ் சொல்றதை புரிஞ்சிட்டு பேசேன் மது, ப்ளீஸ்…”
அவள் அடமாக “நீ யாருடா, என்னை சொல்றதுக்கு…” என்று பேச,
பிரகதீஷ் பேசும் அவள் வாயை, தன் வாயால் அழுத்தமாக மூடினான்.
அவள் அவனிடம் திமிர, அவனோ அதையெல்லாம் கண்டுகொள்ளாமல், சற்று நேரம் அழுத்தமாக முத்தமிட்டு விலகினான்.
அவள் அவனை சரமாரியாக அடிக்க,
அவளின் இரண்டு கைகளையும் பிடித்துக் கொண்டு, நான் ஒழுங்கா பேசலாம்னு தான் வந்தேன். நீ தான் என்னைய இப்படி பண்ண வச்சது… நான் யாருன்னு உனக்கு இப்போ நல்லா தெரியும்ல… பட் இதுவும் நல்லா தான் இருக்கு… என்று சிரிப்புடன் சொல்ல,
“போடா… உன் இஷ்டத்துக்கு என்ன வேணும்னாலும் பண்ணுவியா… விடு என்னைய முதல்ல…” என்று அவளின் கையை கோவமாக இழுக்க,
“என் இஷ்டம் தான் இனிமேல்… உன்கிட்ட பேசலாம்னு தான் வந்தேன்… நீ அதுக்கு ஒத்துழைக்களை… அதுனால நான் முடிவு பண்ணிட்டேன்… உங்கிட்ட பொறுமையா இனிமே பேசலாம் முடியாது… அத்தை போய்ட்டு ரொம்ப நேரம் ஆச்சு…” என்று பேச,
“இப்போ எதுக்கு நீ ரொம்ப அக்கறை இருக்குற மாறி சீன்னை போடுற… உங்க அத்தையும் கூட்டு களவாணி தானே…” என்று மது பேச,
“அக்கறை, சக்கரை எல்லாம் நிறையவே இருக்கு… சும்மா காச்மூச்ன்னு கத்த மட்டும் தான் உனக்கு தெரியும்…” என்று சொல்லிவிட்டு,
“நான் எப்பவும் ஒரே மாறியெல்லாம் இருக்க மாட்டேன்… இன்னைக்கு இதோட விடுறேன்… அதுமில்லாம உன்கிட்ட எடுத்து சொல்லி பொறுமையா பேசலாம் முடியாதுன்னு நல்லாவே தெரிஞ்சிது இப்போ…”
“நான் உன்னைய என்கிட்டே பேச சொன்னேன் ஆஹ்…” என்று எகிற,
“வேற வழி இல்லையே எனக்கு… உன்னைய தெரியாம கல்யாணம் பண்ணி தொலைச்சிட்டேனே…” என்று பேச,
“டேய்… உனக்கு எவ்வளோ திமிரு… தெரியாம கல்யாணம் பண்ணிட்டேன்னு சொல்லுற… உன் கண்ணை காட்டிட்டே வா, இந்த தாலி செயினை போட்ட…” என்று அவள் உகண்டித்திருந்த இடத்திலிருந்து நெருங்கி அவனின் சட்டை காலரை பிடித்து கேட்க,
அவனின் சட்டை பிடித்ததில் அவளின் நெருக்கம் இன்னும் அதிகரிக்க, அவளின் அருகாமை, அவளின் வாசம், அவளின் மென்மை அனைத்தும் முதன் முறையாக உணர்கிறான். ஆனால் அவளுக்கு இது எதுவும் தோணவில்லை போல, அவனின் சட்டையை பற்றி இழுத்து அவனை ஒரு வழியாக்க,
பிரகதீஷ்ஷோ, “அடியேய் விடுடி… நீ இப்படி இருக்குறது எனக்கு என்னவோ தோணுதுடி… முதல்ல எழுந்திரு… ஏற்கனவே என்னைய வில்லன் ரேஞ்சுக்கு பாக்குற…” என்று சொன்னவனின் வார்த்தை என்னவோ கொஞ்சியது போல வர,
தத்தையோ அவனின் பேச்சில் திகைத்து, அவனிடமிருந்து வேகமாய் எழுந்து நிற்க,
“நான் போய்ட்டு அத்தையை கூடி வந்து விட்டுட்டு போறேன்… அவங்களை எதுவும் சொல்லாத… பாவம் அவங்க… உனக்காக மட்டும் தான் இருக்காங்க… பாத்து நடந்துக்க…” என்று சொல்லிவிட்டு எழ,
“எங்க அம்மா அவங்க… எனக்கு தெரியும், நீ சொல்லி நான் கேட்கமாட்டேன், போடா…” என்று பதில் பேச,
“சரியான அழுத்தக்காரிடி நீ… சீக்கரம் எல்லாத்தையும் பேக் பண்ணி வை… அடுத்த வாரம் வந்து கூட்டிட்டு போறேன்… நீ வரலைனா, நான் இங்க என் பொட்டியை தூக்கிட்டு வந்துருவேன்… வரட்டா பொண்டாட்டி…” என்று அவளின் கன்னத்தில் தட்டிவிட்டு சென்றான்.
பார்வை வீசும்…
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.