“முதல்ல உன்னை பத்தி விசாரிச்சப்ப எனக்கு கிடைத்த தகவல் எல்லாமே உன் குணத்தை கேவலப்படுத்தும் படியான தகவல்கள் தான்.. அதை பாயிண்ட் ஒன் பெர்சென்ட் கூட என்னால் நம்ப முடியலை.. நான் நம்பவும் இல்லை.. இன்னும் தீவிரமா இறங்கி விசாரிச்சப்ப அந்த பொறுக்கி இதில் சம்பந்தப்பட்டு இருப்பது தெரிய வந்தது..
ஆனா உடனே அவனை எதுவும் செய்தா உன் மேலயோ, உன் அப்பா மேலயோ தான் சந்தேகம் வரும்.. ஸோ உங்களுக்கு பிரச்சனை வந்திட கூடாதுனு ஆற போட்டு கிட்டத்திட்ட மூணு வருஷம் கழிச்சு என்னோட போலீஸ் நண்பன் மூலம் அவனோட அக்டிவிட்டீஸ் கண்காணிச்சு, அவன் கொட்டமடிக்க பிரெண்ட்ஸ் கூட பாண்டிச்சேரி போறதை தெரிந்து அங்கே போனேன்.
நான் அவனோட கெஸ்ட் ஹவுஸ் போனப்ப, பொண்ணு தண்ணினு கூத்தடிச்சு எல்லாவனும் மட்டை ஆகி இருந்தானுங்க.. நான் ஜம்மர் வச்சு இருந்தாலும் அதை பயன் படுத்தவே இல்லை.. இதுக்குனே அந்த கெஸ்ட் ஹவுஸ்ஸை பயன் படுத்தியதால் சிசிடிவி கேமெரா கூட இல்லை.. அந்த நாய் ஒரு ரூமில் ஒரு பொண்ணு கூட போதையில் தூங்கிட்டு இருந்தான். மத்த ரூம்ஸ் எல்லாத்தையும் வெளியே பூட்டிட்டு அந்த நாயை வெளியே இழுத்துட்டு வந்து ஹாலில் போட்டு அவன் இருந்த ரூமையும் பூட்டினேன்.. அப்புறம் ரத்த காயம் வராதபடி அவனை அடித்து அவனோட ஆணுறுப்பை வெறியோட மிதித்தேன்..
வலியில் போதை தெளிந்தாலும் கத்தும் நிலையில் அவன் இல்லை.. கத்தி இருந்தாலும் அவனோட பிரெண்ட்ஸ் அதை கேட்கும் நிலையில் இல்லை.. அவங்களும் போதையில் தான் இருந்தானுங்க.. நான் மாஸ்க் போட்டு இருந்ததால் நான் யாருனே அவனுக்குத் தெரியாது.. நான் ஒத்த வார்த்தை கூட பேசாததால் என் குரலும் அவனுக்கு தெரியாது..
வலி தாங்க முடியாம அவன் மயங்கினப்ப கன்னத்தில் தட்டி அவனை முழிக்க வைத்து திரும்பவும் மிதிச்சேன்.. அவனை எவ்ளோ மிதித்தும் என் வெறி அடங்கவே இல்லை.. மிதித்தே அவனோட ஆணுறுப்பை சிதைச்ச அப்புறம் அவனை ரூமில் போட்டுட்டு கிளம்பிட்டேன்.. அப்புறம் என் பிரெண்ட் மூலம் விசாரிச்சதில் அவன் நரம்புகள் செத்து வேஸ்ட் வெஜிடபிள் மாதிரி தான் இருக்கான்னு தெரிந்துக்கிட்டேன்” என்றான்.
மகிழ்ச்சியில் அவனது முகம் முழுவதும் முத்தமிட்டவள் இறுதியாக இதழில் நீண்ட முத்தமிட்டாள்.
பின் மன நிறைவுடன், “இதை விட பெரிய தண்டனை கொடுத்திட முடியாது” என்றாள்.
“எஸ்.. கொன்னுட்டா வலியே தெரியாம நிம்மதியா போய் சேர்ந்திடுவான்.. இது தான், இருக்கு ஆனா இல்லைனு ஏன்டா உயிரோட இருக்கிறோம்னு வதை படுவான்.. மகனோட இந்த நிலையைப் பார்த்து கண்ணீர் விடுறது தான் அவன் அப்பனுக்கு தண்டனை” என்றவன் அவளது மென்னகையில், “என்ன?” என்றான்.
விரிந்த புன்னகையுடன், “என் செல்ல மான்ஸ்டர்” என்றபடி அவனது கன்னத்தை கிள்ளி கொஞ்சினாள்.
“ஆமா காதல் மான்ஸ்டர்” என்றபடி அவளது இதழில் இதழ் பதித்தான்.
பின், “இப்போலாம் மிமி-யை பார்க்கவே முடியலை” என்றான்.
“சாயுங்காலம் முறைத்தது பத்தாதா?”
லேசாக சிரித்தவன், “அதில் காரம் பத்தலை” என்றான்.
“ரொம்ப வருத்தம் போல!” என்று அவள் கிண்டலாக வினவ,
அவன் மயக்கும் புன்னகையுடன், “மிமி இப்போ முமு-வா மாறிட்டா” என்றான்.
“முமு-னா?”
“முத்தே முத்தம்மா” என்று கூறி கண்சிமிட்ட, அவள் வெட்கத்துடன், “ஏய்!” என்று சிணுங்கினாள்.
“இன்னும் கொஞ்சம் சிணுங்க வைக்கவா?” என்று அவன் கிறக்கத்துடன் வினவ,
ஆள் காட்டி விரலை ஆட்டியபடி மிரட்டினாள்.
பின், “கார்த்திக் பனிஷ்மென்ட்டும் சூப்பர்” என்றாள்.
“உன்னோட ட்ரெயினிங்ல மலர் தைரியமா சூப்பரா பேசினா”
“என்னோட ட்ரெயினிங்கா?”
“ஹ்ம்ம்.. அவ சூப்பரா பேசினானு பாராட்டினப்ப, அவ தான் சொன்னா.. காலையில் நான் குளிக்க போயிருந்தப்ப, நீ அவ கிட்ட பேசினதை சொன்னா.. ‘கம்ப்ளைன்ட் கொடுக்க நினைக்கிறது தைரியமான விஷயம் தான்.. ஆனா அதுக்கு அப்புறம் தான் இன்னும் அதிக துணிவும் தைரியமும் வேணும்.. ஏன்னா இந்த சமுதாயம் ரொம்ப கோழையானது, தப்பு செய்தவனை தூற்ற தைரியம் இல்லாம நம்மளை தான் அவதூறு சொல்லும்.. இவ்வளவு நாள் நம்ம கிட்ட சிரிச்சு பேசிட்டு இருந்தவங்களே இனி நம்ம பின்னாடியும், நம்ம காது படவும் தப்பா பேசுவாங்க.. அதை எல்லாம் கேட்டு நீ துவண்டு போகக் கூடாது.. உன்னை ஒருந்தங்க தப்பா பேசினா, தப்பு உன்னிடம்னு அர்த்தம் ஆகிடாது, பார்க்கிற அவங்களோட கண்ணோட்டம் தான் தவறு.. தப்பு உன் மேல இல்லைங்கிறதில் நீ தெளிவா இருக்கணும்’ னு சொன்னதா சொன்னா.. தேவையான நேரத்தில் அவசியமான தெளிவான அட்வைஸ் கொடுத்து இருக்க.. சூப்பர்டா” என்றான்.
“என்னோட அனுபவத்தை வைத்து சொன்னேன்” என்றவள், “கேட்கணும்னு நினைத்தேன்.. டைரியில் அது என்ன நான் வேற ஒருத்தருக்கு சொந்தமாகி இருந்தேன்னு எழுதி இருந்தீங்க? என்னை எப்போ, எங்கே பார்த்தீங்க?” என்று கேட்டாள்.
“ஒரு கேஸ் விஷயமா சேரன்மகாதேவியில் இருக்கிற ஹாஸ்பிடல் வந்தப்ப தான் உன்னைப் பார்த்தேன்.. நீ மன்த்லி செக்-அப்-க்கு வந்து இருந்த” என்று கூறி அவன் நிறுத்த,
“எனக்கு கல்யாணம் ஆகிருச்சுனு நினைச்சுட்டீங்களா?” என்று கேட்டாள்.
அது உண்மை இல்லை என்றாலும் அவளுக்காக, ‘ஆம்’ என்பது போல் தலையை அசைத்தான்.
முகம் இறுகியபடி, “அது அந்த பொறுக்கியோட குழந்தை” என்றாள்.
அவன் உணர்ச்சியற்ற குரலில், “அந்த குழந்தை என்ன தப்பு செய்தது? அதன் மேல் ஏன் வெறுப்பு?” என்று கேட்டான்.
சட்டென்று வலியும் வேதனையுமாக அவனை அவள் பார்க்கவும்,
அவன், “குழந்தையை சுமந்தப்ப நீ பல இன்னல்களை அவதூறுகளை சந்தித்து இருப்ப தான்.. ஆனா அந்த பிஞ்சு சிசு ஒரு பாவமும் அறியாதது தானே!” என்றான்.
அடிப்பட்ட பார்வை பார்த்தவள், “பிஞ்சு குழந்தையை வெறுக்கிற அளவுக்கு நான் கொடூரமானவ இல்லைங்க” என்றாள்.
தனது குழப்பத்தை வெளியே காட்டிக்காமல், “சாரிடா.. நீ இறுக்கத்துடன் சொல்லவும் அப்படி தப்பா நினைச்சுட்டேன்” என்றான்.
“அந்த இறுக்கம் அந்த பொறுக்கியை நினைத்து” என்றவள், “இங்கே வந்து ரெண்டு மாசம் கழிச்சு தான் நான் ப்ரெக்னென்ட் ஆன விஷயமே தெரிந்தது.. வயிறு வெளியே தெரிய ஆரம்பித்த பிறகு இங்கேயும் மீண்டும் குத்தல் பேச்சுக்களை கேட்க நேர்ந்தது.. என்ன தான் அப்பா என்னோட கணவர் மிலிட்டரியில் இறந்துட்டார்னு சொன்னாலும் சிலரோட நாக்கு தேளா கொட்டத் தான் செய்தது..
அதை எல்லாம் கேட்டப்ப அவன் மேல கடும் கோபமும் வெறியும் வந்தாலும் நான் அந்த குழந்தையை வெறுக்கலை.. முதல்ல பிடித்தமும் இல்லாம வெறுப்பும் இல்லாம தான் இருந்தேன்.. ஆனா போக போக, குழந்தையோட அசைவுகளை நல்ல உணர ஆரம்பித்த பிறகு கொஞ்சம் கொஞ்சமா பிடித்தம் ஏற்பட்டு குழந்தை மேல ரொம்ப பாசம் வச்சேன்..
இனி குழந்தை தான் எனக்கு எல்லாமும்னு வாழ நினைத்தேன்.. என் குழந்தையை என் கையில் ஏந்தும் நாளுக்காக அவ்ளோ ஆசையா காத்திருந்தேன்.. ஆனா..” என்று நிறுத்தியவள் அவன் நெஞ்சில் முகம் புதைத்து அழ ஆரம்பித்தாள்.
அவளது முதுகை வருடியபடி, “ஒன்னுமில்லைடா.. அதான் ஆதினி இருக்காளே” என்று தேற்றினான்.
“போதும்டா” என்றபடி அவளது முகத்தை நிமிர்த்தி கண்ணீரை துடைத்துவிட்டான்.
அவள் தேம்பியபடி வலி நிறைந்த குரலில், “என் பையனை தொட்டு தூக்க கூட என்னால் முடியலை.. அவன் முகம் கூட என் நெஞ்சில் சரியா பதியலையே!” என்றபடி மீண்டும் அழுதாள்.
சில நிமிடங்கள் அவளை அழ விட்டவன், “போதும்டா.. டாலி முழிச்சிட போறா.. நீ அழுறதை பார்த்து பயந்திடுவா” என்றதும் அழுகையை மெல்ல நிறுத்தியவள் வலியும் வேதனையுமாக,
“நான் எந்த தப்பும் செய்யலையே! அப்புறம் ஏன் இந்த அம்மா வேணாம்னு விட்டுட்டு போனான்? அவன் பிறந்த அன்னைக்கு நான் சுயநினைவில் இல்லை.. அடுத்த நாள் அரை மயக்கத்தில் தான் இன்குபேட்டரில் இருந்த குழந்தையை பார்த்தேன்.. அதுக்கடுத்த நாள் நான் சுயநினைவுக்கு வந்த போது அவன் என்னை விட்டு போயிட்டானே!” என்றாள்.
அவளை தனது நெஞ்சில் புதைத்துக் கொண்டவனின் நெஞ்சம் அவளது ரணத்தில் துடிதுடித்து கதறினாலும், வெளியே திடமாக இருப்பது போல் காட்டிக் கொண்டான்.
அவனை நிமிர்ந்து பார்த்தவள் கலங்கிய குரலில், “இந்த விதி என்னை இவ்ளோ சோதித்து இருக்க வேண்டாம் கண்ணா” என்றாள்.
அவளது தோளை இறுக்கமாக பற்றி தன்னுடன் இறுக்கிக் கொண்டவன் தானுமே இறுகி தான் போனான்.
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.