அதே நேரத்தில் அங்கே அன்னையின் குற்றசாட்டிற்கு அவ்யுதகண்ணனோ சிறிதும் அசராமல், “தாலி கட்டினா தான் மனைவியா? மோதிரம் மாத்தினாலும் மனைவி தான்” என்றான்.
தேவகியின் கோபத்தின் காரம் குறையாமல் இருக்கவும், “காதலிக்க ஆரம்பித்ததில் இருந்தே ராதா என் மனசில் மனைவியாவே பதிந்ததால் எனக்கு அது தப்பா படலை..” என்றவனின் பேச்சை இடையிட்டவர்,
“அப்போ ஏன் அவளை பிரிஞ்சு போக விட்ட?” என்று முறைப்புடன் கேட்டார்.
“அம்மா!” என்று அவனது குரல் ஆயாசமாக வந்தது.
கோபம் கலந்த அதிருப்தியுடன், “நானாவது பேசி இருப்பேன்” என்றவரின் பேச்சை இடையிட்டவன் சிறு தோள் குலுக்கலுடன்,
“நான் உங்களை தடுக்கலையே!” என்றான்.
அவரோ கடும் கோபத்துடன், “ராதாங்கிற பெயரை மட்டும் வச்சு எதுவும் செய்ய முடியாதுங்கிற தைரியம்” என்றார்.
“ச்ச்.. ஆறு வருஷம் ஆகியும் இன்னும் மன்னிக்க மாட்டீங்களா ம்மா?” என்று அவன் கெஞ்சும் குரலில் கேட்டான்.
“எத்தனை வருஷம் ஆனாலும் மன்னிக்க முடியாதுடா” என்று கடும் கோபத்துடனே கூறியவர், “என் வளர்ப்பை தப்பாக்கிட்டியே!” என்று கோபம் கலந்த ஆதங்கத்துடன் கூற,
“அப்படி இல்லை ம்மா” என்றபடி அவர் அருகே அமர்ந்தவன் அவரது கையை பற்றியபடி வருந்தும் குரலில், “ரொம்ப ரொம்ப சாரி மா.. என்னை மன்னிச்சிடுங்க ப்ளீஸ்.. ஆதினி மா! அழகான தவறுனு நினைத்து என்னை மன்னிக்க கூடாதா? நீங்க என்னை மன்னிக்க நான் என்ன செய்யணும்?” என்று கேட்டான்.
ஆனால் அடுத்த நொடியே அவசரமாக, “இந்த கல்யாணத்தை தவிர வேற எதுனாலும் சொல்லுங்க” என்றும் கூறினான்.
‘இதற்கு மேல் அதை பற்றி பேசி எதுவும் மாறப் போறது இல்லை’ என்ற எண்ணத்தில் அதை பற்றி மேலே பேச வேண்டாம் என்று நினைத்தவருக்கு மகனின் எச்சரிக்கையான பேச்சில் லேசாக சிரிப்பு கூட வந்தது.
ஆனால் அதை சிறிதும் அவனிடம் காட்டிக் கொள்ளாமல், “ஆதினிக்கு அம்மா ஏக்கம் இல்லைனு நினைக்கிறியா? இந்த வயசிலேயே இப்படி ஒரு பக்குவம் எந்த குழந்தைக்கும் வராது.. உனக்காக, உன்னை கஷ்டப்படுத்தக் கூடாதுனு அம்மா பற்றி ஒரு வார்த்தை கூட பேசுறது இல்லை.. ஏன் அம்மா முகத்தை பார்க்கணும்னு போட்டோ கூட இது வரை கேட்டது இல்லை.. அந்த குழந்தைக்காக நீ என்ன செய்யப் போற?” என்று கறார் குரலிலேயே கேட்டார்.
“நான் அப்பா ஏக்கத்தோடு வளர்ந்த மாதிரி, என் பொண்ணு அம்மா ஏக்கத்தோடு வளரனும் என்பது தான் எங்க விதி”
“விதியை கூட மதியால் வெல்லலாம்.. ஆனா இங்கே, நீ மனசு வச்சா போதும், உன் பொண்ணு விதியை மாத்திடலாம்”
இப்பொழுது அவரை வெகு நிதானமாகப் பார்த்தவன், “அப்பா இறந்த பிறகு நீங்க ஏன்மா இன்னொரு கல்யாணம் செய்துக்கலை?” என்று கேட்டான்.
அவனை முறைத்தபடி, “அப்பா இறக்கும் போது உனக்கு பன்னிரண்டு வயசு” என்றார்.
“ஸோ வாட்! உங்களுக்கு அப்போ 32 வயசு தானே!”
“பதிமூன்று வருஷங்கள் தான் என்றாலும் அவர் இருந்த வரை அவருடன் நிறைவா வாழ்ந்தேன்.. ஆனா நீ இன்னும் வாழவே ஆரம்பிக்கலையே!”
“பெண் துணை இல்லாமல் வாழ முடியாதா என்ன?”
“இப்போ சொல்ல எல்லாம் நல்லா தான் இருக்கும் ஆனா என் வயசில் தனிமை உன்னை கொல்லும்.. அதுவும் ஆதினி கல்யாணம் ஆகி போனதுக்கு அப்புறம்..” என்றவரின் பேச்சை இடையிட்டவன்,
“அந்த தனிமை எனக்கு கஷ்டம் இல்லை இஷ்டம் தான் ஏன்னா ராதாவின் நினைவுகள் எப்போதுமே என்னுடன் இருக்கும்”
“இன்னொருத்தன் மனைவியோட நினைவுகளுடன் வாழ்வேன்னு சொல்ற! மீண்டும் என் வளர்ப்பை..” என்றவரின் பேச்சை இடையிட்டவன்,
“இப்பவும் எப்பவும் உங்க மகன் பண்புள்ளவன் தான்மா.. இன்னொருத்தன் மனைவியை நான் மனதில் நினைக்கலை.. ராதா வாழ்க்கையில் எந்த பிரச்சனையும் வந்திட கூடாதுனு தான் அவளோட போட்டோவை ஆதினிக்கு மட்டுமில்லை உங்க கிட்ட கூட இதுவரை நான் காட்டியது இல்லை.. என்னைக்குமே ஆதினியோ நானோ ராதாவை உரிமை கொண்டாட போறது இல்லை என்பதில் நான் தெளிவா இருக்கிறேன்.. நான் காதலித்தது காதலிக்கிறது என் நெஞ்சில் இருக்கும் என் காதலியைத் தான்” என்றான் கோபம் கலந்த உறுதியான குரலில்.
“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் மனைவினு வாய் கிழிய சொன்ன!” என்று அவர் அவனை சீண்ட,
சிறிதும் தாமதிக்காமல், “அவ வேற வாழ்க்கையை தேர்ந்தெடுத்தாலும் என் காதலி, மனைவி எல்லாமே என் ராதா மட்டும் தான்.. என் ராதானு நான் சொல்றது, இப்போ இருக்க ராதாவை இல்லை, ஆதினி பிறக்கும் வரை இருந்த ராதாவைத் தான் சொல்றேன்.. இப்போ என் கண் முன்னாடி அவ வந்தாலும், முன் பின் தெரியாத மூன்றாம் மனிதனை பார்ப்பது போல தான் பார்ப்பேன், நடந்துப்பேன்.. அதில் நான் ரொம்பவே தெளிவாவே இருக்கிறேன்” என்றான்.
“இப்படி உருகி உருகி நீ காதலிக்க, அவளோ வேற ஒருவனுடன் நல்லா வாழ்ந்துட்டு தானே இருக்கா! நீயும் அப்படி இருந்தா என்னடா?”
அவன் அமைதியாக இருக்க,
“இதுக்கு மட்டும் பதில் சொல்ல மாட்டியே!” என்று கடுப்பு கலந்த கோபத்துடன் கூறினார்.
“முதலும் கடைசியுமா சொல்றேன்.. இனி இதை பத்தி பேசாதீங்க அண்ட் எப்பவுமே ராதாவை எதுவும் சொல்லாதீங்க.. அவ கெட்டவ இல்லமா.. அவ கனவுகள் வேற.. எங்களுக்குள் செட் ஆகலை.. நாங்க பேசி தான் பிரிவு என்ற முடிவுக்கு வந்தோம்.. நான் கேட்டேன்னு தான் குழந்தையை என் கிட்ட கொடுத்தா” என்றான்.
“இவ்வளவு காதலை வச்சிட்டு அவளை பிரிந்து போக எப்படி விட்டடா?” என்று தான் மீண்டும் கேட்டார் ஆதங்கம் நிறைந்த குரலில்.
அன்னையைப் பார்த்து சோபையாக மென்னகைத்தபடி, “இதுவும் காதல் தான்மா.. உங்களுக்கு சொன்னா புரியாது” என்றவன், “இனி இதை பற்றி பேசாதீங்க அண்ட் இனி கல்யாணம் கில்யாணம்னும் பேசாதீங்க” என்றான்.
“உனக்கு ஒரு மனைவி வேண்டாம்.. ஆனா ஆதினிக்கு அம்மா கண்டிப்பா வேணும்.. அப்பா இல்லாம வளர்வதும் அம்மா இல்லாம வளர்வதும் வேற வேற.. அதுவும் ஒரு பெண் குழந்தைக்கு ஒரு கட்டத்தில் அம்மா துணை நிச்சயம் வேணும்”
“என் மகளுக்கு நான் தாயுமானவனா இருப்பேன்”
“ப்ராக்டிகல்லா சொல்லணும்னா நிச்சயம் அதை நடைமுறை படுத்த உன்னால் முடியாது.. இரு நான் சொல்லி முடிச்சிக்கிறேன்..
உன் பொண்ணுக்கு நீ தாயுமானவனா இருக்கலாம் ஆனா எப்போதும், அதாவது எல்லா நேரத்திலும் அதை செயல் படுத்த உன்னால் முடியாது.. உன் வேலை பளுவின் நடுவே அது நடக்கிற காரியம் இல்லைனு தான் சொல்றேன்..
அடலோசென்ஸ் டைம்ல நிச்சயம் ஆதினி அம்மாவை மிஸ் செய்வா.. நான் இருக்கிறேன்னு சொல்லாத.. என்ன இருந்தாலும் ஆச்சி அம்மா போல வராது..
நான் ஒன்னு சொல்றேன்.. அது உனக்கு சரி வருமானு யோசிச்சு சொல்லு.. இப்போ நான் பார்த்திருக்க பொண்ணும் கல்யாணம் வேணாம்னு தான் சொல்லிட்டு இருக்கா.. சொல்லப்போனா கிட்டதிட்ட ஆண்களையே வெறுப்பவள்னு கூட சொல்லலாம்.. ஸோ ஆதினிக்காக அவளை கல்யாணம் செய்துக்கோ.. நீ அவளை உன் மனைவியா பார்க்க வேண்டாம் ஒரு தோழியா பாரு” என்று நீளமாக பேசி முடித்தார்.
“எப்பவும் என் மனசு மாறாது.. ஆனா.. ஒருவேளை கல்யாணத்துக்கு அப்புறம் அவ மனசு மாறி என்னை விரும்ப ஆரம்பிச்சா என்ன செய்றது? அப்போ என் காதலை பெற முடியாம, ஆதினி மேல் அவளுக்கு வெறுப்பு வர வாய்ப்பு இருக்குதே! ஆதினிக்காகனு செய்த கல்யாணம் அர்த்தமே இல்லாம போய்டுமே! கொஞ்ச நாள் மட்டும் அம்மா பாசத்தை அனுபவிச்சுட்டு, அப்புறம் வெறுப்பை சம்பாதிக்கிறதுக்கு என் பொண்ணு அம்மா பாசம் இல்லாமலேயே நிம்மதியா இருந்துட்டு போகட்டும்”
அவனை கடுமையாக முறைத்தவர், “இப்படி எல்லாம் யோசிக்க உன்னால் மட்டும் தான்டா முடியும்” என்றார்.
மென்னகையுடன், “தன்க்யூ தன்க்யூ” என்றவன், “ஸோ இந்த பேச்சுக்கு இத்தோட ஃபுல் ஸ்டாப்பு” என்றான்.
“ஒரு முறை அந்த பொண்ணு கிட்ட பேசி தான் பாரேன்டா.. அம்மாக்காக ப்ளீஸ்”
அன்னையை ஆழ்ந்து பார்த்தவன் அவரது விழிகளில் தெரிந்த தவிப்பில், “இந்த தவிப்பு ஆதினி அண்ட் எனக்காக மட்டுமானதா தெரியலையே! அப்படி என்ன கரிசனம் அந்த பொண்ணு மேல உங்களுக்கு?” என்று கேட்டான்.
மகனின் புத்தி கூர்மையில் பெருமிதம் கொண்டவர், “அந்த பொண்ணு ஆண்களை வெறுக்க என்ன காரணமா இருக்கும்னு நினைக்கிற?” என்று அமைதியான குரலில் கேட்டார்.
“எவனாவது காதலிச்சு ஏமாத்திட்டானா?” என்று அலட்சியமாக கேட்டவன்,
அவர் இல்லை என்பது போல் தலை அசைக்கவும் சில நொடிகள் யோசித்துவிட்டு, “செக்ஷுவல் ஹராஸ்மென்ட்?” என்று வினவினான்.
‘ஆம்’ என்பது போல் தலை அசைத்தவர், “ஜஸ்ட் ஹராஸ்மென்ட் மட்டும் இல்லை.. அதுக்கும் மேல” என்றார்.
“அவனை சும்மாவா விட்டாங்க?” என்று அவன் கோபத்துடன் வினவ,
“முயற்சி செய்து இருக்காங்க.. ஆனா அந்த பொறுக்கியை எதுவும் செய்ய முடியலை.. பணம் அவனை காப்பாத்திடுச்சு” என்று கடும் கோபத்துடன் கூறியவர், “அது மட்டுமில்லை.. மூணு வருஷத்துக்கு முன்னாடி நிச்சயம் வரை வந்து கல்யாணம் நின்னு போய் இருக்குது.. என்னை கேட்டா இன்னொரு பொறுக்கி கிட்ட இருந்து அந்த பொண்ணு தப்பிச்சுட்டானு தான் சொல்வேன்..
பொண்ணோட அப்பா இதை பத்தி சொல்லாம தான் கல்யாணம் பேசி இருப்பார் போல.. ஆனா எப்படியோ உண்மை தெரிய வரவும் அதிக வரதட்சணை கேட்டு இருக்கிறான் அந்த பொறுக்கி.. பொண்ணோட அப்பா அதுக்கு ஒத்துக்கிட்டு இருக்கார் ஆனா அவன் அதை வச்சு அந்த பொண்ணு கிட்ட தப்பா நடந்துக்க பார்த்து இருக்கிறதோட அவ மறுக்கவும் ரொம்ப கேவலமா பேசி இருப்பான் போல.. எல்லாம் சேர்த்து மொத்தமா ஆண்களையே அந்த பொண்ணு வெறுத்துட்டா” என்றார்.
“இந்த சம்பந்தம் யாரு சொன்னது?”
“மீனா ஆன்ட்டி”
(மீனா என்ற மீனலோஷினி தேவகியின் நெருங்கிய தோழி)
“அவங்களுக்கு எப்படி தெரியும்? அதுவும் இவ்வளவு விவரமா?”
“பொண்ணோட அப்பா ரவி அங்கிள்(மீனாவின் கணவர் ரவிவர்மன்) அண்ணனோட பிரெண்ட்”
“தெய்வநாயகம் அங்கிள்ளா?”
‘ஆம்’ என்பது போல் தலை அசைத்தவர் தனது கைபேசியில் இருந்த புகைப்படத்தை காட்டியபடி, “பொண்ணு பேரு அம்ரிதா.. வயசு 29.. ஐ.ஓ.பி மகாராஜநகர் பிராஞ்சில் மேனேஜரா இருக்கிறா.. அம்மா இல்லை.. அப்பா எக்ஸ் மிலிட்டரி மேன்.. ஹெல்த் ஹவுஸ்-னு ஜிம் நடத்துறார்.. வீடு தியாகராஜநகரில் தான் இருக்குது.. பேசி பார்க்கிறியா?” என்று முடித்தார்.
“யோசிச்சு சொல்றேன்” என்றபடி எழுந்தவன் யோசனையுடன் தனது அறை நோக்கி சென்றான்.
‘முடியவே முடியாது’ என்றதில் இருந்து யோசித்து சொல்வதாக அவன் கூறியதில் திருப்தியுற்றவறாக தேவகி உறங்க செல்ல எழுந்தார்.
அறை வாயிலில் நின்றவன், “இந்த பொண்ணு கிட்ட நான் பேசுறேன் பேசலை.. கல்யாணம் செய்றேனோ இல்லையோ.. ஆனா நீங்க கிரேட் ம்மா.. அம் ஸோ ப்ரௌட் ஆஃப் யூ அண்ட் லவ் யூ ஸோ மச் மா” என்றான்.
புன்னகையுடன், “மீ டூ லவ் யூ ஸோ மச் கண்ணா” என்றவர் அவனது முதல் கூற்றிற்கு பதிலாக, “சேறு நம்ம மேல் பட்டா, கழுவிட்டு போய்கிட்டே இருக்கணும்” என்று முடித்துக் கொண்டார்.
“அது சரி தான்”
“ஆனா ஒன்னு.. அவளோட கடந்த காலம் உனக்கு கொஞ்சம் கூட ஒரு பொருட்டே இல்லனா மட்டும் சம்மதம் சொல்லு”
அவன் அவரை முறைக்கவும்,
அவர் மென்னகையுடன், “என் மகனை எனக்கு தெரியும் தான்.. இருந்தாலும் சொல்லணும் தோனுச்சு” என்றார்.
“விருப்பத்துடன் ஒரு முறை மட்டும் என் வாழ்வில் நடந்தது, விருப்பம் இல்லாமல் அவ வாழ்க்கையில் நடந்து இருக்குது”
“அப்போ உனக்கு ஓகே!”
சத்தமாக சிரித்தவன், “என் கிட்டயே போட்டு வாங்க பார்க்கிறீங்களா! சில்வண்டு மட்டுமில்லை இந்த சிங்கமும் சிக்காது.. அந்த பொண்ணோட கடந்த காலத்தை பற்றிய என் கருத்தை மட்டும் தான் சொன்னேன்.. சம்மதம் சொல்லலை.. போய் தூங்குங்க.. குட் நைட்” என்றுவிட்டு படுக்க சென்றான்.
குறிப்பு: அப்டேட் பற்றிய குறிப்பு தான் இது.. ஏற்கனவே FaceBookல் சொன்னது தான்.. இங்கே சைட்டில் சொல்லலை..