அவன் ‘ஹலோ’ சொல்லும் முன், “டேய் மொன்ஸ்டர்! அதான் நானே பார்த்துக்கிறேன்னு சொல்லிட்டு தானே கிளம்பினேன்! மூடிட்டு இருக்க வேண்டியது தானேடா! பெரிய பருப்பாட்ட போன் செய்து மாமா நோமானு பிட்டு போட்டு, மிங்கிள் ஆக ரெடி அங்கிள்னு சொல்லி இருக்க! இப்போ மட்டும் நீ என் முன்னாடி இருந்த!” என்று அம்ரிதா கோபத்துடன் பொரிந்தாள்.
‘அம்ரிதாவா!’ என்று தேவகி சிறு அதிர்வுடன் மெல்லிய குரலில் கேட்க,
புன்னகையுடன், ‘ஆம்’ என்பது போல் தலை அசைத்தவனோ புன்னகையை மறைத்து சற்றே தெனாவெட்டான குரலில், “இருந்தா! என்னடி செய்வ?” என்று கேட்டான்.
“டி யா!” என்று அவள் அதிர,
அவனோ அலட்டிக் கொள்ளாமல், “ஆமாடி டால்டி! கிவ் ரெஸ்பெக்ட் டேக் ரெஸ்பெக்ட் கேள்விப் பட்டது இல்ல?” என்றான்.
“ஏய்!” என்று அவள் அதீத கோபத்துடன் பல்லைக் கடிக்க,
அவனோ, “சரி இப்போ எதுக்கு போன் போட்ட? அதைச் சொல்லு” என்றான்.
“உன் காது என்ன செவிடா!”
“மாமா கிட்ட நான் பேசியதை பத்தி சொன்ன..” என்றவனின் பேச்சை கோபத்துடன் இடையிட்டவள்,
“மாமா சொல்லாத” என்றாள்.
“அதை உன் அப்பா சொல்லட்டும்” என்றவன், “அதை விடு.. நீ எதுக்கு போன் போட்டனு இன்னும் சொல்லலை.. உன் முன்னாடி இப்போ நான் இருந்தா, என்ன செய்வனும் சொல்லல” என்று அவளை சீண்டவே செய்தான்.
“டேய்!”
“எஸ் டி.. டெல் டி”
மூச்சை நன்றாக இழுத்து விட்டுக் கொண்டவள், “ஒழுங்கு மரியாதையா என் அப்பாக்கு போன் போட்டு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லைனு சொல்லு” என்று மிரட்டினாள்.
“முடியாது”
“வேணா.. நீ ரொம்ப வருத்தப்படுவ!”
“ஸோ உனக்கு என்னை பிடிச்சு இருக்குது”
“வாட்!”
“நான் வருத்தப்படுவேன்னு எனக்காக வருத்தப்பட்டு தானே என்னை வேணாம்னு சொல்லச் சொல்ற! எனக்காக பீல் செய்றனா, உனக்கு என்னை பிடிச்சு இருக்குது தானே!”
“ரிடிகுலஸ்.. நீயும் உன் லாஜிக்கும்!”
“அப்போ என்னை பத்தி கவலைப்படாம கல்யாணத்துக்கு ரெடியாகு”
“முடியாது”
“அதை என் கிட்ட சொல்லி நோ யூஸ்.. உன் அப்பா கிட்ட சொல்லு”
“அவர் தான் அதை காது குடுத்து கேட்க மாட்டிக்கிறாரே!”
“உன் அப்பாவே கேட்கலை! நான் ஏன் கேட்கணும்?”
“ஹ்ஹ!” என்று கை முஷ்டியை மடக்கி கோபமும் எரிச்சலுமாக கடுப்புடன் கத்தியவள், “உனக்கு போய் காள் செய்தேன் பாரு!” என்று நிறுத்தினாள்.
“பிஞ்ச செருப்பால் அடிச்சுக்க போறியா?”
“போடா” என்று கூறி அழைப்பைத் துண்டித்து விட்டாள். தான் என்ன பேசினாலும் சிறிதும் அசராமல் பதிலடி கொடுக்கும் அவ்யுதகண்ணன் மீது அதீத கோபம் கொண்டாலும், அவளது மனதினோரம் ‘இவன் வித்யாசமானவன்’ என்ற எண்ணம் எழாமல் இல்லை.
அவ்யுதகண்ணன் உதட்டோர புன்னகையுடன் அன்னையைப் பார்க்க, அவரோ தீவிர யோசனையில் இருந்தார்.
“என்னமா யோசனை?”
“இல்லை உன்னை எதுக்கு மொன்ஸ்டர்னு சொன்னானு யோசிச்சிட்டு இருக்கிறேன்”
அவன் முறைப்புடன், “இங்க என்ன நடந்துட்டு இருக்குது! உங்க கவலை எதில் இருக்குது!” என்றான்.
அவரோ கையை தட்டியபடி, “கண்டு பிடிச்சுட்டேன்” என்றவிட்டு, “நீ எஸ்.ஜே.சூர்யா மாதிரி பிடிக்காமையும் இல்லை பிடிச்சும் இல்லைனு அவளை குழப்பின தானே! அதான் எஸ்.ஜே.சூர்யானு சொல்லாம அவர் நடிச்ச மொன்ஸ்டர் படத்தோட பெயரை சொல்லி இருக்கா! உன்னையும் டேமேஜ் செய்த மாதிரி ஆச்சுனு” என்று கூறி வாய்விட்டு சிரித்தார்.
அவன் முறைப்புடன், “பார்த்து பார்த்து.. பல்லு சுளிக்கிக்கப் போகுது” என்றான்.
அதை சிறிதும் கண்டு கொள்ளாதவர், “ஆனா ஒன்னு.. உன் கல்யாணத்துக்கு அப்புறம் எனக்கு நல்ல எண்டர்டேன்மென்ட் இருக்குது” என்றார் சிரிப்புடன்.
“என்ன ஒரு ஆனந்தம்! நீங்க அல்லவோ சிறந்த தாய்!” என்று அவன் நக்கல் செய்ய,
அவரோ, “நீங்க பசங்க குள்ள ஒரு பிரெண்டை இன்னொரு பிரெண்ட் கழுவி கழுவி ஊத்தினா, என்ஜாய் செய்து சிரிக்க தானே செய்வீங்க! யூ நோ! மீ யுவர் பெஸ்ட்டு பிரண்டு” என்றார்.
அவர் சொன்ன விதத்தில் மென்னகை புரிந்தவன், “ஆனா மீ! முதல்ல மிமி கல்யாணத்துக்கு ஒத்துக்கணும்!” என்றான்.
“அதெல்லாம் ஒத்துக்குவா.. நாதன் அண்ணா என்னை விட படு தீவிரமா இருக்கார்” என்றவர், “அது என்னடா டால்டி?” என்று கேட்டார்.
“டால்டாக்கு பெண் பால்”
“யூ மீன் டபிள் டி”
“எஸ்” என்றபடி இருவரும் சிரிக்க,
“டாலி வரா” என்ற அறிவிப்போடு அறை கதவை திறந்து உள்ளே ஓடி வந்த ஆதினி, “டாடி படிக்கலாமா?” என்று கேட்டாள்.
மகளை தூக்கி போட்டு பிடித்து தட்டாமாலை சுற்றியவன், “ஓ! படிக்கலாமே” என்றான்.