சில நொடிகளில் சுதாரித்தவள் முறைப்புடன், “என்ன பாட்டு?” என்றாள்.
“என்ன பாட்டா? இல்லை எதுக்கு பாட்டா?”
அவள் சிறு யோசனையுடன், “என்ன பாட்டுனு தானே கேட்டேன்!” என்றாள்.
“என்ன பாட்டுனு எந்த அர்த்தத்தில் கேட்கிறனு கேட்டேன்.. ‘என்ன பாட்டு இது?’னு ஜஸ்ட் பாட்டை பத்தி தெரிந்துக்க கேட்கிறதா இருந்தா, என் மேல் கோபம் இல்லை. அதே ‘இப்போ எதுக்கு பாட்டு?’னு கேட்டா, என் மேல் கோபம் அண்ட் நான் இப்படி நடந்துக்க கூடாது என்ற எச்சரிக்கையும் சேர்ந்து இருக்கும்”
அவனது விளக்கத்தில் சிறு ஆச்சரியம் கொண்டவள் அதை சிறிதும் வெளியே காட்டிக் கொள்ளாமல் மீண்டும் அமைதியான குரலில், “என்ன பாட்டு இதுனு தான் கேட்டேன்” என்றாள்.
மென்னகையுடன், “தேங்க்ஸ்” என்றவன், “இது எந்த படத்திலும் வரும் பாட்டு இல்லை.. சட்டு சட்டுன்னு மாறுற உன்னோட மனநிலையை கணிக்க முடியலைங்கிறதை தான் இப்படி நானா பாடினேன்..
அண்ட் டிரஸ்ட் மீ.. இப்படி யார் கிட்டயும் நான் இதுவரை பாடியது இல்லை.. என்னவோ அந்த நொடியில் தோனவும், சட்டுன்னு பாடிட்டேன்” என்றான்.
“டிரஸ்ட்!” என்று ஒரு நொடி நிறுத்தியவள், “அது கொஞ்சம் உங்க மேல இருக்குதுனு தான் நினைக்கிறேன்” என்றாள்.
“ரியலி!” என்று கண்ணில் மகிழ்வுடன் கூறியவன், “ஆனா கொஞ்சம் தானா?” என்று லேசாக தலை சரித்து மென்னகையுடன் கேட்டான்.
முதல் முறையாக சிறு மென்னகையுடன், “என் அப்பாவை தாண்டி ஒரு ஆணின் மேல் வந்த இந்த சிறு நம்பிக்கை! ரொம்ப பெரிய விஷயம் தான்” என்றாள்.
“தன்க்யூ” என்றவன், “நைஸ் ஸ்மைல்” என்றான்.
சட்டென்று அவளது புன்னகை மறையவும்,
“ஸ்மைல் நல்லா இருக்குனு தானே சொன்னேன்!” என்றவன் சின்ன முறைப்புடன், “முதல்ல நைஸ் ஸ்மைல்னு சொல்லி.. அடுத்து நீங்க அழகு.. அப்படி இப்படினு ப்ளர்ட்(flirt) செய்து ‘ஐ லவ் யூ’ சொல்ற ஆள் நான் இல்லை” என்றான்.
“அதான் முதல் நாளே நான் அழகே இல்லை.. ஓவர் கண்பிடென்ஸ் வேணாம்னு சொல்லிட்டீங்களே!” என்று லேசான முறைப்புடன் கூறினான்.
நன்றாக சிரித்தவன், “நைஸ்னு சொன்னாலும் முறைக்கிற! அழகா இல்லைனு சொன்னாலும் முறைக்கிற! இப்போ நான் என்ன தான் சொல்லணும்?” என்று கேட்டான்.
அவள் பதில் சொல்வதறியாது விழிக்க,
அவன் மென்னகையுடன், “வெளி தோற்றம் எனக்கு பொருட்டே இல்லை.. குணத்திலும் திடத்திலும் நீ பேரழகி தான்” என்றான்.
அவள் அமைதியாக, “தேங்க்ஸ்” என்று கூற,
அவனோ, “இதுக்கு நீ முறைச்சுட்டே, அப்போ தோற்றத்தில் நான் அழகா இல்லையானு கேட்கணும்” என்றான்.
தலையை லேசாக இரு புறமும் அசைத்தவள், “உங்க மனநிலையை கூட எப்போ எப்படி மாறுதுனு கணிக்க முடியலை.. ஆனா ஒன்னு, யூ ஆர் அ கூல் பெர்சன்” என்றாள்.
“ஹ்ஹான்!”
“ஏன்! இல்லையா?”
“எனக்கு நெருக்கமானவங்க கிட்ட மட்டும் எப்போதும் கூல் பெர்சன்”
“ஓ”
“முறைப்பனு நினைத்தேன்!”
“எதுக்கு! என்னை உங்க நட்பு வட்டத்தில் சேர்த்துட்டீங்க.. பிரெண்ட் உனக்கு க்ளோஸ் இல்லையானு கேட்பீங்க”
“தெளிவு தான்” என்றவன், “இந்த கல்யாணத்தில் எனக்கு ஒரே ஒரு கண்டிஷன் இருக்குது” என்றான்.
“என்ன?”
“டாலி.. ஐ மீன் ஆதினியை நம்ம பொண்ணா தான் நீ பார்க்கணும்.. அண்ட் டாலி உன்னை அம்மானு தான் கூப்பிடுவா”
“நம்ம பொண்ணு என்னை அம்மானு தானே கூப்பிடுவா!”
“தேங்க்ஸ்” என்று அவன் மகிழ்ச்சியுடன் கூற,
அவளோ, “நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லலையே!” என்றாள்.
“நானும் ராதாவும் எதனால் பிரிந்தோம்னு கேட்டதா?”
“ஹ்ம்ம்”
“இப்போ நான் சொல்ல விரும்பாத விஷயங்களில் இதுவும் அடக்கம்”
“ஓகே பைன்.. அப்போ கிளம்பலாமா?” என்று கேட்டவள் கையை உயர்த்தி பணியாளரை அழைத்து, “பில்.. தனி தனியே!” என்றாள்.
பணியாளர் அகன்றதும், “ஒரே பில் சொல்லலாமே!” என்றான்.
“நீங்க சொல்ற க்ளோஸ்நெஸ் வரட்டும்”
“அஸ் யூ விஷ்” என்றவன் பணியாளர் வந்து இரு கட்டணத்தொகைகளை கொடுத்துவிட்டு சென்றதும், தனது கட்டணத்தொகையை அவளிடம் நீட்டியபடி, “அஸ் அ டோக்கன் ஆஃப் அவர் பிரெண்ட்ஷிப், என் பில்லை நீ கொடு, உன்னோடதை நான் தரேன்” என்றான்.
அவள் சிறு தோள் குலுக்கலுடன் பணத்தை எடுத்து தரவும், அவனும் பணத்தை எடுத்து வைத்து பணியாளரை அழைத்து கொடுத்தான்.
பிறகு இருவரும் எழுந்து வெளியேறினர்.
“நீ எப்படி வந்த?” என்ற கேள்விக்கு தனது இருசக்கர வண்டியை காட்டினாள்.
அவளது வண்டியை பார்த்தவனின் முகத்தில் சட்டென்று தீவிரம் தோன்றவும், அவள் புரியாமல் பார்த்தாள்.
அவனது பார்வையோ அவர்களுக்கு சற்று தொலைவில் சென்று கொண்டு இருந்த இரு சக்கர வண்டியின் பின்னால் அமர்ந்து இருந்தவனின் உடல்மொழியில் கூர்மையுடன் பதிந்தது.
அடுத்த நொடி வேகமாக நகர்ந்து அருகில் இருந்த இளநீர் வண்டியில் இருந்து காலியான இளநீர் கூடை எடுத்து கூறி பார்த்து பின்னால் அமர்ந்து இருந்தவனின் மண்டையை நோக்கி எறிந்தவன், அடுத்த நொடி இன்னொரு காலியான இளநீர் கூடை எடுத்து ஓட்டுநர் மண்டை நோக்கியும் எறிந்து இருந்தான். இவனது முதல் தாக்குதலில் ஆட்டம் கண்ட வண்டி அடுத்த தாக்குதலில் கீழே சரிந்து சில அடிகள் சாலையை தேய்த்தபடி சென்று நின்றது.
நடந்ததை அம்ரிதா அதிர்வுடன் பார்த்துக் கொண்டு இருக்க, அந்த இரு சக்கர வண்டியின் எதிர் திசையில் இருந்து நடந்து வந்து கொண்டிருந்த வயதான பெண்மணியோ அதீத அதிர்வுடன் நெஞ்சில் கை வைத்தபடி நின்றுவிட்டார். ஏனெனில், பின்னால் அமர்ந்து இருந்தவன் அவரின் தாலி சரடில் கைவைக்க போன போது தான் இந்த நிகழ்வு நடந்து இருந்தது. அவனது கை அவரது தாலி சருடை தொட்டு விடும் தூரத்தில் இருந்த போது தான் நொடி பொழுதில் இந்த சாகசத்தை அவ்யுதகண்ணன் நிகழ்த்தி இருந்தான்.
“அம்ரிதா குவிக்.. அந்த அம்மாவை கவனி” என்று கூறியபடி தனது கைபேசியில் யாரையோ அழைத்தபடி கீழே விழுந்தவர்களை நோக்கி வேகமாக ஓடினான்.
அம்ரிதாவிற்கு நடப்பது புரியவில்லை என்றாலும் அவன் சொன்னதை செய்ய தவறவில்லை. அந்த வயதான பெண்மணி அருகே சென்று அவரை அரவணைத்து தேற்ற ஆரம்பித்தாள்.
ஓடி கொண்டு இருந்தவனோ அழைப்பு எடுக்கப் பட்டதும், “எசக்கி செயின் ஸ்னட்ச்.. ஸ்பாட் அமுல் ஐஸ்-கிரீம் பார்லர் பக்கம்.. குவிக்” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்து கைபேசியை கால்சட்டை பையினுள் வைத்தான்.
அந்த இருவரும் வலியுடன் தட்டுதடுமாறி எழுந்து வண்டியை இயக்கும் முன் அவர்களை நெருங்கி இருந்தவன் இருவரின் கன்னத்திலும் ஓங்கி அறைந்து இருந்தான். இளநீர் தாக்குதலிலேயே லேசாக தலை சுற்றி இருக்க, இப்பொழுது அவ்யுதகண்ணனின் அறையில் கதிகலங்கியபடி மீண்டும் வண்டியுடன் கீழே விழுந்துனர். இருவருக்கும் சுயநினைவு இருந்தாலும் இவனை எதிர்க்கும் வலுவின்றி இருந்தனர்.
அவன் அழைத்த ஐந்து நிமிடங்களில் கான்ஸ்டபிள் எசக்கியும், ஏட்டு விநாயகமும் அங்கே வந்துவிட்டனர். வீரா நகர் காவல் நிலையம் மிக அருகில் இருந்ததால் விரைவாக வந்து இருந்தனர்.
இருவரும் அவ்யுதகண்ணனுக்கு விறைப்பாக வணக்கம் வைத்து அந்த கயவர்களை இழுந்து சென்றனர்.
ஆம்! அவ்யுதகண்ணன், வீரா நகர் காவல் நிலையத்தின் துணை ஆய்வாளர்(SI – Sub inspector). அந்த காவல் நிலையத்தில் அவனே உயர் அதிகாரி.
அவர்கள் சென்றதும் அந்த வயதான பெண்மணி மற்றும் அம்ரிதாவை நோக்கி சென்றான்.
அந்த பெண்மணி கையெடுத்து கும்பிட்டபடி, “ரொம்ப நன்றி சார்” என்று கூற,
இவனோ அவரது கையை கீழே இறக்கியபடி, “நான் என் கடமையை தான் செய்தேன்” என்றான்.
“காலம் ரொம்ப கெட்டு கிடக்குது.. தனியா வரவே பயமா தான் இருக்குது.. இன்னைக்கு என் பேரனுக்கு பொறந்தநாளுன்னு கோயிலுக்கு போயிட்டு வரேன்”
“நான் இங்கே வந்த பிறகு இதெல்லாம் நின்று இருந்தது.. இப்போ திரும்ப களையெடுப்பு வேலையை செயல் படுத்தனும்னு புரியுது.. கண்டிப்பா நான் அதை செய்வேன்.. நீங்க பயம் இல்லாம இருங்க.. ஆனா இந்த டைமில் இனி தனியா வெளியே வராதீங்க”
“கெஸ்ட் வந்து இருந்தாங்க.. அதான் இப்போ தான் வர முடிஞ்சுது.. என் கணவருக்கு உடம்பு முடியலை, இல்லனா அவர் கூட வந்து இருப்பார்”
“வீடு எங்க இருக்குதுமா? நான் என் பைக்கில் விடவா?”
“வேணாம் சார்.. வீடு ரொம்ப பக்கம் தான்.. அடுத்த திருப்பத்தில் நாலாது வீடு”
“சரிமா பார்த்து போங்க.. என் நம்பர் சொல்றேன்.. வீட்டுக்கு போயிட்டு எனக்கு போன் போட்டு சொல்லுங்க” என்று கூறி தனது கைபேசி எண்ணை கூறினான்.
அவனது எண்ணை குறித்துக் கொண்டவர் அம்ரிதாவிற்கும் நன்றி கூறி விடை பெற்று கிளம்பினார்.
அவர் கிளம்பியதும் இவன் அம்ரிதாவை பார்க்க, அவளோ இறுகிய முகத்துடன் அவன் முகத்தை பார்க்காமல், “எனக்கு கொஞ்சம் யோசிக்கணும்” என்றாள்.
அவன் புரியாமல், “என்ன யோசிக்கணும்?” என்று வினவ,
“எனக்கு போலீஸ்னாலே அலர்ஜி.. சுத்தமா பிடிக்காது.. ஸோ..” என்று இழுத்து நிறுத்தினாள்.
‘திரும்ப முதலில் இருந்தா!’ என்று மனதினுள் நினைத்தவன், “டேக் கேர்” என்று கூறி நகர்ந்துவிட்டான்.
அவன் அப்படி சட்டென்று கிளம்பியதில் அவன் மீது கோபம் அவள் கொள்ள, அவளது மனசாட்சியோ, ‘வேற என்ன செய்யணும்னு நினைக்கிற! உன்னிடம் கெஞ்சனுமா?’ என்றதில் சிறிது அதிர்ந்து தான் போனாள்.
ஆனால் அடுத்த நொடியே, ‘நோ.. எனக்கு போலீஸ் வேணாம்’ என்றாள்.
‘அவன் நீ சந்திச்ச போலீஸ் மாதிரி இருப்பான்னு நினைக்கிறியா?’ என்று அவளது மனசாட்சி கேள்வி எழுப்ப,
‘போலீஸ் எனக்கு வேண்டவே வேண்டாம்’ என்று பிடிவாதத்துடன் மறுத்தவள் அவன் சென்ற திசையை கூட சிறிதும் திரும்பி பார்க்காமல் தனது வண்டியை கிளம்பி வீட்டிற்கு சென்றாள்.