“ஹலோ ட்ரில் மாஸ்டர். வீட்டுல மாமனார் மாமியார் வந்திருக்காங்க. மரியாதை இல்லாம வேலைக்கு வந்திருக்கீங்களே? இப்படி இருந்தா குடும்பம் எப்படி உருப்பட? பொறுப்பான மூத்த மருமகளா நீங்க?…” என மெர்லினிடம் சரணடைய,
“என்னவாம் உனக்கு? விஷயத்தை சொல்லு…” என்றாள் அவள் அவனின் குறுஞ்செய்திக்கு பதிலாக.
“பெருசா என்ன கேட்டுட போறேன். உங்க வீட்டு மைனரை ஈவ்னிங் வரைக்கும் எனக்கு கால் பண்ணாம இருக்க சொல்லுங்க. போதும் எசமான்…” என வாய்ஸ் நோட் அனுப்ப அதை கேட்ட மெர்லின் சிரித்துவிட்டாள்.
“நீ எப்போ கிளம்பற பிரகாஷ்?…” என்று கேட்டவள்,
“நான் பார்த்துக்கறேன். நீ போனை சைலன்ட்ல போட வேண்டியது தானே? இது ஒரு விஷயமா?…” என கேட்க,
“நான் நைட் அங்க ரீச்சாகிடுவேன். மெசேஜ் வந்தா பார்க்காம இருக்க முடியலை. எல்லாரும் அங்க இருக்கீங்க. வேலையே ஓடலை….” என்றவன் பெருமூச்சில் சிரித்தவள் நிதர்ஷனாவிற்கு அழைத்து,
“ஷிவேஷ் இன்னைக்கு அவன் ஹோம்வொர்க் எல்லாம் முடிச்சா தான் நாளைக்கு பர்த்டே செலிபரேஷன். அவன்கிட்ட சொல்லிடு நிது. புரியுதா?…” என்று சொல்லி வைத்துவிட்டாள்.
அதன்பின் எங்கே அலப்பரைகள்? சின்னவன் ஒருபுறம் அமர்ந்து படிக்க, நிதர்ஷனா தானும் அமர்ந்துகொண்டாள் தன் புத்தகத்தை வைத்துக்கொண்டு.
மாலையானதும் மெர்லின் வந்துவிட நேராக சென்று கணேசனை பார்த்து வரவேற்று நலம் விசாரித்துவிட்டு வந்தாள்.
சரஸ்வதியிடம் பேசிக்கொண்டிருக்க ஸ்ரீதருக்கும், சரஸ்வதிக்கும் போன் வந்தது கோமகளிடமிருந்து.
எதற்கு இத்தனை வலிந்து அழைக்கின்றனரோ என சரஸ்வதி கேட்க ஸ்ரீதரும் தோளை குலுக்க,
“ஆமாம்மா, நீங்களும் அப்பாவும் போய்ட்டு வாங்க…” என ஸ்ரீதர் சொல்ல,
“அவங்க எப்படி தனியா போவாங்க? நீங்க தான் போய் ட்ராப் பண்ண போறீங்க. அப்படியே ரிசப்ஷன் அட்டன் பண்ணிட்டு வாங்க. நான் நிதுவையும், ஷிவேஷையும் கூட்டிட்டு மால் போய்ட்டு வரேன்…” என்றாள் மெர்லின்.
பின் அவளின் முடிவே இறுதியாக ஸ்ரீதருடன் கிளம்பி சென்றனர் சரஸ்வதியும், கணேசனும்.
சென்ற இடத்தில் இளங்கோவன் பகிர்ந்த விஷயத்தை கணேசன் எதிர்பார்க்கவே இல்லை.
“இல்லை அது வந்து..” என அவர் தயங்க சரஸ்வதிக்கு தன் மகளை எண்ணி தான் பயமெல்லாம்.
“எப்படா காலேஜ் முடியும்னு இருக்கு…” என மூச்சுக்கு முன்னூறுதரம் சொல்லுபவளை எண்ணி கவலையாகி போனது.
“இல்லை பொண்ணு பேங்க் எக்ஸாம்க்கு பிரிப்பேர் பன்றா. ஒரு வேலையில சேர்ந்த அப்பறம் தான் கல்யாணம் பண்ணலாம்ன்னு…” என்று கணேசன் யோசனையுடனே சொல்ல,
“நாங்க வீட்டுல கலந்து பேசிட்டு சொல்றோம்…” என்று சொல்லிவிட்டான் ஸ்ரீதர் ஒரேடியாக.
“ஸ்ரீ…” என சரஸ்வதி திகைக்க,
“ஒரு டூ மினிட்ஸ். நாங்க பேசிட்டு சொல்றோம்…” என்று பெற்றோரை தனியே அழைத்து வந்தான் ஸ்ரீதர்.
“என்னப்பா, என்ன திடீர்னு இப்படி சொல்லிட்ட?…” என்றார் கணேசன்.
“ஏன் ப்பா நான் எதுவும் தப்பா சொல்லிட்டேனா?…” என ஸ்ரீதர் கேட்க,
“அதுக்கில்ல, நீ யோசிக்காம சொல்லமாட்ட. அதான்…” என அவர் இழுக்க புன்னகைத்தான் ஸ்ரீதர்.
“நல்லா யோசிச்சு தான் பேசிட்டு சொல்றோம்ன்னு சொன்னேன். ஏன் காரணமே இல்லாம வர்ற நல்ல வரனை தட்டிவிடனும்? நல்ல இடம். அதுவும் ஒன்னுக்கு ரெண்டாவது தடவையா தேடி வந்திருக்கு. யோசிப்போமே. சட்டுன்னு வீசி எறிஞ்சிடக்கூடாது பாருங்க…” என்றான் அவன் பொறுப்பாய்.
“அப்படின்னா சொல்ற?…” என யோசித்தபடி மனைவியை பார்த்தார்.
“என்னம்மா, நீங்க என்ன நினைக்கறீங்க?…” என அவன் கேட்க,
“என்ன சொல்றதுன்னே தெரியலை ஸ்ரீ. நிதுவை நினைச்சு தான் யோசனை…”
“அதான் சொல்றேன். எனக்கு இதுல சம்மதம். அதுக்காக எல்லாரும் சரின்னு சொல்ல முடியாது. பிரகாஷும் வந்திருவான் நாம போறதுக்குள்ள. அதனால வீட்டுக்கு போய் எல்லார்கிட்டையும் கலந்து பேசிட்டு சொல்லுவோம்…” என்றவன்,
“நீங்களே அவங்ககிட்ட சொல்லிருங்கப்பா. நீங்க சொல்றது தான் சரி…” என்றான் தந்தையிடம்.
“என்ன சொல்ல?…” எனற மகனின் முகம் பார்க்க,
“வீட்டுல கலந்து பேசிட்டு நாளைக்கு சொல்றோம்ன்னு சொல்லுங்க. நாமளும் உடனே சரின்ற மாதிரியும் சொல்லக்கூடாதுல…” என்றான் தந்தைக்கு தகப்பனாய்.
“ஆமாமா…” என்ற கணேசன் மகன் சொல்லிக்கொடுத்ததை இளங்கோவனிடம் சொல்லிவிட்டு ‘எப்படி? சரியா?’ என்பதை போல பார்த்து சிரிக்க சரஸ்வதிக்கு குபீரென சிரிப்பு வந்தது கணவரின் பார்வையில்.
“ம்மீ சரஸூ…” என ஸ்ரீதர் தாயின் கையை பிடித்து அடக்க முயல,
“சத்தியமா சிரிப்பு வருதுடா…” என சொன்னாலும் இன்னொரு பக்கம் மகளை எண்ணி பயம் தான்.
ஒருவழியாக பேசி கிளம்பி வீட்டிற்கு வந்து சேரவே தாமதமாகிவிட்டது. அவர்கள் வருவதற்குள் ஷிவேஷ் நிதர்ஷனாவுடன் சென்று படுத்துவிட்டான்.
பிரகாஷ் அப்போது தான் வந்து சேர்ந்திருந்தான். ஹாலில் அமர்ந்து மெர்லினுடன் பேசிக்கொண்டிருக்க வந்ததுமே ஸ்ரீதர் விஷயத்தை சொல்லிவிட்டான்.
“என்ன திடீர்ன்னு?…” என மெர்லின் கேட்க,
“நிதுக்கிட்ட கேட்க வேண்டாமா?…” என்றான் பிரகாஷ்.
“முதல்ல நாம பேசி ஒரு முடிவுக்கு வருவோம் சரியா, செய்யலாமான்னு. அடுத்து அவகிட்ட சொல்லுவோம். வேண்டாம்னா நிது காதுக்கே இந்த விஷயம் போகவேண்டாம். இப்படியே இந்த பேச்சோட நிப்பாட்டிப்போம்…” என்றான் ஸ்ரீதர்.
அதன் பின்னர் மாற்றி மாற்றி பேசியதில் திருமொழியை மறுக்க எவ்வித காரணங்களும் இல்லை அவர்களுக்கு.
சரஸ்வதிக்கு கூட சம்மதமே. நல்ல குடும்பம். பாசாங்கில்லாத, பகட்டை காண்பிக்காத மனிதர்கள்.
மகள் வாழ நல்ல இடம் என தாயாய் அவருக்கு முழு திருப்தி. ஆனால் அவள் சம்மதிக்க வேண்டுமே?
அதன்பின் ஒருமனதாக நிதர்ஷனாவிற்கு திருமணம் செய்துவிடலாம் என்று கூட்டாய் முடிவெடுக்கப்பட்டது.
சம்பந்தபட்டவளோ ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க இந்த பேச்சின் தீவிரத்தில் நள்ளிரவில் ஷிவேஷிற்கு வாழ்த்து தெரிவிக்கவே மறந்திருந்தனர்.
காலையில் எழுந்ததும் கணேசனை தவிர்த்து அத்தனைபேரையும் நிதர்ஷனா பிடிபிடி என பிடிக்க,
“கோழி குழம்பாக போகுது. இது தெரியாம இவ சவடாலுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை…” என தலையில் அடித்துக்கொண்டாள் மெர்லின்.
காலை உணவு முடிந்ததுமே வீட்டை அலங்கரிக்க ஆரம்பிக்கவேண்டும் என அடுத்த திட்டத்திற்கு நிதர்ஷனா தாவ,