“இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்..?” என வாக்குவாதம் செய்யாமல் கேள்வியில் நிறுத்த அதே டூ மினிட்ஸ்ஸை சொன்னால் குதறி விடுவாள் என அறிந்து,
“இதோ வந்துட்டேன் இரு..” என கூறி அறையில் இருந்து வெளியே சென்றான்.
‘ஈகிள் விஷன்’ கண்காணிப்பு கேமராகளும் இதர கருவிகளும் இந்த இரண்டு ஆண்டினில் மார்கெட்டில் மெல்ல மெல்ல சூடு பிடித்து பெயரறிந்த பிராண்ட்டாக வரபெற்றது என்றால் அது தினகரனின் உழைப்பால் மட்டுமே சாத்தியம் ஆனது..!!!
அனன்யா பிரச்சனை தீர்ந்த சூட்டுடனே யாருக்கும் காத்திராமல் இரு வீட்டாரையும் பேச வைத்து கமலினியை திருமணம் செய்துக் கொண்டான்.
“ஏன் இவ்வளவு அவசரம்..” என கமலி கேட்டபோதும்,
“என்னோட ஃபேக்டரி திறக்கணும் கமலி.. ஆனா அதுக்கு முன்னாடியே நீ என் ஒய்ஃப் ஆகணும்.. முன்ன மாதிரி இருந்து இருந்தால் உங்க அப்பாவை வெறுப்பேத்தவே முதல்ல ஃபேக்டரி திறக்க தான் நினைச்சு இருப்பேன்.. ஆனா இப்போ அவர் நான் இப்ப என்ன நிலைமையில் இருக்கேனோ அப்படியே அக்செப்ட் பண்ணி உன்னை கல்யாணம் பண்ணி கொடுக்கணும்னு தோணுது.. நம்ம லைஃப்பை இங்க இருந்தே ஸ்டார்ட் பண்ணனும்..”
என அவன் சொல்ல இவ்வளவு தூரம் யோசிப்பானா என்று வியப்பாக இருந்தது.
ஆனால் அவர்களே எதிர்பாரா வண்ணம் சுந்தரமூர்த்தி எந்த மறுப்பும் சொல்லாமல் மகளின் விருப்பம் தான் என பச்சைக் கொடி காட்டிவிட சிவசுப்ரமணியம் தாத்தாவின் தலைமையில் தினகரன் – கமலினி திருமணம் சிறப்பாய் நடந்து முடிந்தது.
திருமணம் முடிந்த பின்னரும் அவள் தங்கள் கடையை கவனிப்பதை விடவில்லை. அது அவளின் உலகம்..!! அவளின் விருப்பம்..!!
அவன் ஆசைப்பட்டபடியே தொழிற்சாலை திறந்து உற்பத்தியும் விற்பனையும் நன்றாக நடந்தது.
இவனை வேண்டாம் என மறுத்த ஒதுக்கிய பல உறவுகளும் சுற்றமும் இன்று இவனோடு ஒன்றவும் உறவு பாராட்டவும் ஆசைக் கொண்டு தேடி வருகிறது..!!! மனிதர்கள் மனம் தான் எத்தனை விசித்திரமானது..!
ஆனால் அதனால் அவன் குண இயல்பில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
சின்ன சின்ன உரசல்களும் நிறைய நிறைய காதலுமாக அவர்கள் வாழ்க்கை நகர்ந்தது.
இன்று ஆதவனின் நிச்சயதார்த்த விழா.. அதற்காக அதிகாலையிலேயே கிளம்பி தயாராகி இருந்தவளை ஒரு ‘சின்ன வேலை’ என தொழிற்சாலைக்கு அழைத்து வந்தவன் மணிக் கணக்காய் பார்த்துக் கொண்டிருக்கிறான்.
“என்ன கமலி.. கிளம்பியாச்சா..? இன்னும் எவ்வளவு நேரம்..!! பாக்கியம் அக்கா என் முகத்தை தான் பார்த்துட்டே இருக்காங்க..”
என மறுமுனையில் அவசரப்படுத்தும் அம்பிகாவிடம்,
“இதோ வந்துட்டே இருக்கோம் அம்மா.. டூ மினிட்ஸ்..”
என கணவனை போலவே சொல்லி சமாளித்து வைத்தவள் அவனின் அறையில் இருந்து வெளியே வர தினகரனும் குட்ஸ் அனுப்பி வைத்துவிட்டு ‘ஹப்பாடா’ என அங்கே வந்தான்.
“என்னங்க..” என்று அவள் மீண்டும் பொரிந்து தள்ளும்முன் அவள் தோள்களை பற்றி,
“முடிஞ்ச்சு.. பேச நேரம் இல்ல.. வா வா..” என இழுத்துக் கொண்டு காரில் புறப்பட உம்மென்று வந்தளின் முகத்தை கண்டு,
“அழகா இருக்கியே டி..!!! என் செல்ல திம்ஸு..” என உல்லாசமாய் சொல்ல திருமணத்திற்கு பின் மேலும் ஒரு சுற்று பூசி செழித்த அழகில் சிவந்து நிற்கும் செந்தேனாய் காட்சியளித்த கமலி,
“போயா..” என கழுத்தை ஒடித்து முறுக்கிக் கொண்டாள். அதில் பெருமூச்சு விட்டவன்,
“ஆனாலும் உன் நொண்ணை நீ ரொம்ப பாராட்ட வேணாம்.. அவனே ஏன்டா நிச்சயம் எல்லாம் வைக்கிறீங்க நேரா கல்யாணம் பண்ண கூடாதான்னு முறைச்சுட்டு திரியிறான்.. அவன் நான் வந்தா தான் மோதிரம் போடுவேன்னு சொன்னானாக்கும்…!!! ஏதோ அவன் வாங்கி வைச்ச மோதிரம் தவறுதலா என் கிட்ட மாட்டிக்கிச்சு.. இதுக்காக வேணா.. காத்திருக்கலாம்..”
என பாக்கெட்டில் இருந்த சிறு நகை பெட்டியை காட்டி அசால்ட்டாக சொல்ல அதிர்ந்து அவனிடம் திரும்பியவள்,
“அடப்பாவி… ஏன் என்கிட்ட சொல்லவே இல்ல..” என கேட்க,
“இப்பவே இந்த குதி குதிக்கிற.. இது தெரிஞ்சா என்னை கொன்றுக்க மாட்ட.. அதான்..”
என்றுவிட்டு அவள் இன்னும் டெரர்ராக முறைக்கவும்,
“ச்சில்.. வாட்சை பார்.. இன்னும் நேரம் இருக்கு.. நாம ஃபங்ஷன் தொடங்கும் முன்னாலேயே போயிடுவோம்..”
என்றுவிட்டு, ” என்ன..? என் நண்பன் தான் உலகத்தில் உள்ள அத்தனை கெட்ட வார்த்தையும் சொல்லி என்னை திட்டிட்டு இருப்பான்..” என சாதாரணமாக சொல்ல கமலினி கோபம் மறந்து பக்கென்று சிரித்து விட்டாள்.
தினகரன் கூறியது போலவே மண்டப அறையில் கோர்ட் ஷூட்டில் தயாராகி நின்றிந்த ஆதவன் தீனாவுக்கு அழைத்தபடி வாய்க்குள் வசவு மழையை வாரி வழங்க அவனின் பத்தாவது அழைப்பை கருணைக் காட்டி ஏற்ற தினகரன்,
“மச்சான்.. இதோ வாசலில் தான் இருக்கேன்.. உள்ள வரேன்..”
என சொல்லி வைக்க,
“ஹப்பாடா.. வந்து தொலை டா.. மகராசா..” என நிம்மதியாய் மூச்சு விட்டான்.
அந்த வயதிலும் தன் பேரனின் நிச்சய விழாவில் தானே அனைவரையும் வரவேற்று உற்சாகமாய் பேசிக் கொண்டிருந்தார் சிவசுப்ரமணியம்.
அவர் அருகில் சுந்தரமூர்த்தியும் அவருடன் பேசிக் கொண்டு லிங்கேஷ்வரனும் மகிழ்ச்சியாய் நின்றிக்க,
‘என்னென்ன செய்ய வேண்டும்..’ என தன் சித்தப்பாவிடம் கேட்டு விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருந்தான் முகிலன்..!!
தினகரன் – கமலினி வந்ததும்,
“என்ன தீனா.. நாங்களே வந்துட்டோம்.. நீங்க இப்படி லேட் பண்ணலாமா..? எப்போ கிளம்புனீங்க..! இன்னைக்கு கூட ஃபேக்டரி போகணுமா..”
என்று லிங்கா கடிந்துக் கொள்ள,
“விடு லிங்கா.. அதான் வந்துட்டாங்கல்ல.. தீனா நீங்க போய் ஆதவனை பாருங்க.. நீயும் போ ம்மா..” என்று சுந்தரமூர்த்தி தன் மாப்பிள்ளைக்கு பரிந்து பேச,
“சரிங்க மாமா.. இதோ வந்திடுறேன்..”
என அவனும் நல்ல பிள்ளையாக உள்ளே சென்று விட்டான்.
“ஹப்பாடா.. கமலி வந்துட்டியா..? என்ன டி.. இவ்வளவு நேரம்..!! இப்படி வா.. இந்த புடவையில் அழகா இருக்க டி..”
என படபடவென்று பேசியது வேறு யாருமில்லை சித்ரா தான்..!!
கோபம், தாபங்களும் மனகஷ்டங்களும் ஆயிரம் வந்தாலும் ஒரெடியாய் முறிந்துவிடுவது அல்ல சில உறவுகள்..!! நாள் முடிவில் ஒருவரை சார்த்தே மற்றவரின் வாழ்க்கை பின்னி இருக்கிறது. (www.theseedpharm.com) காலத்தின் போக்கில் பிணக்குகளை மறந்து உறவை முதன்மை படுத்துவதும் மனித வாழ்வில் இயல்பான ஒன்றே..!!
“நல்லா இருக்கா அத்தை..” என மீண்டும் ஒரு முறை தன்னை பார்த்துக் கொண்டு மகிழ்ந்தவள்,
“வந்தாச்சு.. தயாராகிட்டு இருக்கு.. போய் பார்த்துட்டு வேகமா ஓடியா..?? உனக்கு கொஞ்சம் வேலை இருக்கு..”
என்று சொல்லியே அனுப்ப,
“சரிங்க அத்தை.. இதோ வந்திடுறேன்..” என மணமகளை காண சென்றாள்.
ஆதவனின் வருங்கால மனைவி க்ரித்திகா வெல்வெட் துணியில் மிகுந்த வேலைப்பாடுகள் கொண்ட லெஹன்காவின் தேவதையாக மின்ன அவளை சுற்றி தான் அபூர்வா, சங்கவி, வைஷ்ணவி, அனன்யா நால்வரும் நின்றிருந்தனர்.
“ஹாய் க்ரித்தி.. செம்ம அழகா இருக்கீங்க போங்க.. ஆதி ரியலி லக்கி தான்..”
என நுழைந்ததுமே சிலாகித்து சொல்ல அவள் முகம் சிவந்தாள்.
“தாங்க்ஸ் கமலி.. ரொம்ப நெர்வஸ்ஸா இருக்கு..”
என்று சொல்ல,
“அதெல்லாம் கொஞ்ச நேரம் அப்படி தான் இருக்கும்.. ஆதவனை பார்த்ததும் எல்லாம் மறந்துடும்..”
என்று சண்டைக்கு கிளம்பிய அனன்யாவும் அவளை அமோதித்து மற்றவரும் நிற்க,
“யாரது..?? நீங்களா..!! பெரியவங்க பேசுற இடத்தில் லிட்டில் பிரின்ஸஸ்களுக்கு என்ன வேலை.. !! வெளிய ஓடி போய் விளையாடுங்க.. ஓடுங்க.. ஓடுங்க..”
என கமலினி சீண்டவும்,
“ஓய்.. என்ன நக்கலா..?? ஆதவனும் கமிட் ஆகியாச்சு.. அடுத்து எங்க கல்யாணம் தான்.. மறந்திடாத..”
என்று அபூர்வா வேண்டுமென்றே மிதப்பாய் சொல்ல கமலினியிடம் செல்லுமா என்ன..?!
“ஹோ.. அந்த ஆசை வேற இருக்கா.. தாராளமா பண்ணிக்கோ.. ஆனா என் கொழுந்தனுக்கு இப்போதைக்கு கல்யாணம் பண்ற ஐடியா எங்களுக்கு இல்ல பா..”
என்று அசால்ட்டாக அவளை லாக் செய்துவிட்டு அங்கிருந்து செல்ல இதனை எதிர்பாராததால் அபூ திகைத்து நின்றாள் என்றால் மற்றவர்களுக்கு சிரிப்பு தாளவில்லை.
தான் அறிந்த முகங்களை எல்லாம் கண்டபோது நலம் விசாரித்தபடி வந்த கமலினி அப்போது வருகை தந்த தன் நாத்தனார் ஸ்வர்ணாவையும் அவள் கணவரையும் கண்டதும்
பெரிய புன்னகையோடு,
“வாங்க.. வாங்க அண்ணி.. வாங்க அண்ணா..”
என்று வரவேற்றவள் அவர்களின் இரண்டு மாத குழந்தையை தன் கையில் வாங்கிக் கொண்டு,
“மண்டபத்தில் பிள்ளை மேல கண்ணு படும்ன்னு அத்தை தூக்கிட்டு போக வேண்டாம்னு தான் சொன்னாங்க.. நீ பார்க்க ஆசை படுவன்னு தான் தூக்கிட்டு வந்தேன்..”
என்று மனதார சொல்ல அகமும் முகமும் மலர,
“சோ ஸ்வீட் அண்ணி நீங்க..” என்றாள். பல வருடங்களுக்கு பின்னான கர்ப்பம் என்பதால் கர்ப்பக் காலம் முழுவதுமே தாய் வீட்டில் தான் இருந்தாள் ஸ்வர்ணா.
அங்கே இருந்த வரையில் கமலினி தான் குழந்தையையும் ஸ்வர்ணாவையும்
அப்படி பார்த்துக் கொண்டாள். அதிலே குழந்தை கண்ணன் மீது அத்தனை பிரியம் அவளுக்கு..!!!
‘சீக்கிரமே எங்க கமலினிக்கும் ஒரு குட்டி கண்ணனை கொடுத்திடு முருகா..’
குழந்தையை கொஞ்சிக் கொண்டிருந்த தன் தம்பி மனைவியை பார்த்தபோது ஸ்வர்ணா மனம் ஆசையாய் வேண்டுதல் வைத்தது.
அன்பிற்கு பிரதி அலாதி அன்பை தவிர வேறென்ன இருக்க முடியும்..!!!
மணமகன் அறையில்,
“மச்சான்..” என பாசமாய் அழைத்தபடி நுழைந்தவனை வெட்டவா குத்தவா என்னும் வகையில் பார்த்த ஆதவன்,
“கிராதகா..!! கடைசி நிமிஷம் வரை.. ஒரு பதைபதைப்புலயே வைச்சு இருப்பியா என்ன..!! உனக்கெல்லாம் பொண்ணு கொடுத்ததே தப்பு டா..”
என்று சபிக்க தொடங்க,
“சரி.. விடுடா.. மாப்பிள்ளை ரெடியாகிட்ட.. ஸ்டேஜ்ல போய் கலக்கலா நிற்க வேண்டாம்.. வா.. வா..” என தோளோடு அணைத்து வெளியே அழைத்துச் சென்றான்.
மறுபுறம் க்ரித்திகாவை அழைத்துக் கொண்டு அவளின் தோழிகளும் உறவு பெண்களும் கூடவே நம் நால்வர் அணியும் நடந்துவர அனன்யாவை கண்டதும் அங்கிருந்த பெண்மணிகளில் ஒருவர்,
“இந்த பொண்ணு தானே..!! அது..!! ஏதோ பையனை காதலிச்சு அவன் பல பொண்ணுங்களை ஏமாத்தினவன்னு தெரிஞ்சு நியூஸல வந்து பெரிய பிரச்சனை ஆனது..”
கிசுகிசுப்பாய் கேட்க மெதுவாக பேசினாலும் அனன்யா காதிலும் விழுந்தது.
அவள் அருகில் இருந்த மற்ற பெண்ணோ,
“ஆமா.. அந்த புள்ள தான்.. பார்த்து மெதுவா பேசு.. ஆனா இப்போ போலீஸ் ஆக போகுதாம் பா அது..!! கவர்மென்ட் எக்ஸாம்ல பாஸாகி போன மாசம் நியூஸ்ல கூட வந்துச்சே..!!”
யூபிஎஸ்சி பரீட்சையில் அவள் தேர்வான கதையை சொல்ல வம்பிழுக்க கேட்ட பெண்ணின் வாய் தன்னால் மூடிக் கொண்டது.
இது போன்ற சம்பாஷனைகளை பலமுறை கேட்டாகிற்று. இவை அனைத்தையும் இதழில் புன்னகையோடு அசட்டையாய் கடப்பதும் அவளின் வழமையானது.
வள்ளுவன் குறளை நம் வாழ்க்கைகேற்ப திருத்தி,
இன்னா செய்து மக்களின் கன்டென்டாக மாறினாலும் அவை மறக்க நம் எதிர்கால செயலின் ‘கன்டென்ட்’ இருக்க வேண்டும் என்பதை மனதில் நிறுத்தினால் இன்பம் என்று வாழ்விலே.!!
ஆதவன் – க்ரித்திகாவை சபையில் அமர்த்தி நிச்சயப்பத்திரம் வாசிக்கப்பட்டு விழா இனிதே துவங்க எல்லையல்லா மகிழ்ச்சியுடன் அவர்களை நிழல் போல் தொடர்ந்த நம் பயணத்தில் இத்துடன் விடைபெறுவோம்..!!
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.