மா..சீக்கிரம் வா..ரொம்ப பசிக்குது.என்று சிறு பிள்ளை போல் தட்டை கையில் வைத்து கொண்டு தன் தாயை அழைத்தான் ப்ரனேஷ்…
டேய் ..கொஞ்சம் அமைதியா இரு.இதோ எடுதுட்டு வரேன் என்று குரல் கொடுத்தார் அவனது அன்னை…
சீக்கிரம்மா..ரொம்ப பசிக்குது..என்றான்..உண்மையாக அவனுக்கு நன்றாக பசித்தது..ஒருவாரமாக சரியாய் சாப்பிடாமல்,தூங்காமல் அலைந்தவன்,பசி என்ற ஒன்றை மறந்தே போனான்…கையில் கிடைத்ததை சாப்பிட்டு வந்தான்..இன்று அவனது குல்பியை பார்த்த சந்தோஷம்,இவ்வளவு நாள் தெரியாமல் இருந்த பசி, இன்று தான் இருப்பதை அவனுக்கு உணர்த்தியது..அவனுக்கு அகோர பசியாய் இருந்தது..விட்டால் அவன் ஒருவனே சமைத்த அனைத்தையும் தின்று விடுபவன் போல்,அவசரபடுத்தினான்…
டேய் கண்ணா அந்த சமி பொண்ணையும் கூப்பிடுடா..அவளும் இன்னும் சாப்பிடல…
என்னது அவ இன்னும் சாப்பிடலயா!என்றவன் அவளை தேடிச் சென்றான்…அவளோ சற்றுமுன் நடந்ததையே நினைத்து கொண்டிருந்தாள்…
ப்ரனேஷ் அவள் முகமெங்கும் முந்தமழை பொலிந்தான்..விடு..விடு பாசு என்று அவனை தள்ளி விட்டு எழுந்தாள்…
ஏய் குல்பி நீ எப்படி இங்க..என்னால நம்ப முடியல…நான் உன்ன கானுமேனு எல்லா இடத்துலயும் தேடுனா,நீ என் வீட்ல இருக்க..சத்தியமா என்னால நம்ப முடியல..உன்ன கானுமேனு நான் எவ்ளோ பயந்துட்டேன் தெரியுமா!இந்த ஒருவராம எல்லார்கிட்டயும் உன் போட்டோவ காட்டி தேடிட்டு இருக்கேன்..நீ என்னடானா என் வீட்டல வந்து உட்காந்துருக்க..ஏன் குல்பி எனக்கு ஒரு போன் பண்ண கூட உனக்கு தோனலயா..!அவ்ளோ வேண்டாதவனா ஆய்டேனா..!ஆதங்கமாய் கேட்டான்…
அவள் எதுவும் கூறாமல் அமைதியாய் நின்றாள்..அவளுக்குமே இவனை இங்கு கண்டது அதிர்ச்சி தான்..இவன் முகத்தையே பார்க்க கூடாது என்று அவள் நினைத்திருக்க, அவன் வீட்டிலே வந்து தங்க வேண்டிய தன் நிலையை எண்ணி வருந்தினாள்…
சொல்லு குல்பி..என்கிட்ட சொல்ல கூட தோனலயா!என்றவன்”அதுசரி நீ எப்படி இங்த வந்த,யாரு உன்ன கூட்டிட்டு வந்தா”என்று தன் அடுத்த சந்தேகத்தை கேட்டான்..
அது..அது…என்று இழுக்க..
டேய் பிரனா என்று அழைத்து கொண்டே வந்தார் பூங்கோதை…என்னம்மா ஒரு காபி குடுக்க இவ்வளவு நேரமா,என்றவர் டேய் பிரனா எழுந்து குளிச்சிட்டு வாடா..சாப்பிடலாம் என்றார்…
மா…இந்த பொண்ணு யாரு..தெரியாத மாதிரி கேட்டான்…
ஓ..மறந்துட்டேன் பாத்தியா..இவ ரவீனா ப்ரண்டாம்..அவ தான் கூட்டிட்டு வந்தா..பேரு சமி…
சமி?
ஆமாண்டா..சும்மா கேள்வி கேட்காம சீக்கிரம் குளிச்சிட்டு வா..என்றவர்” நீ வாம்மா”என்று அவளை அழைத்துச் சென்றார்…
ஹலோ மேடம்..என்ன யோசனை..என்றான் அவளின் அறைக்கு முன்னே நின்று…
அவள் அவனையே பார்க்க, என்கூட பேசவே கூடாது மௌன விரதம் இருக்கியா…?
ஆமா..என்றாள் பட்டென்று..
காரணம் தெரிஞ்சிக்கலாமா?
எனக்கு உன்ன புடிக்கல..இது உன்னோட வூடுனு தெரிஞ்சினுருந்தா நான் இங்க வந்துனுருக்கவே மாட்டேன் என்றாள் கோவமாய்…
அவள் கூறியதை கேட்ட ப்ரனேஷ் மனதளவில் முற்றிலும் அடிவாங்கி போனான்..இருமனமும் நேசித்தால் மட்டுமே அது காதல்..இவன் இங்கு அவள் மேல் பைத்தியமாய் சுத்த, அவளோ அவனை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை..அந்த என்னமே அவனை கொன்றது…அவனது முக மாற்றத்தை கண்டு அவளுக்கே பாவமாய் இருந்தது…அதேநேரம் தன் நிலையை நினைத்து அவளுக்கு வருத்தமாய் இருந்தது…
ஸாரி என்றவன் “அம்மா சாப்பிட கூப்பிட்டாங்க” என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றான்..
அங்கே பூங்கோதை அவனுடைய தட்டில் உணவு பறிமாற சற்று முன் இருந்த கொல்லை பசி இப்போதே காணாமல் போயிருந்தது…
டேய் எங்கடா அந்த பொண்ணு…
வராங்கமா..என்றவன் உணவு மேசையின் மீது அமர்ந்தான்…இந்தாட உனக்கு புடிச்ச ஐட்டமா செஞ்சிருக்கேன்..நல்லா சாப்பிடு என்று அவர் கூற..அவன் தட்டையே வெறித்து பார்த்து கொண்டிருந்தான்…
“எங்க இந்த பொண்ண இன்னும் காணும்”என்றவர் சமி என்று ஆழைக்க, அவள் கண்களை துடைத்துக் கொண்டே வந்தாள்..
வாம்மா ..இங்க வந்து உட்காரு என்று அவனுக்கு எதிரே அமர வைத்தவர் அவளுக்கும் பரிமாறினார்..அவள் சாப்பிடாமல் அப்படியே அமர்ந்திருக்க,ப்ரனேஷ் அவளை பார்த்தான்..கண்கள் சிவந்து போயிருந்தது..அழுதிருப்பாள் போல..என்று நினைத்தவன்,என் மேல உனக்கு லவ் இருக்குனு எனக்கு தெரியும் குல்பி,ஆனா அதை நீ ஒத்துக்க மாட்ற…ஆனா நீ என்ன பார்க்கும் பார்வை,அது சொல்லுதே..என்மீது உள்ள உன் காதலை..எந்த காரணத்திற்காகவோ என்ன நீ அவாய்ட் பண்ற.. (Tramadol) அது என்னனு கூடிய சீக்கிரம் கண்டுபிடிச்சு உன் வாயால ஐ லவ் யூ சொல்ல வைக்கல நான் ப்ரனேஷ் இல்ல என்று நினைத்தவன்,நிம்மதியாய் உண்ண ஆரம்பித்தான்..அவன் சாப்பிட ஆரம்பித்த பிறகு அவளும் சாப்பிட ஆரம்பித்தாள்….
மா ரவீனா எங்க..?
ஏன் ரவீனாக்கு என்ன வச்சிருக்க..என்று கேட்டுக் கொண்டே வந்தாள் அவள்…
ஒன்னும் வச்சில..உன்கிட்ட கொஞ்சம் பேசனும்.வெயிட் பண்ணு வரேன் என்றான் கடுமையான முகத்துடன்..
அவனது முக பாவனையில் அவள் சற்று பயந்து தான் போனாள்…
ரவீனா பயந்து போய் நிற்க, ரவீனா என்று சற்று கோபமாகவே கேட்டது ப்ரனேஷின் குரல்..அந்த குரலில் பயந்தவள்,சட்டென திரும்ப, அங்கே அவள் நினைத்ததற்கு மாறாக சிரித்தபடி நின்றான் ப்ரனேஷ்…
டேய் அண்ணா….என்றாள் பற்களை கடித்து கொண்டே..
சட்டென அவளை அணைத்தவன் “தாங்ஸ் பப்ளி என்றான்…
அவள் புரியாமல்,எதுக்குடா தாங்க்ஸ் என்றாள்…
என்னோட குல்பிய கூட்டி வந்ததுக்கு….
குல்பியா?யாருடா அது..?
அதான் நீ கூட்டிட்டு வந்துருக்கியே உன்னோட ப்ரண்ட் சமி..
டே..டேய் அ.அ..அவள உ..உனக்கு முன்னடியே தெரியுமா?கேட்டால் சற்று தடுமாற்றத்துடன்…
ம்ம்ம்ம்..என்று தலையாட்டினான்…
எ..எப்படி..?
ப்ரனேஷ் அவளை பார்த்த நாளிலிருந்து காலையில் நடந்த அனைத்தையும் அவளிடம் கூறினான்…
டேய் அண்ணா..உண்மையாவா?என்னால நம்ப முடியலடா…
உண்மை தான்..என்றவன்”அவளை நீ எங்க பார்த்த என்றான்….
அதுவா..காலைல நான் ஏர்போர்ட்லேருந்து வரும் போது ஒரு இடத்துல வந்து கார் பஞ்சர் ஆச்சு…ரெடிபண்ண கொஞ்சம் லேட்டாகும்..பக்கத்துல இருக்குற கோவில்ல உக்காருங்கனு முத்து அண்ணா சொன்னார்..நானும் சரின்னு கோயில்ல உட்காந்திருந்தேன்..அப்போ தான் இவுங்க அங்க ஒரு இடத்துல மயங்கி போய் கிடந்தாங்க..நான் உடனே தண்ணி தெளிச்சு எழுப்பினேன்..எழும்பல..எனக்கு கொஞ்சம் பயமாயிடுச்சு..உடனே ஒரு கார் புக் பண்ணி இவுங்கள ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போனேன்..அங்க டாக்டர் இவுங்க சாப்பிடாம ரொம்ப டயடா இருக்காங்க..அதுமட்டுமில்லாம எதயோ நெனச்சு ரொம்ப பயந்திருக்காங்க..நல்லா சாப்பிட்டு ரெஸ்ட் எடுத்தா சரியாயிடும்னு சொன்னார்.. நானும் சரினு சொல்லிட்டு,மாத்திரை எல்லாம் வாங்கிட்டு, உங்கள எங்க விடனும்னு கேட்டேன்..அந்த கோயில்லயே விட சொன்னாங்க..எனக்கு ஒரு மாதிரி ஆச்சு..என்ன நடந்ததுனு கேட்டேன்..அவுங்களுக்கு யாருமே இல்லயாம்..ரௌடிங்க தொரத்தினாங்களாம்..பயந்து போய் கோயில்ல வந்து ஒளிஞ்சிகிட்டாங்களாம்…எனக்கு அவுங்க சொன்னத கேட்டதும் ரொம்ப கஷ்டமா போச்சு..உடனே அவுங்ள கூட்டிட்டு போய் நல்ல ட்ரெஸ் எடுத்து கொடுத்து ஒரு ஹோட்டல் புக் பண்ணி அவுங்கள குளிக்க வச்சு நம்ம வீட்டுக்கு என்னோட ப்ரண்ட் மாதிரி கூட்டிட்டு வந்துட்டேன்..இல்லைனா அம்மா திட்டுவாங்களே! ரோட்ல போற வரவுங்க தங்க இது என்ன சத்திரமானு,..அதனால தான்..என்றாள்..
அவள் கூறி முடித்த அடுத்த நிமிடம் அவளை அணைத்திருந்தான் ப்ரனேஷ்…தாங்ஸ் பப்ளி உனக்கு எப்படி நன்றி சொல்றதுனே தெரியல..என்று கூறினான்..அவனது கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது..
டேய் அண்ணா..என்னடா தாங்ஸ் எல்லாம் சொல்ற…
உனக்கு தெரியாது பப்ளி..அவ மட்டும் இல்லனா,எனக்கு வாழ்க்கையே இல்ல என்று வருத்தமாய் கூற,
அவனை அப்படி பார்க்க பிடிக்காதவள்,அவனை சகஜ நிலைக்கு கொண்டுவர, ஓ உன்னோட ஆள பாக்க போறதுக்காக தான் என்ன ரிசிவ் பண்ண வரலாயா?என்றாள் கோவத்துடன்….
சாரிடா….என்றான் உண்மையான வருத்தத்துடன்…
உன் சாரி எல்லாம் யாருக்கு வேணும்….
அவள் இரண்டு கன்னங்களையும் கிள்ளிக்கொண்டே,வேற என்ன வேணும் என் பப்ளிக்கு…என்றான்
டேய் வலிக்குது விடுடா. என்றவள் தனது கன்னத்தை தடவி கொண்டே,என்ன வெளில கூட்டிட்டு போ..என்றாள்..
அவ்வளவு தான கூட்டிட்டு போனா போச்சு என்றவனை,டேய் அண்ணா நெஜமாவா?என்னால நம்ப முடியலடா. எப்போ நான் வெளில கூட்டிட்டு போக சொன்னாலும் முடியாதுனு சொல்லுவ..இப்போ உடனே ஓகே சொல்லிட்ட ,என்றவள் மகிழ்ச்சியாய் அணைத்து கொண்டாள்…
மித்ரா ஒரு வாரமாய் தன் அறைக்குள்ளயே இருந்தாள்..சுகன்யா வரும் போது மட்டும் அவளுடன் சேர்ந்து சாப்பிடுபவள்,அவள் சென்ற பிறகு தனது அறையே கதி என கிடைந்தாள்..
இன்று சுகன்யா விடுப்பு எடுத்திருந்தாள்..மித்ரா நாம இன்னைக்கு வெளில போகலாமா?
எ.எங்க சுகு?
சுகன்யா அவளது முகத்தை பார்த்து கொண்டே,நானும் பாக்குறேன் ஒரு வாரமா நீ டல்லா இருக்க..முகமெல்லாம் வாடி போயிருக்கு..எது கேட்டாலும் ஒரு பதட்டமாவே பதில் சொல்ற..எதாவது பிரச்சனையா மித்ரா?என்றாள் அவளை துளைக்கும் பார்வையுடன்…
அ. அப்படியெல்லாம் ஒன்னும் இ..இல்ல?
இதோ பாரு மித்ரா எந்த பிரச்சனையா இருந்தாலும் மறைக்காம என்கிட்ட சொல்லு..அதவிட்டுட்டு உன் மனசுக்குள்ளே போட்டு உன்ன நீயே வருத்திக்காத..ஒரு வாரத்துக்கு முன்னாடி உன்னோட மாற்றத்த நினச்சு நான் சந்தோஷ பட்டேன்..ஆனா இப்போ அதே பழைய மித்ராவ மாறிட்டியோனு தோனுது….
“அய்யோ சுகு அப்படியெல்லாம் இல்ல..நான் சந்தோசமா தான் இருக்கேன்” என்று அவளுக்காக கூறினாள்…
அப்படினா வா வெளில போகலாம்…சீக்கிரம் ரெடி ஆகு என்றவள் தானும் கிளம்ப தயாரானாள்…
மித்ரா தயாராகி வெளியே வர, ஏய் மித்து சொல்ல மறந்துட்டேன்,ஷாரிக்கா போன் பண்ணா..அவுங்க அப்பாவ ஒன் வீக்கா கானுமாம்…எல்லா இடத்துலயும் தேடிட்டு இருக்காங்களாம்..அவரோட போனும் சுவிட் ஆஃப்னு வருதாம்..கேக்கவே எனக்கு ரொம்ப கஷ்டமா போச்சு என்று கூற,அவள் கூறியதை கேட்டு மித்ரா அதிர்ந்து போய் நின்றாள்..அவளது முகமெல்லாம் வியர்த்து கொட்டியது..உடலெல்லாம் நடுங்க ஆரம்பித்தது..அவளுடைய கால்கல் பலமிழந்து,கீழே விழ போகும் நேரம்,சட்டென அவளை பிடித்தாள் சுகுனா…
மித்து..மித்து..என்னாச்சு டி என்றாள் பதட்டமாய்…
ம..மயக்க..மா வருது….
சரி ..சரி. உட்காரு என்றவள்,அவளை உட்கார வைத்து விட்டுஅவளுக்கு குடிக்க தண்ணீர் கொடுத்தாள்..அதனை குடித்ததும் அவளை படுக்க வைத்தவள்,நீ கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு மது. நாம இனனொரு நாளைக்கு வெளில போகலாம் என்றவள், அவள் அருகிலயே அமர்ந்திருந்தாள்..மித்ராவோ சுகன்யாவின் கைகளை இருக பற்றியிருந்தாள்…அவளுக்கு மித்ராவை பார்க்க பாவமாய் இருந்தது..எப்படி வாழ வேண்டியவள் இப்படி அனைத்திற்கும் பயந்து போய் வாழ்கிறாள்..கடவுளுக்கு அப்படி இவள் மீது என்ன தான் கோபமோ?இவளை இப்படி கஷ்டபடுத்துகிறார் என்று கடவுளை திட்டியவள்,மித்ரா எப்படி தனக்கு தோழியானாள் என்பதை நினைத்து பார்த்தாள்….
மத்திய சிறைச்சாலை என்ற பெயர் பொதிக்கப்பட்டிருந்த அந்த சிறைச்சாலைக்குள் நுழைந்தாள் சுகன்யா…
அங்கு நின்றிருந்த ஒரு பெண் காவலரிடம்,ரத்னவேல் சார் இருக்காங்களா!என்றாள்…
சார் உள்ள இருக்கார்..நீங்க போய் பாருங்க என்ற காவலரிடம் நன்றியை தெரிவித்து விட்டு உள்ளே சென்றவள்,அங்கே ரத்னவேல் சூப்பிரண்ட் ஆப்போலீஸ் என்ற பெயர் பலகையை தாங்கிய படி இருந்த சேரில் அமர்ந்திருந்தவரிடம்,குட் மானிங் சார் என்றாள்….
அதுவரை எதோ பைலை பார்த்து கொண்டிருந்தவள்,சட்டென நிமிர்ந்து பார்க்க, அங்கே சிரித்தபடி நின்றிருந்தாள் சுகன்யா….
அவர் நெற்றியை சுருக்கி அவளை பார்க்க,சார் ரொம்ப தூரத்திலேருந்து வரேன்..உட்காரலாமா?என்றாள்…
ம்ம்ம் என்று தலையாட்டியவர் எதிரே இருந்த நாற்காலியை காண்பித்தார்..
தாங்க்யூ சார்.என்றவள் நாற்காலியில் அமர, என்ன விசயமா வந்திருக்கீங்க என்றார்…
சார்..அதுவந்து..இன்னைக்கு என்னோட பிறந்த நாள்..இங்க உள்ள கைதிங்க எல்லாருக்கும் சுவீட் குடுத்துட்டு போகலானு….
சாரி மேடம்..அப்படியெல்லாம் குடுக்க முடியாது..அப்படி குடுக்க முறையா பர்மிஷன் வாங்கனும்…
சார் பீளீஸ் சார்..கெஞ்சினாள்…
முடியாதுனு சொல்றேன்ல..அதட்டலாகவே கூறினார்..
சுகன்யா அவரை முறைத்து பார்க்க, அவர் அவளையே பார்த்து கொண்டிருந்தார்…
சார் எனக்கு தெரியாது..நான் அவுங்களுக்கு சுவீட் குடுத்தே ஆகனும் என்று பிடிவாதமாய் கூற,
ஒரு வாட்டி சொன்னா புரியாதா உனக்கு…கத்தினார்…
பிறந்த நாள் அதுவுமா பெத்த பொண்ணோட ஆசைய நிறைவேத்த முடியாத நீங்கலெல்லாம் என்ன அப்பா..என்றாள் கோவமாய்…
நீ வேற என்ன கேட்டாலும் வாங்கி தரேன்..ஆனா இது மட்டும் முடியாது…
ஏன் அப்பா…
இங்க பாருடா..இது ஆசிரமம் கிடையாது..கொலை செஞ்சிட்டு வந்தவுங்க இருக்குற இடம்…எல்லாரும் என்ன மைண்ட் செட்ல இருப்பாங்கனு தெரியாது..நீ உள்ள போயி எதாவது தப்பா நடந்திட்டா,மேலிடத்துக்கு யாரு பதில் சொல்றது,என்று தனது நிலையை விலக்கி கொண்டிருந்தார்..
அப்போது அங்கு ஒடிவந்த ஒரு பெண் காவலர்”சார் சார் அந்த ஏழாம் நம்பர் கைதி அந்த இருபதாம் நம்பர் கைதிய போட்டு அடிச்சிட்டு இருக்காங்க சார் என்று கூற,இதுங்களுக்கே இதே வேலையா போச்சு என்றவர் தன் தொப்பியை எடுத்து மாட்டிக் கொண்டு உள்ளே சென்றார்..கூடவே சுகன்யாவும் சென்றாள்…
அங்கே வெள்ளை உடை அணிந்த ஒரு பெண்மனி மற்றொரு பெண்ணை போட்டு அடித்து கொண்டிருந்தாள்..அடிவாங்கிய பெண்ணின் முகத்திலிருந்து ரத்தம் வலிந்தது…
ஏய் என்ன பிரச்சனை இங்க, என்று ரத்னவேல் கத்த, அடித்த பெண்மனி அந்த சிறைச்சாலையில் பெரிய ரவுடி போல் இருக்க,அங்கு யாரும் வாயை திறக்கவில்லை..
போங்க..எல்லாரும் அவுங்க அவுங்க அறைக்கு போங்க என்று அதட்டியவர்,அங்கு அடிபட்டு கிடந்த பெண்ணை பார்த்து,என்னம்மா பிரச்சனை என்றார்.
இல்ல சார்..நான் வேலை செஞ்சிட்டு இருக்கும் போது அவுங்க வேலைய என்ன செய்ய சொன்னாங்க,நான் முடியாதுனு சொன்னேன்,அதுக்கு போய் அடிச்சிட்டாங்க சார்,என்றவளை சரிமா நீ உன் அறைக்கு போ,நான் டாக்டர வர சொல்றேன் என்றவர் அங்கு இருந்தவரிடம் “டாக்டரை வர சொல்லுங்க” என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்..
அப்பா யாருப்பா அந்த பொண்ணு..பாக்க என் வயசு மாதிரி தான் இருக்க..அந்த பொண்ணு போய் இங்க எப்படி….
ஆமா சுகு..அந்த பொண்ணுக்கு உன் வயசு தான்..ரொம்ப நல்ல பொண்ணு..இந்த சின்ன வயசுல இங்க வந்து கஷ்டபடுறா….
என்னாச்சுப்பா..என்ன கேஸ்ல உள்ள வந்தாங்க….
கொலை கேஸ்..
கொலையா?
ஆமாம்மா..அவ புருசன கொன்னுட்டு வந்துருக்கா…ஏன் கொன்னானு தெரியல..கேட்டா சொல்லவும் மாட்றா…என்றார் வருத்தத்துடன்…
அவுங்க பேரு என்னப்பா.?
மித்ரா…
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.